Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 11 ( 1. 1)

 

நாம் 11(1. 1)

 

    வானில் ஞாயிறுயும்..  இரு குடும்பங்களும் உறுப்பினர்களும் எதிர்பார்த்த..  தங்களின் வாழ்க்கை துணையை எல்லோர் முன்னிலும் பார்க்க போகும் வைபவ நாளான ஞாயிறுக் கிழமையும் இனிதே உதித்தது.



Advertisement

    இதுநாள்வரை தங்களின் மகனாகவும் மகளாகவும் இருந்தவர்கள்.. இன்றுமுதல் மருமகன் மருமகள் ஆகவும்.. மற்றொரு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களாக அடியெடுத்து வைக்கும்..  முதல்படியான நிகழ்வு இன்று.

   அதிகாலையில் இருந்தே எழிலரசி வீட்டில் உள்ளவர்கள் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டுயிருந்தார்கள். ஏனெனில் அவர்களின் குடும்பத்திலேயே இல்லை இல்லை.. இரு குடும்பங்களில்லேயே முதல்முறையாக  சொந்தம் இல்லாத குடும்பம் மற்றும் திருமணம் செய்துக்கொள்ளும் இருவரும்.. முதல்முறை முறைப்படி பார்ப்பதை வைபவமாக நடத்துகின்றனர்.

    இதுநாள் வரை இருவரின் குடும்பத்திலும் உறவினர்களுக்கு உள்ளே திருமணம் செய்திருப்பதால்.. நேரடியாக திருமணத்திற்கு முதல்நாள் நிச்சயம்.. அடுத்தநாள் கல்யாணம் என்ற வழக்கப்படி திருமணங்கள்  நடந்து வந்தது.

Advertisement

   அதனால் இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சி அனைவருக்குமே புது அனுபவம். அதனால் உற்சாகம்.. பயம்.. ஆர்வம்!.. என்ற மனநிலையில் அனைவரும் வேலைகளை பகிர்ந்து செய்துக் கொண்டுயிருந்தார்கள். இன்று தங்கள் வீட்டிற்கு வரும் தங்களின் உறவினர்களையும்.. தங்களின் மகளுக்கு மணமகனாக வருபவர்.. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் எனஅனைவரையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.. எந்தவித குறையும் வந்துவிடக் கூடாது.. எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று.. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொரு வேலையாக நிற்க நேரமின்றி செய்துக் கொண்டுயிருந்தனர்.

Advertisement

    இந்நாளிற்கு உரியவர்களோ.. தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம்.. மற்றவர்களின் பார்வையில் இனி மாற்றம் உருவாக்க போகும் நாளான ஞாயிறு உதித்தும் அதனை பற்றி கவலைப்படாமல்.. இரு குடும்பங்களுக்கு மட்டுமே தெரிந்த.. கோயிலில் சம்மதம் சொல்லி.. தங்களின் மனதினுள் கணவன், மனைவியாக அடியெடுத்து வைத்த நன்னாளையும்.. நேற்று நடந்தவைகள்  என அனைந்து நிகழ்வுகளையும் நினைத்துக் கொண்டே வேந்தனும்.. அவனின் மனையாளாக வரப்போகும் அரசியும்.. இன்னமும் அவரவர் வீட்டுப்படுக்கையில் உறங்கிக் கொண்டு இருந்தார்கள்.

   எழிலரசி எப்பொழுதையும் விட இன்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. அவளை அழைக்காத நபர் வீட்டில் ஒருவர் மட்டுமே. அம்மா.. பாட்டி.. அக்கா.. அத்தை.. அண்ணா.. மாமா.. தாத்தா.. அக்காவின் 5வயது மகன்.. முதற்கொண்டு எல்லோரும் பொறுமையாக.. சத்தமாக என அழைத்து பார்த்துவிட்டனர். அவள் எழுந்தபாடு தான் இல்லை. அவளை எழுப்ப அவளின் அப்பா அறைநோக்கி வர.. அதே நேரம்!..  அவளுக்கு போன்கால் ஒன்றும் வர.. தன் காதின் அருகில் ஒலித்த போன்காலில் தான் அவள் தூக்கம் கலைந்து போன்னை காதில் வைக்க.. ஒரே நேரத்தில்அரசிம்மா.. ” என்ற அழைப்பு.

