Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 20.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவளைப்  பார்த்ததும் “நீங்க அத்தை இல்லையா? சாரி.” என்று மழலையில் பேசினான்.

 

“இட்ஸ் ஓகே. நீங்க யாரை தேடுறீங்க?” என்று அவனை தூக்கி கையில் வைத்துக் கொண்டு கேட்டாள் மதுமிதா.



Advertisement

 

“என் அத்தையை தேடுறேன்.” என்று சொன்னான் அவன்.

 

Advertisement

“சரி வாங்க.  நாம ரெண்டு பேரும் தேடுவோம்.” என்று இருவரும் சேர்ந்து  தேடினர்.

Advertisement

 

எழுந்தது முதல் வேலைகளுக்கு நடுவில் கிடைக்கும் நேரத்தில் அவன் கண்கள் அவளை தான் தேடிக் கொண்டிருந்தது.

 

Advertisement

அவள் இப்போது ஆதித்யாவை வைத்துக்கொண்டு யாரையோ தேடிக் கொண்டிருந்ததை கவனித்தான் மாதவன்.

 

புடவை நகை என்று கல்யாண பெண் போல காட்சி அளித்தாள் மதுமிதா. அவளை பார்த்து ரசித்தான் மாதவன்.

 

“சித்தப்பா” என்று  ஆதித்யா கூப்பிட

 

“என்னடா ஆதி?” என்றபடி அவர்களிடம் வந்தான் மாதவன்.

 

“இந்த அத்தைக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.  ஒரு சின்ன பையன் என்னை இங்க தனியா விட்டுட்டு அத்தை எங்கேயோ போயிட்டாங்க பாருங்க.  இந்த அக்காதான் என்னை பத்திரமா  கூட்டிட்டு வந்து இருக்காங்க.  எங்க  போனாங்க அத்தை? என்னை  பார்த்துக் கொள்வதை விட வேற என்ன முக்கியமான வேலை அவங்களுக்கு? முதல்ல அவங்களை கூப்பிட்டு நாலு அடி கொடுங்க.” என்று நாட்டாமை தீர்ப்பு கூறுவது போல கூறிவிட்டு தன் தோள் மீது இருந்த துண்டை எடுத்து தட்டி போட்டுக்கொண்டான் ஆதித்யா.

 

அவனது பேச்சையும் செயலையும் ரசித்த மதுமிதா  குலுங்கி குலுங்கி சிரித்தாள்.

 

மாதவன் அவளை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“சித்தப்பா நான் சொல்றது உங்க காதுல விழல?” என்று மாதவனை அதட்டினான் ஆதித்யா.

“விழுந்திடுச்சு நாட்டாமை.  நீங்கள் சொன்னபடியே செய்திடுவோம்.” என்றான் மாதவன்  பவ்யமாக.

 

“நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.” என்றபடி அங்கு வந்தாள் சுதாராணி.

 

“காலையில இருந்து கால் வலிக்க வலிக்க உன் பின்னாடி ஓடி ஓடி பார்த்து  கொண்டது நானு. எனக்கு தண்டனையா? நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லிடுங்க.  இல்லைன்னா உங்களுக்கு இன்னிக்கி  லட்டு கிடைக்காது.” என்று தன் கையில் இருந்த இரண்டு லட்டை காட்டி சொன்னாள் சுதாராணி.

 

“ஹய் லட்டு.” என்று  லைட்டை பார்த்து சொன்னவன் சுதாராணியிடம் தாவினான்.

 

“அடப்பாவி என்னடா இப்படி கட்சி  மாறிவிட்ட?” என்று ஆச்சரியமாக கேட்டாள் மதுமிதா.

 

எனினும் அவன் செய்கையை பார்த்து சிரித்தாள்.

 

“அவன் அப்படிதான்.  நீங்க சாப்டீங்களா மதுமிதா?” என்றாள் சுதாராணி.

 

“இனிமேல் தான் சாப்பிடணும்.  நீங்க சாப்டீங்களா?”

 

“நாங்க சாப்பிட லேட் ஆகும்.”

 

“சரி நானும் உங்க  கூடவே சாப்பிடறேன்.”

 

“சரி நான் சாப்பிடும் போது உங்களை கூப்பிடுகிறேன். அதுவரைக்கும் பசிக்காமல் இருக்க ஒரு லட்டு சாப்பிடுங்க.” என்று  லட்டில் ஒன்றை ஆதித்யா இடம் கொடுத்து விட்டு இன்னொரு  லட்டை மதுவிடம் இடம் கொடுத்தாள்.

 

அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“அத்தை எனக்கு தண்ணி வேணும்.” என்று ஆதித்யா கேட்க

 

“சரி நான் இவனுக்கு தண்ணி எடுத்துட்டு வரேன். அதுவரைக்கும் இந்த வாலு பையனை எங்கேயும் ஓடிப் போகாமல் பாத்துக்கோங்க. கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் ட்ரை பண்ணுங்க.” என்றாள் சுதாராணி. சு

 

தாராணி அந்தப்பக்கம் சென்றதும் ஆதித்யா இந்த பக்கம் ஓட முயற்சித்தான்.

