Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

சமீராவின் மின்னல் மழையாகி வா – 5(2)

“மேனர்ஸ் இல்ல.. அடுத்தவங்க பேசுறதை இப்படி தான் ஒட்டு கேப்பியா..?? அதுவே கேவலம்.. இதுல கமெண்ட் வேற சொல்ற.. அசிங்கமா இல்ல..”

“ஹலோ நான் ஏன் ஒட்டு கேட்கணும்.. நீங்க பேசுறது பக்கத்து டேபிளில் இருந்த என் காதில் தானா வந்து விழுந்துச்சு.. சரி தெரிஞ்ச பொண்ணாச்சே… ஒரு ஹாய் சொல்வோம்னு பின்னாடி வந்ததுல உன்னை இங்க தான் பிடிக்க முடிஞ்சுது…”

என்று அவன் சொல்லவும் அவனை முறைத்துவிட்டு அவள் முன்னே செல்ல,

“ஆமா.. கண்ணு நல்லா இருக்குனு சொன்னேன்னு இப்படி கண்ணாடிக்குள்ள ஒலிச்சு வைச்சுக்கிட்டியா… பட் ஸ்டில் தோஸ் ஐஸ் ஆர் மெசிமரைஸிங் மீ…” முன்னுக்கு பின் முரணாய் ஊடுருவிய பார்வையோடு சொன்னவனை ஈட்டி முள்ளாய் முறைத்து பார்த்தவள் கண்களில் விழுந்தது அவன் ஷர்ட் வலது கையின் ஓரத்தில் தெரிந்த டாட்டூ.



Advertisement

முக்கால் பங்கு ஷர்ட்டின் உள்ளே மறைந்திருக்க தாடிபோல் இருந்த பகுதி மட்டும் வெளியே தெரிந்ததை வைத்து அது ஆண் முகம் என்று தோன்ற யாருடைய முகமாய் இருக்கும் என்று யோசித்தாள்.

டாட்டூகளில் அவளுக்கு விருப்பம் உண்டு. சின்ன சின்ன நினைவுகளை டாட்டூவாய் உடலில் பதித்து வைத்துக் கொள்வது ஏதோ ஒருவகையில் அவளை ஈர்க்கும். அந்த படங்களும் அதன்பின்னால் இருக்கும் காரணமும் அறிந்துக்கொள்ள சிறு வயதில் இருந்தே ஆர்வம் அதிகம்.. ஆனால் அவள் குத்தி கொள்ள முனைந்தது இல்லை. அதற்கு காரணம் ஜோ. 

‘தன் உடம்ப வருத்திக்கிட்டு தான் உங்க கலைநயத்தை காட்டனுமா.. இல்லை அன்பை பொழியணுமா.. சுத்த முட்டாள்தனம்…!! இட்ஸ் நாட் குட் ஃபார் ஸ்கின்.. எனக்கு டாட்டூ குத்தியிருக்கிறதை பார்த்தாலே எரிச்சலா வரும்.. ப்ராமிஸ் பண்ணு அந்த பைத்தியகாரதனத்தை நீ பண்ண மாட்டேன்னு…’

Advertisement

என்று என்றோ ஜோசப் சொன்னது அவள் காதுகளில் ஒலிக்க,

Advertisement

“ஜோவிற்கு நேர் எதிர் இவன்..” என்று எண்ணியவள் பின் தான் அவன் கையையே பார்ப்பதை உணர்ந்து,

“ச்சே… இவன் டாட்டூ ஆராய்ஞ்சு என்ன பண்ண போற..”

என்று மானசீகமாய் கொட்டிக்கொண்டவள்,

Advertisement

“உன் பிரச்சனை தான் என்ன… எதுக்கு என்னை இப்ப ஃபலோ பண்ணிட்டு இருக்க…”

“ஒரே ஒரு விஷயம் கேட்கணும்… நீ சொல்லிட்டாள் நான் போயிடுவேன்..”

