Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Puthithaai Malarntha Kaathal

Puthithaai Malarntha Kaathal 8 1

அத்தியாயம் 8

 

அப்போது தான் கவனித்தான், அங்கே பல பாத்திரங்கள் வாரி இறைக்க பட்டிருந்தது. 

 



Advertisement

ஐயோ என்ன ஆச்சு? வீட்டுக்கு திருடன் வந்துட்டானோ?”, என்று இன்னும் வேகமாக எட்டு வைத்தான். 

 

சமையல் அறையில் இருந்து பெரிய சத்தமாக வந்தது. அங்கே போய் பார்த்து திகைத்தான்.  எல்லா பொருளும் கீழே கிடந்தது. அதை விட கொடுமை சகுந்தலாவும், பஞ்சுவும் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள். 

Advertisement

 

Advertisement

ஒரு நிமிஷம் ஆதிக்கு தன் கண்களையே நம்ப முடிய வில்லை. ரெண்டு பேரும் சண்டைன்னா சண்டை, அப்படி ஒரு சண்டை. 

 

எப்பவும் என்னை தான ரெண்டு பேரும் சேர்ந்து காச்சுவாங்க? இன்னைக்கு என்ன இவங்களுக்குள்ளே கச முசா?”, என்று நினைத்து கொண்டு அவர்கள் அருகில் சென்றான். 

Advertisement

 

இவனை பார்த்ததும் “பாருங்க மாமா, அத்தை என்னை ரொம்ப கொடுமை படுத்துறாங்க”, என்று புகார் வாசித்தாள் பஞ்சு.

 

என்ன டி, உன் புருஷன் வந்த உடனே போட்டு கொடுக்குறியா? இப்படி தான் என் பிள்ளையை மயக்கி வச்சிருக்க?”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

நான் எதுக்கு மயக்கி வைக்கணும்? பாத்தீங்களா மாமா, நீங்க இருக்கும் போதே என்ன பேச்சு பேசுறாங்க? இல்லாத நேரம், அப்ப என்ன பேச்சு பேசுவாங்க? நாம இங்க இருந்து போகலாம் மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.

 

கூட்டிட்டு போயிருவியோ? என் பையனை என்கிட்டே இருந்து பிரிச்சிருவியோ? உன்னை கொன்னுருவேன் டி. நான் சொல்றதை தான், என் பிள்ளை கேப்பான்”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

எப்படி ஒத்துமையா இருந்தாங்க? இப்படி சண்டை போடுறாங்க”, என்று தலையில் அடித்து கொண்டு, “அம்மா அமைதியா இரு மா. நான் அவ கிட்ட என்னனு கேக்குறேன்”, என்றான் ஆதி.

 

பாத்தியா, உன் பொண்டாட்டி பேச்சை கேட்டு என்னை வாயை மூட சொல்ற”, என்று சண்டைக்கு வந்தாள் சகுந்தலா.

 

பாத்தீங்களா மாமா அத்தையை. எப்படி உங்க கிட்டயே சண்டைக்கு வாரங்கன்னு? இவங்களை எங்கயாவது முதியோர் இல்லத்துல சேத்துறலாம் மாமா”, என்றாள் பஞ்சு.

 

ஏய் சும்மா இரு டி. நீ வேற”,  என்றான் ஆதி.

 

என்னையவே திட்டாதீங்க மாமா. உங்க அம்மா தான் சரியே இல்லை”, என்றாள் பஞ்சு.

 

ஐயோ, பாத்தியா டா மகனே. ஒத்தை பிள்ளையை பெத்து பெரிய படிப்பு எல்லாம் படிக்க வச்சிருக்கேன். என்னை போய். .. என்னை போய் முதியோர் இல்லத்தில் சேர்க்க பாக்குறா? ஐயோ”

 

அம்மா சும்மா இரு மா. எதுக்கு மா ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க?’, என்று தலையை பிடித்து கொண்டு கேட்டான் ஆதி.

 

அதை அங்க கேளு”, என்று பஞ்சு பக்கம் கை காட்டினாள் சகுந்தலா.

 

அதை அத்தைகிட்டேயே கேளுங்க மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.

 

யாராவது ஒருத்தர் சொல்லி தொலைங்க”, என்று சொன்னான் ஆதி. அவனுக்கு பயங்கர குழப்பமாக இருந்தது. “நகமும் சதையுமாக இருந்தவங்க எப்படி இப்படி அடிச்சிக்கிறாங்க”, என்று.

 

நானே சொல்றேன் மாமா”, என்று சொன்னாள் பஞ்சு.

 

இல்லை இல்லை. நீ தேவை இல்லாததை போட்டு கொடுப்ப. நான் சொல்றேன்”, என்று சொன்னாள் சகுந்தலா.

 

நான் எதுக்கு தேவை இல்லாததை சொல்ல போறேன்? நீங்க பேசுறது சரியே இல்லை அத்தை”

 

ஏய்! நான் சரியா தான் டி பேசுறேன். நீ தான்.. உனக்கு தான் பேச தெரியலை…”

 

நான் ஒழுங்கா தான் அத்தை பேசுறேன்”

 

ஐயோ, ரெண்டு பேர்ல யாராவது சொல்லி தொலைங்க. வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா, இந்த சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க? ஒழுங்கா சொல்லி தொலைங்க”, என்று கத்தினான் ஆதி.

