Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 27.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

“ரொம்ப தூரம் போகாதீங்க.  ஆழமாய் இருக்கும். பார்த்து.”. என்று சொல்லிவிட்டு கணவனுடன் நடந்து கொண்டிருந்தாள் வள்ளி அந்த கடற்கரையில்.

 



Advertisement

மாதவன் மதுமிதா மதுசூதன் மூவரும் கடல்  அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

மதுமிதா கடல்  தண்ணீரை இரு கைகளிலும் எடுத்து மாதவன் மற்றும் மதுசுதன் மீது அடித்துக் கொண்டிருந்தாள்.

“போதும்  மது. டிரெஸ் எல்லாம் நனைஞ்சு போச்சு பாரு.” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

Advertisement

 

Advertisement

“டிரஸ் மட்டும்  நனைந்தால் போதுமா? உன் தலை இன்னும்  ஈரம் ஆகல பாரு.” என்று தண்ணீரை எடுத்து அவன் முகத்தில் அடித்தாள்.

 

அவன் கண்களில் உப்புத்தண்ணீர்  பட கண்களை கசக்கினான் மதுசூதன்.

Advertisement

“மது போதும். நிறுத்து. மதுசுதன் கண்ல  உப்புத்தண்ணீர் பட்டுடுச்சு பாரு.” என்று சொன்னான் மாதவன்.

 

அப்போது ஒரு பெரிய அலை வந்து  அவர்கள் மீது வேகமாக மோதியது.

அதில் மதுமிதா  தள்ளாடி மாதவன் மீது விழுந்தாள் இதை எதிர்பார்க்காத மாதவன் தடுமாறி அவளை அணைத்தபடி தரையில் விழுந்தான்.

மாதவன் கீழே விழ அவன் மீது விழுந்தாள் மதுமிதா. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். கடல் அலைகள் அவர்களை தொட்டு விட்டு சென்றன.

கண்களை  துடைத்துக்கொண்டு திறந்த மதுசூதன்

 

மாதவன் கீழே விழுந்து இருக்க அவன் மீது மதுமிதா இருப்பதை பார்த்தான்.

பார்வையை வேறு பக்கம் திருப்பி இவர்கள் சமாளித்து எழுந்து கொள்வதற்கு நேரம் கொடுத்தான். ஆனால்  இருவரும்  எழுந்திருப்பதாக தெரியவில்லை. அவர்களை கடந்து சென்ற   ஒரு வயதான  பாட்டி

“இங்க பாருங்க. இவ்வளவு பேர் கூடியிருக்கிற இந்த இடத்துல இவங்க ரெண்டு பேரையும் சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் பாருங்க.”  என்று தன்னுடன் வந்துகொண்டிருந்த பெண்மணியிடம்  லேசாக தலையில் அடித்தபடி சொன்னார்.

‘இதற்கு மேலும் இவர்களை இப்படி விடக்கூடாது’. என்று நினைத்த மாதவன் தன் கைப்பேசியை எடுத்து அவர்களை அப்படியே ஒரு புகைப்படம் எடுத்தான்

பிறகு “நம்தன நம்தன நம்தன நம்தன பாடல் வரும்…..” என்ற பாடலை வேண்டுமென்றே  இருவரும் கேட்கும்படி  சத்தமாக பாடினான்.

அவன் பாட்டு சத்தத்தில் கலைந்து இருவரும் எழுந்தனர். “என்ன  ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்றீங்களா?” என்று கேட்க மதுமிதா வெட்கத்தில் கன்னம் சிவந்தாள்.

மாதவனுக்கும் என்ன சொல்வது என்று புரியாமல் பார்வையை வேறுப் பக்கம் திருப்பினான்.

 

“போதும் ரொம்ப நேரம்  தண்ணீரில் இருக்காதீர்கள்.  சீக்கிரம் வாங்க.” என்று வள்ளிv அழைக்க  மதுமிதா

‘இந்த அண்ணன்  கிட்ட இருந்து தப்பித்தோம் பிழைத்தோம்.’ என்று நினைத்துக் கொண்டு ஓடி தாயிடம் வந்தாள்.

