Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Niththirai Kalaiththa Maayaval

Aarpitha’s Niththirai Kalaiththa Maayaval 32

ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று

என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

 

ஓர் நெடுஞ்சாலை தன்னை



Advertisement

நான் கடந்தேனே அன்று

என்னை நிலம் கேட்டதம்மா

உன் நிழல் எங்கு என்று

Advertisement

 

Advertisement

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா.

 

அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா.

Advertisement

 

மதியம் வரை வீட்டை விட்டு வெளியே போக முடியாமல்…இனியாவிற்கு பயந்து போய் குட்டி போட்ட பூனை போல் சுற்றி வந்தார் செழியன்..மாலை போல் வைஷுவை உறங்க வைக்குறேன் என்ற பேர்வழியில் வைஷுவிற்கு முன் இனியா உறங்கு விட.. இனியவை வைஷு தூங்கவைத்து அவளும் தூங்கி விட்டாள் 

 

இருவரும் கண்ணயர்ந்த நேரம் பார்த்து.. விட்டாள் போதும் என்று ஓடி விட்டார் செழியன்… 

 

“அவ்வளவு அவசரமா வேலையா.. நாளைக்கு பார்த்துக்கோங்களேன்”என்று யாழினி கூறியும் கேட்க வில்லை 

 

சென்றவர் சரியாக இரண்டு மணி நேரத்தில் வந்து விட…வந்தவர் முகத்தில் எதோ வெற்றி பெற்ற நிறைவு தென்பட்டது 

 

அடித்த நாள் நிச்சயம் என்பாதால் அனைவரும் ஒவ்வொரு புறம் வேளையில் ஈடு பட… அங்கு வேலையே செய்யாமல் இருந்தது இலக்கியன் மட்டும் தான் 

 

அன்பும், இனியாவும் கூட வேலை செய்து கொண்டு தான் இருந்தனர்.. வைஷு கூட பூ போடுவது.. அது செய்வது இது செய்வது என்று செய்து கொண்டு இருக்க.   

 

இலக்கியனோ மீனுவை சைட் அடித்த படி அமர்ந்து இருந்தான்.. அவன் மீனுமேல் கவனம் வைத்து கொண்டு கீழே இருக்கும் பூக்களை மிதிக்க 

 

“சித்தா… பூ பாரு” என்றாள் வைஷு… சிதறிய பூக்களை ஒன்று சேர்த்து கொண்டு இருந்தகவளாய்… 

 

இலக்கியனுக்கு அவள் கூறியது கேட்காமல் போக… மேலும் இரண்டு முறை குழந்தை அதையே  சொன்னது 

 

தடி மாட்டில மேல் மழை பெய்த படி…அசையாமல் அமர்ந்து இருந்தான் இலக்கியன்.. அவன் அசையாமல் இருப்பதை பார்த்து கடுப்பான வைஷு 

 

“டேய் சித்தா” என்றாள் அவாள் முடிந்த வரை சத்தமாக… அதில் இலக்கியன் மட்டும் இல்லை…அந்த இடத்தில் இருந்த அனைவருமே அவனை திரும்பி பார்த்தனர் 

 

அதிலும் இனியாவின் வாட நாட்டு தோழிகள் வேறு பார்த்து சிரித்த படி சென்று விட… இலக்கியனுக்கு தான் மிகவும் அசிங்கமாக போனது… 

 

அதில் வைஷுவிடம் திரும்பியவன்…”என்ன குட்டி… குய்ட் கேர்ள்ஸ் முன்னாடி இப்டி பண்ணிட்ட…அவுங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க” வெட்கமே இல்லாமல் குழந்தையுடன் வாதாடி கொண்டு இருந்தான் 

 

வைஷுவும் சளைக்காமல் “நீ தான் நான் த்ரீ டைம்ஸ் கூப்பிடும் திரும்பவே இல்ல.. அதன் சத்தமா கூப்பிட்டே.. அதை அந்த கேர்ள்ஸ் பார்த்துட்டாக” என்றாள் பாவமாக 

 

