Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir 12.2

நாம எல்லாம் மிடில் கிளாஸ் ஃபேமிலி பொண்ணுங்க. நமக்கு படிப்பு  எவ்வளவு முக்கியம்னு நான் சொல்லி உனக்கு  தெரிய தேவை இல்லை.  இந்த காலேஜ் பீஸ் கட்டுறதுக்கு நம்ப அப்பா  எப்படி கஷ்டப்படுறாங்க என நமக்கே தெரியும். எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறாங்க? நம்மளோட ஃபியூச்சர் நல்லா இருக்கணும்னு தானே. அவங்க பட்ட கஷ்டம் நாம படக்கூடாது என நினைப்பதால் தானே? அவங்களோட தகுதியை தாண்டி நாம ஆசைப்பட்ட காரணத்தினால் தானே நமக்கு இவ்வளவு செலவு பண்ணி நம்மள படிக்க வைக்கிறாங்க. நாம அதுக்கு என்ன செய்யணும்? நல்லா படிச்சு டிகிரி வாங்கி அவர்களை சந்தோஷபடுத்தனும். அதுவும் உனக்கு இந்த வேலை எவ்வளவு முக்கியம்னு  நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு. இந்த வேலை வாங்குவதற்காக நீ எவ்வளவு நாளா காத்துகிட்டு இருக்க? இப்போ எக்ஸாம்  எழுத வேண்டியது மட்டும் தான் பாக்கி. இந்த நேரத்தில் கண்ட பொறுக்கிப்  பையனை நினைச்சுக்கிட்டு மனசை போட்டு  குழப்பிக் கொண்டு எக்ஸாம் எழுதாம உன்னோட  ஃப்யூச்சரை  நீயே ஸ்பாயில் பண்ணிக்க போறியா?  அப்படி பண்ணினா அது தாண்டி நீ செய்ற உச்சகட்ட முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை மட்டும் தான் தயவுசெய்து செய்திடாத.” கவிதா கூறுவதில் இருந்த உண்மை வெண்மதிக்கு உரைத்தது.

“நீ சொல்றது எல்லாமே கரெக்ட்டு தான் கவி. ஆனா எங்க பார்த்தாலும் அவனது முகமே தெரிகிறது புக்கை எடுத்தாலும் அவனை நம்பி ஏமாந்தது தான் ஞாபகத்தில் வரும்னு பயமா இருக்குடி.”

“எதுக்கு டி அவன் முகத்தை பார்த்து பயப்படுற? உன்னை ஒரு பொருட்டாவே நினைக்காத ஒருவனின்  முகத்துக்கும்  நினைவிற்கும் நீ ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிற? அவனை உன்னோட மனசுல இருந்து தூக்கி போடு.   இதையும் தாண்டி அவனோட முகம் உனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சுன்னா அவனுக்கு முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் என வைராக்கியம் கொள். அந்த வைராக்கியம் உன்னை நல்லா எக்ஸாம் எழுத வைக்கும்.” என்று பெரிதாக அறிவுரை கூறினாள் கவிதா.

இதனைக்கேட்ட வெண்மதி மனம் சற்று  தெளிந்தது.



Advertisement

பின்பு கவிதா வெண்மதியின் அம்மாவுக்கு போன் செய்து

“அம்மா  நானும் வெண்மதியும் இன்னைக்கு நைட் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணலாம்னு நினைக்கிறோம். அதனால வெண்மதி இன்னைக்கு எங்க வீட்டிலேயே தங்கரதுக்கு நீங்க பர்மிஷன் கொடுக்கணும். ப்ளீஸ் அம்மா” என்று கெஞ்சலாக கேட்க லட்சுமி “சரிமா டைம் வேஸ்ட் பண்ணாம படிங்க.”

“ரொம்ப தேங்க்ஸ் அம்மா. அப்பாகிட்ட இவளோட புக் ஹால் டிக்கெட் எல்லாமே குடுத்து அனுப்புங்க மா.”

Advertisement

“சரி நான் குடுத்து அனுப்புறேன்.” என்று கூறிவிட்டு போனை வைத்தார் லட்சுமி.

Advertisement

அன்று இரவு இருவரும்  அங்கேயே தூங்கினர். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து படித்தனர். படித்து முடித்து இருவரும் கிளம்பி பரீட்சை எழுதுவதற்கு சென்றனர்.

 

வெண்மதி சில நேரங்களில் படிக்காமல் எங்கேயோ வெறித்தபடி இருந்தாள். இதனை கவனித்த கவிதா அவளை தட்டிக்கொடுத்து மீண்டும் படிக்க வைத்தாள். இப்படி இருவரும் சேர்ந்து படித்தனர்.

