Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya Thirudan Episode 3.2

“சரி” என்று மற்ற பெண்களும் ஒத்துக்கொண்டனர்.

 

பெண்கள் ஐவரும் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு  நடந்து கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சுவாமியை தரிசனம் செய்து முடித்து விட்டு வெளியில் வந்து அங்கு  இருந்த ராட்டினம் மற்றும் கம்மல் வளையல்கள் விற்கும் சின்னச் சின்ன கடைகளில் 2  2 பெண்களாக பிரிந்து சென்றனர்.

 



Advertisement

ஒரு பெண்மணி தரையில் அமர்ந்து கொண்டு மயில் தோகையால் செய்திருந்த கைவினை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

 

அதனை கவனித்த மதுமிதா கீதாவை அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள்.

Advertisement

“கீதா இந்த பொம்மையை பாரு. எவ்வளவு அழகா இருக்கு? மயில் இறகால் பண்ணியிருக்காங்க. இதை ஷோகேஸ்ல வச்சா, ரொம்ப அழகா இருக்கும்.” என்று கூறி அந்த பொம்மையை காண்பித்தாள்.

Advertisement

 

“ஆமாம் ரொம்ப அழகா தான் இருக்கு.” என்று கூறியபடி இருவரும்  குனிந்து  அந்த பொருட்களை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு  யாரோ கத்தும் சத்தம் கேட்டது.

Advertisement

 

பக்கத்து கடைக்காரர்

“அங்கே ஏதோ கலவரம் நடக்குது போல இருக்கு. ரெண்டு பொறுக்கி பசங்க அடிச்சுக்கிறானுங்கன்னு நினைக்கிறேன்.” என்று இந்த கடைக்கார பெண்மணியிடம் கூறினார்.

 

“இவனுங்க அடிச்சுகிட்டா கூட பரவாயில்லை. ரோட்ல போற பொண்ணுங்களையும் சும்மா விட  மாட்டேங்கிறானுங்க. நேத்து கூட நாலு பொறுக்கி பசங்க ஒரு  பொண்ணை  வம்பு இழுத்து கிட்டு இருந்தாங்க. அந்த பொண்ணு திருப்பி  கேட்டதற்கு அந்த பொண்ணோட சாலை பிடிச்சி பிரச்சனை பண்ணியிருக்கானுங்க.  இவனுங்க திருந்தவே மாட்டானுங்க.

இவனுங்களோட பெரிய தொல்லையா போச்சு.

இதுமாதிரி ஏதாவது கலவரத்தை கிளப்பிவிட்டு அதுல மக்கள் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஓடும்போது அவங்க  கிட்ட இருந்து நகை பணம் இதையெல்லாம் திருடிட்டு போயிடறானுங்க.  இவனுங்க பண்ற கலவரத்தால நம்ம வியாபாரம்தான் கெட்டுப் போகுது. நாமளே நம்ம வயிற்று பிழைப்புக்காக இந்த கடையை இங்கே வச்சிருக்கோம். அதிலேயும் இவனுங்க மண்ணை அள்ளி போடறாங்க. நம்ம கஷ்டம் இவனுங்களுக்கு எங்க தெரியுது?” என்று வருத்தமும்  சலிப்பும் ஆக கூறினார் அந்த கடைக்கார பெண்மணி.

 

அவரது பேச்சை கேட்ட மதுமிதாவுக்கு அந்த பொறுக்கிகளின் மீது கோபம் வந்தது.  அந்த  பெண்மணியின்  நிலையை பார்த்து வருத்தம் வந்தது. இவரிடம் நாம் இன்று நிறைய பொருள் வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவள் தனக்கு சில பொருட்களையும் கீதாவுக்கு சில பொருட்களையும் வாங்கினாள்.

 

பணத்தை மலர்ந்த முகத்துடன் வாங்கிய அந்த பெண்மணி

“உங்க ரெண்டு பேரையும் பார்த்தா பெரிய  இடத்து பொண்ணுங்க மாதிரி தெரியுது. காதுல கழுத்தில நகை வேற போட்டு இருக்கீங்க. பத்திரமா வீடு போய் சேருங்க. இவனுங்க கிட்ட மாட்டிக்காதீங்க.” என்று அக்கறையாக கூறினார்.

