Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 40 – எபிலாக்

எபிலாக்

ராகவன் மாலினி வீடு களை கட்டியிருந்தது. பிள்ளைகளின் விளையாட்டுச் சத்தம் ஓங்கியிருந்தது.

அன்று வேதாவிற்கு ஏழாம் மாதம் பூச்சூட்டு விழா. போன முறை, விக்ரம் இல்லாததால் நேரே வளைகாப்பு மட்டும் போதும் என்று இதனைத் தவிர்த்திருந்தாள். அதனால் மாலினி, மாஞ்சரியின் ஏற்பாட்டில் வீட்டளவில் இப்போது செய்திருந்தார்கள்.  அரையாண்டு பரீட்சை விடுமுறை என்பதால், காயத்ரியும் பிள்ளைகளோடு ஒரு வாரம் வந்திருந்தாள். ஒரு வாராய் ரகுவின் மனதைக் கரைத்து வேலையை விட்டிருந்தாள். ஆனால் மாமியாருக்கு ரெஸ்ட் கொடுத்து, பொறுப்பாய் வீட்டையும், பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டாள். எங்கே மீண்டும் வேலைக்கு அனுப்பிடுவானோ என்ற பயமே அதிகம் என்றாலும், ஏதோ ஒரு வகையில் பொறுப்பு கூடியிருந்தது.

ஐந்து வகை சாதம் செய்து, வேதாவிற்கு நலங்கிட்டு, பூச்சூடி, வளையலும் அணிவித்தார்கள். நெருங்கிய சொந்தம் என்ற முறையில் சம்மந்திக்கு சம்மந்தி, கணவனின் தங்கை என்று இரு பக்க உறவில் காஞ்சனாவும், அவர் அக்கா  மல்லிகா, மாலினியின் அன்னை சகுந்தலா, கோமதியின் அண்ணன் கணேசன் குடும்பம், சௌந்தர்ராஜனின் அண்ணன் குடும்பமும், பாலா அத்தையும் வந்திருந்தார்கள்.



Advertisement

மிதமான அலங்காரத்தில் முகத்தில் தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து ஜொலித்தாள் வேதா. யாராவது எதையாவது சொல்லிக்கொள்ளுங்கள் என்று விக்ரம் அவளைப் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டிருந்தான்.

பின் மதியம். எல்லோரும் உணவருந்தி இளைபாறிக் கொண்டிருந்தார்கள்.  இளைஞர்கள் கூட்டம் விக்ரம் வீட்டில் தஞ்சமடைய,  முதிய ஆண்கள் ராகவன் வீட்டு வரவேற்பறையை நிறைத்திருந்தினர்.

பெண்கள் கூட்டம் சாப்பாடு மேசையை சுற்றி அமர்ந்து ஊர் கதையை அலச ஆரம்பித்தனர். மாலினிக்கு உதவி முடித்து, மேலே செல்லப் போன மஞ்சரியை அழைத்த அவள் பெரியம்மா, “என்ன மஞ்சரி… நீ எப்ப நல்ல செய்தி சொல்லப்போற ?”, என்று நிறுத்தினார்.

Advertisement

சிரித்த முகமாகவே, “ இருங்க பெரிம்மா, வேதா வேலை முடியட்டும். அப்பறம் நான் யோசிக்கறேன்.”, என்றாள்.

Advertisement

“நீ ஏன் அதோட முடிச்சி போடற ? நீ மாசமானா உங்கம்மா பார்த்துக்கப் போறா ?”, விடாமல் நோண்டினார்.

“இதென்ன, இப்படி சொல்லிட்டீங்க ? அம்மா பார்த்தா மட்டும் போதுமா ? எனக்கு என் புருஷன், மாமியார், அம்மா , பெரியம்மா எல்லாரும் பாக்கணும். நீங்க சங்கீதா பிள்ளை பேறு முடிங்க. இங்க அத்தை வேதாவோடதை முடிப்பாங்க. அப்பறம் இந்த சிங்கம் சோலோவா மாசமானா, எல்லாம் வரிஞ்சி கட்டி கவனிக்க ரெடியாகுங்க. சரியா ? “, என்று இல்லாத காலரை தூக்கிவிட்டாள். அவள் செய்கையும், ஆர்டர் போட்ட விதம் எல்லோர் முகத்திலும் புன்னகையை வரவழைத்தது.

“அப்படியே ஒழுங்கா எங்கம்மாக்கும் ட்ரெய்னிங் குடுங்க. சங்கி பிள்ளைகிட்ட பழகினாத்தான், என் குழந்தையை கவனிக்க தெரியும் அவங்களுக்கு.”, என்று விரல் நீட்டி மிரட்டி, மல்லிகா வாயை அடைத்தாள்.

