Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 21.2

“கேட்க ஆள்  இல்லைன்னு நினைத்தானா? அப்பன் நான் குத்துக் கல்லு மாதிரி இருக்கிறேன். அவனை என்ன பண்றேன் பாரு.” என்று ஆவேசமாக சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினார்.

 

“வேண்டாம் நில்லுங்க. இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க? அதையெல்லாம் காலையில் பார்த்துக்கலாம். முதலில் இவளை பாருங்க.”  என்று அவரை தடுத்து நிறுத்தினார் கலைவாணி.

 



Advertisement

.கார்த்திகேயன் சாதனா பக்கத்தில் வந்து அமர்ந்தார்

“என்ன ஆச்சு? சொல்லுமா.” என்று கேட்டார்.

 

Advertisement

அவள் அங்கு நடந்ததை ஒன்றுவிடாமல்  கூறினாள்.

Advertisement

“என்ன? அந்த சேகருக்கு என்ன இவ்வளவு திமிர்?  அவன் தான் இப்படி  நடந்துகிட்டானா உன்னோட மாமியார் புருஷன் ரெண்டு பேரும் அவன் கூட சேர்ந்துக்கிட்டு உன்னை வெளிய போக சொல்லிட்டாங்களா? அதுவும் இந்த நேரத்தில்! அப்போ அவங்களுக்கு எல்லாம் உன்னை விட அவன் தான் முக்கியமா போயிட்டானா? என்ன அநியாயம்? இது எங்கேயாவது நடக்குமா?”. என்று ஆவேசப்பட்டார்  கார்த்திகேயன்

 

“சரி அவளே சோர்ந்து போய் இருக்கா. நீங்க வேற கத்தி அவளை இன்னும் டென்ஷன் பண்ணாதீங்க. கொஞ்சம் பொறுமையா இருங்க. அவள்  சாப்பிட்டாளா இல்லையான்னு கூட தெரியல.” என்று அவளை பார்த்தார் கலைவாணி.

Advertisement

அவள் “.எனக்கு எதுவும் வேண்டாம்” என்றவள் அவளது அறைக்குச் சென்று  படுக்கையில் விழுந்து அழ ஆரம்பித்தாள்

கலைவாணி அவளை சமாதானம் செய்து  தூங்க வைத்தார்.

 

அதற்குப் பிறகு அவன் அவளை பார்க்க வரவில்லை. நடுராத்திரியில் சென்ற அவள் ஒழுங்காக வீடு சென்றாளா என்று கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அவ்வளவு தான் அவனுக்கு அவள் மீது இருக்கும் காதல், அக்கறை எல்லாம். இவனுக்காக எப்போதும் ஏங்காதே மனமே. என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு படுத்து உறங்க முயற்சித்தாள். நெடுநேரம் கழித்து உறங்கிப் போனாள்.

 

சுகந்தன்காலை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தான். வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்தான்.. விக்ரம்  கையில் பையுடன் நின்று கொண்டிருந்தான்

“வாங்க விக்ரம்.” என்று சுகந்தன்அழைக்க அவன் உள்ளே வந்தான்.

“இந்தாங்க உங்க  பேக் வரும் அவசரத்துல எதையும் நீங்க எடுத்துட்டு வரல, அதான் எடுத்துட்டு வந்து கொடுக்கலாம்னு வந்தேன்.”. என்று அவனுடைய பொருட்களை கொடுத்தான் விக்ரம்

“தேங்க்ஸ் விக்ரம். சாரி. உங்களை கொஞ்சம் கஷ்டப் படுத்திட்.டேன்” என்றான் .

“எனக்கு எந்த கஷ்டமும் இல்லை கந்தன்.  ஆனால் கொஞ்சம் ஏமாந்து போனேன். இங்க இருந்து உங்கள கூட்டிட்டு போகும் போகுது நீங்களும் சாதனாவும் சேர்ந்து விடுவீர்கள்ன்னு நினைச்சேன் ஆனா அது நடக்கல.” என்றான் இரங்கிய குரலில் விக்ரம்.

 

“பரவாயில்லை விடுங்க விக்ரம். எப்போ எது நடக்கணும்னு இருக்கும் அப்போ தான் அது நடக்கும். அப்புறம் அத்தை எப்போ வராங்க?” என்று கேட்டான்

“நாளைக்கு வராங்க. மாமா மார்ச் மாசம் இந்தியாவிலிருந்து வராரு.  அவர் வருவதற்குள் இந்த சண்டை தீர்ந்து நீங்க ஒன்னு சேரனும்ன்னு நினைச்சேன். ஆனால் நடக்கவில்லை.” என்றான் விக்ரம் வருத்தமாக.

 

“இல்லை விக்ரம் அவர் வந்தால் தான் இந்த பிரச்சனை தீரும்.” என்றான் சுகந்தன்அழுத்தமாக.

“என்ன சொல்றீங்க கந்தன்? அவருக்குதான் உங்களை கண்டாலே பிடிக்காதே. அப்புறம் எப்படி அவர் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேருவீங்க? அவர் வந்தா பிரச்சனை பெருசா தான ஆகும்.”

“இல்லை விக்ரம். அவர் வந்தா பிரச்சனை தீர்ந்து விடும்.”

“அது எப்படி?” என்று கேட்டான் விக்ரம் புரியாமல்.

