Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nin Ninaivugalil Naanirukka

Nin Ninaivugalil Naanirukka Epilogue 2

கணவனின் இந்த பேச்சில் ஏதேதோ நியாகம் வந்து அவள் கன்னத்தை மேலும் சிவக்க வைத்ததால், புகைப்படத்தில் இன்னும் அழகாக  விழுந்தால்   வட்டிக்காரனின் சிட்டு…

இதை எல்லாம் தெய்வநாயகி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்தார் என்றால்…வசுந்தரா..கடைசி இருக்கையில்  தன் அம்மாவின் பக்கத்தில் அமந்துக் கொண்டு மணிமேகலையை ஏக்கத்தோடு  பார்த்திருந்தாள்.

ஏக்கத்திற்க்கு காரணம் நாம் மணிமேகலையிடம் உண்மையா இருந்து இருந்தால்…இன்று யாரோ போலா இருந்து இருப்போமா…? அவள் பக்கத்தில் அவளுக்கு வைக்கும் சந்தனம் அவள் கன்னத்தில் கூட கூட..அதை துடைத்து விட்டுக் கொண்டு, அந்த வயதுக்கே உறிய கதைகள் பேசி… என்று நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கி தான் போனது.

யாரும் பார்த்து விட போகிறார்கள் என்று பயந்து கண்ணீரை துடைப்பதற்க்குள்… “அழேதா அழாதே..” என்று தன் கண்ணீரை துடைத்து விட்ட தன் மகனின் பிஞ்சு கரத்தை எடுத்து அதில் முத்தம் இட்டவள்..



Advertisement

“அம்மா அழல ராசா..அழல…” என்று சொன்னவள்..

“அத்தைய பார்…?” என்று தன் மகனின்  கவனத்தை மேடையின் பக்கம் திசை திருப்பி விட்டாள் வசுந்தரா…மகன்  சரணுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது.

ஆனால் இந்த வயதிலேயே பக்குவப்பட்ட தன் மகனை..எதையும் கூர்ந்து கவனிக்கும் அந்த செயலை பார்த்து ஒரு பக்கம் மச்கிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது.

Advertisement

வசுந்தரா இக்குழந்தையை அவள் பெற்று எடுப்பதற்க்குள்  பட்ட அவமான்ங்கள் தான் எவ்வளவு…ஒரு சில சமயம் நினைப்பாள்…இந்ட்gஹ குழந்தை உண்டான உடனே கலைத்து இருந்தால் இந்த அவமானம் எல்லாம் நமக்கு வந்து இருகாதே என்று…

Advertisement

ஆனால் இப்போது தன் ஒரே ஆறுதலோடு…இந்த வாழ்க்கையின் ஒரே பிடிப்பும் தன் குழந்தை தானே…குழந்தை அப்படியே பார்க்க அச்சு அசல் வாசுதேவன் போலவே இருந்தான்.

மனைவி மேல் இல்லாத  பாசம் கணவனுக்கு மகன் மேல் வந்து விட்டது. கணவனுக்கு மட்டும் அல்லாது அக்குடும்பதுக்கே என்று கூட சொல்லலாம்…தன்னை அவமான சின்னமாய் எண்ணும் குடும்பம்…அந்த அவமானத்திற்க்கு கிடைத்த பரிசான…இக்குழந்தை மட்டும் அவர்களுக்கு பொக்கிஷமாய் தெரிகிறது. என்ன உலக நியதியோ…

நியதி.. இதை  நான் நினைக்க கூட தனக்கு தகுதி இல்லை.  என்னை என்னை மட்டுமே நட்போடு இருந்து தன் அந்தரங்கத்தை எல்லாம் பகிர்ந்துக் கொண்டவளுக்கு நான் என்ன கொடுத்தேன் துரோகம்…

Advertisement

அதே போல் தன் கணவனுக்கு காதலோடு தன் உடலையும் கொடுத்ததிற்க்கு தனக்கு கிடைத்த பரிசு துரோகம்.  துரோகத்திற்க்கு துரோகம் சரியாக போய் விட்டது என்று தன்னையே சமாதானம் செய்துக் கொண்டு…

தன்னை எதிரில் பார்க்கும் போது மணியின் அந்த சின்ன சிரிப்பும்… “எப்படி இருக்கிங்க அண்ணி..குழந்தை எப்படி இருக்கான்…?” என்று  யாரோ போல் அந்த நலம் விசாரிப்புக்கு…

தானும்… “நல்லா இருக்கேன்…நீ எப்படி இருக்க…?” என்று கேட்டாள்.

சின்ன சிரிப்போடு … “நல்லா இருக்கேன்.” என்று சொல்லி கடந்து செல்பவளை தடுக்க முடியாது…இதோ எப்போதும் போல் மூன்றாம் மனுஷியாய் இருந்து அவள் விழாவை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

வசுந்தரா கண் கலங்குவதை பார்த்த அவள் அம்மா.. “சும்மா சும்மா அழாதடீ..யாராவது பார்த்தா அதுக்கும் வயிறு எரிஞ்சி பார்க்குறா பாருன்னு  சொல்ல போறாங்க.” என்று தன் அன்னை  வார்த்தையை கேட்டதும், வசுந்தராவின் கண்கள் கலங்குவது தன்னால் நின்று விட்டது.

