Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi in kaathalai – 4

அனிக்கா அருகில் வரவும் தான் இருவரும் தத்தம் உலகிருக்கு திரும்பி வந்தனர். அவள் அருகில் வந்ததும் நவீன் ஒரு முக சுளிப்புடன் திரும்பி கொண்டான், சூர்யா ‘என்ன’ என்பது போல் பார்த்து கொண்டு இருந்தான்.

“நீங்க இந்த பேப்பரை அங்கே போட்டு விட்டு வந்துட்டிங்க அதான் கொடுக்க வந்தேன்… அது மட்டும் இல்லாது மனிப்பு கேட்கவும் வந்தேன்” என்றாள் இனிமை தோய்ந்த குரலில்.

“என்னே ! ஆச்சரியம் நீ என்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தியா?… உன் கிளாஸ்க்கு போகும் வழியில ஏதாவது போதி மரம் இருந்ததா என்ன?” என்றான் கிண்டல் தொனிக்கும் குரலில்.

“அது அப்போது கொஞ்சம் கோபத்தில் இருந்தேன் அதான் அதை உங்ககிட்ட காட்டி விட்டேன்…. ப்ளீஸ் சார் சாரி ஃபார் தட்” என்றாள் குற்றஉணர்ச்சியில்.



Advertisement

சும்மா விளையாட்டாக பேசியதற்கு அவள் வருத்தபடுவாள் என்று அவன் எண்ணவில்லை,

“ஐயோ நான் உன்னை சும்மா கிண்டல் செஞ்சேன். நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க தான் வந்தேன் ஆனால், நீ என்னை திட்டியதும் எனக்கு கோபம் வந்துவிட்டது ….. அதனால் இரண்டு பேர் மேலையும் தப்பு இருக்கு அதை அப்படியே ஒதிக்கி விடுவோம் சரியா” என்றான் மென்னகையுடன்.

“ம்ம் சரி…. ப்ரெண்ட்ஸ்” என்று தன் கையை அவன் புறம் நீட்டினாள், முதலில் தயங்கினாலும் தன் கையையும் நீட்டவும் அவன் மறுக்கவில்லை.

Advertisement

பின், “ஈவ்னிங் மீட் பண்ணலாம்… ஓகே” என்று அவள் சொன்னதும் சூர்யாக்கு ஏதோ ஒன்று உறுத்தியது…. அதை தள்ளி வைத்துவிட்டு அவளிடம் ‘சரி’ என்றான்.

Advertisement

அனிக்கா சென்றதும் தான் நண்பன் நினைவே சூர்யாவிற்கு வந்தது… அவசரமாக தன் நண்பன் புறம் திரும்பியவன் அவன் முகம் கண்டு ஆச்சிரியப்பட்டு கண்களை விரித்து பார்த்தான்.

“டேய் மச்சான், கோபத்தில் இருக்கியோ!”நவீன் சீக்கிரம் கோபம் கொள்ளும் ரகம் அல்ல…
“இல்லை மச்சான், அது வந்து உனக்கு எப்படி இந்த பொண்ணை தெரியும்?….”  கொஞ்சம் திக்கி திணறிய குரலில்.

சூர்யா தன்னை சந்தேகமாக பார்க்கவும், “அது இல்லைடா, சண்டை போட்டோம்னு இப்போ தானே சொன்ன பிறகு எப்படி இவ்வளவு சகஜமாக பேசுகிறாள் என்று கேட்டேன்”

Advertisement

“அது தான் எனக்கும் புரியலடா!… அங்கு வைத்து அப்படி சண்டை பிடித்தாள். ஆனால் அதுக்குள்ள எப்படி அதை மறந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு வந்தாள் கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது…. சரி அதை விடு உனக்கு அவளை தெரியுமா” என்றான் ஆராயும் கண்களோடு.

அன்னிக்கா பற்றி பேச பிடிக்க வில்லை என்றாலும், தன் நண்பன் குணம் அறிந்து “ம்ம் தெரியும்டா எங்க காலனியில் தான் இருக்கிறாள்…. அவளை பற்றி ரொம்ப தெரியாது. கொஞ்சம் திமிர் அதிகம் என்று மட்டும் கேள்வி பட்டியிருக்கிறேன்” சுரத்தே இல்லா குரலில்.