Advertisement

 

காலை லலிதா “மதி எங்க காலையில இருந்து ஆளையே காணோம். இன்னும்  எழுந்திரிக்கல? இன்னைக்கு எக்ஸாம் இருக்குன்னு சொன்னா.  இன்னும் தூங்கிட்டா இருக்கா?” என்று லட்சுமியிடம் விசாரித்தார்.

“அவள் நேற்று கவிதா வீட்டிலேயே தங்கி படிச்சுட்டு அங்கிருந்து எக்ஸாம் எழுத போறேன்னு சொன்னா.”

“என்ன பொம்பள புள்ள வெளியே தங்குற பழக்கம்? இது வரைக்கும் இப்படி நடந்ததே கிடையாது. இது என்ன கெட்ட பழக்கம்?” என்று வழக்கம்போல ஆரம்பித்தார்.

“அவள் எப்பவுமே இந்த மாதிரி கேட்டதே கிடையாது. முதல் தடவையா கேட்டா. அதுவும் படிக்கிற  விஷயத்துக்காக தான். அதனால்தான் சரின்னு சொல்லிட்டேன்.” என்று மகளுக்கு பரிந்து பேசினார் லட்சுமி. இப்பொழுதெல்லாம் லலிதா வேண்டுமென்றே தன்  மகளை படிக்க விடாமல் செய்கிறாரோ என்று சந்தேகம் லட்சுமிக்கு வந்தது. அதனால்தான் கவிதா அப்படி கேட்டதும் சரி என்று அங்கேயே தங்கிவிட சொன்னார்.

“இன்னைக்காவது வீட்டுக்கு வருவாளா?” என்று  அடுத்த பிரச்சினையை ஆரம்பித்தார் லலிதா.

அந்த நேரம் பார்த்து கிருஷ்ணன் அங்கு வர

“அக்கா படிக்கிற பொண்ணு அங்க படிச்சா டிஸ்டர்பன்ஸ் இல்லாம படிக்கலாம்னு  நினைக்கிறா. அதனாலதான் அவள் இஷ்டத்துக்கு நான் சரினு சொல்லிட்டேன்.”

கிருஷ்ணனை கவனிக்காத லலிதா “அப்படின்னா? என்ன சொல்ல வர?  இங்க படிச்சா அவளை நான் டிஸ்டர்ப் பண்றேன்னு சொல்லறியா?” என்று கோபமாக கேட்டாள் லலிதா.

“இல்லை அக்கா நேத்து நாம பங்ஷனுக்கு போயிட்டு வந்ததனால அவ அப்படி நினைத்திருக்கலாம். அவ வர மாட்டேன்னு சொன்னா. ஆனா நாமதான் அவளை கட்டாயப்படுத்தி கூட்டிக்கிட்டு  போனோம்.”

இதனை கேட்ட கிருஷ்ணன் அங்கு வந்து

“என்ன மதிக்கு இன்னைக்கு எக்ஸாம் இருக்கா? அப்புறம் எதுக்கு நம்ம கூட  நேத்து பங்ஷனுக்கு வந்தா? வீட்டில இருந்து  படித்து இருக்கலாம் இல்ல?”

“அதைதான் அவளும் சொன்னாள். ஆனால் ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர்கள் பங்க்ஷன் என சொல்லி அவளை நாங்க தான் கூட்டிக்கிட்டு வந்தோம்.”

“படிக்கிற பொண்ணை ஏன் டிஸ்டர்ப் பண்றீங்க? சரி. அவ எங்க டிஸ்டர்பன்ஸ் இல்லாம படிக்கணும்  என நினைக்கிறாளோ அங்கேயே படிக்கட்டும்.  லலிதா நீ இந்த விஷயத்தில் தலையிடாதே.” என்று சிறிது கண்டிப்பு காட்டி மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றார்.

லட்சுமிக்கு நிம்மதியாக இருந்தது. இனி லலிதா மகள் படிப்பு விஷயத்தில் தலையிட மாட்டார்.

வேண்டுமென்றே தன்னை போட்டுக்கொடுத்த லட்சுமி மீது கோபம் வந்தது லலிதாவுக்கு.

அன்றைய பரீட்சையை முடித்துவிட்டு  கவிதா வெண்மதி வெளியில் வந்தனர்.

