Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 13 1

மழைத்துளி 13

 

விக்ரம் தாத்தா வீட்டின் மொட்டை மாடிக்கு வீட்டினுள் இருந்தும் படிகள் உண்டு , வெளியிலிருந்தும் படிகள் உண்டு , விக்ரம் வெளிப்படிகள் வழியாக வந்திருக்க , வரு உள்படிகள் வழியாக மாடிேயறினாள் .

 



Advertisement

ஆனாலும் முதல் தளத்தில் நின்று வீட்டில் யாரும் விழித்திருந்தால் சொல்லலாம் எனப் பார்க்க , யாரும் விழித்திருப்பதுப் போல் தெரியவில்லை .எனவே தரையை உரசிக் கொண்டிருந்த ஆடையை கையில் தூக்கிப்பிடித்துக் கொண்டு படியேறி மாடிக் கதவைத் திறந்தாள்.

a

அவள் கண்டது விக்ரம் குப்புற படுத்துக் கிடக்க அவனருகில் அவனது மொபைல் பகுதி பகுதியாக உடைந்து கிடந்ததைத்தான்.

Advertisement

 

Advertisement

வேகமாக அருகில் சென்று காலை மடித்து அமர்ந்தவள், “விக்கி … விக்கி ” என , அழைப்பில் புரண்டவன் சித்திரை மாத நிலவொளியில்  மங்கலாக தெரிந்த உருவத்தை  கண்களை  கசக்கிக் கொண்டே “கீ … கீது…” என அழைக்க ,

 

“கீதுவா… நல்லாப் பார் நான் வரு… ” என்றவள் ,

Advertisement

 

“விக்கி … என்னாச்சு உனக்கு ,ஏன் இப்படி படுத்திருக்க … லேட்டா வீட்டுக்கு வந்தா இப்படித்தான் எங்க படுக்கிறோம்னுக் கூடத் தெரியாம படுப்பியா … அன்னைக்கு இப்படித்தான் என் மேலயே விழுந்துட்ட …உன் ஃபோன் பார் உடைஞ்சுக் கிடக்கு ” என்றவாறு அவனது சிதறிய ஃபோன் பாகங்களை சேர்த்துக் கொண்டிருந்த வருவைக் கண்டான்.

 

வாய் குழறி … “பம் …பம்கின் ” என்றவனை முறைத்துப் பார்த்தவள் ,

 

“அண்ணி தூங்கறாங்களேனு உனக்குப் போய் கதவு திறக்க வந்தேன் பாரு என்னை சொல்லணும்… பம்கினாம் பம்கின்…. போடா விக்ஸ்டப்பா” என்றவள் அவன் ஃபோனை மறுபடியும்  கீழே போட்டு விட்டு எழ முற்பட, பட்டென்று அவள் ஓட்னி என வட இந்தியப் பெண்களால் சொல்லப்படும் அந்த  தாவணியை பிடித்திழுத்தான்.

 

அது அவனதுக் கையோடு வரவும் , ஆத்திரம் பொங்க …அவன் கையிலிருந்து பிடுங்கி தன் மேல் போட்டுக் கொண்டவள், ஆத்திரத்தில் இழுத்தக் கையின் மணிகட்டை பிடித்து கடித்து வைத்து விட்டாள்.

 

ஆத்திரம் தீர கடித்து விட்டு நிமிர்ந்தவள் விக்ரமைப் பார்க்க, சிவந்த விழிகளுடன் அவன் ஏதோ எறும்புக் கடித்தால் உதறுவது போல் கையினை உதறி ,

 

” த… தலைவலிக்கு … ” என்றவனது கண்களைப் பார்த்தவள் ,

 

“விக்கி உனக்கு கண் ஏன் இப்படி..ரெட்டிஷா இருக்கு… காய்ச்சலா… ” என்றவள் அவன் நெற்றியைத் தொட ,

 

“இல்லயே…..” என்றவளது கையை எடுத்தவன் ,

 

[the_ad id=”6605″]

 

 

 

“லட்சுமி …க… கள்ளு குடிச்சேனா… அது முதல் தடவயா… அ.. அளவு தெரியல … “எனக் குழறி குழறி பேசியவனிடம் ,

 

“மத்லப்…. நீ … நீ டிரிங்க்ஸ் எடுத்துருக்க … இப்பவே போய் அத்தைக் கிட்ட சொல்றேன் பார்….” எனத் திரும்பியவள் கையைப் பற்றி இழுத்தவன் ,