என்னவென்று அவள் கேட்கவில்லை. ஆனால் அவள் பார்வை சொல்லி தொலை என்பது போல் இருக்க அதை புரிந்து,

“உங்க லவ் ஸ்டோரி.. ஸாரி… உன் லவ் ஸ்டோரி… இப்படி கல்யாணமே வேணாம்னு இருக்கிற அளவு டீப் லவ்ன்னா.. அப்படி என்ன அவன் செஞ்சிட்டான்… எனக்கு உன் லவ் இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு.. எதனால இவ்வளவு லவ்னு தெரிஞ்சுக்கலனா தலைவெடிச்சுடும்.. அதை மட்டும் சொல்லேன்..”

என்று அவன் கேட்க, 

“தட்ஸ் நன் ஆஃப் யூவர் பிஸ்னெஸ்னஸ் மிஸ்டர் ஜோஷ்வா.. இது தான் உன் லிமிட்.. இதுக்குமேல அட்வாண்டேஜ் எடுத்து பேச நினைச்ச.. இங்க நடக்குறதே வேற..”

அவள் கண்களில் கனலை தேக்கி மிடுக்குடன் மிரட்ட அதற்கு நேரெதியாய் அவன் முகத்தில் குறுநகை படர்ந்தது.

“கண்டிப்பா.. அதை உன் வாயாலே சொல்லி தெரிஞ்சுக்காம விட மாட்டேன் ஜென்சி.. அதுவும் நீ என்னிடம் பரப்போஸ் செஞ்ச பொண்ணு.. அதெப்படி இஸியா  விடமுடியும்..”

என்று அவன் பேச ‘இவனிடம் பேசுவதே வீண்’ என்று நினைத்துக் கொண்டு நடையில் வேகம் கூட்டி தன் கார் அருகில் செல்ல,

“அட இரு ஜென்சி…  ஏன் என்னை பார்த்தாலே பயந்து ஓடுற…”

என்றான் அவளை தொடர்ந்து வந்தபடி..

“பயமா..?? உன் முகத்தை பார்த்தாலே கோபம் பத்திட்டு வருது.. இப்படி அடிக்கடி கொண்டு வந்து காட்டாத..”

என்று அவள் வள்ளென்று விழுக அதுக்கும் சிரித்தவன்,

“மிஸ்.ஜென்சி… தாங்கள் உருகி உருகி காதலிச்சதும் இந்த முகத்தை பார்த்து தான்… மறந்துவிட்டதா..”

என்று நக்கல் நிறைந்த குரலில் சொல்லவும்,

“முகவடிவுல இல்ல அழகு.. அது உள்ள மனசுல இருந்து உணர்ரது.. ஜாடை அவனை மாதிரி இருந்தாலும் உன் கேவலமான மனசு உன் முகத்துல தெரியுது.. அது அருவெறுக்க வைக்குது…”

என்று சளைக்காமல் அவள் திருப்பி கொடுக்க இதுவரை வாடாமல் வீசிய அவன் புன்னகை ஒரு நிமிடம் மறைந்து தாடை இறுகினாலும் மறு நிமிடம் அது பொய்யோ என்று குழம்புவதுபோல் சாதாரணமாய் மாறிவிட,

“அப்படி என்ன கேவலத்தை என்னுட்ட கண்ட ஜென்சி…” என்றான்.

“சொத்துக்காக சொந்த அப்பாவையே ஊரு முன்னாடி அசிங்க படுத்தினவன் தானே நீ..”