 

அப்பொழுது கீதா

“மது சீக்கிரம் வா.  இந்த இடத்தை விட்டு போய்விடலாம்.” என்று கூப்பிட்டாள்.

 

“இருடி அந்தப்பக்கம் இன்னும் நிறைய கடை இருக்கு பார்த்துட்டு போகலாம்.” என்றாள்.

 

அப்பொழுது அவள் தோளில் யாரோ கை  வைத்து குலுக்கினார்கள். மதுமிதா தன் நினைவலைகளிலிருந்து  நிகழ்காலத்துக்கு வந்தாள்.

 

அங்கு கீதா தான் நின்று கொண்டிருந்தாள்.

 

“என்ன மது உட்கார்ந்துகிட்டே தூக்கமா? கூப்பிட்டது கூட காதில் விழாமல் இந்த நேரத்தில் என்ன தூக்கம் ?”

 

“இல்லடி தூக்கம் எல்லாம் இல்லை. எதையோ நினைச்சிட்டு இருந்தேன்.”

 

“அப்படி என்ன நினைச்சுட்டு இருந்த?” என்று  கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.

 

“வேறு எதைப் பற்றி நான் நினைக்க போறேன். எல்லாம் அந்த திருடனை பத்தி தான்.”

 

மதுமிதாவை உற்றுப் பார்த்த கீதா

“நானும் சுரேஷும் லவ் பண்றோம். நான் சுரேசை தினமும் நினைக்கிறேனோ இல்லையோ.  நீ தினமும் அந்த திருடனை நினைக்கிற.” என்று கண் சிமிட்டி சிரித்தாள்.

 

“சகிக்கல உன்னோட காமெடி. நான் அவனை நினைக்கல. திட்டிக்கிட்டு இருக்கேன்.” என்று அவளை கோபமாக திருத்தினாள் மதுமிதா.

 

“ஏதோ ஒன்னு.   திட்டுறதுக்காவது அவனை நீ தினமும் நினைக்கிறாய் இல்லையா? அதை தான் சொன்னேன். கோவிச்சுக்காதே .” என்று சமாதானப் படுத்தினாள் கீதா.

 

“சரி சரி.  என்ன இந்தப்பக்கம் திடீர்னு?” என்று கேட்டாள் மதுமிதா.

 

“அதுவா என் பக்கத்து வீட்டு பொண்ணு உன்கிட்ட பிளவுஸ் தைக்கணும்னு சொன்னா. சரி அந்த பிளவுசை அப்படியே கொடுத்துட்டு உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்னு வந்தேன்.”

 

“சரி சரி உட்காரு. எனக்கும் போர் அடிக்குது. பேசிட்டு இருக்கலாம். அப்புறம் எங்க வீட்ல இன்னைக்கு அம்மா சிக்கன் பிரியாணி பண்ணியிருக்காங்க. சாப்பிடுறியா?”

 

“அப்படியெல்லாம் டவுட்டா கேட்கக்கூடாது. கண்டிப்பா கிளம்பும்போது சாப்பிட்டுட்டு போகிறேன்.” என்றாள் சப்புக் கொட்டியபடி.

 

“அப்புறம் உன்னோட வேலை எல்லாம் எப்படி போகுது?” என்று அவளது வேலையை பற்றி விசாரித்தாள் மதுமிதா.

 

மதுமிதா, கீதா இருவரும் ஒரே கல்லூரியில் பி.பி.ஏ படித்தார்கள்.

 

மதுமிதா டெய்லரிங் வேலையில் இறங்கிவிட, கீதா ஒரு கம்பெனியில் பணிபுரிந்தாள்.

 

“இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சு. முடிச்சிட்டு நேரா இங்கேதான் வரேன். காலையிலேயே பக்கத்து வீட்டு பொண்ணு பிளவுஸ் கொடுத்து அனுப்பினாள்.”

 

“அப்படியா காட்டு எப்படி இருக்குனு பார்க்கலாம்.” என்று மதுமிதா கேட்க

 

கீதா தன் கைப்பையிலிருந்து அந்த ரவிக்கை துணியை எடுத்து காண்பித்தாள்.

