Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 15 2

 

ஒரு வழியாக பூஜைகள் முடிந்து முளைப்பாரியை ஆற்றில் கரைத்து விட்டு வித்யாவும் வருவும் மரத்தடிக்கு வந்து நீரில் நனைந்த துணிகளை பிழிந்துக் கொண்டிருக்க , அரவிந்த் வந்து அருகில் நின்றான்.

 

“பாப்பா  கோயம்புத்தூர்ல  நமக்கு வீடு ரெடியாகிருச்சாம் … இப்போ கிஷோர் அங்கிள் பார்த்துட்டு இருக்கிற நம்ம ஹாஸ்பிட்டல் சார்ஜ்யும் இப்பவே எடுத்துக்கப்  போலாம்னு இருக்கேன். இங்க இருந்து என்ன பண்ண …அப்பாகிட்ட  சொல்லிட்டு நான் கிளம்பட்டுமா… இனி கல்யாணத்துக்கு வந்தா போதும் தானே …நைட் மச்சான் மதுரைக் கிளம்புறாராம் நானும் அவர் கூடவே கிளம்பறேன்…. “பேச்சு வருவிடம் இருந்தாலும் பார்வை வித்யாவைத் தொட்டு தொட்டு மீள ,



Advertisement

 

வித்யா என்ற அனுவித்யா அப்படியே உறைந்துப் போய் நின்றாள். ஆண்மகன் அண்ணன் மேலயே அத்தனை நம்பிக்கை வைத்திருக்கும் அம்மா …. தான் காதலிப்பது தெரிந்தால் என்ன சொல்வார்களோ என்று கலக்கத்தில் இருந்தவளுக்கு , அரவிந்தும் கிளம்புகிறேன் என்று சொன்னதும் ஒன்றுமே புரியாமல் வந்த அழுகையை அடக்கிக் கொண்டு நின்றாள்.

 

Advertisement

சங்கீதா வந்து உலுக்கவும் உணர்வுக்கு வந்தவள் , அவள் பின்னால் நடக்க ஆரம்பித்தாள் , பின்னால் திரும்பிப் பார்க்க வரு அரவிந்தோடு ஏதோ பேசிக் கொண்டே வந்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

 

ஒரு சிறுமி வருவின் அருகே வந்து மல்லிப்பூச்சரம் ஒன்றை தந்து, அன்று விக்ரம் சந்தனம் தேய்த்து விட்ட மரத்தடி பிள்ளையாரைக் காட்டி  ,

 

Advertisement

” பெரியம்மா சாமிக்குப் போடச் சொன்னாங்க…” என்று விட்டுச் சென்றாள். ராணி அவள் இங்கு வந்ததிலிருந்து இது போல் சொல்வதால் அவளும் அரவிந்திடம் சொல்லிவிட்டு , பிள்ளையாரை நோக்கிச் சென்றாள்.

 

அரவிந்த் காரருகேச் சென்றவன் முன்பக்க கதவில் சாய்ந்து நின்று வித்யாவைச் பார்த்துக் கொண்டே தங்கையின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அது வித்யா கையில் இருப்பதை அறிந்ததாலயே அவன் அழைத்தது. கையில் இருந்த வருவின் மொபைலில் அரவிந்தைப் பார்த்தவள், இப்போது நிமிர்ந்து அவனைப் பார்க்க , கண்ணசைவில் அதை எடுக்கச் சொன்னான்.

 

வித்யாவைப் பார்த்துக் கொண்டே ,

 

[the_ad id=”6605″]

 

 

 

“நீ பயப்படுறனுப் புரியுது…. அது சரிக்கூடதான்…  டெல்லிலயும் சரி , லண்டன்லயும் சரி … ஏன் சென்னைல தான நீயும் இருக்கிற … அங்கெல்லாம் இப்படி லவ்வர்ஸ்.. ஃபிரண்ட்ஸ் மீட் பண்றது சகஜமா நடக்கும் தானே … அது போல நம்ம ஊர்லயும் உன்னையக் கட்டாயப்படுத்தினது தப்புதான் …. ஐ ம் ….சாரி…. பார்ப்போம் கல்யாணத்துக்கு வாரேன். உனக்காக தான் … உன்னைப் பார்க்க ஆசைப்பட்டு தான் நான் இப்பவே வந்தது. ஆனா … ப்ச்… பக்கத்துல இருந்துட்டே உன்னைப் பார்க்கப் பேச… நம்ம கலாச்சாரம் விட மாட்டேங்குது … நான் வாரேன்…. ஐ லவ் யூ கேண்டி …. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் …பை ..” என்றவன் அவளிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமலே கட் செய்து … காரினுள் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