“அது எப்படின்னு உங்களுக்கு கூடிய சீக்கிரம் தெரியவரும். அதுவரைக்கும் நான் சாதனா கிட்ட இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது.”

“சரி கந்தன். எப்படியாவது நல்லது நடந்தால் போதும்.” என்றான் விக்ரம் ஒரு பெரிய பெருமூச்சுடன்.

சாதனா  கிறிஸ்மஸ் விடுமுறைகள் முடிந்து அலுவலகம் சென்றாள். வழக்கம் போல அவளுடைய நாற்காலியில் அமர்ந்து அன்றைய வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

 

“ஹாய்  சாது.” என்று கூப்பிட்டபடி அங்கு வந்தாள் லதா.

“ஹாய்  லதா” என்றாள் சுழல் நாற்காலியில் திரும்பி அவளை பார்த்து.

“சாதனா ஹாலிடேஸ்  முடிந்து வேலைக்கு வரவே பிடிக்கல. கலிபோர்னியா ட்ரிப் ஜாலியா இருந்தது. இப்பதான் ஹாலிடேஸ் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள முடிஞ்சு போச்சு.”. என்று குறைபட்டுக் கொண்டாள் லதா

“எனக்கும் அப்படிதான்  இருந்துச்சு  லதா.” என்று சொல்லும்  சொல்லும்போதே சுகந்தன்உடன் செலவழித்த நேரம் ஞாபகம் வந்தது.

முகம் அனிச்சையாக சோகமானது.

“அப்படியா நீயும் என்ஜாய் பண்ணியா? ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் அப்படி தெரியலையே. எதையோ இழந்ததை போல சோகமா இருக்கு.” என்றாள் லதா.

“ அப்படி எல்லாம் இல்லை. ஐ யம் ஆல்ரைட். என் முகமே அப்படிதான்.” என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள நினைத்தாள் சாதனா.

“அது கரெக்டுதான். உன் முகத்தில் எப்போதும் ஒரு சோகம் தெரியும். ஆனால் நடுவில் கொஞ்ச நாளா அந்த சோகம் தெரியல. அதுக்கு பதிலா ஒரு பூரிப்பு தெரிந்தது. ஆனால் இப்போ திரும்பவும் சோகம் தெரியுது.”   என்று லதா  விளக்கம் கொடுத்தாள்.

‘நடுவில் என்றால் அவள்  கந்தனை பார்த்த நாட்களை சொல்கிறாளா? அப்படித்தான் இருக்கும். அவனை பார்த்ததும் அவள் மனம் மகிழ்ந்ததை அவளால் உணர முடிந்தது. மனதில் நினைத்ததை வெளியில் சொல்லு பிடிக்காமல்

“அது அப்படி இல்லை லதா. நடுவில் கொஞ்ச நாளா பப்பாயா ஃபேசியல் பண்ணினேன். அதான் பிரைட்டா  இருந்திருப்பேன். இப்போ பண்றது இல்லை அதனால திரும்பவும் டல்லாயிட்டேன்.” என்றாள் சாதனா.

“அப்படியா சொல்றே? எனக்கு என்னமோ அப்படி தோணல. இருந்தாலும் ஏதோ நீ சொல்ற. நானும் சரின்னு ஒத்துக்குறேன்.”

“சரி இந்த ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சது இல்லையா? வேலையை பார்ப்போமா?” என்று கேட்டாள் சாதனா.

“கண்டிப்பா பாக்கணுமா?”

“இல்லைனா சம்பளம் கொடுக்க மாட்டாங்க. பரவாயில்லையா?”

“ஐயையோ அது கண்டிப்பா வேணும். அதுக்காக தானே வந்திருக்கேன். சரி வந்ததுக்கு கொஞ்சமாவது வேலை செய்யலாம்.” என்று விட்டு சென்றாள் லதா.

அப்பாடா என்றிருந்தது சாதனாவுக்கு

‘எப்படியோ சமாளிச்சு அனுப்பியாச்சு.’ என்று  நினைத்தவளை

 

“ஹாய்.” என்றபடி அங்கு வந்தான் திலீப்.

கிறிஸ்மஸ் ஹாலிடேஸ் எப்படி போச்சு?” என்று கேட்டான்.

“ரொம்ப நல்லா போச்சு.” என்றாள். சாதனா

“ஆனால் உங்க முகத்தைப் அப்படி பார்த்தா அப்படி தெரியலையே. ரொம்ப டல்லா இருக்கீங்க.”

“கொஞ்சம் தலைவலி. அதனால அப்படி தெரியுதுன்னு நினைக்கிறேன்.” என்று சமாளித்தாள்

“அப்புறம் சாதனா, ஒரு  குட் நியூஸ். எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு.”

“கிரைட் கங்கிராட்ஸ்.” என்று எழுந்து அவனுக்கு கைகொடுத்து தன் வாழ்த்தை தெரிவித்தாள் சாதனா.

“தேங்க்ஸ். கூடிய சீக்கிரம் இன்விடேஷன் எடுத்துட்டு வரேன்.” என்றுவிட்டு சென்றான் அவன். சாதனாவுக்கு  உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது.

 

 

கலைவாணி வீடு வந்திருந்தார். வழக்கம் போல அவரவர் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். சாதனாவுக்கு நாட்கள் பழையபடி மாறிக்கொண்டிருந்தது.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!