Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval 31

 

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது

இரு விழிகளில் ரோஜாக் கனவு

 



Advertisement

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு

ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

 

Advertisement

ஒருமுறை உன்னைக் காணும் பொழுது

Advertisement

இரு விழிகளில் ரோஜாக் கனவு

 

வானத்தை கட்டி வைக்க வழிகள் உண்டு

Advertisement

ஞானத்தை கட்டி வைக்க வழிகள் இல்லை

 

தங்கம் வெட்கப்பட்டால்

மஞ்சள் வண்ணம் மாறும்

 

நாணம் கொண்ட தாலே உன் வண்ணம்

பொன் வண்ணம் செவ்வண்ணம் ஆச்சு வா

 

கண்ணா நாம் கண்ணும் கண்ணும் கலப்போமா

காற்றோடு மேகத் துண்டாய் மிதப்போமா

 

அப்பப்பா இறக்கை கட்டி பரப்போமா

ஆகாயம் தாண்டி சென்று வசிப்போமா

 

 

[the_ad id=”6605″]

 

கோவிலில் இருந்து வீடு வந்த இலக்கியன்.. “என்ன இது.. காயூ கூட ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேக்குறாளே.. மத்த வீட்டு ஆளுங்களை எப்படி சம்மதிக்க வைக்க போறோம்” என்ற படி அவன் ஒரு புறம் யோசித்து கொண்டு சுற்றி வர 

 

“தன் காதலை கூறியும்.. இலக்கியனிடம் இருந்து எந்த அதிலும் வர வில்லையே… ஒரு வேலை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவானோ” என்ற சிந்தனை மீனுவிற்கு 

 

இதை அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த காயூ… நேரம் பார்த்து அவர்களின் விஷயத்தை விக்கியிடம் சொல்ல… அடுத்த நொடியே இலக்கியனை காண சென்றான் விக்கி.. சற்று கோவத்துடனே 

 

“காயூ சொல்லுறது உண்மையாடா” என்றான் அவனின் சட்டையை பிடித்த படி 

 

“என்ன கேக்குறே… காயூ என்ன சொன்னா” என்று அவன் விழிக்க 

 

“உன்னையும், மீனுவையும் பத்தி காயூ சொன்னது உண்மையா.. ninga காதலிக்குறீங்களா? ” நேராக விசயத்திற்கு வந்தான் விக்கி 

 

இந்த திடீர் கேள்வி… அவனை நிலை தடுமாற செய்ய.. ‘எப்படியும் சொல்லி தானே ஆகணும்… அதை இப்போவே பண்ணா என்ன” என்று நினைத்தவன் 

 

“ஆமாம்டா… காதலிக்குறேன்” என்றான் உறுதியாக 

 

அதை கேட்ட விக்கி.. அவன் கன்னத்தில் அறை ஒன்றை வைக்க… பின் அவனின் சட்டையை பிடித்து உலுக்கி… 

 

“இதை ஏன்டா என் கிட்ட சொல்லல… உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கிட்டா.. உன்னோட நண்பன் இல்லனு ஆகிடுமா.. எப்போல இருந்துடா என்கிட்ட உண்மைய மறைக்க ஆரம்பிச்ச” என்ற படி அவனை நான்கு அடி போட 

 

“அப்போ உனக்கு இதுல சம்மதமாடா” என்றான் தயங்கி கொண்டு…நம்பாமல் 

 

“நான் ஏன்டா எதிர்க்க போறேன்… என் தங்கச்சிக்கு உன்ன விட நல்லவன் எவனும் கிடைக்க மாட்டான்டா…நீ என் தங்கச்சி இல்லாம வேற யார காதலிச்சு இருந்தாலும் உனக்கு ஆதரவா தாண்டா இருந்து இருப்பேன்… நீ என் நண்பன்டா.. அதுக்கு அப்றம் தான் சொந்தம் எல்லாம்” என்றான் தெளிவாக 

