Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya Thirudan Episode 3.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.  இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நெற்றியில் தெரிந்த தழும்பினை பார்த்த மதுமிதா அவனை நினைத்துக் கொண்டாள்.

 

“முருகா எப்படியாவது அந்த திருடனை கண்டுபிடிச்சு என் கையில கொடுத்துடு.”



Advertisement

என்று இருகைகளையும் கூப்பி முருகனை வேண்டிக்கொண்டாள்.

 

அறையைவிட்டு எழுந்து அவர்கள்  வீட்டின் தோட்டத்திற்கு சென்றாள்.  அங்கு போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். மாலை நேரத்தில் நித்தியமல்லி வாசம் அந்த தோட்டத்தை நிறப்பி ஒரு இனிமையான சூழலை உருவாக்கி இருந்தது.

Advertisement

அந்த வாசத்தை அனுபவித்தபடி சிறிது நேரம்கண்மூடினாள்.

Advertisement

 

அப்பொழுது அவள் கண்முன் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தது ஞாபகம் வந்தது.

 

Advertisement

தேனியில் இருந்த அவளது தோழியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  திருமணத்திற்கு சென்று விட்டு அப்படியே அந்த ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று மதுமிதாவும் அவளது தோழிகளும் திட்டமிட்டனர்.

 

அங்கு சென்ற மதுமிதா அந்த ஊரின் பசுமையை ரசித்தாள்.  பச்சை பசேல் என்று ஊர் மிகவும் அழகாக இருந்தது

இயற்கை அன்னையின் எழில் அவளை மிகவும் கவர்ந்தது. அது ஒரு அழகிய கிராமம்.  மாசு அற்ற காற்றின் ஈரப்பதம், செடி கொடிகளின் பசுமை எல்லாமே அவளுக்கு புதிதாக இருந்தது. இரண்டு நாட்கள் ஊரை சுற்றிப் பார்த்தனர்.

அன்று கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மணப்பெண் திருமணத்தை வைத்துக் கொண்டு வெளியில் சுற்றக் கூடாது என்பதனால் அவள் மட்டும் இவர்களுடன் வரவில்லை.

 

அப்பொழுது அங்கு ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. அதில் மாங்காய்கள் பெரிதாகி பழுக்க தொடங்கி இருந்தது.  ஒருசில மாங்காய்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது.

 

இதனை பார்த்த அந்தப் பெண்கள் கூட்டத்திலிருந்த ஒருத்தி

 

“மது அங்க பாரு. மாங்காய் எவ்வளவு அழகா இருக்கு! எனக்கு பறித்து சாப்பிடனும் போல இருக்கு.” என்று  மாங்கையை பார்த்து ஜொள்ளு விட்டபடி கூறினாள் மதுமிதாவின் தோழிகளில்  ஒருத்தி அவந்திகா.

 

இதனை கேட்ட மதுமிதாவின் நெருங்கிய தோழி  கீதா,

“இது யாரோட தோப்புன்னு நமக்கு தெரியல. நாம உள்ள போனா ஏதாவது பிரச்சனை ஆகப்போகுது.” என்று எச்சரித்தாள் .

 

“கீதா நீ தேவையில்லாம பயப்படுற இந்த வேலியை தாண்டி ஒரு அடி எடுத்து வச்சா போதும். நாம மாங்காயைப் பறித்து விடலாம். அவ்ளோ கிட்ட இருக்கு. அதுக்கு எதுக்கு பயந்துகிட்டு?” என்று  அவந்திகா கூறினாள்.

 

“சரி பேசாம ஒன்னு பண்ணலாம். அந்தப் பக்கமா போய் தோப்புல யாராவது இருக்காங்களான்னு பார்த்து அவங்க கிட்ட கேட்டுட்டு நாம மாங்காய் பறித்து சாப்பிடலாம். வேணும்னா காசு குடுத்துட்டு போகலாம்.” என்று மதுமிதா  யோசனை கூறினாள்.

 

மற்ற தோழியர்கள் அனைவருக்கும் இது சரியாகவே பட்டது. எனவே அனைவரும் ஒத்துக் கொண்டு  அந்த பெரிய மாந்தோப்பின் வேலியை சுற்றி நடந்து முன்புறம் சென்றனர்.

ஆனால் அங்கு எவருமே இல்லை. ஏமாற்றமும் கால் வலியும் சேர்ந்து கொண்டது.

ஏற்கனவே சுற்றித்திரிந்து களைத்து போய் இருந்தனர்.

 

“சரி வேண்டாம் விடுடி போகலாம்.” என்று கீதா கூறினாள்.