‘ம்ம் இப்பொழுது புரிந்து விட்டது …. அவள் சந்திப்போம் என்று சொன்னதும் மனதில் ஏதோ உறுத்தியதன் காரணம் அந்த அதிகார தோரணை…’ ஏனோ இந்த இடத்தில் மலரையும், அனிக்காவையும் ஒப்பிட்டு பார்க்க மனம் உந்தியது… அந்த எண்ணத்தை தலை அசைத்து அழித்தவன் தன் நண்பன் புறம் கவனத்தை செலுத்தினான்.

நவீனும் ஏதோ சிந்தனையில் தான் இருந்தது போல் தோன்றியது “டேய் நவீன்” என்று சூர்யா அவன் தோள் தொட்டு அசைத்ததும் நிகழ்வுக்கு வந்தவன் “ஒன்றுமில்லைடா” என்றான்.

அவனிடம் சூர்யா ஏதோ சொல்ல வரவும் புரோபெசோர் வந்துவிட பின் இருவரும் அந்த நிகழ்வை மறந்து பாடத்தில் மூழ்கிவிட்டனர்.

அன்று மாலை சூர்யா, அனிக்காவின் சந்திப்பு அரங்கேறியது. நவீனுக்கு இதில் தலையிட விருப்பம் இல்லை….
அவனுக்கு அனிக்கா பற்றி நன்றாக தெரியும் அவள் ஏதோ ஒரு ஆதாயத்திற்கு தான் சூர்யாவிடம் பழகுகிறாள். ஆனால், அவன் அதை சூர்யாவிடம் வெளிக்காட்டவில்லை…

அவனாக ஒரு நாள் கண்டு கொள்வான் என்பதில் உறுதியாக இருந்தான் மேலும் ஒரு வலுவான காரணம் சூர்யாவின் அந்த மயக்கம், தான் சொல்லி தெளிவு அடையாது அவனாக புரிந்து கொண்டால் தான் அவன் அதில் இருந்து மீண்டு வர முடியும் என்று இவர்கள் பழக்கம் அறிந்து ஒன்றும் பேசாது இருந்தான்.
அன்று விடுமுறை நாள் என்பதால் சூர்யா, மலர் இருவரும் வீட்டில் தான் இருந்தனர்.

கங்கா சமையல் வேலையில் இருக்க, மலர் படித்து கொண்டு இருந்தாள்.
வீட்டு தொலைபேசியில் இருந்து அழைப்பு வர “மலர் யாருனு கேளேன் மாவு வளிச்சிட்டு இருக்கேன்” கங்கா.

“சரி அத்தை” என்றவள் ஃபோனை அட்டெண்ட் செய்தாள்.
எதிர் அலையில் பேசியவரின் குரல் கேட்டு குழம்பியவள் அவரிடம் காத்திருக்குமாறு கூறிவிட்டு சூர்யா அறையை நோக்கி சென்றாள்.
கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவனிடம் “அத்தான், யாரோ அனிக்காவாம் உங்ககிட்ட பேசன்னுமா லைனில் இருக்காங்க” என்றாள்.

அனிக்கா என்ற பெயரை கேட்டதும் சூர்யாவின் முகம் மலர்ந்ததை கண்டவளின் நெஞ்சின் ஓரம் வலி ஏற்பட்டது.

அவளும் கொஞ்சம் நாளாக கவனித்து கொண்டு தான் வருகிறாள் சூர்யாவின் செய்கையை மற்றும் அந்த ‘அனிக்கா’ புராணம் வேறு காது வலிக்க கேட்க வேண்டிய நிலை இப்பொழுது சிறிது நாட்களாக இந்த வீட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. இதை வெறும் நட்பு என்று நம்பும் அளவு மலர் ஒன்றும் முட்டாள் இல்லையே.

பேசிவிட்டு மேலே வரும் வரை இதையே நினைத்து கொண்டு நின்றிருந்தாள் மலர். நடையில் துள்ளலுடன், விசில் அடித்து வந்தவனை பார்க்கும் பொழுது மலர்க்கு ஏனோ கோபம் மற்றும் அழுகை என்று கலவையான உணர்வு தோன்றியது.

“என்ன ஃபிளவர் இங்கே நிக்கிற. போய் படி பிளஸ் டூல நல்ல மார்க் எடுக்கனும். சரியா?”என்றான்.
அவன் கேள்விக்கு பதில் ஒன்றும் சொல்லாது அவனை ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு மலர் கீழே சென்று விட்டாள்.