 

அவன் பேசியதில் மகிழ்ந்தவன்..தன் காதலை அவன் ஏற்று கொண்டான் என்ற மகிழிச்சியில் வேறு இருந்தவன்… அவனை ஆற தழுவி கட்டி கொண்டான் 

 

அவர்களை வாஞ்சையுடன் பார்த்து கொண்டு இருந்த க்யூவின் காதை திருகிய படி… “உனக்கு எப்போடி இந்த விஷயம் தெரியும்… எப்படி தெரியும் என்றான்”

 

“நீங்க கார்ல பண்ணதை தான் நான் பார்த்துகிட்டு இருந்தேனே…இதுல உன்னை கழுத்துல அடிச்சி மெரட்டுனதாயும் பார்த்தேன்” என்றாள் சிரித்த படி கோவிலில் நடந்த அனைத்தையும் கூறிய படி 

 

“ஆஆஆ” என்று அனைத்தையும் கேட்டு கொண்டு இருந்த விக்கி… 

 

“நான் பரவலா.. கல்யாணத்துக்கு அப்றம் தான் அடி வாங்குறேன்… நீ காதல சொல்லும் போதே வாங்கி இருக்க போல” என்றான் சிரித்த படி 

 

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே..கடைகளுக்கு சென்ற அனைவரும் வந்து விட.. 

 

“இப்போதைக்கு யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்…அன்பு அண்ணன் கிட்ட மொத சொல்லுவோம்… அதுக்கு அப்றம் அண்ணா என்ன சொல்லுதோ அப்டி செஞ்சிக்கலாம்.. ஆனா மீனு கிட்டயும் கூட நான் சொல்லல… அவளை கொஞ்சம் நாள் அலைய விடுவோம்… எவ்ளோ ரவுடி தனம் பண்ணி.. என்னை மெரட்டுனா தெரியுமா” என்றான் வராத கண்ணீரை துடைத்த படி 

 

அதற்குள் அனைவரும் வீட்டிற்குள் வந்து விட..அன்பும், இனியவளும் உலகம் மறந்து பேசிக்கொண்டே வர.. அங்கு நிற்கும் யாரையும் இருவரும் கண்டு கொள்ளவே இல்லை 

 

“பாத்தியா இந்துகளுக்கு கொழுப்பை… நம்ப இங்க நிக்குறத இவங்க பாற்களையும்…இதோ இரு வரேன்” என்ற படி அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்று அவர்களை இடித்த படி நின்ற இலக்கியன் 

 

“என்னடா வேணும் உனக்கு.. இப்போ எதுக்கு எங்களுக்கு நடுவுல வந்து நிக்குற” எரிச்சலோடு அன்பு கேட்ட 

 

அப்போது அந்த பக்கம் சென்று கொண்டு இருந்த மீனுவை பார்த்த இலக்கியன்… வேண்டும் சென்றேன்..இனியவள் பக்கம் திரும்பியவன் 

 

“இனியா… உனக்கு யாராவது நல்ல பொண்ணா தெரியுமா..கல்யாணத்துக்கு அப்றம் ரவுடி தனம் பண்ணாம.. என்னை கண் கலங்காம வெச்சி காப்பாத்துற மாதிரி பொண்ணு இருந்தா சொல்லே” என்றான் மீனுவை சீண்டும் விதமாய் 

 

அதில் கடுப்பானவள் அவனை எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதை உணர்ந்து… அவ்விடம் இருந்து நகர எத்தனிக்கை… 

 

 

[the_ad id=”6605″]

 

 

அப்போது வாசலில் பெரிய வான் ஒன்று வந்து நின்றது… அதில் இருந்து நிறைய பெண்களும்.. சில ஆண்களும் இறங்க… அவரகள் அனைவரும் வடநாட்டினர் போல் தெரிய… அனைவரும் குழம்ப 

 

