Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thenmazhai Thoovuthadi

Thenmazhai Thoovuthadi 33 2

 

“விக்கி … என்..ட்ரஸ்… எனக்கு ட்ரஸ்… ஏன் விக்கி … ஏன் ….. இந்த ட்ரஸ் போட்டா நான் மகாலெட்சுமியே நேர்ல பார்த்த மாதிரி இருக்கேன் …. யாரும் பார்த்தாக்கூட தப்பா பார்க்க மாட்டாங்களாம் …. அப்படியே கையெடுத்து கும்பிடுவாங்களாம்…..” என அழுதவள்,

 

” இவங்கள அண்ணன்னு சொல்லி தானே பேசினேன் ….அவங்களும் பெஹன்ஜி … பெஹன்ஜினு தானே பேசினாங்க …  தங்கச்சினு பேசினவக்கிட்ட  இப்படித்தான் நடப்பாங்களா… குடி….. குடிச்சா யார் என்னனு உங்களப் போல ஆம்பிள்ளைங்களுக்குத் தெரியாதா……. ச்ச …… இவனுங்களுக்கு என்னைய கையெடுத்துக் கும்பிடத் தோணலயா … பார் விக்கி ….. அவங்க என்னைய எப்படி பண்ணி வச்சிருக்காங்க … எனக்கு வசதியா ஒரு ட்ரஸ் போட்டா …. இடத்திற்கு தக்கப் போடுனு நீ சொல்ற … பாட்டி பண்பாடு கெட்டது … கலாச்சாரம் கெட்டதுனு… அவங்க சொல்றாங்க ” அவளால் பேசவே முடியவில்லை .. திக்கித் திணற வார்த்தைள் வந்தன….. ஆனாலும் மேலும் அவனைப் பிடித்துக் கொண்டே ,



Advertisement

 

“உனக்குத் தெரியுமா … நான் நல்லா பாடுவேன் , ஆடுவேன் … பேச்சுப் போட்டி , டிசைனிங் , ஆர்ட்ஸ் எல்லத்திலயும் நான் பிரைஸ் வாங்கியிருக்கேன் … அதெல்லாம் ஏன் யார் கண்ணுக்கும் தெரியல … என் உடல் மட்டும் தான் தெரியுதா … என் படிப்பு திறமை இதெல்லாம் என்னைய எல்லார் முன்னாடியும் மதிப்பா நிற்க வைக்காதா …. எப்படி விக்கி எப்படி நான் மட்டும் வேற ட்ரஸ் போட்டிருந்தா அவன் என்னையத் தொட்ட அடுத்த நொடியே சாகடிச்சிருப்பேன்….. இந்த டிரஸ்ல என்னால நடக்கவே முடியல விக்கி … எப்படி ஓட , இப்ப பாரு … உன் முன்னால எவ்வளவு கேவலமா நிக்கிறேன் … இதுக்கு செத்துப் போயிடலாம் போல ….. ஆனா செத்தப் பிறகும் எல்லார் முன்னாடியும் மானம் போயிடுமேனு நினைக்கத் தோணுது…..” என அழுக,

 

Advertisement

 

Advertisement

பேச்சற்று நின்றவன்… சடுதியில் அவள் நிலை உணர்ந்து , தன் டீ ஷர்டை கழற்ற முயல , கையை விலக்கியவள், அப்படியே காலடியில் ஓடிய நீரில் அமர்ந்துக் கொண்டு , முகம்மூடிக் கொண்டாள். கழற்றியதை அவள் மீது போட்டவன்,

 

அடி வாங்கியவர்களை தண்ணீரில் இழுத்துப் போட்டான் , ஆனால் அவர்கள் முகம் தண்ணீரில் அல்லாது பாதி உடல் நீரிலும் மீதி நிலத்திலுமாக …. அவன் அடித்த அடிக்கு அவர்கள் எழவே இன்னும் ஒரு வாரமாகலாம் … உயிருக்கு ஆபத்து இருக்காது … ஆனாலும் அவர்கள் உடல் பிணத்திற்கு சமம் தான். அந்த அளவு அவனுக்கு கோபம் வந்து அவர்களை தாக்கியிருந்தான். பத்தாததுக்கு வருவும் அவர்கள் நால்வருடைய உயிர்நாடியையும் பதம் பார்த்திருந்தாள்.