அவன் இதுபோல் எப்பொழுதும் அவளிடம் வம்பு இழுப்பான் தான்…. அப்பொழுது எல்லாம் ஒரு வெட்க புன்னகை அல்லது கண்கள் வரை எட்டிய புன்னகையுடன் சென்று விடுவாள்.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கை செல்லும் வரை அவனுக்கு உண்டான எல்லாம் இவள் தான் செய்வாள்… என்றைக்கு அவள் காதலை உணர்ந்தாலோ அன்றில் இருந்து ஆரம்பித்தது இந்த சேவை.
பள்ளி பருவத்தில் வந்த காதல், சப்பி லவ், எதிர்காலத்தில் மாறலாம்?. இப்படி எந்த குழப்பமும் அவகிட்ட இல்லை.

சூர்யா மீது உள்ள காதலில் தெளிவாக இருந்தாள் மலர்.
மறுநாள் காலை தன் ஓட்டத்தை முடித்து விட்டு வந்தவன் வரண்டாவில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தான்.

அவன் முன்பு கங்கா சத்து மாவு கஞ்சியை வைக்கவும் சுளித்த புருவத்துடன் “ஃபிளவர், எங்கமா? அவதானே எப்பவும் எனக்கு கஞ்சி தருவாள்”.

“அவளுக்கு மாடல் எக்ஸாம் கண்ணா அதா படிச்சிட்டு இருக்கா. நீ சீக்கிரம் குடிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பு” என்றவர் தன் கணவனுக்கு காபி எடுத்து கொண்டு தங்கள் அறையை நோக்கி சென்றார்.

எதோ யோசனையில் இருந்தவன் மலர் சமையல் அறை நோக்கி செல்லவும் பின்னோடு சென்றவன் அங்கே அலமாரியில் ஏதோ தேடி கொண்டு இருந்தவள் அருகில் சென்று “அம்மணிக்கு அப்படி என்ன முக்கியமான வேலை?” என்றான் கோப குரலில்.

அவன் குரல் கேட்டு பயத்தில் நெஞ்சம் பதறி மருண்ட விழியுடன் திரும்பி பார்த்தாள் மலர்.

“ஹ்ம்ம் உன்கிட்ட தான் கேட்கே எப்பொழுதும் நீதான கொண்டு வந்து தருவ!? இப்போ என்ன அம்மாகிட்ட கொடுத்து விட்ருக்க??” கோபம் மாறா குரலுடன்.

“அது.. வ..ந்து எக்ஸமுக்கு படிச்சிட்டு இருந்தேன், அதான் அத்தகிட்ட கொடுத்து விட்டேன்” என்றாள் அவன் கண்களை சந்திக்காது.

“ஏன்? இதுக்கு முன்னாடிலா உணகு எக்ஸாம் வந்தது இல்லையோ!!.. நம்புவது போல் எதாவது காரணம் சொல்லு சரியா” என்று தன் அறைக்கு சென்று விட்டான்.

மலர் அவன் தன்னிடம் வந்து இப்படி கேட்பான் என்று சிறிதும் எதிர் பார்க்க வில்லை. அவள் நேற்றே முடிவு செய்து விட்டாள் இனி அவன் பற்றின எதுவும் தான் செய்யகூடாது என்று…

எப்படியும் அவன் அந்த அனிக்காவை தான் மணம் செய்ய போகிறான் இப்பொழுது இருந்தே அவனிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள்.

ஆனால், அது அவ்வளவும் சுலபம் இல்லை என்பதை சூர்யாவின் செய்கை நிருபித்தது.
இருவரும் கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தனர். எப்பொழுதும் சூர்யாவின் பக்கத்தில் தான் மலர் அமர்ந்து இருப்பாள் முதலில் பரிமாறுவது என்னமோ கங்கா தான் அதன் பின் அவனுக்கு என்ன வேண்டுமோ எல்லாமே மலர்தான் பார்த்து பார்த்து செய்வாள்.
ஆனால், அன்று அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவள் அவனை பாராது தன் சாப்பாட்டில் கவனமாக இருப்பதாக காட்டி கொண்டாள்.

சூர்யாவின் துளைக்கும் பார்வையை அவள் அறிந்து தான் இருந்தாள்…. ஆனால் அதை கண்டுக்காது சாப்பிட்டு எழுந்துவிட்டாள்.
அவள் செய்கைக்கு உண்டான அர்த்தம் புரியாது குழம்பி போய் அமர்ந்து இருந்தான்.

“சூர்யா உனக்கு நேரம் ஆகவில்லை.. இன்னும் சாப்பிடாம உட்கார்ந்து இருக்க?” என்று சங்கர் கேட்ட பின் சுயம் திரும்பியவன் அவசரமாக இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு சென்று விட்டான்.

