Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Ennai Theendaathae En Jeevanae 1

Hii guys.. Storyoda 1st ud post pannitean.. new readers direct a indha storyki wandhiganna idhoda 1st part ❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤ Story a read pannitu indha story read panniganna characters patthi innum therijikalam.. ok namma storykulla pogalam friends?
———————————————————————-

❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி பாகம் 2❤ என்னை தீண்டாதே என் ஜீவனே?

                    தீண்டாதே 01?

ஆர்யன் ஆருத்ரா திருமணம் நடைப்பெற்று இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு,



Advertisement

அமெரிக்காவில்,
நிவ்யோர்க் சிட்டி,

                ஊரெங்கும் வெள்ளை பனியால் மூடியிருக்க குளிருக்கு இதமாக ஜெக்கெட் அணிந்து அந்த இயந்திர தொழிநுட்ப உலகத்தில் மக்கள் பம்பரம் போல் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், அந்த இருட்டு அறையிலோ சுவற்றில் ஒரு  சிவப்பு நிற ட்யூப்லைட் மட்டுமே ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

  “சென்னையின் CBI ஹெட் ஓஃபீஸர் மிஸ்டர் ஆர்யன் சக்கரவர்த்தியும் அவர் மனைவியும் XXXX என்ற இடத்தில் கொலை  செய்யப்பட்ட சம்பவம் மக்களிடத்தில் பரபரப்பாக இருக்க இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரென்று தெரியாது சென்னை நகரமே பரபரப்பாக உள்ளது..”

Advertisement

           என்று பத்திரிகையில் முக்கிய செய்தியாக குறிப்பிடப்பட்டிருக்க அந்த பதினைந்து வருடங்களுக்கு முன் வந்த பத்திரிகையை தன் கையில் உள்ள பேனாவால் ஆக்ரோஷமாக குத்திக் கிழித்துக் கொண்டிருந்தாள் அவள்..

Advertisement

கண்கள் சிவந்து இரத்தக்களறியாக இருக்க, கோபத்தில் முகம் சிவந்து கலைந்த தலைமுடி என்று பார்ப்பதற்கே ருத்ரதேவியாக இருந்தவளின் செய்கையை நிறுத்தும் வண்ணம் தொலைபேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவள் மறுமுனையில் கேட்ட கேள்விக்கு,
“நாளைக்கே இந்தியாலே இருப்பேன்..” என்று மட்டும்  இறுகிய குரலில் சொல்லி அழைப்பை துண்டித்திருந்தாள்.

     அந்த சிறிய வெளிச்சத்தில் தன் எதிரே இருந்த சுவற்றிலுள்ள புகைப்படத்தை பார்த்தவளுக்கு கோபம் ஏகத்துக்கும் எகிற கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாது தன் தலைமுடியை தானே “ஆஆ..” என அந்த அறையே அதிரும் வண்ணம் கத்தி பிய்த்துக் கொண்டாள் நம் நாயகி..
—————————————————————-

இந்தியா,
சென்னை நகரம்,

Advertisement

          இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஐந்து தோழிகளும் ஆடவர்களின் உதவியோடு கட்டிய ஆசிரமம் இப்போது பல இடங்களில் பல கிளைகளாக விருத்தி செய்யப்பட்டு சிறுவர்களுக்கு மட்டுமன்றி பிறந்தவுடன் குப்பையில் வீசப்படும் கைக்குழந்தை தொடக்கம் தான் பெற்ற பிள்ளைகளாலே வீட்டிலிருந்து துரத்தி விடப்படும் முதியோர்கள் வரை ஆதரவளிக்கும் சுவர்க்கமாக உள்ளது.

