Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 36.2

அத்தியாயம் 36 (2)

தன் தாய் மீனாட்சியிடம் எதுவோ கேட்க அவர் அறைக்குச் சந்துரு வந்தபொழுது, சரண்யா இவனின் பெயரை சொல்லி மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன், என்ன விஷயம் என்று கேட்க, மீனாட்சியோ ஒன்றும் இல்லை என்று மறுக்க, அப்பொழுதுதான் சரண்யாவின் கையில் மிருதுளாவின் பெயர் போட்ட பைல் இருப்பதைப் பார்த்து, அது என்னவென்று கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்று மறுக்க, சந்த்ருவோ மருத்துவமனைக்குச் சென்று தானே கேட்டுக் கொள்வதாக மிரட்டவும், ஏற்கனவே இப்படி ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சரண்யா, தான் முன்னமே திட்டம் போட்டு வைத்திருந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“அது வந்து அத்தான் வழக்கமா, இந்த நேரத்தில கர்ப்பமா இருக்கிறவங்களோட வயித்தில இருக்கிற குழந்தையோட ப்ளட் சாம்பிள் எடுத்து, குழந்தைக்கு எதாவது நோய், மூலை வளர்ச்சி குறைபாடு, இந்த மாதிரி ஏதாவது பிரச்சனை இருக்கான்னு டெஸ்ட் செய்வோம். அத மாதிரி மிருதுளா வயித்தில இருக்கிற குழந்தையோட ப்ளட் சாம்பிள் எடுத்து டெஸ்ட் பண்ணும்போது, ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது.” என்று சொல்லிவிட்டு, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டவள், “அது, குழந்தையோட ப்ளட் க்ரூப், உங்க ரெண்டு பேரோட ப்ளட் க்ரூபோட மேட்ச் ஆகல. வேற ப்ளட் க்ரூப் காட்டுது.” என்று பயந்துக்கொண்டே சொல்ல,

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த சந்துரு, “அதெப்படி, அப்படி வரும்?! ஒரே தடவை ரிசல்ட் வச்சு எப்படி நீ அவ்வளோ உறுதியா சொல்ற சரண்யா? ஒருவேளை ஏதாவது மிஸ்டேக் நடந்து இருக்கலாம். அது உனக்குத் தெரியாம இருக்கலாம்.” என்று சொல்ல,



Advertisement

“நீங்க இப்படிச் சொல்வீங்கன்னு தெரியும் அத்தான். அதனால தான். நானே பெர்சனலா ரெண்டு தடவை டெஸ்ட் செஞ்சு பார்த்தேன். அப்போவும் ரிசல்ட், அதே தான் வந்தது. நீங்க நான் சொல்றதை நம்பலைனா, உங்களுக்குத் தெரிஞ்ச ஹாஸ்பிடல்ல கொடுத்து டெஸ்ட் செஞ்சுக்கோங்க அத்தான். எனக்கு இதுல பொய் சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்லை. அத்தை கிட்ட கூட, இதைத் தான் சொல்லிட்டு இருந்தேன். அதோட உங்களுக்குத் தெரிஞ்சா, கஷ்டபடுவீங்க, வீனா பிரச்சனைன்னு தான் சொன்னேன்.” என்றவள், உண்மையில் வருத்தபடுவது போல முகத்தை வைத்துக்கொண்டாள்.

ஏற்கனவே சந்தேகப் புத்தி கொண்ட சந்த்ருவிற்குச் சரண்யா உறுதியாக சொல்வதைக் கேட்டதும், சற்றுக் காலமாகக் காணமல் போயிருந்த சந்தேகப் புத்தி மீண்டும் தலை தூக்க, அவளிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் செய் சரண்யா, எனக்கு உடனே DNA டெஸ்ட் எடுக்கணும்.” என்று சொல்ல,