போகும் வழி எங்கும் மலரின் செயலை பற்றிய ஆாய்ச்சி தான் மூளையில் ஓடியது.

வண்டியை பார்க்கிங் இடத்தில விட்டு யோசனையுடன் வந்தவனை “ஹாய் டார்லிங்” என்ற குரல் கலைத்தது.
********************************
தன் மயக்கும் விழி கொண்டு மாடர்ன் உடை சகிதம் அனிக்கா நடந்து வந்து அவன் முன் நின்றாள்.

“என்ன அனிக்கா இப்படி காலேஜ்ல வச்சி டார்லிங்.. அது.. இதுனு… கூப்டாதனு உன்கிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் ” சுளித்த முகத்துடன் சொன்னான்.

அவன் அவ்வாறு சொன்னதும் முகம் கருக்க “ஏன் சூர்யா நம்ம லவ்வர்ஸ் தான… அப்படி கூப்ட்டா என்ன தப்பு? முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டாள்.

ஆம், இவர்கள் பழகி ஆறு மாதத்துக்குள் அனிக்கா தன் காதலை அவனிடம் சொல்லி விட்டாள் அவன் மறுக்க முடியாதவாறு.

அவனும் அனிக்கா மயக்கத்தில் இருந்ததால் அவள் காதலை ஏற்று கொண்டான். மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் முன் தன் வீட்டில் இதற்கு அனுமதி வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்று எண்ணி இருந்தான்.

“அப்படி இல்லை அனிக்கா…. இதெல்லாம் நம் கல்யாணம் முடிவு ஆனா பின் சொன்னால் போதும்” என்று கடுமையான குரலில் சொல்லி விட்டு தன் வகுப்பை நோக்கி சென்று விட்டான்.

தன் அப்பா சொன்ன ஒரே காரணத்திற்காக அவனிடம் கோபத்தை காட்டாது பொறுமையாக நின்றாள் அனிக்கா.

இவர்கள் காதல் தெரிந்தும் நவீன் சூர்யாவிடம் “எனக்கு என்னமோ உன் தகுதிக்கு அவள் சரியானவள் இல்லை என்று தெரிகிறது மச்சான்…. அப்புறம் உன் இஷ்டம்” என்றவன் அதன் பின் அவள் பேச்சை நவீன் எடுப்பது இல்லை.

அனிக்காவுக்கும், நவீனுகும் ஒத்து வராது அதனால் நண்பன் இப்படி சொல்கிறான் என்று சூர்யாவும் இதை பெரிதாக எடுக்கவில்லை.

ஆயிற்றி முடிந்தாகி விட்டது அவனின் கல்லூரி வாழ்க்கை. மலரும் தன் பள்ளி வாழ்வை முடித்துக் கல்லூரி சேரும் நாட்களுக்காக காத்திருந்தால்.
இன்னும் இரண்டு வாரம் தான் உள்ளது அவனின் அமெரிக்க பயணத்திற்கு… அதற்குள் தன் வீட்டில் அனிக்கா பற்றி பேசி விட வேண்டும் என்று நினைத்தான்…. ஆனால், அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது அதனை செயல்படுத்த ஏனோ அவனுக்கு மனம் வரவில்லை.
இந்த நிலையில் தான் சங்கரின் நண்பர் ஒருவர் தொழில் முறை விருந்திற்கு குடும்பதுடன் வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பொதுவாக இந்த மாதிரி விருந்திற்கு சங்கர் மற்றும்சூர்யா தான்செல்வர்.ஆனால் நெருக்கமான உறவுகள் என்கிற பட்சத்தில் அவரால் இப்படி குடும்பத்துடன் செல்வதை தவிர்க்க இயலாது.

சங்கர் மற்றும் சூர்யா ஃபார்மல் சூட்டில் இருக்க, கங்கா வெண்பட்டு உடுத்திருந்தார். மலர் கண்களை கவராத வண்ணமாக இளம் மஞ்சள் மற்றும் வெள்ளை கலந்த ஸ்டோன் வொர்க் செய்து இருந்த சுடியில் இருந்தாள்.