 

“ மது நல்லா  நனைந்து போயிருக்க. கார்ல டவல் இருக்கு. எடுத்து  தலையை துடை.” என்றார்.

தன் தலையை  துவட்டியபடி இன்னொரு துண்டை எடுத்து வந்து நடுவில் நின்று  கொண்டிருந்த மதுசூதனை கவனிக்காமல் அவனை தாண்டி சென்று மாதவனிடம் கொடுத்தாள்.

இதைப்பார்த்த மதுசூதன்

“இங்க ஒருத்தன் குத்து கல்லு மாதிரி தலையிலிருந்து கால் வரைக்கும்  நனைந்து போய் நின்னுகிட்டு இருக்கேன். எனக்கு டவல் கொடுக்காம  என்னை தாண்டி உன் புருஷனுக்கு டிராவல் எடுத்துட்டு போய் குடுக்குறியா? இருந்தாலும் கல்யாணம்  ஆன  ரெண்டு நாள்ல இப்படி   மாறி விடுவாய்u நான்  நினைக்கவேயில்லை மது. இதெல்லாம் ரொம்ப ஓவர்.”. என்றான் மதுசூதன் ஆச்சரியமாக.

 

“என்னடா ஓவர் ?அப்படித்தான் பொறுப்பா இருக்கணும்.” என்றார் சிதம்பரம் மகளுக்கு பரிந்து.

 

“நானாவது உன்னை கவனிக்காமல் தாண்டி எடுத்துட்டு போய் மாதவன் கிட்ட கொடுத்தேன். நீயாக இருந்தால் நடுவுல நின்னுகிட்டு இருந்த என்னை தள்ளி விட்டுட்டு போய் உன் பொண்டாட்டிக்கு கொடுத்திருப்ப.” என்றாள் மதுமிதா.

 

“சே சே நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்.” என்றான் மதுசுதன்.

 

“சரி சரி. உனக்கு கல்யாணம்  ஆனதுக்கு அப்புறம் நாங்க பார்க்கிறோம்.” என்றாள் மதுமிதா பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு.

 

“சரி சரி. போதும்.  ரொம்பநேரம் ஈரமாக இருக்க வேண்டாம். வீட்டுக்கு போகலாம் வாங்க.” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினார் வள்ளி.

 

“அஷ்டலட்சுமி கோயில் தரிசனம் ரொம்ப நல்லா இருந்தது இல்லை வள்ளி?” என்று கேட்டார் சிதம்பரம்.

 

“ஆமாங்க சென்னையில் இருக்கிறோம்u  பேரு. ஆனால் இதே ஊர்ல இருக்கிற கோயிலுக்கு வருவதற்கு நமக்கு இத்தனை நாள் ஆகுது. ஏதோ இன்னிக்கி மது கூப்பிட்டதால் நாம எல்லோரும் இங்கு வந்தோம். அப்படியே பீச் போயிட்டு வந்துட்டோம்.” என்றார் வள்ளி

 

“அம்மா  வெளியே சாப்பிட போலாமா?” என்று கேட்டாள் மதுமிதா.

 

“வேண்டாம் மது. வீட்ல மசால் தோசைக்கு மசாலா பண்ணி வச்சுட்டு தான் வந்து இருக்கேன். வீட்டுக்கு போனதும் தோசை ஊத்தி சாப்பிடலாம்.” என்றார் வள்ளி.

 

“சரிமா. எங்க டிரஸ் வேற ரொம்ப ஈரமா இருக்கு. பீச் மணல் வேற ஒட்டியிருக்கு. ஹோட்டலுக்கு போக கஷ்டமா தான் இருக்கும். வீட்டுக்கு போய் விடலாம்.”. என்றாள் மதுமிதா

 

வீட்டுக்கு வந்ததும் மதுமிதா தாயின் குளியலறையில்  குளித்து

 

விட, மாதவன் மதுமிதா அறையில் குளித்து விட்டுஉடை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தான்.