         தொழிநுட்பம் வளர வளர ஆசிரமத்திலுள்ள வசதிகளும் மேலும் விருத்தி செய்யப்பட்டிருக்க தங்களுக்கான ஆசிரம நிர்வாக அறையில் தங்கள் முன் சுவற்றில் இருந்த ஆர்யன், ஆருத்ரா, தியாவுடைய ஆளுயர படங்களையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர் கயல், துர்கா, ஆதிரா. அப்போது சரியாக யோசனையூடே உள்ளே வந்தனர் அபி, சித்து, ஆதி (வயசானாலும் நம்ம ஹீரோ ஹீரோயின்ஸ்ஸோட அழகும், ஸ்டைலும் அவங்கள விட்டு போகவே இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி)

           “நாளைக்கு காலைல இங்க இருப்பாளாம்.. இனிமே இங்க தான்..” என சித்து சொல்ல திடுக்கிட்டு திரும்பினர் மூன்று பேரும்.

           “யாரைக் கேட்டு அவள இங்க நீங்க வர சொன்னிங்க..” என்று துர்கா பதட்டத்தில் கத்த,

            “என்ன பேசுறீங்க.. இன்னும் எவ்வளவு நாள் தான் அவ அங்கேயே இருப்பா.. அவ ஸ்டடீஸ் முடிஞ்சே ஆறு மாசத்துக்கு மேல ஆகுது.. ஆரம்பத்துல இங்க வர சொல்லி சொன்னப்போ கூட வர முடியாதுன்னு தான் சொன்னா.. இப்போ அவளா தான் இங்க வரனும்னு ஆசைப்படுறா.. அதான் எங்ககிட்டயும் கேட்டா நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்..” என அபி கூறியதில்,

மூன்று பேரையும் கூர்மையாக பார்த்த கயல்,
“உங்க கிட்ட பர்மிஷன் கேட்டாளா.. இல்ல..அதான் முடிவா சொன்னாளா..” என கயல் அவளை நான் அறிவேன் என்ற ரீதியில் கேட்டு வைக்க,

          “அவளோட முடிவா தான் சொன்னா..” என ஒருவர் முகத்தை ஒருவர் தயக்கமாக பார்த்தவாறே கோரஸாக கூறினர் ஆடவர்கள் மூவரும்..

           “அவ இங்க வர்றது எனக்கு சரியா படல..”   என துர்கா கலங்கிய முகமாக யோசனையாக சொல்ல,

           “அவ நம்ம பொண்ணு துகி… நாம வளர்த்த பொண்ணு” என சித்து பேசியதை குறிக்கிட்ட துர்கா,
“அவ ஆருத்ராவோட இரத்தம் அத மறந்துட்டிங்களா..” என சத்தமாக அதே சமயம் அழுத்தமாக கேட்டாள்.

            “ஆர்யன் ஆருத்ரா சாகும் போது அவங்க பக்கத்துல இருந்திருக்கா.. நடந்ததை கண்ணால பார்த்திருக்கா.. அந்த சின்ன வயசுலயே அவ பன்ன காரியத்தை மறந்துட்டிங்களா.. அதை இப்போ நினைச்சாலும் எனக்கு பதறுது.. அவள சமாதானப்படுத்தி கௌத்தம் கூட நிவ்யோர்க் அனுப்புறதுக்குள்ள நாங்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்..” என ஆதிரா அன்று நடந்ததை நினைத்து மனவேதனையுடன் சொல்ல,

            “அதுக்கப்றம் எங்க கூட பேசுறதையே நிறுத்திட்டா.. இப்பவும் அவளாவே இங்க வரனும்னு முடிவு பன்னிருக்கான்னா அதுக்கு பின்னாடி ஏதோ ஒன்னு இருக்கு.. அவ காரணம் இல்லாம எதுவும் பன்ன மாட்டா..”என கயல் தீவிரமாக சொன்னாள்.

            “அதான் நாங்க கூட இருப்போமே.. நாங்க என்ன அவ என்ன பன்றா ஏது பன்றான்னு பாத்துக்காமலா இருக்க போறோம்.. அவ அதிகமா தேவ் கூட தான் பேசுவா அவன் கிட்ட சொன்னா அவனே பாத்துப்பான்.. அவ என்ன பன்ன நினைச்சாலும் எங்கள மீறி தான் பன்னியாகனும்..” என ஆதி சொன்னதில் ஏளனமாக சிரித்தனர் மூன்று பெண்களும்..