கங்காவை பொறுத்த மட்டில் உடை விசயத்தில் அதிகம் கவனம் இருக்க வேண்டும்… சிறு வயதில் இருந்தே மலரிடம் இந்த பழக்கத்தை சொல்லியே வளர்த்தாள்.,

அது மட்டுமின்றி கொஞ்சம் வருஷம் கிராமத்தில் இருந்தலால் மலருக்கும் சுடி, தாவணி உடையை தவிர வேறு அணிய விருப்பமும் வந்தது இல்லை.
வீட்டில் இருக்கும் பொழுது கூட பாதி நேரம் பாவாடை தாவணியில் தான் இருப்பாள். ஆடம்பரம் மற்றும் பிறர் கண்களை கூசும் ஆடையை அணிவதை விட தனக்கு வசதியான பொருத்தமான ஆடை அணிவதையே விரும்பி இருந்தாள்.

“அத்தை, போகலாமா நான் கிளம்பி விட்டேன்” என்றாள் புன்னகையுடன்.

“ ம்ம் போகலாம் மலர்…. நானும் உன் அத்தையும் இன்னோவாவில் கிளம்புறோ. மிஸ்டர்.கேசன் ஃபேமிலியும் வாராங்க சோ அவங்கள பிக்கப் பண்ணிட்டு போறேன். நீ சுர்யாவுடன் வந்துவிடு சரியா” என்று கிளம்பி வெளியே வந்தார்.

‘ஐயோ இவனுடனா வர வேண்டும்…. ஏற்கனவே மனசு தறி கட்டி ஓடுது அதுவும் இன்னைக்கு பார்த்து இவன் இன்னும் அழகாக வேற இருந்து தொலைத்து இருக்கிறான்’ என மனதுக்குள் புலம்பி கொண்டு இருந்தவள் முகத்தில் தோன்றிய உணர்வுகளை தான் அப்பொழுது சூர்யா பார்த்து கொண்டு இருந்தான்.

“என்ன இவனுடன் எப்படி போக என்று நினைக்கிறாய் அப்படிதானே?” என்றான் குறும்பு கூத்தாடும் குரலில்.
அவளும் தனக்குள் இருந்த சிந்தனையால் அவன் குரலை அறியவில்லை அவளை மறந்து ‘ஆமா’ என்றவள் பின் தன் இரு கண்களையும் உருட்டி ‘இல்லை’ என்று வேகமாக தலை ஆட்டினாள்.

அவளின் செய்கையால் விளைந்த சிரிப்பினை அடக்கியவன் “எனக்கும் உன்கூட சேர்ந்து வர ஆசை இல்லை… ஏதோ அப்பா சொன்னதால் வருகிறேன் சீக்கிரம் வா” என்றான் மிடுக்கோடு.

அவனை முறைத்தவாறு தன் விதியை நினைத்து நொந்து கொண்டு அவனுடன் சென்றாள் மலர்.
இருவருக்கும் இடையில் அசாத்திய அமைதியே நிலைத்து இருந்தது. தொண்டையை கனைத்து அந்த அமைதியை களைத்தவன்,

“மலர், நீ ஏன் முன்ன மாதிரி என்கிட்ட பேச மாட்டிக்க?” நேரடியாக எந்த ஒரு ஒப்பனை இன்றியும் தன் வழக்கமான கம்பீர குரலில் கேட்டான் சூர்யா.
திடிரென்று இவன் இப்படி கேட்பான் என்று நினைக்காதவள் பதட்டத்துடன் “என்னது அத்தான்” என்றாள் இவள் தன் வழக்கமான மருண்ட பார்வையுடன்.

‘சுத்தம் இவகிட்ட பதில் வாங்குவதற்குள் நான் பகிரத விரதம் இருக்கனும்’ என்று நினைத்தவன் “ஒன்றும் இல்லை இடம் வந்துவிட்டது வா உள்ளே போலாம்” என்றான் சலித்து கொண்டு.

ஜோடி சேர்ந்து இருவரும் வரும் அழகை பல கண்கள் ரசித்தாலும் அதில் ஒரு ஜோடி கண்கள் மட்டும் கோபத்தில் அவர்களை பார்த்து கறுவி கொண்டு இருந்தது.

“என்ன அனிக்கா பேபி, யாரை இப்படி பஸ்பம் செய்து கொண்டு இருக்கிறாய்” என்றார் மூர்த்தி.

“வேறு யாரும் இல்லை டாடி அந்த சூர்யாவையும் அவன் கூட வரும் அந்த பட்டிக்காட்டையும் தான்”.

“உங்களுக்கு தெரியாது டாடி…. அந்த சூர்யாவை நான் என் வழிக்கு கொண்டு வருவதற்குள் என் உயிரே போய் விட்டது. இதில் அந்த நவீன் வேறு இவன் கூடே சுற்றி கொண்டு திரிந்தான்.. ஹ்ம்ம் நம் நல்ல நேரம் அவன் நம்மை பற்றி சூர்யாவிடம் சொல்ல வில்லை” என்றாள் தன் தந்தையிடம்.