ஆம் சொல்வார்கள் தான். சொல்வதற்க்கு இல்லை. ஏன் தன் கணவனே சொல்வான். தனக்கு இது போல் விழா செய்யாததால்   மணியை பார்த்து பொறாமை படுகிறேன் என்று… ஆம் அவளுக்கு இது போல் விழா செய்யவில்லை

சரண் பிறப்பதற்க்குள் இவனின் பிறப்பின் ரகசியம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. “சந்தி சிரிச்சதை விழா எடுத்து கொண்ட்டனுமா…?” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்கள்.

திருமணம் முடிந்து நான்கு மாதம் மட்டுமே அவள் தன் கணவன் வீட்டில் இருந்தது. பின் அங்கு பேச்சை கேட்க முடியாது அம்மா வீட்டிற்க்கு வந்து விட்டாள்.

பின் குழந்தை பிறந்து  தான் அவனை பார்க்க  அனைவரும் வந்தது. அது என்னவோ  தெரியவில்லை ஆடு பகை குட்டி உறவு என்பது போல்..தன்னை பிடிக்காதவர்கள் அனைவருக்கும் தன் குழந்தையை பிடித்து விட்டது. அதன் ஒரு காரணம் தான் இப்போது தான் கணவன் வீட்டில் குடும்பமாய் இருப்பது.

தன் குழந்தை தான் தன் பிடிப்பு என்று மனதில் நினைத்த வசுந்தரா  குழந்தையை  பிடித்து இருந்த  கைய் தன்னால்  அழுத்தத்தை கூட்ட…

“அம்மா வலிக்குது.” என்று குழந்தை சொல்வதற்க்கும் அந்த இடத்தில் வாசுதேவன் வருவதற்க்கும் சரியாக இருந்தது.

“ யார் மேல இருக்கும் கோபத்தை என் குழந்தை மேல் காட்டுற…?” என்று கத்தியவன்  குழந்தையிடம்…

“வா சரண் நாம அத்தை கிட்ட போகலாம்.” என்று குழந்தையை தூக்கி போனவன்…ஒரு பார்மால்டிக்காக கூட…

“நீயும் வா…” என்று அழைக்காது போனவனின்  முதுகையே பார்த்திருந்த வசுந்தராவுக்கு  சிரிப்பு தான் வந்தது.

இதே மணிமேகலையை அவளின் திருமணத்திற்க்கு முன் நடத்தியது என்ன…?இப்போது அதுவும் மணியின் அம்மா சொத்து வேண்டாம் என்று அனைத்தும் அவர்களிடம் கொடுத்து விட்டு போனவர்கள்..அப்படியே இருந்து இருந்தால் இவர்கள் இந்த அளவுக்கு மதிப்பு கொடுத்து இருப்பார்களா…?  என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது மணிக்கும் அவளின் அம்மாவுக்கும் கொடுத்த மதிப்பே தனி தான் என்பது போல் இவர்களின் மொத்த குடும்பமும் கொடுக்கிறார்கள்.

வரா அத்தையின் கேட்டரிங் வளர்ந்ததோடு  மணிமேகலையும்  இரண்டு வருடமாய்  அரசாங்கம் அனுமதிபெற்று…பள்ளியை ஆராம்பித்து இப்போது அது ஒரளவுக்கு நல்ல முறையில் நடப்பதில் இன்னும் இவர்களுக்கு பெருமை பிடி படவில்லை.

அதுவும்  மணியின் இரண்டு சித்திகளும்… “எங்க மணி..எங்க மணி.” என்ற அந்த பேச்சை கேட்க கேட்க..இவர்கள் மணியை  முன்  எப்படி நடத்தினார்கள் என்று நினையாது இருக்க முடியவில்லை.

மொத்தத்தில் உறவே ஆனாலும், நாம் நடந்துக் கொள்வதிலும்..நாம் என்ன செய்தோம்…என்ன செய்கிறோம்…எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் மரியாதை இருக்கிறது. இதை வசுந்தரா புரிந்துக் கொண்டாள் தான் …என்ன காலம் கடந்து புரிந்துக் கொண்டதால் அவளுக்கு எந்த  பயனும் இல்லாது போய் விட்டது.

விழா  முடிந்த இரவு… “நீ போய் தான் ஆகனுமா சிட்டு..அது என்ன பிரசவம்  அம்மா வீட்ல தான்  பார்க்கனும். குழந்தை கொடுக்க தெரிந்த எங்களுக்கு அதை வெளியே வர வழைக்க தெரியாதா…?” என்று வீரேந்திரன்  கேட்ட ஏடாகூடமான கேள்வியில்…

“அய்யா எப்போ டாக்டருக்கு படிச்சாரு…பிரசவம் பார்க்க…?” என்று வீரேந்திரனிடம் கேட்க…

அவளிள் காலில் உள்ள விரலை ஒவ்வொன்றையும் இழித்து சுலுக்கு எடுக்கும் போது,  அவனின் ஒவ்வொரு இழுப்பிற்க்கும்   அவனின் சிட்டு…மெழுகாய் கரைய..