 

பிள்ளையாருக்கு மாலையிட்ட வரு ,விழி மூடி இறைவனிடம் தன் வேண்டுதலை வைத்து விட்டு , விழி திறக்க , எதிரில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு விக்ரம் நின்றுக் கொண்டிருந்தான்.

 

அவனைக் கண்டதும் மனம் பூரிப்படைந்து அது முகத்தில் முறுவலைக் கொண்டு வர முயல , அதற்குள் விக்ரம் ,

 

“உனக்காக எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது … வா” என்றவன் அந்த மரத்தின் பின் இருளாக இருந்த இடத்திற்கு செல்ல , வருவும் ,

 

“எனக்காக வெய்ட்டிங்கா” என்பதாக பின் செல்ல, ஒரு திண்டில் குதித்து அமர்ந்தவன் ,

 

“லட்சுமி அங்கப் பார்” என்றான். அவன் கை காட்டிய திசையில் ஒரு சிறுவன் என்று தான் சொல்ல வேண்டும். அரும்பு மீசையோடு வாயில் கை குட்டை திணிக்கப்பட்டு , அவனது சட்டையால் பின்புறம் கைகள் கட்டப்பட்டு முட்டி போட்டிருந்தான்.

 

வரு அதிர்ந்து போய் விக்ரமைப் பார்க்க, வேர்கடலை பொட்டலம் வைத்திருந்தவன் , அதைப் பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போட்டுக் கொண்டே ,

 

“எங்கிட்ட அடி வாங்குனவன யார்னு காட்டு … நானும் அடிக்கணும்னு சொன்னல்ல… இவந்தான் அவன் , சீக்கிரம் அடி …. ஆனா வெளிய தெரியாம அடி … கிளம்பணும் நேரமாகுது… ம் … குயிக் ….”

 

விக்ரம் சொன்னதும் கோபம் பெறுக அந்த இளைஞன் அருகில் செல்ல , அவன் பட்டென்று அவள் காலிலேயே விழ அவன் வாயிலிருந்த கை குட்டையும் நழுவியது. வரு கை ஓங்கப் போகையில்,

 

“அண்ணி …. மன்னிச்சிருங்க அண்ணி…. அண்ணன் கிட்ட நேத்தே சொல்லிட்டேன் …தெரியாம  ப்ரண்ட்ஸ்குள்ள பெட் வச்சு அப்படி பண்ணிட்டோம் … என்னை விட்ருங்க அண்ணி… விளையாட்டா நினைச்சுட்டோம்….”

 

அவன் பொத்தென்று காலில் விழுந்த போது கூட இருந்த கோபம் அவனது ‘அண்ணி’ … என்ற வார்த்தையில் காணாமல் போனது ,

 

” என்ன நான் அண்ணி விக்கி அண்ணனா…..க்யூட் …. இதுக் கூட நல்லாயிருக்கே….” நினைத்தவளுக்கு முகத்தில் புன்னகைத் தோன்ற ,

 

அவனது பின்புறம் சென்று கை கட்டை விடுவித்துக் கொண்டே ,

 

“நீ செஞ்சது தப்புதானே … உன் அக்கா தங்கச்சிக்கு இப்படி நடந்தா உன்னால பொறுத்துக்க முடியுமா…. எந்த பொண்ணா இருந்தாலும் அவங்க அனுமதி இல்லாம தொடுறதே தப்பு … அதுலயும் நீ பண்ண வேலை…. எவ்வளவு ஹர்ட் பண்ணுது தெரியுமா…. ஏற்கனவே நிறைய அடி வாங்கிட்டனு தெரியுது…. போதும் போ…. நான் அடிச்சாலும் அது உனக்கும் ஹர்ட்ஃபீலிங்ஸ் தான் தரும்…. நீ இப்படி பண்ணினத வெளிய சொன்னா உனக்கும் நல்லதில்லயே.. உன்னையப் பார்த்தா … என் கூடப் படிச்ச பசங்க போல தான் இருக்க … இனி இப்படி யாருகிட்டயும் நடந்துக்காத….” வரு தந்த அவனது சட்டையைப் போட்டுக் கொண்டே விக்ரமிடம் ஒரு காலை தாங்கி தாங்கி வந்தவன் ,

