Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

MKMK Episode 22.2

“டிராவல் எப்படி இருந்தது மாமா?” என்று கேட்டான்.

“ரொம்ப டயர்டா இருந்தது. நீங்க எல்லாம் எப்படி தான் இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி இந்தியாவுக்கு வர்ரீங்களோ  தெரியல. என் பொண்ணுங்களை பார்க்கணும்னா நான் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு டிராவல் பண்ணி வர வேண்டி இருக்கு. ஆரம்பத்துல  என் ரெண்டு பொண்ணுங்களும் அமெரிக்காவில் இருக்காங்கன்னு பெருமையா சொல்லி கொள்வேன்.

ஆனால் இப்போ வயசு ஏற ஏற பொண்ணுங்களை பிரிந்து இருக்கிறது கஷ்டமா இருக்கு.” என்றார் வருத்தமான குரலில்.

“அதுக்கு என்னப்பா? சாதனா கூடிய சீக்கிரம் இந்தியாவுக்கு வந்துடுவா. அவள் உங்களை பக்கத்திலிருந்து பாத்துக்குவா.” என்றாள் சஞ்சனா.



Advertisement

“நானும் ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை இல்லனா ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வந்து பாத்துக்குவேன்.”

“ சரி மா.” என்றார் கார்த்திகேயன் பெரிய பெருமூச்சுடன்.

“சரி நீங்க போய் குளிச்சுட்டு வாங்க. நான் உங்களுக்கு டிபன் ரெடி பண்றேன். சாப்பிட்டு தூங்குங்க.”. என்றார் கலைவாணி அக்கறையாக.

Advertisement

“சரி கலைவாணி.” என்று அவர் எழுந்து கலைவாணி அறைக்கு சென்றார்.

Advertisement

 

கலைவாணி பரபரப்பாக அவருக்கு பிடித்த பொங்கல், தேங்காய் சட்னி, முருங்கக்காய் சாம்பார் செய்தார்.

குளித்து முடித்து வந்த அவர் சாப்பிட்டு விட்டு பேரன் விஷாலுடன் சிறிது நேரம் இருந்துவிட்டு ஓய்வெடுக்க சென்றார்.

Advertisement

அன்று மாலை 4 மணி அளவில் விக்ரம் கார்த்திகேயனிடம் வந்தான்.

“மாமா ஜெட்லாக் எப்படி இருக்கு?” என்று கேட்டான்.

“இதுவரைக்கும் ஓகே தான். ஆனால் இப்போ தூக்கமா வருது.” என்றார்.

“கொஞ்ச நாள் அப்படியே தானிருக்கும். அதுக்கப்புறம் சரியாயிடும். நீங்க ப்ரீயா இருந்தா என்கூட வாங்க. வாக்கிங் போகலாம். வெதர் நல்லா இருக்கு. அப்படியே  பார்க் போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வரலாம். என்ன சொல்றீங்க மாமா?” என்று கேட்டான்.

 

“போலாம் மாப்பிள்ளை. எனக்கும் கொஞ்சம் நடக்கணும் போலதான் இருக்கு.”. என்று விட்டு அவனுடன் வெளியே வந்தார்

ஏற்கனவே அந்த தெருவில்  கார்த்திகேயனை ஒத்த வயதான ஒருவர் நடந்து கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்து விக்ரம்

“ஹாய் அங்கிள்.” என்றான்.

அவரும் “ஹாய் விக்ரம்.” என்றார் கையை பதிலுக்கு ஆட்டி.

“இவர் என்னோட மாமனார். இன்னிக்கி தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்.” என்று அறிமுகப்படுத்தி வைத்தான்.

“இவர் இதே தெருவில் இருக்கும் என்னோட ஃப்ரெண்ட் ராஜ்குமாரின் அப்பா.” என்று அவரை மாமனாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

இருவரும் கை கொடுத்துக் கொண்டனர்.

“வரீங்களா பேசிக்கிட்டே வாக்கிங் போகலாம்?” என்று அவர் கூப்பிட

“ஸூர்” என்றுவிட்டு கார்த்திகேயன் அவருடன் நடக்க ஆரம்பித்தார்.

 

விக்ரம் நடந்து கம்யூனிட்டி.யில் இருந்த பார்க்கிற்கு வந்தான்.

அங்கு  இருந்த பெரிய நாற்காலியில் சுகந்தன்அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்ததும்

“ஹாய் சுகந்தா” என்றுவிட்டு அவன் பக்கத்தில் அமர்ந்தான் விக்ரம்.

