Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 31 1

மாயாவி 31:::

 

மாயமாகிப் போன 

என் வாழ்க்கையில் 



Advertisement

என்னென்னவோ மாயங்கள்

செய்து அதை வண்ண 

மயமாக்கி விட்டாயே!

Advertisement

என்னடா(டி) மாயாவி நீ!

Advertisement

 

“நீ இங்க தான் இருக்கன்னு நேத்து நைட்டே அவன் கிட்ட சொல்லிட்டேன்… உன்னை காணோம்னு ரொம்ப பதறிட்டான்… இப்பவும் நாளைக்கு விசேஷம் ஒரு காரணம் தான் ஆனால் உன்னை உடனே பார்க்கணும்னு தான் இப்பவே வந்துட்டான்…”

 

Advertisement

“அவனை மாதிரி ஒரு பிரெண்ட் கிடைக்க உண்மையாவே நீ கொடுத்து வைச்சு இருக்கணும்…” என்ற அமுதனின் வார்த்தையை ஆமோதித்தாள் குழலி.

 

இருவரும் உள்ளே நுழைய கூடத்தில் மாறன் மற்றும் செல்வியோடு பேசிக் கொண்டிருந்தனர் கவியும் சரஸ்வதியும்…

 

“ஹே கவி ! வாடா எப்ப வந்த? சரஸ் வீட்ல எப்படி உன்னை அனுப்பினாங்க?” என்ற குழலியிடம்,

“ப்ரோ தான் வீட்ல பேசினாரு…” என்று அமுதனை கைகாட்டி சரஸ்வதி மட்டுமே அவள் கேள்விக்கு பதில் அளித்தாள்.

 

குழலி கவியின் அருகே செல்ல, அவன் வேகமாக எழுந்து வெளியே சென்றான் அவன் பின்னே அமுதனும் விரைந்தான்.

 

சிறிது நேரம் கழித்து வந்தவனின் கையில் ஒரு குச்சி இருக்க, பாரபட்சம் பார்க்காமல் குழலியின் கைகளில் தோள்களில் இரண்டு வைத்தான். அங்கு அவனை யாரும் தடுக்கவில்லை.

 

“இவ்வளவு பெருசா எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கியே… இப்படி சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிட்ட… என்ன பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்க வேண்டியது தானே…”

 

“கொஞ்சம் கூட எங்களைப் பத்தி கவலை இல்லாம அது என்ன இந்த மாதிரி ஒரு வேலை செய்யறது…” என்றவன் இன்னும் இரண்டு அடி போட்டான்.   

 

அவனின் அடிகளை வாங்கியவளின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியிருந்தது. அவளின் கண்ணீரை பார்த்த கவி,

 

“இன்னொரு முறை இப்படி யோசிக்க கூட செய்யாத பூனை… எனக்குன்னு இருக்க ஒரே ஒரு உறவு நீ தான்… நீ இல்லைன்னா நான் ஒண்ணுமே இல்லை…” என்றவனின் வார்த்தையை அங்கிருந்தவர்களும் உணர அந்த இடமே நெகிழ்ச்சியாக இருக்க,

அவனின் கையை தன்னோடு சேர்த்துக் கொண்டு ஆறுதலாக அவனை தட்டிக் கொடுத்தாள் குழலி…

 

“சரி சரி வாங்க சாப்பிடலாம்… நேரமாகுது… நாளைக்கு காலையில எல்லோரும் சீக்கிரம் எழுந்துக்கணும்…” என்றபடி செல்வி அங்கிருந்த கனமான சூழலை கலைத்தார்.

 

எல்லோரும் நாளைய விசேஷத்தை பேசியபடியே சாப்பிட்டு முடித்து உறங்க செல்ல, அவர்களின் அறைக்கு வந்த குழலி,

 

“என்னை அடிக்க அவன்கிட்ட நீங்க தானே குச்சி கொடுத்தீங்க…” என்று இடுப்பில் கையை வைத்து கொண்டு முறைத்தவளை தன்னருகே இழுத்தவன்,

 

“ஆமா ! நான் செய்ய முடியாததை அவனை செய்ய சொன்னேன்…” என்று சிறு சிரிப்போடு சொன்னவனை தள்ளி விட்டாள்.

 

“ஏன் நீங்களும் என்னை அடிக்க வேண்டியது தானே…” என்றபடி கட்டிலில் அமர,

 

“உன்னை பார்த்தா எங்க அடிக்க தோணுது… இங்க உன்னை பார்த்ததும் நான் என்ன பண்ணேன்னு தான் உனக்கு தெரியுமே…” என்றவனின் பார்வை மாற,

 

“அவன் அடிச்சது வலிக்குதா என்ன?…” என்றபடி அவள் அடி வாங்கிய இடங்களை தன் உதட்டால் ஒற்றி எடுக்க அவளோ நெளிந்தாள்.

“ஐஸ்கிரீம் இல்லாததால உன்னோட கை டேஸ்ட்டா இல்லை…” என்றவனை தள்ளி விட்டவள், 

 

“போயா யோவ்!” என்று சொல்லி விட்டு படுத்துவிட்டாள்.

