Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 7.2

Hi friends, posted  second part of  yesterday’s episode and today’s episode. Do read  . Kindly lemme know your comments.

 

மதுமிதா தான் தைத்து முடித்த  ரவிக்கை, சல்வார் மற்றும் வேலைப்பாடு செய்திருந்த புடவை எல்லாவற்றையும் வெவ்வேறு கோணத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். அந்த அறை முழுதும் துணிகள் பரப்பப்பட்டு இருந்தது.

 



Advertisement

“மது” என்று கூப்பிட்டுக் கொண்டே வள்ளி உள்ளே நுழைந்தார்.

 

நுழைந்தவர் “என்ன மது ரூம் புல்லா டிரஸ் எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க?” என்று கேட்டார்.

Advertisement

 

Advertisement

“ அம்மா நான்  டிசைன் பண்ணின பிளவுஸ், சல்வார் சாரி,  எல்லாத்தையும் அழகழகான பேக்ரவுண்டு வைத்து பிச்சர் எடுத்துட்டு இருக்கேன் .”

 

“ அப்படியா? எங்க காட்டு பார்க்கலாம்.” என்று ஆர்வமாக அந்த கேமராவை வாங்கி அதில் இருந்த புகைப்படங்களை பார்த்தார் வள்ளி.

Advertisement

 

“ரொம்ப அழகா போட்டோஸ் எடுத்திருக்க மது. எல்லாமே ரொம்ப ரிச் லுக் ல இருக்கு.

பேக்ரவுண்ட் ரொம்ப அழகா இருக்கு. ” என்று பாராட்டினார்.

 

“ ஆமாமா. டிரஸ் கலருக்கு ஏத்த மாதிரி பேக்ரவுண்டு  சூஸ் பண்ணி இருக்கேன்.”

 

“ஆமாம் மது. அதனால நீ பண்ணியிருக்கிற  டிசைன் அழகா பிரைட்டா தெரியுது. ஆமாம் இந்த போட்டோஸ் எல்லாத்தையும் வச்சி என்ன பண்ண போற?” என்று விசாரித்தார் வள்ளி.

 

“நான் ஒரு ஆல்பம் பண்ண போகிறேன். அந்த ஆல்பத்தை சில  பெரிய கடைகளுக்கு அனுப்பலாம்னு  இருக்கேன்.”

 

“ஓ அப்படியா? நல்ல ஐடியாதான்.”

 

“இதே ஆல்பத்தை நான் கஸ்டமர்க்கும்  காட்டுவேன். அப்போ அவங்க இதுல இருந்து ஏதாவது டிசைன் செலக்ட் பண்ணுவாங்க.”

 

“ஓ ஆனால் கடையில நிறைய ஆல்பம் கிடைக்குதே. அதை வாங்கி வச்சுக்கிட்டா உனக்கு வேலை ஈசியா இருக்கும் இல்லை மது?”

 

“ஆமா.  நான்  இதை  கிரியேட்டிவ்வா பண்ணலாம்னு பண்ணியிருக்கேன். இந்த டிசைன் எல்லாமே புதுசு. அதனால  கஸ்டமருக்கு பிடிக்கும்.”

 

“ஆமாம் மது. எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.”

 

“இங்க பாருங்க. நான் ஏற்கனவே ஒரு ஆல்பம் பண்ணி இருக்கேன்.” என்று ஒரு ஆல்பத்தை எடுத்து காண்பித்தாள் மதுமிதா.

 

“ இது  பிரைடல் டிசைனர்  பிளவுஸ் ஆல்பம். இதுல இருக்கிற டிசைனர் பிளவுஸ் எல்லாமே ஹெவி வொர்க்ல இருக்கும். கல்யாண பொண்ணுக்கு இந்த மாதிரி ஹெவி வொர்க் பிளவுஸ் நல்லா இருக்கும். அதனால தான் இதுக்கு தனியா ஒரு ஆல்பம் நானே ரெடி பண்ணி இருக்கேன்.”

 

“எல்லாமே ரொம்ப அழகா இருக்கு  மது”

 

” ஆனால் என்ன பண்றது? நான் ஆசைப்பட்ட மாதிரி அந்த கடை எனக்கு கிடைத்திருந்தால்,  நிறைய பொண்ணுங்களை வேலைக்கு  சேர்த்து இன்னும் பெரிய லெவலில் பண்ணியிருக்கலாம். ஆனா முடியாம போச்சு.” என்று வருத்தமாக கூறினாள் மதுமிதா.

