Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode7.2

“அப்படி எனக்கு குட் பாய் சொல்ல முடியாது.”

 

“ஏன் முடியாது?” என்று நடந்து கொண்டிருந்தவள் நின்று அவன் முகத்தை பார்த்து கேட்டாள்.

 



Advertisement

“இல்ல நாம எடுத்துகிட்ட   இந்த வேலையை ஒழுங்கா செய்யணும் இல்லையா? அதனால  சொன்னேன். நீ வேற  ஏதாவது தப்பா நினைச்சுக்காதே.” என்றான் முகத்தை படு சீரியஸாக வைத்துக்கொண்டு.

 

அவன் முகத்தை பார்த்து  முறைத்து விட்டு மீண்டும் தொடர்ந்து நடந்து காருக்கு சென்றாள்.

Advertisement

 

Advertisement

அவள் காருக்குள் ஏறி அமர்ந்து காரை  ரிவர்ஸ் எடுக்கும் பொழுது கண்ணாடியை பார்த்தாள். அந்தக் கண்ணாடியில் சுகந்தன் அவளை ஏக்கமாக பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

வீடு வந்த சாதனா சஞ்சனாவை அழைத்து சுகந்தன் அன்று வீடு வந்ததையும் இன்று ரெஸ்டாரென்ட்க்கு வந்ததையும் கூறினாள்.

Advertisement

 

“என்னடி சொல்ற? சுகந்தன் இங்க வந்தாரா?”

 

“ஆமாம்  சஞ்சு.  வீட்டுக்கு வந்த அடுத்த நாளே சொல்லணும்னு நினைச்சேன். ஆனால்  அப்புறம் சொல்லலாம்னு விட்டுட்டேன். ஆனால் அவனோட பிரிண்ட் இதே கம்யூனிட்டியில் தான்  இருக்கிறான்.”

 

“பிரெண்டு மட்டும் தானா இல்ல அவரும் இங்கதான் இருக்காரா?” என்று சஞ்சனா கேட்டாள்.

 

“அது எனக்கு தெரியல. அவனை கேட்கவும் தோனல. அவன் எங்க இருந்தா எனக்கு என்ன?” என்றுவிட்டு  அவன் மீது சிறிதும் அக்கறை இல்லாதவள் போல எழுந்து சென்று விட்டாள்.

 

அவள் அப்படி எழுந்து சென்றாலும் சஞ்சனாவுக்கு தெரியும் சாதனாவின் மனம் அவனை சுற்றும் என்று.

 

‘அவர் இங்கே வந்துட்டாரா? சூப்பர். இவளுக்காக தான் இங்க வந்திருப்பார். விக்ரம் கிட்ட சொல்லி நம்மால முடிஞ்ச ஹெல்ப் நாம அவருக்கு செய்யணும்.’ என்று நினைத்துக் கொண்டாள் சஞ்சனா ஆனந்தமாக. அவள் மனதில் நெடுநாட்களாக  அழுத்தி கொண்டிருந்த பாரம் குறைந்தது போல உணர்ந்தாள்.

 

அன்றிரவு விக்ரமிடம் எல்லாவற்றையும்  கூறினாள்.

அப்படியா சஞ்சு? ரொம்ப சர்ப்ரைஸா  இருக்கு.  நல்லது நடந்தால் சரிதான்.”

“ஆமாம் விக்ரம். இந்த கம்யூனிட்டியில் கார்த்திக் எங்க இருக்காருன்னு விசாரிச்சு கண்டுபிடிங்க.” என்றாள்.

 

“சீக்கிரமா கண்டுபிடிச்சு  சொல்றேன்.” என்று விட்டு எழுந்து சென்றான் .

“இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்.” என்றாள் சஞ்சனா.

 

“சரி நான் சொல்லல.” என்றான் விக்ரம்.

 

‘சுகந்தனுக்கும் என் மாமனார் மாமியாருக்கும் தான் ஆகாது. அது எனக்கு  தெரியும். ஆனால் என்கிட்ட நல்லா தானே பழகுவார். இவ்வளவு தூரம் வந்தத ஏன் என்கிட்ட சொல்லவே இல்ல?’ என்று நினைத்துக்கொண்டான் விக்ரம்.

 

சனிக்கிழமை என்பதால்  மதியம் 2 மணி அளவில்  லேசான குளிருக்கு இதமாக இருந்த வெயிலில் தோட்டத்தில்  ஜோதியுடன் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருந்தாள் சாதனா.

 

ஜோதியின் கண்கள் கட்டப்பட்டிருக்க விஜயா, சாதனா, சஞ்சனா மூவரும் அவளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தனர்.

 

ஜோதி யாரையும் பிடிக்க முடியாமல்

“அம்மா நீங்களாவது வாங்க.” என்று தாயை கை நீட்டி அழைத்தாள்.

 

“அதெல்லாம்  முடியாது. நீயே பிடி.” என்று அவளும் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் ஜோதி சஞ்சனாவை தொட சஞ்சனா துணியை கண்களில் கட்டிக் கொண்டு மற்றவர்களை எட்டிப்பிடிக்க ஆரம்பித்தாள்.

 

அப்போது சாதனா தொலைபேசி ஒலித்தது.

 

“சரி நான் போய் யாருனு பாக்குறேன்.” என்று சொல்லிவிட்டு போனை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தாள்.

