Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennaval

Ennaval 36

என்னவள் _36

சக்தி வேலைக்குசெல்வதை நிறுத்தி இருந்தாள். மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது.  ரேஷ்மா தான் விடாமல் “மறுபடியும் வேலைக்கு வா சக்தி என்று அழைத்து கொண்டு இருந்தாள். பொண்ணுன்னு இருந்தா கேட்டு வரத்தானே செய்வாங்க சக்தி.  பிடிக்கலைனா நமக்கு ஒத்துவராதுன்னு தோணினா விலகிடறதும் சகஜம் தானே அதுக்காக வேலையை விடுவாயா..”.என்று கேட்டு இருந்தாள் அதுவும் இவளது வீடு தேடி வந்து சண்டையிட்டு இருந்தால் என்றுதான் சொல்ல வேண்டும். 

 

“அப்படியல்ல ரேஷ்மா…கொஞ்ச நாள் வரைக்கும் வரணும்ன்னு நினைச்சு தான் வந்தேன். இனியும் அங்கே வேலைக்கு வந்தா அது அவ்வளவாக நல்லா இருக்காது. இனி வீட்டில் தான்.  லீவ்வை என்ஜாய் பண்ணப்போறேன் என்று முடித்து கொண்டாள்.அதுக்காக நீ பேசாமல் இருக்க கூடாது. உன்னோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆனால் சொல்லணும் நான் கட்டாயம் வருவேன்.”



Advertisement

 

“கட்டாயமாக சக்தி “என்று புறப்பட்டு சென்று இருந்தாள். எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தவளுக்கு இது மாறுதலாக இருந்தது இந்த திறப்பு விழாவிற்கு அழைத்து இருந்தது. ஒரு நாளுக்கு முன்னதாகவே அங்கே சென்று இருந்தாள்.

 

Advertisement

திவ்யாவோடு முதல் நாளே ரெசாட்டை சுற்றி பார்த்து விட்டு வந்திருந்தான் சக்தி …”அக்கா நல்ல கற்பனை கா…ரொம்ப அழகான வந்து இருக்கு. ஒரு தடவை வந்தவங்க மறுபடியும் மறுபடியும் வருவாங்க…”

Advertisement

 

“சிவா கூட இதைதான்  சொன்னாங்க…திவ்யாவும் மகிழ்ச்சியாக பதில் சொல்லி கொண்டே அவளோடு நடந்து வந்தாள்.”

 

Advertisement

அடுத்த நாள் விடியற்காலை பொழுதில் இனிதே துவங்கி இருந்தது. திறப்பு விழா…காலையிலேயே ஒயரை வைத்து பூஜை துவங்கி இருந்தனர். சிவா, திவ்யா, அபிநயா அருகிலேயே சிவாவின் தாய்தந்தை இருவரையும் அமரவைத்து  ஓமம் வளர்க்க சுற்றிலும் புகையாக காணப்பட்டது.

 

அருகிலேயே சற்று நகர்ந்து சக்தி அமர்ந்து இருந்தாள் தனது தாய் தந்தையோடு அமர்ந்து இருந்தாள்.  பூஜை துவங்கிய கொஞ்ச நேரத்திலேயே  அபிநயா அழைத்து ஆரம்பித்து இருந்தாள் புகையை பார்த்து பயந்து…கூடவே கண்களிலும் புகை  சேராமல் கண்ணீர்  வர…அவளை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வெளியே நகர்ந்து சென்றாள்.

 

வாசலை தாண்டி போட்டு இருந்தது இருக்கையில் அமர்ந்தபடி அபிநயாவிற்கு விளையாட்டுக்காட்டிக்கொண்டு அமர்ந்துஇருந்தாள் சக்தி…நன்றாக விடிய ஆரம்பித்து இருந்தது.  ஊட்டி ஏற்கனவே குளிர் இப்போது நன்றாக குளிர்ந்தது. அபிநயாவிற்கு உடல் முழுக்க ஸ்வட்டர் அணிந்து இருக்க…இவளுக்கு அந்த குளிரில் முகம் சிவந்து இருந்தது. சேலையின் முந்தியை எடுத்து போர்த்தியபடி சூரியனின்  உதயத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.