Advertisement

சிந்து ஓடி வந்து, “மஞ்சு மாமி, மேல கூப்பிடறாங்க உங்களை, கேம் ஆரம்பிக்கலாமாம்.”

“வரேன் செல்லம், இந்த பாட்டீஸ் காங் என்னை பிடிச்சிக்கிட்டாங்கடா, வா எஸ்கேப் ஆகலாம்.”, என்று அவர்களை பழிப்புக்காட்டிச் செல்லவும்,

கோமதி சிரித்துக்கொண்டே, “சேட்டைகாரப் பொண்ணு…. “, என்றார் வாஞ்சையுடன்.

மல்லிகா கொஞ்சம் புகைவதை பார்த்து, “கண்ணு வெக்கறா பாரு. மஞ்சரிக்கு சுத்திப் போடணும்.”, என்று எண்ணிக்கொண்டார் காஞ்சனா.

மேலே எல்லோரும் அமர்ந்திருக்க பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

“சக்கரைக்கு பதில் தேன்தான் அண்ணி எடுத்துக்கறேன்”, என்று வேதா காயத்ரியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அதை காதில் வாங்கியவாறே வந்த சிந்து, “ சித்தா, ஒரு டவுட்.”, என்றாள்.

“என்ன செல்லம் ?”, வரப் போகும் பல்ப் தெரியாமல் வலையில் விழுந்தான்.

“நீ ஏன் சித்தியை தேனு, தேனுன்னு கூப்பிடற ?”

‘அடிப்பாவி, எல்லார் முன்னடியுமா கேப்பா ?’, என்று நினைத்த விக்ரம், “இல்லையே… நீ எப்ப கேட்ட ?”, என்றான் அவசரமாய்.

பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் பேச்சை நிறுத்தி, சுவாரசியமாய் கவனித்தனர்.

‘அய்யோ, விக்ரம் வாலன்டரியா மாட்டறியே’, என்று நினைத்தாள் வேதா. முகம் மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நேத்து சித்தி உன்னை திட்டிகிட்டு இருந்தாங்களே… அப்ப இல்ல தேனு, மறந்துட்டேன் தேனுன்னு மூணு நாலு டைம் சொன்னியே “,  விக்ரம் மாடுலேஷன் சரியாகப் பேசிக் காட்டவும், வேதா முகம் சிவந்தாள். ராஜேந்திரன், ராகவன், காயத்ரி, மாலினி, மஞ்சரி எல்லோர் முகமும் சிரிப்பை அடக்குவது தெரிந்தது.

“சே சே… உங்க சித்தி என்னை திட்டவே மாட்டா. நீ தப்பா எதையோ கேட்டிருக்க ?”, சமாளிப்பதாய் நினைத்து மேலும் ஆழத்தில் காலைவிட்டான்.

நெற்றியில் கை வைத்துக் குனிந்த வேதா, ‘ஐயோ, சொதப்பறானே… மானம் போகப்போது.’ என்று நினைத்தாள்.

தன்னை தப்பு சொல்வதா என்று கோபம் கொண்ட சிந்து, “நீ பெட்ல ஈர டவலை போட்டதுக்குத் தான் சித்தி, ‘எத்தனை வாட்டி சொன்னாலும் புத்தியேயில்லை விக்ரம் உனக்குன்னு’, திட்டினாங்க. நான் கேட்டேன்.”, எனவும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

“இங்க காமரா செட் பண்ணிருக்கியாடி ? எப்படி கேட்ட ?”, கொஞ்சம் கலவரமாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.

“அச்சோ… கொஞ்சம் சும்மா இருங்களேன்”, என்று வேதா அடக்கப் பார்த்தாள் விக்ரமை.

“சித்தா, நேத்து விவேக் டையபர் வாங்க காலைல மேல வந்தேன் இல்லை…”, என்று சிந்து விளக்கவும்,

“உள்ளே போகாம, ஏன் சிந்து இதெல்லாம் கேட்டுகிட்டு இருந்த ?”, என்றான் ராகவன், விக்ரமிற்கு உதவ.

“அம்மா சொன்னாங்க, எப்பவும் உள்ள போக முன்ன கதவை தட்டி குரல் குடுக்கணும்னு.”, தந்தைக்கு விளக்கினாள்.

“கொழுந்தனைப் பத்தி கரெக்டா தெரிஞ்சி வெச்சிருக்காங்க மாலினிக்கா..”, ராஜன் மஞ்சரியிடம் கமெண்ட் அடிக்க, அவள் சிரிப்பை மென்று அவனை முறைத்தாள்.