“இவங்க என்னோட பிரின்ட்ஸ்.. டெல்லில நாங்க இருந்த அப்போ எங்களுக்கு சொந்தம்னு இருந்தது இவங்க தான்” என்றாள் இனியா 

 

இந்த வாய்ப்பிலும் கோல் அடிக்க ஆசை பட்ட இலக்கியன் 

 

“வெரி குட் இனியா நீ.. இப்போ தான் பொண்ணு பார்த்து குடுக்க சொன்னே… அதுக்குள்ள வெள்ளையா ஆப்பிள் மாதிரி பொண்ணுங்கள இறக்கிட… இதுல நல்ல பொண்ணா பார்த்து நீயே செலக்ட் பண்ணிட்டேன்” என்றான் மீனுவின் மேல் பார்வை வைத்து கொண்டு… 

 

விஷயம் தெரியாதா இனியாவோ.. “நீ கவலை படாத இலக்கியா..எங்க கல்யாணம் நடக்குறதுக்குள்ள உனக்கு பொண்ணு பார்த்துடுறேன் என்றாள் மிகவும் வீரமாக” 

 

அதை கேட்ட மீனு கோவத்தில் அவ்விடம் விட்டு நகர… அவளின் கோவத்தை ரசித்த படியே சென்றான் இலக்கியன் 

 

மதியம் போல எங்கோ செல்வதற்காக தன் பையுடன் வந்து.. சோர்ந்து போய் முற்றத்தில் அமர்ந்து இருந்த செழியனை கண்ட ஜனாகி 

 

“என்ன தம்பி.. வெளியே போகணும்… அவசரம்னு கடைல இருக்கும் போதே சொல்லிக்கிட்டு இருந்தீங்க… போகலையா” என்று அவர் விசாரிக்கும் போதே 

 

செல்லம்மாள்,அன்பு, விக்கி, யாழினி என அனைவரின் கவமமும் அவர்கள் புறம் திரும்ப 

 

சலித்து கொண்ட யாழினி ” அவர் எங்க போக மாட்டேன்னு சொன்னாரு… போகர்துக்கு தயாரா இருந்த மனுஷனை தான் போக விடாம பண்ணிடுச்சி அந்த வாண்டு” என்றார் 

 

“அப்டி என்ன ஆச்சு..அதுவும் தலையில கை வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்கீங்க? ” அன்பு கேட்க 

 

“அதை ஏன் தம்பி கேக்குறீங்க.. வெள்ளையும் சொல்லையுமா வந்த மனுஷன் மேல.. மஞ்ச போடி கலந்த தண்ணிய ஊதிவிட்டுடுச்சி அந்த குட்டி சாத்தான்” என்று அவர் சொல்லும் போதே அனைவரும் மெல்லிய சிரிப்பு வர… தலையும் கை வைத்து அமர்ந்து இருந்தவரை பார்க்க பாவமாக இருக்க.. வந்த சிரிப்பை அடக்கி கொண்டனர் 

 

“சரி..வேற சட்டையை மாத்திக்கிட்டு போக வேண்டுயது தானே” என்றார் செல்லம்மா செழியனின் வேதனை புரியாமல் 

 

“அட நீங்க வேற…அவரும் தண்ணி ஊத்துனா என்னனு.. மீசைல மண்ணு ஓட்டலன்ற கணக்கா.. குளிச்சிட்டு இன்னொரு சட்டையை மாட்டிகிட்டு ஜாம்னு கிளம்புனாரு..