[the_ad id=”6605″]

 

 

அதில் முகத்தை பாவமாக வைத்து கொண்ட இலக்கியனிடம் சென்றவள் “கவலை படாத சித்து. நான் அவுங்க கிட்ட பேசி உனக்கு கல்யாணம் பண்ணி வெக்குறேன்.. அப்றம் நீ நான், அம்மா, அப்பா, அம்மு, புது அப்பா எல்லாரும் டெல்லிக்கு போய்டலாம்” என்றாள் குழந்தை மொழியில் 

 

அவற்றை கேட்டு கொண்டு இருந்த யாழினி அருகில் வந்து… “ஆமாம் பெரிய மனுஷி சொல்லிட்டாங்க…நாளைக்கே கல்யாணம் பண்ணி வெச்சிடுவா” என்று வைஷு தலையில் லேசாக கொட்டி… உள்ளே அனுப்பி வைத்தார் 

 

மறுபுறமோ அவனை அறியாமல் இலக்கியன் பேசி கொண்டு இருக்க.. அங்கு மீனுவோ எரிந்து கொண்டு இருந்தாள்..அவளின் முக பாவனையில் இருந்து அதை புரிந்து கொண்ட இலக்கியன்.. அவளை மேலும் சீண்டும் விதமாக 

 

யாழினியிடம் சென்றவன் “அக்கா நீங்களாச்சு எனக்கு பாவம் பார்க்க கூடாதா.. நான் ரொம்ப நாளா ஒண்டி கட்டையாவே இருக்கேனே…. நீங்களாவது உங்க எனக்கு வந்து இருக்க பொண்ணுங்கள்ள யாரையாவது பார்த்து பேசி வெக்க கூடாதா” என்றான் மீனுவின் மேல் பார்வையை வைத்த படியே 

 

அவன் பேசிய அனைத்தையும் கேட்டவள்… அவள் கையில் எதோ பத்திரத்துடன்.. அவனை கடந்து செல்வதை போல் சென்று… அவனின் மேல் அந்த பாத்திரத்தில் இருந்த அனைத்தையும் கொட்டி விட்டாள் 

 

இரண்டு மூன்று நிமிடம் கழித்து தான் அது வெந்நீர் என்பதே இலக்கியனுக்கு புரிய… 

 

“ஹையோ அம்மா என்று அவன் அலற” என்ன தம்பி ஆச்சு என்று யாழினி பதறி கொண்டு கேட்க 

 

“சூடு தண்ணி ஊத்திடகா இவ” என்றான் மீனுவை குற்றம் சாட்டும் வகையில் 

 

“அது இன்னும் சூடே இல்லை…அது இல்லாம தெரியாம தான் ஊத்திட்டேன்” என்றாள் மீனு 

 

பின் தண்ணீரை தொட்டு பார்த்த யாழினி.. “சில்லுனு தானே தம்பி இருக்கு… அதுக்குள்ள இப்டி கத்திடீங்க” என்றார் மிகவும் கூல்லாக 

 

செல்லும் மீனுவையே முறைத்த படி பார்த்து கொண்டு இருந்த இலக்கியனை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டே மீனு சென்றாள் 

 

“எனக்கேவா.. பாத்துக்குறேன் இருடி உன்னை… எவ்வளவு திமிரு உனக்கு..  பார்த்துக்குறேன்” என்ற படி அவன் மனதில் எதையோ யோசித்து விட்டான் 

 

மறுபுறம்.. வந்த விருந்துணருக்கு உணவு பரிமாறி கொண்டு இருந்தாள் இனியா 

 

அங்கு வந்த ஜானகி “இனியா வாழை இல்லை கம்மியா இருக்குமா…நான் இப்போதான் கவனிச்சேன்.. நீ எப்படியாவது சமாளி… நான் ஆள் அனுப்பி தோப்புல இருந்து இலை அறுத்துகிட்டு வர சொல்லுறேன் ” என்று விட்டு அவர் சென்று விட்டார்.. 

