Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Unnai Saranadainthaen

Thedi Unnai Saranadainthaen 30 3

சரண் – 30 3 

 

திறப்பு விழா வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. வனத்துறை அமைச்சர் பாலனை மிகவும் பாராட்டி பேசினார். என்னதான் மகன்கள் இருவருடைய திறமையால் இந்த திட்டங்கள் அனைத்தும் சாத்தியமாகியிருந்தாலும், பெரியவர்களின் தலையீடும், அறிவுரைகளும் இல்லாமல் இவை நடந்திருக்காது அதனால் அந்த இடத்தில் இருவரும் ஒதுங்கி பாலனை மேடையில் கௌரவப்படுத்தியிருந்தனர். அது யார் சொல்லியும் அல்ல. எங்கு எப்படி யாருக்கு மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று நாச்சியார் பேரபிள்ளைகளுக்குத் தெரியாதா.. என்ன..? தன் இரு பிள்ளைகளையும் நினைத்து வனிதாவிற்கு பெருமை பிடிபடவில்லை.

 



Advertisement

வனத்துறை அமைச்சரே விழாவிற்கு வந்திருந்தது அந்த நிகழ்வை மொத்த தமிழ்நாடும் திரும்பி பார்க்க வைத்தது. மேலும் மணிமொழியும் யு டியுப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களிலும் லைவ் போட, நெட்டிசன்களுக்கு இந்த ஒரு நிகழ்வு பல நாள் விருந்தாகிப் போனது. அமைச்சர் பேசும் போது முன்னனி தொழிலதிபர்கள் ஒவ்வொருவரும் இப்படி ஒரு கிராமத்தைத் தத்தெடுத்தால், நாட்டில் வறுமை அழிந்து, பசி பட்டினி இல்லாமல் வாழமுடியும் என்றார்.

 

பாலன் பேசும் போதும் அதையே தான் தெரிவித்தார். நம்மிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்பதில் ஒரு தவறும் இல்லையே. இன்று இருப்பது நாளை இருப்பதில்லை. இன்றைய சூழல் நாளை எப்படி வேண்டுமானலும் மாறலாம். முடிந்தவரை நல்லதை மட்டும் செய்துவிட்டு போக வேண்டும் என்றார். 

Advertisement

 

Advertisement

பள்ளியை பார்த்திராத குழந்தைகள், மருத்துவமனையைப் பார்த்திராத மக்கள், வெளிச்சத்தைப் பார்த்திராத பெண்கள் என அவர்களின் தேவைகளைக் கண்டுபிடித்து நிவர்த்தி செய்திருந்த வெற்றியையும், புகழையும் அவர்களைப் பெற்ற பெற்றவர்களையும் என ஒவ்வொருவரையும் தங்கள் கடவுள் காடு வெட்டி அய்யனாராகவேப் பார்த்தனர். 

 

அவர்களின் நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு,  ஊர் மக்கள் அனைவரும் இரண்டு நாட்கள் பாலன் குடும்பத்தாரை அங்கேயே இருந்து செல்லும்படி கூற, அங்கிருந்த சூழலும், கள்ளம் கபடமற்ற அந்த மக்களின் தூய அன்பும், அடுத்து எப்போது இப்படி ஒற்றுமையாக வரப்போகிறோம் என்ற எண்ணத்திலும் நாச்சியார் சரியென்றுவிட,  அந்த இரண்டு நாட்களும் மொத்த கிராம மக்களும் தங்களின் அன்பையும், மரியாதையும், நன்றியையும் ஒவ்வொரு வகையில் காட்டிக் கொண்டிருந்தனர். 

Advertisement

 

தபேராவிடம் அங்குள்ள அனைத்தையும் மேற்பார்வைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும், புகழும் அரூபியும் அங்கு இருக்கும்வரை அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஒப்படைத்தார். அது புகழ் சொல்லி பாலன் செய்வது என பத்ரனுக்குப் புரிந்தது. குழந்தைகள் இல்லாத அவரது தவ வாழ்க்கையில் மகளாக அவதாரம் எடுத்தவள் அரூபி. இன்று அவள் சீரும் சிறப்புமாக வாழ்வதை, வாழப்போவதைக்  கண்கள் குளிர ரசித்தார். 

