Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 21.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

 

வெண்மதியை பார்த்ததும் வார்டு பாய் திகைத்தான்.

எனினும் மறைத்துக்கொண்டு “யாரு நீங்க? எதுக்காக இப்படி  வழியில நிக்கிறீங்க? வழிவிடுங்க? போங்க போங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவ முயற்சி செய்தான்.



Advertisement

“நில்லுங்க.” என்று அவள் கூற அவன் திரும்பினான்.

“என்னமா? என்ன வேணும்?”

“எனக்கு இந்த ஹாஸ்பிடல் நம்பர்ல இருந்து ஒரு பொண்ணுக்கு கால் பண்ணனும்.” என்று கேட்க அவன் திருதிருவென்று விழித்தான்.

Advertisement

“என்ன என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினான்.

Advertisement

“பத்து நிமிஷம். என் கூட வெளிய வாங்க. உங்ககிட்ட பேசணும்.”

“நான் எதுக்கு உங்க கிட்ட பேசணும்? அதெல்லாம் வர முடியாது. எனக்கு நிறைய வேலை இருக்கு.”

“அப்படியா? அப்போ போலீசை கூட்டிக்கிட்டு வந்தா தான் வருவியா?” “என்ன மிரட்டலா?”

Advertisement

“இல்லை உண்மையா தான் சொல்ற.  இப்போ நீங்க நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லலைன்னா. நான் போலீசை கூப்பிட வேண்டியிருக்கும். பத்து நிமிஷம் வெளிய போகலாமா? இல்ல நான் போய் ஹாஸ்பிடல் எம்டி கிட்ட பேசணுமா?” என்று மிரட்டலாக கேட்டாள்.

 

அவள் அவன் “அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க. வாங்க. என்ன கேக்கணும் உங்களுக்கு? கேளுங்க.” என்று அவளை வெளியே அழைத்து  சென்றான்.

“கதிர்வேலன் உங்களுக்கு  தெரியுமா?” என்று கேட்டாள் அவன் பதில் பேசாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

“உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும். நீங்களும் அவனும் எங்க வீட்டில பேசிட்டு இருந்ததை நான்  கேட்டேன்.” இதைக் கேட்டதும் அவன் முகத்தில் பயம் தெரிந்தது.

“எனக்கு தெரிய வேண்டியது ஒன்னே ஒன்னு தான். கதிர்  உன்கிட்ட பணம் கொடுத்து எனக்கு கால் பண்ண சொன்னானா? சொல்லு.” என்றாள் அவள்.

அவன் அமைதியாக இருக்க “அவள் உண்மைய சொன்னா உன்னை விட்டு விடுவேன்.” என்று கூற

அவன் “ஆமாம்” என்றான்.

“எதுக்கு?” என்று  கேட்டாள்.

“உங்களுக்கு வேலை கிடைக்க கூடாது என இப்படி பண்ண சொன்னாரு. இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க.” என்று அவன் கூற

அவளுக்கு அப்போதுதான் இவனிடம் இன்னும் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்தது. ஆனால் என்னவென்று அவளால் ஊகிக்க முடியவில்லை.

“எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டேனா உன்னை நான் விட்டு விடுவேன். கதிர்வேலன் உனக்கு கொடுக்க வேண்டிய பணமும் உனக்கு கிடைச்சுடும். இல்லைனா நான், நீ என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன்னு போய் அண்ணன் கிட்ட சொல்லிடுவேன். அப்படி நான் சொல்லிட்டா உனக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காது. எப்படி வசதி?” என்று கேட்டாள்.

அதற்கு அவன் “அப்படி எல்லாம் பண்ணிடாத. இந்த பணத்தை நம்பிதான் என்னோட பையன் படிப்பு இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் எனக்கு பணம் கிடைச்சிடும். அதுக்கப்புறம் நீ எதை வேணாலும் சொல்லிக்கோ. எனக்கு கவலை இல்லை.” என்று அவனே எடுத்துக் கொடுக்க

இவள் போனை எடுத்தாள்.

“நான் கதிர்வேலனக்கு கால் பண்றேன்.” என்று கதிர்வேலன்  எண்ணினை எடுத்தாள்.

