Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 8

அத்தியாயம்-8

ஜென்சி அழைப்பை துண்டித்து இருக்க ஜோஷ்வா சொன்னதை காட்டிலும் அவள் குரலில் தெரிந்த அவசரமும் செய்கையும் தான் அவனை இன்னும் சந்தேகத்தில் ஆழ்த்த,

“என்னமோ நடந்திருக்கு.. ஆனா ஜென்சியும் மறைக்கிறா…”

என்று சிந்தனையில் இருந்தவன் மீண்டும் அலைபேசி ஒலிக்கவும் தான் நினைவு கலைந்தான்.



Advertisement

தந்தையிடம் இருந்து தான் அழைப்பு..!!

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும்,

“மீட்டிங் ரூம்மிற்கு வா ஜோசஃப்..”

Advertisement

என்று சொல்ல,

Advertisement

“ஓகே டாட்..”

என்றதும் வைத்து விட்டார். 

“ஜோஷ் வந்திட்டு போனது தெரிந்திருக்கும்… அவன் எதுக்கு வந்தான்னு கேட்டு என்னை துளைக்க போகிறார்..”

Advertisement

என்று எண்ணியவனாய் பெரூமூச்சோடு கணினியை அணைத்துவிட்டு எழுந்து அங்கே சென்றான்.

மீட்டிங் அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் அங்கே அமல்ராஜ்,இருதயராஜ் மட்டுமின்றி இன்னும் சிலர் அமர்ந்திருப்பதை கண்டு குழம்பியவனாய் தந்தையை நோக்கி வர இவன் அரவம் கேட்டு அவர்கள் திரும்பி பார்க்கவும் அவர்கள் யாரென்று கண்டுக் கொண்டான்.

எல்லாம் அவர்களை போன்ற பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான். இவர்களோடு போட்டிகள் இருந்தாலும் அவை அரோக்கியமானவை மட்டுமே.. மற்றவர் வழியில் குறுக்கிடாமல் ஒருவித உடன்படிக்கையோடு செயல்படுவதால் தொழில் முறையில் நட்பு இன்றும் நிலைத்திருந்தது.

அதன் அடிப்படையில்,

“நம்ஸ்தே ஜீ..” என்று அவர்களிடம் மரியாதையாய் கூறிவிட்டு  ‘என்ன விஷயம்..’ என்பது போல் தந்தையை பார்க்க

‘கவனி..’ என்று அவர் சைகை செய்யவும் அமைதியாய் அவர் அருகில் அமர்ந்தான்.

“முடிவா என்ன சொல்ல வரீங்க..”

என்று அமல்ராஜ் கேட்கவும் நடுவில் அமர்ந்திருந்த ஒருவர் மற்றவர்கள் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு,

“மிஸ்டர் மேத்தியூ… நமக்குள்ள எப்பவும் போட்டிகள் இருக்கும் தான்.. ஆனால் நமக்குன்னு சில எதிக்ஸ் கடைப்பிடிக்கிறோம்… ஆனால் உங்க மகன் ஜோஷ்வா… அவருக்கு அந்த எல்லைகள் எதுவும் இல்லைன்னு நினைக்கிறார்.. அவருக்கு தேவையே இல்லாத விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கிறார்.. நீங்க இன்னைக்கு அடிச்சு கிட்டாலும்  அப்பா -மகன் நாளைக்கே கூட சேர்ந்திடுவீங்க.. அதனால உங்களுக்கு இது ஒரு விஷயமா இல்லாம இருக்கலாம்.. ஆனால் நாங்க அப்படி விட முடியாது..

வரம்பு மீறி அவர் செய்யும் விஷயங்கள் ரொம்ப ஆபத்தானது.. நீங்க இருக்கீங்கன்ற தைரியம் தான் அவரை இதெல்லாம் செய்ய வைக்குதுனு நினைக்கிறோம்.. இத்தனை நாள் உங்க முகத்திற்காக தான் பொறுத்து போனோம் அமல்ராஜ்.. ஆனால் இனியும் இது தொடர்ந்துச்சுன்னா யூ ஆல்ஸோ ஹாவ் டூ ஃபேஸ் த கான்ஸிக்குவென்ஸ்.. அதனால யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க..”