 

அப்போது மதுமிதா அவனை பிடிக்க முற்பட அவன் அவளிடம் இருந்து தப்பித்து போட முயற்சித்தாள்.

 

அப்போது மாதவன் அவனை பிடித்து  நிறுத்தினான்.

 

“சரியான வாலு பையன்டா நீ. என்னால உன்னை சமாளிக்கவே முடியாது.  நீங்க கொஞ்சம் சுதாராணி வரும்வரைக்கும் இங்கேயே என்கூட இருங்க. இவன் எங்கேயாவது ஓடிட போறான்.” என்றாள் மதுமிதா.

 

மாதவன் அவளை பார்த்து “சரி” என்றான் ஒற்றை வார்த்தையில்.

 

“அப்புறம் உங்க கால் பரவாயில்லையா?” என்று அவனது கால்கட்டை பார்த்து கேட்டாள் மதுமிதா.

 

“இப்போ பரவாயில்லை. “

 

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் இல்லையா? இந்த வலியோடு இவ்வளவு வேலை செய்யணுமா?” என்று அக்கறையாக விசாரித்தாள்.

 

“அப்படி ஒன்னும் எனக்கு பெருசா வலிக்கவில்லை.”

‘எப்படி வலிக்கும் போட்டது அவள் உள்ளம் கவர்ந்தவள் ஆயிற்றே.’ என்று நினைத்துக்கொண்டான்.

 

“சரி உட்காருங்க.” என்று மதுமிதா பக்கத்தில் இருந்த நாற்காலியை காண்பித்து சொன்னாள்.

 

அவன் தயங்கினான்.

 

“என்ன யோசிக்கிறீங்க? வேலை இருக்கா? பரவாயில்லை.  கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.” என்றாள் மதுமிதா.

 

“சரி” என்று அவள் பக்கத்தில் உட்கார்ந்தான் அவன்.

 

அப்போதுதான் அவனை நன்றாக பார்த்தாள்.

 

நல்ல அடர்த்தியான  படிய வாரிய கேசம், கலையான முகம், மாநிறம் நல்ல உயரம், உறுதியான உடல் என்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தான் மாதவன்.

 

‘அந்த திருட்டு பையனும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தான் இல்லை?’ என்று யோசிக்கும் போதே

‘யாரையும் அந்த  ப்ளூ ஷர்ட் உடன் கம்பர்  பன்னி பார்க்காதே.’ என்று கீதா சொன்னது ஞாபகம் வந்தது.

 

எனினும் ‘இவனும் கிட்டத்தட்ட அப்படியே தான் இருக்கிறான். இவனிடம் பேசிப் பார்க்கலாமா?’ என்று யோசித்தாள்.

 

“சரி” என்ற முடிவுக்கு வந்து பேச ஆரம்பித்தாள்.

 

“உங்கள் பேரு மாதவன்னு எனக்கு தெரியும்.  வேற ஏதாவது உங்களை பற்றி சொல்லுங்க.” என்று ஆரம்பித்தாள்.

 

“நான் எம்பிஏ முடிச்சிட்டு எங்க அப்பாவோட தொழிலை பார்த்துகிட்டு இருக்கேன்.”

 

“ஓ அப்படியா”

 

“நீங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டான் அவன்.

 

அவனுக்கு தெரியும் என்றாலும் தெரியாதது போலவே கேட்டான்.

 

“நான் பிபிஏ முடிச்சிட்டு டெய்லரிங் பண்றேன்.” என்றாள்.

 

“நல்லது நீங்கள் தேனி பக்கம் திருவிழாவுக்கு வந்திருக்கீங்களா?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.

 

இதைக்கேட்டதும் சுதாரித்த மாதவன்

“எப்போ என்ன?” என்று பதில் கேள்வி அவளை கேட்டான் .

 

அப்போது சிதம்பரம் அங்கு வந்தார்.

 

“என்ன தம்பி இப்போ கால் எப்படி இருக்கு?” என்று அக்கறையாக விசாரித்தார்.

 

‘அப்பாடி வந்துட்டாரு. தப்பிச்சோம்.’ என்று நினைத்தவன் எழுந்து

 

“இப்போ பரவாயில்லை சார். நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான்.

 

“இல்லைப்பா இனிமேதான் சாப்பிடனும்.”

 

“வாங்க சாப்பிடலாம்.” என்று அவரை கையோடு அழைத்து கொண்டு அங்கிருந்து நழுவினான்.

 

“மது” என்று வள்ளியின் குரல் கேட்க திரும்பினாள் மதுமிதா.

 

அவர் இடுப்பில் கை வைத்தபடி மகளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்.