 

“மது கவலைப்படாதே.  சீக்கிரமே கடை வச்சு நீ பெரிய லெவலில் இந்த வேலையை செய்வ. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு.” என்றார் வள்ளி.

 

 

“ட்ரிங் ட்ரிங்” என்று வீட்டு தொலைபேசி அடித்தது.

 

“சரி. நான் போய் யார் போன் பண்றான்னு பார்க்கிறேன்.” என்று அவளிடம் கூறிவிட்டு வள்ளி ஹாலிற்கு வந்து போனை எடுத்து

“ஹலோ” என்றார்.

 

அந்தப்பக்கம் கீதா பேசினாள்.

 

“ஆன்ட்டி மது இருக்கிறாளா?”

 

“இருக்கிறாள். நான் கூப்பிடறேன்.” என்று கூறியவர்

“மது” என்று அவளை அழைத்தார்.

 

“என்னம்மா” என்று கேட்டுக்கொண்டே மதுமிதா அங்கு வந்தாள்.

 

“கீதா லைன்ல இருக்கிறா. பேசு.” என்று கூறியவர் போனை அவரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

 

தாயிடம் இருந்து போனை வாங்கி “என்ன கீதா?” என்று கேட்டாள் மதுமிதா.

 

“மது உன்னோட செல் போனுக்கு கால் பண்ணினேன். ஏன் எடுக்கல?” என்று விசாரித்தாள் கீதா.

 

“அதுவா நான் செல்போனை சைலன்ட் மோடில் போட்டிருந்தேன்.”

 

“ எதுக்கு சைலன்ட் மோடில் போட்ட ?”

 

 

“லோன்  வாங்கிக்கோங்கனு  கால் வந்துட்டு இருந்தது. அதனால தான் சைலன்ட் மோடில் போட்டேன். நம்மள கடன் காரங்களா ஆக்குவதில் இவங்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.”

 

“சந்தோஷம் இல்லை மது. அவங்களுக்கு மந்த்லி டார்கெட் இருக்கும். அதை  அச்சிவ பண்றதுக்கு அப்படி எல்லோருக்கும் போன் பண்ணி கேட்குறாங்க. அது அவங்க வேலை. அவங்களையும் மொத்தமா நாம குறை சொல்ல முடியாது சிஸ்டம் அப்படி.”

 

“நீ சொல்றதும் கரெக்ட் தான் கீதா.

சரி  விஷயத்துக்கு வா. எதுக்காக கால் பண்ண?”

 

“நான் சொல்ல வந்ததை மறந்து விட்டேன். பாரு. சுரேஷுக்கு பர்த்டே வருது. இன்னிக்கி அவனுக்கு ஒரு செட் டிரஸ் அப்புறம்  கிஃப்ட் வாங்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். அதான் நீயும் வந்தனா நாம ரெண்டு பேரும் போய்  வாங்கிட்டு வரலாம்னு  உன்னை கூப்பிட கால் பண்ணினேன். என்ன மேடம்? இன்னிக்கு என் கூட வர முடியுமா?”

 

“ சாயந்திரம் அஞ்சு மணிக்கு போகலாமா?  கீதா”

 

“போகலாம் மது. நான் வேலை முடிஞ்சதும் உங்க வீட்டுக்கு வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்து போலாம்.”

 

“சரி கீதா. நான் அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கிறேன்.” என்று கூறி போனை வைத்தாள்.

 

லைப்ஸ்டைல் முன்பு காரை நிறுத்தினாள் மதுமிதா.

 

“கீதா. நீ போய் சுரேஷ்க்கு டிரஸ் பார்த்துட்டு இரு. நான் காரை பார்க் பண்ணிட்டு  வரேன்.” என்று கூறியவள்  காரை நிறுத்தி விட்டு இறங்கினாள்.

 

இறங்கியவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். பிறகு படிகளில் ஏறி கடைக்குள் நுழைந்தாள்.

 

“என்ன கீதா  ஷர்ட் செலக்ட் பண்ணியாச்சா?”

 

“கிட்டத்தட்ட செலக்ட் பண்ணியாச்சு.”

 

“என்னடி சொல்ற?