“அட… ஏன் சும்மா அதையே சொல்லிட்டு இருக்க.. எனக்கு நான் செஞ்சது எதுவும் தப்பா தோணல… எனக்கு தனியா தான் பிஸ்னெஸ் பண்ணனும்… முழுபொறுப்பும் என் கையில் மட்டும் தான் இருக்கணும்… அதனால நான் எட்டீல இருக்க மாட்டேன்னு சொல்லி தனியா போக நினைச்சேன்… அண்ட் மோரோவர்… நான் என்ன அவர் சம்பாரிச்ச சொத்தையா கேட்டேன்.. எல்லாம் என் தாத்தா சொத்து பேரனுக்கு தானே வரணும்.. அதை தர மாட்டேன்னு அவர் அடம்பிடிச்சா வேற என்ன செய்வாங்க.. நான் கேட்டப்போ கொடுத்து இருந்தால் நோ ஹர்ட் ஃபீலிங்க்ஸ்…”

“அப்போ அவங்க தொழில்ல நெருக்கடி கொடுக்கிறது… பொய்யா பழிபோட்டு அவங்க தரத்தை குறைக்கிறதும் உனக்கு நியாயம் தான் இல்ல..”

“அது ஃப்ரொஃபஷ்னல் எதிக்ஸ்… தொழில்னு வந்துட்டால் எதிர்ல நிற்கிற எல்லாருமே எதிராளி தான்… அதில் அப்பா என்ன..? அண்ணன் என்ன..??”

என்று அவன் தோள் குலுக்க தான் பெரிய நியாயவாதி போல் பேசியது அவளுக்கு கோபத்தை தான் கொடுக்க இவனிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்கிறோம் என்று உணர்ந்து,

“உன்னை மாதிரி ஆள்ட்ட எல்லாம் மனுஷன் பேச முடியாது..”

என்று அவள் சொல்லியபடி அவள் கார் கதவினை திறக்க முயலும்போது அவள் எதிர்பாராமல் அவள் விரல் இடுக்கி கார் சாவியினை உருவ,

“ஹே…இடியட்..” அவள் கோபமாய் உறும்பும்போது அவனின் ஃபோன் சிணுங்கியது.

“அதனே.. கொஞ்ச நேரம் என்னை விட மாட்டானே…” என்று முனங்கியபடி அழைப்பை ஏற்கும்போது அவள் அவன் கையில் இருந்து சாவியை பிடுங்க முயலவும் அதனை தன் கையோடு பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டவன்,

“ஒன் மினிட்.. ஒன் மினிட்..” என்று அவளை நிறுத்திவிட்டு போனில், 

“சொல்லு ஸ்குரீல்..” என்றான்.

அவன் கையை வலுகட்டாயமாய் இழுத்து சாவியை பிடுங்க பிடிக்காமல் அவனை கண்களால் பஸ்பமாக்கி அவள் நிற்க அலைபேசியில் கவனமாய் இருந்த ஜோஷ்வா மறுமுனையில் சொன்ன தகவலில் முகத்தின் உணர்ச்சிகள் தொலைக்க,

“எப்போ… எங்க இருந்து..”

என்று கேட்டான் விறைப்பாக.. அவன் முக மாற்றம் ஏதோ சீரியஸான விஷயம் என்பது அவளுக்கு புரிந்தது.

மீண்டும் என்ன கூறினானோ விழிகளை எரிச்சலாய் உருட்டியவன்,

“வரேன்..” என்று மட்டும் கூற அழைப்பு தூண்டிக்கப்பட்டது. ஆனால் அதனை ஜென்சியிடம் காட்டாமல் ஃபோனை காத்தோடு ஒட்டி,

“ஜென்சி… நான் சொல்ற நம்பருக்கு டயல் பண்ணு..”

என்று பரபரப்பாய் சொல்ல அவள் விழியை கூட நகர்த்தாமல் அப்படியே முறைத்து நிற்க,

“என்ன பார்க்கிற.. ப்ளீஸ் எமர்ஜென்சி… இந்தா உன் சாவி… போதும்ல… சீக்கிரம்.. டயல் பண்ணு… லைன்ல வெய்ட் பண்றாங்க சொல்லணும்…”

என்று அவன் படபடப்போடு துரித படுத்தியதில் அவளையும் அறியாமல் தன் அலைபேசியை எடுத்து அவன் சொன்ன நம்பரை அழுத்த அவன் காதில் வைத்திருந்த பேசியே சிணுங்கியது.

