Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Vizhigalin Mozhi Ennavo

Un Vizhigalin Mozhi Ennavo 30 2

 

அவன் சொன்னதை எல்லாம்  ஜீரணிக்கவே மதுவிற்கு நேரம் தேவைப்பட்டது.  அவனுக்கு இவளை பிடிக்கும் என்று தெரியும்.  இவ்வளவு ஆழமாய் பிடிக்கும் என்று தெரியவில்லை ,

 

அவன் காதலன் , கணவன் என்பதை விட  பல சமயம் தந்தையாக இருந்து தான் யோசித்திருக்கிறான். அவன் அன்பை கண்டு ஸ்தம்பித்து போய் நின்றிருந்தாள். அவன் காதல் புரியும் முன்னே அவனை விட்டு விலகி செல்ல எண்ணியது இல்லை .  இப்போது  சென்று விடுவாளா ,



Advertisement

 

வேப்ப மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் மடியில் ஏறி அமர போக ,

 

Advertisement

“ம்ம்ச்ச் என்னை தனியா விட்டுட்டு  போடி” என்று மீண்டும் கத்த

Advertisement

 

“ப்ளீஸ் மாமா நான் பண்ணது தப்புதான்.  நான் அப்போ எல்லாம் மனசுல இருந்து யோசிக்காமல் சின்ன புள்ள தனமா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டேன் . ப்ளீஸ் மாமா என்கிட்ட பேசு, நான் உன்  பேபி தான “என்று கெஞ்ச

 

Advertisement

” எனக்கு தெரியும் நீ மனசுல இருந்து பேசலன்னு ஆனாலும் நீ பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எண்ணை கொள்ளுதே !!கொஞ்ச நேரம் தனியா விடுடி என்று கண்மூடி அங்கேயே அமர்ந்து விட,

 

இதற்கு மேல் அவன் காயத்தை தூண்டிவிட பிடிக்காமல் அவளும் சற்று தள்ளியிருந்த வரப்பில் வெட்டிப் போட்டிருந்த,  தென்னங்கீற்றின் மேல் அமர்ந்தவள் . சிறிது நேரத்தில் அவளையும் அறியாமல் உறங்கியும் விட்டாள்,

 

விடியற்காலையில் மார்கழி மாத பனி இறங்கவும் ,  அவளின் மேனி அந்தக் குளிரைத் தாங்க முடியாமல் நடுங்க,  அதோடு  சக்தி அடித்ததும் சேர்ந்துவிட காய்ச்சல் வரும் போல் இருந்தது.

 

தன் யோசனையில் வெகு நேரம் கழித்துக் கண்விழித்தவன் கண்டது குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் மனைவியை.  “தனியாக விட சொன்னால் வீட்டுக்குள்ள போறதுக்கு என்ன, ” என்று திட்டியவன்.

 

ஓடிவந்து தூக்க உடல் சில்லிட்டு பனியில் உறைந்து போயிருந்தது.  விரைவாய் வீட்டின்னுள்ளே கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்து,  கைகளை சூடு பறக்கத் தேய்த்து விட்டு அவள் கண்ணத்தை தட்டி எழுப்பப்ப போக ,

 

அப்படியே கன்ணத்தில் அவனின் விறல் தடம் தெரிந்தது . இதுக்குத்தானே ரெண்டு நாளா உன்ன விட்டு ஒதுங்கியிருந்தேன் எப்பவும் அடிக்க கூடாதுன்னு நினைச்சேன்.  சாரி டீ என்று விட்டு அங்கு இருந்த போர்வையை எடுத்து போர்த்தி விட்டும் அவள் நடுக்கம் குறையாமல் விழிப்பும் வராமல் போக,

 

கடைசியில் அவனே அவளுக்கு போர்வையாய் மாறி சூடேற்ற , மெல்ல மெல்ல நடக்கும் குறைந்து சுயநினைவிற்கு வந்து கண் விழித்தாள் . அவள் கண் விழித்த அடுத்த நொடிதான் சக்திக்கு உயிரே வந்தது.