 

இவளும் கவனமாக இலைகளை பார்த்து பார்த்து தான் வைத்து கொண்டு இருந்தாள்.. இறுதி பந்திக்கு இலைகளை வைக்க தயார் செய்து கொண்டு இருக்கும் போது.. அங்கு வந்தா அன்பு 

 

அவளை ஊட்டி உரசிய படியே அவளின் பின்னால் நிற்க.. அவன் தான் என்று கண்டு பிடித்து விட்ட இனியா 

 

“இங்க என்ன பண்ணுறீங்க.. உள்ள போங்க.  இது டங்கன் கடைசி பந்தி… முடிச்சிட்டு வரேன்” என்றவளை மேலும் நெருங்கியவனை,, திரும்பி அதிர்ச்சியுடன் பார்த்தவள் 

 

“எல்லாரும் இருக்காங்க அன்பு… என்ன பண்றீங்க” என்றாள் அவனை விட்டு விலக முயற்சித்த படியே..  

 

விலக பார்த்தவளை.. விலக விடாமல் அவள் கையை பிடித்து மேலும் அவளுடன் இழுத்தவன்… 

 

“இனியா… அன்னைக்கு மாதிரி…அந்த மாட்டு கொட்டகையில மாதிரி.. ஒரே ஒரு தடவை என்றான்” பார்வையை இனியாவின் இதழின் மீது வைத்து கொண்டு 

 

[the_ad id=”6605″]

 

 

அவன் கூறுவது புரிந்ததும்… முகம் ரத்த சிவப்பில் சிவந்து போக… அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல்… வெட்கத்தில் தலை குடுந்தவளின் முகத்தை மேலே உயர்த்தி ரசித்து கொண்டு இருந்தான் அன்பு 

 

அவனை இவள் ரசிக்க.. இவளை அவன் ரசிக்க என்று இருவரும், இருவருக்குள்ளும் மூழ்கி… அன்பு வளைந்து அவளின் இதழை நெருங்கும் நேரம்…அவர்களின் அருகில் எதோ ஒரு வினோதமான சத்தம் கேட்க 

 

திடுக்கித்து திரும்பியவர்கள்…மிரண்டு தான் போனார்கள் 

 

அவர்களின் வீட்டு மாட்டை யாரும் காட்டாமல் விட்டு விட.. அது பந்திக்காக வைத்து இருந்த இலையை மேய்ந்து கொண்டு இருந்தது 

 

அதில் அதிர்ந்த இனியா…”அய்யய்யோ என்னோட இலை…. மொத்தம் போச்சே.. இப்போ நான் கடைசி பந்திக்கு என்ன பண்ணுவேன்.. எல்லாம் உங்களால தான்… நீங்க மட்டும் வராம இருந்து இருந்தா..  இப்டி ஆகி இருக்குமா” என்று அவள் பதறி கொண்டு இருக்க 

 

அந்த சாதத்தில் அங்கு வந்தா ஜானகி.. நடந்த வற்றை புரிந்து கொண்டு… “அன்பு நீ உள்ள போ.. இனியா இரு நீ பதறாத.. தொப்புள இருந்து ஆளுங்க வந்துட்டாங்க.. நான் பாத்துக்குறேன்” என்ற படி ஜானகி அங்கு பொறுப்பை ஏற்று கொண்டார் 

 

சென்று கொண்டு இருக்கும் அன்பு… இனியாவிற்கு எதையோ ஜாடையில் கூற முயற்சிக்க.. அது அவளுக்கு புரியாமல் போக… அன்பு அவன் பாக்கெட்டில் இருந்து ஒரு காகித துண்டு ஒன்றை எடுத்து.. அங்கு இருக்கும் பாத்திரத்திற்கு கீழே வைத்து விட்டு சென்று விட்டான்… 

 

மெல்ல சென்று அதை எடுத்து படிக்க… அதில் “இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மாடிக்கு வந்துடு.. உனக்காக காத்துகிட்டு இருப்பேன்” என்று இருந்தது.. அதை படித்தவள் சிரித்த படி இரவு பத்து மணிக்கு காத்திருந்தாள் 

 

பத்து மணி போல.. யாருக்கும் தெரியாமல் அன்பை சந்திக்க மாடிக்கு சென்றாள் இனியா… 

 

அவளுக்கு முன்னவே அன்பு அங்கு காத்திருக்க.. அவள் வருவதை பார்த்தவன்.. 

