Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Paarvai Bethangal – A Short Story

பார்வைப் பேதங்கள்

 

மெட்டி ஒலி அருகில் கேட்க,   படித்துகொண்டு இருந்த காலை தினசரியில்  இருந்து கவனத்தை திருப்பாமலே ரெண்டாவது டோஸ் காபிக்கு ராகவ் கையை நீட்டினான். ஞாயிற்று  கிழமை சலுகை இது.  சூடான டம்பளருக்கு பதில் தோளில் சில்லென்று ஒரு கை இறங்க, தன் மனைவி ப்ரியாவிடம் கவனத்தை திருப்பினான். அவள் முகத்தில் கவலையின் ரேகைகள். ராகவ் புருவத்தை சுருக்கினான்.

 



Advertisement

“காப்பி பொடி தீர்ந்து போச்சா, இத்தனை கவலையா இருக்கே?”

 

“ப்ச் அதில்லப்பா… ப்ரதீப் குட்டியை பாருங்க…. காலை எழுந்ததுலேர்ந்து பல்லு தேய்க்கல, பால் குடிக்கல…  முகத்தை தூக்கி வெச்சிட்டு உம்முனு இருக்கான்….. என்னால சமாதான படுத்தவே முடியலை”, ப்ரியா கணவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறினாள்.

Advertisement

 

Advertisement

“ஏன், அவனுக்கு என்ன?”

 

“நேத்து சாயங்காலம் காலனி  பசங்களெல்லாம்  சைக்கிள் ரேஸ் வெச்சிட்டு இருந்தாங்க போல. அதுல இவன் தோத்துட்டானு நினைக்கிறேன். ராத்திரி கூட சாப்பிடாம தூங்கி போய்ட்டான்.” 

Advertisement

 

ராகவ் பேப்பரை மடித்து டீபாய் மேல் வைத்துவிட்டு, எழுந்தான். கைகளை மேலே தூக்கி நன்றாக சோம்பல் முறித்து, படுக்கை அறை நோக்கி நடக்க தொடங்கினான். போகும் போதே,  கெஞ்சும் கண்களுக்கு ஏற்ப மூக்கை சுருக்கி, கை விரல்களை மடக்கி  கட்டை விரலை மட்டும் உதடுகளுக்கு கொண்டு சென்று சூடான பானத்தை பற்றி ப்ரியாவிற்கு ஞாபகமூட்டினான். அவள் சிரித்துக்கொண்டே ‘கொண்டு வரேன், கொண்டு வரேன்’ என்று ஜாடை செய்துகொண்டே சமையல் அறையுள் புகுந்தாள்.  ராகவ், படுக்கை அறைக்குள் சென்றபோது,  8  வயது ப்ரதீப் கட்டிலின் மேல்,  கால்களை மடக்கி கைகளால் கட்டிக்கொண்டு சுவரில்  தலையை சாய்த்துக்கொண்டு சோக பிம்பமாய் அமர்ந்திருந்தான்.

 

 “குட் மார்னிங் சாம்பியன்  … ட்ரீம்ஸ் எல்லாம் நல்லா வந்துச்சா?” ராகவ் ப்ரதீப்பின் சின்ன தோள்களை உற்சாகமாக பிடித்து குலுக்கினான்.

 

“நான் ஒண்ணும் சாம்பியன் இல்ல”, பதில் முணுமுணுப்பாய் வந்தது.  

 

“சியர் அப்..  எங்களுக்கு நீ எப்பவும் சாம்பியன் தான்.” ப்ரதீப் முகத்தில் சிறிது புன்னகை எட்டி பார்த்தது.

 

 “சரியான ‘சப்ப’ டீம்ப்பா… இருந்தாலும் தோத்துட்டேன்ப்பா…”

 

 7, 8 வயசுக்குள்ள என்ன என்ன வார்த்தைகள் இந்த குழந்தைகள் கத்துக்கொள்கிறார்கள்  என்று ராகவிற்கு வியப்பாக இருந்தது. வீட்டில் இருப்பவர்கள்  எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும், தொலை காட்சி,  பள்ளி நண்பர்கள் மூலம் அர்த்தமே புரியாமல் பல தேவை இல்லாத வார்த்தைகளை  தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.

 

“ஒரு தடவை தோத்துபோனா என்ன?  அடுத்த முறை ஜெயிக்கலாம். வெற்றி தோல்வி முக்கியமில்லை, நாம என்ன வேலை செய்யறோமோ  அதை என்ஜாய்மென்டோட செய்யணும்.”  ப்ரதீப் நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தான்.

 

ராகவிற்கு மனதுள் சின்ன குதூகலம் எட்டி பார்த்தது.

 

“ப்ரதீப், லான்ஸ்  ஆம்ஸ்ட்ராங் கதை தெரியுமா?”

 

“மூன்ல இறங்கின  பர்ஸ்ட் அங்கிள்  தானே?”

 

“அது நீல் ஆம்ஸ்ட்ராங், நான் சொல்றது வேற ஒருத்தர்.”

 

கதை கேட்கும் ஆர்வத்தில், ப்ரதீப் ராகவ் அருகே வந்தான்.

 

“ஓகே..ஓகே… பல் தேய்ச்சிட்டு, பால் குடிச்சிட்டே கதை கேட்கலாம்…போங்க செல்லம்”, ட்ரேயில்  காப்பி, காம்ப்ளான் சகிதம் வந்த ப்ரியா உரையாடலின்  நடுவே  புகுந்தாள்.

