Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 22 2

 

வருவின் காதல் தன்னையே அவனுக்கு கொடுக்க வைக்க ,அவனது கொஞ்சல்களும் , கெஞ்சல்களும் மட்டுமே மொழியாகி….தை மாதக் குளிரையும் மீறி வியர்வையில் உடல்கள் குளித்திருக்க , அவளது நெற்றிக் கூந்தலை ஒதுக்கி நெற்றியில் இதழ் பதித்து தன் திருப்தியை அவளுக்கு உணர்த்தி இளைப்பாற, தன் நிறைவை அவன் மார்பில் தலை வைத்து உறங்க….

 

ஆம் … கடமைக் கலவியின் இறுதியில் இப்படி இருக்க முடியாது என்பதே உண்மை…. காதலினால் உண்டாகும் கூடலின் திருப்தியை ஒரு ஆணும் பெண்ணும் தன் இணைய வார்த்தையாலன்று ….அணைத்து தான் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.



Advertisement

 

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிது…

கொள்

Advertisement

தாமரைக் கண்ணான் உலகு.

Advertisement

 

அந்த அழகிய இரவு முடிந்து விடியல் வந்ததுக்கூடத் தெரியாமல் இருவரும் ஆழ்ந்த நித்திரையிலிருந்தனர்.

 

Advertisement

அவனது மொபைல் அணைந்துப் போயிருக்க , வருவின் மொபைல் ஓசை எழுப்பிக் கொண்டே இருக்க , கண் கூச ஒற்றைக் கையால் தேடி எடுத்து ,

 

“ஹலோ…”

 

“ஹலோவாம் ஹலோ… அம்மானு சொல்ல மாட்டியா … ”

 

“நான் பார்க்கல மா…. ”

 

“சரி… சரி.. நாங்க எல்லாம் திருநெல்வேலி வந்துட்டோம் … வீட்ல உங்களுக்கு சாப்பிட எல்லாம் இருக்கும் .என்ன சூடு மட்டும் பண்ணிக் கோங்க … நாங்க வர நைட் ஆகிடும் … ”

 

“தெரியும்மா…. தாத்தா சொன்னாங்க….. ”

 

” என்ன … மாமா சொன்னாங்களா … எங்களையே காலைல தான கிளப்புனாங்க… ஒரு நிமிஷம் பாட்டி அமிர்தாகிட்ட பேசணுமாம்…” என்றுத் தர ,

 

தன் நெஞ்சில் கலைந்த கூந்தல் தவழ கலைந்த களைப்பில் துயிலில்  இருந்தவளை மெல்ல மெத்தையில் படுக்க வைத்தவன் , எழுந்து தன் கைவளையத்தில் படுத்திருந்தவளை எழுப்ப மனமில்லாது ,

 

“ம்மா அவ கீழ போயிருப்பா நினைக்கிறேன் … வந்ததும் கால் பண்றேன் …” என்றவன் , அவள் காதில் ,

 

“ரிது … பாட்டிப் ஃபோன்ல பேசறாங்க ….”

 

“அப்புறம் பேசுறேன் விக்கி …டையர்டா இருக்கு ….” என அவனை மேலும் நெருங்க …

 

“பாட்டி வீடியோ கால்… இங்கப் பாரு .. என மொபைலை அவள் முன் காட்ட … ”

 

சட்டென விழித்தவள் , தான் இருக்கும் நிலையுணர்ந்து , எழுந்தமர்ந்து உடல் மறைக்க துணித் தேட , அவனோ பலமாக வாய் விட்டுச் சிரிக்க ,

 

அவன் விளையாடியதை உணர்ந்தவள் , அரைகுறை உடையுடன் எழுந்து ஒரு  தலையணையால் தன்னை மறைத்து மற்றொரு தலையணையால் அவனையும் அடித்துக் கொண்டே ,

 

“விக்கி …. ஒரு செகண்ட் பயந்துட்டேன்… எங்கடா என் ட்ரஸ்… நைட் போட்டுக்க போனா … ப்ளீஸ் ரிது …. ப்ளீஸ் ரிதுனு கெஞ்சிட்டு …” என்றுப் புலம்பிக் கொண்டே, இரவில் போட்டிருந்த உடைகளைத் தேட … அதுக் கண்ணில் பட்டால் தானே …..

