Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 16. 2

 

நாம் 16( 2)

 

    வேந்தனின் மாமா கணேஷ் மற்றும் உறவினர்கள் அனைவரும் வந்த பிறகு.. இன்பன் வேந்தனை அழைக்கச் செல்ல.. சில நிமிடங்களில் வேந்தன் இன்பனுடனும் அவர்களுடன் கதிரவன், திலகன், வினோத்தும் வந்தனர். கீழே ஹாலிற்கு வந்தவுடன் இன்பா அவனை உட்காரச் சொல்ல அவன் திரும்பி பார்த்தான்.



Advertisement

   இன்பா அரசி வரட்டுமே.. பின் சேர்ந்து உட்காருகிறோம். “

   இல்ல மாமா. உங்களிடம் முதலில் ஏதோ பேசி முடிவெடுக்க வேண்டும் சொன்னாங்க. அதான் நீங்க முதலில் வந்திங்க. பேசி முடித்தவுடன் எழில கூப்பிடுவாங்க. ”

   யோசனை முகத்துடன்.. ” என்னிடம் மட்டும் பேச என்ன இருக்கு?. அரசிய வரச்செல்லுங்க. நாங்க சேர்ந்து கேட்டு.. பின் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ” எனக் கூறி உட்காராமல் சற்று தள்ளி.. ஹாலிற்கும் படிக்கட்டிற்கும் இடையில் நின்றுக்கொண்டான்.

Advertisement

   புன்னகையுடன் இன்பா சென்று அருணாச்சலத்திடம் கூற.. அவர் அருகில் இருந்த ரவிந்திரனிடம் கூற.. வேந்தனை ஒரு பார்வை பார்த்து.. சிரிப்புடன்சரிஎன்றுக்கூறி.. பின் இளமதி, சுரபியிடம் கூறி அரசியை அழைத்து வரச் சொன்னார்.

Advertisement

   ‘ அவர்கள் சென்றவுடன் தான் அவன் என்ன சொல்லியிருப்பான்?. என தெரிந்த சிறியவர்கள் மெல்லிய புன்னகையுடனும்.. பெரியவர்களில் சிலர் ஏன்டா இவனை முதலில் அழைத்தோம்?.. என சங்கடத்துடனும்.. சிலர் எழிலரசிக்கு அவன் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து. வேந்தனை கடுப்பும், ஆச்சரியம் கலந்து பார்த்தார்கள். ‘

     ‘ சில நிமிடத்தில் வேந்தனின் அரசியானவள்.. தன் அக்கா, அண்ணி, சத்யா, தர்ஷினியுடனும்.. மனம் முழுவதும் தன்னவனை நினைத்து வந்தவள்.. தன் எண்ணத்திற்கு உரிய தனுவே.. தனக்காக படியின் அருகில் நின்றுயிருந்ததை மகிழ்வுடன்.. தன் தனுவை தலை முதல் பார்க்க ஆரம்பித்தவள்.. பாதியில் தன் முகத்தில் ஆச்சரியம், கண்களில் மின்னலுடனும், பற்கள் அழகாக சிறிய அளவில் தெரியும் அளவிற்கு புன்னகையுடன்.. தன்னவனின் உடை பார்த்துக் கொண்டே அவனின் அருகில் வந்தாள். ‘ 

    தனு மாமா!.. வேட்டி சட்டையில் ஆளு செம்மையா!.. இருக்கிங்க. அப்படியே கன்னத்தைபிடித்து.. ” அவள் கூற வரும்போதே..

Advertisement

   இந்த முயல்குட்டிய.. வெக்கப் புன்னகையுடன்.. ” முயல்குட்டி அங்க பாரு!. நமக்காக எல்லாம் காத்துயிருக்காங்க. வா அங்கு போகலாம். ” என அவன் கூறியபடி தன் வெக்கத்தை மறைத்து நடக்க ஆரம்பிக்க..

   அதன்பின்பு தான்.. அவள் மற்றவர்களை கவனிக்க.. அதன்பின் புன்னகைமுகமாக தன் மன்னவனுடன் வந்தாள்.