“சரி, அதை ஏண்டி செய்யலை ?”, விக்ரம் இன்னுமே காண்டாக சிந்துவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்.

“எங்க காப் விட்டீங்க ரெண்டு பேரும் ? சித்தி திட்ட, நீ கெஞ்ச…  ஒரு ப்ரேக் கிடைச்சப்பறம்தான் குரல் குடுத்தேன்”,  இருபுறமும் கை நீட்டி அவனை மொத்தமாக காலி செய்யவும்,  கையெடுத்துக் கும்பிட்டவன், “போறும் , இதுக்கு மேல தாங்காது, நீ போய் விளையாடு செல்லம்.”, அவளை அனுப்பினான்.

“விட்றா, பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கறதெல்லாம் சகஜம்டா..”, ராகவன் சிரிப்பை அடக்கி சொல்லவும்,

“ஆனா, இந்த தேனு மாட்டர் புதுசு. இதென்ன கதை விக்ரம் ?”, மஞ்சரி விடாமல் பிடித்துக்கொண்டாள்.

ரோஷம் பொங்க, ‘என் பொண்டாட்டிய தேனுன்னு சொலுவேன் மானுன்னு சொல்லுவேன், என்ன இப்ப அதனால ?”, என்று மஞ்சரியைப் பார்த்துக் கேட்டான்.

“அதான… நீ கூப்பிடுடா…“, அதிசயமாக காயத்ரி சப்போர்ட் கிடைத்தது விக்ரமிற்கு.

“சித்தா…”, குரல் கேட்டு கலவரமாகத் திரும்பியவன், “நீ இன்னும் போகலியா ?”

“பாட்டு போட போன் வேணும்.”, கை நீட்டினாள்.

“போடி, தரமாட்டேன்.”, விக்ரம் முறுக்கிக்கொண்டான்.

அவனை முறைத்தவள், “சரி, நான் பாட்டிகிட்டயே போய் சொல்றேன். “, மிரட்டினாள்.

“போ போ என்ன வேணா சொல்லிக்கோ. “, அசால்டாய் சொன்னான் விக்ரம்.

அவளைப் பற்றி அறிந்த வேதாவோ, “என்ன சிந்து சொல்லுவே ?” என்றாள்.

“பாட்டிகிட்ட, சித்தா சொன்னாரு பொண்டாட்டிய தேனு, மானுன்னு கூப்பிடணும்னு. எனக்கு கல்யாணம் ஆனாலும் அப்படித்தானா பாட்டின்னு கேட்பேன்.”, தோளைக் குலுக்கி சொல்லவும், ‘கொல்’லென்று சிரிப்பலை எழும்பியது அங்கு. பர்வதம்மாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததுதானே.

“அண்ணி, வயசு ஏற ஏற வில்லத்தனம் ஜாஸ்தியாகிடுச்சு இவளுக்கு..”, என்று மாலினியிடம் முறையிட்டான் விக்ரம்.

“சிந்துமா….”, மாலினியின் குரலில்,

“சித்தா சொன்னதைத்தானேமா சொன்னேன் ? கூட என் டவுட்டைக் கேட்பேன்.”, நான் என்ன தப்பு செய்கிறேன் என்று பார்க்கவும்,

“சீரியல் வில்லி ரேஞ்சுக்கு யோசிக்கற… கழுதை ?”, என்று வீர வசனம் பேசினாலும் … “இந்தா வெச்சிக்கோ, கீழையும் போய் என் மானத்தை வாங்காதே.” , போனைக் கொடுத்து மீண்டும் சரண்டர் ஆனான் விக்ரம்.

“ஹீ..ஹாவ்…”, என்று கழுதை போல கனைத்துக்காட்டி, போனோடு சிட்டாய் பறந்தாள் சிந்து.

“எலலாரையும் சமாளிக்க தெரியுது, ஆனாலும் இவ கிட்ட மொக்க வாங்கறதே வேலை உங்களுக்கு”, வேதா சிரித்துக்கொண்டே பழித்தாள்.

இப்படியே ஆளாளுக்கு ஓட்டவும் இனிமையான சூழல் நிறைந்தது.

சிலது மாறலைன்னாலும், போட்ட பாலெல்லாம் ஒழுங்கா விளையாடி புள்ளை நான் பூனையில்லை புலியாகிட்டேன்னு காமிச்சிட்டான். எஞ்ஜாய்டா விக்ரம். ‘, சிரித்துக்கொண்டே சென்றது விதி.

நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!