 

அவள் விழி திறந்ததும் அவன் விலக போக அவனை இழுத்து தன்னோடு சேர்த்தவள்.   “உண்மையாவே என்ன பிடிக்காமல் போயிடுச்சா,  இனிமே பேச மாட்டீங்களா,  மாமா என்னை மன்னிக்க மாட்டீங்களா ,

 

எனக்கு யாரும் ஸ்டைலா ப்ரொபோஸ்  பண்ணனும்னு நான் ஆசை பட்டது இல்லை. உண்மையாவே சின்ன வயசுல இருந்தே எப்பவும் என் அய்யனாரை மட்டும் தான் லவ் பண்றேன். முன்னாடி தெரியும் அனால் இப்போ தான் இந்த காட்டானோட காதல் புரிஞ்சது.   உங்கள இனி டார்ச்சர்  பன்னவே மாட்டேன். ப்ளீஸ் பேசுங்க” என்க ,

 

அவளைப் பார்த்து புன்னகைத்தவன் . “அதெல்லாம் சும்மா எமோஷனல்ல பேசிட்டேன் என் குட்டி பாப்பாவா போய் எனக்கு பிடிக்காமல் போகுமா,  நீ என்னோட பேபி, publy இல்லையா,  “என்று மூக்கைப் பிடித்து ஆட்டி தன்னோடு சேர்த்தவன்.

 

“எவ்வளவு வேண்ணா டார்ச்சர் பன்னு உன்னோட அய்யனார் தாங்குவான்.  ஆனால் டிவோர்ஸ் பத்தி மட்டும் பேசிடாதா, ”

 

“ஐயோ மாமா நான் அப்படி ஒரு வார்த்தை டிக்ஸ்னரில இருக்குன்னே மறந்துட்டேன்” என்றவள்.

 

அன்று ஹாஸ்டலில் தான் பயந்ததை கூற, ” எல்லாம் வாய் மட்டும்தான்” என்று அவள் தலையில் கொட்டி அவன் சிரிக்க ,

 

அந்த சிரிக்கும் இதழ்களை முதல் முறையாக தானாய் சென்று தன் இதழ்களால் சிறை பிடித்தாள் . அதற்கு மேல் சக்தி மெல்ல மெல்ல முன்னேற அங்கு அழகான இல்லறம் மலர்ந்தது.

 

மதுவிற்கு பத்துமாத காத்திருப்பு,   சக்திக்கு 6 வருட காத்திருப்பு , ஆம் முன்னர் இல்லறத்தில் இணைந்து இருந்தாலும் சக்தி அவள் படிப்பினை  மனதில் கொண்டு மனதையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தி, அவளாக அவனைத் தேடும் நாட்களில் மட்டுமே அவளோடு இணைந்தான் .

 

இப்போது அவனுக்கு எந்த தடையும் இல்லாமல் போக,  அவளின் மேலுள்ள தன் மொத்த தேடலையும் காட்டத் தொடங்கி விட்டிருந்தான்.

 

இனி எல்லாம் சுகமே. . . . . . . . .

 

மூன்று வருடங்களுக்குப் பிறகு,

 

ஹாலில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு தன் லேப்டாப்போடு ஒரு மணி நேரமாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள் மதுஸ்ரீ.

 

வீட்டின் வெளி வராண்டாவில் “பாத்திமா புதி புதி  என்று ஓடிக் கொண்டிருந்தால் சக்தி, மதுஸ்ரீ யின் செல்ல மகள் இரண்டு வயது  மகிழினி .

 

ஆருஷ்,  யாழினி  அவளின் இருபுறமும் சென்று பிடிக்க காவேரி தன் கையிலிருந்த இட்லித் துண்டை மகியின் வாயில் திணித்தார் . மாமன் மக்கள் இருவருக்கும் மகிழினி ஒரு குட்டி பொம்மையைப் போல்.  விடுமுறையில் இங்கு வந்தால் இருவரும் மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொள்வார்கள்.

