Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 19.2

“விடுங்க விடுங்க” என்றுவிட்டு அவனிடமிருந்து விடுபட்டு ஓடினாள்  சஞ்சனா.

அவன் அவளை துரத்தினான். இருவரும் குழந்தைபோல அந்தப் பெரிய வீட்டில் சுற்றிசுற்றி ஓடி கலைத்து சோபாவில் வந்து அமர்ந்தனர்.

அவர்களை பார்த்து ரசித்தான் கந்தன். அவனது பார்வை சாதனாவிடும் சென்றது. ‘நானும் சாதனாவும் எப்போதுதான் இப்படி சகஜமா இருக்கப் போகிறோம்?’ என்று நினைத்து ஏங்கினான். அதே ஏக்கம்

அவளது கண்களிலும் தெரிந்தது.



Advertisement

.

 

விஷால் ஜோதி இருவருக்காகவும் இணையதளம் மூலம் பரிசுப் பொருட்கள் ஆர்டர் செய்தான் சுகந்தன். அவை வந்ததும் கிப்ட்  ராப் செய்து இருவருக்கும் கிறிஸ்மஸ் முன்தினம் கொடுத்தான்.

Advertisement

விஜயா, ராஜேஷ் அவர்கள் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை விஷாலுக்கு கொடுத்தனர். விக்ரம், சஞ்சனா, சாதனா மூவரும் இரு குழந்தைகளுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தனர்.

Advertisement

இப்படி இரு குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் குவிந்தன. அதனை அங்கு இருந்து கிறிஸ்துமஸ்  மரத்தை சுற்றி வைத்து ஒவ்வொன்றாக பிரித்து பார்த்து  மகிழ்ந்தாள் ஜோதி.

நண்பர்களுடன் ஒரு கிறிஸ்மஸ் பார்ட்டி ஏற்பாடு செய்து, பார்ட்டியில் வேடிக்கை விளையாட்டுகள் வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

காற்றில் பறக்கும் பஞ்சு போல, வெள்ளை நிற குட்டி குட்டி பூக்கள் போல பனி மழை பொழிந்து சாலை முழுதும் ஒரு மென்மையான சால்வையை போல் போர்த்திக்கொண்டிருந்தது.

Advertisement

விக்ரம் வீட்டுத்தோட்டத்தில் ஜோதி  மொத்தமான ஜாக்கெட் போட்டுக்கொண்டு அந்த பணியை பந்துபோல சுருட்டி  விஜயா மீது போட்டுக் கொண்டிருந்தாள்.

சஞ்சனா, சாதனா இருவரும் அவர்களுடன் சேர்ந்து விளையாடினர். பிறகு பெண்கள் அனைவரும் சேர்ந்து ஸ்னோமேன் செய்து அதனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இப்படி அந்த  கிறிஸ்மஸ் விடுமுறை நாட்கள் ஆனந்தமாக கழிந்தது.

 

அன்று மதியம் 5 மணியளவில் சுகந்தன்உறங்கிக் கொண்டிருக்கும் போது அவனது ஐ போன் ஒலித்தது.  சாதனா அதை எடுத்துப்பார்த்தால்.

நேடலி கூப்பிடுகிறாள் என்று தெரிந்துகொண்டு அதனை சைலன்ட் மோடில் போட்டாள்.

‘சரி தூங்கி எழுந்து பேசட்டும். பேச ஆரம்பிச்சா ஒரு மணிநேரம் பேசுவான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா தூங்கிட்டு இருக்கான். எப்படியும் வீன் கதை தான் பேசிட்டு இருப்பான். அதுக்கு ஒழுங்கா ரெஸ்ட் எடுக்கட்டும்.’ என்று நினைத்து அப்படி செய்தாள்.

அன்றிரவு விக்ரம், சாதனா, சஞ்சனா, சுகந்தன்நால்வரும் டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது விக்ரமின் ஐ போன் ஒலித்தது.

கார்த்திக் பேசினான்.

“ஓ அப்படியா? நான் சுகந்தன்கிட்ட சொல்றேன்.” என்று தொடர்பை துண்டித்து விட்டு

“சுகந்தன்உங்களுக்கு நேடலி ரொம்ப நேரமா பேச ட்ரை பண்ணிட்டு இருந்தாங்களாம். ஆனால் நீங்க போனை அட்டென்ட் பண்ணவே இல்லையாம். அதான் உங்க ஃப்ரெண்ட் கார்த்திக்கு போன் பண்ணி இருக்காங்க. அவர்  உங்களுக்கு ட்ரை பண்ணி பார்த்துட்டு நீங்க எடுக்கலன்னு எனக்கு கால் பண்ணி இருக்காரு.”

“அப்படியா ஆனால் போன் அடிக்கவே இல்லையே.” என்று  எழுந்து மேலே ஏறி சென்றான் சுகந்தன்.

அப்போதுதான் சாதனாவுக்கு அவள் சைலன்ட் மோடில் போட்டது ஞாபகம் வந்தது.

“சரி சாப்பிட்டு முடிச்சிட்டு பொறுமையா சொல்லலாம்.” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் சுகந்தன்அவனுடைய போனை எடுத்து பார்த்தான். அது சைலன்ட் மோடில் இருந்தது தெரிந்தது.

“யார் இதை இப்படி சைலன்ட் மோடில் போட்டு இருப்பா? விக்ரம் சஞ்சனா 2 பேரும் இந்த பக்கம் வரவே இல்ல. காலையில இருந்து ஜோதி வீட்டுக்கு வரல. வேற யாரும் மேல வந்த மாதிரி தெரியல. அப்போ சாதனாதான் போட்டு இருக்கணும். எதுக்காக இப்படி பண்ணா?” என்று நினைத்தவன்

 

“சாதனா” என்று கூப்பிட்டான்.

