Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 14.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

குளித்து முடித்து தன் பெட்டியை திறந்தான் மாதவன்.  அதில் இருந்த பேண்டை எடுத்து  அணிந்தவன் கட்டையை பார்த்தான்.

பார்த்தவன் அதிர்ந்தான். பெட்டியில் அவன் அன்று திருவிழாவில் அணிந்திருந்த நீலநிற சட்டை இருந்தது .



Advertisement

 

‘ஐயையோ! அம்மா இந்த ஷர்ட்டையா எடுத்து வச்சி இருக்காங்க? இந்த ட்ரஸ்ல அவ என்னை பார்த்தா ஒருவேளை கண்டுபிடித்து விடுவாளோ? நம்ம பிளான்படி நாம வேற சூளைமேடு போக வேண்டியிருக்கு.

 

Advertisement

என்னடா மாதவா உனக்கு வந்த சோதனை!

Advertisement

 

ஒழுங்கா நீயே டிரஸ் எடுத்து வைத்திருக்கலாம்’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

 

Advertisement

பிறகு ‘சரி நம்ம பிளானில் அவளை பார்க்கிற ஐடியா இல்லையே.  ஒருவேளை அவங்க வீட்டு பக்கம் நாம போயிருக்கும்போது அவ நம்மளை எதேச்சையா பாத்துட்டா, என்ன பண்றது?’ என்று முன்னெச்சரிக்கையாக யோசித்தான் மாதவன்.

 

‘சரி இப்பதான் வெளியே போகிறோம் இல்ல . வரும்போது ஒரு ஷர்ட் வாங்கிட்டு வந்தடலாம்.’ என்று ஒரு தீர்வை கண்டுபிடித்தவன் நிம்மதி ஆனான். “என்னடா மாதவா,  ஷர்ட்டை இவ்வளவு நேரம் முறைச்சி பார்த்துக்கொண்டிருக்க?” என்று கேட்டார் திருமண விழாவிற்கு செல்வதற்கு தயாராக பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்த அண்ணாமலை.

 

“இல்லப்பா இந்த ஷர்ட் கொஞ்சம் பழைய  டிரஸ்.  இதைப்போய் அம்மா எடுத்து வச்சிருக்காங்க.  அதான் பார்த்தேன்.” என்று சமாளிக்க முயன்றான்.

 

“பார்த்தா டிரஸ் நல்லா புதுசு மாதிரி தான் இருக்கு. இருப்பதை போட்டுக்கிட்டு  சீக்கிரம் கெளம்பு.”  என்று அவசர படுத்தினார் அண்ணாமலை .

 

“சரிப்பா” என்று வேறு வழியில்லாமல் அதையே எடுத்து அணிந்து கொண்டான்.

 

அப்போது அண்ணாமலையின் கைப்பேசி ஒலித்தது. எடுத்தவர் மகள்தான் கூப்பிடுகிறாள் என்று புரிந்து

 

“ஹலோ ராணி சொல்லுமா. “ என்று கேட்டார்.

 

ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு

 

“சரி நான் மாதவனை அனுப்புறேன்”. என்று கூறிவிட்டு  தொடர்பை துண்டித்தார்

 

“ மாதவா  எப்போ ராணியை கூட்டிட்டு வர போற?”

 

“நான் உங்களை கல்யாண மண்டபத்தில் இறக்கி விட்டுட்டு போய் கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்.

 

“சரி. நீ அப்ப கல்யாணத்துக்கு வரலையா?”

 

“இல்லப்பா நான் போய் அவளை கூட்டிட்டு வருவதற்கு சரியா இருக்கும்.  அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம்.” என்றான் மாதவன்.

 

அவர் சரி எனவும்

அவரை அழைத்துக் கொண்டு அண்ணா நகரில் இருந்த அந்த பெரிய ஆடம்பரமான திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தினான் காரிலிருந்து இறங்கிய அண்ணாமலை

 

“சரி சீக்கிரமா ராணியை கூட்டிட்டு வா.” என்றார்.

 

“உங்க பொண்ணு தானே,  அங்க ஏறினால் இங்கேதான் இறங்குவா.  இன்னிக்கு என்னை எங்க எங்க அலைய வைக்க போறாளோ தெரியல.” என்று சிறு பயத்துடனேயே சொன்னான் மாதவன்.

 

“சரி சரி அவளுக்கு தேவையானதை  வாங்கிட்டு பொறுமையா வாங்க.  நானும் ரொம்ப நாள் கழித்து என் நண்பர்களை பார்ப்பதால் எல்லார்கிட்டயும் பேசிட்டு தான் வருவேன். நீ பொறுமையா வா” என்று மகளுக்காக பரிந்து பேசினார் அண்ணாமலை.

 

“சரிங்க அப்பா நீங்க உங்க பொண்ணை விட்டு கொடுப்பீங்களா?” என்று கேட்டு விட்டு சுதாராணி அழைத்து வர அவள் தங்கியிருந்த விடுதியை நோக்கி சென்றான்.