Advertisement

 

அவள் ஆடை அணியும் வரை காத்திருந்தவன் , “வா….வா …. கிளம்பு நாம இனி ஒரு செகன்ட் கூட இங்க இருக்கக் கூடாது… ” என அவள் கைப்பிடிக்க ,

 

” என் ட்ரஸ் …” என்றவள் ஓரமாக உடை மரமுள்ளில் சிக்கியிருந்த புடவையை இழுத்துக் கொண்டு வர தண்ணீரில் விழ ….

 

“ஹேய்…லெட்சுமி … ” என கத்தியவனிடம் , ஒன்றும் சொல்லாமல் நீந்தி அதை எடுத்துக் கொண்டு வரவும் … “ஊஃப்…” எனப் பெருமூச்செறிந்தவன் ஒன்றும் சொல்லாது…

 

கீழே கிடந்த அவள் நகைகளை எடுத்து வந்து காரருகே சென்று பின் கதவைத் திறந்து விட , ஏறப் போனவள் … அந்த நிலையிலும் அனாதையாகக் கிடந்த பார்சலையும் எடுத்துக் கொண்டாள்.

 

உள்ளே அமரப் போனவன் , “நீ இந்த சேலைக் கட்டிக்கிறியா நான் வெளிய இருக்கேன்…” எனத் தயங்க ,

 

” எனக்கு கட்டத் தெரியாது பியுட்டி பார்லர் லேடி கட்டி விட்டாங்க….” என திக்கி திணறிப் பேச ,

 

அவளுக்கு மறுபுறம் இருந்த கதவைத் திறந்து அங்கிருந்த அவனது பையிலிருந்து ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டே வண்டியை எடுத்தவன் , நேராக அவர்கள் வீட்டுக்குச் சென்றான்.

 

அவள் அந்தப் புடவைக் கொண்டு தலையைச் சுற்றிப் போட்டு கண்கள் மட்டுமே தெரிவது போல் வைத்திருந்தாள் .அது ரியர் வியூ கண்ணாடியில் நன்குத் தெரிய, அந்தக் கண்களின் கலக்கமும் அவள் தலை சாய்த்து இருந்த விதமும் அவனைத் தாக்க ,

 

” லெட்சுமி ….” என்றான். திடுக்கிட்டவள் அவனைப் பார்க்க , அவள் புறம் திரும்பாமலேயே ,

 

“இப்ப வீட்டுக்குப் போய் வித்யா டிரஸ் எதுவும் இருக்கும் அதைப் போட்டுட்டு வீட்டுக்குப் போ …..”

 

அவள் தலையசைக்க ,

 

“இப்ப எதுவும் நடக்கல … நீயும் இங்க வரல … நானும் வரல …. அப்படினு நினைச்சுக்கோ…”

 

அதற்கும் தலையசைப்பே வர , எப்போதும் வாய் திறந்து பதில் கொடுப்பவள் இப்படி அமைதியாக இருக்கவும் , மனம் கணக்க….

 

“இது ஒன்னும் இல்ல… நீ சொன்ன உன் திறமைகள் மட்டும் தான் உன்னைய அடையாளம் காட்டும் …. உன் உடையோ … உன் உடலோ கிடையாது ….