‘ஆஹா!! நான் நினைச்ச மாதிரியே சீன் போகுதே!!’ என்று மனதுக்குள் கூதுகலம் அடைந்தவள், மாறாக அவனிடம் பதறுவது போன்ற பாவனையில், “அத்தான்!! அதெல்லாம் வேண்டாம். பாவம் மிருதுளா.” என்று கெஞ்சுவது போல நடிக்க, அவனோ, “நீ ஏற்பாடு செய்றியா, இல்லை நானே ஏற்பாடு செஞ்சுக்க வா?!” என்று கர்ஜிக்க, “ஐயையோ!! வேண்டாம் அத்தான். நம்ம குடும்ப மானம் என்ன ஆகுறது. நானே டெஸ்ட் செஞ்சு ரிசல்ட் எடுத்துட்டு வரேன். ஆனா உடனே டெஸ்ட் செஞ்சு ரிசல்ட் தருவாங்களான்னு தெரியலையே.” என்று சொல்ல, இவனோ, “எவ்ளோ பணம் வேணும்னாலும் கட்டிடு சரண்யா. எனக்கு உடனே வேணும்.” என்று கோபாமாகச் சொல்ல, அவளோ சிறு யோசனைக்குப் பிறகு, “சரி அத்தான்.” என்று பதில் சொல்லவும், சந்துரு தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

Advertisement

அவள் சொன்னது போலவே, அடுத்தச் சில தினங்களில், டெஸ்ட் ரிசல்டை கொண்டு வந்து கொடுக்க, அதைப் பிரித்து, ரிசல்ட் பகுதியை இவன் பார்க்க, அதில், மிருதுளாவின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இவன் தந்தை இல்லை என்ற உண்மை தெரியவர, கொதி நிலைக்குச் சென்றவன், அந்த DNA TEST RESULT ஃபைலுடன் மாடியேறி, மிருதுளாவின் முகத்தில் வீசி எரிந்து, அவளைத் திட்டியவன், அன்று மாலையே பஞ்சாயத்தில் வைத்து, அவளைத் தன் வாழ்கையில் இருந்து விளக்கி கொள்ள, பஞ்சாயத்திலும் ஒரு மனதாக இரு குடும்பமும் சம்மதம் சொல்ல, அனைவரின் முன்பும், இருவீட்டு பெரியவர்களும், பெண்ணும், மாப்பிளையும் தங்களுக்குள் இனி எந்தப் பந்தமும் இல்லை என்று எழுதப்பட்டிருந்த பத்திரத்தில் கையொப்பமிட, இரு தரப்புக்கும் அந்தப் பத்திரத்தின் நகல் வழங்கப்பட்டுப் பஞ்சாயத்து முடித்துவைக்கபட்டது.

Advertisement

அதன் பின் தான் பெற்றோருடன் சென்னைக்குத் திரும்பும் பொழுது, மிருதுளாவிற்குப் பிரசவ வலி வந்து, குழந்தை பிறந்து, அதை மோகன் அனாதை ஆஷ்ரமத்தில் விட்டு என்று எல்லாம் நடந்து முடிந்தது.

இதற்கிடையில், மீனாட்சியைப் பார்க்க ஆரா அவர் வீட்டுக்கு வந்தபொழுது, அவளுக்கும் மீனாட்சிக்கும், சரண்யாவுக்கும் வாக்குவாதம் நடக்க, அதில் சரண்யா எல்லா உண்மையும் சொன்னதை, அந்த அறைக்கு எதேர்ச்சையாக வந்த சந்துரு கேட்க நேர்ந்தது.

சரண்யா சொன்ன உண்மை என்னவென்றால், அன்றைய தினம், மிருதுளா சந்துரு இருவரும், மருத்துவமனை வந்துவிட்டு போன சில தினங்களில், அவர்களின் டெஸ்ட் ரிசல்ட்டை அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், தொழில் ரீதியாக, தனது உதவியாளர் என்ற முறையில் சரண்யாவை அழைத்துச் சொல்ல, அவளோ, இவர்கள் என் சொந்தம் தான். அத்தோடு மீனாட்சி இதய நோயாளி, ஆகையால், நானே அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி விடுவதாகச் சொல்ல, பக்கத்தில் இருந்த நர்சும், இவர்கள் சொந்தகாரர்கள் தான் என்று சொல்ல, சரி நீயே சொல்லிக்கொள்ள என்று பொறுப்பை இவளிடம் ஒப்படைத்துவிட்டார் அந்த மருத்துவர்.

