Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடல் 44

?இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை?

அனைவரும் வீட்டிற்கு வந்தனர். சுஜியை அவளது அறையில் படுக்க வைத்து அவளுக்கு துணையாக சுமியை இருக்க வைத்து விட்டு வெளியே வந்தனர்..

உதய்க்கு எப்படி நிதுவையும் கீர்த்தியையும் கண்டு பிடிப்பதென்ன குழப்பமாக இருந்தது..

அப்போது கார்த்திக்கிற்கு அழைப்பு வர அவன் தள்ளி நின்று பேசத் தொடங்கினான்.



Advertisement

அந்த சைட் என்ன செய்தி வந்ததோ இந்த புரத்தில் ” அங்கேயே இருங்க நான் வந்தறேன் ” என்று விட்டு அணைத்தான்.

உதயிடம் மட்டும் கூறிவிட்டு வெளியே சென்றான். இத்தோடு நந்தினியும் கீர்த்தியும் காணாமல் போய் இருபத்தி நாலு மணிநேரம் ஆகியிருந்தது…

விடயம் அறிந்த ராஜதுரையின் குடும்பம் வேகமாக வந்தது..

Advertisement

” மாப்பிள்ளை எங்க கீர்த்தி எங்கே ” என்று ராஜதுரை கேட்க

Advertisement

என்ன சொல்வது என்று தெரியாமல் தலையை கீழே போட்ட படி மௌனமாக நின்றான் வெங்கடேஷ்.

” உங்கள நம்பி தான பொண்ணு கொடுத்தேன் தம்பி இந்த குடும்பம் ஒரு கொலகார குடும்பம்ன்னு தெரிஞ்சும். இந்த குடும்பத்துனால தான் நான் என்னோட தங்கச்சிய இழந்தேன். இப்போ அவ்ளோட குழந்தையையும் இழக்க போறேன்னே ” என்று உதயிடம் கேள்வியை தொடங்கி அழுகையில் முடித்தார் ராஜதுரை…

அதற்குள் கார்த்திக் வருகை தர இதனை கேட்ட படியே உள்ளே அவனுடன் உள்ளே வந்தவர் ” அப்போ கீர்த்தி ரத்தினத்தோட பொண்ணா ” என்று கேட்க

Advertisement

யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்கவே திரும்பி பார்க்க அங்கே கார்த்திக்குடன் விந்தியதேவி வந்துக் கொண்டிருந்தார்…

அவரை கண்ட மகாலிங்கம் திகைத்து போய் நின்றார். அவர் மட்டும் அல்லாது மற்றவர்களும் திகைத்து நின்றார்கள் உதயை தவிர்த்து…

ராஜதுரை அவரை கண்டதும் ” நீ உயிரோட தான் இருக்கியா அப்போ கண்டிப்பா என் பொண்ண நீ தான் கடத்திருப்ப எங்க என் பொண்ணு ” என்று அவரிடம் வந்து கதற

” இங்க என்ன நடக்குது கீர்த்தி எங்க பொயிருக்கா ஏன் எல்லாரும் இப்படி இருக்கீங்க கார்த்திக் நீயாவது சொல்லு டா நானும் அர்போர்ட்ல இருந்து கேக்குறேன் ஏன் உன்னோட முகம் இப்படி இருக்குன்னு நீ எதுவுமே பேசாம வந்த அதுக்கு என்ன காரணம்ன்னு சொல்லு ” என்று விந்து கெஞ்ச

” அத்த என்ன மனிச்சிடுங்க அத்த நான் உங்களுக்கு கொடுத்த வாக்க காப்பாத்த முடியாம போச்சி ” என்று அவரின் காலில் விழுந்து அழுதான்..

அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் போன விந்து ” என்ன சொல்லுற கார்த்திக் ” என்று கீழே குமிந்து அவனை தூக்கி விட்டு கேட்டார்..

” அத நான் சொல்றேன் அத்த ” என்று உதய் அவர்கள் முன்பு வந்து நின்றான்..

அவனை யாரென்று தெரியாததால் முழிக்க   ” நான் உங்க பொண்ணு நந்தினியோட ஹஸ்பண்ட் ” என்றான்..

தன் மருமகனை கண்ட சந்தோஷம் அவரின் கண்ணில் கண்ணீராக ஊற்றெடுக்க ” எங்க நந்தினி ” என்றார்..

” நந்தினியையும் கீர்த்தியையும் நேத்திலர்ந்து காணோம் ” என்றான் இறுகிய குரலில்..