    எழிலரசிக்கு  யாரிடம் முதலில் பதில் கூறுவது?. என நினைத்து பின் முடிவு எடுத்து.. ” தனு.. அப்பா..” என்று மட்டும் கூறி.. போன்னை வைத்துவிட்டு.. அடுத்து வெளியில் காத்துக் கொண்டுயிருக்கும்அப்பாவை அழைக்க வேண்டுமே என நினைத்து.. உடனே சிறிது தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து அப்பாவை அழைத்தாள். 

Advertisement

      அருணாச்சலம்  உள்ளே வந்தும் எழிலை கவனித்தார்.. முகம் சிறிது சோர்ந்துயிருந்தது..  என்னம்மா?.. நல்லா தூங்கியா?. இங்கே காபி கொண்டு வரச்சொல்லட்டா?.. ”

     ம்.. நல்லா தூங்கி எழுந்துடேன் ப்பா. இப்ப காபி வேண்டாம்.. குளித்து.. பின் கீழே வந்து குடுச்சுக்கிறேன் ப்பா. என்னிடம் கேட்க.. ல்ல ஏதும் சொல்ல வேண்டும்மா ப்பா?.. “

    அருணாச்சலம்  புன்னகையுடன்ஆமாம் ம்மா. உனக்கு வேந்தன் தம்பிய கல்யாணம் செய்துக் கொள்வதற்கு சம்மதம் தானே மா?.. கோயில்ல நீங்க நல்லா மனம்விட்டு  பேசினிங்களா ம்மா?.. “

   எழிலும் புன்னகையுடனே.. ” ம்..  கோயில்ல பேசினோம் ப்பா. எனக்கு வேந்தன் அவங்கள கல்யாணம் செய்துக் கொள்ள சம்மதம்தான் ப்பா. ”

   ம்.. சந்தோஷம் ம்மா.. இருந்தாலும் இன்னைக்கு வீட்லையும் பேசுங்க.. அதற்கு பிறகு உங்க சம்மதத்தை சொல்லுங்க. அரசிம்மா.. இதமட்டும் ஞாபகம் வைச்சுக்கோமா.. நீ எங்க எல்லாலோருடைய குட்டிம்மா டா. உன் விருப்பம்!.. உன் சந்தோஷம்தான்!..  நம்ம வீட்டல இருப்பவர்களுக்கு முக்கியம்.. அதுதான் வேண்டும்.. சரியா. “

     ” இன்னும் கொஞ்சம் நேரத்திலிருந்து உங்க அத்தை, மாமா எல்லாம் வர ஆரம்பித்துவிடுவாங்க.. உன்கிட்ட  பேச நேரம் கிடைக்காது. அதனால தான் இப்பவே வந்தேன். ரொம்ப களைப்பா தெரியுற. சீக்கிரம் குளித்துவிட்டு வந்து சாப்பிடு. நான் கீழேப்போறேன். ” தலைதடவி கூறிச் சென்றார். 

   சரிப்பா. ” அவர் சென்றவுடன் கதவை சாற்றிவிட்டுஎனக்காக என் விருப்பத்தை நிறைவேற்ற எல்லோரும் இருக்கிங்க என்று.. எனக்கு தெரியும் ப்பா.. ‘ எண்ணியபடியே கட்டிலில் வந்தமர்ந்தாள்.

    பிறகு தான் ஞாபகம் தன்னுடைய போன்னை எடுத்துப் பார்த்தாள். அது இன்னும் இணைப்பிலேயே இருந்தது. ” தனு.. தனு.. ” அழைப்பிற்கு பதில் இல்லை. அழைக்கலாமா? வேண்டாம்மா?. என யோசித்து..

    பேச வேண்டும்மா?.. ” தனுவிற்கு மெசேஜ் செய்தாள்.

    அவளவனிடம் இருந்து உடனே.. ” இருக்குதான். ஆனா!.. எனக்கு இப்ப உன்னை நேரில் பார்த்துடே  பேசினா!.. இன்னும் நல்லாயிருக்கும் தோணுது டா. ” என்று பதில் வந்தது.

    சரி.. நீங்க கிளம்பியவுடன் எனக்கு மிஸ்டு கால் மட்டும் கொடுங்க. ”  பதில் அளித்துவிட்டு புன்னகையுடன் வேந்தனை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப் போகிறோம்!..  என எண்ணிக்கொண்டே துள்ளளுடன் குளிக்க சென்றால்.