 

இரண்டு பெரிய  சூட்கேஸ்களை தள்ளியபடி சல்வாரில் வந்தாள் சுதா ராணி.

 

“வந்துட்டியா.  இந்தா இந்த ரெண்டு சூட்கேசை எடுத்து டிக்கியில் வை.” என்று உரிமையோடு அதிகாரமாக கூறியபடி காரை திறந்து ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

“நல்லவேளை நீ வரேன்னு ஒத்துகிட்ட.  இல்லனா இதையெல்லாம் தூக்கிகிட்டு நான் வர வேண்டி இருந்திருக்கும்.”  என்றாள் ஜன்னல் வழியாக தலையை நீட்டி.

 

 

“சரி சரி.” என்றபடி அதனை எடுத்து டிக்கியில் வைத்து விட்டு

 

“அப்பா கல்யாண மண்டபத்தில் இருக்காரு.  போகும்போது அப்படியே கூட்டிட்டு ரூமுக்கு போயிடலாம்.” என்று கூறிவிட்டு காரை எடுத்தான்.

 

“அண்ணா அதுக்கு முன்னாடி அந்த ஏஞ்சல் பேன்சி  ஸ்டோரில் கொஞ்சம் நிறுத்து.” என்று ஆரம்பித்தாள் சுதாராணி.

 

“ஆரம்பிச்சுட்டியா? தெரியுமே.  நான் எப்ப வருவேன்னு பார்த்துகிட்டே இருப்பியா? போற வழியில இருக்குற கடையில எல்லாத்தையும் வாங்கிகிட்டு பொறுமையா போக நாம என்ன ஜாலி ட்ரிப்பா  போறோம்? (Provigil) ” என்று சலித்துக்கொண்டான் மாதவன்.

 

“ரெண்டே ரெண்டு கடைதான் அண்ணா.” என்று கெஞ்சலாக கேட்க மனமிரங்கினார் மாதவன்.

 

ஏஞ்சல்ஸ் முன்பு மாதவன் காரை நிறுத்த கீழே இறங்கி உள்ளே சென்று

 

நெயில் பாலிஸ், ஐ லைனர், பவுண்டேஷன் க்ரீம், விதவிதமான கம்மல்கள் என்று ஒவ்வொன்றாக பார்த்து பொறுமையாக தேர்வு செய்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

மாதவனுக்கு தான் பொறுமை இல்லை.

 

“முடிஞ்சுதா சுதா? சீக்கிரம்.” என்று அவசர படுத்தினான்.

 

“சரி சரி என்று கூறியவள் எல்லாவற்றையும் பில் போட சொல்லிவிட்டு அந்தப் இல்லை அவனிடம் கொடுத்துவிட்டு வந்து காரில் ஏறினாள்.

 

இப்படியே அடுத்த கடையிலும் பொழுதை கழித்து விட்டாள்.

 

அண்ணாமலை மாதவனை கைபேசியில் கூப்பிட்டார்.

 

“மாதவா இன்னும் வரல?” என்று கேட்டார்.

 

“உங்க பொண்ணு இப்பதான் ஷாப்பிங் முடிச்சிருக்கா.  இதோ வந்துட்டேன்.” என்று வேகமாக காரை ஓட்டிக்கொண்டு திருமண மண்டபத்திற்கு சென்றான்.

 

அங்கு சென்று அவரையும் அழைத்துக்கொண்டு. ஹோட்டல் ரூமிற்கு வந்து சேர்ந்தான்

 

“எவ்வளவு நேரமா இது வேணும் அது வேணும்னு என்னை அலைய விட்டா தெரியுமா?” என்று சலித்துக் கொண்டான் மாதவன்.

 

“எனக்கு கடைக்கு போக வேண்டிய வேலை இருந்துச்சு. ஆனால் என்னால போக முடியல.” என்று குறைபட்டுக் கொண்டான்.

 

“சரி.  வீட்டுக்கு கிளம்பலாமா?” என்று கேட்டாள் சுதாராணி.

 

‘கிளம்பலாம் தான்.  ஆனால் நான் போட்டிருக்கும் பிளான் வொர்க் அவுட் ஆகாதே!” என்று நினைத்துக்கொண்டான்.

 

எனினும்  “இல்லை இல்லை. ரொம்ப வெயிலா இருக்கும்.” என்று சமாளிக்க முயன்றான்.

 

“ஏண்டா வரும்பொழுது அப்படித்தானேடா வந்த.” என்று அவனை மடக்கினார்.

 

“என்ன செல்வது என்று புரியாமல்அவரிடம் சாய்ந்திரம் ஒரு பிரண்டை பார்க்கிற வேலை இருக்கு. அதுக்கு தான் அப்பா.” என்று ஏதோ வாயில் வந்ததை கூறி சமாளித்தான்.

