Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Nimir Episode 21.2

அவர் படுத்ததும் பெயின் கில்லர் போட்டிருந்ததால் அப்படியே உறங்கினார். வசந்த் வெளியில் வந்தான்.

அவனது தாய் அவனை கூப்பிட்டதும் தான் வெண்மதிக்கு அவனது பெயர் தெரிந்தது. லட்சுமி வெண்மதி இடம் பெண் பார்க்க வந்திருந்த இவனைப் பற்றி விபரங்கள் கூற வரும் பொழுது அவள் வேண்டாமென்று தவிர்த்துவிட்டாள்.

 

“ரொம்ப தேங்க்ஸ் வெண்மதி. இவ்வளவு தூரம் எங்க அம்மாவை கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் ரொம்ப சாரி. நான் அன்னிக்கு அப்படி நடந்து இருக்க கூடாது.” என்று பணிவான குரலில் மன்னிப்பு கேட்டான்.



Advertisement

“அவள் இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம்” என்று புன்னகையுடன் பதிலளித்தாள்.

“ சரி நான் கிளம்பறேன்.” என்று அவள்  கூறி விட்டு சென்றாள். வீட்டிற்கு வந்து நடந்ததை கூறினாள் வெண்மதி.

இதனை கேட்ட லட்சுமி “நல்ல காரியம் பண்ண மா.” என்று பாராட்டினார். “நாளைக்கு நான் அவங்களைப் போய் பார்த்துட்டு வரேன்.” என்று கூறினார் லட்சுமி .

Advertisement

“சரிமா ஈவினிங் போகலாம். நானும் உங்க கூட வர்றேன்.” என்று கூறினாள் வெண்மதி. சொன்னபடியே அடுத்த நாள் இருவரும் சென்று வடிவுக்கரசியை ஹாஸ்பிட்டலில் பார்த்தனர். இவர்கள் இருவரையும் பார்த்த வடிவுக்கரசி எழுந்து அமர்ந்து நடந்ததை எல்லாம் மனசுல வச்சுக் காம என்னை பார்க்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.” என்று கூறினார்.

Advertisement

”அதெல்லாம் நாங்க அப்பவே மறந்துட்டோம். நீங்களும் இதையெல்லாம் மறந்துடுங்க. உடம்பை பாத்துக்கோங்க.”

“உங்க பொண்ணு வெண்மதிதான் எங்களை இங்கே கூட்டிட்டு வந்தா. உங்க ரெண்டு பேருக்கும் பெரிய மனசு.” என்று வெண்மதியின் கையை பிடித்தபடி கூறினார் வடிவுக்கரசி.

மேலும் அவரே தொடர்ந்தார்.

Advertisement

“நான் உங்களை கோவிலில் பார்ப்பேன். உங்க கிட்ட எப்படி பேசுவது என்று தயங்கிட்டு இருந்தேன். இப்போ நீங்களே என்னை பார்க்க வந்துட்டீங்க. கெட்டதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கு.”

“ என்கிட்ட பேசவா தயங்கிட்டு இருந்தீங்க?  நீங்க எப்போதும் போல என்கிட்ட பேசலாம். நான் அதை அப்பவே மறந்துட்டேன். நாம பழையபடி  நட்போடு பழகலாம்.” என்று கூறி விட்டு இருவரும் வீடு திரும்பினர்.

 

அவள் சம்பள நாளுக்காக காத்திருந்தாள். அவளுடைய சம்பளம் அவள் போட்டிருக்கும் திட்டத்திற்கு பத்தாது. எனவே கவிதாவுக்கு போன் செய்தாள்.

“கவி எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.”

“என்ன மதி எந்த பில்டப்பும் இல்லாம டைரக்டா கேளு. உனக்கு ஹெல்ப் பண்ணாம வேற யாருக்கு ஹெல்ப் பண்ண போறேன்?”

“எனக்கு பணம் வேணும்.”

“எவ்ளோ வேணும்?”

“ ஐம்பதாயிரம் வேணும்.”

“சரி எங்க அப்பா கிட்ட சொல்றேன். வந்து வாங்கிக்கோ மதி.” என்று கவிதா சாதாரணமாக கூற .

எதற்கு என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் வாங்கிக்கோ என்று கூறும் அவளுடைய நட்பினை கண்டு  நெகிழ்ந்தாள் வெண்மதி. எனினும் “எதுக்குன்னு கேக்க மாட்டியா?”

“நான் எதுக்கு கேக்கணும் மதி?”