” என்ன சொல்றீங்க மாப்பிள்ளை என் பொண்ணு எங்க இத்தன வருஷமா அவளுக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு தான நான் அவ கண்ணு முன்னாடி வராம இருந்தேன். இப்படி அவளோட உயிருக்கு நானே ஆபத்தா  பொயிட்டேனே ”  என்று அழுகத் தொடங்கினார்…

அப்போதே உதய்க்கு இருவரையும் கடத்துனது யார் என்று புரிந்து போனது…

” அத்த அழுகாதீங்க அவுங்கள கடத்துனது வேற யாரும் இல்ல ரத்தினம் தான். அவருக்கு  மட்டும் தான் உங்க ரெண்டு குடும்பத்து மேலையும் பகை இருக்கு. உங்கள பலி வாங்குரதா நினைச்சிட்டு அவுங்க ரெண்டு பேரையும் கடத்திருக்கான் ” என்று சரியாக கூற

” ஆனா இப்போ அவன் எங்க இருக்கான்னு கூட நமக்கு தெரியாதே ” என்று ஜீவா கூற

” எனக்கு தெரிஞ்சு அவரு ஊட்டில தான் இருக்கனும் . ராஜிவ் அடிக்கடி ஊட்டிக்கு பொயிட்டு வருவான். ஏதோ காட்டுக்குள்ள தான் அந்த வீடு இருக்கும் ” என்றான் கார்த்திக்…

உடனே பெண்களை தவிர்த்து ஆண்கள் எல்லாரும் ஊட்டிக்கு சென்றனர் ஜெயந்தியும் விந்துவும் மட்டும் அவர்களுடன் சென்றனர்.. அவர்கள் ஊட்டிக்கு செல்ல மாலையாகி விட சரவணனின் உதவியால் வனத்துறை அதிகாரிகளுடன் காட்டிற்குள் சென்று தேட தொடங்கினர்..

வெகு நேர தேடலிற்கு பிறகு அவர்கள் வீட்டை கண்டு பிடித்தனர். போலிஸ் அந்த முழு வீட்டையும் சுற்றி வலைத்தது.

சரவணனனுடன் உள்ளே சென்று தேட தொடங்கினர். கதவை திறந்த அடுத்த நொடி வௌவால்கள் எல்லாம் பறந்து வெளியே வந்தது. வௌவால்கள் சென்ற பின் ஒரு அறை விடாமல் அனைத்து அறைகளிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தனர்.. ஆனால் அவர்களுக்கு அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை…

என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே மடங்கி சரிந்த உதய் நந்தினி என்றபடி அழுதான்…

” கிருஷ் கிருஷ் ” என்று நந்தினி அந்த இருட்டு அறையில் இருந்து வராத குரலில் சொன்னாள்…

உதய்க்கு அவளின் குரல் அவன் மனதினுள் ஒழிக்க ” என்னோட நிது இங்க தான் எங்கேயோ பக்கத்தில இருக்கா ” என்று உதய் கூற அவனின் கூற்றில் ” என்ன டா சொல்ற ” என்று வெங்கி கேட்க

” இல்ல மச்சி என் உள் மனசு சொல்லுது அவ நமக்கு பக்கத்துல தான் இருக்கா நமக்கு தெரிஞ்ச எல்லா இடத்திலையும் தேடலாம் டா ” என்றான் உறுதியாக..

அவனின் உறுதி அனைவருக்கும் ஒரு தெம்பு கொடுக்க எல்லா இடங்களிலும் தேட தொடங்கினர்…

ஊட்டியையே முழுவதும் அழைந்து தேடினர். யாருக்கும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போக அந்த நேரத்தில் சூர்யா ” எங்க அப்பா சொன்னாரு நீங்க வாழ்ந்த வீட்ட எரிச்சு தான் உங்கள கொல்ல பாத்தாங்கன்னு அப்போ ஏன் நந்தினியையும் கீர்த்தியையும் அங்க கொண்டு பொயிருக்க கூடாது. அது அவருக்கு பழக்க இடமாச்சே ” என்று அவனது யோசனையை முன் வைக்க

உடனே எல்லாரும் விந்தியதேவியின் எரிந்து போன வீட்டிற்குள் சென்றனர். ஒரு ஒரு இடமாக பார்த்து பார்த்து தேட அந்த வீடே எரிந்த கருப்பு நிறத்தை கொண்டு இருந்தது…

அங்கேயும் அவர்கள் கிடைக்காமல் போக தீடிரென்று உதய்க்கு ஏதோ தட்டு பட அதை என்ன என்று பார்க்க அது கோடாரி போல் இருந்தது.. அதை எடுத்தவன் இரண்டு தட்டு கீழே தட்ட வேகமாக ஒரு சுரங்க பாதை போல் ஒன்று திறந்தது..

அதனுள் சென்றவனுக்கு வெளிச்சம் வேகமாக அவன் பின்னாடியே அனைவரும் சென்றனர்..

உள்ளே சென்ற உதயை கண்டது என்னவோ ரத்தினம் நந்தினியின் முடியை கொத்தாக பிடித்து சுவற்றில் இடிப்பதை தான்..

அதனை கண்ட உதய் வேகமாக அவன் அருகில் சென்று அவனின் முதுகில் ஓங்கி குத்து விட்டான். அதில் நந்தினியும் முடியை விட்டான் ரத்தினம்.