    வேந்தனிற்கு காலையில் எழுந்ததில் இருந்து அரசியுடன் பேச வேண்டும் என எண்ணியதால்.. கால் செய்தவன்.. தன்னவளின் குரலை கேட்டான் அதில் தனு.. அப்பா.. என சொல்லிவிட்டு.. போன்கட்ட ஆகாமல் இருந்ததால்.. திருப்பி வந்து பேசுவாள்  என லைனில் காத்திருந்தான். சிறிதுநேரத்திற்கு பிறகு மாமா.. அவர்களைப் பற்றி பேச ஆரம்பிக்கவும்.. அது அவனிடமும் சொல்வது போல இருந்ததால்.. அவர் பேசுவதை கேட்டேன். தன் அரசியின் மீது அவர்கள் குடும்பம் வைத்துயிருக்கும் அன்பை கேட்டு நெகிழ்ந்து.. போனில் பேசுவதை விட முயல்குட்டியின் அருகில் தான் அமர்ந்து.. அவள் முகத்தை பார்த்துக் கொண்டே பேச வேண்டும் என்று மனம் ஏங்கியது. புன்னகையுடன் அவள் பதிலை பார்த்துவிட்டு.. அவனும் தன் அரசியை குடும்பத்துடன் பார்க்கும் வைபவத்திற்காக.. தயாராக சென்றான். ‘

   வேந்தனின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எழிலரசியின் வீட்டிற்கு கிளம்பி தயாராகியிருந்தனர். அவனின் நண்பர்களும்.. பெரியப்பா.. முதல் மாமா குடும்பத்தாரும்.. அங்குயிருந்தே செல்வதற்காக வந்துவிட்டனர். சாமி கும்பிட்டு கிளம்ப வேண்டும். அதற்கு முதலில் வேந்தன் வர வேண்டுமே.. அவனை அழைத்துவிட்டு அவனுக்காக காத்துயிருக்க அவன் கீழிறங்கி வந்தான். அவனை அனைவரின் கண்களும் பார்த்து ஆச்சிரியம் அடைந்தது.

    வேந்தன் புன்னகையுடன் அனைவரையும்..  வாங்க மாமா.. அத்தை.. வாங்க பெரியப்பா.. பெரியம்மா.. ” என பெரியவர்களை வரவேற்று அழைத்தான். அவனின் அன்னை வேந்தனை ஆரத்தழுவிக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நண்பர்கள்.. மாமாக்களும் கூட தழுவிக் கொண்டனர். அக்கா.. தங்கைகள்.. அண்ணி இவர்களோ.. சூப்பர்!. என்று கைகளைகாண்பித்தனர். பின் அனைவரும் சாமி கும்பிட்டு முடித்தனர்.

    வேந்தன் அக்கா யோகாவிடம்..  கமலேஷ், அத்தை, மாமா வரவில்லையா?.. “

    அண்ணா.. அவங்க எல்லோரும் நேரா அண்ணி வீட்டிற்கே வருவதா சாரு சொன்னா. ” தன்னவன் பற்றிய கேள்விக்கு வேகமாக பதில் அளிக்க.

    இதனை பார்த்துக் கொண்டுயிருந்த பெரியப்பா மாணிக்கம்வசுந்தரா குட்டி.. இங்க வாங்கஎன சற்று உறக்க அழைக்க.

    என்னவென்று?. ‘ அனைவருமே அவரை பார்த்தனர்.

    மாணிக்கம் அனைவருமே தன்னை பார்க்கவும்.. இதுவும் நல்லதுதான் என நினைத்து..   நாம்ம இப்பதான் பொண்ணவே பார்க்க போகிறோம் என்பது போல நடந்துக்கொள்ளுங்க.. எழிலரசிய பார்த்த பிறகு.. என்ன வேணாலும்?. அழைத்து கூப்பிடுங்க.. ஒன்னும் இல்ல. ஆனா அதற்கு முன்பு அங்குயிருப்பவர்களிடம் பார்த்து பேசுங்க.. கவனமா இருங்க. சரியா. ”

    அனைவருமே ‘ சரி ‘ என தலையசைத்தார்கள். பின் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டே.. ” அண்ணா.. நீ இன்னும் சாப்பிடல.. ” வினோ அண்ணனை அழைத்துக் கேட்டாள்.

   வேந்தனின் அருகிலிருந்த திலகன்பசிக்கல தானே வேந்தா?.. ”

    நல்லா பசிக்கிதுதான்.. ஆனா இப்ப வேண்டாம். போன் என் ரூம்மில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.. எடுத்துட்டு வரேன். ” எனக் கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து அவர்கள் தன்னை வைத்து ஒட்டுவதற்கு  முன்பே தப்பித்து சென்றான். ‘ பின்னால் தப்பிச்சு ஒடுகிறாயா?..  என்று சில குரல்கள் கேட்டது.