   அமர்ந்து இருப்பவர்கள் அனைவரும்.. இவர்களை பார்த்து!.. ‘ என்னடா நடக்குது இங்க?.. எழிலரசி அவன் அருகில் வந்து ஏதோ!.கூற.. அதற்கு வேந்தன் வெக்கப்பட.. என எல்லாம் உல்லாடாவா நடக்குது!.. ‘ என நினைத்தும்.. அவர்களின் ஜோடிப்பொருத்தம் பார்த்து மகிழ்ந்தார்கள்.

   வந்தவர்களை தற்போது எடுத்த முடிவின் படி.. அவர்களுக்கு உடனே உறுதி நிகழ்ச்சியை செய்துவிடலாம் என நினைத்து.. ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இருவரும் அமர வைக்கப்பட்டனர். இருவரும் அமர்ந்தவுடன் தான்.. வீட்டின் அலங்காரத்தை பார்த்தனர்.

    வீட்டின் வாசலில் இருந்து.. வீட்டின்  கீழ்பகுதி முழுவதும் ரோஜா, துளசி இவற்றின் சரங்கள், அவற்றின் நடுவே சம்மங்கி பூ சரங்களின் நுனியில் தாமரை ஒன்று வைத்து.. அனைத்து  பூச்சரங்களை பெரியதும், சிறியதும்மாக தொங்கவிட்டும், பின்னர் இருவரும் அமரும் இடத்திற்கு பின்னால்..  வெள்ளை, மஞ்சள்நிற சம்மந்தி.. அதன் நுனியில் மஞ்சள் ரோஜா இவற்றில் உருவான சிறிய சரங்களை தென்னை ஓலையின் மேல் வைத்து பின்பகுதியை அழகாக அலங்கரித்திருந்தனர். ‘

    இருவரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்க.. பதிலுக்கு அவர்களும் புன்னகை புரிந்த பின்.. இருவர் ஒன்றாக அமரக்கூடிய பலகையில்  வேந்தனும், அவனின் வலப்புறம் எழிலரசியும் அமர்ந்தாள். அதன்பின் இரு குடும்பங்களுக்கும் வரனாக வர.. ஒருவகையில் காரணமாக இருந்த.. நட்ராஜ் என்பவர் மீண்டும் ஒருமுறை.. அருணாச்சலம், ரவிந்திரனை பார்த்து..

    வேந்தனை ஒரு பார்வை பார்த்து.. ” ரவிந்திரன் உங்களுக்கு அருணாச்சலம், லட்சுமியின் மகள் எழிலரசியை உங்கள் மகன் வேந்தனுக்கு மணமுடிக்க சம்மதமா?. ”

    வேந்தனை பார்க்க.. அவனும் அர்த்தம் புரிந்து.. தன் அரசியை பார்த்து.. யாரும் அறியா வண்ணம் மென்மையாக கைபிடித்து.. பின் அவரை பார்த்து புன்னகையுடன்.. ” சம்மதம் அப்பா. “

    ரவி புன்னகையுடன்.. ” அருணாச்சலம், லட்சுமியின் மகள் எழிலரசியை எங்கள் மகன் வேந்தனுக்கு மணம் முடிக்க சம்மதம். ”

   பிறகு நட்ராஜ் அரசியை பார்த்து.. ” அருணாச்சலம்.. ரவிந்திரன், சித்ரா தம்பதியரின் மகன் வேந்தனை உங்கள் மகள் எழிலரசிக்கு மணமுடிக்க சம்மதமா?. ”

   அருணாச்சலமும் அரசியை பார்க்க.. அவள் தன்னவனை பார்த்து.. லைட்டா கண்ணடித்துவிட்டு.. பின் அப்பாவை பார்த்து புன்னகையுடன்.. ” சம்மதம் அப்பா. “

    அவள் கண்ணடித்தை பார்த்து அருகில் இருந்த வேந்தனை விட.. திலகன், வினோத், தீபிகா , சத்யாஅடிப்பாவி!. இவ வேந்தனுக்கு மேல இருப்பாபோல!.  என எண்ண வைத்தாள்.