Advertisement

அதன் பின், மீனாட்சிக்கு போன் செய்த சரண்யா, அவரிடம் தனியாகப் பேச வேண்டும் சொல்ல, இருவரும் தனிமையில் சந்தித்தனர். அப்பொழுது இவள், சந்த்ருவிற்குத் தான் குறை என்று ரிசல்ட் வந்திருப்பதாக, பக்குவமாக அவரிடம் எடுத்து சொல்ல, கேட்டதும் பதறி போனவர், “ஐயையோ!!! என் பையனுக்கு இப்படி ஒரு நிலைமையா!! மீனாட்சி தாயே, என் பையனுக்கு இப்படி ஒரு சோதனையா!! நாங்க யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்!!! இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா ஊருல ஒருத்தன் எங்களை மதிக்க மாட்டனே!! நான் இனி என்ன பண்ணுவேன்!!!” என்று புலம்பி தள்ள, ஒருவழியாகச் சரண்யா, அவரைச் சமாதனம் செய்ய,

மீனாட்சியோ கலக்கத்துடன், “இதுக்கு வேற வழியி இல்லையா மா??” என்று சரண்யாவிடம் கேட்க, தயங்குவது போலப் பாவனைச் செய்தவள், பின், “ஒரே ஒரு வழி இருக்கு அத்தை. அதை எப்படியாவது மிருதுளாக்கு தெரியாத மாதிரி செஞ்சு முடிச்சிட்டா, உங்க குடும்ப மானத்தைக் காப்பாத்திடலாம். ஆனா அதுக்கு நீங்க சம்மதிக்கணுமே.” என்று சொல்ல, மீனாட்சி, எதுவென்றாலும் பரவா இல்லை, என் மகனின் மானம் தான் முக்கியம் என்று சொல்ல, சரண்யா அந்த வழியைச் சொன்னாள்.

அதாவது, மிருதுளாவின் கர்ப்ப பையில் இன்னொரு ஆணின் விந்தணுவை, செயற்கை முறையில் செலுத்தினால், அடுத்த ஒரு மாதத்திலேயே அவள் கர்ப்பம் தரிப்பாள். இப்படிச் செய்வதால் குழந்தை தன்னுடையது இல்லை என்று சந்துருக்குத் தெரியாது. அதன் பின் குழந்தை நன்றாகப் பிறந்துவிட்டால், யாரும் சத்ருவை கேள்வி கேட்க முடியாது. குடும்ப மானமும் காப்பாற்றப்படும் என்று தந்திரமாக இவள் அவரைக் குழப்பிவிட, சரண்யா சொன்னதைக் கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தவர், இப்படிச் செய்யலாமா, அது தப்பு இல்லையா?! என்று யோசிக்க, இவளோ எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சந்த்ருவிற்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. அதன்பின் இதை வைத்து ஊருக்குள் பேச்சு வரும். அப்புறம் குறை உங்கள் மகன் மேல் தான் என்று தெரியவந்தால், அத்தானுக்கு எவ்வளவு அவமானம் என்று அவரின் பலகீனமான பாயினட்டை சரியாகத் தாக்க, பல மணி நேரம் யோசித்தவர், இறுதியில் சரி என்று ஒத்துக் கொண்டார்.

அதன் பின், அடுத்த நாள் மிருதுளாவை மருத்துவமனைக்கு அழைத்துவர சொன்னவள், அப்பொழுது, தான் சொல்லபோகும் போலியான காரணத்தையும், அதைக் கேட்டதும் இவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அப்பொழுதே சொல்லி கொடுத்து அனுப்பி வைத்தாள். தான் சொன்னதை எல்லாம் நம்பி செல்லும், மீனாட்சியைப் பார்க்கும்பொழுது இவளுக்குச் சிரிப்பாக வந்தது.