 

அப்போது தான்  கார்த்திக் அங்கே வந்து கொண்டு இருந்தான் கார்த்திக்கை பார்க்கவும் அபிநயா “ஐ…தாடி அங்கிள் என்று சத்தமாக அழைத்து இருந்தால் இந்த நான்கு மாதத்தில் நன்கு பரீட்சயம் ஆகி இருந்தது. “

 

“அபிக்குட்டி  இங்கே என்ன பண்ணறிங்க என்று அருகில் வந்தான். கவனம் முழுவதும் அபிநயா மீது இருந்தது அப்பா எங்கே மா…”

 

“உன்ளே அங்கிள் என்று மழலையில் சொல்லியவள் உள்ளே புகை.. என்று அபிநயா அழகாக அபிநயத்தபடி சொல்ல…”

 

“குயூட் பார்த்திட்டு வரேன் என்றபடி உள்ளே சென்றான். அவன் அந்த பக்கம் நகரவும் வாங்க அபி குட்டி நாம ரெண்டு பேரும் சுற்றி பார்க்கலாம் என்று நகர்ந்து சென்ளாள் சக்தி.”

 

பத்து மணியை தாண்டிய போது நிறைய பேர் வர ஆரம்பித்தனர். கார்த்திக்கின் குடும்பத்தினர் கூட அனைவரும் வந்து இருந்தனர். வேந்தனுக்கு எட்டு மாதம்முடிந்து இருந்தது.  பிருந்தாவும் வந்து இருந்தால் கொஞ்ச நேரம் இருந்து விட்டு புறப்பட்டனர்.  அவ்வப்போது சக்தியின் மேலும் கண்கள் சென்று வந்து கொண்டு இருந்தது கார்த்திக்கின் தாயாருக்கு…புடவையில் பாந்தமாக அங்கே அபிநயாவுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தாள். அவளது சிரிப்பு, பேச்சு என்று ஏதோ ஒன்று அவளை தனித்து காட்டியது. அடிக்கடி கார்த்திக்கின் தாயாரின் கண்கள் அவளை தொட்டு தொட்டு மீண்டு கொண்டு இருந்தது. 

 

[the_ad id=”6605″]

 

 

 

பிருந்தா தான் சற்று நேரம் பார்த்தவள் “அம்மா போகலாம் மா…வேடிக்கை பார்க்காதிங்க என்று கூற…லட்சுமியோ…பொண்ணு அழகா இருக்கறால்ல…”

 

“அம்மா போதும்மா புதுசா எதுவும் ஆசைப்படாதிங்க…”

 

“ச்சு…பிருந்தா நான் அப்படி சொல்ல வரலை பார்க்க அழகாக இருக்கறான்னு சொன்னேன்.”

 

“அம்மா…அழகா…அழகை பற்றி மட்டும் பேசாதிங்க எனக்கு மாயா அண்ணி ஞாபகம் வருது. நாம புறப்படலாம் மா…”

 

“ம்…போகலாம் அப்பாவை கூப்பிடு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது மாயாவின் தந்தையும் அங்கே வந்து சேர்ந்தார். லட்சுமியின் பார்வை செல்லும் திக்கை பார்த்தவர்…அருகில் வந்து கொண்டு இருந்த சிவாவிடம் விசாரித்தார்.”

 

“அந்த பொண்ணா என்னுடைய கொழுந்தியா…ஓய்ப்போட சிஸ்டர் மேட்டுப்பாளையத்தில் இருக்கறாங்க…என்ன விஷயம் அங்கிள் என்று விசாரிக்க….”

 

“இந்த பொண்ண நம்ம கார்த்திக்கிற்கு கேட்கலாமா சிவா…நீ என்ன நினைக்கற… ஏன் அப்படி பார்க்கற சிவா…என்னடா இவன் கேட்கறானேன்னு பார்க்கறையா…அவன் ரொம்ப நல்லவன் பா…நான் தான் அவனுக்கு என்னுடைய பொண்ணு கொடுத்து இப்படி ஆகிடுச்சு ..”

