Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Epsidoe 14.2

“அப்பா ப்ளீஸ்.  கண்டிப்பா நான் அவனை பார்த்து ஆகணும்.  புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.” என்று முகத்தை  பாவமாக வைத்துக் கொண்டு கேட்டான் மாதவன்.

 

“சரிடா சரிடா .அதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுற வந்து விடுகிறேன்.” என்றார் அண்ணாமலை.

 



Advertisement

பிறகு சுதாராணி பக்கம் திரும்பி

 

“சுதா வடபழனி முருகன் கோவிலில் கடை இருக்கும்.  அதுல இதை வாங்க போறேன் அதை வாங்க போறேன்u ப்ளீஸ் டைம் பாஸ் பண்ணிடாத.” என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.

Advertisement

 

Advertisement

“சரி அண்ணா.  நான் டைம் வேஸ்ட் பண்ண மாட்டேன்.  ஓகே வா?” என்றாள்.

 

“சரி. எதுக்கும் நான் காரை விட்டுட்டு வெளியவே நிற்கிறேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு 15 நிமிஷத்துல வந்துடனும். ஓகேவா? 15 நிமிஷம்.” என்று மீண்டும் மீண்டும் கூறிவிட்டு இருவரையும் அழைத்துக்கொண்டு வந்து வடபழனி முருகன் கோவிலின் முன் காரை நிறுத்தினான்.

Advertisement

 

 

 

“நான் போய் காரை பார்க் பண்ணிட்டு வரேன்.” என்றான் மாதவன்.

 

கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த பார்க்கிங்கில் அவனது காரை நிறுத்தினான் மாதவன்.

 

காரை விட்டு இறங்கிய அண்ணாமலை மகளுடன் கோயிலை நோக்கி நடந்தார்.

 

“இருமா நான் போய் ரெண்டு அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வரேன்.” என்று அண்ணாமலை மகளிடம் கூற

 

“அப்பா அண்ணன் சீக்கிரமா  வர சொல்லுச்சு இல்ல? அவன் அப்படி தான் சொல்லுவான். நீ இருமா.” என்றவர் கடைக்கு சென்று தேங்காய் பூ பழம் வெற்றிலை பாக்கு என்று இருந்த 2 அர்ச்சனை தட்டுகளை வாங்கி கொண்டு வந்தார்.

 

வடபழனி முருகன்  கோவில் கோபுரத்தை பார்த்து இரு கைகளையும் கூப்பி கும்பிட்டார்.

 

“முருகா,  பழனி ஆண்டவா எல்லோரையும் காப்பாற்று.” என்று வாய்விட்டு வேண்டியபடி வாயிலை நோக்கி சென்றார்.

 

வாயிலில் கோயிலுக்குள் நுழைபவர்கள் காலை கழுவுவதற்காக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் கால்களை நினைத்தார் அண்ணாமலை.

தந்தையைப் பார்த்து மகளும் அப்படியே செய்தாள். இருவரும் உள்ளே சென்று  விநாயகரை தரிசனம் செய்தனர்.

ஒரு அர்ச்சனை தட்டை எடுத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய கொடுத்தார்.

 

அதனை வாங்கிய புரோகிதர் மந்திரம் கூறி விநாயகருக்கு அர்ச்சனை செய்து முடித்து  தீபாராதனை காட்டி விபூதி கொடுத்தார்.

 

அதை வாங்கி நெற்றியில் மூன்று பட்டை ஆக போட்டுக்கொண்டார் அண்ணாமலை.  பிறகு முருக பகவானை தரிசிப்பதற்காக வந்தனர்.

 

சுதாராணி “அப்பா என்னப்பா இவ்வளவு கூட்டம் இருக்கு?” என்று மலைப்பாக கேட்டாள்.

 

“ஆமாமா.  இன்னிக்கி கிருத்திகை இல்லையா அதனால க்யூ ரொம்ப பெருசா இருக்கு.”