நிதானமாய் எடுத்து அதை பார்த்துவிட்டு,

“இதுக்கு தான்… தேங்க்ஸ்..” என்று அவளின் எண்ணை பதிவு செய்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட கையை உதறி,

“ஸ்கௌண்ரெல்… ஆஹ்..”

என்று பல்லை கடித்து கத்தியவள் காரில் ஏறி அந்த கோபத்தில் கதவினை அறைந்து மூடி வேகமாய் அதனை இயக்கி கிளம்பி விட்டாள்.

தன்னை தாண்டி செல்லும் அவள் காரினை கண்டு புன்னகைத்து நின்ற ஜோஷ்வா பின்னோடு தன் அருகில் வந்து நின்ற தன் காரின் பின் இருக்கையில் ஏறியமர்ந்து வேகமாய் அலுவலகம் செல்லும் படி கூறிவிட்டு அனில் குப்தா அனுப்பியிருந்த ஆவணங்களை பார்வையிட்டபடி வந்தான்.

கண்ணாடி மாளிகையாய் உயர்ந்து நின்ற அந்த கட்டிடத்தின் நடுவில் ஊதா வண்ணத்தில் ஃபீனிக்ஸின் பறவையின் ரெக்கை விரித்த உருவமும் அதன் கீழ் ‘ஃபீனிக்ஸ் லிமிடட்..’ என்று பொரிக்கபட்டிருந்த பெயரும் அந்த கட்டிடத்தை கடந்து செல்பவர்களை நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அழகாய் இருந்தது.

கார் நின்றதும் இறங்கி அவன் உள்ளே செல்ல அதற்குள் அவனை நோக்கி வாயிலுக்கே வந்திவிட்டான் அனில்.

“சர்.. சிச்வேஷன் இஸ் கெட்டிங் வொர்ஸ்.. இப்ப இருக்கிற ‘நியூட்ரியல்’ ஸ்டாக்ஸை FDA லேப்ல இருந்து டெஸ்ட் செய்றதுக்காக சீஸ் பண்ணி இருக்காங்க… அந்த பொண்ணு போட்ட வீடியோ வேற வைரல் ஆகிட்டு இருக்கு.. இதை குறித்து நாம இன்னும் வாயே திறக்கலைன்னு வேற மீடியா நச்சரிக்கிறாங்க…”

அவன் குரலிலே பதட்டம் நிறைந்திருக்க ஜோஷ்வா இல்லாமல் இவ்வளவு நேரம் சமாளித்தாளும் அடுத்து என்ன என்று புரியாமல் தவித்து ஜோஷ்வாவின் பதிலுக்காக நின்றான்.

‘நியூட்ரியல்’ என்பது ஆறு மாதம் முதல் இரண்டு வயது குழந்தைகளுக்காக தானியங்களோடு பிற ஊட்டசத்துகளும் சேர்த்து தயாரிக்கபடும் ரெடிமேட் பொடி.

கடந்த வாரம் புனேவில் தன் குழந்தைக்காக ஃபீனிக்ஸின் நியூட்ரியல் வாங்கியிருந்த பெண்மணி ஒருவர் அதில் புளுக்களை கண்டு எடுத்ததாய் பரபரப்பாய் ஒரு வழக்கினை பதிவு செய்திருக்க அதனை தொடர்ந்து இன்றும் கிழக்கு அந்தேரியில் ஒருவர் அதே குற்றசாட்டோடு பிரிக்கபட்ட அந்த டப்பவின் ஆதாரத்தோடு வீடியோ பதிவிட்டு வழக்கு தொடுத்து இருந்தது சர்ச்சையை கிளப்ப ஊடகங்கள் அச்செய்தியை பிடித்துக் கொண்டதோடு சற்றுமுன் உணவு மற்றும் மருந்து துறையில் சோதணை செய்ய ‘நியூட்ரியல்’  ஸ்டாக்கினை தயாரிக்கும் இடத்தில் இருந்து பறிமுதல் செய்து சென்றது அங்கிருந்த அனைவரையுமே மிகுந்த டென்ஷனில் ஆழ்த்த ஆனால் அதன் நிறுவனர் ஜோஷ்வா முகத்திலோ எந்த பதற்றமோ பரிதவிப்போ இல்லை.