 

ஷூ போடலாம்னு போனா அப்போ தான் தெரிஞ்சுது… அந்த ஷூ மொத்தத்துலயும் ஜூஸ் கொட்டி…அதுல முழுசும் எறும்பு மொச்சி… பாக்கவே அருவெறுப்பான இருந்துது… அதை பார்த்துட்டு வந்து இதன் தலையில கை வெச்சி உக்காந்து இருக்காரு” 

 

“ஜூஸ் யார் கொட்டுனா.. தெரியாம விழுந்துடுச்சோ என்னமோ.. வேற ஷூ போட வேண்டியது தானே… ஆமாம் யார் பண்ணது இத” என்றான் அன்பு கேள்வியாய் 

 

“எல்லாம் அந்த வாண்டோட வேலை தான்..கடையிலேயே வெளிய போகணும்னு சொன்னதுக்கு… வேணாம் எங்கயும் போக வேணாம்னு சொன்ணா.. முக்கியமான வேலைன்னு போயே ஆகணும்னு சொல்லி இவரும் கிளம்புனாரு… அவளோட பேச்சை கேக்காம போய்ட்டாராம்… அதுக்கு தான் இந்த ரிவென்ஜ்” கடைசியில் சிரித்த படியே அவர் கூற 

 

அங்கு இருந்தவர் அனைவர்க்கும் சிரிப்பில் வந்து விட… 

 

“வைஷு குட்டி அவ்ளோ வாலா…கொஞ்சம் சேட்டை பண்ணுவான்னு தெரியும்… அதுக்குன்னு இவ்வளவு சேட்டையை எதிர் பற்களையே” என்றான் இலக்கியன் சிறிய வியப்புடனே 

 

அதில் திகைத்த செழியன் இலக்கியனை அதிர்ச்சி பார்வை பார்த்து…விரக்தி சிரிப்பு புரிய 

 

யாழினி முகத்திலும் மிரட்சி தெரிய… 

 

[the_ad id=”6605″]

 

 

“என்னாது.. என் பொண்ணு பண்ணானு நான் எப்போ சொன்னேன்” என்றார் 

 

“அதன் வாண்டு, குட்டி சாத்தானு சொன்னேங்களே” என்றான் இலக்கியன் ஆர்வமாக 

 

“அட பாவிங்கள.. இன்னுமா இந்த உலகம் அவளை நம்புது… தம்பி நான் இவ்வளவு நேரம் சொன்னது இனியவளை பத்தி… அவ தான் இத்தனையையும் பண்ணி வெச்சி.. இதோ இவரை இப்டி உக்கார வெச்சிட்டா” என்றார் இறுதியாக 

 

“என்னா..இனியாவா”என்ற அதிர்ச்சி தான் அனைவர்க்கும் 

 

அதில் இலக்கியன் மட்டும் தரையில் விழுந்து விழுந்து சிரித்து கொண்டு இருக்க.. அதை கண்ட அன்பு “எதுக்குடா இப்டி சிரிக்குற” என்று கேட்க 

 

“இல்ல..அவளோட அக்கா புருஷனுக்கே இந்த நிலமைனா… அவளோட புருஷன், அதாவது நீ… உன்னை அவ உயிரோட விட்டு வைப்பானு நெனைக்குற… கல்யாணத்துக்கு அப்றம் நீ பட போற கஷ்டத்தை நெனச்சேன்… சிரிச்சேன்” என்றான் மேலும் சிரித்த படி 

 

“நீ சொல்லுறதும் சரி தான் தான்.. பாவம் அன்பு” என்ற படி செழியனும் சிரிக்க 

 

“என்னடா இது.. நம்ப வாழ்க்கை எதை நோக்கி போய்ட்டு இருக்கானே தெரியலையே” என்ற படி அவன் சிரிக்க… 

 

அங்கு இருந்தகவர்கள் அனைவரின் முகத்திலும்,மனதிலும் மகிழ்ச்சி பொங்கியது 

 

அனைவரும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து யாழினி…அவர்களுக்கு டிஷ்டி சுற்றி போட… 

 

ஆனால் அவர்களின் சந்தோசத்தின் டிஸ்டியோ அவரக்ளின் ஊர் எல்லையில் கால் வைத்து விட்டது என்பது அவர்கள் அறியாத ஒன்று… 

 

                மாயம் தொடரும்…. 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!