உண்மையில், குறை சந்துரு மேல் தான் என்றாலும், அது மாத்திரை மருந்துகளால் குனப்படுத்தக் கூடியது. ஆனால் இந்த விவரத்தை மீனாட்சியிடம் இருந்து மறைத்துவிட்டாள் சரண்யா. காரணம், இவரின் முட்டாள் தனத்தைப் பயன்படுத்தி, மிருதுளா பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, அதை வைத்து எப்படியாவது மிருதுளாவை சந்த்ருவின் வாழ்கையில் இருந்து துரத்திவிட்டு, அதன் பின் மீனாட்சியையும், சந்துருவையும் எப்படியாவது சம்மதிக்க வைத்து, மீனாட்சிக்கு மருமகளாகி, அவரிடம் இருந்து கொத்து சாவியை வாங்கிக்கொண்டு, சூழ்நிலையால் ஏழை ஆகிவிட்ட தன் குடும்பத்தை இழிவு படுத்திய அவரை, கொடுமைபடுத்தி, பணத்துக்குத் தன்னிடம் கையேந்த வைத்து, கிட்டதட்ட அவரைச் செல்லாகாசாக மாற்றி, அவர் கஷ்டபடுவதைப் பார்த்து வாழ்க்கை முழுவதும் சந்தோஷபட வேண்டும் என்று திட்டம் தீட்டி இருந்தாள். இவளின் சூழ்ச்சி தெரியாமல் மீனாட்சியும், தன் மகனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று கவலையுடன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

சரண்யா சொன்னபடி, அடுத்த நாள் மருத்துவமனை வந்த மிருதுளாவிடம் அவள் மேல் குறை இருப்பதாகச் சொல்லி அதற்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று நம்பவைத்த சரண்யா, அதே நரம் தலைமை மருத்துவரிடமும், மிருதுளா செயற்கை கருத்தரிப்புக்கு சம்மதித்து விட்டதாகவும், ஆனாலும் இந்த விஷயம் வெளியே தெரியவேண்டாம் என்று அவர்கள் குடும்பம் விரும்புவதாகச் சொன்னவள், மீனாட்சியைத் துணைக்கு அழைத்து வந்து அதைச் சொல்ல, மருத்துவரும் சரி என்று சம்மதித்தார். அத்தோடு மிருதுளாவிடமும், மருத்துவர் பார்மாலிட்டுக்கு உங்களுக்குச் சம்மதமா என்று கேட்டால், சரி என்று சொல்லுமாறு சொல்லி வைத்துவிட்டாள்.

அதன்படி ஆரம்பகட்ட டெஸ்ட் என்ற பெயரில், சரியான நேரத்தில் (ovulation period), Intrauterine insemination (IUI) என்ற கருத்தரிக்கும் முறைப்படி, செயற்கையாக, ட்யுப் வழியாக, வேறு ஒரு ஆணின் விந்தணுவை மிருதுளாவின் கர்ப்பபையில் செலுத்தினார்கள். நடக்கும் சூழ்ச்சி எதுவும் தெரியாமல், இந்த ட்ரீட்மென்ட்டுக்கு பிறகாவது எப்படியாவது தான் கருத்தரித்திட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் மிருதுளா. இதில் மற்றொரு விஷயம் என்வென்றால், மிருதுளாவிடம் சொல்லப்பட்ட, hysterosalpingography டெஸ்டும், Intrauterine insemination (IUI) ப்ரோசீஜரும் ஒரே மாதிரி செய்யபடுவது என்பதால், மிருதுளாவிற்கு எந்தச் சந்தேகம் வர வாய்ப்பில்லை.

வேறு ஒரு ஆணின் விந்தணு மிருதுளாவின் கர்ப்பபையில் செலுத்தப்பட்டு இருப்பதால், சந்துருவுடன் கொஞ்ச காலத்திற்குக் கணவன் மனைவி உறவு வைத்துகொள்ள வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருந்தாள் சரண்யா. ஏனெனில் இந்த முயற்சி தோல்வி அடைவதை அவள் விரும்பவில்லை.