ஒரு சல்வார்  செலக்ட் பண்ண அட்லீஸ்ட் ரெண்டு மணி நேரம்  எடுத்துப்ப. பத்து நிமிஷத்துல ஷர்ட் செலக்ட் பண்ணிட்டியா? என்னால நம்பவே முடியல.” என்றாள் ஆச்சரியமாக.

 

“ஆமாம் நமக்கு தான் ஏகப்பட்ட  வெரைட்டி இருக்கு.

அதுல எதை செலக்ட் பண்றதுன்னு கன்பியூஸ் ஆகும்.

ஜென்ட்ஸ்க்கு  வெரைட்டி கம்மி தானே. அதனால கன்பியூஸனும் கம்மிதான். அதான் எனக்கு பிடிச்ச கலர்ல ஒரு டிஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் எடுத்திருக்கேன். நல்லா இருக்கா?” என்று இரண்டையும் காண்பித்தாள்.

 

“நல்லாதான். இருக்கு ஆனா உனக்கு பிடிச்ச கலர்ல எடுக்காத. அவனுக்கு பிடிச்ச கலர் ல எடு.”

 

“நீ பேசாம என்னை கூப்பிட்டுக்கிட்டு வந்ததைவிட அவனை  கூப்பிட்டுக்கிட்டு வந்திருந்தா அவனுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் அவனே செலக்ட் பண்ணி இருப்பான் இல்லையா?”

 

“ஆனா அது அவனுக்கு  சர்ப்ரைஸா இருக்காதே.”

 

“அதுவும்  கரெக்டு தான். சரி. வாங்குவதை அவனுக்கு பிடிக்குமான்னு நல்லா யோசிச்சு வாங்கு.” என்றாள் மதுமிதா.

 

“இந்த கலர் அவனுக்கு பிடிக்கும்.”

 

“அப்பா ஓகே தான்.”

 

“மது அவன் உன்னை மாதிரி கிடையாது. நீதான் உனக்கு ஒரு டிரஸ் பிடிக்கலனா அது எவ்வளவு காஸ்ட்லியா இருந்தாலும் தொடக்கூட மாட்ட.”

 

“ஆமாம். எனக்கு ஒரு விஷயம் பிடித்தால்தான் நான் அதை செய்வேன் இல்லனா செய்ய மாட்டேன். நான் போடற டிரஸ்  எல்லாமே எனக்கு பிடிச்சதா தான் இருக்கணும்னு நினைக்கிறது பெரிய தப்பா?”

 

“அது தப்பு  இல்லை. ஆனால்….” என்று தயங்கி நிறுத்தினாள் கீதா.

 

“ஆனால் என்னடி சொல்லு. தொண்டைவரை வந்ததை சொல்லிடு.” என்றாள் மதுமிதா கீதாவை தீர்க்கமாக பார்த்து.

 

“இல்லை. நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி உனக்கு பர்த்டே டிரஸ் ஒன்னு  வாங்கி கொடுத்தேன் இல்லையா?”

 

“ஆமாம் அதை நீ போட்டு நான் பார்த்ததே கிடையாது.” என்றாள் கீதா.

 

“சாரி கீதா. எனக்கு அந்த கலர் பிடிக்கல. எனக்கு பிடிக்காததை நீ மட்டும் இல்ல. எங்க அம்மாவால கூட என் மேல திணிக்க முடியாது.  பர்த்டே அன்னிக்கு போடல. ஆனால் அதுக்கப்புறம் ஒரு தடவை உனக்காக போட்டுட்டு வந்தேன்.”

 

“அப்படியா? எனக்கு தெரியாதே. எப்ப டி?”

 

“ஆனால்.  நீ  அன்னிக்கு காலேஜ் வரல.  நான் என்ன பண்றது? அதுக்கு அப்புறம் அதை நான் போடவே இல்லை.”

 

“நான் பண்ணினது தப்புதான். உனக்கு பிடிக்குமா பிடிக்காதானு  கூட தெரிஞ்சுக்காம அதை நானே செலக்ட் பண்ணினேன்.

 

சரி  அதை விடு நாம அடுத்த கடைக்கு  போய் கிப்ட் வாங்கலாம்.” என்று கீதா மதுமிதாவை அழைத்துக்கொண்டு சென்றாள்.

 

கடைக்கு வெளியே வந்து இருவரும் படியில் இறங்கி நடந்து  கார் இடம் வந்தனர்.