“வேணாம். நானே சொல்லிடறேன். உங்களுக்கு எப்பவுமே வேலை கிடைக்க கூடாதுன்னு கதிர்வேலன் இன்னொருத்தர்  மூலமா என்கிட்ட பேசி என்னை கால் பண்ண சொன்னாரு. இதுக்கு முன்னாடி உங்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை கூட உங்களுக்கு கிடைக்காம பண்ணது கதிர்வேலன் தான்.” என்று அவன் கூற வெண்மதிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

“அதை எப்படி அவன் பண்ணினான்?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததை உங்ககிட்ட சொல்றேன். நிஜமாலுமே எனக்கு இவ்வளவு தான் தெரியும். இது நான் பண்ற என்னோட வேலை மேல சத்தியம்.” என்று அவன் உறுதியாகக் கூறினான்.

“என்னை விட்டுடுங்க நான் பிள்ளை குட்டிக்காரன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கதிர்வேலன் அவனுக்கு போன் செய்தான்.

“எங்கடா இருக்க? பணம் எடுத்துட்டு வந்துட்டேன். சீக்கிரம் வா. கொடுத்துட்டு நான் என்னோட வேலையை பார்க்கணும்.” என்று அவசரப்படுத்தினான்.

“நீங்க இப்படியே போயிடுங்க. முன்னாடி பக்கம் போகாதீங்க. கதிர்வேலன் வந்துட்டா. தயவுசெஞ்சு போயிடுங்க. என்னோட குழந்தைங்க படிக்க  எனக்கு இந்த பணம் வேணும். இனிமே இந்த மாதிரி தப்பு தண்டா பண்ண மாட்டேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடுங்க.” என்று கெஞ்சினான்.

“சரி  உன்  குழந்தை படிப்பு என சொல்றதால உன்னை விட்டுட்டு போறேன்.” என்று கூறிவிட்டு

அவனுக்கு தெரியாமல் அங்கு ஒரு மூலையில் ஒளிந்து கொண்டாள். கதிர்வேலன் வந்து இவனிடம் பணத்தை கொடுப்பதை வீடியோ மற்றும் போட்டோ  எடுத்துக்கொண்டு வீடு வந்தாள்.

இப்படியே  நாட்கள் சென்றன. அன்று வழக்கம் போல வேலை முடிந்ததும் வீடு திரும்பி கொண்டிருந்தாள். பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு ஆட்டோ தாறுமாறாக  ஓடிக்கொண்டிருந்தது. அந்த சாலையில் நடந்து கொண்டிருந்த இருவர் அந்த ஆட்டோவை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் “என்ன இப்படி கண்ணு மண்ணு தெரியாம  ஆட்டோ ஓட்டிக் கிட்டு இருக்கா?”

மற்றொருவர் “தண்ணி அடிச்சு இருக்கான்னு நினைக்கிறேன். இவனுங்க தண்ணி அடிச்சிட்டு  ஓட்டிட்டு ரோட்ல ஒழுங்கா போற மத்த வண்டி மேல மோதி ஆக்சிடென்ட் பண்ண வேண்டியது.”

அதற்கு அவர் கூட வந்த  நபர்

“ஆமாம் எத்தனை சட்டம் வந்தாலும் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க. இவனுங்களால இவனுங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை. நம்மள மாதிரி அப்பாவிகளுக்கும் ஆபத்துதான். இவன் யார் மேல போய் மோத போறானோ!” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த ஆட்டோ எதிர்திசையில் வந்துகொண்டிருந்த ஒரு  காரை நோக்கி வேகமாக வர அந்த டிரைவர் அந்த மோதலை தவிர்ப்பதற்காக வண்டியை வளைக்க அங்கு இருந்த ஒரு மரத்தில்  மோதினான்.