          “அவள கன்ட்ரோல் பன்ன முடியும்னு நினைக்கிறீங்களா..” என்று கயல், ஆதிரா, துர்கா ஒருசேர கேட்க, அது ஆடவர்கள் மூவருக்குமே சந்தேகம் தான்.

         “சரி விடுங்க.. டாக்டர் கிட்ட விசாரிச்சிங்களா.. கௌத்தம் என்ன சொன்னான்.. இன்னும் கௌன்ஸ்லிங்(Counseling) போக தானே செய்றா..” என மற்றவர்களுடன் வெளியில் நடந்தவாறே துர்கா கேட்க,

        “அது வந்து.. கேட்டா போறேன்னு தான் சொல்றா.. பட் அவ கௌன்ஸ்லிங் வந்தே இரண்டு வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு டாக்டர் சொன்னாரு.. என்ட், முதல்ல கௌத்தம் கூட இருக்கப்போ அவன் பாத்துகிட்டான் அதுக்கப்றம் தனியா தான் இருப்பேன்னு அடம் பிடிச்சா.. சரின்னு தனியா ஃப்ளேட்(Flat) வாங்கி கொடுத்ததுக்கு அப்றம் அவ என்ன பன்றா ஏது பன்றான்னு கௌத்தமால கூட தெரிஞ்சிக்க முடியல.. ” என தயக்கமாக சித்து சொல்ல,

           “ஒரு நாள் அவ ஃப்ளேட்கே போய் கௌத்தம் கம்பிள் பன்னி கௌன்ஸ்லிங் அனுப்பி வைச்சு  என்ன பன்றான்னு பின்னாடி ஃபோலோ பன்னி போய் பார்த்தா ஒரு பார்க்ல போய் உட்கார்ந்துகிட்டு ரொம்ப நேரமா ஒரு இடத்தையே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்குறதா சொன்னான்..” என ஆதி சொல்ல, விழி விரித்து நின்றனர் மூன்று பெண்களும்.

           “இப்போ எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க.. முதல்ல அவ இங்க வரட்டும் அதுக்கப்றம் அவ கிட்ட பேசி பார்க்கலாம்..” என அபி சொல்ல கலக்கம் நிறைந்த முகத்துடன் யோசனையினூடே தலையாட்டியவர்கள் ஒரு பெருமூச்ச விட்டவாறு ஆடவர்களுடன் காரில் ஏறி வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
——————————————————————-

அடுத்த நாள் காலை,
சென்னை விமான நிலையத்தில்,

            விமான நிலையத்தில் மக்கள் அறிவிப்புக்கேற்ப ஆனந்த கண்ணீரிலும் சோகக் கண்ணீரிலும் மூழ்கி போவதும் வருவதுமாக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க சித்து, துர்கா, கயல், ஆதி அங்கும் இங்கும் கண்களை சுழலவிட்டவாறு தாம் எதிர்ப்பார்த்தவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

  சரியாக தூரத்தில் வருபவளை ஆதி பார்த்துவிட உதடு முழுக்க புன்னகையுடன் “மித்ரா..” என்று சொன்னதும் தான் தாமதம் சட்டென்று ஆதியின் புறம் திரும்பிய மற்ற மூவரும் ஆதியின் பார்வை செல்லும் திசையை நோக்கி தங்கள் பார்வையை திருப்பினர்.