 

அதுவரை விளையாட்டாகப் பார்த்தவன் , இப்போது தான் கவனித்தான் , அவள் குரல் சாதாரணமாக அதோடு இனிமையாகவும் இருந்தது.

 

எழுந்து தேடிக் கொண்டிருந்தவளை மறுபடி கட்டிலில் தூக்கி வந்து கிடத்தி….அவளை எழவிடாமல் தடுத்தவன் , விழிப்பார்த்துக் கொண்டே ,

 

“ப்ளீஸ் …. ரிது…..” அவ்வளவுதான் அந்த விழிகளுக்கும் வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டவள், அவனைக் கெஞ்ச விடுவாளா …. மறுபடியும் ப்ளீஸ்… போடுவதற்குள் எழுந்துக் குளியலறைச் சென்றவள் , வெளியே வந்து புடவைக் கட்ட முற்பட , எழுந்து அவள் பின் வந்தவனிடம் , இப்போது அவள்….

 

“ப்ளீஸ் விக்கி … நேரம் பாருங்க.. எனக்கு கீழப் போகவே வெட்கமா இருக்கு …. நீங்களும் குளிச்சிட்டு வாங்க … நாம சேர்ந்துப் போகலாம்….” எனக் கெஞ்சலையும் , நாணத்தையும் வெளிப்படுத்திய அவள் கண்களில் இதழொற்றியவன் ,

 

வீட்டில் யாருமில்லை என்பதை அவளுக்குத் தெரிவிக்காமல் ,

 

“அப்படிங்கிற… ஓகே .. இதோ வாறேன்…” என்றவன் அவனும் குளித்து விட்டு துண்டுடன் வெளியே வர ,

 

அவனை ஒரு நொடி ரசிக்காமல் இருக்க முடியவில்லை .

 

அவளின் நிலைக் கண்டவன் ,

 

“ரிது கீழ அப்புறமா போலாமா….” என கண் சிமிட்ட ,

 

‘ஷ்’ என்று விரலை அவன் உதட்டு மேல் வைத்தெடுத்து புன்னகைத்தவள் ,அந்த சாப்பாட்டு  பாத்திரங்களை கையில் எடுத்துக் கொண்டே …

 

“சாப்பிடாம வம்பு பண்ணி … அய்யோ பாட்டிக்கிட்ட வேற திட்டு இருக்கு … இது கட்டாயம் குடிக்கணும் சொன்னாங்க தெரியுமா … ” என்று அந்த கோப்பையைக் காட்டி நடக்க ,

 

அவள் இடையில் கைப்போட்டு நடந்தவனைக் கண்டுப் பதறி….

 

“அச்சோ விடுங்க….. யாராவது பார்த்திரப் போறாங்க …. நல்ல வேளை யாருமில்ல…..” என வீட்டையும் கண்களால் சுழற்ற ,

 

உதட்டில் புன்னகையை அடக்கிக் கொண்டே , “அதுதான் யாருமில்லைல….” விடாமல் சமையலறை வரை வர, அங்கும் யாருமில்லாதது கண்டு … அவள் யோசித்து நிற்கும் போதே பின்னிருந்து கட்டிக் கொண்டவன் ,

 

“பாட்டி … உங்கப் பேத்திட்ட பேசுங்க…” என திரையில் தெரிந்த பாட்டியைக் காண்பிக்க , அங்கிருப்பவர்களுக்கு அவர்கள் முகம் மட்டுமே தெரியும்படி வைத்தவன். மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட , நெளிந்துக் கொண்டே பேசியவளிடம்,

 

“பால் குடிச்சீங்களா , அந்த சம்படத்தில பொடி போட்டு வச்சிருக்கேன் ,” என்றவர் அக்கம் பக்கம் பார்த்து விட்டு ,

 