   பின் அருணாச்சலமும்.. ” ரவிந்திரன், சித்ரா தம்பதியரின் மகன் வேந்தனை எங்கள் மகள் எழிலரசிக்கு மணமுடிக்க சம்மதம்

   முதலில் ரவிந்திரன், சித்ரா இருவரும்.. தட்டில் வாழைப்பழம், மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, சந்தனம், குங்குமம், நவதானியங்களும் நாணயங்களும் கொண்ட மஞ்சள் தடவிய முடிப்பு, ஒரு நகை பெட்டி என அனைத்து மங்கள பொருட்களும் அடங்கிய தட்டை அருணாச்சலம், லட்சுமி தம்பதியரிடம் கொடுக்க..

    அதனை தன் அண்ணா, அண்ணியுடன் நால்வராக வாங்கிக் கொண்டனர்.

   பின் அருணாச்சலம், லட்சுமி இருவரும்.. தட்டில் வாழைப்பழம், மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, சந்தனம், குங்குமம், நவதானியங்களும் நாணயங்களும் கொண்ட மஞ்சள் தடவிய முடிப்பு, ஒரு சிறிய நகைபெட்டியுடன் என அனைத்து மங்கள பொருட்களும் அடங்கிய தட்டை ரவிந்திரன், சித்ரா தம்பதியரிடம் கொடுக்க..

    அவர்களும் அதனை தன் அண்ணா, அண்ணியுடன் நால்வராக வாங்கிக் கொண்டனர்.

   அதன்பின்னர் வேந்தன், எழிலரசியின் முன்னால் சந்தனம், குங்குமம், பன்னிர்தெளிப்பான், சிறிது பலவண்ணவகையான ரோஜா இதழ்கள் அடங்கிய தட்டு வைக்கப்பட..

   சில நிமிடத்தில் அங்கு வேந்தனின் பாட்டிகள் வேதவள்ளியும், மீனாட்சியை புன்னகையுடன்அவர்களிடம் வந்தார்கள்.

   வேதா பாட்டிஎன்ன பேரா ஆரம்பிக்கலாமா?.. ”

   புன்னகையுடன்.. ” ஆரம்பிக்கலாம் பாட்டி.. ஆனா நீங்க வைப்பதற்கு முன்.. எனக்கு அரசி முதலிலும்.. பிறகு நான் அவளிற்கு சந்தனம் வைக்க வேண்டும். பின் நீங்க பெரியவங்க பண்ணுங்களே. ” என தயவுசெய்து என்பது போல கேட்க..

    தன் செல்லப்பேரனின் ஆசையை நிராகரிப்பாரா?. அந்த முதியவள். இருந்தாலும் தன் அருகில்இருந்த தன் தோழி மற்றும் சம்பந்தியான  மீனாட்சியை  பார்க்க அவரும் புன்னகை புரிந்து சம்மதம் தெரிவிக்க..

   வேதா பாட்டி புன்னகையுடன்.. ” ம்.. நடத்து.. நடத்து. ” என அரசியை பார்த்துக் கூற..

   ‘ தன்னவன் அவனின் பாட்டியிடம் கேட்டதை கேட்டு.. என்ன?.. என்ன தனு செல்லம் கேட்டான். விநாயகா. ஆனந்தம்!. ஆனந்தம் மட்டுமே அவள் உடல்முழுவதும். ‘ எப்படிடா?. நான் ஆசையா!..  தனியா செய்ய நினைத்து கேட்டதை.. இப்படி எல்லோர் முன்பாக.. யார் எதுவும் கூறமுடியாத படி.. சடங்கை நாமே செய்யும் வாய்ப்பு போலவும்.. என் ஆசையை நிறைவேற்றியது போல என அழகாக செய்ய எவ்வாறு உனக்கு தோன்றியது!.. என் தனு செல்லம்!.. ‘ என நினைத்து அவன் முகத்தை பார்க்க..

    உன் தனுமாமா கன்னத்தை தடவ நான் அனுமதி அளிக்கிறேன் முயல்குட்டி.. ரெடியா?.. என்னை தொட்டு தடவ?.. ” என கடைசி வார்த்தையை கள்ளப்புன்னகையுடன் அழுத்திக் கேட்க..