“ஹாய் விக்ரம். மாமா வந்துட்டாங்க போல இருக்கு. நீங்க ரெண்டு பேரும் நடந்து வந்ததை பார்த்தேன். ஆனால் அவர் வேற யார்கூடவோ போனமாதிரி இருந்தது.”

“ஆமாம்  என் பிரெண்டோட அப்பா கூட தான் போறாரு”

“ஓ அப்படியா. அப்போ மாமாவுக்கு ஒரு கம்பெனி இங்க கிடைச்சிடுச்சு.” “ஆமாம் சுகந்தா. சரி அப்புறம் நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான் விக்ரம்.

“எப்போதும் போல இருக்கேன். மெக்கானிக்கல் லைப்.” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

“சில சமயம் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். நாமதான் அதை மாத்திக்கணும்.” என்றான் விக்ரம்.

“எங்க? மாற்றிக்கொள்ள எடுத்த முயற்சி எதுவும் நடக்கல. சாதனா,  நான் சொல்றதை ஒரு மணி நேரம் கேட்டால் போதும். அதுவும் அவங்க அப்பா இங்க இருக்குற இந்த நேரத்துல அவள் நான்  சொல்றதை காது கொடுத்து கேட்டா எங்க பிரச்சனை தீர்ந்து விடும்.” என்றான் சுகந்தன்.

“அப்படியா அப்போ நீங்க பேச வேண்டியதுதானே?”

“பப்ளிக் ப்ளேஸ்ல பேசினா,  அங்க இருக்கவே மாட்டேங்குறா. ஒரு நாள் மாலில் பேச ட்ரை பண்ணினேன். 911க்கு கால் பண்ணிடுவேன்னு மிரட்டுகிறாள்.”

“அவங்க சும்மா அப்படி சொல்றாங்க. அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க.” “அது எனக்கும் தெரிந்தது விக்ரம். இருந்தாலும் நாம சொல்ல வர்றதை கேட்டால்தானே நம் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்ல முடியும்.”

“அதுவும் சரிதான் சுகந்தா. சரி இப்போ அடுத்தது என்னதான் பண்ண போறீங்க? தமிழ் ஸ்கூலில் பார்த்து பேசலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”

 

“நான் உங்களுக்கு ஒரு ஐடியா சொல்லட்டுமா?”

“சொல்லுங்க விக்ரம். நீங்க எங்க நல்லதுக்காக தான் சொல்லுவீங்க.”

“ஆமாம் சுகந்தா. நாளைக்கு நான் டலஸ் அக்வாரியம் பார்க்க எல்லோரையும் கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன். தமிழ் ஸ்கூல் இருக்கறதுனால சாதனா வரமாட்டாங்க. தமிழ் ஸ்கூல் முடிஞ்சுப்புறம் வீட்டுக்கு வந்து தனியா தான் இருப்பாங்க. நீங்க அப்ப போய் அவங்களை பார்க்கலாம். என்ன சொல்றீங்க?” என்று கேட்டான்.

“நாங்க மதியம் போனா சாப்பிட்டுட்டு நைட்டுதான் வீட்டுக்கு வருவோம். அதுக்குள்ள நீங்க அவங்க கிட்ட பேச வேண்டியதை பேசலாம்.” என்றான் விக்ரம்.

“ஓகே விக்ரம். நான் நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்து அவளை பார்த்து பேசுறேன்.”  என்றான் சுகந்தன்.

 

சாதனா தமிழ் பள்ளியில் இருந்து வீட்டுக்கு தன் காரில் ஏறி புறப்பட்டாள். அவளை பார்த்த  கந்தன். அவனுடைய காரை எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்பாகவே  வேறு வழியாக வந்து காரை ஒரு மறைவில் நிறுத்திவிட்டு வீட்டின் பக்கத்தில் ஒளிந்து இருந்தான்.

சாதனா காரிலிருந்து இறங்கி வந்து கதவை தன்னிடம் இருந்த சாவியை கொண்டு திறந்து உள்ளே சென்றாள். அடுத்த கணம் அவன் அவள் முன்பு வந்தான். அவள் திகைத்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே   இவனும் உள்ளே சென்று கதவை சாத்தி உள்தாள் இட்டான்.

அவள் இரண்டடி பின் வைத்து “நீ எங்க இங்கே வந்த? கதவை எதுக்கு தாப்பா போடுற?” என்று கலவரத்துடன் கேட்டாள்.

“சாது நான் சொல்றதை கொஞ்ச நேரம் அமைதியா கேளு.”

“முடியாது நான் எதுக்கு கேட்கணும்? நான் சொன்ன போது நீ கேட்டியா?” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.

“சரி தப்பு தான். என்னோட தப்பு தான். சாரி என்னை மன்னிச்சுக்கோ.” என்றான்.

