Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Punitha karthikeyan’s ஆளில்லா சாலையில்

 

நள்ளிரவு நேரம் எங்கும் இருள் சூழ்ந்து இருக்க அந்த ஆளில்லா சாலையில் ஒரு இளம் பெண் ஒருத்தி தனியாக நடந்து கொண்டிருந்தாள்.

(இருங்க……இருங்க……அப்பெண்  ஏதோ புலம்புவது போல் தெரிகிறது வாங்க கிட்ட போய் கேப்போம்….)

அப்பெண் வெள்ளை நிற அனார்கலி சுடி அணிந்திருந்தாள் தலையில் மல்லிகை சூடியிருந்தால்.



Advertisement

( ஆத்தி பேய்யா இருக்குமோ ??????????….)

இடது கையில் ஒரு ப்ரஸ்க்லேட்டும் வலது கையில் வாட்சும் காலில் கொலுசும்  அணிந்திருந்தாள் …

(அம்மாடி பேய் இல்ல கால் இருக்கு…..???)

Advertisement

வாங்க அவள் என்ன புலம்புறானு பாக்கலாம்…..

Advertisement

ஐயோ என்ன இவ்ளோ இருட்டா இருக்கு , அப்பெண்.

( பின்ன  நடுராத்திரி 12 மணிக்கு வெளிச்சமாவா இருக்கும்…… என்னோட மைண்ட்  வாய்ஸ் தான்…..ஹி ஹி ?????)

இப்போ  என்ன பண்றது பெருசா வீரப்பா  வீர வசனம் எல்லாம் பேசுனேன்ல இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும் , அப்பெண்

Advertisement

( லூசா இருக்குமோ……???)

தூரத்தில் நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது .

ஐயோ நாய் எல்லாம் கத்துதே இப்போ என்ன பண்றது பேசாம திரும்ப போயிறலாமா??? நோ நோ அப்பறம் நம்மள எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க இன்னும் கொஞ்ச தூரம் தான் காலனி கேட் வந்திரும் வாட்ச்மன் கூட ஒரே ஒரு selfie எடுத்திட்டு ஓடிறலாம் என்று தன்னை தேற்றி கொண்டால் அப்பெண்.

(என்னது selfie ஆ ?????????? என்னடா நடக்கு இங்க……..???)

அப்போது ஆஆஆஆஆஆஆ……..என்ற அலறல் கேக்க அப்பெண்ணும் அலறினாள்.

ஆஆஆஆஆ ……………..

பின் அவள் முன் ஒரு ஆடவன் வந்து குதித்தான்.அப்பொழுதுதான் அப்பெண்ணுக்கு சுவாசம் சற்று சீரானது.

எரும எரும ஏன்டா இப்படி கத்துற, என்றாள் அப்பெண்.

சரியான பயந்தாங்கொலி ,என்றான் சிரித்துகொண்டே  அந்த ஆடவன்.

உன்னை யாரு இங்க வர சொன்னது , அப்பெண்.

bet கட்டுனா  போதுமா உன்ன செக் பண்ண வேண்டாமா?? சும்மவா 5000rs மா, என்றான் ஆடவன்.

( என்னது பெட் ஆஹ் அட லூசுகளா…..ஐயோ ஐயோ எங்க போய் முட்டிப்பேன்…..??????)

போடா லூசு கார்த்தி ,ஆமாடா பெட் கட்டுன இரவு 12  மணிக்கு ஆளில்லாத சாலையில் நடந்து போய் நம்ம ஏரியா வாட்ச்மன் கூட selfie எடுக்குறேனு அதுக்காக பின்னாடியே வருவியா பக்கி, என்று கூறிக்கொண்டே திரும்பியவள் அங்கு கார்த்திக் இல்லை ஆளில்லா சாலை வெறிச்சோடி இருந்தது.

ஐயோ  இப்போ யாரு நம்மகூட பேசிட்டிருந்தது , அப்பெண்

( என்னது மறுபடியும் முதலேயிருந்தா….??????)

அப்பொழுது ஏதோ சத்தம் கேக்க திரும்பி பார்த்தால் அப்பெண்.அது வெடி சத்தம் கலர் கலராக பார்க்கவே கண்களை பறித்தது.

ஹாப்பி பர்த்டே டு யு , ஹாப்பி பர்த்டே டு யு புனிதா

என்று சத்தம் கேக்க திரும்பி பார்த்தால்.அங்கு கார்த்திக்கும்  தனது நண்பர்களும் கையில் கேக்குடன் இருப்பதை பார்த்த புனிதாவின் முட்டைக்கண் இன்னும் பெரியதாகியது.

(அட ஆமாங்க இன்றைக்கு புனிதாவிற்கு பிறந்தநாள் நான்கூட மறந்திட்ட இந்த கார்த்திக் பையன் நியாபகம் வச்சிருக்கான் பாருங்களே…….இருக்காதா பின்ன 5 வருட காதல் ….எப்படி காதலியின் பிறந்தநாளை மறக்கமுடியும்….. ஆனால் நம்ம கார்த்திக் தான் லவ் னு சொல்றான்  புனிதாவிற்கு அதில் நம்பிக்கை இல்லை பார்க்கலாம்….)

அப்பறம் என்ன ஒரே Celebration தான்.ஒரே கொண்டாட்டம் தான்……

ஆனால் புனிதாவோ கார்த்திக்கின் கண்ணில் இருந்த காதலை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்.

எல்லாம் முடிந்து அவரவர் வீட்டுக்கு சென்றதும் கார்த்திக்கும் புனிதாவும் தனியே இருந்தனர் அந்த ஆளில்லா சாலையில்.

இருவருமே எதுவும் பேசவில்லை……

சிறிது நேரம் கழித்து……

புனிதா , கார்த்திக் ஐ லவ் யூ……..

கார்த்திக் சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் அந்த ஆளில்லா சாலையில்.

பின் இருவரும் தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு அந்த ஆளில்லா சாலையில் நடந்தனர்.

முற்றும்……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!