    ‘ அவனின் அழுத்ததில் வந்தாள்!.. அவளினுள் நாணம் என்பவள். அவள் வந்து நுழைந்தாலும்!.. இந்த வாய்ப்பை அழகாக பயன்படுத்த எண்ணி.. யாரையும் பார்க்கவில்லை.. தன்னவன் மட்டுமே தன்முன்னால் இருக்கிறான். ‘ 

    ” ம்.. ” என தலை அசைக்க..

    வேதா பாட்டி.. அவளின் தலையசைப்பில்.. தட்டை அவளிடம் மனமுவந்து காண்பிக்க..

    ‘ பார்த்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை!.. அவர்களின் உரையாடல் மெல்லிய குரலில் இருந்தது.. பின் பாட்டி அரசியிடம் தட்டை நீட்ட பெரியவர்கள்!.. புரியாமல் பார்க்க.. இளையவர்களோ!. அரசியின் வேந்தனாக இன்று இருப்பனை தெரியுமாகையால்.. ஏதோ புரிவதுபோல இருந்தது. பின் என்னதான் செய்கிறார்?..  அனைவரும் பார்த்தனர். ‘

    ‘ எழிலரசி.. தன் இருகை விரல்களை ஒன்றன்பின் ஒன்றாக சந்தனத்தில் கைவைத்து எடுத்து.. அவனின் கன்னத்தின் அருகில் கொண்டு சென்று.. கண்களில் மெல்லிய கலங்கல்.. முகம்கொள்ள மகிழ்ச்சியுடனும்!.. அவன் கன்னத்தை சந்தனம் கொண்டு மேலிருந்து கீழாக மென்மையாக தடவி வந்தவள்.. முடிக்கும் தருவாயில் அழுத்திமாக கிள்ளி..  லவ் யூ தனு மாமா!.. “  தன் வார்த்தையில் காதல் ததும்ப வேந்தனிற்கு மட்டும் கேட்டும் மென்ஒலியில் கூறினாள் அவனின் அரசி. ‘

    அதனை கேட்ட அவள் மன்னவனோ..  அந்த உலகத்தில் இல்லை. தன்னவள் முயல்குட்டியிடமிருந்து.. தனக்கான காதல்!. வெளிப்பாடான வார்த்தை.. இந்த இடத்தில் கிடைக்கும் என வேந்தன் எதிர்பார்க்கவில்லை. அதனால் அவன் அதிர்ச்சியில் வாயடைத்து!.. கண் இமைக்க மறந்து அவளை ஒரு நொடி பார்த்துயிருந்தான். ‘ 

     ‘ மெல்லிய சிரிப்பு மட்டுமே வெளிப்படுத்தி.. பின்.. அவனும் சந்தனத்தை எடுத்து.. புன்னகைமுகமாக.. தன்அரசியை கண்ணில் காதலுடன்.. அவனின் மிக மிகவும் அவளிடத்தில் பிடித்தமான கன்னத்தில்.. மென்மையிலும் மென்மையாக தடவினான். ‘

    அரசிக்கு தன்னவனின் மேல் இருந்த காதலை வெளிப்படுத்திய குதுகலத்தில் அவனை பார்க்க.. தன்னையே மெய்மறந்து.. கண்ணிக்காமல் பார்ப்பதை பார்த்து.. அவனின் கண்களில் வழியாக அவனுள் சென்று அவனுடன் கலந்து.. அவன் நடப்பிற்கு வரும்போது.. அவளும் வந்தாள். அவனின் மென்புன்னகை பார்த்தும் அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று புரிந்தது. ‘

   ‘  பின் அவன் மெளன மொழியாகி தன் காதலின் அன்பை கண்ணிலும்.. தான் எப்போதும் உன்னையும்!.. பெண்மையை ரசிப்பவன்!.. அதனை மென்மையிலும் மென்மையாக உன்னை கையாலுபவன் நான்.. என்பதை செயலின் மூலம் அவன் உணர்த்தி.. ‘ லவ் யூ முயல்குட்டி!.. ‘ என அவனின் பார்வை அவளுக்கு உணர்த்தியதில்.. அவளும் அவனின் மென்மையான ஸ்பரித்தால் ஒரு நொடி கட்டுண்டு பின் அவளும் அவனிற்கு மென்புன்னகை மட்டுமே புரிந்தாள். ‘

