Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Idhaya thirudan Episode 28.2

“அப்புறம் உன் பேபி பிங்க் சல்வார் கையில் லேசான கரை இருக்கு பாரு.” என்றான்.

 

அவள் பார்த்தாள், இருந்தது.

 



Advertisement

இவ்வளவையும் சாலையையே பார்த்துக்கொண்டு வெகு சாதாரணமாக  கூறினான்.

 

மதுமிதாவுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். ‘இந்த அளவுக்கு இவன் என்னை நோட் பண்ணி இருக்கானா?’ என்று யோசித்தாள்.

Advertisement

 

Advertisement

“ என்ன உன்னை இவ்வளவு தூரம் பார்த்திருக்கிறேனாnu  யோசிக்கிறாயா?” என்று மனதில் நினைத்ததை கேட்கவும் திகைத்தாள் மதுமிதா.

 

“சரி. என்னை பத்தி வேற என்ன உங்களுக்கு தெரியும் சொல்லுங்க பாப்போம்.” என்று கேட்டாள்.

Advertisement

 

“உனக்கு பிடிச்ச டிரஸ்  சில்க் சாரி, பிடிச்ச  கேஷுவல் டிரஸ் குர்தா,  பிடிச்ச கலர்….” என்று அவன் ஆரம்பிக்கவும் அவள் இடைமறித்து

“பிடிச்ச கலர், பிடிச்ச நடிகர் எல்லாம் நான் ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிட்டேன். அதைத்தவிர வேறு சொல்லுங்கள்.” என்று கேட்கவும்

 

அவன் “நீயே கேளு.” என்றான்.

 

அதற்கு அவள் “எனக்கு பிடிச்சதை பத்தி சொன்னீங்க. பிடிக்காததை பத்தி சொல்லுங்க பாப்போம்.” என்றாள்  மதுமிதா.

 

“ஏதாவது ஒரு விஷயத்தை உன் விருப்பத்திற்கு மாறாக உன்மேல்  திணித்தால்  உனக்கு பிடிக்காது.” என்று அவன் சொல்லவும் அவனை பார்த்தாள்.

 

“என்னை ரொம்ப நாளா பாலோ பண்ணி என் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுறீங்க .”என்று அவள் விளையாட்டாக கேட்கவும்

மாதவன் அதிர்ச்சியில் காரை நிறுத்தினான்.

 

காரை அவன் திடீரென்று நிறுத்தவும் சாலையில் யாராவது குறுக்கே வந்துட்டாங்களா என்று மதுமிதா சாலையை பதற்றத்துடன் பார்த்தாள்.

 

அப்படி யாரும் வந்ததாக தெரியவில்லை. எனவே மாதவனிடம் திரும்பி “என்னாச்சு மாதவன்?” என்று புரியாமல் கேட்டான்.

 

“அது அது ஒன்னும் இல்ல. அங்க ஒரு சின்ன பையன் கிராஸ் பண்றதுக்கு தனியா நின்னு கிட்டு முன்னாடியும் பின்னாடியும் நடந்துகிட்டு இருந்தான். அதான் எதுக்கும் பிரேக் போடலாம்னு போட்டுட்டேன்.” என்று சமாளித்தான்.

 

“யாரு? எங்கே?” என்று சாலையை பார்த்தாள் மதுமிதா.

 

இருள தொடங்கி இருந்ததால் அவளுக்கு அப்படி யாரும் அங்கு இருப்பதாக தெரியவில்லை.

 

“அதோ  அங்கு.” என்று  சொன்னபடி அங்கு இருந்த ஒரு பையனை  காண்பித்தான்.

 

“ஆனா அவன் தூரமா தான் இருக்கான்.” என்று மதுமிதா ஆரம்பிக்கவும்

 

“சரி அதை விடு.  நீ ஏதோ  கேட்டாயே. சொல்லு.” என்று பேச்சை மாற்றினான்.

 

“ஏதோ கூட இருந்து பார்த்த மாதிரி அவ்ளோ கரெக்டா சொல்றீங்கnu சொன்னேன். இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடுங்க. நானும் இதே மாதிரி உங்களைப்பற்றி எல்லாமே சொல்றேன் பாருங்க.”. என்றாள். அவள்

 

“எவ்வளவு நாள் வேணாலும் எடுத்துக்கோ. ஆனால் என் கூடவே எப்பவும் இரு. அது போதும்.” என்றான் அவன்.

 

“நான் இனி உங்க கூட தானே இருக்கப் போறேன். அதை வேற எதுக்கு தனியா சொல்லிக்கிட்டு?” என்றாள் மதுமிதா.

 

“ஏதோ சொல்லனும்னு தோணுச்சு. அதான்.” என்றான் அவன்.

 

“ரொம்ப அழகா இருக்கு மாதவன். நல்ல செலக்சன். யார் செலக்ட் பண்ணினது?” என்று கேட்டாள் மலர்.

 

“நான் தான் அக்கா.” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டாள் மதுமிதா.