அவன் விட்டதில் நந்தினி கீழே சென்று விழப் போக அவளை தாங்கி பிடித்தான் அவளின் கிருஷ்..

”   லவ் யூ கிருஷ்” என்றவாறே அவன் கை வலைக்குள்ளே மயங்கி சரிந்தாள்.

ஒரு ஓரத்தில் கீர்த்தி இருக்கையில் அமர்ந்த படியே மயங்கி கிடந்தாள். அவளை கண்ட வெங்கி வேகமாக அவளிடம் சென்று அவளின் மேல் இருந்த ஓயர்களை எடுத்து விட்டான்…

கீழே விழுந்த ரத்தினம் எழ அதை பார்த்த உதய் ” ஜீவா வெங்கி கீர்த்தியையும் நிதியையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க ” என்று கத்த

உடனே ஜீவா நந்தினியை தூக்கியவன் வெளியே சென்றான். அவன் பின்னே கீர்த்தியையும் தூக்கி சென்றான் வெங்கி..

ரத்தினம் எழுந்து பக்கத்தில் இருந்த கம்பியை எடுத்து அடிக்க வர அதை லாவாக பிடித்த சூர்யா அதே கம்பியை வைத்து அவன் தலையில் அடித்தான்..

ரத்தினம் மீண்டும் எழுந்து அடிக்க வர உதயும் சூர்யாவும் அவனை புரட்டி எடுத்தனர்..

” எதுக்காக உனக்கு இந்த கொலை வெறி ” என்று கேட்ட படியே உதய் அவனை ஓங்கி அடிக்க

” என் வாழ்க்கையே அழிச்ச அவுங்கள பழிவாங்க தான் அவுங்களுக்கு அவுங்க பொண்ணுங்கள கொல்ல பண்ண முடிவு பண்ணேன் .என்னோட ப்ளான் எல்லாம் சரியா தான் நடந்துச்சி . முட்டா பசங்க டா நீங்க ஊரு முழுக்க தேடுன நீங்க மொட்ட மாடிக்கு வந்து பாக்கனும்னு உங்கள்ள யாருக்கும் தோனல அத வச்சி அந்த இடத்த உபயோக படுத்திக் கிட்டேன். நீங்க போன அப்புறம் அதுங்க ரெண்டுத்தையும் இங்க கொண்டு வந்து கொல பண்ண முயற்சி பண்ணும் போது கெடுத்துட்ட உன்ன சும்மா விட கூடாது ” என்று அந்த வழியிலும் அவனை அடிக்க கை ஓங்க

உருட்டு கட்டை ஒன்று ஓங்கிய கையை சரியாக பதம் பார்க்க கட்டை வந்த இடத்தை நோக்கிய ரத்தினம் உறைந்து போனான்..

” என்ன ஆச்சிரயமா இருக்க எப்படி டா நாம தான இவுங்க ரெண்டு பேத்தையும் இந்த வீட்ல வச்சி கொழுத்துனோம் எப்படி உயிரோட இருக்கோம்னு பாக்குறீயா ” என்ற படி வந்தியதேவி வந்தார். அவருக்கு பின்னே கார்த்திக் வந்தான்…

” கடவுள் எங்கள காப்பாத்திட்டாரு எதுக்கு தெரியுமா உன்ன கொல்லுறதுக்கு தான் . நீங்க பழி வாங்க நினைச்சு கொல துனிஞ்ச ரெண்டு பேரும் யாரு தெரியுமா ” என்று விந்தியதேவி அவனை பார்க்க

” அவுங்க ரெண்டு பேரும் வேற யாரும் இல்லை உன்னோட சொந்த இரத்தம் ஒரே அப்பாவுக்கு பொறந்த இரண்டு பொண்ணுங்க ” என்றான் கார்த்திக்…

அதை கேட்ட ரத்தினம் உச்சத்தின் எல்லையில் இருந்தான்.

என்னோட நிதிய நீ என் கண்ணு முன்னாடியே அவள கஷ்ட படுத்திருக்க அதுனால உன்ன சும்மா விட்டா என்னோட மனச்சாட்சி சும்மா விடாது ” என்றவன் ” சூர்யா அவன புடிச்சி இழுத்துட்டு வாங்க ” என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த சாரை எடுத்து போட்டான்.

அதில் அவனை அமர வைத்தவன் அவனின் உடம்பில் ஓயர்களை ஒட்டினான். அதன் பின் பக்கத்தில் இருந்த ஸ்விட்ச் போடிற்கு சென்ற உதய் ” குட் பாய் மிஸ்டர் நீ உயிரோட இருக்கிறதே ஆபத்து தான்” என்று ஸ்விட்சை ஆன் செய்தான்..

அதிக அளவு மின்சாரம் அவன் உடம்பில் பாய்ந்து கருகி போனது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!