என்று அவர் பேச பேச இது ஜோஷ்வா இழுத்து வைத்திருக்கும் ஏழரை என்று புரிய பல்லை கடித்தான் ஜோசஃப்.

ஆனால் அமல்ராஜோ முகத்தில் துளி சலனமும் இல்லாமல் அவர்கள் பேசுவதை கேட்டவர் அவர் முடித்ததும் நிதானமாய் சாய்ந்தமர்ந்து,

“வெல்… இதில் நான் முடிவு சொல்ல என்ன இருக்கு.. இன்ஃபக்ட் இதை பத்தி நீங்க எல்லாம் என்னுட்ட பேச வேண்டிய அவசியமே இல்ல.. பொதுவா தொழில் ரீதியில் உங்களுக்கு பிரச்சனை குடுக்கிறவங்களை எப்படி டாக்கில் செய்வீங்களோ.. அப்படியே ஃபினிக்ஸ் எதிராகவும் செய்யலாம்.. அவனவன் செய்யும் வினைக்கு அவனவன் அனுபவிக்கட்டும்.. இதில் இரத்தபாசம்.. உறவு போன்ற நான்சென்ஸிற்கு எல்லாம் இடமில்ல… அவனுக்கு எதிராக நீங்க செய்யபோகும் எதனாலும் நம்ம பிஸ்னெஸ் ரிலேஷன்ஷிப்ல எந்த பாதிப்பும் ஏற்படாது..”

என்று சொல்ல இருதயராஜ்,ஜோசஃப் முகம் அதிர்ச்சியை பிரதிபலித்து என்றால் வந்திருந்தவர்கள் முகம் மலர்ந்து போனது.

“இதை தான் நாங்க எதிர்பார்த்தோம்.. ஆர் யூ ஷூயர்..”

“எஸ்.. அஃப்கோர்ஸ்… அவனுக்காக நானோ.. என் தம்பியோ.. என் ஒரே மகன் ஜோசஃப்போ நிச்சயம் நிற்கமாட்டோம்..”

அந்த ஒரே மகனில் சற்று அழுத்தம் கொடுத்து உறுதியாய் கூற அவர்களுக்கும் திருப்தி..!!

எழுந்து அவர் கையை குலுக்கிய முதலாமானவர்,

“தேங்க் யூ ஜி… இனி நாங்க பார்த்துபோம்..”

என்று சொல்ல அவர்களுக்கு இன்முகத்துடன் அமல்ராஜ் விடைக்கொடுத்து அனுப்பி வைக்கும்வரை அமைதி காத்தவன் அவர்கள் சென்றதும்,

“என்ன டாட் இது… அவங்க எதை மீன் பண்றாங்கன்னு உங்களுக்கு புரியாமல் இருக்க வாய்ப்பு இல்ல.. அப்படி இருக்கும்போது என்ன வேணா செஞ்சுக்கோன்னு சொல்றீங்க..”

அதிர்ச்சியாய் கேட்க,

“ஆமா ண்ணா… எனக்கும் அவங்க பேச்சே சரியாபடல… ஜோஷை எதாவது பண்ணிவிட்டால்.. நீங்க ஆத்திரபடாம கொஞ்ச நிதானித்து இருக்கலாம்..”

என இருதயராஜூம் சொன்னபோதும் அயராது,

“நான் ரொம்ப நிதானமா தான் இருக்கேன்… நீங்க தான் உணர்ச்சி வசப்படுறீங்க.. பெரிய ஹீரோவாட்டம் எல்லா விஷயத்திலும் தலையிட தெரியுதுல.. எல்லாரும் என்ன நம்மளை மாதிரியே வேடிக்கை பாப்பானுங்களா.. அதோட பின்விளைவையும் அவன் சந்திச்சு தான் ஆகணும்.. அவனுக்காக நாம சிலுவை சுமக்க முடியாது இதயா.. அவன் பட்டு திருந்துட்டும்… அப்போ தெரியும் நம்ம அருமை…”

என்று அவர் சொல்லும்போது ஜோசஃபால் எதிர்த்து பேசமுடியவில்லை. ஆனாலும் அவனுக்கு தவிப்பாய் இருந்தது.இது தான் அவன்..!! ஜோஷ்வா மீது கடலளவு கோபம் இருந்தாலும் அவனுக்கு என்னவானால்

 என்ன என்ற அலட்சியம் தோன்றவில்லை. கருவறையில் தொடங்கிய பந்தம் என்பதாலோ என்னவோ அவனுக்கு ஆபத்து என்றதும் பரிதவிப்பாய் இருந்தது.

