Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennadi Maayaavi Nee

Ennadi Maayaavi Nee 31 2

“நீங்க என்னை கூர்க்ல போய் தேடனீங்களா?” என்று ஆச்சர்யமாக கேட்டவள் தொடர்ந்து,

 

“நான் நாலு நாளைக்கு முன்னாடி வரைக்கும் அங்க தான் இருந்தேன்… நம்ம தங்கியிருந்த ஹோட்டல்ல இருந்து வேற இடம் போய் தங்கினேன்…. அப்புறம் போக போக உங்களை விட்டுட்டு இருக்க முடியல… ஏதோ தப்பு பண்ற மாதிரி தோணுச்சு…”

 



Advertisement

“இப்படி உங்க தோள்ல சாயாம இனி இருக்கவே முடியாதுன்னு தோணுச்சு… அதான் இங்க வந்தேன்… நான் தனியா வந்ததை பார்த்து மாமா கேட்க நான் உளறி வைக்கண்ணு மாட்டிகிட்டேன்…. ஆனால் அவர் உங்ககிட்ட நான் இங்க இருக்கறதை சொல்லல போல…”  என்று அவள் சொன்னதும்,

 

“மொத்தத்துல எங்க அப்பா கிட்ட அடி வாங்க வைக்க பிளான் போட்டன்னு சொல்லு…” என்று வம்பிழுத்தான்.

Advertisement

 

Advertisement

“இல்ல இல்ல சாரி! மாமா இப்படி பண்ணுவாருன்னு நானும் எதிர்பார்க்கல…” என்றவள் அவன் கன்னத்தை வருடி வருடவும்,  

 

“ஆமா! எங்க அம்மா ஏதோ ஏற்பாடு பண்ணி இருக்கறதா சொன்னாங்க ஆனா இங்க ஒன்னும் காணோமே…” என்று அவளை சீண்ட,

Advertisement

 

“நம்ம ரெண்டு பெரும் ஆளுக்கு ஒரு மூலையில இருந்ததை பார்த்து அவங்களுக்கு என்ன புரிஞ்சதோ அதான் இன்னைக்கு விஷேசம் முடிஞ்சதும் ஏதாவது சொல்லி இருப்பாங்க…” என்றவள் அவனுக்கு முகம் காட்டாமல் அவன் தோளில் இருந்து நெஞ்சுக்குள் புதைந்தாள்.

“ஹான்! அப்படியா…” என்று ஆச்சர்யம் போல பேசியவன் அவளை இன்னும் தன்னோடு இறுக்கியவாறு உறங்க ஆயத்தமாக அவள் அவனை கேள்வியாக ஏறிட்டாள்.

 

“உன்னோட சேர்ந்து இப்ப தானே ஐஸ்கிரீம்மை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட பழக ஆரம்பிச்சு இருக்கேன்… ஒருநாள் மொத்தமா அப்படியே சாப்பிடலாம்…” என்று சொல்லி கண்ணடித்தவனை முறைத்தாலும் அவன் வார்த்தை கொடுத்த நாணத்தில் அவனுள்ளே மறைந்தவளை புன்னைகையோடு அணைத்து கொண்டான்.

***************************************

 

“எழில்! என்னோட லேப்டாப் பேக் எங்க?”

 

“குழல்! என்னோட ஷர்ட் அயர்ன் பண்ணியா?” 

 

“யோவ்! சமைக்கறதை எடுத்து பேக் கூட பண்ண மாட்டியா?” 

 

“அடியேய்! ஒழுங்கா வைச்சதை மொத்தம் சாப்பிட்டு தான் எழுந்துக்கற…”

 

அமுதன் குழலியின் விஷேசம் முடிந்து பெங்களூர் திரும்பி மூன்று மாதம் முடிந்த நிலையில் அவர்களுக்குள் உரிமையான கொஞ்சல், சீண்டல், கோபம், சமாதானம், பஞ்சாயத்து என்று அனைத்தும் இயல்பாக ஓடிக் கொண்டிருந்தது.

 

கவியின் பெற்றோர் இடத்தில் மாறன் தம்பதியினர் அனைத்தையும் முன்னின்று நடத்த, அமுதனும் குழலியும் மற்ற ஏற்பாடுகளை கவனிக்க என்று இன்று காலை தான் கவிக்கும் சரஸ்க்கும் திருமணம் முடிந்திருந்தது.

 

இப்போது மாலை வரவேற்பிற்கு கிளம்பி கொண்டிருக்க மனைவி இன்னும் கிளம்பாததால் ஒரு பஞ்சாயத்து வேறு ஆரம்பித்தது.