 

“அப்பா பேசாம 20 ரூபாய் டிக்கெட்   வாங்குங்க. இல்லனா நமக்கு ரொம்ப லேட் ஆகிடும்.  அண்ணன் வேற அவசர பட்டுட்டு இருக்கு.” என்று சுதாராணி கூற அவரும்  20 ரூபாய் டிக்கெட் வாங்கினார்.

 

அப்படியும் முருகனை தரிசிக்க 15 நிமிடத்திற்கு மேல் ஆனது.

 

அதற்குள் மாதவன் அவரை கைபேசியில் அழைத்தான்.

“என்னப்பா சீக்கிரமா வாங்கன்னு சொன்னேன் இல்ல? வாங்கப்பா.” என்றான்.

 

“சரி சரி இப்ப வந்துடறேன்.” என்று கூறியவர் தொடர்பை துண்டித்தார்.

 

முருகனை தரிசித்து பிரகாரத்தை சுற்றி கொண்டிருந்தனர் இருவரும்.

 

காரை பார்க் செய்துவிட்டு   கோயிலிலிருந்து தந்தையும் தங்கையும் வருவதற்காக காத்திருந்தான் மாதவன்.

 

20 நிமிடத்திற்கு மேல் ஆன பிறகும் அவர்கள் வருவதாக தெரியவில்லை.

 

ஒரு முறை தந்தைக்கு போன் செய்து கூப்பிட்டு பார்த்தான். அவர் வரவில்லை பத்து நிமிடம் காத்திருந்து விட்டு திரும்பவும் போன் செய்தான்.  ஆனால் அவர் அதனை  எடுக்க வில்லை.

 

எனவே சுதாராணிக்கு போன் செய்தான்.

 

“என்ன சுதா  சீக்கிரம் வர சொன்னேன் இல்ல?” என்று சுதா எடுத்தவுடனேயே சிறிது கோபமாக கேட்டான்.

 

அவள் “நான் என்ன பண்றது அப்பா எல்லா சாமியையும் தரிசித்துவிட்டு தான் வருவேன்னு சொல்றாரு. நீ அவருக்கு போன் பண்ணி பேசு.” என்று கூறினாள் .

 

“நான் போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்கிறார்.” என்று கோபமாகவே கூறினான் மாதவன்.

 

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு சுதா. நீயாவது புரிஞ்சுக்கோ.” என்று அவளிடம் கெஞ்சினான்.

மாதவன்.

 

“ சரி அண்ணா.  நான் அப்பாகிட்ட சொல்லி சீக்கிரமா கூட்டிட்டு வரேன்.” என்று கூறி தொடர்பை துண்டித்தாள்.

 

மாதவனால்  வெளியில் நிற்க முடியவில்லை.  மணி ஐந்தரையை தாண்டி ஆறு மணி ஆகியிருந்தது.  ‘இன்னிக்கு நாம போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகாது போல இருக்கு.’ என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டான்.

 

‘முருகா ஏன் இப்படி என்னை சோதிக்கிற? ஏற்கனவே அவளை எப்படி கரெக்ட் பண்றதுu புரியாம தான் அவங்க அப்பாவை கரெக்ட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

இப்போ அதிலேயும் மன்னா? அப்பாவை சென்னைக்கு கூட்டிட்டு வர்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா ?

ஏதோ இந்த கல்யாணத்தை யூஸ் பண்ணிக்கிட்டு எப்படியாவது ரெண்டு பேரையும் மீட் பண்ண வைக்கலாம்னு பார்த்தா,  நடக்காது போல தெரியுதே. நீயாவது என் மேல கருணை காட்டி கொஞ்சம் ஹெல்ப் பண்ண கூடாதா?

நீயும் வள்ளியை லவ் பண்ணி தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட.  ஒரு லவ்வரோட பீலிங் ஒரு லவ்வருக்கு தானே புரியும்?

 

ப்ளீஸ் முருகா எப்படியாவது இன்னைக்கு எங்க அப்பா என் வருங்கால மாமனாரை பார்த்துடனும்.  அதுக்கு நீதான் பொறுப்பு. அதுக்கு அவங்க சீக்கிரமா வெளியே வரணும்.’ என்று வெளியில் நின்று கொண்டே கோபுரத்தை பார்த்து வேண்டிக்கொண்டான் மாதவன்.