எல்லோருக்கும் சூடாக மசால் வடை, மசால் தோசை, சாம்பார், சட்னி.  வள்ளி பரிமாற மற்றவர்கள்  சாப்பிட்டனர்

 

கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிய சோர்வில்  படுக்கையில் படுத்த அடுத்த நிமிடம் உறங்கினாள் மதுமிதா.

 

மாதவனுக்கு உறக்கமே வரவில்லை. கடற்கரையில் அலையடித்த போது மதுமிதா தள்ளாடியபடி அவன் மீது  விழ இருவரும் கீழே கட்டி பிடித்தவாறு விழுந்தது ஞாபகம் வந்து அவன் உறக்கத்தை கலைத்தது.

 

அவன் மார்பில் கை வைத்த படி அவன்மீது பூமாலை என விழுந்து கிடந்தாள் மதுமிதா. அவனது கரங்கள் அவளை வளைத்து இருந்தன. எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ அவர்களுக்கே தெரியாது. மதுசூதன் பாட்டை கேட்டதும் தான் சுயநினைவுக்கு வந்து  எழுந்தார்கள்.

 

அப்போதும்  ஈரமான உடையில் இருந்த மதுமிதாவின் அழகு அவனை  இம்சித்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவளை பார்த்தான் மாதவன்.

‘எவ்வளவு அழகாக இருக்க நீ? உன்னை மாதிரி ஒரு பெண்ணை பொண்டாட்டியாக பக்கத்தில் எல்லா உரிமையுடன் வைத்துக்கொண்டு பிரம்மச்சாரியா இருப்பது எவ்வளவு கஷ்டம்  தெரியுமா?’ என்று அவளிடம் மெல்லிய குரலில் கேட்டான் மாதவன்.

 

‘உனக்கு எப்படி தெரிய போகுது? நீ தான் நல்லா நிம்மதியா தூங்கிட்டு இருக்கியே. ஹூம்” என்று பெருமூச்சு விட்டபடி  படுத்தான் மாதவன்.

 

வெகுநேரம் அவளது அழகை பார்த்து ரசித்தபடியே உறங்கினான்.

 

“வள்ளி டைமாச்சு. சீக்கிரம்  டிபன் பாக்ஸ் எடுத்துட்டு வா.” என்று அவசர படுத்தினார் சிதம்பரம்.

 

“வந்துட்டேன் வந்துட்டேன்.” என்று  கையில் டிபன் பாக்ஸ் உடன் வந்த வள்ளி

“சீக்கிரம் வீட்டுக்கு  வந்துடுங்க” என்று சொன்னபடி சிதம்பரம் கையில் டிபன் பாக்ஸை கொடுத்தார்.

“அதெல்லாம் நீ சொல்லவே வேண்டாம். மதுமிதா வீட்ல இருக்கும்போது நான் லேட்டா வருவேனா?” என்றுவிட்டு தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி  கொண்டிருந்தார்” சிதம்பரம்.

 

மதுமிதா ஹாலில் இருந்த சோபாவில் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு  அமர்ந்திருந்தாள். அவளை கவனித்த சிதம்பரம் அவளிடம் வந்தார்.

“மது எனக்கு  முக்கியமான  வேலை இருக்கு. கல்யாணத்துக்கு ஏற்கனவே லீவு  எடுத்துவிட்டதால் எனக்கு ரொம்ப லீவு கிடைக்காது. நேத்துக்கூட   லாஸ் ஆஃப் பே தான்  போட்டிருந்தேன். இதுக்கு மேல லீவு போட முடியாது  மது .நீயும் மாப்பிள்ளையும் இன்னிக்கி காலையிலிருந்து சாயந்திரம் வரைக்கும்  எங்கேயாவது போயிட்டு வாங்க. சாயந்திரம் நானும் மதுசூதனனும் வந்ததுக்கு அப்புறம் நாம எல்லோரும் சேர்ந்து வெளிய போகலாம். இல்லை வீட்டிலேயே ஏதாவது கேம் விளையாடலாம் சரியா?” என்று கேட்டார் சிதம்பரம்.

