Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Thedi Vantha Kaathal Nee

Thedi Vantha Kaathal 4 1

அத்தியாயம் 4

 

என்ன விசயம் பா?”, என்று மகேந்திரனை பார்த்து கேட்டான்.

 



Advertisement

நீயும் எத்தனை நாளைக்கு தான், இப்படி தருதலையா, வெட்டியா சுத்திகிட்டு கிடப்ப. ஒரு சோலிக்கும் ஒழுங்கா போறது இல்லை. ஊருல இருக்கிறவன் எல்லாம் கேக்கான் உன் மகன் என்ன பண்ணுறான்னு. அதுக்கு தான் டவுனுல எதோ பூச்சி மருந்து கடை 

தொடங்கணும்னு சொல்லிட்டு இருந்தல்ல. பேங்க்ல கடன் கேட்டேன். சரினு அந்த மேனேஜர் சொல்லிட்டாரு. நீ போய் என்ன செய்யணும்னு கேட்டு அந்த வேலையை முடிச்சிரு. அப்புறம் நீ நல்லா சம்பாதிக்கிற வரைக்கும் நான் வட்டி கட்டுறேன். அதுக்கு பிறகு நீ கடன் அடைச்சிக்கோ”

 

Advertisement

சரிப்பா”

Advertisement

 

நாளைக்கு பணம் கிடைக்காதாம். ஏதோ சொன்னானே பி டி எம் கார்டராம் அதை வாங்கி கோ. அப்புறமா பணம் எடுக்கலாம். சொல்ல சொன்னான்”

 

Advertisement

அது பி. டி. எம் கார்ட்  இல்லை மாமா. எ. டி. எம் கார்ட்”, என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.

 

ஐயோ இவ வேற வேங்கையை வெறி ஏத்துறாளே”, என்று நினைத்த  பார்த்திபன் “அமைதியா இரு”, என்று கண்களைக் கட்டினான்.

 

அவள் அதை பார்த்து விட்டு கண்டுக்காமல் “இது கூட தெரியலை. இதுக்கு தான் மழை பெய்யும் போது பள்ளி கூடம் பக்கம் ஒதுங்கணும் மாமாவோவ்”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

 

கேட்டியா டா பார்த்தி. இந்த பிள்ளை எப்படி அசிங்க படுத்திட்டு போகுது. நான் தான் படிக்கலை. நீயாவது  பள்ளிக்கூடம் போயிருக்க கூடாது”, என்று ஆரம்பித்தார் மகேந்திரன்.

 

ஐயோ ரம்பத்தை ஆரம்பிச்சிட்டாரே. கூடிய சீக்கிரம் நிறுத்த மாட்டாரே. கடவுளே காப்பாத்து பா”, என்று வேண்டி கொண்டு இருந்தான் பார்த்திபன்.

 

எத்தனை தடவை உன்னை கெஞ்சுனேன் டா? பள்ளிக்கூடத்துக்கு போ போன்னு கேட்டியா? வாத்தியாரை கல்லால அடிச்ச? டீச்சர் கிட்ட அழகா இருக்கீங்கன்னு சொன்ன? ஒரு பன்னென்டாப்பு முடிச்சிருந்தேன்னா எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துருக்கும்? எங்க அப்பா தான் என்னை படிக்க விடலை. நீயாவது படிச்சிருக்க கூடாது? எனக்கு படிக்கணும்னு எவ்வளவு ஆசை தெரியுமா? நான் தான் முதல் மார்க் வாங்குவேன் தெரியுமா? ஆனா எனக்கு பையனா பிறந்துட்டு இப்படி எவளோ ஒருத்திகிட்ட கேவல படுற மாதிரி நம்ம குடும்ப மானம் போச்சே”


இன்னும் பேசி கொண்டே இருந்தார் மகேந்திரன். 

 

ஐயோ எப்படி தான் ஒரே டயலாக்கை வார்த்தை மாறாம பேசுவாரோ?”, என்று நொந்து போய் கேட்டு கொண்டிருந்தான் பார்த்திபன்.


அங்கே இருந்து பார்வதி எதிரே வந்தாள். 

 

அம்மா காப்பாத்தேன்“, என்ற படி கண்களைக் கட்டினான் பார்த்திபன். 


அதை உணர்ந்த பார்வதி “என்னங்க வாங்க டீ தாரேன்”, என்று சொல்லி உள்ளே அழைத்து போனாள்.


அப்பாடி“, என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பார்த்திபன், அந்த மாடி படிக் கட்டிலே அமர்ந்தான்.


அப்போது அங்கு வந்தாள் வள்ளி பாட்டி.


என்ன பேராண்டி இப்படி கன்னத்துல கை வச்சு உக்காந்து யோசனை பண்ணிட்டு இருக்க? இல்லாத மூளையை கசக்குனா இருக்குற கொஞ்சமும், இளகி வெளிய வந்துற போகுது. பின்ன இருக்குற ஒரு பேர பயலுக்கும் பைத்தியம்னு தான் நான் சொல்லிட்டு அழையணும்”


கவலை படாத கிழவி. உனக்கு அந்த நிலைமை வரவே செய்யாது”


எதுக்கு பார்த்தி அப்படி சொல்ற?”


