Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 9,.2

“பரவாயில்லை சுகந்தன். அதான் இப்போ மீட் பண்ணி விட்டோமே. அது போதும். நீங்க எங்க ஒர்க் பண்றீங்க?”

 

“நான் டிசிஎல் கம்பெனியில் ஒர்க் பண்றேன்.”

 



Advertisement

“ஓ அந்த கம்பெனியா? சாதனா வொர்க் பண்ற கம்பெனியில் இருந்து கொஞ்ச தூரம் தான்.”

 

“ஆமாம்.”. என்றான் சற்று இறங்கிய குரலில் சுகந்தன்

Advertisement

 

Advertisement

“இவ்வளவு பக்கத்துல இருக்கிறேன். ஆனால் அவ கூட சகஜமா பேச முடியல. அவள் என் மேல கோபத்துல இருக்கா.”

 

“கவலைப்படாதீங்க சுகந்தன். இவ்வளவு தூரம் நீங்க சாதனாவுக்காக வந்திருக்கீங்க. உங்க அன்பை சீக்கிரம் புரிஞ்சுபாங்க.”

Advertisement

 

“நானும் அப்படிதான் நம்பறேன். சான்ஸ் கிடைக்கும் போது அவளைப் பார்த்து பேசிட்டு தான் இருக்கேன். பார்ப்போம்.”

 

“அப்புறம் உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் என்னை கேளுங்க. இது என்னோட நம்பர்.” என்று அவனுடைய எண்ணை  கொடுத்தான் விக்ரம்.

 

“ரொம்ப தேங்க்ஸ் விக்ரம்.

 

அப்புறம் இவன் என்னோட பிரண்டு கார்த்திக். இவன் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கான்.” என்று தன் நண்பனை விக்ரமுக்கு  அறிமுகப்படுத்தினான் சுகந்தன்.

 

“ஹாய் கார்த்திக்.” என்று அவனுக்கு கை கொடுத்தான் விக்ரம்

 

விக்ரம் கையை குலுக்கிவிட்டு “ஹாய் விக்ரம்.” என்றான் கார்த்திக்.

 

“சரி வாங்க. வஞ்சிரம் ஃப்ரை பண்ணி வச்சிருக்கேன். சாப்பிடலாம்.” என்று சுகந்தன் அழைத்தான்.

 

“வீட்டுக்குள் வந்ததும் எனக்கு வாசனை தெரிஞ்சது. சாப்பிடலாம் வாங்க.” என்று  மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

.

 

அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து விட்டு பூஜை  சாமான்களை துலக்கி  பல வண்ண பூக்களை வைத்து அந்த பூஜை அலமாரியை அழகாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள்c கலைவாணி.

 

சஞ்சனா அப்போதுதான் எழுந்து வெளியே வந்தாள்.

 

“என்னமா காலங்காத்தால எழுந்து தலைக்கு குளித்து இருக்கீங்க போல இருக்கு.”

 

“ஆமாண்டி. பின்ன இன்னிக்கி தீபாவளி இல்லையா? நீயும் போய் தலைக்கு எண்ணை தேச்சி குளிச்சிட்டு வா. நான் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் குளிச்சிட்டு பூஜை வேலையை ஆரம்பிச்சுட்டேன்”

 

“ஆமாம்மா. ஆனால் இந்த குளிரில் காலங்காத்தால எழுந்து எண்ணை தேய்த்து குளிக்கனுமா? லேட்டா 8  மணிக்கு  எழுந்து குளித்து இருக்கலாம் என்னை மாதிரி.” என்றாள் சஞ்சனா சோம்பல் முறித்தபடி.

 

“சரி சரி சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாம போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா. சாதனா எங்க ? சாதனா…” என்று குரல் கொடுத்தார் கலைவாணி.

 

அந்தக் குரல் கேட்ட சாதனா

“என்னமா நான் இப்பதான் குளிச்சேன். ஹேர் டிரையர் போட்டு தலையை  காய வச்சிட்டு ஹேர் ஸ்ட்ரெயிட்டேன் பண்ணிட்டு வருகிறேன்.” என்று அறையிலிருந்து வெளியே வந்து மேல் இருந்தபடியே சொல்லிவிட்டு தன் அறைக்குள் மீண்டும் ஓடிவிட்டாள்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் சாதனா, சஞ்சனா இருவரும் பூஜை அறைக்கு வந்தனர்.

 

சமையல், பூஜை ஏற்பாடுகள்  எல்லாமே கலைவாணி  முடித்திருந்தார்.

 

“நீங்க ரெண்டு பேரும் வந்துட்டீங்க. மாப்பிள்ளை?” என்று கேட்டார் கலைவாணி.