 

    இங்கு எழிலரசியின் வீட்டில் அவளின் முக்கிய உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். அவர்களின் காலை உணவு அங்குதான் என்று கூறியதால் உணவு முடித்துவிட்டு.. வேந்தன் மற்றும் குடும்பத்தினர்களுக்காக காத்துயிருந்தனர். அவர்களில் அருணாச்சலத்தின் தங்கைகள் வேந்தனை நேரில் பார்க்க.. இன்னும் ஆர்வத்துடன் இருந்தனர்அவர்கள் போட்டோவில்  பார்க்கவில்லை.. விருப்பமும் இல்லை. ஆனால் அதனை முகத்தில் காட்டாமல் இருந்தனர்.

   சிறிது நேரத்திற்கு பிறகு எழிலரசியின் அப்பா அருணாச்சலம், பெரியப்பா சிவநேசன்,  மாமாசக்கரவர்த்தி, அண்ணா இன்பன், அக்காவின் கணவர் அருள்நிதி இவர்களின் அழைப்பு மற்றும் அதிகமான சத்தத்தில் வேந்தனின் வீட்டினர் வந்துவிட்டதாக தகவல் தெரிவிக்க..  பின்னர் எழிலின் வீட்டினர் மேலும் பரப்பரப்பானர்கள்.

   ‘ ஒரே ஊர் என்பதால் வேந்தனின் வீட்டினர் எழிலரசியின் வீட்டின் முன் அவரவர் காரிலேயே எல்லோரும் வந்து இறங்கவும்.. அதேநேரம் கமலேஷ் வீட்டினரும் இறங்கினர். அனைவரும் எழிலரசியின் வீட்டை பார்த்தனர்.. அதில் நேர்த்தியான தோட்டத்துடனும்.. பலவகையான மரங்களுடனும் நடுவில் வீடு என அழகாக இருந்தது. இன்று அவர்களின் சிறப்பு மிக்க நாள் என்பதால் வீட்டின் நுழைவாயிலில் மாவிழை தோரணமும்.. பூவில் அலங்காரம் மற்றும் பூமாலையும் அமையப் பெற்றுயிருந்தது. அவர்களுக்கு மனதில் இன்பம் பரவியது. ‘

   புன்னகையுடன் எழிலரசி  குடும்பத்தார்கள் வாசலில் வந்து.. ” வாங்க.. வாங்க எல்லோரும்.. “ வந்த அனைவரையும் வரவேற்றனர்.

    வேந்தனின் வீட்டினரும் பதில் புன்னகை புரிந்து.. அவர்களின் வரவேற்பை ஏற்று.. வீட்டின் உள்ளே சென்றார்கள். அங்கு இருந்த எழிலரசி அம்மா.. பாட்டி.. அக்கா.. அண்ணி என அனைவரும் அவர்களை வரவேற்று.. இரண்டு பக்கத்திலும் வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் வயதானவர்களுக்கு மட்டும் ஷோபாவில் அமர.. மற்றவர்கள் பேசுவதற்கு வசதியாகவும் ஹாலில் கீழே அமர்ந்தனர்.

    இரண்டு குடும்பத்தில் உள்ளவர்களும்.. மற்றவர்களை எடை போட்டுக் கொண்டனர். அவர்களின் புது உறவுகள் இல்லையா!.. இரு குடும்பத்தினரும் ஓர்அளவிற்கு செல்வ செழிப்புடன் இருப்பவர்கள் என்பதால் அதற்கு ஏற்றார் போல நகைகள்.. முகத்தில் அதற்கேற்ற களையும்.. பேச்சும்.. என இருவீட்டு பெண்களும் ஆண்களும் இருந்தனர்.

   அவர்கள் உள்ளே நுழைகளிலேயே இளமதி.. யோகாவை கண்டுக் கொண்டாள். ஆர்த்தியிடம் யோகாவை காண்பிக்க .. அவரும் கண்டுக்கொண்டு மகிழ்ச்சியுடன்.. அவரின் அருகில் சென்று.. ” யோகி.. ” என அழைத்துஎன்னை ஞாபகம் இருக்கா?.. ” என அவரின் கையை பிடித்துக் கேட்க..

