Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Epi 9.1

நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மிதமான குளிரில் இருந்து  கொஞ்சம் கொஞ்சமாக கடும் குளிருக்கு மாறிக்கொண்டிருந்தது.

 

கலைவாணி “ரொம்ப குளுருது பாரு. எல்லாரும் உள்ள வாங்க.” என்று சொல்ல அனைவரும்  எழுந்து உள்ளே வந்தனர்.



Advertisement

 

“வெதர் ஆப் எடுத்து பாரு சாது.” என்று சஞ்சனா சொல்ல

 

Advertisement

சாதனா தன்  ஐ போனை பார்த்துவிட்டு.

Advertisement

 

“அடுத்த பத்து நாளைக்கு டெம்பரேச்சர் ரொம்ப  டவுன் ஆகுது. அதனால செடி எல்லாத்தையும் எடுத்து உள்ள வச்சிக்கிறது  பெட்டர்.” என்றாள்.

 

Advertisement

இதைக்கேட்ட சஞ்சனா

 

“விக்ரம்” என்று கெஞ்சும் குரலில் அழைத்தாள்.

 

அவள் அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தை புரிந்துகொண்டு

 

“ சரி சஞ்சு. நான் எடுத்து வச்சிடறேன்.” என்று விட்டு மெதுவாக அந்த பிரம்மாண்டமான இரண்டு ஜாடிகளை உள்ளே நகர்த்தினான்.

 

துளசி செடியை வழக்கம்போல சாதனா எடுத்துக்கொண்டு உள்ளே வந்து வைத்தாள்.

 

‘இப்படி போன்ல பேசிட்டு இருக்கும்போது நேர்ல பார்த்த மாதிரி பேசறான். ஒருவேளை  அவனோட பிரண்டு கார்த்திக் நம்ம வீட்டை சுத்தி இருக்கிற வீட்லதான் இருக்கிறானோ? எந்த வீடா இருக்கும்?’ என்று யோசித்தாள். அப்போது விக்ரம் கண்ணில் பட

 

‘சரி. இவர் கிட்ட கேட்டுப் பார்ப்போம்.’ என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

 

“விக்ரம் எனக்கு ஒரு டவுட். நம்ம பக்கத்து வீட்டுல ராஜேஷ் இருக்காங்க. இந்தப்பக்கம் ஒரு இந்தி ஃபேமிலி, அவங்கள எனக்கு நல்லாவே தெரியும். நமக்கு பின்னாடி ஒரு மலையாளி ஃபேமிலி இருந்தாங்க. அவங்க வீட்டை வித்திட்டாங்க இல்ல” என்று கேட்டாள்.

 

“ஆமாம் சாதனா. எதுக்கு கேக்குற?”

 

“இல்ல. அவங்க வீட்டை யாருக்கு வித்தாங்கnu தெரியுமா?”

 

“தெரியுமே. ஒரு தெலுங்கு ஃபேமிலிக்கு வித்திருக்காங்க.”

 

“ஓ அப்படியா. நம்மப் பின் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுல ஒரு கன்னடம் பேமிலி இருக்காங்க.  பின்னாடி வீட்டுக்கு இந்தபக்க வீட்டுல யாரு இருக்காங்க?”

 

“அங்கேயும் ஒரு தெலுங்கு ஃபேமிலி இருக்காங்க.”

 

“அப்படியா? are you sure?  (நிச்சயமா தான் சொல்றீங்களா)”

 

“எனக்கு நல்லாவே தெரியும். எதுக்காக இதையெல்லாம் கேட்கிற?”

 

“இல்ல சும்மாதான்  கேட்டேன்.” என்றாள் சாதனா.

 

‘அப்போ இவன் நம்ம வீட்டை சுத்தி இருக்கிற வீட்ல இல்ல’ என்று நினைத்துக்கொண்டாள்.

 

“ சரவணபவன் இந்தியன் வெஜிடேரியன் ரெஸ்டாரன்ட்என்ற பெயர் பலகையை பார்த்துவிட்டு காரை பார்க் செய்து விட்டு உள்ளே நுழைந்தான் சுகந்தன். வாசலை எட்டி எட்டி பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாதனா .

இவன் உள்ளே நுழைவதை பார்த்ததும் கையில் இருந்த மெனு  கார்டில் எதையோ  தேடுவது போல தேட ஆரம்பித்தாள்.