 

“ஆச்சயர்மா இருக்கு அங்கிள் அதுவும் நீங்க கேட்கிறது…இங்கேயும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு அங்கிள்…நானும் கொஞ்சம் உங்ககிட்ட பேசணும். நீங்கள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்…கார்த்திக் போல ஒரு பையனுக்கு பொண்ணு கொடுக்க யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. பேசலாம்  அங்கிள் இந்த ஃபங்சன் முடியட்டும். நானே உங்களை பார்க்க வர்றேன்  இங்கே தானே தங்கி இருப்பிங்க என்றவன்…ஒரு நிமிடம் சக்தியை கூப்பிடறேன்  பேசிப்பாருங்க என்றவன் சற்று நகர்ந்து அமர்ந்திருந்த சக்தியை அருகில் அழைத்தான்..”

 

“சக்தி இவங்க நமக்கு தெரிஞ்சவங்க…கோயம்புத்தூரில் இருந்து வந்து இருக்கறாங்க பேசிட்டு இரு என்றபடி கார்த்திக்கின் தாயார் அருகே அமர வைத்து விட்டு நகர்ந்து சென்றான்..அபிநயா பின் புறத்தில் வேந்தனை கையில் வைத்து அமர்ந்து இருக்க…முன் வரிசையில் லட்சுமிக்கு அருகில் அமர்ந்து இருந்தாள் சக்தி. “

 

சம்மந்தப்பட்ட  இருவருக்கும் தெரியாமல் ஒரு புதிய உறவுக்கு அஸ்திவாரம் அமைத்து விட்டு புறப்பட்டார் மாயாவின் தந்தை…அவரை பொருத்தவரையில் செய்த தவறுக்கு பிராய்சித்தம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார். நீண்ட நாட்களாக இதே யோசனையில் இருக்க இன்று அதற்கு ஒரு விடை கிடைத்ததாக நினைத்தார்.

 

அன்றைய மாலை பொழுதில் மாயாவின் தந்தை கார்த்திக்கின் தாய் தந்தை என மூவருமே இவனை சந்திக்க காத்து இருந்தனர். இவனை பார்க்கவுமே மாயாவின் தந்தை  குழந்தை இருக்கு எப்படி பெண்ணை தர்றது அப்படி எல்லாம் யோசிக்க வேண்டாம் குழந்தை அவங்களுக்கு எப்பவும் தடையா இருக்காது. குழந்தையால் பிரச்சினை வரும்ன்னு நீங்கள் யோசிச்சா குழந்தையை எங்க கூட கூப்பிட்டுக்குவோம் என்று வந்ததும் சொல்லி இருந்தார். 

 

“பையன் கார்த்திக் அப்படிங்கும் போது விசாரிக்க தேவை இல்லை. ஒரளவுக்கு விஷயம் தெரியும் அதனால நான் வீட்டில் பேசிக்கறேன். எங்க பக்கம் இருக்கற பிரச்சினையை சொல்லிடறேன்  என சுருக்கமாக முதல் திருமணம் பிறகு நடந்தது என வரிசையாக சொன்னவன் சக்தி பேர்ல் எந்த தப்பும் இல்லை. சரியா விசாரிக்காத  எங்க பேரில் தான் தப்பு. உங்களுக்கு பிடித்து இருந்தா இன்னும் சக்தி வீட்டில் யாருக்கும் சொல்லலை வீட்டிலேயும் சொல்லல… அவங்ககிட்ட பேசிட்டு எங்க பக்கத்து முடிவை சொல்லறோம் என்று பேசிவிட்டு புறப்பட்டான் சிவா…”

 

“கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு  சக்தியை பிடித்துஇருக்க தங்களது சம்மதத்தை உடனே சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தனர்.” இப்போது கார்த்திக்கை எப்படி சம்மதிக்க வைப்பது என்ற சந்தேகம் தான்.  யார் முதலில் இதை பற்றி அவனிடம் பேசுவது…எப்படி ஆரம்பிப்பது தெரியாமல் தவித்து கொண்டு இருந்தனர்.

 

அங்கே சக்தியின் வீட்டில் சிவா பேசி இருந்தான் ஏற்கனவே திவ்யாவிடம் முதலில் சொல்லி இருந்தான் இந்த இடைப்பட்ட கால பழக்கம் ஒரளவிற்கு கார்த்திக்கை அவளுக்கு தெரிந்து இருந்தது.  நடந்ததும் சிவா சொல்லி இருக்க…இரண்டாவது திருமணமா…சக்திக்கு இப்படி ஒரு இடத்திற்கா தர வேண்டும் என்று சிறு தயக்கம் மட்டும் இருந்தது. ஒரே முடிவாக அப்பா அம்மாகிட்ட கேளுங்கள் அவங்களோடது என்ன முடிவோ அதுதான் எனக்கும் என்று முடித்து கொண்டாள்.

