எபிலாக்…
மூன்று வருடம் கடந்த நிலையில்…
அந்த திருமண மண்டபத்தில் முதல் வரிசையில் நடுநாயகமாய் தெய்வநாயகி அமர்ந்து இருக்க…அவர் பக்கத்தில் தெய்வநாயகியின் கணவர் என்ற உரிமையில் சங்கரலிங்கம் அமர்ந்து இருந்தாலும், அவர் தன் மனைவி பக்கம் திரும்பாது… மேடையிலேயே கண் பதித்து இருந்தவருக்கு…
கடந்த ஆண்டுகளில் நடந்த விசயங்கள் ஒவ்வொன்றாய் நியாபகத்தில் வந்து போனது. அதுவும் இன்று அவர்கள் ஊரிலேயே மூன்று ஒட்டல்கள் வைத்து நடத்தும் தன் மூத்த மருமகள் வரலட்சுமியை எண்ணும் போதே, அவர் கண்கள் கலங்கி போனது.
எப்போது அவருக்கு உண்மை நிலை தெரிந்ததோ அப்போதிலிருந்தே அவ்வீட்டில் தன் மூத்த மகன் கமலக்கண்ணனையும், மூத்த மருமகள் வரலட்சுமியையும், பார்க்கும் போது எல்லாம் கண்கள் கலங்கி தான் போகும். அன்று அவர்களை பார்த்து துக்கத்தில் கலங்கி கண்கள், இன்று ஆனந்தத்தில் கலங்கி போனது.
தன் மூத்த மருமகள் வரலட்சுமி பட்டு புடவையில் ஒரு முனையை இடுப்பில் சொறுகி கொண்டு, பம்பரமாய் மேடையில் வேலை செய்யும் பாங்கை பார்த்து வியந்து தான் போனார்.
எப்போதும் வரலட்சுமியின் முகம் பெயருக்கு ஏத்தது போல் தான் இருக்கும். ஆனால் அமைதியாக…சாந்தமாக தான் இருக்கும். இப்போதும் அந்த முகத்தில் அமைதியையும் சாந்தமும் தெரிகிறது தான்.
ஆனால் கூடவே அந்த உதட்டில் மெல்லியதான சிரிப்பு…அந்த சிரிப்பு தன் வீட்டை விட்டு போன பின்…வரலட்சுமி தனக்கு என்று ஒரு வருமானத்தை உருவாக்கிய பின்… வந்த புன்னகை. கூடவே முகத்தில் தெரியும் அந்த நம்பிக்கை…
வரலட்சுமி திருமணம் முடிந்து தன் வீட்டுக்கு வந்த நாளில் இருந்து அவள் முகத்தில் பார்த்தது கிடையாது. இப்போது கூடுதலாய் அந்த புன்னகை கூடவே தன்னபிக்கையோடு வரலட்சுமியை பார்க்கும் போது…
சங்கரலிங்கம் இதை தான் நினைத்தார். இப்பெண்னா நம் வீட்டில் இத்தனை ஆண்டு வாய் திறக்காது அமைதியாக ஏச்சையும்… பேச்சையும் …கேட்டுக் கொண்டு இருந்தது…இப்படி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அதற்க்கு காரணம் மேடை அலங்காரத்தில் வரலட்சுமி சொன்ன பூ அலங்காரத்தில் இல்லை என்று அந்த பூக்காரனிடம்…
“ என்னிடம் எந்த பூ என்று சொல்லி அட்வான்ஸ் வாங்குனிங்க….?நீங்க எந்த பூ இங்கு அலங்காரத்துக்கு உபயோகிச்சி இருக்கிங்க…?” என்று வரலட்சுமி குரலை உயர்த்தி கேட்கவில்லை தான்.
ஆனால் அந்த குரலில் இருந்த அழுத்ததில்… “சாரி மேடம்..நீங்க கேட்ட பூ கிடைக்கவில்லை. அது தான் இந்த பூவை.” என்று தலை குனிந்த வாக்கில் சொன்ன அந்த பூக்காரனிடம்…
“பூ கிடைக்கலேன்னு எப்போ தெரியும்…?” என்று வரலட்சுமி கேட்டதற்க்கு…
“நேற்று மாலை.”
“அதை ஏன் எங்க கிட்ட சொல்லலே..நேத்து மாலை என் மாப்பிள்ளை சத்திரத்துக்கு வந்தார் தானே… அவரிடம் நீங்க சொல்லி இருக்கலாமே…இதோ இந்த பூ எங்க தோட்டத்தில் பூத்து மார்கெட்டில் வந்து அதை நீங்க வாங்கி..
அதுக்கு நான் அதிகம் காசு கொடுத்து… இப்படி ஏன் சுத்தி மூக்கை தொடுவானேன்..அதுவும் இல்லாம நாங்க கேட்ட பூ இல்லை என்றால்..எங்க கிட்ட வேறு எது என்று அபிப்ராயம் கேட்டு தானே செய்யனும்.