 

அவர்கள் இருவரும் இவளுக்கு தேர்வு செய்த  பெயர்தான் மகிழினி.

 

அதே வராண்டாவில் திருப்பதி , பழனி அவர்களோடு பரிமளாவும் அமர்ந்து மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தார்.   அர்ஜுன்,  தமிழ் இருவரும் வழக்கம்போல் தத்தம் பணிகளில் பிஸியாக இருப்பதால் இன்னும் இரண்டு நாள் கழித்து ஊருக்கு வருவதாக இருந்தது .

 

அங்கு மனோ வீட்டில் கங்கா ஏதோ பேசிக்கொண்டே சப்பாத்தி தேய்க்க காவியா அவருக்கு பதில் சொல்லிக் கொண்டு சப்பாத்திக் கல்லில் சப்பாத்தியை  போட்டு எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவள் இன்ஜினியரிங் முடித்ததும்,  இரண்டு வருடம் எம்பிஏ முடித்த பின் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்து ஆறு மாதம் தான் ஆகிறது.  மதுவை தொடர்ந்து அவர்கள் கல்லூரியில் அட்மினிஸ்ரேசனில் பணியாற்றுகிறாள்.

 

மனோ ஐடி கம்பெனியில் தனது வேலையை ரிசைன் செய்துவிட்டு தன் அண்ணனோடு சேர்ந்து இயற்கை விவசாயமும் பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் காளான் உற்பத்தியும் செய்து கொண்டிருக்கிறான்.

 

கங்கா,  காவேரி இருவருக்கும்  அன்றாட வேலை வீட்டையும்  , மகியையும் பார்த்துக் கொள்வது தான் ,   பழனி, திருப்பதி இருவரும் விவசாயத்தை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு  தோட்டத்தை மேற்பார்வை மட்டும் பார்த்து இருக்கின்றனர்.

 

கோவையில் இருந்து வந்ததும் மதுவை சேர்மன் சீட்டில் அமர வைக்கும் போது சக்தி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.   அவன் தந்தையான போது கூட அவ்வளவு மகிழவில்லை.

 

காரணம் அவனின் முதல் குழந்தை மது அல்லவா இரண்டாவது தான் மகிழினி ஆனால் மகியின் முன்பு கேட்டால் இதை ஒத்துக்கொள்ள மாட்டான்.

 

சரி மதுவின் முகத்தூக்களுக்கு காரணம் என்னவாயிருக்கும் என்று பார்த்தால்.  அதற்கு காரணம் அடுத்த வருடம் அவர்கள் மகளே பள்ளி செல்ல போகிறாள்.  இப்போது இவள் விருப்பமே இல்லாமல் பிஎச்டி படித்துக் கொண்டிருக்கிறாள். எல்லாம் அவளின் அய்யனார் கட்டாயப்படுத்தியதால் தான்.

 

 

 

சப்பாத்தி தயார் ஆனதும் வீட்டினர் அனைவரையும் அமர வைத்து மதுவும் காவியாவும் பரிமாறினர்.  இப்போதெல்லாம் பரிமளா மதுவை  திட்டுவது இல்லை

 

மது அவ்வளவு பொறுப்பாக மாறி விட்டிருந்தாள் . அதே நேரம்  அவளின் விளையாட்டுத்தனம் மாறி விட்டதா என்றால்.  அப்படியேதான் இருக்கிறது.

 

9 மணிபோல் காளான் ஏற்றுமதி செய்துவிட்டு அண்ணனும் தம்பியும் வீடு வந்தனர்.  சின்னஞ்சிறுசுகள் தனியாக உண்ணட்டும் என்று பெரியவர்கள் வராண்டாவிற்கு சென்றனர்,

 

வயதாகிவிட்டதால் ஒன்பது மணிக்கு முன்னரே உண்டு விட வேண்டும் என்பது தமிழினியின் கட்டளை

 