 

“அண்ணா …. நீங்க அடிச்சத விட.. அண்ணிபேசினது ரொம்ப வலிக்குதுண்ணா … “கரம் கூப்பியவன்,

 

“சாரி அண்ணா …சாரி அண்ணி… ” என்றபடி காலைத் தாங்கி தாங்கி நடந்துக் கொண்டே அங்கே கீழே விழுந்துக் கிடந்த சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்றான்.

 

கை தட்டி அவனை அழைத்த விக்ரம் ,

 

” டேய் தம்பி முகத்துல என்ன அடிபட்டிருக்கு…. ” என சிரித்துக் கொண்டே கேட்க ,

 

அவனும் , ” சைக்கிள்லருந்து விழுந்துட்டேண்ணா …..” என்று விட்டு வேகமாக தள்ளிக் கொண்டு சென்றான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

அவன் சென்றதும் வாய் விட்டு சிரித்த விக்ரம் ,

 

“இதுக்குத்தான் அவனக் காட்டச் சொன்னியா …. பாவம் உம்முனே சுத்துதே இந்தப் பொண்ணு … அவன முன்னால நிப்பாட்டினா கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்ணுவ நினைச்சேன் ….. ஆனா நீ ….” என்று மேலும் சிரிக்க ,

 

அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே , ” உனக்குத் தெரியுமா விக்கி , எங்கம்மா நான் குழந்தையா இருக்கிறப்போ கட்டில்ல ,படில இப்படி எதுலயாவது இடிச்சுக்கிட்டேன்னு வந்து அழுதா , என்னையக் அது முன்னாடி நிக்க வச்சு கட்டில அடிப்பாங்க.. என் பொண்ண எப்படி அடிக்கலாம் நீன்னு…. அப்புறம் என்கிட்ட சொல்லி அதை சமாதானப்படுத்த சொல்வாங்க அம்மா ரொம்ப அடிச்சிட்டேன்னு  … ” சொன்னதும் தாயின் ஞாபகத்தில் கண்ணீர் வர அதை துடைத்தவள் , புன்னகைத்துக் கொண்டே ,

 

“இப்ப நீயும் எங்கம்மா போல தான் பண்ணியிருக்க ….அதுதான் இப்ப அவன் கில்ட்டி ஃபீல் பண்ணி தான சொல்லிட்டுப் போறான்… அது மட்டுமா எங்கம்மா போலவே நீயும் எனக்காக அவன நடக்க முடியாம பண்ணிருக்க… அவனும் இனி அப்படி யார்கிட்டயும் தப்பா நடக்க மாட்டான் … ஆனா இப்ப நிஜமாவே மனசு லேசா தான் இருக்கு ….. தேங்க்ஸ் விக்கி ….”

 

“ஓகே ஓகே… உனக்காகனு இல்ல … யாராயிருந்தாலும் இப்படி தான் பண்ணியிருப்பேன்… அதுக்காக உங்கம்மா போலனுலாம் சொல்லாத …..”

 

“அது எப்படி …எனக்கு நல்லது நினைக்கிறவங்க எல்லாரும் எனக்கு அம்மா போல தான்னு எங்கப்பா சொல்லிருக்காங்க…” என வரு முகத்தை வெட்டிக் கொண்டு சொல்லவும் , மீண்டும் சிரித்தவன் ,

 

“சரி…. அப்படியே வச்சுக்கோ….ஆனா எல்லா நேரத்துலயும் இப்படி அமைதியா போகாத … அவன் விளையாட்டா செய்தானோ வேணும்னு செய்தானோ … அப்படி செய்தது தப்புதான்…எல்லாரையும் நம்பிடாத எந்தங்கச்சிங்களுக்கு சொல்றதுதான் உனக்கும் .. எதிர்க்கிற இடத்துல எதிர்த்து தான் ஆகணும்… அப்ப பாவம் புண்ணியம்லாம் பார்க்க கூடாது….சரி வா … எனக்கு டைம் ஆச்சு ….. நான்  ஊருக்கு கிளம்பணும் …..”