“நீ என் கிட்ட கேட்டு இருக்க. நான் உனக்கு தர்றேன் அவ்வளவுதான். நான் அப்பா கிட்ட சொல்லிடறேன். நீ எப்ப வேணாலும் வாங்கிக்கோ.”

“எனக்கு அடுத்த வாரம் வேணும் கவி. நீ கேட்கவில்லை என்றாலும் நான் எதுக்குன்னு உன்கிட்ட சொல்ல தான் போறேன் “. என்று தன்னுடைய திட்டத்தினை அவளிடம் கூறினாள் வெண்மதி. அதனை கேட்ட கவிதா “இதை நீ எப்பயோ பண்ணி இருக்கணும். சரி இப்பயாவது இந்த முடிவு  எடுத்தியே அதுவே சந்தோஷம்.”

“இல்லை கவி. எனக்குன்னு ஒரு வருமானம் இருந்தா தான் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகும்.”

“அதுவும் கரெக்டுதான்.  ஆனா அதுக்கு ஐம்பதாயிரம் போதுமா?” “இப்போதைக்கு போதும் கவி. தேவைன்னா திரும்பக் கேட்கிறேன்.”

“சரி நான் அப்பா கிட்ட சொல்லிடறேன்.”  என்று கூறிவிட்டு போனை வைத்தாள் கவிதா.

 

அவள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது. அன்றுதான் சம்பள நாள். முதல் மாத சம்பளம்  அவளுக்கு கிடைத்தது.

வீடு வந்த வெண்மதி தாயிடம் வந்தாள்.

“அம்மா நான் இன்னைக்கு ஒரு முக்கியமான முடிவு எடுக்க போறேன். அதுக்கு உங்க ஆசிர்வாதம் எனக்கு முக்கியம். என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்று அவர் காலில் விழுந்தாள்.

‘லட்சுமி என்ன சொல்றா இவ’ என்று யோசித்தவாறே அவளை ஆசீர்வதித்தார்.

“அம்மா நீங்க என் கூட வாங்க.” என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றாள்.

ஹாலில் இருந்த சோபாவை காட்டி “இதில் உட்காருங்க.” என்று அவள் கூற அவர்  யோசித்தபடியே உட்கார்ந்தார்.

எதிரில் இருக்கும் சோபாவில் கதிர்வேலன், லலிதா உட்கார்ந்திருந்தனர்.

வெண்மதி லட்சுமியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

“அம்மா எனக்கு  பாண்டிச்சேரியில் எஸ். ஆர். டெக்னாலஜியிலிருந்து இன்டர்வியூ கால் வந்திருக்கு. நாளைக்கு நான் அந்த கம்பெனிக்கு போறேன். இந்த வேலை எனக்கு கண்டிப்பா கிடைச்சிடும்.” என்று கதிர்வேலன் லலிதாவை கவனித்தபடியே கூறினாள்.

இதனை கேட்ட கதிர்வேலன், லலிதா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் பார்வையாலே பேசிக் கொண்டனர்.

பிறகு கதிர்வேலன் மொபைலை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றான்.

“யாருக்கோ போன் செய்தான்.” வெண்மதி அவனுக்கு தெரியாமல் அவனை பின்தொடர்ந்தாள்.

அவன் “எஸ் ஆர் டெக்னாலஜி இல் யாரையாவது உனக்கு தெரியுமா?” என்று கேட்டான்.

அந்தப்பக்கம் என்ன கூறினார்களோ தெரியவில்லை.

இவன் “அடச்சே”  என்று கை முட்டியால் அங்கு இருந்த மரத்தினை குத்தினான்.

அப்பொழுது அவன் முன்பு சென்று நின்றாள் வெண்மதி.

“என்ன அண்ணா என்ன பிரச்சனை?” என்று விசாரித்தாள். இவளை  அந்த இடத்தில் எதிர்பாராத கதிர்வேலன் அதிர்ச்சியானான்.  பின்பு சுதாரித்துக் கொண்டு

“எனக்கு என்ன பிரச்சனையா இருந்தா உனக்கு என்ன? உன் வேலையை பாரு.” என்று அதட்டினான்.

அவள் “இல்ல போன்ல எஸ். ஆர். டெக்னாலஜி பத்தி நீ பேசுனது என் காதுல விழுந்துச்சு. அதனாலதான் கேட்டேன்.” இதை கேட்டவன் தடுமாறினான். பின் சமாளித்துக் கொண்டு

“நீ நாளைக்கு அந்த கம்பெனிக்கு தானே இன்டர்வியூ போற. அதான் எப்படியாவது உனக்கு அந்த வேலை கிடைக்க வழி செய்யலாம்னு யோசிச்சேன். அதான் அந்த கம்பெனியில் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு என்னோட பிரண்டுக்கு கால்  பண்ணினேன்” என்று பொய் உரைத்தான்.