சக்தி வழக்கம்போல் உணவைத் தட்டில் வைத்து மனைவிக்கு  ஊட்ட , அங்கிருந்த தன் மகளுக்கு பழிப்பு காட்டிவிட்டு உண்டு கொண்டிருந்தாள் . மகள் தந்தையை முறைக்க,

 

“இந்த அம்மா ரொம்ப பேட் அம்மா மகி , சாப்பிடவே மாட்டேங்கிறா,  இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ,  நாளைக்கு ஊட்ட மாட்டேன் என்று தினமும் சொல்வதையே சொல்ல

 

மகியும் “சரியான பேட் அம்மா , யாராவது சாப்பிட அடம் பிடிப்பாங்களா,  என்க

 

“அடிங்க,  நீதான்டி பேட் என்று அவளை திட்டி,   ரெண்டு பேர்ல யாரு  பேட் இப்ப தெரிஞ்சாகணும்.  “என்று தன் இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி கணவனை முறைக்க ,

 

அவள் மகளும் அதே போல் நின்று  தந்தையை பார்க்க , அவர்கள் இருவரையும் கண்டவன்.

 

“மகி குட்டி தான் குட் “என்றதும் “ஆஹா நான்தான் குட் “என்று பாட்டியிடம்  சொல்ல ஓட,

 

அப்போதும்  முறைத்துக் கொண்டிருந்த தன் மனைவியை இழுத்து மடியில் அமர்த்தி  “அவ குட் நீ சமைத்து” என்று கண்ணடித்து அவள் உடலில் தன் கையை படர  விட்டவாறு உணவு முழுவதையும்  ஊட்டி முடித்து கை கழுவி வர,

 

பைந்தமிழ் அவனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு வைத்தான்.  இவர்கள் சமாதானம் ஆனதும் ,  சக்தி  “வருணியை பைந்தமிழுக்கு பேசலாமா ஸ்ரீ “என்று கேட்க,

 

“சூப்பர் மாமா,  நானும் அதைத்தான் நினைச்சேன் . “என்று மது குதூகலிக்க பெண்ணின் பெயரைக் கூட கேட்காமல், “இப்போ நெறய படம்  சைன் பனிருக்கேன் முடியாது “என்று மறுத்து விட்டான்.

 

அதன் பின் எத்தனை முறை கேட்டாலும்,  ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்துக் கொண்டிருந்தான்.  இன்றும் அதே போல் சக்திக்கு தான் அவனை எண்ணி கவலையாகி போனது.

 

இருவரும் உண்டுவிட்டு காத்தாட வெளியில் அமர , மனோ விருட்டென்று வண்டியைக் கிளப்பிக் கொண்டு கங்கா விடம் சொல்லி விட்டு சென்றான்.  சக்தி எதுவும் புரியாமல் நிற்க,  சற்று நேரத்தில் உணவு பையை எடுத்துக்கொண்டு , காவியாவும் விழிகளில் நீர் கோர்க்க வந்து ஸ்கூட்டியை எடுக்கப் போக,

 

மது “என்ன ஆச்சி காவியா” என்றதும் அழுகையோடு “ஏன் இவ்ளோ லேட்,  கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு தான் சொன்னேன்கா .  அதுக்கு சாப்பிடாமல் கோபமா  தோட்டத்து வீட்டுக்கு போயிட்டாங்க,  “என்று வண்டியை கிளப்ப ,

 

அவளை நிறுத்திய சக்தி” மனோகிட்ட மோட்டார் போட்டா தென்னை மரத்துக்கு மடை திருப்பி விட சொல்லுமா, ”

 

என்ன இந்த நேரத்துல எதுக்கு மோட்டர் போட போறோம் என்று புரியாமல் பார்க்க,  மதுவிற்கு அன்று இவர்கள் தோட்ட வீட்டில் இருக்கும்போது திருப்பதி சொன்னது நினைவில் வர அங்கு கொடியில் காய்ந்து கொண்டிருந்த ஒரு துண்டையும் காவியாவின் நைட்டியை எடுத்து உணவுப் பையில் வைக்கவும்

 

காவியா மேலும் புரியாமல் மதுவை பார்க்க “நீ  போ எல்லாம் தானே புரியும்” என்றவள் சக்தியை முறைக்க , சக்தி “மீ எஸ்கேப்” என்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.