 

நீயே சொல்லு”, என்று சொன்னாள் சகுந்தலா. “நீங்களே சொல்லுங்க அத்தை. அப்பறம் என்னை எதாவது சொல்லுவீங்க”, என்று சொன்னாள் பஞ்சு.

 

ரெண்டு பேரும் சொல்ல வேண்டாம். எக்கேடோ கெட்டு ஒழிங்க. எனக்கு தலை வலிக்கு”, என்று சொல்லி விட்டு அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தான் ஆதி.

 

சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்த ஆதி திகைத்தான். அவன் கண் முன்னே மாமியாரும், மருமகளும் கன்னத்தில்  கை  வைத்து  அவனையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

 

என்ன இப்படி உக்காந்துருக்காங்க?”, என்று அவர்களை பார்த்தான்.

 

கண்ணு முழிச்சிட்டான்.   இன்னைக்கு  சீன் முடிஞ்சது. நான் ரூமுக்கு போறேன்”, என்று சொல்லி எழுந்தாள் சகுந்தலா.

 

அவள் கையை பிடித்து இழுத்த ஆதி, “எதுக்கு மா சண்டை போட்ட?”, என்று கேட்டான்.

 

அதை உன் பொண்டாட்டியை கேளு”, என்று சொல்லி கழுத்தை நொடித்து விட்டு உள்ளே சென்று விட்டாள்.

 

ஏய் வர்ணா நீயாவது சொல்லு டி. எதுக்கு டி சண்டை போட்டீங்க?”

 

அதுவா மா மாமா, காலைல எல்லா வேலையும் முடிஞ்சது”

 

எதுக்கு சண்டை போட்டீங்கன்னு கேட்டா, வேலை முடிஞ்சதுனு சொல்ற?”

 

இருங்க மாமா. சொல்றேன். எனக்கும் அத்தைக்கும் நேரம் போகலையா?”

 

அதுக்கு…”

 

அதான் சும்மா மாமியாரும், மருமகளும் டிவில சண்டை போடுற மாதிரியே நடிச்சு பாத்தோம் மாமா. எப்படி நடிச்சோம் நல்லா இருந்ததா?  யார் நல்லா நடிச்சோம்? அத்தையா? நானா?”, என்று பல்லை காட்டி கொண்டு கேட்டாள் பஞ்சு.

 

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, மறுபடியும் தலையில் கை வைத்து கண்களை மூடி கொண்டான் ஆதி.

 

என்ன மாமா பதிலே சொல்லாம கண்ணை மூடி கிட்டிங்க? சொல்லுங்க மாமா”, என்று அவனை எழுப்பினாள் பஞ்சு.

 

அவளை பார்த்து “ஆ”, என்று கத்திய ஆதி “இன்னோரு நிமிஷம் கண் முன்னாடி நின்ன…,”, என்று கத்தினான்.

 

ஐயோ அத்தை, மாமா கடிக்க வராரு”, என்று கத்தினாள் பஞ்சு.

 

கடிக்க வந்தா, நேத்து செஞ்ச குழிப்பணியாரம் கல்லு மாதிரி வந்துட்டு, என்ன செய்ய அத்தைனு கேட்டல? அதை, அவன் வாயில் போட்டு அடை பஞ்சு”, என்று குரல் கொடுத்தாள் சகுந்தலா.

 

சரி அத்தை. இருங்க மாமா, அதை எடுத்துட்டு வரேன். அப்புறம் கீழே கொட்டி கிடக்குற பாத்திரத்தை எல்லாம் எடுத்து வச்சிருங்க மாமா”, என்று சொல்லி விட்டு சென்றாள் பஞ்சு.

 

நேத்து தட்டை அப்படிங்குற பேர்ல ஒரு அட்டையை கொடுத்தாங்க.  இன்னைக்கு குழிபணியாரமா? இன்னைக்கு என் பல்லில் எத்தனை குழி விழ போகுதோ?”, என்று பயந்து போனான் ஆதி.

 

ஒரே ஒரு அம்மாவையும், ஒரே ஒரு பொண்டாட்டியையும் வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்தை. ஐயோ கொடுமையா இருக்கே. நாளைக்கு எனக்கு வர போற பிள்ளையை இதுக ரெண்டு பேர் கூடவும் சேரவே விட கூடாது”, என்று இப்பவே முடிவு எடுத்தான் ஆதி.

 

வராத குழந்தையை பற்றி இப்பவே கனவு கண்டு கொண்டு அமர்ந்திருந்தான் ஆதி.

அவன் எதிரே ஒரு தட்டை கொண்டு வைத்தாள் பஞ்சு.

என்ன வர்ணா இது?”

குழிப்பணியாரம் மாமா. டிவி ல பாத்து செஞ்சோம்”

வேண்டாமே, என்னை விட்டுறேன். என்னை பாத்தா பாவமா இல்லையா?”

நல்லா தான் இருக்கும் மாமா. சாப்பிடுங்க”

எனக்கு வேண்டாம். பாக்கவே பயமா இருக்கு”

அவன் அருகே அமர்ந்த பஞ்சு, “இதை இப்ப நீங்க சாப்பிட்டே ஆகணும்”, என்றாள்.

இல்லைன்னா என்ன டி செய்வ?  சரி சரி முறைக்காதே தின்னு தொலைக்கிறேன்”, என்று சொல்லி கொண்டே ஒரு துண்டு  எடுத்து வாயில் வைத்து கடித்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!