 

“லட்சுமி … லட்சுமி ….. ப்ளீஸ்… ப்ளீஸ்…. என்னைய பிபுலஸ்னு ( குடிகாரன்) முடிவு பண்ணிராத , இந்த ஊருக்கு இனி வர சான்ஸ் இல்ல … சரி ட்ரை பண்ணுவோம்னு ……” என தலையைப் பிடித்துக் கொண்டு தள்ளாடி எழ முற்பட ,அவனது நிலையைக் கண்டவள் அவனுக்கு உதவ அவன் தோளைப் பற்றினாள்.

 

“வா… வாமிட் வரப்…” பேசி முடிப்பதற்குள்ளாகவே அவள் மீதே வாந்தி எடுத்து விட்டான். அவள் முகத்தில் மட்டுமே படவில்லை .மற்றபடி கழுத்தின் கீழிருந்த உடை மீது பட்டிருந்தது.அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டாள். குனிந்து தன்னைப் பார்க்க கண்ணில் நீர் கோர்க்க,அருவறுப்பில் அவளுக்கும் வாந்தி வருவது போல் குமட்டல் வந்து விட்டது.

 

அதற்குள் போதையிலிருந்தவன் அனிச்சை செயலாக அவள் நெஞ்சின் மீது கை வைத்து துடைக்க ஆரம்பித்து விட்டான்.

 

ஒரு பெண்ணை தொடக் கூடாத பாகங்களில் அவன் கைபட்டதும் இன்னும் அதிர்ந்தவள் அவனைத் தள்ளி விட்டு, அவனைக் கையால் கண் மண் தெரியாமல் அடித்துக் கொண்டே தமிழ் ,ஆங்கிலம் , இந்தி என திட்டி,அவன் தலை முடியைப் பிடித்து ஆட்டிக் கொண்டே ,

 

“எவ்வளவு தைரியம் உனக்கு…” அதற்கு மேல் அவள் கை வலிக்க ஆரம்பிக்க , அவன் தலைமுடியை விட்டு கண்ணீரோடு கதவருகே செல்ல ,

 

” அடிக்கும் வரை ஏதோ புலம்பியவன் அவள்  பின்னோடு எழுந்துச்  சென்று அவள் இடையோடு கைப்போட்டு இறுக்கிக் கொண்டான் .

 

வரு மேலும் அதிர்ந்து அவன் பிடியை விலக்க முயல , போதையில் தள்ளாடினாலும் மற்றொருக் கையால் அந்தக் கதவைத் தாழிட்டு ,

 

” குற்றாலத்துல மசாஜ்  பண்ணிட்டு குளிச்சுட்டு வந்துட்டோம் …  …நீ பண்ற மசாஜ் அதைவிட நல்லாவே இருக்கு … ”

 

” என்ன …மசாஜா …. முதல்ல என்னை விடுடா விக்ஸ்டப்பா … இன்னைக்கு எல்லாருகிட்டயும் உன்னைய சொல்லியேத் தீருவேன்.” என்றவாறு அவன் பிடியை தளர்த்த முயற்சிக்க,

 

“இப்.. இப்படியே எப்படி போவ ..வா கழுவிட்டுப் போகலாம் … ” என அவளை இழுத்துக் கொண்டு தண்ணீர் குழாய் அருகே சென்றான்.

 

அழுகையோடு “விடு ..விடு… உன்னைய சொல்லிக் கொடுக்காம விடமாட்டேன்….” என கத்தியதோடு அவனது கைகளை கிள்ளவும் அடிக்கவும் செய்ய , மற்றொரு கையால் அவள் வாயையைும் மூடியவன்.