 

“அம்மா சொன்னா எல்லாரும் கேட்டு தான் ஆகணும்..  சீக்கிரம் போயிட்டு வா, நான் கண்டிப்பா கதை சொல்றேன்”, மகனை தாஜா செய்து குளியலறைக்கு அனுப்பி விட்டு அவசரமாக காப்பியை ராகவ் எடுத்தான்.

 

“யாருங்க அது?”

 

“அவனும் வரட்டும், அப்புறம் தான் சொல்வேன்.” ராகவ் பிகு செய்ய,  ப்ரியா அவன் டம்ளரை பிடுங்குவது போல பாசாங்கு செய்தாள். இவர்கள் சிரித்துகொண்டு இருக்கும் போதே, ப்ரதீப் திரும்பி வந்து பெற்றோர் அருகில் சமர்த்தாக அமர்ந்தான்.  ப்ரியா பாலை ஆற்றி கொடுக்க, பிள்ளை தந்தையை ஆவலாக நோக்கினான்.

 

 “லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் ஒரு அமெரிக்கன் சைக்கிளிஸ்ட். ‘டூர் டீ பிரான்ஸ்’  சைக்கள் ரேஸ் உலகத்துலேயே ரொம்ப ரொம்ப கஷ்டமான போட்டி. அதுல ஏழு தடவை ஜெயிச்ச ஒரே ஆளு இவர் தான். சின்ன  வயசுல நீச்சல் விளையாட்டுல தான் அவருக்கு ஆசை. ஆனா திடீர்னு ஏதோ சைக்கிள் ரேசிங் போட்டில கலந்து ஜெய்ச்சதுலேர்ந்து இந்த விளையாட்டுல  அவருக்கு இண்டரஸ்ட் வந்துடுச்சாம். நிறைய ப்ராக்டிஸ் செஞ்சு செஞ்சு பல  போட்டிகளில் பிரைஸ் வாங்கி இருக்காராம். முயற்சி எடுத்தா என்ன வேணா செய்யலாம். இவர் தான் அதுக்கு பெஸ்ட் எக்சாம்பிள்.   வருஷம் பூரா எதாவது ப்ரைஸ் மேல ப்ரைஸா வாங்கிட்டு இருந்தவருக்கு என்ன ஆச்சு தெரியுமா?” ராகவ் பேச்சை நிறுத்தி கவனித்தான். ப்ரதீப் பாலை வாயிலேயே வைத்துக் கொண்டு  ஆஞ்சநேயர் போல காட்சி அளித்துக்கொண்டு  இருந்தான்.

 

“பாலை முழுங்கு”, ராகவ் சிரித்தான். ப்ரதீப் அவசர அவசரமாக டம்ளரை காலி செய்தான்.  

 

ராகவ் தொடர்ந்தான், ” அவருக்கு கிட்ட தட்ட 25 வயசு ஆகும் போது கான்சர் இருக்குனு தெரிஞ்சுதாம். வயிறு, லங்க்ஸ், மூளைனு பரவிடுச்சாம். உயிர் பிழைக்கறது ரொம்ப கஷ்டம்னு இருந்த நிலைமையிலே, ஆபரேஷன், கீமோதெரபினு ரொம்ப  பாடுபட்டு அவரை காப்பாத்தினாங்களாம். ஆனா ரெண்டே வருஷத்துல மறுபடி ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பிச்சிட்டாராம். நான் சொன்னேன் இல்லை, ஏழு முறை சாம்பியன்னு, அது அத்தனையும் இந்த கான்சர் வந்தப்புறம் தான்.” 

 

“அம்மாடியோவ், என்ன ஒரு திட மனசு இருந்திருக்கணும்?” ப்ரியா அழகான கண்களை மேலும் விரித்துக்கொண்டு வினவினாள்.

 

“சின்ன சின்ன விஷயத்துக்கே நாமெல்லாம் துவண்டு போயிடரோமே, இவர் வாழ்க்கை எத்தனை பெரிய பாடம்! சாவின் விளிம்பு வரை போயிட்டு வந்த மனுஷன் இன்னிக்கும் கிட்ட தட்ட நாற்பது வயசுல ரேசிலே கலந்திட்டு இருக்கார்.”

 

“நீங்க சொல்றது சரி,  தினசரி நாம டென்ஷன் ஆகுற பல விஷயங்கள் இதுக்கு முன்னால அற்பமா தோணுது”, ப்ரியா பெருமூச்சுவிட்டாள்.

 

“டு யூ நோ ப்ரியா, Courage is grace under pressure? தோத்து போயிட்டோம்னு தலைல கை வெச்சிட்டு உட்காராம, அடுத்த முயற்சில இறங்கிடணும். உலகத்துல சாதிக்க முடியாத விஷயம் இல்லை, மனசும் முயற்சியும் இருந்தா போறும்.”

 

“நம்பவே முடியலை …. ரொம்ப ஆச்சரியமா இருக்குப்பா…”, பிரதீப்பின் குரல் பிரமிப்புடன் ஒலித்தது.

 

மகனை உற்சாகப்படுத்தி, அவன் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி விட்ட கணவனை பெருமையுடன் ப்ரியா பார்த்தாள். அவள் பாராட்டுதலை புரிந்துகொண்டதற்கு அறிகுறியாய் கண்ணை சிமிட்டி புன்சிரிப்பு ஒன்றை ராகவ் உதிர்த்தான்.

 

“நேத்து எனக்கு ஆனது மாதிரி, ஆம்ஸ்ட்ராங் அங்கிளுக்கு ஒரு தடவை கூட சைக்கிள் பஞ்சர் ஆகலையா?”

 

ராகவ் & ப்ரியா  :  ??????????????????????????????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!