   ‘ இவர்களை பார்த்தவர்களுக்கு வார்த்தைகள் இல்லை. இருவரையும் இன்று பார்த்ததில் இருந்தே.. அவர்கள் செய்யும் செயல், பேச்சு, எண்ணம் அனைத்திலும்.. அவர்களின் மேல் புதிதான உணர்வையும், தங்களுக்கே புதினான ஒன்றை அறிமுகப் படுத்துகின்றனர். ‘

    ‘ பின் இருவரும் ஒருவரை ஒருவர் தலைகுனிந்து.. தங்களை நிலைப்படுத்திக் கொண்டு.. ஒருசேர வேதா பாட்டிய பார்த்தனர். ‘

   ‘ அவருக்கு அவர்களின் செயலை பார்த்து.. இந்த வயதிலும் வெக்கம் வந்தது.. தன் வாழ்நாளில் இப்படி ஒரு ஜோடியை பார்த்ததாக நியாபகம் இல்லை. அவ்வளவு அழகாக..தன் கண்களின் மூலம் தங்களின் உணர்வுகளை காண்பித்தனர். இருவரும் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் தங்களின்அன்பை வெளிப்படுத்தியும்.. ஒருவரை ஒருவர் புரிந்து.. அதன்வழி தங்கள் வாழ்க்கை நடத்த வேண்டும் என கடவுளை வேண்டி.. ‘

   அவர்களை பார்த்து..” இப்ப நான் ஆரம்பிக்கவா?.. ”

    சுயநினைவிற்கு வந்தவர்கள்.. பின் வேந்தன் பதில் கூறச் செல்லும்போது.. அரசி அவனிடம் ஏதோ கூறினாள். அதனை பார்த்த பாட்டி..

   டேய் இப்ப என் பேத்தி என்ன சொல்கிறாள்?.. என்ன வேண்டுமாம்?.. நேரடியாக என்னிடமே கேட்க வேண்டியது தானே?.. ”

   அரசியை பார்த்து புன்னகையுடன்.. ” உங்க பேத்திக்கு.. ரொம்ப கூச்ச சுபாவம் பாட்டி. அதான் என்னிடம் கூறினாள்.. ” என அவன் கூறும் போது..

    பாட்டி அரசியைஅப்படியா!.. ‘ என்பது போல பார்க்க.. அவளும் புன்னகையை கட்டுப்படுத்திக்கொண்டுஆம்!.. ‘ என தலையாட்ட.. வேந்தன் தன்னவளின் தலையாட்டலில் சற்று வெளிப்படையான புன்னகையை வெளிப்படுத்தியும்..

   சற்று முன் கண்ணடித்ததை பார்த்தவர்களில் திலகன் புன்னகையுடன்.. ” அப்படியா எழில்?.. நீ பேச கூச்சப்படுவியா?.. இது எங்களுக்கு இப்பதானே தெரியுது. சரி.. வேந்தா எழிலரசி உன்கிட்ட என்ன கேட்டாங்க?. “

    வேந்தன் பாட்டியை பார்த்தும்.. பின்னால் அமர்ந்துயிருந்த மற்றவர்களை பார்த்தும்.. ” பாட்டி உங்க பேத்திக்கு நீங்க மட்டும் எங்களுக்கு நலுங்கு வைக்காமா.. தாத்தாவுடன் சேர்ந்து வைத்து.. எங்களை ஆசிர்வாதம் செய்ய வேண்டுமாம். ” என தன்னவளின் விருப்பத்தை.. அவளை மெச்சும் பார்வையை செலுத்திக் கூறினான்.

   ‘ பேத்தியின் விருப்பத்தை கேட்ட அவரும்.. மற்றவர்களும் ம்.. மகிழ்வுடன் எண்ணினர். தங்களுக்கு இவ்வளவு காலம் வரை குழந்தை செல்வங்கள், இன்பம், துன்பம், கருத்து வேறுபாடுகள் சிலபல வந்தாலும் ஒற்றுமையாக நன்றாக  வாழ்ந்தவர்களின் ஆசிர்வாதம்.. தம்பதியர்களாய் சேர்ந்து நின்று எங்களுக்கு நலுங்கு வைத்து.. ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என எண்ணி.. அரசி கேட்டதை நினைத்து பூரித்துப் போனார்கள் பெரியவர்கள். ‘

   வேதா பாட்டி  அரசி நாங்க இரண்டு பேர் மட்டும் இல்ல.. ” அவர் கேட்க வருவது புரிந்த எழிலரசி..