“அடியேய் நேரமாகுது! அங்க எல்லோரும் நமக்காக வெயிட் பண்றாங்க… எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ரெடியாகிட்டு வர்றதுக்கு வீட்டுக்கு வந்தா இன்னும் கிளம்பாம என்ன பண்ற?” என்ற அமுதனை முறைத்தவள்,

 

“அடியேய்! சொல்ல பொண்டாட்டி மட்டும் தான் இருக்கேன்… இன்னும் அப்பனேன்னு சொல்ல புள்ளைங்க இல்லை…. அதுக்கே எனக்காக இவரு வெயிட் பண்ண மாட்டாராம்…” என்று சிலிர்த்துக் கொண்டே ரெடியாகியவளைப் பார்த்து சிரித்தவன்,

 

அவளை தன்னோடு இறுக்கியபடி, “அடியேய்னு சொல்லி சொல்லி பொண்டாட்டியை கொஞ்சிட்டே இருந்தா தானே புள்ளைங்க வரும்…” என்று சீண்டியவாறே அவளை வாசனைப் பிடித்தவன்,

 

“விசேஷத்துக்கு கிளம்பற நேரத்துல இப்படி கொஞ்சிட்டே இருக்கியே மாயாவி… நம்ம வேணும்னா பொறுமையா போகலாமா…” என்றபடி அவள் அணிந்திருந்த அணிகலன்களுக்கு ஈடாக அவளை வெட்கச் சிவப்பால் ஜொலிக்க வைத்தவனிடம் இளக ஆரம்பித்தாலும் அவனிடமிருந்து விலகி,

 

“யோவ்! என்னை சொல்லிட்டு இப்ப நீ எதுக்கு கொஞ்சிட்டு நிற்கற? (wbctx.com) வா கிளம்பலாம்…” என்று அவனை இழுத்துக் கொண்டு சென்றவளின்  பின்னே விரிந்த சிரிப்போடு சென்றான். 

 

தனக்கு யாருமில்லை என்ற கவியின் மனதோரம் இருந்த எண்ணத்தை அனைவரும் சேர்ந்து தவிடு பொடியாக்கி இன்று அவனுக்காக அவன் உறவாக அனைத்தையும் நடத்தி கொண்டிருந்தனர் அமுதன் குடும்பத்தினர்.

 

இதற்கிடையே சரஸ் அவன் கையை ஆறுதலாக பற்ற அதை தன் கையோடு சேர்த்து இறுக்கியவன், அவளைப் பார்த்து புன்னைகைத்தான்.

 

“இதுக்கு முன்னாடி சும்மா பேசறதுக்கே அபிநயம் பிடிப்ப ஆனா இனி அதையும் தாண்டி நிறைய நிறைய அபிநயம் பிடிப்ப போலவே…” என்று அவளின் காதில் ஏதோ ரகசியம் பேச அவன் வார்த்தையை மெய்யாக்குவது போலவே அவள் முகம் அபிநயம் பிடித்தது.

 

அவளின் நாணத்தை பார்த்த குழலும் அமுதனும் அவர்களை வாரிக் கொண்டிருக்க அங்கே கொண்டாட்டமாக இருந்தது.

 

வரவேற்பு முடிந்து கவி மற்றும் சரசை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு பதினோரு மணியளவில் வீடு திரும்பினர் அமுதனும் குழலியும்…

 

உள்ளே நுழைந்ததுமே அவளை உடை கூட மாற்ற விடாமல் தன் கையில் ஏந்தியதும் அதிர்ச்சியானவள்,

 

“மாமா என்ன பண்ணறீங்க? கீழே விடுங்க…” என்றாள்.  

 

“ஏதாவது அதிர்ச்சி கொடுத்தா தான் மாமா கூட வரும் போலவே…” என்றவாறே அவளை கட்டிலில் விட்டான். 

 

“ஹான்! அதெல்லாம் ஆராய கூடாதுன்னு சொல்லி இருக்கேனே…” என்றவளிடம்,

 

“அடியேய்! சாயங்காலம் என்னவோ கேட்டியே? இப்ப கேளு அப்பனேன்னு சொல்ல புள்ளைங்களை கொண்டு வந்துடலாமா…” என்றவனுக்கு வாய் வார்த்தையாக பதிலளிக்காமல் தன் விழிகளின் வழியே சம்மதம் சொன்னதும், 

 

“உன்கூட சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா பழகின ஐஸ்கிரீம்மை இன்னைக்கு மொத்தமா அப்படியே சாப்பிடலாம்னு இருக்கேன்… என்ன சொல்ற மாயாவி?” என்றவன் அவளிடம் சிறிது சிறிதாக தன் ஆக்கிரமிப்பை ஆரம்பித்தான்.

 

அவனோடு அவளுக்கென்று ஒரு புது வாழ்வு வாழ எண்ணியவளை இன்று இந்த நேரம் வேறு ஒரு உலகம் அழைத்து சென்றான்.    

 

“நான் ஏதோ புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நினைக்கிறேன்… என்னோட நிறையை விட என்னோட குறையை ஏத்துக்கிட்டு அதை சரி செய்து என்கூட ஒரு வாழ்க்கை வாழ நீ ஆசைப்படறதை நினைச்சா எனக்கு இப்பவும் எல்லாம் ஏதோ மாயாஜாலம் போல இருக்கு… நான் சொல்றதை  நீ ஏத்துக்கலைன்னாலும் என்னோட மாயாவி தாண்டி நீ!…”  

என்றவன் அவளை மகிழ்வோடு அணைத்துக் கொள்ள அவளும் தன்னவனிடம் வந்து சேர்ந்த நிம்மதியில் அவனிடமே அடைக்கலமாக இனி அவர்களின் வாழ்வு இதேபோல எப்போதும் ஆனந்தமயமாக இருக்க வாழ்த்தி விடைபெறுவோம். நன்றி! வணக்கம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!