அவளை கவனித்து விட்டு அவள் அமர்ந்திருந்த மேஜைக்கு சென்றான்  சுகந்தன். அங்கு இருந்த  நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

 

“அப்புறம் ரொம்ப சீரியஸா ஏதோ தேடற மாதிரி இருக்கு.  நமக்கு தேவையான டிஷ் கிடைச்சுதா?” என்று கேட்டான்.

 

“கிடைச்சிடுச்சு. இதோ ஆர்டர் பண்றேன்.” என்று விட்டு சொன்னதை செய்தாள்.

 

“இன்னியோட நம்ம வேலை முடிஞ்சதும் எனக்கு கால் பண்ற வேலை எல்லாத்தையும் நிறுத்தணும்.” என்றாள் தீவிரமாக அவன் முகத்தை பார்த்து.

 

“பார்க்கலாம்.” என்றான் கையை மார்புக்கு குறுக்கே கட்டி இருக்கையில் நன்கு சாய்ந்தபடி.

 

‘சரினு சொல்றானா பாரு. சரி இவன் கிட்ட என்ன பேச்சு ?’என்று நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

சாப்பாடு வந்ததும் சாப்பிட்டு முடித்து விட்டு மேலாளரிடம் சென்றனர். அவரும் தமிழ் பேச  இவர்களும் தமிழில் பேசி ஆர்டர் கொடுத்து விட்டு வெளியில் வந்தனர்.

 

சாதனா வேகவேகமாக நடந்து அவளது காரை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

அவளிடம்

“அதுக்குள்ள வீட்டுக்கு போகனுமா? ஐஸ்கிரீம் ஏதாவது டேஸ்ட் பண்ணி பார்க்க ஐஸ்கிரீம் ஷாப் போகலாமா?” என்று கேட்டபடி வந்து  கொண்டிருந்தான்.

அப்போது கையில் நிறைய  காகித பைகளுடன் முதுகு காட்டி சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணின் கையில் இருந்து ஒரு காகிதப்பை அவளுக்கு தெரியாமல் கீழே விழுந்தது. அதை கவனிக்காமல் அவள் சென்று கொண்டிருந்தாள். இதை கவனித்து விட்ட சுகந்தன் அந்த காகித பையை எடுத்து அந்த அமெரிக்க  பெண்ணை

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று கூப்பிட்டான்.

 

நின்று அவள் திரும்பினாள். இவன் திகைத்தான். அது நேடலி.

 

“ஹாய்” என்று வாயெல்லாம் பல்லாக அவள் அவனை பார்த்து

“ what a surprise!( என்ன ஆச்சரியம்)”  என்று வியந்தாள்.

 

அவனும் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை

“ஹாய் .you dropped a bag .( நீ ஒரு பையை தவற விட்டு விட்டாய்

)”  என்று அவன் கையில் இருந்த பையை அவளிடம் நீட்டினான்.

 

அதனை வாங்கி அதில் இருந்த பொருட்களை பார்த்த நேடலி

“oh my god! these are so important to me! Thank you so much! ( அடக்கடவுளே இது எல்லாம் எனக்கு மிகவும் முக்கியமானவை. மிக்க நன்றி.)

 

you saved my life again  (நீ என்னை மீண்டும் காப்பாற்றி விட்டாய்.)” என்று சொன்னவள் சொன்னதோடு மட்டும் நிற்காமல் அவனை அனைத்து நன்றி கூறினாள்.

“You are most wecome!” என்றான் அவன்.

அப்போது அவளுக்கு முன்பே சென்று கொண்டிருந்தேன் அவளது தோழிகள்

“நேடலி” என்று கூப்பிட இவள் அவனை பார்த்தாள்.

 

“sorry! i have to go. Meet you in the office .” (மன்னித்துக்கொள் நான் கிளம்ப வேண்டும். உன்னை அலுவலகத்தில் சந்திக்கிறேன் .” என்றாள்.

 

“sure. No problem. carryon. (பார்க்கலாம்.  பரவாயில்லை.)  எனவும் அவள் அவளது தோழிகளுடன் சென்றாள்.

 

இவன் திரும்பினான். அங்கு சாதனா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

‘இவள் இவ்வளவு நேரம்  இங்கயா இருந்தாள்? எதுக்காக என்னை இப்படி முறைக்கிறா?’ என்று  யோசித்த அவனுக்கு சற்று முன்பு  அவள் அவனை கட்டிப் பிடித்தது ஞாபகம் வந்தது.

 

அவளிடம் வந்து .