” அடுப்புக் கிட்ட  பித்தளை கிண்ணத்துல லேகியம் இருக்கும் … அதையும் சாப்பிடுங்க … அந்த பொடிய இராவுலயும் பால்ல போட்டு குடிங்க….” எல்லாவற்றிற்கும் தலையசைத்து ஃபோனை வைத்தவுடன் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவள் ,

 

“விக்கி ….என் கிட்ட விளையாடி இருக்கியா … உன்னை…” என ஒரு கரண்டியை எடுக்க , அவளிடமிருந்து தப்பிக்கும் விதமாக ஹாலுக்குள் ஓட ,

 

“உன்கிட்ட தான விளையாட முடியும் …. வா விளையாடுவோம் அப்பா அம்மா விளையாட்டு …” என அவன் துரத்த இப்போது அவள் ஒட முயற்சித்தாலும் விரும்பியே அவனிடம் அகப்பட்டவளை அந்த பெரிய சோஃபாவில் அமர்ந்து அவனும் மடியில் தன்னை நோக்கி அமர்த்திக் கொண்டான்.

 

அவன் நெற்றியோடு நெற்றி முட்டியவள்…

 

“விக்கி …. எனக்கு இப்ப இந்த நிமிஷம் என்னத் தோணுது தெரியுமா….”

 

அவள் அருகாமையை ரசித்துக் கொண்டே ,

 

“என்னத் தோணுது….” எனப் புருவம் உயர்த்த ,

 

“இப்ப …. இந்த நொடியே …. நான் செத்துப் போயிரணும்…..”

 

அவன் ஏதோ விளையாட்டாக எதிர்பார்க்க , இப்படிச் சொல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை. சட்டென்று இதழோடு இதழ் சேர்த்தவன் ,விடுவித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ,

 

“இப்பதான் வாழவே ஆரம்பிச்சிருக்கோம்…. ஏன்டா இப்படிப் பேசுற…” அவள் வதனம் பற்றி தன்னைப் பார்க்க வைத்தவன் ,

 

“அதோட என்னோட ரிது ரொம்ப போல்ட் கேர்ள்னு கேள்விப்பட்டேன்….” என்றவன் , அவளது கழுத்தோரம் இருந்த, கூர்ந்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய ஒரு சிறிய தழும்பை விரலால் தொட்டு ,

 

“இந்த தழும்புக்கு காரணம் ஒரு விபத்து ….அதுலயிருந்து அவள மீட்கிறது ரொம்ப கடினம்னு தெரியும் … அவளுக்கு ஆப்ரேஷன் பண்ணப்போற அந்த நிமிஷம் கூட , மொபைல்ல …” எனக்கு பேச முடியலானாலும் பரவாயில்ல … எனக்கு உயிர் வாழனும் அண்ணானு சொல்லி ,எமனோட போராடிட்டு வந்தா என் தங்கச்சினு மண்டபத்துல என்கிட்ட சொன்னான்…. அந்த ரிது நீ இல்லயா…..” எனக் கேட்டவன் … இந்தப் பேச்சை மாற்ற எண்ணி,

 

“இப்ப பசிக்குது ரிது….” என , வேகமாக அவன் மடியிலிருந்து எழுந்தவள்,

 

“இதோ…” எனச் சமையலறைச் சென்று தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டே இருந்தாலும் நினைவில் ,

 

“உன் கூட ஒரு நாளாவது வாழ்ந்துட்டு சாகணும்னு ஆசைப்பட்டுதான்  நான் அப்படி சொல்லி .. இன்னைக்கு உன்னால மட்டுமே உயிரோட இருக்கேன் விக்கி ….” எப்படியும் ஒரு துளி நீர் வழிந்து விட்டது.