 

ஏதோ புது எண்ணில் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

 

‘யாரு ?’என்று நினைத்தபடி

“ஹலோ”  என்றாள். மறுபக்கம் பேச்சு இல்லை.

 

“ஹலோ ஹூ இஸ் தட்?” என்று மீண்டும் கேட்க மறுமுனை பேசியது.

 

“நானேதான்” என்றான் அவன்.

 

அந்தக் குரலில் அவனை கண்டு பிடித்துவிட்டாள் சாதனா.

 

“நீயா? எதுக்கு எனக்கு கால் பண்ண?” என்று சாதனா கேட்க

 

அவன் “ஒரே வார்த்தையில் என்னோட குரலை வைத்து கண்டுபிடிச்சிட்டியா?” என்றான் ஆச்சரியமாக .

 

‘ஆமா இதுல என்ன பெரிய ஆச்சரியம் இருக்கு? அவள் தான் எப்பவும் அவனையே நினைச்சுகிட்டு இருக்காளே.’ என்று தோன்றவும் தன்னையே நினைத்து திகைத்தாள்.

 

சமாளித்துக்கொண்டு

“என்ன வேணும் உனக்கு? எதுக்காக எனக்கு கால் பண்ண?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

 

“நாம ரெண்டு பேரும் சேர்ந்து  இருக்கவேண்டிய இந்த நேரத்துல இப்படி தனியா இருந்தா எப்படி?” என்று அவன் கேட்கவும்

 

அவள் கோபமாக “என்ன உளர்ற?” என்று கேட்டாள்.

 

“இல்ல இல்ல. நாம ரெண்டு பேரும் நான் வெஜ் ஃபுட் தானே ஆர்டர் பண்ணினோம். இன்னும்  வெஜ் ஃபுட் ஆர்டர் பண்ணனும். அதை நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு பார்த்து ஆர்டர் பண்ணனும் இல்லையா? அதை தான் சொன்னேன். நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத.”

 

“ரெண்டு பேரும் சேர்ந்து  ஒரு விஷயத்துக்கு கமிட் ஆனதுக்கு அப்புறம்  இப்படி  நடுவுல விட்டுட்டு போகலாமா?” என்று கேட்டான். அவன் கேட்டதில் இருந்த உள்ளர்த்தம் அவளுக்கு புரிய மனதிற்குள்

‘விட்டுட்டு போக சொல்லி சொல்லும்போது போகாம என்ன பண்ணமுடியும்?’ என்று மனதில் நினைத்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 

“என்ன பேச்சையே காணோம்? நான் ஃபுட் ஆர்டர் பண்ற வேலையை  சொன்னேன். நீ எதுவும்……..” என்று அவன் ஆரம்பிக்கும் போதே

 

“நான் எதுவும் தப்பா நினைக்கல.” என்றாள் வேகமாக. அவன் அதனைக் கேட்டு சிரித்தான்.

 

“தப்பா நினைக்கலனா சந்தோஷம்தான்.

அப்புறம், என்ன பண்ணிட்டு இருக்க?”

 

“நான் என்ன பண்ணிட்டு இருந்தா உனக்கு என்ன?”

அதை நான் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.”

 

 

“நீ சொல்லலனா என்ன? என்னால கண்டுபிடிக்க முடியாதா? இந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க போற? தோட்டத்தில் அந்தக்குழந்தை ஜோதியோட கண்ணாம்பூச்சி விளையாடிட்டு இருந்திருப்ப.” எனவும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

‘இவன் எப்படி கரெக்டா சொல்றான்? என்று யோசித்து

 

“ஆ” என்றாள்.

அவள் திகைப்பை வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்த சுகந்தன்

“என்ன ஆ? அப்போ கரெக்டா தான் சொல்லி இருக்கேன்.” எனவும்

‘போட்டு வாங்குகிறான்.’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

அப்போது கலைவாணி  தோட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். அதனை கவனித்த சுகந்தன்

 

“இன்னும் ஒன்னு சொல்லட்டுமா? இப்போ உங்க அம்மா உங்க எல்லாரையும் சாப்பிட கூப்பிட போறாங்க.” என்று சொன்ன அந்த கணம்

 

“ஜோதி, விஜயா, சஞ்சனா, சாதனா, மாப்பிள்ளை எல்லாரும் சாப்பிட வாங்க.” என்று கூப்பிட்டார் கலைவாணி.

 

சாதனா ‘இவனுக்கு எப்படி தெரியும்? என்று நினைத்தபடி சுற்றிசுற்றி

‘எங்க இருந்தாவது என்னை பாத்துட்டு இருக்கானா?’ என்று அவனை தேடி பார்த்தாள்.

 

அவள் கண்களுக்கு அவன் தென்படவில்லை.

 

“என்ன என்னை தேடி பார்க்கிறாயா?” என்று அவளை பார்த்துக் கொண்டிருந்த சுகந்தன் கேட்டான்.

 

“இல்ல.” என்றாள் கோபமாக.

 

“சரி சரி நம்பிட்டேன்.” என்றான் சிரித்து படி.

 

அவன் சிரிப்பு அவள் கோபத்தை அதிகரிக்க

 

“எனக்கு வேற வேலை இருக்கு. சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு.” என்றாள்.

 

“இன்னிக்கி சாயந்திரம் ஆறு மணிக்கு சரவணபவன் போகலாமா?” என்று கேட்டான்.

 

“சரி வரேன்.” என்றுவிட்டு தொடர்பை துண்டித்தாள்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!