 

ஆனால் அவந்திகா விடுவதாக இல்லை.

 

“ம்ஹூம்  எனக்கு இன்னைக்கு மாம்பழம் வேணும். அவ்வளவுதான்.” என்று குழந்தை போல அடம் பிடித்தாள்.

 

எனவே மதுமிதா

“சரி வாங்க நாம போய் ஆளுக்கு ஒரு மாம்பழம்  பறித்து எடுத்துட்டு வரலாம்.” என்று கூற  மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

 

ஐந்து பெண்களும் அந்த வேலியை தாண்டி அந்த பக்கம் குதித்தனர்.

 

பிறகு பக்கத்தில் இருந்த மரத்தில் இருந்த மாம்பழத்தை பறித்து தங்களது கைப்பையில் போட்டுக் கொண்டனர்.

 

அப்பொழுது அவந்திகா.

 

“என்னடி இந்த தோப்பில் யாருமே இருக்குற மாதிரி தெரியல. நாம இன்னும் கொஞ்சம் உள்ளே போய் இன்னும் ரெண்டு மாம்பழம் பறிக்கலாமா?” என்று கேட்டாள்.

 

“வேண்டாம் அவந்திகா போதும். திரும்பிப் போகலாம்.” என்று அவந்திகாவின் கையை பிடித்து அந்தப் பக்கம் திருப்பினாள் கீதா.

 

ஆனால் அவந்திகா

“ம்ஹூம். நீங்க எல்லாம் போங்க.  நான் இன்னும் கொஞ்ச தூரம் போய் அதோ அந்த மரத்தில் தெரியுது இல்லையா? ஒரு பெரிய அழகான மாம்பழம். அதை பறித்து  எடுத்துட்டு வர்றேன்.” என்று கூறியவள் தோழியர்கள் எதுவும் பதில் கூறும் முன்பே முன்னேறி நடக்கலானாள்.

 

இதனை கண்ட மற்ற  தோழியர்கள் வேறுவழியின்றி

“சரி நம்மளும் போகலாம் வாங்க.” என்று கூறியபடி நடந்தனர்.

ஆனால் அந்த மாம்பழம் அவளுக்கு எட்டவே இல்லை.. எனவே ஒரு கல்லை எடுத்து அந்த மரத்தின் மீது  அவந்திகா அடித்தாள்.

 

அப்பொழுது அந்த மரத்தில் இருந்த ஒரு குருவிக்கூடு கீழே  விழுந்தது. அவந்திகா அதனை அலட்சியப்படுத்தி மீண்டும் அந்த மாம்பழத்தை பார்த்து கல்லெறிந்தாள்.

 

ஆனால் மதுமிதா

“அவந்திகா ஸ்டாப் இட். இங்க பாரு.  குருவிக்கூடு கீழே விழுந்து போய் கிடக்கு.” என்று கோபமாகக் கூறினாள்.

 

“அதுக்கு நான் என்ன பண்றது மது?” என்று சத்தமாக அவளிடம் கேட்டாள் அவந்திகா.

 

அப்போது  அங்கு யாரோ வரும் சத்தம் கேட்டது. அப்போது மற்ற தோழியர்கள்

“யாரோ வருகிற சத்தம் கேக்குது. வாங்கடி ஓடிப் போய்விடலாம்.” என்று கூறியபடி வேலியை  நோக்கி ஓடினர்.

 

ஆனால்  மதுமிதாவுக்கு அந்த குருவியை அங்கே அப்படியே விட்டு விட மனம் வரவில்லை. எனவே அவள் அந்த குருவியை கையில் எடுத்தாள்.

 

இதனை கவனித்த கீதா

“மது என்ன பண்ண போறே?” என்று கேட்டாள்.

 

“நான் இந்த குருவி கூட்டை அந்த மரத்தில் திருப்பி வைக்க போகிறேன்.” என்று கூறிவிட்டு கீதாவின் பதிலை எதிர்பார்க்காமல் மரத்தில் ஏறினாள்.

 

கீதாவுக்கு மதுமிதாவை விட்டுவிட்டு போக மனமின்றி அவளுக்காக காத்திருந்தாள்.

“சீக்கிரம்.” என்று அவளை அவசரபடுத்தினாள்.

 

மதுமிதா தன் கையில் இருந்த குருவி கூட்டை பத்திரமாக அந்த மரக்கிளையில் பொறுமையாக வைத்தாள்.

 

அதேநேரம் கீதா சத்தம் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது இளம் ஆண் ஒருவன் முன் நடந்து வந்து கொண்டிருக்க அவனுக்கு  பின்பு 5 ஆண்கள் கையில் கம்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

 

அவர்களை பார்த்ததும் கீதாவுக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

 

“மது சீக்கிரம் வாடி. குருவி கூட்டை வைத்து விட்டாயா?” என்று பதட்டத்துடன்  கேட்டாள்.