 

அதுவரை அவனையும் அவன் பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தவள் , அவன் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றதும் முகம் சுருங்க ,

 

” திரும்ப எப்ப வருவ விக்கி ….” என ஏக்கமாக கேட்க ,

 

“கல்யாணத்துக்குத் தான் வரணும்….ஆமா என்ன நீ விக்கினு கூப்பிடற…. எங்கத் தாத்தா முன்னாடி கூப்ட்டு வச்சிராத… அவர் விக்கிரமராஜானா , நான் விக்ரம ஆதித்யன் …”

 

“ஓகே விக்ஸ்டப்பானுக் கூப்பிடுறேன் …..” அவளது கேலிப் பேச்சில் ,

 

“பார்றா…. அப்ப அழுதவளா நீங்கிற மாதிரி பேசுற… ஆதினுக் கூப்பிடு இல்லயா , உன் அத்தை பையன் தானே… அப்படியே அழகா அத்தான்னு கூப்பிடு ….”

 

“அத்தானா ….அண்ணி அண்ணனக் கூப்பிடுறதப் பார்த்தே எனக்கு சிரிப்பு வருது …. விக்ஸ்டப்பா தான் சூப்பர்….” என சிரித்தவளைப் பார்த்தவன் ,

 

“அப்ப நானும் பம்கின்னுனே உன்னையக் கூப்பிடுவேன்”

 

” கூப்பிட்டுக்கோ…. ” என்பதை சத்தமாக சொன்னவள் , “யார் பேரையோ  சொல்றதுக்கு இது பெட்டர் ” என்பதாக முணுமுணுக்க ,

 

அவளைப் பார்த்தவன் , ” யப்பா என்ன வாய் … இன்னும் சின்ன பொண்ணாவே இருக்கிறா , இவ கிட்ட லவ்வ சொல்லி இவ படிப்பு முடியற வரை காத்திருப்பானாம் … சகல பாவம் தான்…”என நினைத்தவன் ,பிள்ளையாரைக் கண்டதும் ,

 

“பிள்ளையாரப்பா உனக்கு மல்லிகைப் பூ மாலையெல்லாம் வாங்கி கொடுத்துருக்கேன் … என்னைய மரியாதையா கூப்பிடச் சொல்லு அந்த பொண்ணுகிட்ட ….” என வணங்கி விட்டு அவன் கார் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

எதிரில் ராணி வருவைத் தேடிக் கொண்டு வர ,

 

[the_ad id=”6605″]

 

 

 

“அத்த உங்க பொண்ணு அங்க இருக்கிறா , என மரத்தைக் காட்டி விட்டுச் சென்றான் .

 

அவன் வாங்கியது எனத் தெரிந்ததும்,வரு பிள்ளையார் கழுத்தில் இருந்த மல்லிகை மாலையை எடுத்து, அதைத் தன் தலையில் சூடிக்கொண்டே ,

 

” இது எனக்கு …சாரி…. உங்களுக்கு நாளைக்கு வேற எடுத்துட்டு வாறேன்”

 

“கணபதி பப்பா….. விக்கி ரொம்ப ரொம்ப நல்லவனா இருக்கிறான். எனக்கு நிறைய செய்றான் … அவன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ….. என்னைய அவனுக்கு பிடிக்குமா …. ஏதோ ஃபீலிங்க்ஸ் … அது என்னனு எனக்குத் தெரியல…. ஆனா இந்த ஃபீலிங்க்ஸ் இதுவரைக்கும் யாருகிட்டயும் வந்ததில்ல ….கணபதி பப்பா மோரியா… ” என விழி மூடி நின்றவளை ராணி வந்து அழைத்துக் கொண்டார்.

 

வரு , வித்யா இருவரும் மனதில் ஏக்கங்களைச் சுமந்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 

‘காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ

இதயம் போகுதே….

தூவும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!