ஆகாய நீல நிறத்தில் முட்டு வரையேயான ஸ்லீவ்லெஸ் ஃப்ரொக் அணிந்து தன் நீண்ட கருங்குழலை முன்னாடி ஒருபுறம் விரித்து போட்டு, ஐந்தடி மொடர்ன் மங்கை ஹீல்ஸ் அணிந்து சற்று உயரமாக நிமிர்வாக வர உதட்டில் ஒரு சிறு புன்னகை கூட இல்லை. ட்ரோலியை இடது கையால் தள்ளியவாறு வலது கையால் தான் அணிந்திருந்த கூலிங் க்ளாசை கழட்டியவாறு அவர்களை நோக்கி வர அவளை பார்த்த கயல், துர்காவுக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

ஆருத்ராவின் மறு சாயலாக பிறந்திருந்தவள் ஆருத்ராவுடைய நிமிர்வான நடை, அழுத்தமான எதிரில் நிற்பவர்களை எடை போடும் கழுகுக் கண்கள், சிரிப்பே இல்லாத அழுத்தமான உதடுகள், இறுகிய முகம் என்றிருக்க அவள் ஆருத்ராவின் மகள் தான் என்பதற்கு DNA டெஸ்ட்டே தேவையில்லை என்பதை போல் இருந்தாள் நம் நாயகி மித்ரா.

            “வெல்கம் ஹோம் மித்ரா மா..” என்று அருகில் வந்தவளை பார்த்து சித்து கூறி வாஞ்சையுடன் அவள் தலையை தடவ எந்தவித உணர்ச்சிகளையும் முகத்தில் பிரதிபலிக்காது சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தாள் மித்ரா.

          “பார்க்க அப்பிடியே உன் அம்மா ருத்ரா போலயே இருக்க மா..” என உணர்ச்சிவசப்பட்டு கூறிய கயலுக்கு அப்போது தான் நினைவில் வந்து தன் நாக்கை கடித்தவாறு ஆதியை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ அவளை மூக்கு விடைக்க முறைத்துக் கொண்டிருந்தான்.

இங்கு மித்ராவின் முகமோ இறுகிப் போயிருக்க அதை மாற்ற எண்ணிய துர்காவோ,
“சரி சரி விடுங்க.. இப்படியே பேசிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தா சரியா.. வாங்க வீட்டுக்கு போகலாம்.. எல்லாரும் உனக்காக தான் வெயிட்டிங் மா..” என்று சொல்ல அவளும் எதுவும் பேசாது முன்னே நடக்க கயல், ஆதி, துர்கா, சித்து தான் “ஸப்பாஹ்ஹ்..” என பெருமூச்சுவிட்டவாறு அவள் பின்னாளே நடந்தனர்.

கார் வீட்டை நோக்கி புறப்பட போகும் வழியெல்லாம் கார் கண்ணாடி வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் மித்ரா.திடீரென,
“காரை ஆசிரமத்திற்கு விடுங்க..” என்று சொல்ல,

ஒரு நிமிடம் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்திய ஆதி திரும்பி,
“இப்போ தானே மா வந்திருக்க.. முதல்ல வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு.. நாளைக்கு..” என்று சொல்ல வர,

     அதை குறிக்கிட்டவள், “எனக்கு இப்போயே போயாகனும்..” என்று ஆதியின் பேச்சுக்கு இது தான் என் முடிவு என்பது போல் முற்றுப்புள்ளி வைக்க, அவனோ திரும்பி கயலையும் துர்காவையும் பார்க்க அவர்களும் வேறு வழியில்லாமல் கண்ணாலே ஆதியிடம் போகுமாறு சைகை செய்ய  இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவாறு சரி என ஆசிரமத்தை நோக்கி வண்டியை செலுத்தினான் ஆதி.

         வாசலில் நின்ற வாட்ச்மேன் இவர்களின் காரை பார்த்ததும் கேட்டை திறந்துவிட காரை உள்ளே சென்று நிறுத்தியவுடன் வண்டியிலிருந்து இறங்கியவள் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் அடியிலுள்ள பென்ச்சில் போய் உட்கார்ந்து கொண்டாள். பதினான்கு வருடங்களுக்கு பிறகு அவள் இந்தியாவில் தன் முதல் அடியை வைத்த கணமே உலை களமாக கொதிக்க ஆரம்பித்த மனது ஆசிரமத்தில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு முகம் முழுக்க சிரிப்புடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை  கண்டதும் சற்று சாந்தமானது போல் இருந்தது.