 

“அப்படியா? சரி மாதவா. நல்லதா போச்சு.  இன்னிக்கி கிருத்திகை.  ஊரில் இருந்து இருந்தா நான் கோயிலுக்கு போய் இருப்பேன். பக்கத்துல வடபழனி முருகர் கோயில் இருக்கு இல்லையா? அங்க போயிட்டு போகலாம்.”

 

“சரிப்பா.”  ‘எப்படியோ சாயந்திரம் வரைக்கும் இங்கே இருக்க ஒத்துக்கிட்டாரே அதுவே போதும்.’ என்று அடுத்த நொடி  சம்மதம் கூறினான் மாதவன்.

 

காலையிலிருந்து அலைந்து திரிந்தும் சுதாராணி, அண்ணாமலை இருவரையும் சாயந்திரம் வரைக்கும் இங்கேயே இருக்க வைக்க யோசித்து யோசித்து சமாளித்த விதத்திலும் அயர்ந்து போனான் அவன்.

 

இதற்கு மேலும் இவர்கள் ஏதாவது கேட்டால் உளறி விடுவோம் என்று முடிவுக்கு வந்தவன்

 

“நீ அலைய வைத்ததில் எனக்கு ரொம்ப டயர்டா ஆயிடுச்சு.  நான் கொஞ்ச நேரம் தூங்கணும்.” என்று படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

 

“மாதவா மாதவா” என்று அண்ணாமலையின் குரல்கேட்டு எழுந்தான் மாதவன்.

 

மணியை பார்த்தான் நாலரை ஆகியிருந்தது.

 

“கோயிலுக்கு கிளம்ப நேரம் ஆயிடுச்சு.  முகத்தை கழுவிட்டு வா போகலாம்.” என்றார் அண்ணாமலை.

 

‘அய்யோ நாலரை ஆயிடுச்சா? இனிமேல் கிளம்பி கோயிலுக்கு போய் அங்கிருந்து கிளம்பி சூளைமேடு  போவதற்குள் ஆறு மணிக்கு மேல ஆகிடும் போல இருக்கே? அப்போ நாம போட்ட பிளான்’ என்று யோசித்தான்.

 

“என்னடா யோசிச்சிட்டு இருக்க?” என்றார் அண்ணாமலை.

 

“ஒன்னும் இல்லப்பா.” என்று கூறியவன் குளியலறை சென்று முகத்தைக்  கழுவினான்.

 

கண்ணாடியில் முகத்தை பார்த்த மாதவன்

 

‘ஐயையோ இந்த சட்டையை வேற நாம இன்னும்  மாற்றவே இல்லையே!’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.

 

அவனது திட்டப்படி இன்று எப்படியாவது அண்ணாமலையை சிதம்பரத்தை சந்திக்க வைக்க வேண்டும்.  சந்திக்க வைத்து அவர்களது பழைய நட்பினை நினைவூட்ட வேண்டும். பிறகு அண்ணாமலை வள்ளியின் அறுபதாம் கல்யாணம் திருமண பத்திரிக்கையை சிதம்பரத்திற்கு வைத்து அவரை குடும்பத்துடன் அவன் வீட்டிற்கு அழைத்து வர செய்ய வேண்டும்.   இதுவே அவன் போட்டிருந்த இன்றைக்கான திட்டம்.

அதற்கு அவன் சூளைமேட்டில்  தந்தையுடன் ஐந்தரை மணிக்கு இருக்க வேண்டும்.  ஏனென்றால்

சிதம்பரம் பொதுவாக மாலை ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவார். இன்றைக்கு அந்த நேரத்தில் அவர் வீட்டுப்பக்கம் எதேச்சையாக செல்வது போல சென்று இருவரையும் பார்க்க செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தான்.

 

அதை நிறைவேற்ற தானவன் காலையிலிருந்து  சுதாராணி, அண்ணாமலை இருவரிடமும் போராடிக் கொண்டிருக்கிறான்.

 

இது புரியாமல் சுதாராணி அவனை கூட்டிக்கொண்டு ஊரை சுற்றி விட்டு வந்தாள். அவனோ இப்படி அவனுக்கு தெரியாமலேயே இவ்வளவு நேரம் தூங்கி விட்டான்.

‘மாதவா என்னடா இது உனக்கு வந்த சோதனை?’ என்று தன்னைத்தானே திரும்பவும் கேட்டுக்கொண்டு வெளியில் வந்தான்.

 

“ அப்பா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு பிரண்டை பார்க்கணும்.  அதனால நீங்க சீக்கிரமா கோயிலுக்கு போயிட்டு வந்துடுங்க.  15 நிமிஷம் தான்.   அதுக்குள்ள வந்துடுங்க. சரியா?” என்று கேட்டான்.

 

“நானே எப்பயாவது தான் சென்னை வருகிறேன்.  நமக்கு இங்கசொந்தக்காரர்களும் கிடையாது.  அதனால வர்றதுக்கு வாய்ப்பில்லை.  அவ்வளவு பெரிய கோயிலை பதினைந்து நிமிஷத்தில்  பார்த்துட்டு வர சொல்ற?” என்று பதில் கேள்வி கேட்டார்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!