அவனை அறிந்தவராய் அமல்ராஜ்,

“உனக்கு தான் முக்கியமா சொல்றேன்.. அவனுக்காக நீ பாவம் பார்த்தது எல்லாம் போதும்.. என்னையும் என் வார்த்தையையும் மதிக்கிறதா இருந்தா இதில் நீ தலையிட கூடாது…”

என்று அழுத்தமாய் சொல்ல,

‘நீ விலகி நின்னு வேடிக்கை பார்..’ என்று இதே தோரணையில் ஜோஷ்வா சொன்னது நினைவிலாட இருவருக்கும் இடையில் நாம் பந்தாட படுகிறோம் என்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது.

பல வருடங்கள் கழித்து நேரில் சந்திந்த தன் அத்தை மகளோடு எஸ்தர் அளவிடா மகிழ்ச்சியோடு ஒன்றிவிட தாமஸின் அண்ணன் பிள்ளைகளை துணை கிடைத்ததால் லிசாவும் அவர்களோடு ஐக்கியமாகிவிட வழக்கம்போல் தனித்து அமர்ந்திருந்தாள் ஜென்சி.

கேட்ட கேள்விகளுக்கு பதில்களாலும்  அளவான சிரிப்பாலும் மற்றவர்களுக்கும் அவளோடு இயல்பாய் பழக முடியாமல் தள்ளி நிறுத்தியது.

அலைபேசியை பார்ப்பதும் சுற்றி வேடிக்கை பார்ப்பதுமாய் அவள் நேரத்தை கடத்த அவளை கவனித்து நெருங்கிய தாமஸ்,

“வாங்களேன் ஜென்சி.. சும்மா வீட்ட சுத்தி காட்றேன்..”

என்றவன், ‘இல்ல.. இல்ல.. வேணாம்..’ என்று அவள் சொல்ல வந்ததை கவனியாதது போல் முன்னால் நடக்க திரும்பி அன்னையை பார்த்துவிட்டு வேறுவழியின்றி அவனை தொடர்ந்து நடந்தாள்.

நவீன அமைப்புகளோடு கட்டப்பட்ட தனி வில்லாவான அவ்வீடு மிகவும் அழகாய் இருந்தது.இதே போல் தனி வீடு எடுக்க வேண்டும் என்பது தான் ஜென்சியின் ஆசை.. ஆனால் மும்பை வந்ததில் தொடங்கி அகஸ்தீன் உயிரோடு இருந்தவரை வாழ்ந்த அவ்வீடு எஸ்தருக்கு மிகவும் உணர்ச்சிகரமானது என்பதால் அந்த ஆசையை கைவிட்டு விட்டாள் ஜென்சி.

“உங்களுக்கு இங்க வந்தது பிடிக்கல.. ரைட்.. அதானே அமைதியாவே இருக்கீங்க..”

என்று திடீரென தாமஸ் கேட்டதும் அவனை நோக்கியவள் மறுத்து தலையசைத்து,

“இல்லையே.. நான் எப்போதும் போல தான் இருக்கேன்…”

என்றாள்.

“ஹோ.. அப்போ நார்மலாவே நீங்க ரொம்ப அமைதியா..?? ஹப்பா… லிசா மூச்சுக்கு முண்ணூறு வார்த்தை பேசிடுறா.. ஸச்ச லைவ்லீ கேர்ள்.. அவளுக்கு நேர் ஆபோஸிட்டா நீங்க.. எப்படி இப்படி இருக்க முடியுது..”

என்று அவன் பேச்சை வளர்த்தபோது,

“மை ஆக்‌ஷன் ஸ்பீக்ஸ் லௌடர்..”  என இதழ் பிரிக்கா புன்னகையோடு இரத்தின சுருக்கமாய் அவள் முடித்துவிட,

“கஷ்டம் தான்..” என்ற முணுமுணுப்போடு மெல்ல அவன் சிரித்து கொள்ள, 

“என்ன..” என்று அவள் கேட்கவும்,

“ஒன்னுமில்ல.. இது என் ஸ்டெடி ரூம்..பார்க்குறீங்களா..”

என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு..!!