         “மமா ஏன் இந்த குழந்தைங்க இங்க இருக்காங்க.. நா உங்க கூட தானே இருக்கேன்.. அவங்க ஏன் அவங்க மமா கூட இல்லை..” என ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை பார்த்துக் கொண்டே  ஆருத்ராவுடன் நடந்தவாறு புரியாது எட்டு வயது மித்ரா கேட்க,

         “அது வந்து பொம்மு குட்டி.. அவங்களுக்கு அம்மா அப்பா எல்லாமே நாங்க தான்.. கடவுள் அவங்கள நாம தான் பொறுப்பா எல்லாமா இருந்து பாத்துக்கனும்னு சொல்லிருக்காரு.. சோ நீயும் அவங்க மேல ரொம்ப பாசமா இருக்கனும்.. மமா இல்லைன்னாலும் நீ என் இடத்துல இருந்து அவங்கள பாத்துக்கனும் புரியுதா..” என தன் மகளின் உயரத்திற்கு முட்டி போட்டு அமர்ந்து அவள் தலையை வருடியவாறு ஆருத்ரா சொல்ல,

           “ப்ரோமிஸ் மா.. நா பத்திரமா பார்த்துப்பேன்..” என குட்டி இதழ்களை விரித்து சிரிப்புடன் கூறியவள் தன் அம்மாவுக்கு பின்னால் எட்டி பார்த்து
“ஆரா..” என கத்தியவாறு குதூகலமாக ஆருத்ராவை தாண்டி ஓட,

ஆருத்ராவுக்கு பின்னால் தன் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு இவ்வளவு நேரம் அமைதியாக மெல்லிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் தன் மகள் தன்னை நோக்கி தூள்ளி குதித்து வருவதை கண்டு “என் பொம்மு குட்டி…” என உற்சாகமாக கத்தியவாறு அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றினான்.

இதை ஆருத்ராவோ இடுப்பில் கை வைத்து இருபக்கமும் தலையாட்டியவாறு சிரித்துக் கொண்டு பார்க்க தன் அப்பா தன்னை சுற்றுவதில் உற்சாகமாகிய ஆர்யன் ஆருத்ராவுடைய பொம்மு குட்டி வாய்விட்டு சிரித்தவாறு இருந்தாள்..

அன்று தன் தாய் தந்தையுடனான இங்கிருந்த சந்தோஷமான நினைவுகள் மித்ராவை வாட்ட அந்த நினைவுகளை நினைத்து பார்த்தவளுக்கு அப்போது வாய்விட்டு சிரித்த சிரிப்பில் இப்போதும் இதழோரம் மெல்லிய புன்னகை தோன்றாமலில்லை.. அடுத்த நொடியே மனம் வேதனையில் கசிய அந்த நினைவுகளும் பழைய ரணங்களை மேலும் மேலும் கிளறி விட கண்களை இறுக்க மூடி தன் கலக்கமான முகத்தை வெளியில் காட்ட விரும்பாது தலையை குனிந்து கொண்டிருந்தாள் அவள்.

   மித்ரா கண்களை இறுக மூடிக் கொண்டு தலையை குனிந்தவாறு அமர்ந்திருக்க
‘மித்ராவை இங்கிருந்து அனுப்பி தப்பு செய்து விட்டோமோ..’ என அவளை பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்த கயல், ஆதி, சித்து, துர்காவுக்கு தான் மனதில் ஏதோ  பாரம் ஏறியது போன்று இருந்தது.

தொடரும்..?
——————————————————————–

          ennoda 2nd noveloda 1st ud post pannitean.. wait pannikite iruppean innaiki ud epidinnu marakama unga comments a solliruga friends..
thanks for ur support and love?
keep supporting me guys?

ZAKI?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!