இதோடு அழகான பூ எல்லாம் எங்க தோட்டத்திலேயே பூக்கும். அதை வைத்து நாங்க ஏதாவது செய்ய சொல்லி இருப்போமே…” என்று கட்டன் ரைட்டாக பேசிய வரலட்சுமி …
தொடர்ந்து… “பார்க்க சின்ன பையனா இருக்க…தொழிலுக்கு நேர்மை தான் மிக மிக முக்கியம். அதை தவிர விட்டா…தொழிலை நாம தவர விடுற சூழ்நிலை நமக்கு வந்துடும்.” என்று சொல்லி சொன்னதோடு குறைந்த தொகையே அவனிடம் கொடுத்து அனுப்பினார்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சங்கரலிங்கத்திற்க்கு வியப்பாக இருந்தது…எத்தனை திறமையான பெண்..
இப்பெண்ணை இத்தனை ஆண்டு சமையல்கட்டில் கட்டி போட்டு விட்டோமே…என்று மனதில் வருந்திக் கொண்டு இருக்கும் போது..
வீரேந்திரன் அவரிடம் வந்து கை பற்றிய வாறு… “வாங்க தாத்தா…உங்க பேத்தியை கூட்டிட்டு வரலாம்.” என்று கை பிடித்து எழுப்பி சென்றவனையே பார்த்திருந்த தெய்வநாயகிக்கும் கண்கள் கலங்கி தான் போனது.
ஆனால் இந்த கண் கலங்கள் சங்கரலிங்கம் போல் ஆனந்தத்தில் வந்தது கிடையாது. இழப்பில் வந்தது…
இழப்பு என்றால் சொத்தோ பத்தோ கிடையாது. தன் சொந்தம் இழந்த துக்கம்.
சொந்தம் இறந்து விட்டால் கூட, இந்த அளவு துக்கம் வருமா…?தெரியவில்லை. ஆனால் தெய்வநாயகியின் சொந்தம் என்பதை விட தன்னில் பாதி என்று சொல்லும் தன் கணவர்…
ஒரே வீட்டில் வேறு வேறு அறையில் படுத்து எழுந்து காலை முகத்தை பார்க்கும் போது, யாரோ என்பது போல் தன் கணவன் காட்டும் அந்த பார்வையை தினம் தினம் பார்த்துக் கொண்டு…
அந்த வீட்டில் இருப்பது தெய்வநாயகிக்கு நரக வேதனையே பரவாயில்லை என்று எண்ணும் படி இருந்தது.
கணவன் துணை இருந்தால் கூரை மேல் நின்று கூவலாம் என்ற பழமொழியை மெய்பிக்கும் வகையாக…அந்த வீட்டில் தெய்வநாயகி மீது அனைவரும் வைத்த அந்த மரியாதை குலைந்து இப்போது..அனைவரும் ஏதோ ஒரு பொருளை பார்ப்பது போல் கடந்து செல்லும் அவர்களின் நடவடிக்கையில் மேலும் தெய்வநாயகி உள்ளுக்குள் மரித்துக் கொண்டு இருந்தார்.
ஆனால் ஊரில் மரியாதையான பெரிய குடும்பம். அதை காட்ட இதோ முதல் வரிசையில் அமர வைத்து..அனைவரும் கேட்கும் படி…
“அம்மாவுக்கு மூட்டி வலி இருப்பதால்,இப்போது எல்லாம் அம்மா முன்ன இருந்து எதுவும் செய்யிறது இல்லை.” என்று அனைவரின் முன்னும் தன் மூத்த மகன் சொன்னதை கேட்டு எதிர்த்து பேச முடியாது..
தன் மகன் சொன்ன பொய்யைய் உண்மையாக்கும் பொருட்டு, தன் மூட்டியை தேய்த்து விட்டு கொண்டு இதோ அமர்ந்து இருக்க..தன் மொத்த குடும்பமும் மேடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை எடுத்துக்கட்டி செய்து கொண்டு இருந்தனர்.
அதுவும் யாரை நமக்கு கீழ் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ…அவர்களை கேட்டு தான் தன் இருமகன்களும்… மருமகள்களும்… செய்வதை வாய் அடைத்து பார்க்க மட்டும் தான் தெய்வநாயகியால் முடிகிறது.