‘வேணானு சொன்னால் விடவா போற.. என் தலையெழுத்து..’ என்ற உள்ளத்தின் கடுப்பை வெளியே காட்டது,

“ஒய் நாட்..”

என்று தோளை குலுக்கினாள்.

அறையினுள் நடுவே மேசை நாற்காலியை தவிர சுற்றி புத்தக அலமாரியாய் இருக்க அதனை பார்த்து மலைத்தாள்.

“இந்த ரூம்மும்.. லேப்பும் தான் எனக்கு எல்லாமே… அனுமதி கிடைக்காது.. இல்லேனா லேப்பை வீட்டுலயே வைச்சுடுவேன்..” 

என்று குறுஞ்சிரிப்புடன் கூறியவன்,

“ப்ராடீஸிங்கை விட எனக்கு ரிஸச்ல தான் இன்ரெஸ்ட்.. நான் என்னோட பி.ஹெட்டி பண்ணிட்டு இருக்கேன்.. இன்னும் இரண்டு வருஷத்துல முடிச்சுடுவேன்..”

என்று சொல்ல, “ஹோ.. சூப்பர்ங்க..”

என்றாள் உண்மையான பாராட்டோடு..

அந்த மேசையினை எதர்ச்சையாய் பார்வையிட்டவள் அதில் அடுக்கியிருந்த ஸ்பைரல் ஃபைல்களில் மேல இருந்த ஃபைலின் முகப்பில் இருந்த புகைப்படத்தை கண்டு நிலைத்து விட்டாள்.

நான்கு அல்லது ஐந்து வயதை ஒத்த ஒரு சிறுமியின் புகைப்படம் அது.. தலையில் முடி இன்றி முகம் ஒடுங்கி மூக்கினில் டுயூப் சொருக்க பட்டு நலிந்த தோற்றதில் இருந்த அவளின் இதழ்கள் மட்டும் புன்னகையில் இருக்க தன்னையும் மீறி அதனை கையில் எடுத்து பார்த்தாள் வியப்போடு..!!

“இந்த பொண்ணா.. நான் படிச்சதுலே ரொம்ப இன்ரெஸ்டிங்கான கேஸ் ஜென்சி.. ஒரு பத்து வருஷத்துக்கு முந்தி நடந்தது.. மெடிஸின்ல ஒரு ப்ரேக் த்ரோன்னு சொல்லலாம்.. இந்த பொண்ணு பேரு ஏமி.. கேன்சர் சர்வைவர்..”

என்று சொல்ல தொடங்கவும் அவளும் அவனை ஆர்வமாய் நோக்கினாள்.

“இது கெனடால நடந்தது.. அப்போ அந்த பொண்ணுக்கு  அஞ்சு வயசு தான் இருக்கும்.. லிம்போசைட் கேன்சரோட மூணாவது ஸ்டேஜ்ல இருந்தா… எந்த நோய் வந்தாலும் அதை எதிர்க்க நேச்சுரல் ஹீரோஸா நம்ம இம்யூன் சிஸ்டம் இருக்கும்…. ஆனால் கேன்சர் கேஸ்ல அப்படி இல்ல.. கேன்சர் செல்ஸ் உள்ள வந்திட்டால் டோட்டல் பாடியையும் அதோட கன்ரோலுக்கு கொண்டு வந்திடும். எந்த சிஸ்டமும் அதுக்கு எதிரா செயல்பட முடியாது. அதுவும் தெர்ட் ஸ்டேஜ்ல வாய்ப்பே இல்லை.

ஏமி விஷயத்திலும் எல்லா முயற்சியும் பொய்த்து போயிடுச்சு.. ஆனால் அவ பேரென்ஸ் நம்பிக்கையை விடாமல் ஒரு போல்ட் டெஷிசன் எடுத்தாங்க. சைண்டிஸ்டோட புதிய கண்டுபிடிப்பிற்காக க்ளினிகல் ட்ரைல்க்கு ஏமியோட நேம்மை என்ரோல் பண்ணாங்க.

அதாவது பேஷண்டோட இம்யூன் செல் மாதிரியே கேன்சர் செல்லை எதிர்க்கும் திறனோட செயற்கையான செல் உருவாக்கிறது தான்.. தட்ஸ் இமியூனோ தெரப்பி..