 

தண்ணீர் தொட்டி அடியிலிருந்த குழாயைத் திறக்க மாடியிலிலிருந்த செடிகளுக்கு தண்ணீர் விடும் நீண்ட குழாயிலிருந்து வெளியான தண்ணீர் மூலம் அவளை முழுமையாக நனைய விட்டான்.ஒரு கையால் அவளை நன்கு பிடித்து மறு கையால் தண்ணீர் விட்டவன் , அவள் மேலிருந்த அழுக்கு எல்லாம் போய் விட்டதா என்பதாக ஆராய்ந்தவன் ,

 

“சா …. சாரி லட்சுமி நான் கீது தான் வருவானு நினைச்சேன் … என்றுக் குழறியவன் , பட்டென்று அவள் முன் மண்டியிட்டு ,

 

“நான் இப்படி வந்திருக்கிறத நீ போய் சொல்லிக் கொடுத்து அதுனால எல்லாரும் திட்டினாக்கூட கேட்டுக்குவேன்.. ஆனா அவங்க எல்லாரும் வருத்தப்படுவாங்க…. அது தான் எனக்குத் தாங்க முடியாது … ப்ளீஸ் அவங்களுக்கு அந்த ஃபீல் கொடுத்துராத… ” அவன் பேசியதை முகத்தில் நீர் வழிய அதிர்ச்சி யோடு கேட்டுக் கொண்டிருந்தவள், அவன் மேலிருந்து கீழாக தன்னைப் பார்ப்பதைப் பார்த்து மேலும் அதிர்ந்தவள் , பட்டென்று தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டாள்.

 

அவளோ நீரில் நனைந்து உடலோடு ஒட்டிய துணி அவளது அங்கங்களை அப்பட்டமாக காட்டியதை கண்டு கலங்கிப் போக , அவனோ ,

 

“இப்ப போ துணில கறையெல்லாம் போயிருச்சு … ” எனவும் வருவிற்கு அழுகை அதிகமாகியது ,

 

அவன் வாந்தி எடுத்ததைக் கூட மறந்திருந்தவளுக்கு அவனது கை பட்ட பார்வை பட்ட இடங்கள் தான் அறுவறுப்பைத் தருகிறது என்பதை அவனறியாமல் பேசவும் வெறுத்துப் போய் திரும்பி நடந்தவளிடம் ,

 

“ப்ளீஸ் சொல்லாத …. டிரஸ் மாத்திரு ஈரமா இருக்கு….” என்றதும் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். விக்ரம் அவள் முன் வந்து நின்று …

 

“என்னாச்சு போகல…. நீ போனாதான் நான் போக முடியும் …. கிளம்பு … “எனக் கை பிடிக்க, வேகமாக உருவிக் கொண்டவள் ,

 

[the_ad id=”6605″]

 

 

 

” எப்படி டா போவேன்… இப்படியே எப்படி போவேன்….” என்றவள் கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் வாயை மறுபடி மூடியவன் ,

 

“ஷ் …. கத்தாத… இப்படி சத்தம் போட்டு அழுது எல்லாரையும் எழுப்பிராத …..” அவன் கையை உதறியவள்,

 

“வரட்டும் எல்லாரும் வரட்டும்…. நான் அப்படி தான் அழுவேன்….”

 

“ஷ்..கத்தின.. உனக்குத்தான் நஷ்டம் … இந்த நேரம் மொட்ட மாடியில வயசு பையன் கூட உனக்கு என்ன வேலைனு கேப்பாங்க பரவாயில்லயா…” என்றவனுக்கு அதற்கு மேல் நிற்க முடியாது தரையில் அவளருகிலயே அமர்ந்துக் கொண்டான்.

 

இப்பொழுது அவள் வாயை அவளே மூடிக் கொண்டவள் அழுகையை அடக்கி மறுபடியும் அவனை அடிக்க ஆரம்பிக்க , அவள் கையைப் பிடித்துக் கொண்டவன் ,

 

“இப்ப என்ன பிரச்சினை உனக்கு … தேவையில்லாம அழற… அடிக்கிற ….”

 

[the_ad id=”6605″]

 

 

 

” என்ன பிரச்சினையா … இதுக்குத்தான் எங்கப்பா நாம கல்யாணத்துக்குப் போகலாம்னு சொன்னாங்க போல…. ” அழுதுக் கொண்டே அவன் முகம் பார்த்து ,

 

“எனக்கு எங்கம்மா இருந்திருந்தா நான் ஏன் இங்க வரப் போறேன் … அவங்க இல்லாம தான இவ்வளவு கஷ்டம் வேறப்படுறேன் ….” என அழுது கொண்டேப் பேசியவள் .

