Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 37.2

அத்தியாயம் 37 (2)

அடுத்த ஒரு மணி நேரத்தில் பரத் போன் செய்து, “ஆமாம் மச்சான். அத்தை தான் உனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சந்துருன்னு மதுரைல இருந்து யாரோ வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்களாம்.” என்று விவரத்தை சொல்ல, “ரொம்ப நன்றி டா மச்சான். அப்புறம் இது சம்பந்தமா உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டி இருக்குடா. நீ எப்போ ப்ரீயா இருப்ப??”

“இன்னைக்கு மதியம் லஞ்ச டைம்ல மீட் பண்ணலாம், பிரெஷ் ஜூஸ் கேபேக்கு வரியா?”

“சுயூர் டா. தேங்க்ஸ் டா மச்சான்.”



Advertisement

“டேய் எதுக்கு டா தேங்க்ஸ். பிச்சிடுவேன் பிச்சு. சரி டா. மனஜெர் வரான். நான் வைக்கிறேன். மதியம் மீட் பண்ணலாம்.”

“ம்!! சரி டா. பை.”

நண்பனிடம் பேசி முடித்தபின் தான், கௌதமிற்குக் கொஞ்சமே கொஞ்சம், மனம் ஒரு நிலைக்கு வந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும், பரத்தின் அத்தையை நேரடியாகப் போய்ச் சந்திக்க வேண்டும். அதுதான் நல்லது என்று முடிவு செய்துக்கொண்டான்.

Advertisement

அடுத்து நேரம் வேகமாக ஓடி, மதிய வேளை வரவும், மிருதுளாவிடம் சொல்லிக்கொண்டு, நண்பன் சொன்ன இடத்திற்குச் சென்றான். சில நிமிடம் பொதுவான நலவிசாரிப்புகு பிறகு, “அப்புறம் சொல்லு மச்சான், எவன் டா அந்தச் சந்துரு?!! சிஸ்டரும் அவனும் லீகலா இன்னும் பிரியலையா?? உனக்கு நோடீஸ் அனுப்புற அளவுக்கு வந்திருக்கான்?!! இந்தத் தைரியம் எங்கே இருந்து வந்தது?? ரொம்பத் திமிர் பிடிச்சவனோ??” என்று பரத் கேட்க, சில நாட்களுக்கு முன்பு முதன் முறை சந்துருவை பார்த்ததில் இருந்து, சமீபத்தில் அவன் வீட்டிற்குச் சென்று அவனை அடித்தது வரை சொன்ன கெளதம், “அவ்ளோ தூரம் சொல்லியும், தைரியமா இப்படி லாயர் நோடீஸ் அனுப்புறான்னா என்ன தைரியம் டா அவனுக்கு. இதுல என்னோட மாமனார் வேற அவன்கிட்ட இருந்து டைவோர்ஸ் வாங்கலன்னு சொல்றாங்க. எனக்கு அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு டா. இவனால எங்க லைப்ல எதாவது பிரச்சனை வந்துடுமோன்னு.” என்றவனின் குரல் லேசாகக் கலங்க,

Advertisement

“டேய்!! மச்சான்! இதுக்கு எதுக்கு டா கவலைபடுற. சிஸ்டரை மீறி அவனால ஒன்னும் பண்ண முடியாது. அவங்க விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா, அந்தச் சந்துரு கூட ஒன்னும் செய்ய முடியாது. அவங்க போல்டா ஸ்டேட்மெண்ட் கொடுக்கணும். நீ ஒன்னும் அஃப்செட் ஆகாதடா. எல்லாம் நல்லபடியா நடக்கும். அம்மாக்கு உன்னைப் பத்தி நல்லா தெரியும் டா. அவங்க கிட்ட சொல்றேன். நானும் அத்தைகிட்ட பேசுறேன். அவங்க இதுல எக்ஸ்பெர்ட். அவங்க பார்த்துப்பாங்க.” என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்ல,

“ரொம்பத் தேங்க்ஸ் டா.” என்றான் கெளதம்.

“நான் வரும்போதே அத்தை கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். அவங்க உன்னையும் சிஸ்டரையும் சென்னைக்கு வந்து அவங்களைப் பார்க்க சொன்னாங்க. இன்னைக்கு ஈவ்னிங் பிளைட் இருக்கு. நீயும் சிஸ்டரும் கிளம்பி போயிட்டு வாங்க டா.”