 

மது மறுநாள் தன் பார்வையை தவிர்த்து விட்டு ஓடும் காவியாவை கண்டவள்.  அவள் அருகில் சென்று “எதுக்கு என்கிட்ட கண்ணாமூச்சி  ஆட்டிட்டு இருக்க,

 

நான் உனக்கு சீனியர்,  நம்ம ரெண்டு பேருக்கும் அத்தைங்க சீனியர்” என்று கண்ணடித்து சிரிக்க,  கவியாவிற்கு வெட்கமாகி விட்டது . வழக்கம்போல் கங்கா மதுவின் காதை பிடித்து திருக. காவேரி “சரியான போக்கிரி” என்று சிரித்துக் கொண்டார் .

 

அன்று இரவு வழக்கம் போல் வீட்டினர் உண்டு முடித்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அப்போதுதான் வீடு வந்த சக்தியும் மனோவும் தங்கள் துணைகளோடு உண்டு விட்டு வந்து அமர ,

 

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மேல் கவனம்  வைத்தனர் . ஆருஷ் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு , ‘அம்மா நான் தோட்டத்து வீட்டுக்கு போறேன்”

 

என்று வீட்டை நோக்கி கத்தி விட்டு சைக்கிளை விருட்டென்று கிழப்பி சற்றுத்தள்ளி நிறுத்த,  உடனே மகிழினி அழுவதுபோல் தேம்பிக் கொண்டு சாப்பாடு கூடையை எடுத்து தன் குட்டி சைக்கிளில் வைத்து, கிளப்ப ,

 

யாழினி அருகில் வந்து கொடியில் இருந்த அவளின் உடையை எடுத்து கூடையில் வைத்து விட்டு விட்டு , மது அத்தை ஏதோ சொல்லுச்சே என்று யோசிக்க,

 

அதற்குள் மது ” ஏய் என்னடி பண்றீங்க “என்று பதறிக் கொண்டு வந்தவள்.   மூவருக்கும் தலையில் ஆளுக்கு ஒரு கொட்டு வைத்து , இனி இந்த மாதிரி விளையாடக் கூடாது என்று சொல்ல ,

 

“போ அத்தை போன்ல விளையாடினாலும் கொட்ற , இப்படி விளையாடினாலும் கொட்ற “என்று யாழினி அழுதுகொண்டே பாட்டிகளிடம் செல்ல,  மற்ற இருவரும் அவளை தொடர்து பாட்டிகளிடம் சென்றனர்.  மனோவின் கையில் நறுக்கென்று கிள்ளிய காவியா

 

“எல்லாம் உங்களாலதான்” என்று முறைத்து விட்டு செல்ல அவளை சமாதானப்படுத்த அவனும் அவள் பின்னே சென்றான்.

 

குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்து,  உறங்க வைத்து மதுஸ்ரீ தங்கள் அறைக்குள் செல்ல,

 

சக்தி ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

 

“என்ன மாமா  யோசனை” என்று மது கேட்டதும்,

 

“இல்ல ஸ்ரீ நம்ம தோட்டத்து  வீட்டை கொஞ்சம்  பெருசா ஆல்டர் பண்ணலாம்னு இருக்கேன். வர வர காம்பிட்டேஷன் கூடிட்டே போகுது. ” என்று சிரிக்காமல் சொல்ல,

 

அவனை முறைத்து “உங்க பரம்பரைக்கே இதே பொழப்பா போச்சு போல என்று அவனின் முதுகில் மொத்த ஆரம்பிக்க , அவளை மெல்ல மெல்ல தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தான். அவளின் அய்யனார். . . . .

 

இன்று போல் என்றும்  இவர்களின் வாழ்வு மகிழ்ச்சியில் திளைக்க வாழ்த்தி விடை பெறுவோம்.

 

சுபம். . . . . . . . . .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!