 

சக்தியின் தாய் தந்தைக்கும் பிடித்தே இருந்தது.  மெல்ல  சக்தியிடம் சொல்லி இருந்தனர். இப்போதைக்கு வேண்டாமே பா…என்று மட்டும் சொல்லி இருந்தாள். 

 

“உடனே சரி சொல்ல போறது இல்லைமா கேட்டுவந்து  இருக்கறாங்க அதைத்தான் உன்கிட்ட சொன்னோம் பார்க்கலாம் என்று அப்போதைக்கு முடித்து கொண்டார்.”

 

நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தது.  எல்லாமே பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது அதற்கு மேல் எதையும் பேச முடியவில்லை.  முக்கியமாக கார்த்திக்கிடம்…யார் முதலில் அவனிடம் பேசுவது என்று தயக்கத்தில் நாட்கள் வேகமாக நகர்ந்தது.

 

ஒருகட்டத்திற்கு மேல் பொருக்கமுடியாமல் மாயாவின் தந்தையே கார்த்திக்கை அவனதுவீட்டிற்கு வரச்சொல்லி இருந்தார். “வீடு வரைக்கும் வா கார்த்திக் உன்கிட்ட பேசணும்  என்று…”இப்போதும் மாயாவோடு இருந்தது வீட்டில் தான் தங்கி இருந்தான். சாப்பாடு ஏதாவது ஹோட்டலில்…அல்லது வேலை செய்யும் இடத்தில் என்று…வீட்டிற்கு வருவதே அபூர்வமான நிகழ்வாக மாறி இருந்தது.  வேந்தனை பார்த்து கூட நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தது.  எதிலும் பிடிப்பு இல்லை.  எதிலும் பற்றுதல் இல்லை. 

 

குழந்தையை பார்க்க வந்தால் கூட பழைய மாதிரி குழந்தை இவனிடம் நெருங்குவது இல்லை இவனின் தோற்றம் பார்த்து பயத்தில் அழுதான்.  இன்று வீட்டிற்கு வந்ததாக அழைத்து இருக்க…புறப்பட்டு வந்தான் கார்த்திக்.  அதே டிரிம் செய்யப்பட்ட தாடி கண்களில் கண்ணாடி என்று…இவனை பார்க்கவுமே பிருந்தா வேந்தனை தூக்கிக்கொண்டு வந்து இவனிடம் காட்டி இருந்தாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“தங்கம் அப்பா பாருங்க இங்கே பாருங்க யாரு வந்து இருக்கறாங்கன்னு…அப்பா டா என்று பேசியபடி இவனிடம் நீட்ட வழக்கம் போல கதறி அழுதுகொண்டு இருந்தான். “

 

“பச்…கூப்பிட்டுட்டு போ  பிருந்தா அவன்தான் அழறானே…”

 

“உன்னால தான் அண்ணா முன்னாடி உன்கிட்ட மட்டும் தான் இருப்பான் இப்பப்பாரு உன்னை சுத்தமா மறந்துட்டான்.அண்ணா அவன் பிடிச்சிட்டு எழுந்து நிற்க டிரை பண்ணறான் தெரியுமா…நீ அவனை நிறைய மிஸ் பண்ணற அண்ணா.  பழைய மாதிரி இங்கேயே வந்திடு ணா ப்ளீஸ்…”

 

“வரேன் டா கொஞ்சம் நாள் போகட்டும். இப்போது அம்மா  அங்கிள் எங்கே என்ன பார்க்க கூப்பிட்டு இருந்தாங்க…”

 

“தோட்டத்தில் அப்பா கூட அங்கிள் கூட பேசிட்டு இருக்கறாங்க…”

 

“சரி பிருந்தா போய் பார்த்துவிட்டு வரேன் என்று பின்புறத்தில் இருந்த தோட்டத்தை நோக்கி சென்றான்.”