ஒரு மருந்து கண்டு பிடிக்கிறது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம் அதற்கான அனுமதியும் அங்கிகாரமும் கிடைக்கிறது.. எல்லாத்தையும் தாண்டி அவங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது.. ரெண்டு பக்கமும் ரொம்ப டென்ஷனான சூழ்நிலை தான்.. கையில இருக்கிறது ஒரு அஞ்சு வயசு குழந்தையோட உசுரு.. கரணம் தப்பினால் மரணம் தான்ற நிலை தான்…

முதல்ல அந்த ட்ரீட்மெண்ட் கொடுத்தப்போ அவங்க அவளுக்கு ஹெவி ஃபீவர்.. இரண்டு வாரம் வெண்டிலேடர்ல வைச்சு இருந்தாங்க.. ஆனால் அதற்கு அப்புறம் நடந்தது தான் மிராக்கல்.. யூ க்னோ.. ஸீ பீட் த கேன்சர்.. ஒரு வருஷம் போராட்டத்திற்கு பிறகு அவ பரிபூரண குணமடைந்தாள்.. ரியலீ இட்ஸ் அ க்ரேட் அச்சீவ்மெண்ட் டூ த டீம்..”

என்று அவன் சொல்லி முடித்த பின்பும் அவள் கண்களில் பிரம்மிப்பு குறையவில்லை. ஐந்து வயது குழந்தைக்கு எத்தனை பெரிய போராட்டம்..!!! அதில் அவள் மீண்டு வந்தது நினைக்கவே ஆச்சரியமாய் இருந்தது. மீண்டும் அந்த குழந்தையின் முகத்தை பார்த்தவள் அந்த ஃபைலின் பக்கங்களை திருப்பினாள்.

தாமஸ் கூறியது தான் அதிலும் இருந்தது. மேலோட்டமாய் பார்த்தபடி பக்கங்களை திருப்பியவள் கைகள் ஒருபக்கத்தில் நின்றுவிட்டது.

ஏமி வீல் சேரில் அமர்ந்திருக்க அவளுக்கு பின்னால் தம்ஸப்போடு வெள்ளை கோர்ட்டில் முழு பற்களும் தெரிய சிரித்தபடி ஆறு பேர் நின்றனர். அதில் அதிர்ச்சி என்னவெனில் ஒடிசலான தேககத்தில் அவர்களோடு ஒருவானாய் நின்றிருந்தான் ஜோஷ்வா..

பார்த்ததுமே அது ஜோஷ்வா என்று கண்டு பிடித்துவிட்டாள் ஏனெனில் ஜோசஃப் படித்ததும் மேலாண்மை துறையில்..!!

ஆனால் கண்டுபிடித்த விஷயத்தை தான் ஜீரணிக்க முடியவில்லை. ஒடிசலான தேகத்தோடும் குறுந்தாடியோடு வித்தியாசமாய் இருந்தாலும் ஜோஷ்வா தான் என்று உறுதியாய் சொல்ல முடிந்தது.

“இவங்க டாக்டர்ஸ்ஸா..”

முயன்று இயல்பான குரலில் கேட்க,

“நோ.. நோ… அந்த ரிஸச் டீம்.. ஐ திங் இம்யூனாலஜிஸ்ட்.. அது என்னானு சரியா தெரியல..”

என்று எதார்த்தமாய் கூறி அந்த ஃபைலை வாங்கி வைத்துவிட அவள் அதிர்ச்சியில் தான் இன்னும் நின்றாள். அதே சமயம் வெளியே கேட்ட கூச்சலில் வேகமாய் தாமஸ் வெளியே சென்றபோதும் அவள் அப்படியே தான் நின்றாள்.

“ஜோஷ் சைண்டீஸ்ட்டா..????? இதெப்படி..”

என்று யோசித்து நிற்கும்போதே வேகமாய் மீண்டும் வந்த தாமஸ்,

“மை காட்… ஜென்சி… லிசா மயங்கி விழுந்துட்டாள்…”

என்று சொல்லவும் தான் மீண்டவள்,

“என்னாச்சு..” என்று பதறி ஓடிவர,

“எழுப்ப ட்ரை பண்ணியும் எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. உடனே ஹாஸ்பிட்டல் போகணும்.. ஹரியப்..”

என்று கூறி துரிதமாய் செயல்பட்டான் தாமஸ்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!