“என் கை தான்டி உனக்கு சரியான வைத்தியம். உனக்கு வலி வரும் போது என் கை பட்டாளே போதுமடி… உனக்கு  சுகபிரசம் ஆகிடும்” என்று சொன்னவனின் பேச்சிலும் சரி அவனின் கை வண்ணத்திலும் சரி அந்த வட்டிக்காரனின் சிட்டு  கிரங்கி தான் போனாள்.

பின் வீரேந்திரன்… “நான் சீரியஸாவே கேட்குறேன்டி நாளைக்கு உன் அம்மா வீட்டுக்கு போக போறியா…?” என்று கேட்டவனின் முகம்  ஒரு முழ நீளத்திற்க்கு நீட்டிக் கொண்டு இருந்தது.

“ஏங்கே  நான் எங்கே போக போகிறேன்.  இங்கு இருக்க தோட்ட வீட்டுக்கு தானே போக போறேன். அதுக்கு நீங்க இந்த அலப்பறை பண்ணுவீங்களா…?இதை யாராவது கேட்டா சிரிப்பாங்க.”  என்று  தன் கணவனை பல விதத்தில் சமாதானப்படுத்தியே…தன் அம்மா வீட்டுக்கு போனாள்.

“என்ன மச்சி பொண்டாட்டிய அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு ரொம்ப ஹாப்பியா இருக்க போல… “ என்று  வீடியோ காலில் பேசிய ஜானை முறைத்த வீரேந்திரன்..

“என் பெண்டாட்டி அம்மா வீட்டுக்கு போனது இருக்கட்டும்… அம்மா வீட்ல இருக்க உனக்கு மனைவியா வரப்போறவளை முதல்ல தேடு.” என்ற  வீரேந்திரனின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது அமைதியாக இருப்பவனை பார்த்து வீரேந்திரன் சந்தேகத்துடன் பார்த்தான்.

“நீ அமைதியா இருப்பதை பார்த்தா  அம்மா வீட்ல இருக்க உன் வருங்கால மனைவி கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்கு வந்துடுவா போல…” என்று கிண்டல் செய்தும் ஜான் அமைதியாக இருப்பதை பார்த்து…

வீரேந்திரன் … “என்ன பிரச்சனை ஜான். அந்த பெண் ஒத்துக் கொள்ள வில்லையா…?” என்று  கேட்டான்.

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த ஜான் வீரேந்திரனின் இந்த கேள்விக்கு… “இந்த தடவை நான் அவசரப்பட விரும்பல வீரா…நான் முதல்ல நடந்ததை கடக்கவே எனக்கு மூன்று ஆண்டுகள் ஆயிடுச்சி…

இந்த முறை எல்லாம் யோசிச்சி தான் செய்யனும். அந்த பெண்ணும் இந்தியா தான். அதுவும் சென்னை..அம்மாக்கு வேற நாளு அக்கா தங்கச்சியா…அது தான் முதல்ல அவ குடும்ப விவரம் கேட்டுக்கனும்…

அடுத்து எனக்கு அந்த பெண்ணை பிடிச்சி இருக்கு தான். ஆனால் அந்த பிடித்தம்…எவ்வளவு வலுவானதுன்னு எனக்கு தெரியனும் என்பதை விட தோனனும்.

அதற்க்கு அடுத்து அந்த பெண் வீட்டில் கல்யாணம் செய்ய போறாங்கன்னு அவசர அவசரமா என்னை ஏத்துக்க கூடாது. விருப்பம்..இதில் அவள் விருப்பம் முதல்ல முக்கியம் வீரா…” என்ற ஜானின் பேச்சில் வீரேந்திரனுக்குய் தலை சுற்றி தான் போயிற்று…

“ஏன்டா  உங்க அம்மாக்கு இவ்வளவு சகோதரி இருந்தாங்கலே..உங்க அப்பாக்கு ஒரே ஒரு சகோதரி இருந்து இருந்தா..இந்நேரம் நீயும் உன் மனைவிய பிரசவத்திற்க்கு அம்மா வீட்டுக்கு அனுப்பி இருப்ப…” என்று வீரேந்திரனின் ஜானின் பேச்சு  தொடர்ந்தது..

அதே போல் ஜான் ஆசை பட்ட பெண் யார்….?அந்த பெண்ணுக்கு நம் ஜானை பிடிக்குமா…?அவர்கள் காதல் ஊடலை அடுத்த கதையில் சொல்கிறேன் வாசகர்களே…

வீராவுக்கு என்ன குழந்தை பிறந்தது என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்..

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!