 

அங்கே கார்த்திக் அம்மா அப்பா மாயாவின் தந்தை மூவரும் அமர்ந்து இருந்தனர். மாயாவின் தந்தை தான் நேரடியாக பேச்சை துவங்கினார்.  “கார்த்திக்  உனக்காக ஒரு பொண்ணு பார்த்து இருக்கிறேன் நீ ஒரு தடவை போய் பார்க்கணும் கார்த்திக். ..”

 

“யாரோட  ஐடியா இது அங்கிள் நான் கேட்கவே இல்லையே எனக்கு இனி கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் சுத்தமாக இல்லை.  இனி எப்பவுமே..இந்த ஒரு வாழ்க்கை போதும்

நிறைய அனுபவிச்சாச்சு…கொலைகாரன் அப்படிங்கற பெயர் வரைக்கும்…இப்பவும் சில நேரம் சிலர் பேசறது காதில் விழுது.மாயாவை நான் தான் கொன்னுட்டதா…இந்த பேர் காலத்துக்கும் கூட வரும்…வெறுப்பா இருக்கு…அங்கிள்…இந்த பேச்சு இனி வேண்டாம் நான் கிளம்பறேன் அங்கிள்”.

 

“கார்த்திக்…கார்த்திக்  நில்லு…வேகமாக எழுந்த லட்சுமி அவனுக்கு அருகில் வந்தவர் எத்தனை நாள் நாங்க எல்லோரும் இருப்போம்ன்னு நினைக்கற..உன்னோட பையன் கடைசி வரைக்கும்  அனாதை மாதிரி வளரணுமா. .”

 

“என்ன மாதிரி ப்ளாக்மெயில்…மா இது  சாவு எல்லோருக்கும் தான் வரும் ஏன் மாயா ஒரு நிமிடத்தில் வாழ்க்கையை முடிச்சுக்கல எல்லோரும் ஒரு நாள் போகத்தான் போறோம். அதுக்காக இதை காரணம் காட்டாதிங்க…”

 

“ஏண்டா இப்படி பேசற… ஒரு தடவை அந்த பொண்ணு பார்த்தால்தான் என்ன? “

 

“சரிமா பார்க்கறேன் ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னமாதிரியே செக்கன்ட் மேரேஜ் பண்ணற பொண்ணா பாருங்க…”

 

மாயாவின் தந்தை சிரித்தபடி” எப்படி கார்த்திக் பொண்ணு கிடைக்காதுன்னா இது மாதிரி ஒரு கண்டிசன் போடற…ஸாரி கார்த்திக் இந்த விஷயத்தில் கடவுள் உன்பக்கம் இல்லை.  பார்த்து இருக்கற பெண் அது போல ஒரு பொண்ணு தான். உன்னுடைய ஃப்ரெண்டோட சொந்தக்கார பொண்ணு.  நீ ஒரு தடவை மட்டும் வந்து பாரு…”

 

ஒருவழியாக பேசி கார்த்திக்கை சம்மதிக்க வைத்து இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தனர்.அங்கே அதே போல சக்தியையும்…”திவ்யா பேசி கொடிசியா அருகில் இருக்கும் ஹரிபவன் ஹோட்டலுக்கு அழைத்து வந்திருந்தான் சிவா கூடவே அபிநயாவோடு…பேமிலி ரூம் ஃபுக் செய்து காத்திருந்தனர் கார்த்திக்கின் வருகைக்காக…சக்தி ஒரு சாதாரண கார்டன் சேலையில் அதிக அலங்காரம் எதுவும் இல்லாமல் வந்து இருந்தாள். முகத்தில் கொஞ்சம் டென்சன் இருந்தது.  விருப்பம் இல்லை என்று கூறியவளை பிடிவாதமாக பேசி அழைத்து வந்திருந்தான் சிவா…”

 

“ஜட்ஸ் பத்து நிமிடம் தான் பேசினதும் நாங்கள் அங்கே வந்திடுவோம் என்று…திவ்யா சக்தியின் குடும்பத்தினர் மட்டும் அல்ல.  கார்த்திக்கின் குடும்பமும் அங்கே வந்து வெளியே காத்து இருந்தனர்.”