நான் உன்னை எப்படி கொலை பண்ணணு தான, யோசனையே செஞ்சிட்டு இருக்கேன். நீ செத்து போனதுக்கு அப்புறம் நான் பைத்தியம் ஆனா என்ன? ஆகலைன்னா என்ன?”


அட பாவி, என் மேல எதுக்கு டா இப்படி உனக்கு கொலை வெறி?”


பின்ன உன்னை கொஞ்சுவாங்களா? எதுக்கு  கிழவி அம்மா கிட்ட போய் வத்தி வச்ச?”


பின்ன நீ அந்த சீமாட்டியை கட்டி புடிச்சு கொஞ்சிகிட்டு இருக்க. அதை பாத்துட்டு நான் சும்மா இருக்கணுமா?”


ஆமா நான் கொஞ்சினதை நீ பாத்த? போ பாட்டி, அவ வேணும்னே பண்றா”


அப்படியா பார்த்தி. இது எனக்கு தெரியாம போச்சே”


அதை விடு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். உன் பிள்ளை எப்ப பாத்தாலும் என்னை எங்க அப்பன் படிக்க விடலை விடலைன்னு என் காதில் ரத்தம் வர வைக்காரே. நீயும் அந்த கிழவனும் சேந்து அவரை படிக்க வச்சிருக்கலாம்ல? என்னை போட்டு உயிரை வாங்குறாரு”


அட நீ வேற பார்த்தி. உங்க அப்பனை பள்ளி கூடத்துக்கு போ போ னு நான் கெஞ்சாத நாளே இல்லை. நீயாவது படம் பாக்க தான் திருட்டு தனமா ஓடுவ. உங்க அப்பன் இருக்கானே சரியான ரெக்கார்ட் டேன்ஸ் பைத்தியம். எந்த ஊருல நடக்குன்னு ஓடியே போயிருவான். இப்ப எப்படி தான் அடங்கி இருக்கான்னு எனக்கே தெரியலை. உன்கிட்ட நாங்க படிக்க விடலைன்னு  சொல்லிட்டு திரியுறானா?”


நிஜமாவா பாட்டி”


ஆமா பார்த்தி”


இப்படி இருந்துட்டு என்னை ரொம்ப வறுத்தெடுக்கார் பாட்டி”


இனி அடுத்த தடவை இப்படி பேசுனா, நீ சொல்லு. ரெக்கார்ட் டேன்ஸ் பாக்க ஆசை பட்டு தான், நான் ஸ்கூல் க்கு போகலைன்னு சொல்லு. அடங்கிருவான் உங்க அப்பன்”


இத்தனை நான் எனக்கு இதை நீ சொல்லாம போய்ட்டியே பாட்டி. இந்த விருமாண்டிக்குள்ளயும் ஒரு ஷாருக்கான் ஒளிஞ்சு இருந்துருக்கான் பாரேன். சரி கிழவி. நான் தூங்க போறேன்”, என்று சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குள் வந்தான்.

 

அடுத்த நாள் காலையில் கிளம்பி இருந்தாள் மித்ரா. அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, சாப்பிட அமர்ந்தான் பார்த்திபன்.

 

இப்ப எதுக்கு காலையில் சீவி சிங்காரிச்சு உக்காந்துருக்கா உன் தம்பி மக?”, என்று கேட்டு தலையில் ஒரு கொட்டை பார்வதியிடம் இருந்து வாங்கி கொண்டான் பார்த்திபன்.

 

உன் கூட சேந்து ஊரு சுத்தி பாக்க தான் டா பார்த்தி. ஆமா இந்த ஊருல என்னது இருக்குன்னு சுத்தி காட்ட சொல்றான்னு  தெரியலையே”

 

அவளை விடு மா, நீ அந்த சாம்பாரை ஊத்து”, என்று சொல்லி சாப்பிட ஆரம்பித்தான்.

 

அந்த ஊரை சுற்றிப் பார்க்க மித்ராவும், பார்த்திபனும் நடந்து போய் கொண்டிருந்தார்கள்.

 

அவள் பக்கமே  திரும்ப கூடாது”, என்று முடிவு எடுத்தது போல வேறு  பக்கமே பார்த்து நடந்து போய் கொண்டிருந்தான் பார்த்திபன்.

 

என்ன பார்த்திபன் அமைதியா வாறீங்க?”, என்று வம்பிழுத்தாள் மித்ரா.

 

இவ எப்ப எப்படி பேசுவானே தெரியாது டா பார்த்தி. வாயை கொடுத்து வம்புல மாட்டாதே”, என்று தனக்குள் சொல்லி கொண்டு அவள் பேச்சு காதில் விழாதது போல நடந்தான்.