வரலட்சுமி தன் அமைதி…திறமை..விட்டு கொடுத்து போகும் பண்பால் உறவுகள் அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ள..இது எதுவும் இல்லாது ஆணாவம்.. சுயநலம். இவற்றை மட்டுமே கொண்ட தெய்வநாயகி இதோ உறவு இருந்தும் தனித்து…
ஒரு பக்கம் சங்கரலிங்கம் பிடிக்க மறுபக்கம் வீரேந்திரன் தன் மனைவியின் கை பிடித்து மேடைக்கு ஆடி அசைந்து வரும் போது…ஏற்கனவே அழகோடு இருக்கும் தன் மகள் .இப்போது தாய்மையின் பூரிப்பும் சேர்ந்து அழகுக்கு அழகு சேர்ப்பது போல அழகு மிளிர…
தன் கணவனின் கை பிடியில் இருக்கும் கையை உருவ பார்த்தவளிடம்…”வீரேந்திரன்… கை பிடிச்சிட்டு வா…” என்று கட்டளை இடுவது போல் சொல்லும் அந்த வார்த்தையிலும், காதலை இப்படி குழைத்து சொல்ல முடியுமா…?என்று யோசிக்கும் அளவுக்கு கண்ணீல் காதலும், உதட்டில் புன்னகையும், முகத்தில் தான் அப்பா என்ற கர்வமும் சேர்ந்து ஆண்மையின் இலக்கணமாய் திகழும் தன் கணவனின் முகத்தை பார்த்துக் கொண்டே…
கணவனின் காதலுக்கு என் காதல் ஒன்றும் குறை இல்லை என்பது போல்..ஒரு கள்ள சிரிப்போடு… “எனக்கு நடக்கும் போது வயிற்றில் கை வைத்து நடந்தே பழக்கமாயிடுச்சா… அது தான் உங்க கிட்ட இருக்கும் என் கையை நான் எடுக்க பார்த்தேன்.”
தான் இப்படி சொன்னால் அவன் என்ன சொல்வான் என்று தெரிந்தே சொன்னவளுக்கு ஏற்பவே… “உன் கை என் கிட்டவே இருக்கட்டும்…உன் வயிற்றுக்கும் என் மகவுக்கும் என் கை இருக்கு..” என்பது போல் தன் ஒரு கையை மணிமேகலையின் வயிற்றில் மேல் வைத்து…
“இப்போ ஓகேவா….?” என்று கேட்டான்.
எப்போதும் போல்… “ஒகே..ஒகே…” என்று சொல்லி விட்டு வெட்கம் முகத்தில் படர மேடையில் போட்டு இருந்த அந்த இருக்கையில் அமர்ந்ததும்…இதோ இந்த தொலைவு தன் மனைவி நடந்ததே பெரிய விசயம் என்பது போல்..
“சிட்டும்மா ஒன்னும் பிரச்சனை இல்லையே…என்ன மூச்சு வாங்குது…?” என்று கேட்ட வீரேந்திரன் அவள் பதில் எதிர் பாராது… ஏற்கனவே தன் பைனான்ஸ் ஆட்களின் ஒருவனிடம் கொடுத்து வைத்திருந்த ஜீசை… மணிமேகலையில் வாயில் ஊற்றி..
“இப்போ பரவாயில்லையா…?” என்று கேட்டான்.
அவன் ஒரே வாயில் ஊற்றிய ஜூசை குடிக்க முடியாது குடித்த பின் தான் அவளுக்கு மூச்சு இன்னும் வாங்கியது. இருந்தும் அவனிடம்..
“ஒகே தான்.” என்று சொன்னாள்.
இல்லை என்றால் மேடையிலேயே டாக்டரை அழைத்து வந்து ஒரு வழி செய்து விடுவான் தன் வட்டிக்கார அத்தான் என்று நினைத்து அவனை பார்த்து புன்னகை சிந்தியவள்..
கூடவே பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தங்கள் பைனான்சில் வேலை பார்க்கும் அந்த அடியாளை முறைக்கவும் தவரவில்லை.
மணிமேகலையின் முறைப்பில்… “சார் நான் கீழே இருக்கேன். நீங்க ஏதாவதுன்னா கூப்பிடுங்க.” என்று சொன்னவன் வீரேந்திரனின் பதிலை கூட எதிர் பாராது ஒடியே விட்டான்.
“ஏன்டி அவனை பார்த்து ஊரே பயந்து ஓடும். அவன் உன்னை பார்த்து பயந்து ஓடுறான்..நீ என்ன அவ்வளவு பெரிய ரவுடியா…?” என்று கேட்டவனின் முகத்தில் தெரிந்த அந்த பாவத்தில்..
“அய்யோ வட்டிக்கார…கேமிரா எல்லாம் இங்கு தான் இருக்கு இப்போ போய்…சீ.”
அவர்களின் அந்தரங்க நேரத்தில் வீரேந்திரன் வாயில் இருந்து ஒரு முறையாவது… “நான் உன்னை என்னவோ நினச்சேன்டி…ஆனா இப்படி..ரவுடி கணக்கா…” தன் முதுகில் இருந்த கீரலின் எண்ணிக்கையில் கேட்டு வைத்து இன்னும் வாங்கி கட்டிக் கொள்வான் என்பது வேறு விசயம்.
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.