 

“அவள் என்னோட ஆபீஸ்ல வேலை செய்கிறா. நல்லா தெரிஞ்ச பொண்ணு. அதனாலதான் உரிமையில்…..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது அவள்

“ரொம்ப தெரிஞ்ச பொண்ணா? அவ்வளவு பழக்கமா?” என்று அவனை முறைத்தபடியே கேட்டாள்.

 

“நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை . உனக்கே தெரியும். இங்க இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.” என்றான்.

 

“நான் உன்னை பற்றி நினைக்க என்ன  இருக்கு? எனக்கு நேரம் ஆச்சு.” என்றபடி மேலும் அடிகள் எடுத்து வைத்து காருக்குள்  ஏறிக்கொண்டாள்.

 

காரின் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தாள்.

 

“அவன் அடச்சே!” என்று சொன்னபடி  அவன் காரை குத்திக் கொண்டிருந்தான்.

 

“விர்” என்று அங்கிருந்து கிளம்பி சென்று விட்டாள்.

 

 

 

சுகந்தன் சமையலறையில் வஞ்சிரம் வறுத்துக் கொண்டிருந்தான். காலையில் எழுந்து வேலைகளை முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட்டு முடித்து எழுந்த கார்த்திக் மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்க  சமையலறைக்கு வந்தான்.

 

“என்னடா சமையல் பயங்கரமா பண்ணி இருக்க போல இருக்கு.” என்று சொன்னபடி வறுத்து வைத்த வஞ்சரம் துண்டுகளை எடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.

 

“செம டேஸ்டா இருக்கு.  உன் கைக்கு தங்க வளையல் தான் போடணும்.”

 

“என்னடா? நக்கலா?” என்று  அவனைப் பார்த்து முறைத்தான் சுகந்தன்.

 

“சரி  வளையல் வேண்டாம். பிரேஸ்லெட் இல்லை மோதிரம் வாங்கிட்டா போச்சு..

நிஜமாவே ஃபிஷ் பிரை வெரி டேஸ்டி.” என்றான் அடுத்த துண்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபடி

 

சுகந்தன் “சரிடா எல்லாத்தையும்  நீயே காலி பண்ணிடாத.  எனக்கும் கொஞ்சம்  வை” என்றான் கார்த்திக் சாப்பிடும் வேகத்தை பார்த்து பயந்து.

 

“நானே இந்த ஹீட்டர் மாதிரி இருக்கிற இந்த அடுப்புல கொஞ்சம் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கிறேன்.”

 

“எதுக்குடா  இதில கஷ்டப்பட்டு பண்ண? தோட்டத்திலே கிரில் இருக்கு. அங்க பண்ணி இருக்கலாம்.”

 

“அப்படியா நான் பார்க்கவே இல்லைடா கார்த்தி. நெக்ஸ்ட் டைம் பண்ணுவோம்.” என்றான் சுகந்தன்.

 

அப்போது வீட்டு  அழைப்பு மணி ஒலித்தது.

 

“இந்த நேரத்தில் யாராக இருக்கும்?” என்று கார்த்திக் கேட்டான்.

 

“சரி நீ சாப்பிடு. நான் போய் பார்க்கிறேன்.” என்றுவிட்டு கதவை திறந்தான் சுகந்தன்.

 

நீண்ட மொத்தமான கோட், தொப்பி, ஷூ அணிந்து குளிரில் நின்றுகொண்டிருந்தான் ஒருவன்.

 

முகத்தை முக்கால்வாசி மூடி இருந்த தொப்பியை விலக்கி முகத்தை விக்ரம் காண்பிக்க சுகந்தன் அவனை கண்டுகொண்டான்.

 

“வாங்க விக்ரம் வாங்க.”. என்று உள்ளே அழைத்தான்

 

உள்ளே வந்த பிறகு கையில் அணிந்திருந்த உரையை கழட்டி அவன் கோட்டில் இருந்த பாக்கெட்டில் போட்டுக் கொண்டபடி  உள்ளே வந்தான் விக்ரம் .

 

“திடீர்னு இப்படி டெம்பரேச்சர் டவுன் ஆயிடுச்சு இல்ல? இன்னிக்கி ரொம்ப குளிருது.” என்றான் சுகந்தன்.

 

“ஆமாம் சுகந்தன். டெக்ஸாஸில் இது காமன் தான்.” என்றான்.

 

“சரி சொல்லுங்க. எப்படி இருக்கீங்க? நானே  உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன். ஆனால் உங்க நம்பர் என்கிட்ட இல்ல.” என்று தயங்கி தயங்கி ஏதோ ஒரு காரணம் சொன்னான் சுகந்தன்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!