 

பத்ரனைப் பார்த்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அலையும், மனைவியின் மன வருத்தத்தைப் பார்க்க முடியாமல் பத்ரனைத் தங்களோடு வந்து தங்க சொல்லி புகழ் பேச, அதைக் கேட்டப் பெரியவரோ அது சரிவராது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். வீட்டுப் பெண்ணாக இல்லாமல், விருந்தாளியாக வந்து அவரது வீட்டில் தங்குமாறு பத்ரன் இருவரையும் அழைக்க, அவளோ உனக்கு நான் பேத்தி என்பதைக் காட்டும் விதமாக, அவரது அழைப்புக்கு அரூபி ஒத்துக் கொள்ளவேவில்லை. 

 

ஆரவாரங்கள் அனைத்தும் முடிந்து, புகழையும் அரூபியையும் அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பியிருந்தனர். அடுத்த பத்தாவது நாளில் கோவையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் வைக்க வேண்டும் என்பது வனிதாவின் ஆசை. அதில் தன் இரு மகன்களும் மனைவியோடு இருக்க வேண்டும் என்றுக் கண்டிப்பாக சொல்லியிருந்தார். பெரியவர்கள் அதற்கான வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டனர். புதுமணத் தம்பதிகள் இருவரையும் ஒரு வாரம் இங்கு இருந்துவிட்டு வந்தால் போதும் என்று அறிவுறுத்தி சென்றிருந்தனர்.  

 

வனிதா இப்போது வெற்றியிடம் மிகவும் இணக்கமாக நடந்து கொள்கிறார். அவனே ஒதுங்கிப் போனாலும் அவர் விடாமல் பேசிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவர் வெற்றியிடம் முன்னர் நடந்து கொண்டதெல்லாம் கனவோ, பொய்யோ என மற்றவர்கள் என்னும் அளவிற்கு அவரது மாற்றங்கள் இருந்தன. அதுவே குடும்பத்தாருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்க, ஒதுங்கிப் போகும் தன் தாத்தாவை இழுத்து வைத்து அவருடன் பேசினான் வெற்றி. தன் மனைவிக்காக. அவள் இப்போது எந்த வருத்தமும் படக்கூடாது என்பதால். இப்படி அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

 

அனைவரும் பல பத்திரங்களைச் சொல்லிவிட்டு கிளம்பிவிட, அந்த வீட்டில் புகழும் அபியும் மட்டுமே. ஒரு ஆணாக அவனுக்கு அன்றைய இரவிற்கான எதிர்பார்ப்புகள் இருந்தாலும், அபியின் சம்மதம் தெரியாமல் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

 

தன் முன்னே பேரழகுப் பெட்டகமாய் நின்றிருந்தவளைப் பார்க்க பார்க்க புகழுக்கு உணர்வுகளைக் கட்டுக்குள்ளே கொண்டு வர முடியவில்லை. ஆனாலும் அவளிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல், சாதாரணமாகவேப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனின் பார்வையில் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாததைக் கண்டவள், ‘என்னாச்சு இவருக்கு.? இவ்ளோ அமைதியா இருக்கார். ஒருவேளை இந்த ரெண்டு நாள் அலைச்சல்ல மறுபடியும் உடம்புக்கு முடியாம போய்டுச்சோ..’ என யோசித்தபடியே நின்றிருந்தாள்.

 

மனைவியின் முகத்தையேப் பார்த்திருந்தவனுக்கு அது காட்டும் உணர்வுகள் புரியாமல் இல்லை. ஆனாலும் தன் முக மாற்றத்தைக் காட்டவில்லை. நம்ம ரியாக்ஷனைத் தெரிஞ்சிக்காம இவ பக்கத்துல வரப்போறது இல்லையோ.. அப்போ இன்னைக்கு முழுசும் இப்படியே தான் நிப்பாளா..? என்ற எண்ணம் மனதில் தோன்றவும் பக்கென்றானது பையனுக்கு. 