   பாட்டி.. எங்களுக்கு நலுங்கு வைக்க வருபவர்கள் எல்லோரும் தம்பதியரா வரனும். கூடவே தம்பதியரா வாழ்ந்து கணவன், மனைவி இறந்தவர்களும்.. எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ண விருப்பப்பட்டா எதையும், யாரையும் பற்றி கவலைப்படாமா.. அவங்க வந்து மனசாராச எங்களைவாழ்த்தினா இன்னும் நன்றாக இருக்கும். எங்களுக்கு அவங்க ஆசிர்வாதமும் வேண்டும். ” என வேந்தனை பார்த்துக் கொண்டே எழிலரசி கூற..

   புன்னகையுடன்உனக்கு  அவங்க ஆசிர்வாதம் வேண்டும் என தோன்றினால்.. எனக்கு ஒன்னும் இல்ல டா. எனக்கு ரொம்ப சந்தோஷம் முயல்குட்டி. ” அவளிடம் சாய்ந்து கூற..

   அவளும்ம்எனக் கூறி பாட்டியை பார்க்க.. அங்கு அவரின் கணவர் ஜெயபாலன் புன்னகைமுகத்துடன் நின்றிருந்தார்.

    பின் வேதவள்ளிஜெயபாலன், மீனாட்சிசுந்தரம் வேந்தனின் தாய்தந்தையரின் பெற்றோர்கள்.

   பின் எழிலரசியின் தாய்தந்தையரின் பெற்றோர்கள் ரெங்கநாயகிவிநாயகம், விசாலாட்சிவேல்மூர்த்தி.

   பின் இருவரின் மாமாக்கள், அத்தைகள் வந்து ஆசிர்வதிக்க.

   பின் இருவரின் பெற்றோர் வர.. அவர்களுக்கு சந்தனம், குங்குமம் வைத்து.. பூத்துவி ஆசர்வதித்து.. அவர்களின் மகிழ்ச்சி சொற்களை தங்கள் பிள்ளைக்கு கூறி.. பின் வேந்தனின் அம்மா எழிலரசிக்கு அழகான தங்க ஆன்டிக் வகையான நெக்லஸை அணிவித்தார்.

   அருணாச்சலம் வேந்தனிற்கு கைசெயினை அணிவித்தார்.

    பின் நலுங்கை முடிக்கலாமா?.. என நினைக்கையில் அருகில் இருந்தவர்கள்.. இளையவர்கள், நண்பர்கள் என அடுத்து பதினைந்து பேர் வந்து.. அவர்களின் கன்னங்களை சந்தனத்தால் அலங்கரித்துயிருந்தனர்.. கூடவே அவர்களின் மகிழ்ச்சியையும் அவர்களுக்கு பரிசாக கொடுத்தனர். பின் ஆரத்தி எடுத்து திலகமிட்டு சடங்கை முடிவுசெய்தனர்.

    அனைவரது ஆசிர்வாதம், பரிசு, மகிழ்ச்சி, சிலரின் சொல்ல முடியாத வெறுப்பு அனைத்தையும்.. இன்முகத்துடன் ஏற்று..

    ‘ தங்களின் வாழ்க்கை துணை.. இவர்கள் என்று இனி அனைவருக்கும் உரிமையுடன் தெரியப்படுத்தலாம் என்ற நினைப்புடனும், துள்ளளுடனும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துபின் அனைவர் முன்பும் விழுந்து வணங்கி.. உறுதி நிகழ்ச்சியை  முழுமையடையச் செய்தனர். ‘

    ‘ அவர்களை பூஜை அறைக்கு அழைத்துச்செல்ல.. அங்கு வைக்கப்பட்டுயிருந்த விளக்கை இருவருமாக கைபிடித்துக் கொண்டே ஏற்றி வைத்தனர். இதை பார்த்தவர்கள் அனைவரிடத்திலும் இன்முக புன்னகை மட்டுமே. ‘