 

நான் ஒருத்தன் மட்டும் இந்த சமூகம் கிடையாதே … இந்த சொசைட்டி பொண்ணுங்கனா… இப்படி அப்படினு நிறைய ரூல்ஸ் போட்டு வச்சிட்டாங்க … அதுல இருந்து நாம மாற நினைச்சாலே நம்மள ஒதுக்கி வச்சுருவாங்க …. நம்மள பார்க்கிற மற்றவர்கள் பார்வையும் புதுசா தான் இருக்கும்…. நான் உன்னைய இந்த ஊர்ல ஊறிப்போன பண்பாடு கலாச்சாரம் கட்டி காப்பாத்துறோம்னு சொல்லிகிட்டு இருக்கிறவங்க உன்னைய எதுவும் சொல்லிறக்கூடாதுனு தான் உன்னையக் கிண்டல் பண்ணின மாதிரி பேசினேன்….. அதாவது அவங்க உன்னைய கிண்டல் பண்ணாம , தப்பா எதுவும் சொல்ல விடாம தடுத்தேன்னு வச்சுக்கலாம் … காரணம் … மாமா பொண்ணு அப்படினுக் கூட இருக்கலாம். அது உன்ன ஹர்ட் பண்ணியிருந்தா சாரி ….” என்றவன் வீடு வருமுன் வண்டியை ஓரமாக நிறுத்தி ,

 

” நீ சொல்ற இந்த டிரஸ் மேலயும் தப்பில்ல … உனக்கு வசதியா போட்டுட்டு இருந்த ட்ரஸ் மேலயும் தப்புக் கிடையாது ….அது அப்படி ஒரு பார்வையை உருவாக்கினவங்க தப்பு … உனக்கேத் தெரியும்’ நிர்பயா’ கேஸ்ல … அந்தப் பொண்ணு டிரஸ்ஸக் கூட குறைச் சொன்னாங்க …. நம்ம சமுதாயம் ஆண்களை இப்படி மாத்தி வச்சுருக்கு … இனி வர்ற ஜெனரேஷனுக்கு வேணும்னா நாம சொல்லிக் கொடுக்கலாம் , “போடுற டிரஸ் வச்சு யாரையும்  எடை போடக்கூடாதுனு …..” அதனால நீ உடைகளை ஒரு விஷயாமவே எடுக்க கூடாது சரியா …. அது நம்ம உடலை மறைக்க மட்டும் தான் … நம்ம உணர்வுகளை மறைக்க இல்ல …

 

நம்ம நாட்டுல பொண்ணுங்கள அப்படி இரு இப்படி இருனு சொல்லி வளர்க்கிறது போல … ஆம்பிள்ளை பசங்களையும் பொண்ணுங்கள மதிக்க சொல்லி வளர்க்கணும் … தேவைப்பட்டா பொண்ணுங்கள உன்னைய மாதிரி மிதிக்க சொல்லியும் வளர்க்கணும் ….” எனவும் ரியர் வியூ கண்னாடியில் அவள் கண்கள் சிரிப்பதையும் கண்டவனுக்குத் திருப்தி….” இப்போது காரை எடுத்துக் கொண்டு வீட்டினுள் விட்டான்.

 

“நீ இறங்காத “என்றவன் , வீட்டினுள் இருந்து நிறைய பெட்டிகளையும் பைகளையும் அங்கிருந்த பெரிய காரில் ஏற்றிக் கொண்டிருந்த சண்முகம் ,தன் காரை நோக்கி வருவதைக் கண்டு,

 

“அங்கிள் பெட்ரோல் ரொம்ப கம்மியா இருக்கும் போல , நீங்க போய் பெட்ரோல் வாங்கிட்டு வாறீங்களா …. நான் அப்போ கவனிக்காம வண்டிய எடுத்துட்டேன்…” அவரது சின்னய்யா சொல் தவறுவரா சண்முகம்… பெட்ரோல் வாங்க சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

 

அவர் கிளம்பினதும் , வீட்டு முன் எரிந்துக் கொண்டிருந்த விளக்குகளை அணைத்தவன் , அவர் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த பைகளில் தங்கையினதைத் தேட , பொம்மை படங்கள் போட்ட பையினை எடுத்து வந்து , காரைத் திறந்து ,