 

“என்ன மது இதெல்லாம்?” என்று கோபமாக கேட்டார்.

 

“என்னமா? நான் என்ன பண்ணினேன்?” என்று புரியாமல் கேட்டாள் மகள்.

 

“இவர் கிட்ட போய் தேனியில் திருவிழாவுக்கு வந்தீர்களான்னு கேக்குற. உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? எப்ப பார்த்தாலும் அவனைப்பற்றி நினைச்சுக்கிட்டு அவனைப் பற்றியே பேசிகிட்டு அவன்கூட எல்லாரையும் கம்பர் பண்ணிக்கிட்டு இருக்க.” என்று கோபம் குறையாமல் கேட்டார்.

 

“இல்லம்மா.  அவர் பாக்குறதுக்கு கிட்டத்தட்ட…” என்று மதுமிதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே இடை புகுந்தார் வள்ளி.

 

“நீ தான் அவனைப் பார்க்கவே இல்லையே. அப்புறம் எப்படி இவரை அவன் கூட கம்பேர் பண்ணி பேசுற?” என்றார்.

 

“இல்லம்மா.  எனக்கு அப்படி” என்று தடுமாறினாள் மதுமிதா.

 

“ உனக்கே என்ன சொல்றதுன்னு தெரியல இல்லையா? நீ முதல்ல அவனை நினைக்கிறதை நிறுத்து.  சொல்றதைக் கேளு.  இவர் ஒரு நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.  சொந்தமா தொழில் பண்ணிக்கிட்டு இருக்காரு.   அவர் ஏன் கத்தி எடுத்து  வீச போகிறார்? அவர் முகத்தைப் பார்த்தாலே தெரியல ரொம்ப சாந்தமான முகம்.  ஒருநாளும் கத்தியை கையில் எடுத்திருக்க மாட்டார்.  இவர்கிட்ட இவ்வளவு பணம் இருக்கும்போது நம்ம நகையை இவர்  திருடி இருப்பாரா? நீ யோசிக்கிற தில் ஏதாவது லாஜிக் இருக்கா?” என்று அவளை மடக்கினார்.

 

“நீங்க சொல்றது கரெக்ட் தான் அம்மா.  இருந்தாலும் சும்மா கேட்டா என்ன தப்பு?” என்று வாதிட்டாள் மகள்.

 

“என்ன தப்பா? நீ அவரை பொறுக்கி திருடன்னு சந்தேகப்பட்டு கேட்டேன்னு அவருக்கு தெரிந்தால் நல்லா இருக்குமா சொல்லு ?”என்று கேட்க மதுமிதா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

 

“யார்கிட்ட என்ன பேசணும்னு யோசிச்சு பேசு.  புரிஞ்சுதா? இனிமேல் இந்த மாதிரி பேசாத.  நானும் அவரை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த விசேஷத்தில் எவ்வளவு அழகான பொண்ணுங்க இருக்காங்க.  அந்த பொண்ணுங்களை ஒரு தவறான பார்வை கூட  அந்த பையன் பார்க்கவே இல்லை.  இதிலிருந்து அவரோட கண்ணியம் நமக்கு தெரியல?” என்றாள் வள்ளி.

 

“சரி சரி அம்மா.  இனிமேல் நான் அவர்கிட்ட இதைப் பத்தி பேசவே மாட்டேன்.” என்றாள் மகள் உறுதியாக.

 

இதனை அறியாத மாதவன் அவளை தூரத்தில் இருந்து பார்த்து ரசித்தானே தவிர அவள் அருகில் செல்வதை தவிர்த்தான்.

 

திருமணம் முடிந்து அனைவரும் மூத்த தம்பதிகளிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டு சாப்பிட சென்று கொண்டிருந்தனர்.

 

அப்போது சிதம்பரம் வள்ளியிடம் வந்தார்.

 

“வள்ளி நாம கொஞ்ச நேரம் நம்ம ரூமுக்கு போய் அங்கேயே இருக்கலாமா?” என்று மெல்லிய குரலில் கேட்டார் .

 

“என்ன ஆச்சு?” என்று புரியாமல் கேட்டார்  வள்ளி.

 

“என் அப்பா அம்மா வந்துகிட்டு இருக்காங்க பாரு.” என்று காண்பித்தார் அங்கு சிதம்பரத்தின் தாய் தந்தை வந்து கொண்டிருந்தனர்.

 

“சரி அவங்க வரட்டும். நாம எதுக்கு  ஒதுங்கி போகணும்?” என்று கேட்டார் வள்ளி.

 

“நாம இங்க இருந்தா அவங்க  திரும்பி வீட்டுக்கு போனாலும் போயிடுவாங்க. அதனால அவங்க போற வரைக்கும் நாம அவங்க கண்ணுல படாம இருக்கலாம்.” என்றார் சிதம்பரம் வருத்தமாக.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!