 

ஆனால் முருகர் வேறு சொன்னார்.

 

“டேய் முட்டாள்! உள்ள வந்து பாத்தாதானே டா உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியும்.  ஒரு முயற்சி முடியாதுன்னு ஆனதுக்கு அப்புறம் அடுத்த முயற்சி எடுத்தால் தானே வெற்றி அடைய முடியும்.  சும்மா நின்ன  இடத்திலேயே நின்னுகிட்டு என்னை வேண்டிக்கிட்டு இருந்தா போதுமா?

நான் என்ன உனக்கு நேர்ல வந்து ஆறுதலை 12 கையோடு காட்சி கொடுத்து மதுமிதாவின் கையை பிடிச்சு உனக்கு கொடுக்கணுமா? அப்படி தான் செஞ்ச நீ தாங்குவியா? நீ தானேடா அதற்கான முயற்சி எடுக்கணும்.” என்று அவனைக் கேட்டது அவனுக்கு தெரியவில்லை.

 

இப்படி பலவாறு யோசித்தவன் சரி திரும்ப கூப்பிட்டு பார்க்கலாம்  என்று திரும்பவும் கைபேசியை எடுத்து தந்தையின் எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

 

ஆனால் சுதாராணி தான் பேசினாள்,.

 

“நீ எதுக்கு எடுக்கிற?” என்று எரிச்சலாக கேட்டான் மாதவன்.

 

“நான் என்ன பண்றது ?அப்பாதான் என் கிட்ட போனை கொடுத்து பேச சொன்னாரு.”

 

“ஏன் அப்பா என்ன பண்றாரு?”

 

“அப்பா பிசியா இருக்காராம்.”

 

“என்னது பிஸியா இருக்காரா? கோயிலில் என்ன பிசியா இருக்காரு?” என்று மீண்டும் மாதவன் அவளை அதட்ட.

அவள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் பிறகு

“அவர் யார்…” என்று ஆரம்பித்து பிறகு

 

“கோயிலில் என்ன அண்ணா பண்ணுவாங்க? சாமியை பிரார்த்தனை பண்ணிக்கிட்டு இருக்காரு.  கொஞ்ச நேரம் நிம்மதியா பிரார்த்தனை பண்ண விடு.” என்று இவனிடம் கூறியவள்

தனக்குத்தானே “இவங்க ரெண்டு பேரு கிட்ட மாட்டிக்கிட்டு நான் தான் முழிக்க வேண்டியதா இருக்கு.” என்று நொந்து கொண்டது அவன் காதில் விழுந்தது.

 

“இப்ப நீ போன கொடுக்கிறியா இல்லையா?” என்று மிரட்ட வேறுவழியின்றி

 

“அப்பா  நீங்களாச்சு உங்க பையனாச்சு நடுவில் என்னை இழுக்காதீர்கள்.”  என்று அவள் கூறியது இவன் காதில் விழ இப்பொழுது அண்ணாமலை தான் பேசினார்.

 

“என்னடா என்ன வேணும் உனக்கு? நான் தான் வரேன்னு சொல்றேன் இல்ல?” என்று போனை வாங்கியவர் எரிச்சலுடன் பேச ஆரம்பித்தார்.

 

“கொஞ்ச நேரம் பேச….” என்று ஆரம்பித்தவர்

 

“கொஞ்ச நேரம் நிம்மதியா விடறியா?” என்று எரிந்து விழுந்தார்.

 

“அப்பா எத்தனை தடவை உங்க கிட்ட சொல்றது? எனக்கு முக்கியமா ஒரு பிரண்டை பார்க்க வேண்டிய வேலை இருக்கு.

சரி.  நீங்க இப்போ எங்க இருக்கீங்க? அதை சொல்லுங்க.” என்று கேட்டான்.

 

“சரிடா வர்றேன்.