சாதனா சாப்பிட்டு  முடித்திருந்தாள். எழுந்து மேலேறி சென்றாள்.

“இந்த போனை நீதான் சைலன்ட் மோடில் போட்டியா?” என்று கேட்டான்.

 

“ஆமாம் நீ தூங்கிட்டு……” என்று அவள் முடிக்கும் முன்பே இடை புகுந்தான் சுகந்தன்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நானே  ஆபீஸ் போய் ரெண்டு வாரம் ஆகுது. ஏதோ நேடலி எனக்கு ஹெல்ப் பண்றதால பிரச்சனை இல்லாமல் சமாளிக்க முடிகிறது. இந்த நேரத்துல இப்படி என்னைக் கேட்காமல் என் போனை சைலண்ட் மோடில் போட்டு இருக்க. அவள் இத்தனை தடவை எனக்கு கால் பண்ணி இருக்கா பாரு. அஞ்சு மிஸ்டுகால். கார்த்திக் வேற கால் பண்ணி இருக்கான். மிஸ்டு கால் இருக்கு. ஏதோ முக்கியமான விஷயம்ன்னு தானே அவள் எனக்கு கால் பண்ணி இருக்கா. அதைக்கூட நான் எடுக்காமல் விட்டுட்டேன். எல்லாம் உன்னால தான்.” என்று பொறிந்து தள்ளினான் அவன்.

 

“ஒரு முக்கியமான வேலையும் இருக்காது.  கிறிஸ்மஸ்  ஹாலிடேசில என்ன முக்கியமான வேலை இருக்கு போகுது? அதுவும் நீ தூங்கிட்டு இருந்த. அவ கிட்ட பேச ஆரம்பிச்சா ஒரு மணிநேரமாவது சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருப்ப. சரி எப்படியும் வெட்டிக் கதை தானே பேச போகிற. அப்புறம்  பேசட்டும்ன்னு அப்படி  பண்ணினேன்.” என்றாள் அவள் அலட்சியமாக.

 

“என்ன வெட்டி கதையா? சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருப்பேனா? உனக்கு ரொம்ப தெரியுமா? கிறிஸ்மஸ் ஹாலிடேசில வேலை இருக்குதா இல்லையான்னு நீ முடிவு பண்ண வேணாம். என்னோட வேலையை பத்தி எனக்கு தான் தெரியும். ஆபீஸ் வேலை மட்டுமில்லை பர்சனல் வேலையாக இருந்தாலும் நான் பண்ணி இருப்பேன். ஏதாவது எமர்ஜென்சி ஆக கூட இருந்திருக்கலாம். நீ எதுக்கு என்னோட போனை சைலன்ட் மோடில் போட்ட?” என்று கேட்டபடி அவளுக்கு டயல் செய்து கொண்டிருந்தான்.

ஆனால் அவள் எடுக்கவில்லை.

 

“டயல் பண்ணி பார்த்தாலும் எடுக்க மாட்டேங்குற. என்ன பிரச்சனையோ என்னமோ! இத்தனை தடவை கால் பண்ணி இருக்கா. நான் எடுக்கலைன்னு என்ன தப்பா நினைச்சு  இருப்பா.  உனக்கு அவள் என்னிடம் பழகுவதை பார்த்து பொறாமை. அந்த பொறாமையில் தானே இப்படி பண்ண?” என்று அவளிடம் கத்தினான்.

“என்ன? பொறாமையா? எனக்கா? அவளைப் பார்த்தா? வாய்க்கு வந்ததை எல்லாத்தையும் பேசி விடுவியா? நான் எதுக்கு அவளை பார்த்து பொறாமை  படணும்? எனக்கு என்ன பைத்தியமா?” என்று அவனிடம் பதிலுக்கு கத்தினாள்.

“ஆமாம் உனக்கு பொறாமை தான். அன்னிக்கி அவளோட ஷூ கார்பெட்டில் மாட்டிக்கிச்சே. அன்னிக்கு நான் பார்த்தேன். உன்னோட பார்வையிலே பொறாமை எனக்கு நல்லா தெரிஞ்சது. அவள் கிட்ட பேசினாலே உனக்கு பிடிக்கிறது கிடையாது. உனக்கு பயம். எங்க நான் அவள் பின்னாடி போய் விடுவேனோன்னு பயம். அதனாலதான் இப்படி பண்ண?” என்று கேட்டான்.

 

“என்ன? எனக்கு பயமா? நீ யார் பின்னாடி போனா எனக்கு என்ன? நான் எதுக்கு பயப்படனும்? எனக்கு யார் மேலேயும் பயமும் இல்லை பொறாமையும் இல்லை நீ ஏதாவது லூசு மாதிரி உளறினால் அதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.”  என்று ஆவேசமாக கத்திய சாதனா தன் அறைக்கு சென்று கதவை சாத்திக்கொண்டாள்.

 

அடித்து சாத்திய கதவை முறைத்துவிட்டு சுகந்தன் படியிறங்கி கீழே வந்து “விக்ரம் ப்ளீஸ். நான் இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு குளிரில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.

விக்ரம் “சஞ்சு நான் போய் அவரை டிராப் பண்ணிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு

“சுகந்தன் கார்ல  ஏறுங்க. நான் உங்களை டிராப் பண்றேன். பயங்கரமா குளிருது.. இப்பதான் உங்களுக்கு உடம்பு சரியா போய் இருக்கு” என்று சொல்லவும் சுகந்தன்காரில் ஏறினான்.

 

விக்ரம் கந்தனை அவன் வீட்டில் விட்டு விட்டு

“சுகந்தன்ரிலாக்ஸ்டா இருங்க. தூங்கி ரெஸ்ட் எடுங்க.” என்று விட்டு திரும்பினான்.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!