 

அப்போது என்ன நடந்ததோ தெரியவில்லை. இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் வேறு திசையை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். இதனை கவனித்த கீதா  சிறிது நிம்மதி ஆனாள்.

எனினும் மதுமிதாவை பார்த்து “சீக்கிரமா வா.” என்று கையை சைகை காட்டி மெல்லிய குரலில் கூப்பிட்டாள்.

 

மதுமிதா என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அந்த கூட்டினை பத்திரமாக அதே இடத்தில் வைத்துவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்கினாள்.

 

“தேங்க் காட். பேர்ட்ஸ்க்கு ஒன்னும் ஆகல.” என்று திருப்தியுடன் கூறினாள்.

 

“இப்போ நீ வேகமா வரலைனா பிரச்சனை குருவிக்கு இல்லை.  நமக்கு தான்.” என்று கூறி மதுமிதாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேலியை நோக்கி ஓடினால்a கீதா.

 

இருவரும் அந்த வேலியை கடக்கும் வரைக்கும் எவரும் அங்கு வரவில்லை.  அது கீதாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

 

மதுமிதா எதைப்பற்றியும் கவலைப்படாமல்  குருவிகளை காப்பாற்றி விட்ட சந்தோஷத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

 

அந்த இடத்தை விட்டு தூரமாக வந்ததும் தோழியர்கள் ஒரு இடத்தில் நின்றனர்.

 

அப்போது அவந்திகாவை பார்த்து

“இன்னொரு தடவை உனக்கு இது வேணும் அது வேணும்னு கேட்ட உனக்கு அடிதான்.”  என்று கோபமாக  கூறினாள் கீதா.

 

“சாரி டி.  இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல.”  என்றாள் அவந்திகா.

 

“சரி வந்து தொலை.” என்று அவளையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

 

திருமணம்  முடிந்த பிறகு பெண்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் கோவிலில் நடக்கும் திருவிழாவுக்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.  அன்றுதான் தோழியின் திருமணநாள்.

 

பசுமையான அந்த ஊரில் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அந்தப் பெரிய மண்டபமும், அந்த வண்ண பூக்களின் நறுமணமும் பட்டுப் புடவையும் நகைகளும்  ஆக வண்ண உடை அணிந்த தேவதைகள் போல அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த பெண்களும் அந்த இடத்தை சொர்க்கம் ஆகவே மாற்றி இருந்தனர்.

 

அந்த தேவதைகளில் ஒரு மஞ்சள் தேவதையாக வெளிர் மஞ்சள் நிற பட்டுப்புடவையில் தங்கத்தில் வைரக்கல் பதித்த லக்ஷ்மி ஜிமிக்கி, நெக்லஸ் மற்றும் வளையல்களை அணிந்து கொண்டு பார்த்தவர்கள் திரும்பவும் பார்க்கும் அழகில் இருந்தாள் மதுமிதா.

 

திருமணம் கோலாகலமாக நடந்தது. 6:30 மணி முகூர்த்தம் என்பதால் எட்டு மணிக்கு எல்லாம் காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு இருந்தனர். ஐந்து நாற்காலிகளை வட்ட வடிவில் போட்டு அதில் உட்கார்ந்துகொண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மதுமிதா

“எட்டு மணி ஆயிடுச்சு. நாம பிளான் பண்ண மாதிரி பக்கத்தில் நடக்குற திருவிழாவுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்டாள்.

 

“போயிட்டு வரலாம்.” என்றனர் தோழியர்கள்.

 

“சரி.  நான் ரூமுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்.” என்று எழுந்தாள்  கீதா

 

“நான் காலையில் சீக்கிரம் எழுந்து எவ்வளவு நேரம்  செலவு பண்ணி இப்படி டிரஸ் பண்ணி இருக்கேன்.  இந்த டிரஸ்ஸில் திருவிழாவில் ஒரு ரவுண்ட் அடிச்சா தான் எனக்கு திருப்தியா இருக்கும்.” என்று கூறினாள் அவந்திகா.

 

“ஆமாம் அவள் சொல்றது கரெக்டு தான். நாம எல்லாருமே அழகா டிரஸ் பண்ணி இருக்கோம். திருவிழாவுக்கு போய் சுத்தி பார்த்துட்டு இந்த  டிரஸ்ல நிறைய போட்டோஸ் எடுக்கலாம்.” என்றாள் இன்னொருத்தி.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!