“போன் எனக்கு வேலை கிடைக்கணும்னு  பண்ணீங்களா? இல்லை எனக்கு வேலை கிடைக்க கூடாதுன்னு  பண்ணீங்களா?” என்று அவள் கைகளை கட்டியவாறு நிதானமாக கேட்க

அவன் அதிர்ந்தான். எனினும்

“என்ன உளர்ற நான் ஏன் அப்படி பண்ண போறே?”

“அதை நீ தான் சொல்லணும்.”

“என்ன சொல்லணும்?” என்று அவன்  அதட்டலாக கேட்க

அவள் தன் மொபைலில் இருந்த  அந்த வார்டு பாய் போட்டோவை  காண்பித்தாள்.

“இது யாருன்னு தெரியுதா?” என்று அவன் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கவனித்தபடி கேட்டாள்.

ஒரு கணம் அவன் முகத்தில் லேசான பயம் தெரிந்தது. அடுத்த கணமே அந்த பயம் மறைந்தது.

“யாருன்னு எனக்குத் தெரியாது.” என்று கூறிவிட்டு அங்கிருந்து நழுவ பார்த்தான்.

“எங்க போறீங்க இருங்க. இன்னும் நான் கேட்க வேண்டியது நிறைய இருக்கு.”

“உனக்கு வேற வேலை கிடையாது. எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று அவன் கூற

அவள் மொபைலில் இருந்து அடுத்த போட்டோவை காண்பித்தாள்.

அதில் அவன் அந்த வார்டு பாயிடம் பேசிக்கொண்டிருந்தான் . அந்த போட்டோவை பார்த்ததும் அவன் விழித்தான்.

“ தெரியாதுன்னு சொன்னீங்க. ஆனா  அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க.” என்று அவன் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள்.

“அது… அது… வந்து…” என்று அவன் பேச்சு வராமல் தவித்தான்.

“நீங்க எப்போ அந்த ஹாஸ்பிடலுக்கு போனீங்க ?”

எப்படி சமாளிப்பது என்று குழம்பிக்கொண்டிருந்த கதிர் வேலனுக்கு

அவனுடைய மேனேஜர் அதே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்தது ஞாபகம் வந்து கைகொடுத்தது.

“என்னோட மேனேஜருக்கு  ஹார்ட் ஆபரேஷன் நடந்தது. அப்போ அவரைப் பார்க்கப் போனேன். எந்த ரூம்ல அட்மிட் ஆகி இருக்காருன்னு விசாரிப்பதற்காக பேசி இருப்பேன். எனக்கு ஞாபகம் இல்லை.”

 

“ஓ அப்படியா?” என்று மனதில் குறித்துக் கொண்டாள் வெண்மதி.

 

“இங்க பாருங்க.” என்று அடுத்த வீடியோவை காட்டினாள்.

அதில் அவன் அந்த வார்டு பாய்க்கு பணத்தை கொடுத்துக்கொண்டிருந்தான்.  அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அந்த வீடியோவை பார்த்த கதிர்வேலனுக்கு வாயை அடைத்தது.

“என்ன அண்ணா எதுவுமே பேச மாட்டேங்கிற? என்ன பேச்சு வரலையா?” என்று கேட்டாள் வெண்மதி.

அவன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தான்

“சொல்லுங்க. அவனை எனக்கு தெரியாதுன்னு சொன்னீங்க.  பணம் கொடுத்து இருக்கீங்க.

கம்ப்யூட்டர் இன்ஜினியர் எப்போ கந்துவட்டி காரனா மாறினீர்கள்?”

வியர்வையைத் துடைத்தபடி

“அது அது…. அந்த வார்டு பாய் பையனை படிக்க வைக்க பணம் வேணும்னு சொன்னான். அதனால அந்த பணம் கொடுத்தேன்.” என்று தட்டுத்தடுமாறி சொல்லி முடித்தான்.

“நீங்க சொன்னது உண்மை இல்லை என்று எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும். எனக்கு உண்மை வேணும். இல்லைன்னா…” என்று அவள் கூற

அவன் “இல்லைன்னா என்னடி பண்ணுவ?” என்றான் அதட்டலாக.

அவள் சற்றும் தளராமல்

“இந்த வீடியோவை உங்க ஆபீஸ்க்கு அனுப்புவேன். முக்கியமா மேனேஜருக்கு அனுப்புவேன்.”

கதிர்வேலன் புரியாமல் அவளை கவனிக்க அவள் தொடர்ந்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!