 

சொன்ன நேரம் தாண்டி பத்து நிமிடம் கடந்த போது கார்த்திக் அங்கே வந்தான் பிடிவாதமாக வேந்தனை தூக்கிக்கொண்டு…இவனை பார்க்கவும் வழக்கம்போல அழுது கதற எதை பற்றியும் கவலை இல்லாமல் தூக்கி வந்து இருந்தான்.

 

லட்சுமி கூட மாயாவின் தந்தையிடம் “ஏன் இப்படி பண்ணறான் அழ அழ ஏன் இப்படி அழைச்சிட்டு போறான் ஏண்ணா இப்படி இருக்கிறான்  என்று…”

 

“அவனோட பையன் தானே அவனுக்கு இல்லாத அக்கரையா முடியாட்டி கூப்பிடுவான். நல்லதே நடக்கும் வெயிட் பண்ணலாம் என்றபடி காரில் அமர்ந்து இருந்தனர்.”

 

டேபிளில் நம்பரை கேட்டு இவள் இருக்கும் இடத்திற்கு வர…வேந்தன் உச்சக்கட்ட சத்தத்தோடு அழுது கொண்டு இருந்தான். மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது கூட அவனுக்கு பெரியதாக இல்லை.  அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்தான்.

 

புறப்படும் போது தான் சிவா அழைத்து சொல்லி இருந்தான் தானும் வருவதாக ..அப்போது தான் தெரிந்தது இதில் சிவாவின் பங்கும் இருக்கிறது என்று…அவனுக்காகவாவது ஒரு முறை பார்த்து விட்டு முடியாது என்று சொல்லி விடலாம் என்ற முடிவோடு வந்து இருந்தான். சிவா இவனை பார்த்து சிரித்தபடிமே  பேசிட்டு இருங்க வந்துடறேன் என்று அபிநயாவோடு நகர்ந்து சென்றிருந்தான்.

 

அழும் வேந்தனை பார்த்தபடியே முதலில் பேசியது சக்தி தான். ” நான் அவனை சமாதானப்படுத்தவா என்று…”

 

குழந்தையை பார்த்ததும் எழுந்து சென்று விடுவாள் என்று நினைத்து வர அவள் கேட்டது கொஞ்சம் ஆச்சர்யத்தை தந்தது.

 

[the_ad id=”6605″]

 

 

 

“ம்…என்றபடி இவளிடம் தர…” ஒரு நிமிடம் தான் மொத்தமாக குழந்தையோடு ஐக்கியம் ஆகி இருந்தாள் சக்தி.”.அச்சோ..தங்கம் ஏன் அழறிங்க என்று கேட்டபடி. . ஏற்கெனவே வாயில் ஜோல் ஊற்றியபடி, மூக்குல் சளி ஒழுக அழுதவனை…தனது கர்சீப்பில் முகத்தை துடைத்து  விட்டபடி..அச்சோ…குட்டிக்கு அழுது அழுது முகம் சிவந்து போச்சே என்றபடி  தோளில் தட்ட…கொஞ்சம் அழுகை குறையவும் ஏற்கெனவே குடித்து இருந்த  பால் முழுவதையும் அவளது தோளில் வாந்தி எடுத்து இருந்தான். அப்போதும் கூட அவளுக்கு  அருவருப்போ வேறு எதுவும் வரவில்லை. ஸாரி டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க என்றபடி அவனோடு வாஸ்பேசனை நோக்கி நகர்ந்து சென்றாள் சக்தி. “

 

இத்தனை நேரமும் கார்த்திக் பார்வையாளன் மட்டுமே இரண்டு பேருக்கும் நடுவில்…இவனுக்கு மாயாவின் நினைவு வந்தது அந்த நேரத்தில்…இரண்டு மாதம் முடிந்து இருக்க….அன்று இரவு அழுதுகொண்டே  இருந்தான் வேந்தன்.அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மாயாவிடம் ..”.மாயா குழந்தை ரொம்பநேரமாக அழறான் என்னன்னு பாரு…என்று தட்டி எழுப்ப…”

 

“அவனுக்கு என்ன வேலை எப்பபபாரு அழமட்டும்தான் தெரியும் நீயே பாரு கார்த்திக் என்றபடி திரும்பி படுத்துக்கொண்டாள்.”