 

பார்த்துக் கொண்டே இருந்தவன் , அடுத்து சமையலறை நுழையப் போனவளை கைப் பிடித்து தடுத்து , அவன் மடியில் அமர வைத்தவன் ,

 

” எடுத்து வச்சது வரை போதும் ,வா சாப்பிடலாம் .. ” என தட்டில் போட்டுக் கொண்டு அவளுக்கு ஊட்டி விட , கண்ணில் நீர் கோர்க்க வாங்கிக் கொண்டவளிடம்,

 

“நீ எனக்கு குடிக்க உப்புத் தண்ணீர் தான்தருவியா … நார்மல் வாட்டர் கிடைக்காதா … ” , புருவம் சுருக்கியவள், தண்ணீர் குவளையை அவனருகே வைக்க ,

 

” இப்படி எமோஷனல் ஆகி அழுதுட்டே இருந்தா … நான் கண்ணீர கைல துடைக்க மாட்டேன்னு தெரியும் … அப்ப உப்பா தான இருக்கும் … ”

 

“விக்…. கீ” என அவன் தோளில் செல்லமாக அடித்தாலும் , கைகளால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ,

 

“அ… அம்மா…. ஞாபகம் வருது விக்கி … அப்பாவும் அண்ணாவும் ஊட்டியிருக்காங்க ஆனா … அப்பல்லாம் எனக்கு உடம்பு சரியில்லாம இருப்பேன். இப்படி எந்தக் காரணமும் இல்லாம எங்கம்மாவுக்கு அப்புறம் அதுவும் மடியில வச்சு ஊட்டுறது நீ தான் …. ஐ…. ஐ… லவ் யூ சோ மச்…”

 

அவளது விளக்கங்கள் அவனது மனதை வருத்த , “முதல்லயே எங்களுக்கு கல்யாணம் நடந்துருக்கலாமோ…. ” என எண்ண வைத்தாலும் , அவளை இயல்புக்கு கொண்டு வர ,

 

“ரிது யு நோ … நான் எத்தனை இங்கிலீஷ் படம் பார்த்துருக்கேன் …. எத்தனை மேட்டர் புக் படிச்சிருக்கேன் …. அதெல்லாம் வேஸ்ட்ங்கிற மாதிரி சொல்லிட்டியே…” இவன் என்ன சொல்கிறான் எனப் புரியாமல் விழித்தவளிடம் ,

 

“பொண்டாட்டிக்கு எப்படி ரொமான்டிக்கா ஊட்டி விடணும்னு தெரியாம இருக்கேன்ல….நான் ஊட்டி விட்டா அம்மா ஞாபகம் வராம , என் ஞாபகம் மட்டுமே வரணும்னா…..” என்றவன் டேபிளில் பார்வையை ஓட்டி , ஒரு கிண்ணத்தை எடுத்து ,

 

“இதென்ன ரிது…. ஸ்வீட்டா”

 

“ஏதோ லேகியமாம் நாம கட்டாயம் சாப்பிடணும்னு சொன்னாங்க … ” கேட்டதும் விக்ரமுக்கு அப்படி ஒரு சிரிப்பு …

 

“லேகியம் தானே…. இனிப்பாதான் இருக்கும் … இனி ஊட்டி விட்டா அம்மா ஞாபகம் வரும் உனக்கு ….” என்றவாறே அதை ஒரு ஸ்பூனில் எடுத்து அவன் வாயில் போட்டு …. அடுத்த நொடியே நெருக்கத்திலிருந்த வருவின் வாயில் இடம் மாற்றி விட்டான்.

 

“இப்ப  யார் ஞாபகம் வரும் மை டியர் … “என சரசமாக கேட்க ….. வெட்கத்தோடு அவன் தோளில் சாய்ந்தவள்,

 

“விக்கி நீ ரொம்ப அமைதி … .பிஸ்னஸ் தவிர உனக்கு ஒன்னுமே தெரியாதுனு நினைச்சேன்… பட் யு டூ ரொமான்டிக் ….” என முகம் மறைத்துக் கொள்ள ,

 

கைகளில் ஏந்திக் கொண்டவன் , “தாத்தா டைம் குடுத்துருக்காங்க , பாட்டி லேகியம் கொடுத்துருக்காங்க …. நான் எவ்வளவு ரொமான்டிக்னு இன்னைக்கு முழுசும் தொரிஞ்சுக்கோ…. ”

 

‘விடியாத காலைகள்

முடியாத மாலைகளில்

வடியாத வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

 

மணி காட்டும் கடிகாரம்

தரும் வாதை அறிந்தோம்

உடைமாற்றும் இடைவேளை

அதன் பின்பே உணர்ந்தோம்……

 

தூவும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!