 

“விக்கி இந்த டிரஸ் போட யாருடைய ஹெல்ப்பாவது வேணும்…. தனியா போட முடியாது…. வித்யா இருக்கிற தைரியத்துல போட்டுக்கிட்டேன். ஆனா அவள அந்த பக் (bug) கடிச்சதுல சீக்கிரம் தூங்கிட்டா …. எல்லாருமே தூங்குறாங்க … எங்கண்ணா ஆசையா வாங்கித் தந்தது தெரியுமா… இல்லனா கிழிஞ்சாக் கூடப் பரவால்லனு கழட்டி இருப்பேன்… இப்ப ஈரமா….”அவள் குழந்தைகள் தாயிடம் அழுதுக் கொண்டே சொல்லுமே அது போல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விட்டான் விக்ரம்.

 

அவள் வேதனையோடு பேசுகையில் அவனது சிரிப்பு எரிச்சலைத் தர , விக்ரமோ …

 

“உங்கண்ணனுக்கு தங்கச்சிக்கு எப்படி டிரஸ் வாங்கித் தரணும்னுக் கூடத் தெரியாதா ….” என்றவன் , கிழே கிடந்த தண்ணீரில் இதயம் வரைந்து, அதைக் காட்டியவன் ,

 

“இப்படி ..இப்படி டிரஸ்ஸ அவன் பொண்டாட்டிக்கு வாங்கி அழகு பார்க்கச் சொல்லு…. “அழுகையை துடைத்து கோபமாக முறைத்தவள் ,

 

“எங்கண்ணாவா வாங்கல ஷிவானி தீ (dhi) கிட்ட சொல்லி வாங்கினாங்க….”

 

“பவானி தீயோ ஷிவானி தீயோ இப்ப அதுவா பிரச்சினை….”

 

தரையிலிருந்து எழுந்தவள் , “ஆமா அதுவா பிரச்சினை …கிழிஞ்சாலும் பரவாயில்ல நான் போறேன் … உங்கிட்ட போய் பேசிட்டுருக்கேன் பார் என்னைய சொல்லனும்” என்றவள் வானத்தைப் பார்த்து,

 

“மா…. ஆப் தேக் ரஹி….” என இந்தியில் புலம்பி அழுதவளை கைப் பிடித்து தடுத்தவன் ,

 

“ஷ் …. சத்தமா பேசாத …. கொஞ்ச நேரம் வாய் மூட மாட்டியா…. டென்ஷனாகாம நான் சொல்றதக் கேளு … அப்புறம்  லட்சு…. இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகாவே இருக்கு … நான் கூட உன்னைய சைட் அடிக்கப் போய் தான் அந்த பொடியன் உன் முதுகுல சவ்வு மிட்டாய் ஒட்டினதப் பார்த்தேன்….. ”

 

தள்ளாடிக் கொண்டே , ” நீ வீட்ல என் இமேஜ டேமேஜாக்காம இருந்தா…. நான் உன் டிரஸ்ஸ டேமேஜாக்காம மாத்த ஹெல்ப் பண்ணுவேன்…. ஓகே”. அவள் என்ன என்பதற்குள்ளாக அவள் தாவணியின் நுனியைப் பிடித்தான்.

 

விக்ரமிடமிருந்து பிடுங்கிய அவள் தாவணியை இரு தோளைச் சுற்றிப் போட்டுத்தான் பேசிக் கொண்டிருந்தாள். இப்போது காற்றில் பறந்துக் கொண்டிருந்த பாகத்தை எடுத்துக் கண்களைச் சுற்றிக் கட்டிக் கொண்டவன்,

 

“நிஜமா நீ மங்கலா தான் தெரியற … இருந்தாலும் உன் திருப்திக்கு இது …..” என கண்களைக் காட்டியவன் ,

 

“உங்கம்மாவ பாக்கறீங்களா … பாக்கறீங்களானு  கேட்டீல்ல … இப்ப உங்க அம்மா தான் என்னைய அனுப்பி விட்டதா … ஏன் உங்கம்மாவே நான் தான்னு நினைச்சுக்கோ” என்றவன்,

 

அவள் பின்புறம் வந்து மேலாடை பொத்தான்களையும் , சிக்கிக் கொண்டிருந்த கயிற்று முடிச்சுகளையும் விடுவித்து விட்டு அவள் முன்புறம் வந்து கண்ணைச் சுற்றியிருந்த துணியையும் கழற்றி விட்டவன் அப்படியே குப்புற தரையில் படுத்துக் கொண்டான்.

 

அவன் கீழே விழுந்த ‘தொப்’ என்ற சத்தத்தில் தான் தன் உணர்வுக்கே வந்தாள் வரு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!