 

சென்னையில் மாதவன் மதுமிதாவுக்கு வாங்கிய ரூபி செட் நகையை மதுமிதா காண்பிக்க அதனைப் பார்த்து மலர் இப்படி சொன்னாள்.

 

“உங்களுக்கு பிடிச்சிருக்கா? உங்களுக்கும் ஒரு செட்டு வாங்கலாமா அண்ணி ?”என்று கேட்டான் மாதவன்.

 

“வேண்டாம் மாதவா. என்கிட்ட இதே மாதிரி ஒரு செட் இருக்கு.” என்றாள் மலர்.

பார்வதி, மலர் சுதாராணி மூவருக்கும் புடவை வாங்கி வந்திருந்தாள் மதுமிதா. பார்வதிக்கு பச்சை நிறத்தில் மென்பட்டு வாங்கி வந்திருந்தாள்.

சுதாராணி, மலர் இருவருக்கும் கரும்பச்சை நிறத்தில் ஒரு பிளைன் புடவை வாங்கி வந்திருந்தாள். தனக்கும் அதே மாதிரி ஒரு புடவை வாங்கி இருந்தாள்.

புடவைகளை காண்பித்து “எப்படி இருக்கிறது ?”என்று கேட்டாள் மதுமிதா.

 

“ரொம்ப அழகா இருக்கு.” என்றார் பார்வதி.

 

“இந்த மென்பட்டு உங்களுக்கு” என்று பட்டுப்புடவையை பார்வதி இடம் கொடுத்தாள் மதுமிதா.

 

“அப்புறம் இந்த பிளைன் புடவை எங்க மூணு பேருக்கும் வாங்கி இருக்கேன். அதுல ஒரே மாதிரி டிசைன் பண்ணி அழகா கிராண்டா மாத்தணும். மாத்தி அதுக்கப்புறம் கொடுக்கிறேன்.” என்றாள் மதுமிதா.

 

“சரி மது. நீ பண்ணினால் ரொம்ப அழகா இருக்கும். அதான் உன் பிளவுஸ் டிசைன் பார்த்திருக்கிறேன் இல்லையா? சீக்கிரம் பண்ணி கொடு.” என்றாள் மலர் ஆர்வமாக.

 

 

 

“என்ன கிளம்பிட்டீங்களா? டைம் ஆகுது. சீக்கிரம்.” என்று பரபரத்துக் கொண்டிருந்தார் அண்ணாமலை.

“நாங்க எல்லோரும் ரெடியா இருக்கோம். இன்னும் மதுமிதா வரல.” என்றார் பார்வதி.

“ஆமா மாமா. நாங்க எல்லாம் கிளம்பி இருபது நிமிஷம் ஆகுது.” என்றாள் மலர்.

 

“மலர் மதுமிதாவுக்கு புடவை கட்டத் தெரியாதுnu சொன்னாள் இல்லை? நீ போய்  அவளுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு. நான் வேற விருந்து புடவை கட்டிட்டு தான் போகணும்னு சொல்லிட்டேன். அதான் லேட் ஆகுதுnu நினைக்கிறேன். நீ போய் பாரு.” என்றார் பார்வதி.

 

“ஆமாம் அத்தை. எனக்குக்கூட ஞாபகமே இல்லை.” என்றவள் படியேறி அந்த அறை கதவை தட்டி “மதுமிதா கிளம்பிட்டியா?” என்று மலர் கேட்டாள்.

 

“அக்கா இந்த  பட்டு புடவையை கட்ட ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று அழாத  குறையாக உள்ளிருந்து சொன்னால்  மதுமிதா.

“மது அதுக்குதான் நான் வந்து இருக்கேன். நான் உனக்கு ஹெல்ப் பண்றேன். கதவைத்திற.” என்றதும் மதுமிதா  கதவை திறந்தாள்.

 

ரவிக்கையின் மேல் துண்டை போர்த்திக் கொண்டு  பாவாடை மற்றும் தொங்கிக்கொண்டிருந்த  புடவையும் ஆக நின்றுகொண்டிருந்தாள் மதுமிதா.

 

மலர் அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் சிரித்துவிட்டாள்.

 

மலர் சிரித்ததை பார்த்த மதுமிதா “அக்கா என்னை பார்த்தா உங்களுக்கு காமெடி பீஸ் மாதிரி இருக்கா?” என்று மலரிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாள் மதுமிதா.

 

“சாரி சாரி மது. நான் விளையாட்டா நான் சிரித்தேன். தப்பா எடுத்துக்காதே.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தாள் மலர்.

 

“அதெல்லாம் நான் உங்களை தப்பா எடுத்துக்க மாட்டேன். உங்களை பத்தி எனக்கு நல்லா தெரியும். எனக்கு இந்த புடவையை கட்டி  விடுங்க. அப்படியே எனக்கு புடவை வேகமா கட்ட சொல்லிக் கொடுங்க.” என்றாள்.

 

“மது இது ஒரு பெரிய விஷயமே கிடையாது. முதல்ல  இப்படி என்று ஆரம்பித்து புடவையை அவளுக்கு கட்டி  விட்டபடி சொல்லிக் கொடுத்தாள்.