இந்த IUI முறையில் சில சமயம் ட்ரீட்மென்ட்துக்கு முன்பும், பின்பும் ஹார்மோன் மாத்திரைகள் கொடுக்கபடும், ஆனால் அது பெண்ணின் கர்ப்பப்பையில் சில பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில். ஆனால் இங்கே மிருதுளாவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லாததால், அவளுக்கு மாத்திரைகளும் கொடுக்கப்படவில்லை. அதுவும் சரண்யாவிற்குச் சாதகமாகப் போய்விட்டது.

இந்த IUI முறையில், கருத்தரிக்க வாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, சில சமயங்களில், மீண்டும் ஒரு முறை விந்தணு செலுத்தப்படும். அதன்படி, ஒரு வாரம் கழித்து ட்ரீட்மென்ட் என்ற பெயரில் மீண்டும் வரவழைக்கப்பட்ட, மிருதுளாவிற்கு, உரை நிலையில் வைக்கப்பட்ட அதே விந்தணு, மீண்டும் செலுத்தப்பட்டதோடு, அவளின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு அதில் progesterone and estrogen ஹார்மோன் லெவல் செக் செய்யப்பட்டது. பின் பதினைந்து நாட்கள் கழித்து, ப்ரெக்னன்சி டெஸ்ட் எடுக்கப்பட, அதில் அவள் கர்ப்பம் தரித்திருப்பது ஊர்ஜிதம் ஆனது. நடந்து கொண்டிருந்த எந்தச் சூழ்ச்சியும் தெரியாமல், தான் அம்மாவாகப் போகிறோம் என்ற சந்தோஷத்தில், மிருதுளா மகிழ்ந்திருக்க, விதி அவள் வாழ்கையில் விளையாடி கொண்டிருந்தது. ஆனால் நாரதர் கழகம் நல்லதுக்கே என்பது போலச் சரண்யா செய்த சதியால், சந்துரு என்ற காரிருள் மிருதுளாவின் வாழ்கையில் இருந்து விலக, கௌதம் என்னும் சூரியன் அவள் வாழ்கையில் உதித்தான்.

இவற்றை எல்லாம் சரண்யா ஆராவிடம் சொல்லிக் கொண்டிருக்க, இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சந்துருவிற்கு, தன் வாழ்கையே முடிந்து போனது போல இருந்தது. ஆனால் இவனின் குறை தீர்க்கப்படக் கூடியது என்பது சரண்யாவிற்கு மட்டும் தான் தெரியும். ஆரா சென்றதும், கோபத்துடன் அறைக்குள் சென்றவன், அவர்கள் இருவரிடமும் சண்டை போட, தன் வாழ்க்கைக்கு, தன் பெயர் கலங்கபடாமல் இருப்பதற்கு மிருதுளா மற்றும் அவளுக்குப் பிறந்திருக்கும் குழந்தையால் தான் முடியும் என்பதால், இவளை தேடி வந்தான். பல மாத போராட்டத்திற்குப் பிறகு எப்படியோ ஒருவழியாக மிருதுளாவை பார்க்க முடிந்தாலும், அவள் இன்னொருவனுக்கு மனைவியாக இருப்பாள் என்று இவன் எதிர்பார்கவில்லை.

அதன் பிறகு எத்தனையோ முயற்சி செய்தும், மிருதுளாவை இவனால் திரும்ப அடைய முடியவில்லை. இப்படி இவனே நொந்து இருக்கும் சமயம், கெளதம் வந்து இவனை அடித்துச் சென்றது, அவன் மேல் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆகையால், அவள் என் மனைவி என்று பெருமையாகச் சொன்னவனுக்கு, பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், அடுத்த வாரமே அதற்கான முயற்சியில் இறங்கினான்.

இதற்கிடையில், ஆராவும், ஜெய்யும் இந்தியா வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்திருக்கும், அன்று காலை கெளதம் பெயருக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் ஒன்று வந்தது. இவன் சென்று, கையெழுத்திட்டு அந்தச் சீலிடப்பட்ட கவரை வாங்கிப் பிரித்துப் பார்க்க, உள்ளே வக்கீல் நோட்டிஸ் ஒன்று இருந்தது. கேள்வியுடன் அதைப் பிரித்துப் பார்க்க, அதில் சொல்லப்பட்ட செய்தியையும் பார்த்து அதிர்ந்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!