“இன்னைக்கு எக்ஸாம் ஈஸியா இருந்துச்சு. இல்லடி?” என்று  கேட்க வெண்மதி “ஆமாம் கவி.” என்று ஒற்றை வார்த்தையில் பதில் கூறி விட்டு அமைதியாக எங்கேயோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“மதி இன்னும் ஒரு வாரம் எங்க வீட்டிலேயே தங்கி படிக்கிறியா? எக்ஸாம் முடிஞ்சதுக்கு அப்புறம் உங்க வீட்டுக்கு போகலாம் என்ன சொல்ற?”

“எனக்கு ஓகே தான் கவி.”

“ஓகே மதி. நான் அம்மா கிட்ட பேசுறேன்.” என்று கூறிவிட்டு மொபைலை  எடுத்து  லட்சுமிக்கு போன் செய்து பேசினாள்.

“நானும் மதியும் சேர்ந்து படிக்கலாம் என இருக்கிறோம். மதி இந்த ஒரு வாரம் எக்ஸாம் முடிகிற வரைக்கும் எங்க வீட்டுல தங்கி படிக்கலாமா?” “ஒரு வாரமா?” என்று யோசனையாக கேட்டார் லட்சுமி.

“ஒரு வாரம் தானே அம்மா. எங்க வீட்டில மதி பத்திரமா இருப்பா.  ஒரு பயமும் கிடையாது.”

“அதுக்கு இல்ல மா.”

“அப்புறம் எதுக்கு மா யோசிக்கிறீங்க?”

“அவளோட அப்பா என்ன  சொல்லுவாரோ?”

“நீங்க எடுத்து சொல்லி புரிய வையுங்க. ப்ளீஸ் அம்மா.” என்று கெஞ்சலாக கவிதா கேட்க லட்சுமி யோசித்துப் பார்த்தார்.

வெண்மதி வீட்டுக்கு வந்தாலும் லலிதா எப்படியாவது  வெண்மதியின் படிப்பைப் பற்றி அக்கறை இல்லாமல் அவளை தொந்தரவு  செய்வார். எனவே அவள் கவிதா வீட்டில் தங்கி படிப்பது நல்லதுதான். என்று நினைத்து  “சரிமா போனை மதி கிட்ட கொடு.” என்று கூற கவிதா போனை வெண்மதி இடம் கொடுத்தாள்.

அதை வாங்கியவள் தாயிடம்  சிறிது நேரம்  பொதுவாக பேசிவிட்டு போனை வைத்தாள்.

இருவரும் சேர்ந்து இரவு பகலாக படித்து பரிட்சை எழுதி முடித்தனர். எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த கவிதா “அப்பாடி ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சது. “இனிமே நாம பிரீ பர்டு” என்று இரு கைகளையும் இறக்கையை போல விரித்து பறந்து காட்டினாள் கவிதா. அவளை பார்த்து செயற்கையாக சிரித்தாள் வெண்மதி.

அன்று மாணவர்கள் எல்லோரும் சினிமாவுக்கு போகலாம் என்று பேசிக்கொண்டு இருந்தனர். “வெண்மதி, கவிதா இன்னைக்கு  எல்லோரும் சேர்ந்து சினிமாவுக்குப் போகலாமா?” என்று இவர்களிடம் கேட்டனர். கவிதா “போகலாமே” என்று உற்சாகமாக கூற

வெண்மதி “வேண்டாம். எனக்கு கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு. நீங்க எல்லாம் போயிட்டு வாங்க. நான் வரலை.” என்று கூறினாள்.

 

இதை கேட்ட கவிதா “சரி. நானும் வரல. நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க.” என்று அவளுடன் சேர்ந்து கூற

மாணவர்கள் “அட போங்கடி. எப்ப பார்த்தாலும் கம் போட்டு ஒட்டிக்கிட்ட மாதிரி ஒட்டிக்கிட்டு இருங்க.” என்று இருவரையும் கிண்டல் அடித்து விட்டு சென்றனர்.

“கவி நீ ஏன் போகல?”

“ஏன்னா நீ இல்லாம நான் அங்க போனா எனக்கு போர் அடிக்கும்.”

“போர் எல்லாம் அடிக்காது. நீ போயிட்டு வா.”

“முடியாது. நீயும் வா போகலாம்.” என்று கூற

“இல்லை  கவி. அம்மாவை பார்த்து ஒரு வாரம் ஆச்சு. நான் போய் அம்மாவை பார்க்கணும். அதுக்காக தான் சொன்னேன்.”

“சரி மதி. நீ சொல்றது கரெக்டு தான். நாம உங்க வீட்டுக்கு போகலாம்.” இருவரும் கிளம்பி வெண்மதி வீட்டுக்கு சென்றனர்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!