 

உங்களை தான் பார்த்திபன் கூப்பிடுறேன். ஊரை சுத்தி பாக்க வந்துட்டு இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிட்டு வந்தா நல்லாவா இருக்கும்? பேசுங்க பார்த்திபன்”

 

….

 

டேய் பேசுவியா மாட்டியா?”

 

என்னது மறுபடியும் டேயா? உன்னை கொன்னுருவேன் டி”

 

மரியாதையா தான பேசுன்னு சொன்னேன். ரொம்ப பண்ற?”

 

உங்கிட்ட பேச கூடாதுன்னு, எங்க அம்மா சொல்லிருக்கு”

 

இந்த அத்தை இதை தான் இவன் காதில் கிளம்பும் போது ஓதுச்சா”, என்று நினைத்து கொண்டு “பரவால்ல பேசுங்க. உங்க அம்மாக்கு தெரியாம பாத்துக்கலாம். அப்படியே தெரிஞ்சாலும் என்கிட்ட சொல்லுங்க அத்தையை நான் ஒரு வழி பண்றேன்”, என்றாள்.

 

எம்மா தாயே நீ பண்ணுன வரைக்கும் போதும்”

 

ரொம்ப பண்ணாத டா”

 

டான்னு சொன்னா, வாயில எதாவது வந்திரும் சொல்லிட்டேன் மித்ரா. மரியாதையா பேசு”

 

வாயில என்ன வரும்? கெட்ட வார்த்தை பேசுவியா நீ? கொஞ்சம் பேசேன். நானும் கேக்கேன்”

 

பொம்பளையா டி நீ. இப்படி கேக்குற?”

 

பொம்பளைன்னு இன்னொரு நாள் ப்ரூவ் பண்றேன். இப்ப நீ பேசேன்”

 

உன் கழுத்துல தாலி கட்டி, எனக்கு பொண்டாட்டியா மாறுவல்ல? அப்ப கெட்ட வார்த்தை பேசுறேன்”

 

நானாவது உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறதாவது? அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை. சரி அதை விடு. வேற எதையாவது பேசு”

 

என்ன பேச சொல்ற?”, என்று எரிச்சலாக கேட்டான் பார்த்திபன்.

 

என்ன பார்த்திபன் நீங்க? உங்களுக்கு பேசவா சொல்லி தரணும்? அன்னைக்கு நான் யாருன்னு தெரியாதப்பவே அழகன், மன்மதன்னு என்ன எல்லாமோ ரீல் சுத்துனீங்க? இப்ப அப்படி எதாவது நாலு பிட்டை எடுத்து விடுங்க”

 

ஏய் ரொம்ப பேசாத. அதெல்லாம் உண்மை தான். இந்த ஊரில் எனக்கு எத்தனை ரசிகை இருக்காங்க தெரியுமா? நீ பாக்க தான போற? உன்கிட்ட எல்லாம் என்னால பேச முடியாது. இது தான் ஊரு. சுத்தி பாத்துக்கோ”, என்று சொல்லி விட்டு அமைதியாய் நடந்தான்.

 

அதையும் பாக்கலாமே”, என்று சிரித்து கொண்டே அவனுடன் நடந்தாள் மித்ரா.

 

அப்போது இவர்கள் எதிரே ஒரு பெண் வந்தாள். “இப்ப காட்டுறேன் டி. நான் ஹீரோன்னு”, என்று மனதில் நினைத்து கொண்டு நடந்து போனான் பார்த்திபன்.

 

என்ன மாமா பாத்துட்டு, பேசாம போறீங்க?”, என்று விசாரித்தாள் வள்ளி.

 

அப்படி எல்லாம் இல்லை வள்ளி, எதோ சோலியா போறேன்னு நினைச்சேன்”

 

உங்க கிட்ட பேசுறதை விட பெரிய சோலி என்ன மாமா இருக்கு?”

 

கேட்டுக்கிட்டியா?”, என்ற பார்வையை மித்ரா பக்கம் வீசினான் பார்த்திபன்.

 

மித்ராவும் சுவாரசியமாக, அவர்கள் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்.

 

என்ன பார்த்தி மாமா, வீட்டு பக்கமே வர மாட்டுக்கீங்க? எத்தனை நாள் ஆச்சு தெரியுமா, உங்களை பாத்து?”, என்றாள் வள்ளி.

 

எனக்கும் பாக்கணும்னு தோணும் வள்ளி. ஆனா வேலை இருக்கே. அதான்”, என்று சிரித்தான் பார்த்திபன்.

 

போங்க மாமா, பேச மட்டும் தான் செய்வீங்க. ஆனா என்னை மறந்துருவீங்க”

 

உன்னை போய் மறப்பேனா வள்ளி? நேத்து கனவுல கூட நீ தான் வந்த தெரியுமா?”

 

நிஜமா வா மாமா?

 

ஹ்ம்ம் ஆமா”

 

உங்க கனவுல வரதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி இது யாரு? புதுசா இருக்கு”, என்று பொறாமை குரலில் கேட்டாள் வள்ளி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!