 

“அடியேய்! நீ தானே இனி ஐஸ்கிரீம் சாப்பிட்டு பழக சொன்ன… நான் எப்படி பழகினேனோ அப்படி தானே சாப்பிட முடியும்…” என்று சிரித்தவன், 

 

“அது என்ன ஒரு நேரம் எழில், மாமா, யோவ், போயான்னு ஒவ்வொரு பேருல கூப்பிடற…” என்றதும்,

 

“எனக்கு எப்படி தோணுதோ அப்படி தான் கூப்பிடுவேன்… அதை எல்லாம் ஆராய கூடாது…” என்றவளை இழுத்து அணைத்தவாறே உறங்காமல் பேசியப்படியே அன்றைய இரவு கடந்ததை இப்போது நினைக்கும் போதும் அவர்களிடையே மனதால் இன்னும் இன்னும் நெருங்கியதாக தோன்றியது. 

 

“ஐஸ்கிரீம் உருகி போற அளவுக்கு பெரிய பிளாஷ்பேக்கா இருக்கும் போலவே கண்ணா… நம்ம இப்ப கொடுத்த ஐஸ்கிரீம் உருகிப் போற அளவுக்கு கண்ணாலேயே ரொம்ப நேரமா பேசிக்கிறாங்க… நல்லவேளை சின்ன பாக்ஸ் தான் வாங்கிட்டு வந்தேன்…”

 

“இல்லைன்னா இவங்க ஐஸ்கிரீம் சாப்பிடாம இத்தனை நேரம் கண்ணாலேயே பேசியத்துக்கு இங்க ஒரு ஐஸ்கிரீம் ஆறே ஓடி இருக்கும்…” என்ற கவியின் கேலியில் நிகழ்காலம் வந்தனர் அமுதனும் குழலியும்…  

“நாங்க இப்ப தான் இப்படி ஆனா நீங்க அப்பவே அப்படி தானே…” என்று அமுதன் கவியையும் சரஸையும் காட்டி ரகசியமாக கேலி செய்ய,

 

“ஹா! ஹா! அப்படியே இருக்கட்டும்… நம்ம ஒரு சரித்திரம் படைச்சதா இருக்கட்டும்… அதை பார்த்து பின்னாடி வர்ற சந்ததிங்க கத்துக்கட்டும்…” என்றபடி அதே ரகசிய குரலில் சொல்லிய கவி தன் கப்பிலிருந்த ஐஸ்கிரீம்மை சரஸ்வதிக்கு ஊட்டிக் கொண்டிருந்தான்.  

 

ஒருவரை ஒருவர் வாரியபடி பேசிக் கொண்டே இரவு உணவையும் முடித்திருக்க சிறிது நேரமாக குழலியை காணாமல் அமுதன் வீட்டை சுற்றி பார்வையை சுழல விட, செல்வியோ அனைவரையும் உறங்க சொல்லி அனுப்பி கொண்டிருந்தார்.

 

“அம்மா! குழல் எங்க?” 

 

“அவ எப்பவோ ரூமுக்கு போயிட்டா… அன்னைக்கு உங்க கல்யாணம் நடந்தப்ப சடங்கு எல்லாம் பண்ணற நிலையில இல்ல…. இன்னைக்கு ஏற்பாடு பண்ணி இருக்கு… சாமி கும்மிட்டுட்டு உள்ளே போ…” என்று உள்ளே செல்ல திரும்பியவர்,

 

“போனது எல்லாம் போகட்டும்… இனி இது தான் உங்களோட வாழ்க்கை…. உன்னை நம்பி வந்திருக்கா… அவளை பொறுப்பா பார்த்துக்கிட்டு சந்தோஷமா வைச்சுக்கோ…” என்று மகனிடம் சொல்ல,

 

“கண்டிப்பாம்மா…” என்று அவன் சொன்னதும், அவர் உள்ளே சென்று விட இவன் தன்னறைக்குள் நுழைந்தான்.

 

கட்டிலின் ஓரம் பதட்டமாக அமர்ந்திருந்த மனைவியை பார்த்து சிரித்தவன், அமைதியாக சென்று உடைமாற்றி கொண்டு வந்து அவள் அருகே அமர்ந்தான்.

 

“என்ன குழல் ? எதுக்கு இவ்வளவு பதட்டம்? நான் உன்னை என்ன பண்ணிடுவேன்னு இப்படி டென்ஷனா இருக்க…” என்று அவன் மென்மையாக கேட்டதும்,

 

“தெரியல ஒரு மாதிரி பதட்டமா இருக்கு…  நான் முன்னாடி இதெல்லாம்…” என்று தடுமாறியவளை பார்த்து, 

 

“குழல்! இதுக்கு முன்னாடி உன் வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் மாற்றி பழசோட நினைப்பே உனக்கு வராத அளவுக்கு நம்ம வாழ்க்கை இருக்கும்… நான் வாக்கு தர்றேன்… என்னை நம்பி என்கூட வா…”

 

“கண்டிப்பா நம்ம நினைச்சதை விட நம்ம வாழ்க்கை ரொம்ப நல்லா  இருக்கும்…” என்றவனின் குரலில் இருந்த மென்மையும் நேசமும் அவளை இன்னும் திடமாக்கியது.

 

அவன் வார்த்தையை ஆமோதிப்பது போல அவன் தோளில் சாய்ந்தவளை ஆதவராக அணைத்தவன்,

 

“ஆமா நான் கேட்கணும்னு நினைச்சேன்… உன்னை காணாம நான் கூர்க் வரைக்கும் போய் தேடினா நீ இங்க வந்து இருக்க… நாங்க கண்டுபிடிக்க கூடாதுன்னா…” என்று அமுதன் பேச்சை மாற்ற,

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!