“இல்லை பேபி, அவன் சும்மா எச்சரிக்கை மாதிரி சூர்யாவிடம் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா”

“இருக்கலாம் டாடி…. ஆனால், சூர்யாவை நான் யாருக்கும் விட்டு தர தயார் இல்லை. முதலில் அவன்கிட்ட உள்ள வசதிக்காதான் பழகினேன்….ஆனால், அவனின் மேன்லி அண்ட் ஹன்ட்சம் லுக் வேறு யாருக்கும் கிடையாது டாடி.” கண்கள் மயக்கத்தில் மின்ன சொன்னாள்.

“நான் போய் அவன்கிட்ட பேச்சு கொடுக்கிறேன் நீங்கள் அவன் அம்மா, அப்பாவிடம் பேசி கல்யாணத்தை நிச்சயம் செய்து விட்டு வாங்க அப்போதான் உங்கள் விழுந்து போன பிஸ்னசை தூக்கி நிறுத்த முடியும்” தன் தந்தைக்கே கட்டளை இட்டு சூர்யாவை நோக்கி சென்று விட்டாள்.

“ஹாய் சூர்யா, நீங்களும் இந்த விருந்திற்கு வருவதா என்கிட்ட சொல்லவே இல்லை?” என்று கேள்வி கேட்ட வாறு அவன் முன்பு போய் நின்றாள் அனிக்கா.

மலரும், சூர்யா பக்கத்தில் தான் நின்று கொண்டு இருந்தாள். ‘யாரிது’ என்று கண்களில் கேள்வியை தேக்கியவாறு சூர்யா புறம் திரும்பினாள் மலர்.

அனிக்காவை பார்த்ததும் முகத்தில் தோன்றிய சிரிப்புடன் “மலர், இவள் தான் அனிக்கா மை காலேஜ் மேட்” என்றான்.
அனிக்கா என்றதும் மலருக்கு புரிந்து விட்டது இவள் சூர்யாவிற்கு எந்த முறை என்று….. மனதில் எழுந்த வலியுடன் அவளுக்கு கை கூப்பி “வணக்கம்” என்றவள்
“அத்தான் நீங்க பேசிட்டு இருங்க. நான் அத்தைகூட இருக்கேன்” அவன் பதிலை எதிர் பாராது சென்று விட்டாள்.

இவளுக்கு என்னவாயிற்றி… ஏன் இப்படி ஓடுகிறாள்’ என்று யோசித்து கொண்டு இருந்தான்.
ஆனால், மலரின் மனநிலை அனிக்காவிற்கு நன்றாக புரிந்தது ‘ஹ்ம்ம் பெண் மனம் பெண் அறிவாள்… உன் கண்ணில் எழுந்த வலியை நான் கவனித்து கொண்டேன் மலர்,’ என்று நினைத்தவள் பின் சூர்யாவிடம் கதை வழக்க ஆரம்பித்து விட்டாள்.

மலர் சென்றதும் அவளை பற்றி நினைத்து கொண்டு இருந்தவன், பின் அனிக்காவிடமும் தன் நண்பர்களுடனும் பேச்சில் மூழ்கி விட்டான்.

“என்ன மச்சான் கல்யாண சாப்பாடு எப்போ போட போற?” நண்பன் கேட்க,
“ம்ச் இப்போ என்னடா அவசரம் என் ஹையர் ஸ்டடீஸ் முடிஞ்சி கொஞ்சம் வருசம் போனதும் பாதிக்கலாம்”

“என்ன டார்லிங் இது? அவ்வளவு வருசம் என்னால வெயிட் பண்ண முடியாது. நீங்க ஸ்டடீஸ் முடிச்சு வந்ததும் நமக்கு மேரேஜ் தான்..”சினிங்கியவாரு கூறினாள் அனிக்கா.

“லிஸ்டன் அனிகா ஜஸ்ட் ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் டாக்” அடிகுரலில் சீறினான்.

அனிக்காவின் முகம் அவமானத்தில் சிவந்து போனது.


அவனது ஃபோன் அடிக்கவும் அவர்களிடம் இருந்து விலகி, பேசி முடித்து வந்தவன் கொஞ்சம் தூரத்தில் தான் கண்ட காட்சியில் கண்கள் சிவக்க நின்று விட்டன.
மலரும்………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!