    யோகாவும் ஆர்த்தியை கண்டுக்கொண்டார்.. ‘ அவர்கள் இருவரும் பள்ளிக்காலத் தோழிகள்.. ஒன்றாக படித்தவர்கள்.  படிப்பு முடிந்து இரண்டு வருடம் தொடர்பில் இருந்தார்கள். அப்போது  தனிதனி போன் இல்லாமல் இருக்க.. திருமணம் முடிந்தவுடனே குடும்ப பொறுப்புகள்.. குழந்தைகள்.. என்று தோழிகளின் பேச்சுவார்த்தை முற்றிலும் நின்றது. ‘

    யோகாவும் தன் தோழியை அடையாளம் கண்டுக் கொண்டு முகம் கொள்ளா புன்னகையுடன்.. ” ஆரு.. ஆரு.. நீயா?. எப்படி இருக்க?.. நீ இங்க எப்படி?.. உன்னை பார்த்து எத்தனை வருடம் ஆகிவிட்டது.. இப்ப எங்க இருக்க.. ?.. ” என கேள்விக் கேட்டுக் கொண்டே இருவரும் சேர்ந்து நின்றுக் கொண்டனர். ஆர்த்தியின் பக்கத்தில் இளமதியும் அவர்களின் அண்ணி சுரபியும் இருந்தார்.

    பிறகு இளமதியை பார்த்து யோகாநீ இளமதி தானே?. ம்.. நீயும் வேந்தனும் ஒரே கிளாஸ்தானே?.. ” என்பதை மட்டும் அமைதியாக கேட்டார்.

    ஆர்த்தி புன்னகையுடன்நீ இன்னும் மாறவேயில்ல யோகி.. விடாம கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க. நாங்க நல்லாயிருக்கோம். நானும் இளமதியும்.. நீங்க பார்க்க வந்துயிருக்கிங்களே எழிலரசியோட அக்காக்கள். ” அருகில் இருந்த சுரபியை காட்டி.. ” எங்க அண்ணி..”  என்று கூற.. யோகா சுரபியை பார்த்து புன்னகை மட்டும் புரிந்தார்.

     வேறு எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. பின் பேசிக் கொண்டே.. யோகாவுடனே வேந்தனின் தங்கைகள், அண்ணி.. கணவன் தம்பி மனைவி தீபா.. சாருலதா என இளம் பெண்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துவிட்டனர்.

   எழிலரசியின் அத்தைகள்.. அனைவரையும் இன்னும் கூடுதலாக  கவனித்தனர். அவர்கள் செல்வநிலையில் தங்களை போலதான் தெரிகிறார்கள்.. நான்கு இளம் ஆண்கள் தனியாக தெரிந்தார்கள். இதில் யார் எழிலரசியை பார்க்க வந்த பையன்.. அனைவரும் பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறார்கள்.. என இருவரும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டேயும்..

    மற்ற பெரியவர்கள் எல்லாம் எதிர்எதிர் பக்கத்தில் இருந்த ஷோபாவில் அமர்ந்திருக்க.. ஆண்களும் பெண்களும் கீழே பேசுவதற்கு ஏற்றவாறு.. தரையில் போடப்பட்டுயிருந்த மெத்தை போன்ற விரிப்பில் அமர்ந்தனர்கள்.

   ‘ அனைவரும் அமர்ந்துவுடன்.. இரு குடும்பத்திரும் வரம் பார்க்க காரணமாக இருந்த நட்ராஜ் என்பவரை.. இரு வீட்டின் சார்பாக அழைத்திருந்தனர். அவர் தான் இருகுடும்பத்தில் உள்ளவர்களை.. அவரவர் உறவுமுறைகளைச் சொல்லி அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். எல்லோரையும் அறிமுகம்  செய்தவர் மாப்பிள்ளை பையனை மட்டும் அவர் அறிமுகம் செய்யவில்லை.. ஏனெனில் வேந்தன் அங்கு இல்லை. ‘

    ‘ எழிலரசியின் வீட்டு ஹாலில் இந்நிலையில் இருக்க.. அதே வீட்டு மாடியில் எழிலரசியின் அறைமுன்னே  சத்யா.. தர்ஷினி..அத்தை மகள் மேகா என மூன்று பெண்களும் கோபத்துடன் இருந்தனர். ஏனெனில் உள்ளே உள்ள எழிலரசி என்ற ஒருத்தி.. தங்களை தன் அறையின் உள்ளே வரவிடாமல் அறையை உள்பக்கம் பூட்டி.. அவள் மட்டும் உள்ளே தன்னை அலங்கரித்துக் கொண்டுயிருந்தாள். ‘