     சிலவற்றை கலந்து பேச வேண்டும் என்பதற்காக.. உடனே சொல்ல வேண்டாம் என அவர்களை சிறிது நேரம் அமர வைத்தனர். அமர்ந்தவுடன் அவர்களுக்கு இனிப்பான ஜவ்வரிசி பாயாசமும், தண்ணீர் கொடுக்கப்பட.. அதனை சாப்பிட்டு கொண்டுயிருக்க.. தன்னவளிடம் பார்க்க.. அவளும்பார்க்க..

    மெல்லிய புன்னகையுடன்..  முயல்குட்டி!.. நான் இப்ப எல்லோரிடமும் சம்மதம் வாங்கி.. அவ எனக்கு மட்டுமேயான முயல்குட்டினு.. ரைட்ஸ் வாங்கிடேன். அதுக்கு மாமாக்கு என்ன தரப்போறிங்க. ”

    என்ன வேண்டுமாம்.. என் தனு மாமாவிற்கு?.. “

    என்ன வேண்டும் சொன்னாலும்?.. அதை நிறைவேற்றுவிங்களா?.. “

    ம் தனு!.. நீங்க என்னால முடியும் என்ற.. ஒன்னை முடிவு செய்துவிட்டு.. அதுவும் எனக்கு விருப்பமான ஒன்றைதான் கேட்பிங்க. அதனால நான் எந்த யோசனையும் இல்லாம.. நீங்க என்ன சொன்னாலும் நான் செய்வேன்!.. ” என புன்னகையுடன் கூற.

   உன் தனு மாமா மேல அவ்வளவு நம்பிக்கையா முயல்குட்டி?.. “

   ம்.. ”  சிறிது மட்டுமே இருந்த.. தன்னுடையதை அவனிடம் கொடுத்தும்.. அவனின் சிறிது மட்டுமே சாப்பிட்டு வைத்துயிருந்த.. பாயாசத்தை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே கூறினாள். 

   முயல்குட்டி.. என்மேல ரொம்ப நம்பிக்கை வைக்காத!.. நான் நல்லா பையானவெல்லாம் நடந்துக் கொள்ளமாட்டேன். பார்த்துக்கோ. ”

   ம்.. நான் ரொம்பபப நல்ல பொண்ணு நீங்க என்னைய நம்பும் போது.. நான் நம்பமாட்டேனா?. என் தனுனு மாமா!.. ” கண்ணடித்து கூற..

   புன்னகையுடன்.. ” ம்.. இது நான் யோசிக்க வேண்டிய விஷயம்தான். பரவாயில்ல.. நான் சொல்வதை நீ மறுக்காமல் செய்தால் போதும். சரியா. “

    ம்.. சரி. ஆனா இப்ப நான் கூறுவதை மறுக்காம செய்விங்களா?.. “

    மெல்லிய அடங்கபட்ட புன்னகையுடன்.. ” என்ன ஒரு கப் பாயசம் நான் கேட்டு.. உன்கிட்ட தரவேண்டும் அதானே. வரும் இப்போ. ஏற்கனவே சொல்லிட்டேன். “

    தனு.. தனு செல்லம்!.. எப்படி கண்டுபிடிச்சிங்க?.. “

    என் முயல்குட்டி முகத்தை பார்த்தாளோ!. எனக்கு தெரியும்.. என்னைய பக்கத்தில் வைத்துக்கொண்டு.. நீ சாப்பிடுவதை பார்த்தா தெரியாமா இருக்குமா?.. ஆனா என்ன இந்த ஸ்பூன் மேலதான்.. லைட்டா பொறாமையா இருக்கு. ” என ஏக்கமாக கூற..