“டெஸ்ட் பண்றது அவங்க கடமை… அதை அவங்க செய்யட்டும்… நாம மேல தப்பு இல்லை என்றபோது நாம ஏன் பதட்டமாகணும்… ‘எங்க மேணுஃபெக்சர் லவலில் எந்த தவறும் இல்லை… ரீட்டெய்ல் ஷாப்ல தான் சரியான பராமறிப்பு இல்லாமல் இந்த தவறு நடந்திருக்கும்.. எங்க மேல தப்பு இல்லைனாலும் நடந்த அசம்பாவித்திற்கு வருந்துகிறோம்…’ அப்படினு அஃபிஷியலா ஒரு ஸ்டேட்மெண்ட் ரிலீஸ் பண்ணு… டெஸ்டிங் முடியட்டும்.. FDA என்ன சொல்றாங்க பாப்போம்..”

என்று அவன் நிதானமாய் பேசியபடி நடக்க,

“ஓகே சர்..” என்று இழுவையோடு சொன்னாலும் ஜோஷ்வாவையே அவன் பார்க்க,

“என் முகத்தை பார்த்தால் எப்படி.. என்ன சொல்லணுமோ சொல்லு..” என்றான்.

“நாம தப்பு செய்யல தான்.. ஆனால் தப்பு நடந்திருக்கும்னு தோணுது சார்… குழந்தையோட ஃபுட் என்றதால ரொம்பவே சென்சிட்டிவா பேசபடும்.. அநேகமா டெஸ்டிங் முடிவு  நமக்கு சாதகமா வராதபடி சதி நடக்கும்னு நினைக்கிறேன் சர்..”

என்று அவன் சொன்னாலும் அவன் சொல்லாமல் விட்டது, “உங்க அண்ணனின் வேலையாக தான் இருக்கும்..” என்பது.. அதனை உணர்ந்து,

“இதெல்லாம் ஜோசஃப் தான் செஞ்சிருப்பான்னு சந்தேகப்படுறீயா ஸ்குரில்…”

என்று கேட்கவும் அவன் தயக்கமாய் தலையசைத்தான்.

“சந்தேகம் எல்லாம் வேண்டாம்.. நிச்சயம் அவன் வேலை தான்..”

என்றபடி அலைபேசியை பார்க்க அவன் நினைத்தது போலவே ஜோசஃபிடம் இருந்து அழைப்பு வரவும் அர்த்தமான ஒரு புன்னகையோடு அதனை ஏற்றான்.

“என்ன இதெல்லாம் உனக்கு மட்டும் தான் செய்ய தெரியும்னு நினைச்சுயா ஜோஷ்… உன்னோடவே பொறந்தவன் நான்.. உன் க்ரிமினல் புத்தி கொஞ்சமாவது எனக்கும் இருக்காது… இனியும் உன்னை விட்டு வைப்பேன்னு நினைக்காதே… அடுத்தடுத்து வெடிக்கும்.. காத்திரு..”

மறுமுனையில் கர்ஜித்த ஜோசஃப் வார்த்தகளுக்கு சற்றும் அயராமல்,

“டூ இட் சகோதரா..”

அலட்சியமாய் தன் வழக்கமான பாணியில் பதில் கொடுத்தான் ஜோஷ்வா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!