 

“அஞ்சு நிமிஷத்துல வந்துடுவாரு. நான் விளக்கு ஏத்துறேன்.” என்று விட்டு சஞ்சனா விளக்கு ஏற்றினாள்.

 

தலை வாழை இலையில் சாப்பாடு பரிமாறி பூஜை அறையில் வைத்தனர். அதேநேரம் விக்ரம் குழந்தையுடன் அறையிலிருந்து குளித்துமுடித்து விட்டு வெளியே வந்தான்.

 

“மாப்பிள்ளை வந்துட்டாரு. பூஜை பண்ணலாம்.” என்று கலைவாணி  தீபாராதனை தட்டு எடுத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தார்.

அனைவரும் கற்பூர ஆரத்தி கண்களில் ஒற்றிக்கொண்டு விட்டு விபூதி குங்குமம் நெற்றியில் வைத்துக் கொண்டனர்.

சேர்ந்து அமர்ந்து   சாப்பிட்டனர்.

 

கலைவாணி “.இன்னிக்கி நீங்க ரெண்டு பேரும் லீவு  போட்டிருக்கலாம்” என்று  விக்ரம், சாதனா இருவரையும் பார்த்து சொன்னார்.

 

“இன்னிக்கு ஒரு முக்கியமான வேலை எனக்கு இருக்கு அத்தை.” என்ற விக்ரம் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து சென்று விட்டான்.

 

“ஆமாமா எனக்கும் இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் போயே ஆகணும்.” என்று விட்டு  சாதனா சென்றாள்.

 

“நம்ம ஊர்ல தீபாவளி எப்படி இருக்கும்! எனக்கு என்னமோ இன்னிக்கி தீபாவளி மாதிரியே இல்லை. கவர்மெண்ட் ஹாலிடே தான் இல்லை நீங்க பர்சனல் லீவு  எடுத்து இருக்கலாம்.” என்றார் கலைவாணி.

 

“அம்மா பக்கத்து வீட்டு குழந்தை ஜோதி ஸ்கூலுக்கு போகிறாள். இவங்க ரெண்டு பேரும் ஆபீஸ் போறதுக்கு என்ன? போயிட்டு வரட்டும் வந்ததும் சாய்ந்தரம் கோயிலுக்கு போகலாம்.” என்றாள் சஞ்சனா தாயை சமாதானப் படுத்தும் விதத்தில்.

 

“சரி அந்த குட்டி பையனை என்கிட்ட குடு. நான் வாங்கிட்டு வந்த புது டிரஸை அவனுக்கு போடறேன்.” என்று குழந்தையை வாங்கி அவனுக்கு பட்டு வேஷ்டி சட்டை அணிவித்தார் கலைவாணி.

 

மாலை 5 மணி அளவில் வீட்டில் அனைவரும் பரபரப்பாக கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.

 

“கிளம்பியாச்சா சாது?” என்று  கேட்டார் கலைவாணி.

 

“இதோ பத்தே நிமிஷம்.” என்றுவிட்டு அணிந்திருந்த சல்வாருக்கு ஏற்றபடி காதணி மாற்றிக்கொண்டு பொட்டு வைத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தாள் சாதனா.

 

“சரி போகலாம்.” என்று விக்ரம் சொல்லவும் வீட்டினர் அனைவரும் காரில் ஏறினர்.

 

சாதனா “சஞ்சு குழந்தையை என்கிட்ட கொடு. நான் அவனை  பேபி சீட்டில் வைத்து பெல்ட் போட்டு விடுறேன்.” என்றாள்.

 

“சரி சாது.” என்று அவளிடம் குழந்தையை

கொடுத்துவிட்டு சஞ்சனா விக்ரமுடன் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

பின் இருக்கையில் கலைவாணி, குழந்தை, சாதனா  அமர்ந்துகொண்டனர்.

 

 

பெரிய கோபுரத்துடன் கோயில் பிரமாண்டமாக இருந்தது. தீபாவளி திருநாள் என்பதால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயிலில் நல்ல கூட்டம் இருந்தது. பார்ப்பவர்கள் அனைவரும் புடவை, சல்வார், வேஷ்டி சட்டை, சர்வாணி போன்ற உடைகள் அணிந்து அதற்குமேல் குளிருக்காக அந்த பெரிய ஜாக்கெட்டை போட்டிருந்தனர்.

 

சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு  சாதனா ஓரிடத்தில் அமர்ந்தாள். கண்ணை மூடிக்கொண்டு சிறிது நேரம் தியானம் செய்து கொண்டிருந்தாள்.

 

கண்ணை திறந்தவள் முன்பு தெரிந்தான் அவன்.

 

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!