“இப்பதான் உனக்கு இந்த அறிவு வந்ததா? ரெண்டு வருஷமா என்ன பண்ணிட்டு இருந்த? வீட்டை விட்டு கிளம்பின அன்னிக்கி நான் ஒழுங்கா வீடு வந்தேனாu) தெரிஞ்சிக்க கூட உனக்கு தோணலையா? இல்லை…..” என்று கோபமாக கேட்டாள் அவள்.

“அப்படி இல்லை. நான் சொல்றதை கேளு.”

“நான் கேட்க மாட்டேன்.” என்று அவள் சொல்லவும்

“நான் சொல்றதை நீ கேட்காத வரைக்கும் நான் இங்கேயிருந்து போக மாட்டேன்.” என்று கதவை மறைத்துக் கொண்டு நின்றான் அவன்.

“இரு உன்னை என்ன பண்றேன் பாரு.” என்று போனை எடுத்தாள்.

“யாருக்கு வேணும்னாலும் கால் பண்ணு. எனக்கு எந்த பயமும் இல்லை.” என்று அதே இடத்தில் சிலை போல நின்றான்.

அவள் யாருக்கும் போன் செய்யாமல் அவனை பார்த்து முறைத்தாள்.

அவன் மார்பின் மீது கை வைத்து அவனை தள்ளினாள்.

ஆனால் அவன் சற்றும் நகரவில்லை. மேலும் ஒரு அடி முன் வைத்தான்.

இதை எதிர்பாராத அவள்  சட்டென்று இரண்டடி பின் வைத்தாள். அப்போது அவள் அணிந்திருந்த ஹீல்ஸ் ஷூ பின் இருந்த டேபிள் மீது இடித்து அவள்  தடுமாறினாள்.

சுகந்தன்அவளை பிடிக்க முயல அவள் அவன் கையை தட்டி விட்டு கீழே விழுந்தாள்.

விழுந்ததில் காலில் அடிபட்டது.

 

வலியினால் “ஆ” என்றாள்.

எழுந்து நிற்க முயன்றாள். அவள் அணிந்திருந்த ஹீல்ஸ் ஷூ ஸ்ட்ராப் பக்கத்தில் இருந்த நாற்காலியின் வேலைப்பாடுகளில் இருந்த இடைவெளியில் மாட்டிக்கொண்டது.

அவள் எடுக்க முயன்றாள்  ஆனால் முடியவில்லை.

அவன் அமர்ந்து அதை பொறுமையாக எடுத்தான்.

அவள் காலில் கீறல் விழுந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

காலிலிருந்து அந்த ஷூவை கழட்டிவிட்டு அவள் தடுத்தும் கேட்காமல் அவளை தூக்கி வந்து சோபாவில் அமர வைத்தான்.

எதிரில் இருந்த டீப்பாயில் அவன் அமர்ந்தான்.

“பாரு காலில் அடிபட்டு இருக்கு. தேவையில்லாமல் ஸ்ட்ரைன் பண்ணாத. ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடு.” என்றவன் அவள் காலை தன் மடியில் வைத்து அவனே சென்று முதலுதவி பெட்டி எடுத்து வந்தான்.

 

அங்கே சில நாட்கள் இருந்ததால் அது எங்கே இருக்கும் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

“முதல் தடவை பார்த்த போது கூட இதே மாதிரி காலில் தான் அடிபட்டது. இப்பவும் இதே இடத்தில் அடியா? அதுக்குதான்  இந்த ஷூவை வாங்கும் போதே நான் வேணாம்னு சொன்னேன். கேட்டியா? அதெல்லாம் பழக்கம் இருக்கிறவங்களுக்கு தான் செட் ஆகும்.”

“நான் அதையெல்லாம் பழகி விட்டேன்.” என்றாள் சாதனா சற்று நிமிர்ந்து.

“அப்புறம் ஏன் இப்போ கீழே  விழுந்த?”

“இப்போ நான் பின்னாடி நடந்தேன். இந்த ஷூவை மாட்டிக்கிட்டு பின்னாடி நடந்து எனக்கு பழக்கம் இல்லை. அதனால விழுந்துட்டேன்.”

“பின்னாடியோ முன்னாடியோ இந்த ஹீல் ஷூவை போட்டுக்கிட்டு நடந்து பழக வேண்டிய அவசியம் உனக்கு கிடையாது.

இதுக்கு மட்டும் இல்லை. தனியா வாழ்வதற்கும் தான் சொல்றேன்.” என்றான்.

அவள் பதில் பேசவில்லை.

shantika sivaganesh

Interested in writing and reading novels

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!