 

“இது தான் விது வோடதுனு நினைக்கிறேன்…நீ போய் முகம் கழுவி அவ டிரஸ் ல ஒன்னுப் போட்டுக்கோ … ” எனவும் வாங்கிக் கொண்டு சென்ற வரு உடை மாற்றி விட்டு வர , ஹாலில் சிறிய விளக்கு மட்டுமே போட்டு அமர்ந்திருந்தவன் , அவள் வரும் அரவம் உணர்ந்து எழுந்து வாசல் அருகே நின்று வெளிப்பக்கம் பார்த்துக் கொண்டே ,

 

” லெட்சுமி …..”

 

“ம்….” என்றாள்.…விரக்தி புன்னகையோடு,

 

“நான் காதலைச் சொல்லலனா அந்தப் பேர்தான் வைப்பேன்னு… விளையாட்டா நினைச்சேன் .. இப்போ அப்படித்தானா விக்கி ….” கண்ணீரும் வர … அது அவள் கன்னத்துக் காயங்களில் பட்டு எரிய ஆரம்பிக்க , கழுத்திலிருந்தும் இரத்தம் வருவது போல் உடை நனைந்தது. அதைத் தொட்டுப் பார்த்தவள் ,

 

“ஐ லவ் யூ விக்கி … நான் மனசுக்குள்ள சொல்லிட்டு இருப்பேன் … அடுத்த ஜென்மத்துலயாவது உன் கூட சேருவேன் … தலைவலிக்குது விக்கி … இரத்தம் வேற வருது … எங்கம்மா எப்பல்லாம் நீ நினைக்கிறியோ அப்ப நான் வருவேன் சொன்னாங்க … இப்ப அவங்க என்னைய இப்படிப் பார்க்க முடியாம வருத்தப்படுறாங்க போல … நான் அவங்க கிட்ட போயிருவேன் … போல….” என யோசிக்கும் போதே ,

 

“நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணுவியா … ”

 

“ம்… ” என , ” இப்ப அந்த நாலு பேரால நான் வரதுக்குள்ள உனக்கு ஒன்னும் நடந்திருக்காதுனு நம்புறேன் ….. அப்படியே என்ன நடந்திருந்தாலும் நீ வேற எந்த தப்பான முடிவும் ….ஐ மீன் ….. சூசைட்… அது இதுனு ….” அவனருகில் பின்புறம் வந்து நின்றவள் , மெல்ல அவன் வலது கையை எடுத்து தன் கையை வைத்து ….

 

“நான் … அப்படி பண்ண மாட்டேன்…” என பேச முடியாது திணற ,

 

அவள் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டவன் ,

 

“எனக்குத் தெரியும் நீ தைரியமான பொண்ணு… அங்க அவனுங்கள புரட்டி எடுத்ததுலயேப் பார்த்தேனே….எனக்கு இன்னொரு ப்ராமிஸ் பண்ணனும் … ”

 

விக்ரம் என்னக் கேட்டாலும் தர தயாராகி இருந்தாள் அவனின் காதலி ….

 

தன் கழுத்தில் வழியும் இரத்தத்தை அவனறியாமல் அழுத்தி விட்டுக் கொண்டே …

 

“நான் இருப்பேனாத் தெரியாது…. விக்கி …. என் உயிர் என்னை விட்டுப் போற வரை நீ சொன்னதக் கேட்பேன் …” என மனதினுள் நினைத்துக் கொண்டே … தன் இன்னொரு கையையும் அவன் கை மீது வைத்தாள்.

 

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் உந்தன் கையில்…

தோளில்

 

சாய்ந்து கதைகள் பேச நமது விதியில்

இல்லை முதல் கனவு போதுமே காதலா….

 

தூவும் ……

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!