   ‘ அவர்கள் மூவரும் இவளை விட்டுவிட்டு கீழே தனியாகவும் செல்லமுடியாது.. இங்கே உள்ளேயும் செல்ல முடியாமல் இருந்தனர். வேந்தனின் வீட்டினர் வந்துவிட்டனர் என்று.. அவர்களுக்கும் தெரிந்தது. எப்போது வேண்டும்மானாலும் எழிலரசியை அழைக்கலாம்.. இவள் அலங்காரம் முடித்துவிட்டாளா?.. என்று தெரியவில்லை. இவர்களை அதற்குதானே அவளின் அறைக்கு அனுப்பிவைத்தனர். அவர்கள் சிறு பதற்றத்துடன் நின்றுக் கொண்டுயிருந்தார்கள். ‘

    ‘ கீழே ஹாலில்.. ரவிந்திரன் சித்ராவை பார்க்க அவர் கமலேஷை பார்த்தார். உள்ளே வரும்முன் அவனுடன் வந்த வேந்தனை.. எழிலரசியின் அண்ணா இன்பன் அழைத்து வருவதாக கூறிவிட்டு  மூவரும் பேசிக் கொண்டுயிருந்தனர். இப்போ கமலேஷ் மட்டும் இங்கு இருக்க அவர்கள் இருவரும் எங்கே?.. ‘

     மாப்பிள்ளை இப்போது இங்கு இல்லை!.. எனக் கூறியவுடன்.. எழிலரசியின் அத்தை தேவகி.. ஏதோ கூற வர..

    அதனை பார்த்த யோகவின் கணவர் கார்த்திக்.. ” வேந்தன் காரில் இருக்கிறான்.. போன்கால் வந்தது. நான் தான் போன் பேசிட்டு வானு சொன்னேன். ” என்று கூறிவிட்டு.. வேந்தனின் அப்பா.. தன் மாமாவிடம் ஏதோ கார்த்திக் கூற.. அவர் தன் மனைவி சித்ராவிடம் பேசினார்.

     பிறகு சித்ரா அனைவரையும் பார்த்து புன்னகை புரிந்துக்கொண்டே.. எழிலரசி அம்மா லட்சுமி பார்த்து..  உங்க மகள் எழிலரசியை அழைத்தால் சரியாக இருக்கும்.. வேந்தன் உடனே வந்துவிடுவான். ” என அவர் இருப்பொருட்பட கூறினார்.

    லட்சுமியும் அதனை புரிந்துக் கொண்டு மென்புன்னகை ஒன்றை வழங்கி.. ” சரிங்க.. இதோ வரச்சொல்கிறேன்.” எனக் கூறி இளமதியை பார்த்தார்.

     இளமதி உடனே மாடிக்கு விரைத்தாள். அங்கு சென்ற இளமதி.. மூவரும் வெளியே நிற்பதை பார்த்துவிட்டு!.. எழில் மட்டும் உள்ளே தனியாக என்ன செய்கிறாள்?. என எண்ணிக் கொண்டு.. அந்தஅறையின் வெளியில் இருந்து மென்மையாக அழைத்தாள்.. ” எழில் உன்னை வரச்செல்றாங்க. “

    எழில் அவளும் மெதுவாகநீங்கயெல்லாம் கீழே போங்க.. நானே வருகிறேன். ”

    இளமதி இவள் என்ன சொல்கிறாள்?.. என்னாச்சு இவளுக்கு!.. ” என்ன?.. லூசாடி நீ?.. நாங்க முதலில் போயி?.. அங்க என்னடானா ?.. அவரும் உள்ளே வரல.. நீயும் தனியா வரேன் சொல்லுற.. என்னமோ?. இரண்டுபோரும் புதுசா!.  நடந்துக்கிறிங்க.. நீ வந்தா தான் மாப்பிள்ளையே வருவாருபோல. சரி.. நாங்க மெதுவா கீழே இறங்குறோம்.. நீ வெளிய வா எழில்.. ” எனக் கூறிவிட்டு அவர்கள் கூறிய படி முன்னாடி சென்றனர்.

   அவர்கள் கீழே இருங்க.. அவர்கள் நால்வரும் கண்டது.. சிலரின் கண்கள் தங்களின் பின்னாலும்.. சிலரின் கண்கள் வாசலை நோக்கியும் இருந்தது. பிறகு இவர்கள் நால்வருமே கூட வாசலைதான் பார்த்துக் கொண்டுயிருந்தனர்.