 

அந்த பயம் அவனைப் பேச வைத்தது. “ஏன் அங்கையே நிக்கிற, இங்கே வா.. இந்த வீடு உனக்கு முன்னமே உனக்கு பழக்கம் தான.. அப்புறம் என்ன.?” என்றதும்,

 

“ம்ம்ம்… உங்களுக்கு என்ன..? உடம்புக்கு முடியலயா..?” என அவன் பயந்தது போல் அல்லாமல், கணவனிடம் நெருங்கி அமர்ந்து, அவன் கையைப் பிடித்தபடியே கேட்க

 

“இல்லையே.. அப்படில்லாம் இல்லயே.. நீ தான் ஏதோ யோசனையா இருந்த.. என்ன யோசிச்சது இந்தக் குட்டி மூளை. உன் மாமியார் போகும் போது உங்கிட்ட தனியா ஏதோ ரகசியம் பேசினாங்க. என்ன சொல்லிட்டு போனாங்க. என் பையனை நல்லா பார்த்துக்கோ.. என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அந்தக் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது. அப்படின்னு டைலாக் விட்டுட்டு போனாங்களா..?” என்றதும், அபி வாய்விட்டுச் சிரித்தபடியே இல்லையென்றுத் தலையசைக்க

 

“அது இல்லையா.. வேறென்ன் சொன்னாங்க.. நீயே சொல்லு..” எனப் பேச்சுவாக்கிலேயே அவளை இன்னும் நெருங்கியிருந்தான். அதை உணராமல் “அது வந்து… அது கொஞ்சம் சூதானமா இருக்கனும் சொன்னாங்க..” என்றாள் மெல்லியக் குரலில்

 

“சூதானமானா எப்படி.. புரியல.. சரியா சொல்லு..” எனவும், தலையைச் சிழுப்ப, அது ஏடகூடமாக அவன் மீது  “சூதானமான்னா என்னனு கூடத் தெரியாதா..? கவனமா இருக்கனுமாம்..” எனப் பல்லைக் கடிக்க

 

“ஏய் இரு எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற.. நாம இருக்குறது காட்டுக்குள்ள சோ கவனமா இருங்கன்னு சொல்லிட்டுப் போயிருப்பாங்க. அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்குற..” என்றவன், இப்போது அவளைத் தன்னில் மொத்தமாக சாய்த்திருந்தான். 

 

அவனைத் தள்ளியவள் “கவனமான்னா.. இப்பவே புள்ளக்குட்டியெல்லம் பெத்துக்காதீங்க. மங்கை வேற மாசமா இருக்கா.. நீயும் உண்டாகிட்டா ரெண்டு பேரையும் பார்த்துக்குறது கஷ்டம். அதனால அவ புள்ளைக்கு மூனு வயசாகட்டும் அதுக்குப் பிறகு பார்ப்போம்ன்னு சொன்னாங்க..” என எரிச்சலில் கத்த

 

மனவியின் முதல் வார்த்தையிலேயே அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனாலும் நிறுத்தவில்லை. சொல்லி முடித்து அவனைப் பார்க்க, மீண்டும் தன் முகத்தைப் பாவமாக வைத்தவன், “ஓ.. அந்தக் கவனத்தைச் சொன்னாங்களா.. அது பிரச்சினையில்லை. நான் இப்போதைக்கு குழந்தைப் பெத்துக்குற ஐடியாவிலேயே இல்ல. இப்ப என்ன பண்ணலாம். உன் மாமியார் சொன்னதைக் கேட்கலாமா..? வா தூங்குவோம் இனி மூனு வருஷத்துக்கு உன்னைப் பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்கனுமா..? புகழ் உன் நிலமை இப்படியா ஆகனும்..?” என மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தபடியே, அவளது ரியாக்ஷனை கவனித்தபடியே பாவம் போல் புலம்ப,

 

‘என்ன மூனு வருஷமா இப்படியேவா.. அதுவும் ஒன்னா ஒரேக் கட்டில்ல படுத்துட்டு.. அவன் சும்மா இருந்தாலும் நம்ம கை சும்மா இருக்கனுமே.. ஆத்தி அது முடியாது..’ என ஜெர்க்கானவள், “ஹேய் அப்படி… அப்படி ஒன்னும் சொல்லல.. அது.. அதுக்கு எல்லாம் நிறைய முன்னெச்சரிக்கையா பாதுகாப்பா இருக்குற மாதிரி மாத்திரை எல்லாம் இருக்காமஏ.. அது மகிக்காகிட்ட இருந்து  வாங்கிக் கொடுத்தாங்க. அப்புறம் ஆம்பளைங்க பயன்படுத்துற மாதிரியும்..” என அடுத்து அவள் என்ன சொல்வாள் என யூகித்து, தன்மேல் சாய்ந்திருந்தவளைப் புரட்டி, பேசிய இதழை, தன்னிதழ் கொண்டு பூட்டியிருந்தான்.