 

“என்ன கலர் சாரி?”

 

“பேபி பிங்க் கலர். கான்ட்ராஸ்ட் பிளவுஸ் கொடுத்திருந்தாங்க.”

 

அந்த அடர்ந்த பச்சை நிற ரவிக்கைத் துணியை வாங்கினாள் மதுமிதா.

 

“இதுக்கு அங்க அங்க பேபி பிங்க்  ஸ்டோன் அப்புறம் எம்பிராய்டரி கொடுத்து பண்ணினா ரொம்ப அழகா வரும். சரி நான் பாத்துக்குறேன்.” என்றாள் மதுமிதா.

 

“சாரி போட்டோ வச்சிருக்கியா?”

 

“நீ கேட்பன்னு எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று அந்த புகைப்படத்தை காண்பித்தாள்.

 

“சரி அதை எனக்கு அனுப்பி விடு. நான் அதுக்கு ஏத்தமாதிரி பிளவுஸ் டிசைன் பண்ணிடறேன்.”

 

“சரி மது. எவ்வளவு ஆகும்னு நாளைக்கு   சொல்லிவிடு.” என்றாள்.

 

“அப்புறம் சுரேஷுக்கும் உனக்கும் எப்போ கல்யாணம்?” என்று கண் சிமிட்டினாள் மதுமிதா.

 

“ஆமா எங்க அவன் எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்குறான். இன்னும் எங்க அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ அதுவேறு பயமாயிருக்கு.

 

சரி அதை விடு. உன்னோட கடை விஷயம் என்ன ஆச்சு?”

 

“இப்போதைக்கு அண்ணாநகரில் எந்த கடையும்  காலி இல்லை. அம்மாவுக்கு இங்கே கடை வாடகைக்கு எடுப்பதில் இஷ்டம் இல்லைன்னு தோணுது.”

 

“ஏண்டி அப்படி சொல்ற?”

 

“அம்மா ஒரு நாள் என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ. அப்புறம் கடை தேடலாம். ஏன்னா இப்போ இந்த கடையை நீ வாடகைக்கு எடுத்துட்டா, அப்புறம் இந்த கடை இங்கே இருக்கும் என்ற காரணத்தாலே நாம வேற எங்கேயும் மாப்பிள்ளை பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நீ ஒத்துக்க மாட்ட. அதனாலதான் சொல்றேன். முதல்ல கல்யாணம் பண்ணிக்கோ.  அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை எங்க அமைகிறதோ அதுக்கு ஏத்த மாதிரி நாம கடை பார்த்துக்கலாம்னு  சொல்றாங்க.”

 

“அதுவும் நல்ல யோசனைதான்  மது.”

 

“ஆனா எனக்கு என்ன  பயம்னா இதுமாதிரி ஏதாவது தடை வந்துகிட்டே இருக்கு. எங்க நாம கடை வைக்காமலே போய் விடுவோமோனு  தோணுது.”

 

“என்ன இப்போ கடை தானே என்னமோ பெரிய கம்பெனி ஆரம்பிக்கிற மாதிரி பில்டப் கொடுக்கிற?”

.

“கீதா பெரிய கம்பெனியோ, கடையோ அவங்கவங்க வேலை அவங்க அவங்களுக்கு பெருசுதான். எனக்கு என்னோட கடை ரொம்ப பெருசு. நான் இதை க்ரியேட்டிவா பண்றேன். நான் பண்ணி கொடுத்ததை மத்தவங்க போட்டு பார்த்து சந்தோஷப்படும் போது எனக்கும் சந்தோஷம் கிடைக்குது. இது என்னோட ஜாப் மட்டும் கிடையாது. என்னோட பேஷன்.”

 

“சரி சரி. கோவிச்சுக்காதே. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நீ ஆசைப்படுற மாதிரி ஒரு கடை உனக்கு கூடிய சீக்கிரம் அமையும்.” என்று கல்யாண மாலை மோகன் சொல்லுவது போல  சொன்னாள் கீதா.

 

“சரி வா. உள்ளே போலாம்.” என்று கீதாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள் மதுமிதா.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!