 

“எதுக்குடி இவ்வளவு நேரம் ஆச்சு…எப்போ வர சொன்னேன் உன்ன” வந்ததும் வராததுமாக அவளை முறைதான் 

 

அதான் பத்து மணிக்கு வந்துட்டேன்ல… அப்றம் என்ன… உங்களுக்கு வேண்டாம்ணா விடுங்க… நான் போறேன்… என்றவளை கை பற்றி நிறுத்தியவன்… 

 

அதுக்குள்ள என் பச்ச மிளகாய்க்கு கோவம் வந்துடும்… என்று அவள் கை பற்றி அவன் புறம் இழுத்தவனை 

 

“என்ன பண்றீங்க.. விடுங்க… கீழே எல்லாரும் முழிச்சி தான் இருக்காங்க… நானே போன் பேசணும்னு தான் இங்க வந்தேன்” என்று அவள் வாய் விட சொல்லி சொன்னாலும்… அவள் அன்பை விட்டு ஒரு இன்ச் கூட நகர வில்லை 

 

இருடி போவ… மொதல்ல இதை வாங்கிட்டு போ…என்ற அப்டி அவன் கையில் இருக்கும் டப்பாவை திறந்து ஒரு செயின் ஒன்றை எடுத்தவன்…

 

அதை அவளிடம் காட்டி… உனக்காக ஆர்டர் குடுத்து பண்ணது…என்ற படி அவளிடம் நீட்ட…அதன் டாலர் எதோ வித்யாசமாக இருப்பதை பார்த்தவள் 

 

என்ன இது.. என்று அதை கவனமாக பார்க்க அதில் இதயம் வடிவில் ஒரு டாலர் அதற்குள் “AI” என்று எழுதி இருந்தது.. 

 

என்ன இது என்று அந்த வார்த்தைகளை சுட்டி காட்டி அவள் கேட்க… இது ரெண்டும் நம்ப பேரோட முதல் வார்த்தை.. அன்பு, இனியவள் என்றான் முகம் முழுக்க பூரிப்புடன்… 

 

மேலும் தொடர்ந்தவன்… AIணா இன்னொரு அர்த்தம் கூட இருக்கு… ai னா சீனா பாஷைல காதல்னு அர்த்தம்… 

 

[the_ad id=”6605″]

 

 

 

அதாவது நம்ப ரெண்டு ஒன்னு சேருறது தான் காதலே அசை படுற ஒண்ணுனு அர்த்தம்.. என்றான் விளக்கிய படியே 

 

அதை அழகாய் கையில் வாங்கி பார்த்து கொண்டு இருந்தவளை.. தன்னுடன் அணைத்த படி.. 

 

“என்னை விட்டு இனி எங்கயும் போயிடாத இனியா” என்றான் காதலுடன் 

 

அவனின் இந்த வார்த்தையை பொய்யாக்க.. அவர்களின் வீட்டு வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கினார் ஒருத்தர்… 

 

மடியில் இருந்த அன்பு அவரை கவனித்தாலும்… இருட்டில் முகம் சரியாக தெரியாமல் போக… அவர் வீட்டை நோக்கி நடந்து வர வர… அந்த மெல்லிய நிலவு ஒளியில்… அது யார் என்பதை கண்டு பிடித்து விட்டான் அவன் 

 

“மீரா” என்ற படி இனியா மேல் இருந்த தன்னுடைய அணைப்பை விளங்கியவன்… வீடு நோக்கி வரும் அவளையே பார்த்து கொண்டு இருக்க… 

 

இனியாவோ “என்ன” என்பதை போல் அன்பை வெறித்து கொண்டு இருந்தாள் 

 

                        மாயம் தொடரும்…. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!