Advertisement

“சரி டா. அப்புறம் அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க??”

“எல்லாரும் நல்லா இருக்காங்க டா. ரெண்டு பேரும் சென்னைல தான் இருக்காங்க. ஸ்வேதாக்குக் காலேஜ் லீவ். அதான் அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க.” என்று கூடுதல் விவரம் சொல்ல,

“அட!! அப்படியா டா. ரொம்ப நல்லதா போச்சு. அப்படியே அம்மாவையும், தங்கச்சியையும் பார்த்துட்டு வரலாம்.” என்றவன் அடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு நண்பனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.

அதன் பின் வீட்டுக்கு வந்தவன், பெரியவர்களிடம் விவரத்தை சொல்ல, அதுவரை அடுத்து என்ன செய்ய, என்று தவித்துக்கொண்டு இருந்தவர்கள், கெளதம் சொன்னதும், கொஞ்சம் ஆஸ்வாசம் அடைந்தவர்கள், இவர்கள் புறப்படுவதற்கு உதவி செய்தனர். கெளதம் நண்பனின் துணையுடன், ப்ளைட் டிக்கெட் எடுக்க, அதற்குள் மிருதுளா இருவருக்கும் ஒரு செட் ட்ரெஸ், மற்றும் இதர பொருட்கள், கூடவே தேவையான டாக்குமென்ட்ஸ் எல்லாவற்றையும் எடுத்து வைத்து பேக் செய்துக்கொண்டாள்.

சென்னையில் மிருதுளாவின் வீட்டின் மாடியில், ஒரு அறை கொண்ட சின்னப் போர்ஷன் இருப்பதால், அதன் சாவியைக் கௌதமிடம் கொடுத்து, அங்கேயே தாங்கிக்கொள்ளச் சொன்னார் மோகன். அத்தோடு, அவர்கள் இருவரும் அங்கே இங்கே பிரயாணம் செய்ய வேண்டி இருப்பதால், குழந்தையை இங்கே விட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினார் மிருதுளாவின் தாய். தேஜாவை நினைத்து மிருதுளா தயங்க, ஒன்று இரண்டு நாளில் ஒன்றும் ஆகாது. இரண்டு பெண்கள் இருக்கிறோம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சித்ரா, உறுதியாகச் சொல்லவும், ஒரு மனதாகச் சம்மதம் சொன்னாள்.

நேரம் வேகமாக நகர, மாலை இருவரும் கிளம்பும் நேரம் வந்தது. விஷயம் தெரிந்து, ஆராவும், ஜெய்யும் மாலை சீக்கிரமே வீட்டிற்கு வந்தனர். கிளம்பும் வரை, மிருதுளாவிற்குத் தைரியமாக இருக்கும்படியு அறிவுரை வழங்கிய ஆரா, “அக்கா!!! நீ ஸ்ட்ராங்கா இருக்கனும். அவர் செஞ்ச கொடுமையை எல்லாம் சொல்லு. அவர் தான் வேண்டாம்னு பிரிஞ்சு போனார். இத்தனை நாள் இல்லாம இப்போ வந்து தொல்லை பண்றாரு. அவரை எனக்குப் பிடிக்காது சொல்லிடு.” என்று காரில் ஏறும் வரை அக்காவை தைரிய கொடுத்துக்கொண்டே இருந்தாள் ஆரா.

ஜெய் காரை ஓட்டிக் கொண்டிருக்க, பின் இருக்கையில் கௌதமும், மிருதுளாவும் அமர்ந்திருந்தனர். எல்லோரும் பக்கத்தில் இருக்கும் வரை ஒன்றும் தெரியாமல் இருக்க, இப்பொழுது பயணத்தை ஆரம்பித்த பிறகு, மிருதுளாவிற்கு, அந்த நேரம் வரை இருந்த தைரியம் எல்லாம் வடிந்துவிட, உடம்பெல்லாம் ஒரு நடுக்கம் உண்டாக, அடுத்து என்ன நடக்குமோ என்று நெஞ்சுக்குள் ஒரு வித திகில் பரவி இருந்தது. அதன் பயனாகக் கைகள் இரண்டும் சில்லிட, உடலில் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதை உணர்ந்த கெளதம், அவளது கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன், மெல்லிய குரலில், “கவலை படாத அம்மு. நான் இருக்கேன்ல கூட. அப்புறம் எதுக்குப் பயப்படுற. என்னை மீறி எதுவும் நடக்காது.” என்று சொல்லி, கைகளில் சிறு அழுத்தம் கொடுக்க, அவளின் பயம் கொஞ்சம் குறைந்தது.

வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஜெய்யும், “அண்ணி, பயபடாதீங்க. இது ஜஸ்ட் லாயர் நோட்டீஸ் தான். நீங்க உங்க பக்க உண்மையை விவரமா சொன்னா, உங்களை மீறி யாரும் எதுவும் செஞ்சுட முடியாது. அதுவும் இல்லாம, லாயர், அண்ணாவோட பிரன்ட் ரிலேடிவ் தான். அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லுங்க. சந்துரு தானே பிரிஞ்சு போனாரு. அப்புறம் எப்படி அவர் இந்த மாதிரி நோட்டீஸ் கொடுக்கலாம்?!! நீங்க தைரியமா பேசுங்க அண்ணி. அது போதும். ஆவன்லாம் ஒரு ஆளு.” என்று சொல்ல, அவனின் பேச்சு இன்னுமே மிருதுளாவிற்குத் தைரியத்தைக் கொடுத்தது.

அரை மணி நேரத்தில், ஏர்போர்ட் வந்துவிட, ஜெய்யிடம் விடை பெற்றுக்கொண்டு, இருவரும் தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு போர்டிங் முடிந்து, அடுத்த அரை மணிநேரத்தில் பிளைட்டில் அமர்ந்திருந்தனர். ஜெய் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

முதல் முறை விமானப் பயணப் பயமும், கூடவே அப்போதைய சூழ்நிலையும் ஒருவித கலக்கத்தைக் கொடுக்க, ஜன்னல் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து, கண்களை இறுக மூடி, தலை சாய்த்து அமர்ந்திருந்த மிருதுளாவின் கைகள் நடுங்க, மனைவியின் கைகளை ஆதரவாகப் பற்றிக்கொண்டான் கெளதம். அதில் கண்திறந்த மிருதுளா, இவனைப் பார்த்துச் சங்கடமாகச் சிரிக்க, அவள் காதருகே குனிந்தவன் மெல்லிய குரலில், “எதுக்கு அம்மு, வேஸ்டா ஹேன்ட் ஹோல்டரை பிடிக்கிற, அதான் உன் புருஷன் நான் இருக்கேனே. என்னை டைட்டா ஹக் செஞ்சுக்கோ. பிளைட் பயம் கூடவே வேற எதுவும் பயமும் இருந்தாலும் போய்டும். போக வச்சுடுவேன்.” என்று ஹஸ்கி குரலில் கூற, “உங்களை!!!” என்று முறைக்க முயன்று தோல்வி அடைந்தவள், பக்கென்று சிரித்துவிட்டாள்.

“இப்படிச் சிரிச்சிட்டே இரு அம்மு. இதுதான் அழகா இருக்கு. அதைவிட்டுட்டு…” என்று பதிலுக்குக் கெளதம் சலித்துக்கொள்ள, சிரிப்புடனே தன் முகத்தைச் சரிபடுத்திக் கொண்டாள் மிருதுளா. அப்பொழுது பிடித்த கையை, சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி, கேப் பிடித்து, வீடு வரும் வரை விடவில்லை கெளதம். அவனால் மிருதுளாவின் உணர்வுகளை, ஒரு கணவனாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஏற்கனவே சித்ரா, தங்கள் வீட்டில் கீழ் போர்ஷனில் வாடகைக்கு இருப்பவரிடம், விவரத்தை சொல்லி இருந்ததால், இவர்கள் போகும் நேரம், வாசல் கேட்டை திறந்து வைத்து, இவர்கள் வரும் நேரம் வெளியே வந்த குடியிருக்கும் பெண்மணி, “வா மா மிருதுளா. எப்படி மா இருக்க?? அம்மா சொன்னாங்க, நீ வருவன்னு. வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று அன்பாக நலம் விசாரித்தவர், கூடவே, ஒரு மூடிய தட்டில், சில சப்பாத்திகள், டிப்பன் பாக்ஸில் கொஞ்சம் உருளைக்கிழங்கு கிரேவியும் கொண்டு வந்து தந்தவர், “இதுல சப்பாத்தி, உருளைக்கிழங்கு மசாலா இருக்கு மா. சாப்பிட்டுக்கோ. டைம் ரொம்ப ஆச்சு. இந்நேரம் கடை எதுவும் இருக்காது.” என்று கூற, நன்றியுடன் அதை வாங்கிக்கொண்ட மிருதுளா, “தேங்க்ஸ் ஆண்டி.” என்றாள்.