 

“ஆமாம் மது. எனக்கும் லீவு கிடைக்காது. வொர்க் பிரம் ஹோம் வேனா போடலாம். அப்போதும் உன் கூட வெளியே சுத்த முடியாது. அதனால ஆபீஸ் போறது பெட்டர். ஆனால் சாயந்திரம் நாலு மணிக்கெல்லாம் வந்துடறேன். ஓகே வா ? இதுக்கெல்லாம் முகத்தை இப்படி  தூக்கி வெச்சுகாதே. ஏற்கனவே நீ சுமார்தான். இப்போ இன்னும் சுமார் மூஞ்சி குமாரி  மாதிரி இருக்கே.” என்று வேண்டுமென்றே சீண்டினான் மதுசுதன்.

 

“என்ன நான் சுமார் மூஞ்சி  குமாரி யா? நீதான் சுமார் மூஞ்சி குமார்” என்று அவன் சொல்லியதை அவனுக்கு திருப்பினாள் மதுமிதா.

 

“ சரி சரி. ரெண்டு பேரும் சீக்கிரமா போயிட்டு சாயந்திரம் நாலரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திடனும்.” என்று இருவருக்கும் ஆணை பிறப்பித்து விட்டு விடை கொடுத்தாள் மதுமிதா.

 

“அப்பாடி எப்படியோ மலையை விட்டு  இறங்கினாயே அதுவே போதும்.” என்றான்  மதுசுதன்.

 

“என்னை பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? உன்னை….” என்று அவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள். மதுமிதா.

 

“அம்மா தாயே என்னை விட்டுடு.”  என்றுவிட்டு எழுந்து லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

 

“சரிமா. சாயந்திரம் பார்க்கலாம்.” என்று விட்டு சிதம்பரமும் சென்றார்.

 

“மது இன்னிக்கி நாம எங்கே போகிறோம்?” என்று கேட்டபடி அங்கு வந்தான் மாதவன்.

 

“எங்க போறது? அதான் அப்பாவும் அண்ணனும் ஆபீஸ் போய்ட்டாங்க இல்ல?” என்று கன்னத்தில் கை வைத்தபடி கவலையில் கூறினாள் மதுமிதா.

 

“நாம ரெண்டு பேரும் போலாமே.” என்றான் மாதவன்.

 

“அதானே! நாம ரெண்டு பேரும் அம்மாவை கூட்டிட்டு போகலாமா?” எனக்கேடடாள் மதுமிதா.

‘இவள் கூட தனியா போகலாம்னு பாத்தா, அம்மாவையும் கூட்டிக் கொண்டு தான் வருவாள் போல இருக்கு.’ என்று நினைத்துக்கொண்டான் மாதவன்.

 

அவன் முகத்தைப் பார்த்து அவன் மனதை  படித்த பார்வதி

“மது எனக்கு வீட்ல வேலை இருக்கு. நீ மாப்பிள்ளை கூட போயிட்டு வா.” என்றார் பார்வதி.

“அதெல்லாம் பரவாயில்லை. வாங்க என்கூட.” என்று புரியாமல் அடம்பிடித்தாள் மதுமிதா.

 

“மது இங்க வா.” என்று மகளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றார் அவர்.

 

“மாப்பிள்ளை உன்கூட தனியா வெளிய போகணும்னு ஆசைப்படுகிறார்u நினைக்கிறேன். நீ போய்ட்டு வா. சாய்ந்தரம் நாம எல்லோரும் சேர்ந்து போகலாம். நான் உனக்கு பிடித்த சிக்கன் பிரியாணி பண்ணி வைக்கிறேன். என்ன புரிஞ்சுதா?” என்றார்.

 

“சரிம்மா போயிட்டு வரேன்.” என்றாள் மதுமிதா.

 

மாதவன், மதுமிதா இருவரும் ஸ்பென்சர் பிளாசாவில் இருந்தனர்.

 

“இந்த லிப்ஸ்டிக் ட்ரை பண்ணி பாருங்க. நல்லா இருக்கும்.” என்று அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்  ஒருத்தி மதுமிதாவின் இதழில் அந்த உதட்டு சாயத்தை பூசி கொண்டிருந்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!