ட்ரைவர் தலையில் நன்கு  அடிபட்டு ரத்தம் வழிந்தது. அவன் மயக்கமானான். அந்த சாலையில் இருந்த  இருவரும் அந்த காரை நோக்கி வந்தனர். வெண்மதியும் வந்தாள்.  அந்த காரில்  இருந்த பெண்மணியின் தலையில் அடிபட்டு இருந்தது. ஜன்னல் உடைந்திருந்தது. இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த பெண்மணியை வெளியில் தூக்கி வந்தனர். அவர் முகத்தைப் பார்த்ததும் வெண்மதி அதிர்ந்தாள். அது அன்று அவளை பெண்பார்க்க வந்த வடிவுக்கரசி. எதிரில் வந்த ஒரு டாக்ஸியை நிறுத்தி டிரைவர், வடிவுக்கரசி இருவரையும் அதில் ஏற்றினர்.

மற்ற இருவரும் “ரெண்டு பேருக்கும் நல்லா அடி பட்டிருக்கு. போலீஸ் கேஸ் ஆயிடும். நாங்க வரல.” என்று நழுவி விட.

வெண்மதிஅந்த இருவரையும் ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றாள். அவர்கள் இருவரையும் அட்மிட் செய்துவிட்டு வடிவுக்கரசி மொபைல் எடுத்து அவருடைய மகனுக்கு போன் செய்தாள்.

அடுத்த பத்து நிமிடத்தில்  அவர் மகன் அங்கு வந்து சேர்ந்தான்.

இவளை பார்த்ததும் “அம்மா எங்கே?” என்று பதட்டமாக விசாரித்தான். அம்மா உள்ளே இருக்காங்க.

“டாக்டர்ஸ் அவங்களை பாத்துட்டு இருக்காங்க.” என்று கூறும்பொழுது மருத்துவர்கள் வெளியே வந்தனர்.

“சார் எங்க அம்மா எப்படி இருக்காங்க?” என்று விசாரித்தான்.

“பெரிய அடி எதுவும் இல்லை. லேசான காயம் தான். கொஞ்சம் ரத்தம் போயிருக்கு. நாளைக்கு நீங்க டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்.” என்று கூற சற்று நிம்மதி ஆனான் அவன்.

“டிரைவர் எப்படி இருக்காரு?” என்று கேட்டான்.

“அவருக்கு கொஞ்சம் பலமான அடி தான். இருந்தாலும் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை. தலையிலும் கையிலும் அடிபட்டு இருக்கு.  தலையில் ஸ்டிசெஸ்  போட்டிருக்கிறோம். அது சீக்கிரம் சரியாயிடும். கையில பிராக்சர் ஆகி இருக்கு. அது சரியாக 3 மாசம் ஆகும்.” என்று கூறினார். உள்ளே சென்று தாயைப் பார்த்தான்.  அவர் சோர்வாக தெரிந்தார். இவனைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தார்.

“என்னம்மா இப்போ எப்படி இருக்கீங்க?” என்று சிறிது சோகம் காட்டி அக்கறையாக விசாரித்தான்.

அதற்கு அவர் “இப்போ பரவாயில்லை.”. என்று கூறினார்

“டிரைவர் எப்படி இருக்கிறார்?” என்று அந்த நிலையிலும் டிரைவரை பற்றி விசாரித்தார் அந்த வடிவுக்கரசி.

இதனை கவனித்த வெண்மதிக்கு அவர் மீது மதிப்பு வந்தது.

“அவருக்கு கொஞ்சம் பலமான அடி தான். இருந்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.”

“சரிப்பா. அவருக்கு தேவையான செலவை நாமதான் பார்த்து செய்யணும்.”

“கண்டிப்பா செய்யலாம் அம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று இவன் கூற அவர் “வசந்த் வெண்மதி தான் இங்கே எங்களை கூட்டிட்டு வந்தா. இவதான் ஹாஸ்பிடல் வரைக்கும் வந்து இங்கு இருந்த டாக்டர் கிட்ட பேசி எங்க ரெண்டு பேரையும் அட்மிட் பண்ண வச்சா.”

“ஓ அப்படியா?” என்று கேட்டான் அந்த வசந்த்.

“சரிங்க மா. நான் அவங்க கிட்ட பேசுறேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.” என்று தாயை கைத்தாங்கலாக மீண்டும் படுக்கையில் படுக்கவைத்தான் வசந்த்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!