அடுத்து மேலே சென்று, ரூமை பெருக்கி, பெட்டியை வைத்துவிட்டு, இருவரும் சாப்பிட்டு முடித்ததும், கெளதம், தனது நண்பனுக்கு அழைத்துப் பேசிவிட்டு, நாளை அவனின் அத்தையை எத்தனை மணிக்கு பார்க்க முடியும் என்பதைக் கேட்டுச் சொல்ல சொல்ல, பரத்தும், உடனே தன் அத்தைக்குப் போன் செய்து பேசிவிட்டு, மீண்டும் கௌதமை தொடர்பு கொண்டவன், மதியத்திற்கு மேல் ஒரு கேஸ் இருப்பதால், அதற்குள் பார்க்க போகும்படி சொல்லிவிட்டு வைத்தான். அதற்குள் நேரம் இரவு பதினோரு மணியைத் தாண்டிவிட, வீட்டிற்குப் போன் செய்து பேசினார் இருவரும்.

கெளதம் அசதியாக இருப்பது போலத் தெரிய, பரணில் போட்டு வைத்திருந்த பாய், தலையணையை எடுத்து போட்டு விரித்து, கௌதமை மிருதுளா படுக்கச் சொல்ல, அவனோ, “என்னை விட நீதான் அம்மு டயர்டா இருக்க. மொதல்ல நீயும் படு.” என்றவன், அவளையும் தன் அருகே அமர்த்தி, தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். மனதில் ஓடி கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தில், மிருதுளாவிற்குத் தூக்கம் வராமல் இருக்க, அதைக் கவனித்த கெளதம், கவலையில் இருந்து அவளைத் திசை திருப்பும் பொருட்டு, “அம்மு, எதையும் நினைக்காம நல்லா தூங்கு. இல்லன்னு வச்சுக்கோ, பாப்பா வேற பக்கத்தில் இல்லை. அப்புறம் ஏதாவது ஏடா கூடமா ஆகிட போகுது. என்று கூறிவிட்டு சிரிப்புடன் மிருதுளாவின் கன்னத்தில் இதழ் பதிக்க, இவனின் இந்தத் திடீர் செயலில், வருத்தம் மறைந்து, சிரித்தவள், “உங்களுக்கு எப்போ பாரு இதே நினைப்பு.” என்று சொல்லி அழகாக வெட்கப்பட, “அடிபாவி, பொண்டாட்டி பக்கத்தில இருந்தா, புருஷனுக்கு இந்த நினைப்பு இல்லாம, பஜனை நினைப்பா இருக்கும்.” என்று சலித்துக்கொள்ள, “இருக்கும், இருக்கும், அதுக்குனு ஒரு காலம் நேரம் இருக்கு.” என்று சொன்னவள் கௌதமை பார்த்துப் போலியாக முறைக்க, “அப்போ இப்போ ஓகே வா அம்மு.” என்று ஹஸ்கி குரலில் அவள் காதில் ரகசியம் போலக் கேட்க, “ஹம், இல்லை. தூங்குங்க.” என்று சொன்னவளோ, வெட்கத்தில் குனிந்துகொள்ள, கெளதமோ, அவள் இதழில், தன் இதழ் ரேகைகளை அழுத்தமாகப் பதித்தான்.

கவலைகள் மறந்து அவள் வெட்க்கபடுவதை பார்த்த பிறகு தான் கௌதமிற்கு மனமே சற்று நிம்மதி அடைந்தது. ‘என்னை மீறி உன்னை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது அம்மு.’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன், தன் மனைவியை இறுக்கமாக அணைத்துக்கொண்டு உறங்கி போனான்.

அடுத்த நாள், தாங்கள் போக இருக்கும் ராஜேஸ்வரி வீட்டில் வைத்து தான், தங்கள் பந்தத்தின் ஆணி வேரையே தெரிந்துகொள்ளப் போகிறோம் என்று அவர்களுக்கு யார் சொல்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!