 

“அவ்வளவுதானா?” என்று கேட்டாள் மதுமிதா.

 

“அவ்வளவுதான். சீக்கிரம் வா. எல்லோரும் உனக்காக அரை மணி நேரமா உட்கார்ந்துட்டு இருக்காங்க.”

 

“சரி சரி அக்கா.” என்று சொன்னவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீழே வந்தாள்.

 

“மலர் அந்த  பூவை எடுத்து கொடு.” என்று பார்வதி சொல்லவும் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பறித்து கட்டி வைத்திருந்த குண்டு மல்லி சரத்தை எடுத்துக் கொடுத்தாள் மலர்.

 

“நீங்களே வச்சு விட்டுவிடுங்கள்.” என்று மதுமிதா சொல்லவும் மலர் மதுமிதாவின் தலையில் பூவை சூட்டினாள்.

 

“எங்க உங்க  தம்பியை காணோம்?” என்று மாதவன பற்றி மலரிடம் கேட்டாள் மதுமிதா.

மலர் “உன்கிட்ட சொல்லலையா? அவன் நேரா வீட்டுக்கு  வந்து விடுவாnu மாமா சொன்னார்.”

 

“பார்த்தீங்களா? என்கிட்ட சொல்லவே இல்ல.” என்று குறைகூறும் குரலில் சொன்னாள் மதுமிதா.

இதைக் கேட்ட மலருக்கு சிறிது ஆச்சரியமாக இருந்தது. எனினும் அவளிடம் “ஏதாவது வேலையா இருந்திருப்பான். சரி வா போகலாம்.” என்று சொல்லவும் அவ்வளவு நேரம் காத்திருந்த ஆறுமுகம், அண்ணாமலை, பார்வதி எழுந்து வந்தனர்.

எல்லோரும் காரில் பார்வதியின் அண்ணன் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. இவர்கள் சென்றதும் இவர்களை வரவேற்ற பிறகு

“மாப்பிள்ளை வரலையா?” என்று கேட்டார் பார்வதியின் அண்ணன் சுந்தரன்.

 

“அவன் இப்போ வந்திடுவான்.” என்று பார்வதி பதில் கூறினார்.

சிறிது நேரம் அனைவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து மாதவன் அங்கு வந்தான். அவன் வந்த பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

கோழிக்கறி, மீன் வறுவல், மீன் குழம்பு, இறால் தொக்கு, சுறா புட்டு,  முட்டை, நண்டு என்று சகலமும்  செய்திருந்தனர்.

ஒரு பெரிய வாழை இலையில் அனைத்தையும் பரிமாறினர்.

மதுமிதாவுக்கு அதை பார்த்ததும் வயிறு நிரம்பிவிட்டது.

தன்னால் முடிந்தவரை சாப்பிட்டாள்.

உண்ட களைப்பில் அனைவரும் தூங்கச் சென்று விட்டனர்.

மதுமிதா மாதவனிடம் வந்தாள்.

 

“நீங்க ஏன் என்கிட்ட  எங்க போறீங்க, எப்ப வீட்டுக்கு வருவீங்கன்னு சொல்ல மாட்டேங்கறீங்க.” என்று சிறிது கோபமாகவே கேட்டாள்.

 

“மது நான் எங்க இருப்பேன், எப்ப வீட்டுக்கு வருவேnu  எனக்கே தெரியாது. அப்புறம் எப்படி நான் உன்கிட்ட சொல்ல முடியும்?” என்றான் மாதவன்.

 

“ஆனால் மாமா கிட்ட .சொல்லி இருக்கீங்க”

 

“அது அது அப்பா எனக்கு போன் பண்ணி கேட்டாங்க. அதனால நான் சொன்னேன்.”

 

“நீங்க என் கூட ஒழுங்கா டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறீங்க.” என்று குறைபட்டுக் கொண்டாள் மதுமிதா.

“எனக்கு ஒரு 2 மாசம் டைம் கொடு. அதுக்குள்ள என்னோட வேலை எல்லாம் முடிந்துவிடும். அதுக்கப்புறம் நான் உன்கிட்ட சொல்லாமல் எங்கேயும் போக  மாட்டேன்.” என்றான்.

அப்போது “மாதவா மதுமிதா” என்று பார்வதி அழைக்க இருவரும் அங்கிருந்து சென்றனர்.

இவர்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த மலர் காதில் இது விழுந்தது.

 

மதுமிதாவின் மனதை மலர் புரிந்து கொண்டாள்.

பார்வதியின் அண்ணன் ஒரு ஊதா நிற பட்டுப்புடவை, அதேநிறத்தில் சட்டை  வைத்து மதுமிதா மாதவனுக்கு கொடுத்தனர்.

 

இருவரும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அதனை வாங்கிக் கொண்டனர்.

அன்றைய பொழுது அங்கேயே கழிந்தது.. இரவு உணவை முடித்த பிறகு அனைவரும் வீடு திரும்பினர்

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!