   தன் கண்களில் அன்பு.. காதல்.. மையல்.. இன்னும்.. அவன் தேர்ந்தெடுத்த சேலையில்.. வாங்கிக்கொடுத்த பூச்சரம் சூடி அரசியாக படிகளில்  இறங்கி வந்த.. தன்னவளை உரிமையுடன் தலை முதல் கால்வரை முழுவதும் அள்ளி பருகிய கண்கள்.. முகத்தில் மென்மையும்.. நடையில் மிடுக்கும் என தன்னவாளான எழிலரசியை அவளின் இல்லத்தில்.. ‘

    ‘ அவள் தன்னுடையவள்.. எனக்காவள் என்றும்.. அவளின் பெற்றோரிடம் உங்கள் மகளை.. உங்கள் குட்டிம்மாவை.. நான் என் அரசியை.. என்னுயிராவும்.. என் உயிர் கொடுத்தும்!..  அவளை பாதுகாக்க பிறந்த என்னிடம்!.. என் மனைவியாக கொடுத்து விடுங்கள் எனவும்!.. இதனை எல்லோரிடமும் உரிமையாக கூறுவதற்காக தன்னுடைய மச்சான் இன்பன் உடன் வந்தான்.. எழிலரசியின் தலைவன் வேந்தன். ‘

    நால்வரில் மூவருக்கு வேந்தனின் பார்வையும்.. கால்களும் தானாக அவர்களின் நோக்கி வருவதுபோல இருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு புரிந்து.. எழிலரசி தங்களின் பின்னால் வருகிறாள் என்று.

   அவர்களில் இளமதி  என்ன செய்கிறார் இவர்?.. ” எனவும்.. சத்யாஅண்ணா உங்க சேட்டைக்கு அளவே இல்ல.. ” என  எண்ணி தன் புன்னகையை கட்டுப்படுத்த அரும்பாடு பட்டுக் கொண்டுயிருந்தாள்.

    ஆனால் அவர்களின் பின்னால் வந்த அவனின் அரசி.. அவனை பார்த்து அவனில் தெரிந்த அன்பு.. காதல்.. உரிமையான பார்வையில் மையல்.. ஆசை.. உன்னை இன்று என் மனைவி என அனைவரிடம் கூறப் போகபோகிறேன்!.. என்று.. முகத்தில் மகிழ்ச்சி.. நடையில் உறுதி என வந்த வேந்தனை பார்த்து.. அவள் எனக்கானவன் இவன்.. இவன் என்னை என் பெற்றோர்.. குடும்பத்தை போல் என்னை தன் உயிராக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையை கொடுக்கிறான். ‘

     ‘ அரசியும்  தன்னவனை நினைத்தும்.. பார்த்துக் கொண்டே கீழே வர.. ஆனால் அவனோ மோனநிலையில் அவனின் கால்கள்.. தன்னை நோக்கி வருவதை பார்த்ததும்.. அவனின் விருப்பமான பார்வை சிறிது மட்டுமே காண்பித்தாள். ‘

    ‘ அவளையே பார்த்து வந்த வேந்தன் அவனுக்கு பிடித்தமான அவளின் முறைப்பு பார்வையை பார்த்துதான் உணர்த்தான்.. தான் அரசியை நோக்கி சென்றுக் கொண்டுயிருக்கும் செயலை.. ‘ முயல்குட்டி.. ‘ என மனதிற்குள் சிரித்துக் கொண்டு.. பின் சற்று நிதானித்து தன் நடை தளர்த்திஅனைவரையும் பார்த்து நிற்கவும்.. எழிலரசி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவர்கள் இருவரும் அருஅருகில் நின்றே அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தனர். ‘

    இருவருக்கும் தங்களை இந்த வீட்டினுள் தங்களின் கண்கள் தன்னவள்!.. தன்னவனை!.. தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற அவாவும். மேலும் அதில் வேந்தனுக்கு.. தான் மட்டும் உட்கார்ந்தும்.. தன் அரசி மட்டும் அனைவரின் முன்னால் தனியாக வந்து நிற்பது பிடிக்கவில்லை. அதனால் நண்பர்கள்.. இன்பா மற்றும் கார்த்திக் மாமாவிடம் கூறி.. அவர்களை சமாளித்து.. அவர்களின்உதவியுடன்.. இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக வந்து.. அனைவரும் தங்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கும் படியான சூழ்நிலையை உருவாக்கினான். ‘