 

அவள் திமிறத் திமிற ஒரு முத்தம் சில நிமிடங்களில் திமிறலை விட்டவள், அவனை நோக்கி “ஒரு முத்தம் கூட கொடுக்கத் தெரியல. சண்டக்காரன் மாதிரி நடந்துக்குறீங்க. முத்தம் கொடுக்கச் சொன்னா கடிச்சு வைக்குறீங்க.. நீங்கல்லாம் என்ன டவுன்ல இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டீங்களோ.. தெரியல..” என  பரிகசித்தபடியே அவனை சராமாரியாக அடிக்க, 

 

“ஒ.. எனக்குத் தெரியாது.. உனக்குத்தாண்டி இந்த மாமவைப் பத்தி தெரியாது. முத்தம் கொடுக்க ஆரம்பிச்சா கமல்ஹாசனுக்கே டஃப் கொடுப்பேன். அது போகப்போகத் தெரிஞ்சிக்கோ. இப்போ சொல்லு உனக்கு எப்படித் தெரியும் இதெல்லாம். அதுவும் முத்தம் கொடுக்குறதைப்பத்தி இவ்வலவு டீடைலா சொல்ர..” என சந்தேகமாகப் பார்க்க

 

“ஹான்… மகிக்கா படம் போட்டு…” என் முடிக்க விடவில்லை. “என்னது இதையும் படம் போட்டுக் காட்டினாளா..? என்னடி சொல்ற தெளிவா சொல்லு..” அரண்டு போன குரலில் கேட்க,

 

“அடச்சாமி… அது அப்படி இல்ல.. மகிக்கா ஒரு நாள் படம் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ நான் வந்தேன். நல்லாருக்கும் உட்காரு பார்க்கலாம் சொன்னாங்க. ஆனா என்ன பேசினாங்க.. அது என்ன மொழி எதுவும் புரியல.. அந்தப் படத்துல தான் ரெண்டு முத்தம் கொடுப்பாங்க.. அதைப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்…” என்றதும்,

 

“ஷப்பா… ஒரு நிமிஷம் நான் கூட பயந்தே போயிட்டேன்…” என பெருமூச்சு விட, “உங்கப்புத்தி போகுது பாரு ச்சே..” என அவனை விட்டு விலக முயல, அவளைப் போக விடாமல் தடுத்து தன் மேலேப் போட்டவன், “௳அத்திரை எல்லாம் போடக்கூடாது சரியா..? அது உடம்புக்கு கேடு.. இதுக்குத் தான் அந்த அரை டாக்டர் கூட சேராதன்னு சொன்னேன் கேட்டியா…? இரு அவக்கிட்ட பேசும் போது உண்டு இல்லைன்னு பன்றேன்…” எனக் கோபமாகப் போல் பேச,

 

“அய்யோ அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க. அக்கா இப்போ மாசமா இருக்கும் போது யாரும் கடுசா ஒரு வார்த்தைக் கூடப் பேசக்கூடாது. அக்காவுக்கும் கஷ்டம், வயித்துல இருக்குற பாப்பாவுக்கும் ஆகாது.. அப்படி நீங்க அவுகள எதாச்சும் திட்டினா, நான் உங்களோட பேசமாட்டேன்..” என முறுக்க,

 

“ஹா.. ஹா.. அடேங்கப்பா பாசக்காரிதான். ரொம்பத்தான் பன்றடி.. உங்க மகிக்காதான் முக்கியமா உனக்கு..? அவளுக்காக நீ என் கூட சண்டை போடுவியா..?” என அவளைச் சீண்ட

 

“ம்ம்ம்.. ஆமாம்.. அவங்கதாஅனெ நாம சேர முக்கியக் காரணம். மகிக்காவும் மாமாவும் முயர்சி செய்யலன்னா இப்போ நாம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்துருக்க முடியுமா..? நான் கிடைச்சது உங்களுக்கு வேணும்னா சாதாரணமா தெரியலாம். ஆனா நீங்க எனக்கு கிடைச்சது வரம். வரம் வாழ்க்கையில் ஒரு தடவை தான் கிடைக்கும். அந்த வரம் கிடைக்க உதவி செய்தவங்களை எந்த வகையிலும் கஷ்டப்படுத்தவோ, காயப்படுத்தவோ மறந்துடவோ கூடாது. அதை என் உயிர் போறவரைக்கும் நான் செய்ய மாட்டேன்..” எனத் தெளிவாகப் பேசினாலும், கண்கள் லேசாக கலங்கியிருந்தது. 