 

“என்னன்னு எனக்கு எப்படி தெரியும் மாயா…எழுந்திரு…”

 

“கார்த்திக் டயஃபர்  நனைச்சி இருக்கும் மாற்றி விடணும் அதுக்காக தான் அழுவானா இருக்கும் நான்குமணிக்கு வேலை செய்யற அந்த அம்மா மாற்றி விட்டது என்று சொல்லவும்…”

 

“அடிப்பாவி இப்ப நேரம் என்ன ஏதாவது ஆகிட்டப்போகுது என்றபடி குழந்தையோடு நகர்ந்தான். டயஃபரை கழட்டி ஏற்கனவே டூடாய்லட் போய் இருக்க இன்னும் அதிகமாக குத்தினான் குழந்தை. “

 

“பார்த்தபடி துணி விரித்து படுக்க வைத்தவன் மறுபடியும் மாயாவை எழுப்பினான். மாயா டாய்லெட் போய் இருக்கிறான் கொஞ்சம் எழுந்திரு…வந்து கிளின் பண்ணி விட்டுட்டு படுத்துக்கோ ..”

 

“ச்சிய்..இதெல்லாம் நான் செஞ்சது இல்லை  என்னால முடியாது என்னவோ பண்ணுங்கள். “

 

“மாயா…அவனுக்கு பிடிச்சிக்கோ நான் கழுவிவிட்டுக்கறேன் “.

 

“என்னால முடியாது கார்த்திக் என்னவோ செய்..என்ன எழுப்பாதே என்றபடி படுத்திக் கொண்டாள். ஏற்கனவே பிடிவாதம் தெரிந்ததுதானே என்று இவனது  தாயாருக்கு அழைத்து பேசினான். “

 

“துணி ஏதாவது வச்சி  ஈரம் பண்ணி தொடச்சு விடு  கார்த்திக் குழந்தைக்கு அலர்ஜி வந்திடப்போகுது. புண் மாதிரி ஏதாவது வந்துட்டா கஷ்டம் மாயா என்ன பண்ணறா…”

 

“இல்லை மா அவள் தூங்கறா” என்று கொஞ்சம் சங்கடத்தோடு சொல்ல…சரி என்றபடி ஃபோனை வைத்தார்.  பழைய நினைவில் இருந்தவன் எதிரே பார்க்க…வேந்தனை மட்டும் அல்ல அவள் தன்னையும் சுத்தம் செய்தபடி வந்து அமர்ந்தாள். “குழந்தை இல்லையா அதுதான் அழவும் வாந்தி பண்ணிட்டான் என்று சொல்லியபடி அவனுக்கு எதிரில் அமர்ந்தாள் சக்தி. “

 

சிறிது நேரத்தில் எல்லாம் வேந்தன் அவளது மடியில் தூங்கி இருந்தான் வந்த நேரத்தில் இருந்து கார்த்திக்கிடம் பேச்சு எதுவும் இல்லை வெறும் பார்வை மட்டுமே…தூங்குவதை பார்க்கவும் தனது தாயாருக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தான் $அம்மா குழந்தை தூங்கிட்டான் வந்து எடுத்துவிட்டு போங்க என்று…சிறிது நேரத்தில் எல்லாம் வந்தவர் இவளது மடியில் இருந்து வாங்கி கொண்டு நகர்ந்தார்.” ஏற்கனவே இரண்டு ஃகாபி மட்டும் சொல்லி இருக்க…அமைதியாக குடித்தவள்…”தேங்க்ஸ் ..” என்றபடி எழுந்து கொண்டாள். குழந்தையை எடுக்க வந்தபோதே இவளுக்கு தெரிந்து விட்டது தன்னை சோதிக்க என்றே வேண்டும் என்று குழந்தையை எடுத்து வந்து இருக்கிறான் என்று…

 

உன்னை புரிந்து கொண்டேன் என்பது போல புன்னகையோடு சக்தி எழுந்து கொள்ள…அவளும் தன்னை கண்டு கொண்டாள் என்று நினைவில் அவனுடைய முகமும்  புன்னகை பூத்தது.

அந்த புன்னகை முகம் மறைத்த தாடியை தாண்டி கண்களில் பிரதிபளித்தது..

 

தொடரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!