   இரு குடும்பத்தினரும் தங்கள் வருங்கால மருமகள்மகனை  பார்த்தனர். எழிலரசி பர்புல் வண்ணம் அதில் தங்க நிறத்தில் உடல் முழுவதும் பூக்கள், கொடிகள் பரவியிருக்க.. ஆரஞ்சு, தங்கநிற பிளைன் பாடர் சேலையும்.. இதற்காக போட்நெக் வைத்த ஆரஞ்சு வண்ண பிளவுஸ் முன்பக்கம் முழுவதும் பிளைனாக.. அதில் அடர்பச்சை, ரோஜா கற்களில் மயில்வடிவ அட்டிகை மாடலில் கழுத்தை ஒட்டிய டிசைன்.. முழங்கை வரையுள்ள கை, இடுப்பு, முதுகில் இவள் கைகளால் முதன்முறையாக டிசைன் செய்த மங்கம் வேலைபாடு உள்ள பிளவுஸ்சை அணிந்திருந்தாள். அது கண்ணைகவரும் விதமாக அழகாக இருந்தது. ‘

   எழிலரசி கண்களுக்கு மட்டுமே அவள் அதிக அக்கறை எடுத்துயிருப்பால் போல.. அவளின் கருமைநிற கருவிழி கண்களால் மற்றவர்களை பார்த்தால் அவர்களை அவளின் என்ன கட்டளையானாலும் அதனை செய்ய வைக்கும்.. அந்த அளவிற்கு இருந்தது அவள் கண்களும், அதில் வீசிய பாவையின் பார்வையும். அவளின் அடர்கருமையான புருவத்தின் நடுவே.. மெருன்நிற சிறிய வட்டவடிவின் நடுவே சிறு வெள்ளை கல் வைத்த பொட்டு வைத்திருந்தால். அதன் சற்று மேல் சாமி கும்பிட்டதின் அடையாளமாக பிரசாதத்தை நெற்றில் இட்டுயிருந்தால். ‘

   முகத்தில் மிதமான அலங்காரம்.. கழுத்தில் தங்க மணிகள் அடங்கிய செயின் நடுவே.. வைரகற்கள் பதித்த பதக்கத்துடன் கூடிய ஆரம், காதிலும் பதக்க மாடலிலான காதணியும் அணிந்தும்.. கைகளில் உடைக்கு ஏற்ற கண்ணாடி வளையல் மட்டும் அணிந்திருந்தால். தலையில் நேர்வகிடு எடுத்து இரண்டு பக்கமும் முடியெடுத்து கிளப் போட்டு.. சில பின்னல்களின் மேல் வேந்தன் வாங்கி கொடுத்த மல்லிகை பூச்சரங்களை மட்டும் சூடி அழகுபதுமையாக வேந்தனின் அரசியாக அவன் அருகில் நின்றிருந்தாள். ‘

    வேந்தனும் தன் அரசிக்கு இணையாக அவள் விருப்பத்தை கவனத்தில் கொண்டு.. அவள் உடைக்கு ஏற்றார்போல.. சைனிஸ்காலர் வைத்த ஆரஞ்சுவண்ண சட்டை.. அதில் கைகளை முழங்கை வரை மடித்துவிட்டும்.. அதற்குஅடர் சாம்பல்வண்ண  பேண்ட் அணித்துயிருந்தான். தலையை சாதாரணமாக சீவியும்.. அவனின் முகத்திற்கு பொருத்தமான மீசை, டிரிம் செய்த தாடியுடனும் இருந்தான். ‘

     ‘ கழுத்தில் மெல்லிய தங்க செயினும்.. கையில் சில்வர் மற்றும் பூளூகலர் டையல் வாட்ச் மட்டும் அணிந்தும்.. கண்களில் புன்னகையுடன் பார்ப்பவர் அனைவரையும் அன்பு.. அறிவு.. அழகுடன் இருக்கிறான் என தோன்ற வைக்கும் விதத்தில்.. அதிலும் தன் அரசியின் மன்னவனாக அவளின்அருகில்.. அவள் வீட்டினுள் இருக்கிறேன் என்ற கூடுதல் முகப்பொலிவுடன் அனைவரையும் பார்த்து புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தான். ‘

     இருவரும் வணக்கம் என கூறியதை பார்த்தவுடனே.. அனைவருக்குமே அவர்களின் ஜோடிப்பொருத்தம் பிடித்துயிருந்தது. பின் இருவரும் தங்களின் குடும்பத்தினருடன் சென்று அமர்ந்தப்படியே இருஜோடி விழிகளும் தங்களின் இணைகளை ஒரு நொடி பார்த்து பரவசமடைந்து. பின் தங்களின் அம்மாக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தனர். ‘

   

    

   

    

    

   

    

   

    

  

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!