 

அவளை அணைத்திருந்தவன் ஆறுதலாக முதுகை வருடியபடியே சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு “எனக்குத் தெரியும் கண்ணம்மா.. உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதா..? நான் சும்மா உன்னை சீண்டினேன்..” என்று சமாதானம் செய்துவிட்டு, “ஆனலும் என் பொண்டாட்டிக்கு எவ்ளவு பெரிய மனசு.. சரி அதை விடு.. மாத்திரை போடக்கூடாது சொன்னேன்ல.. அடுத்து என்ன செய்யலாம்..” என அவன் காரியத்திலேயேக் கண்ணாக கேட்க,

 

“ஹான்.. போங்க நீங்க, என்னைச் சும்மா சும்மா சீண்டுறீங்க, எனக்குத் தெரியாது..? ஆனா உங்களுக்குத் தெரியும்னு எனக்குத் தெரியும். நீங்க என்னமோ பண்ணுங்க. எனக்குத் தூக்கம் வருது…” என அவன் அசந்த நேரம் பார்த்து தள்ளீவிட்டு, போர்வையில் தன் உடலை புகுத்தி மெத்தையில் ஒரு ஓரமாய் படுக்க, 

 

அதைப் பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் குளியலறை நோக்கிச் செல்ல, அவனைப் பார்த்துத் தோளைக் குலுக்கியபடி கண்களை மூட, சில நிமிடங்கள் கழித்து தன் போர்வைக்குள் கணவனின் வாசமும், வெற்று முதுகில் அவனது சுவாசமும், சட்டென்று உடல் சிலிர்க்க, வேகமாகத் திரும்பியவளை அதற்காகவேக் காத்திருந்தவன் போல, திரும்பியவளின் கால்கள் இரண்டையும் தன் கால்களுக்குள் கொண்டு வந்து, அவள் திமிறாதவாறு இறுக்கிக் கட்டிக் கொண்டான். 

 

பிறகு கரங்கள் இரண்டையும் தனக்குப் பின்னால் போட்டவன் முகத்தைத் தனக்கு அருகே இழுத்து கோபமாக முறைத்த விழிகளில் மென்மையாக ஒரு குட்டி முத்தம். அடுத்து கோபத்தில் சிவந்திருந்த கன்னங்கள் ஒவ்வொன்றிலும் ஒருக் குட்டி முத்தம். அடுத்து முனுக்கென்று கோபத்தில் துடிக்கும் நுனி மூக்கில் ஒரு குட்டி முத்தம். அடுத்து கீழ் நாடியில் ஓர் முத்தம்.. சற்று மேலே அவனது உயிரைக் குடிக்கும் அவளது தேனிதழ்கள். 

 

கணவனின் முத்த தாக்குதலில் தளர்ந்து, மயக்கத்தில் லேசாக பிளந்த இதழ்களைச் சுற்றி மென்மையாக குட்டி குட்டி முத்தங்களை வைக்க, அவள் உடல் மொத்தமும் தளர்ந்தது. ஒரு கரமோ அவன் கேசத்தை கொத்தாகப் பிடிக்க, மற்றொரு கரமோ அவனது வெற்று முதுகில்  அழுத்தமாகப் பதிய.. இதழ்களோ ‘பாவா’ என உச்சரிக்க, இதற்கு மேல் தாங்கமாட்டள் என்பதை உணர்ந்தவன், அந்த தேனூறும் இதழ்களை அப்படியே சுவைத்திருந்தான். சீண்டலும், சினுங்கலுமாக அவர்களது இல்வாழ்க்கை இனிதே தொடங்க, மேகமோ அவர்களுக்குப் பரிசாக வான்மழையைக் கொட்டி மகிழ்ந்து விடைப்பெற்றது. வான்மழையோடு நாமும் அவர்களை வாழ்த்தி விடைபெறுவொம்..

 

புன்னகை மட்டும்

அணிகலனாய் கொண்டு

புன்சிரிப்பில் மனதை

வெல்லும் பேரழகி நீ

ஒப்பற்ற அழகுக்கு

ஒப்பனைகள் எதற்க்காக

என கூறும் உன் வெட்கம்

போதும் நான் உனக்குள்

கரைந்து போக..

சுபம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!