 

மதுமிதா ரிமோட் சாவியை கொண்டு காரை திறந்தாள். கீதா ஏறி உள்ளே உட்கார்ந்தாள்.

 

மது காருக்குள் ஏறாமல் நின்றுகொண்டு சுற்று முற்றும் திரும்பி பார்த்தாள். மதுமிதாவை கவனித்த கீதாவும்  காருக்குள் உட்கார்ந்தபடியே ஜன்னல் வழியாக மதுமிதாவின் பார்வை சென்ற திசையை பார்த்தாள்.

 

கீதாவின் கண்களுக்கு யாரும் வித்தியாசமாக தெரியவில்லை.

 

எனவே மதுமிதாவிடம்

“மது யாரை தேடற?” என்று கேட்டாள்.

 

மதுமிதா காரை திறந்து ஓட்டுனர் இருக்கையில் உட்கார்ந்தாள்.

 

“எனக்கு கொஞ்ச நாளாவே யாரோ என்னை ஃபாலோ பண்ற மாதிரி தோணுது. ஆனால் யாருன்னு தான் தெரியல.

அதான் யாராவது நம்மள பார்க்கிறார்களானு  பார்த்தேன். ஆனால் யாரும் நம்மள பார்க்கிற மாதிரி இல்லை.”

“என்னடி அப்படி சொல்லிட்ட? நாம நல்லா அழகா பார்க்கிற மாதிரி தானே இருக்கிறோம்.” என்று லேசாக சிரித்தபடி கேட்டாள் கீதா.

 

“காமெடி!?” என்று கேள்வியாக கேட்டபடி கீதாவை முறைத்தாள் மதுமிதா.

 

“இல்லையே. நான் சீரியசாதான் சொல்றேன். நாம உண்மையாவே பார்க்கிற மாதிரி தான் இருக்கிறோம்.” என்று முகத்தை படு தீவிரமாக வைத்துக்கொண்டு கூறினாள்  கீதா.

 

“உன்கிட்ட போய் சொன்னேன் பாரு என்ன சொல்லணும்.” என்று தன்னைத்தானே நொந்துகொண்டு  சாலையை பார்த்து காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

 

“சரி சரி கோவிச்சுக்காதே. சொல்லு. என்ன விஷயம் மது ?

எப்போதிலிருந்து அப்படி உனக்கு தோணுது?” என்று விசாரித்தாள் கீதா.

 

“எனக்கு சரியா சொல்ல தெரியல. அன்னிக்கி  ஹோட்டலில் யாரோ நம்மளை நோட் பண்ண மாதிரி தோணுச்சு அதுக்கப்புறம் பார்க்ல கூட அப்படித்தான் தோணுச்சு. என்னால கன்ஃபார்மா சொல்ல முடியல.”

 

“என்னடி சொல்ற? ஒருவேளை  மெரினா பீச்சுல பார்த்தோமே அந்த நாலு பசங்க நம்மள பாலோ பண்றாங்களோ” என்று யோசனையாக கேட்டாள் கீதா.

 

“அவனுங்க இல்லைனு நினைக்கிறேன்.”

 

“எப்படி சொல்ற? அவங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவை டி நகர் ஷாப்பிங் போயிருந்தப்ப கூட இதே மாதிரி தான் தோணுச்சு.

 

அதனால தான் இங்கேயும் யாராவது நம்மை பார்க்கிறார்களான்னு பார்த்தேன். ஆனால் யாரும் நம்மை பார்க்கிற மாதிரி தெரியல. ஒருவேளை யாருமே என்னை பார்க்காமல் சும்மாவே அப்படி எனக்கு  தோணுதான்னு கூட தெரியல. வீட்ல ஏதாவது சொல்லலாம்னு பார்த்தா, என்ன சொல்றதுன்னு புரியல.” என்றாள் மதுமிதா.

 

“அதெல்லாம் யாரும் நம்மள பார்க்கிற மாதிரி எனக்கு தோணல. அதனால தேவையில்லாம இதை எல்லாம் உங்க வீட்டுல சொல்லி உங்க வீட்டுல இருக்கிறவங்களை  குழப்பாதே.” என்றாள் கீதா.

 

“ஆமாம் கீதா நானும் அதுக்காக தான் எதுவும் சொல்லல.” என்று முடித்தாள்.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!