நாங்க இப்போ ஆஞ்சநேயர் சன்னதி கிட்ட இருக்கிறோம்.” என்று தொடர்பை துண்டித்தார்.

 

‘உள்ள போய் இவங்கள கைய பிடிச்சி இழுத்துட்டு வந்தால் தான்  வருவாங்க’ என்று நினைக்கும் பொழுதே

அதே கார் பார்க்கிங்கில்

 

“அப்பா ரொம்ப நேரம் கோயிலுக்கு முன்னாடி காரை வச்சுக்கிட்டு நிக்க முடியாது. டிராபிக் ஜாம் ஆயிடும். உங்களுக்கு தெரியும்தானே. நான் இப்போ காரை எடுக்கிறேன்.

நீங்க கோயிலுக்கு முன்னாடி வந்து ரெடியா வெயிட் பண்ணுங்க.  சீக்கிரம் வந்துடுங்க அப்பா.” என்று அவன் சொன்னது போலவே யாரோ ஒரு பெண் தன் தந்தையிடம் கூறியது அவன் காதில் விழுந்தது.

 

‘இந்த குரல்…..’ என்று யோசித்த அவனுக்கு புரிந்து போயிற்று.

 

‘இது மதுமிதாவின் குரல்.  அவள் இங்கே எங்கே?’ என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

 

ஆனால் அவன் கண்களுக்கு அவள் எங்கும் தென்படவில்லை.  வேகவேகமாக இங்குமங்கும் திரும்பியும் இரண்டு அடி எடுத்து வைத்தும் தேடினான்.

 

அப்போது ரிவர்ஸ் எடுத்துக் கொண்டிருந்த காரின் பின் கவனிக்காமல் சென்று விட்டான்.

 

ஆனால் இவனை அந்த நொடி கவனித்த அந்த காரோட்டி காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தி ஹாரன் அடித்தது கேட்டது. அந்த சத்தத்தை கேட்ட மாதவன் சுதாரித்துக்கொண்டு நகர்ந்து காருக்கு இடம் விட ஒருசில நொடிகள் தேவைப்பட்டது.

 

அதற்குள் காரிலிருந்து எட்டிப்  பார்த்து

“கார் வருவது தெரியல?” என்று கோபமாக கேட்டது ஒரு பெண் குரல்.

 

‘அது அவள்தான்.  மதுமிதா தான்.

ஓ மதுமிதா’ என்று தனக்குள் கூறியவன் அடுத்த நொடி  ஓட்டுனர் இருக்கையை பார்ப்பதற்குள் அவள் தலையை உள்ளே இழுத்துக் கொண்டு கண்ணாடியை மேலே ஏற்றி விட்டாள்.

 

மாதவன் அந்த காரை பார்த்தான்.  அது அவளுடைய கார் தான்.

 

‘அப்போ மதுமிதா இங்கே வந்து இருக்காளா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

 

அதேநேரம் மூடியிருந்த கார் கண்ணாடி மீண்டும்  திறந்தது.  மாதவன் ஆர்வமாக மீண்டும் பார்க்க நினைக்கும் பொழுதே

“ஹலோ ப்ளூ ஷர்ட்.” என்று அவள் கூப்பிடுவது காதில் விழுந்தது.

 

அப்போதுதான் அவன் அந்த நீல நிற சட்டையை அணிந்துகொண்டு இருந்தது ஞாபகம் வந்தது.

 

‘அய்யய்யோ இந்த ஷர்ட்டில் அவள் என்னை  பார்த்து கண்டுபிடிச்சுட்டா?’  என்று நினைத்து அவள் பக்கம் திரும்பவே இல்லை.

 

அவள் மீண்டும்

“ஹலோ  ப்ளூ ஷர்ட்.  கொஞ்சம் திரும்புங்க.” என்று மீண்டும் வேகமாக கூற இவன் கையில் வைத்திருந்த கைபேசியை காதுக்கு கொடுத்து அதில் பேசுவது போல பாவனையுடன் பேசிக்கொண்டே அந்த இடத்தை காலி  செய்தான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!