    புன்னகையுடன்.. ” வேண்ணா.. ஒரே ஸ்பூனில் சாப்பிடுவோமா?.. “

    கேடி முயல்குட்டி.. என்னைய அடிவாங்கமா..  போக விடமாட்டா போல.. ஏற்கனவே என் கப்பாயசத்தை.. நீ என்கிட்ட ஒன்னும் கேட்காம.. அசால்ட்டா!.. நீயா வாங்கி சாப்பிட்டுக் கொண்டுயிருப்பதை பார்த்தே.. எல்லோரும் அதிசயத்தை பார்த்துபோல பார்த்தாங்க. ஓரே ஸ்பூன். அப்புறம் என்னைய உன் பக்கத்தில் உட்காரவே விடமாங்க. ‘

    ம்.. சாப்பிடலாம்.. ஆனா இப்ப இல்ல. ” அவர்கள் பேசிக் கொண்டுயிருந்த போது.. அவர்களிடம் வந்த இன்பா.

   மாமா, எழில்.. நீங்க முகத்தை சுத்தப்படுத்தி வாங்க. உங்களிடம் அப்பா, மாமா பேசவேண்டுமாம். ”

   சரி இன்பா. ” தன்னவளிடம் திரும்பி.. ” போய்ட்டு வா அரசிஎனக் கூற.. எழிலரசியும் தலையை அசைத்து சென்றவுடன்.. 

   இன்பா எனக்கு உங்க உதவி தேவை. ”

    என்ன உதவினு மட்டும் சொல்லுங்க.. நான் கண்டிப்பா பண்ணுறேன். “

    என்னனு கேட்டு.. பிறகு சொல்லுங்க. “

    நீங்க கண்டிப்பா.. எழிலுக்காக.. இல்ல எழில் விரும்பியதை தான் செய்ய கேட்பிங்க. அதனால்கேட்டு சொல்லனு.. என்ற அவசியமே இல்ல மாமா. “

    புன்னகையுடன்.. வேந்தன் தனக்கு வேண்டிய உதவியை கேட்க. வேந்தன் கூறியதை கேட்டபின் இன்பா புன்னகையுடன்.. ” மாமா வரப்போற சாதகம், பாதகம் எல்லாம் நல்லா யோசித்து தானே முடிவு எடுத்துயிருக்கிங்க.?.. அதில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கா?.. “

    ம்.. மாற்றம் வர வாய்ப்பே இல்ல.. இன்பா. ”

    அரசி பளிச்சென்ற முகம்மா அங்கு வந்து நிற்க.. வந்தவள் தனுவை பார்க்க.. அவனும் தன்முகத்தை சரிசெய்து நின்றிருந்தான். பின் மூவரும்.. அனைவரில் சிலர், குழந்தைகள் சாப்பிட சென்றுயிருக்க.. மீதம் அனைவரும் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் இளையவர்கள் அருகில் அமர்ந்தனர்.

   வேந்தா

    ம்.. சொல்லுங்க அப்பா. “

    ம்.. வேந்தா!. அடுத்த மாதம் கண்ணன், தீபா இரண்டாவது குழந்தைக்கு வளைகாப்பு வைக்கலாம் இருந்தாங்க. இப்ப நாம்ம நம்ம இரு குடும்பத்தினரின் நெருக்கிய சொந்தகார்களை மட்டும்  அழைத்து உறுதி பண்ணியாச்சு. முதல் குழந்தைக்கு இங்க பண்ண முடிய சூழ்நிலை இல்லாது இருந்ததால்.. இப்ப இந்த குழந்தைக்கு நல்லா பெரிதா பண்ண முடிவு எடுத்துயிருந்தது. அப்ப எப்படியும் எல்லா உறவினர்கள், இன்னும் தெரிந்தவர்களை அழைப்போம். “

    ” அதனால அன்னைக்கே.. வளைப்புகாப்பு உடன்.. உங்களுக்கு நிச்சியம் வைக்கலாம் என முடிவு பண்ணியிருக்கு. ”

    ம்.. அடுத்தமாதம் தேதி என்னப்பா ?.. “

    ரவிந்திரன் தேதியை கூற.. அதனை கேட்ட வேந்தன்.. பின் அரசியிடம் ஏதோ கேட்க.. அவள் இன்பாவிடம் கேட்க.. பின் அரசி வேந்தனிடம் பதில் கூற. வேந்தன் புன்னகையுடன்.. ” ம்.. சரிங்கப்பா.. அன்னைக்கே நிச்சயம் வைத்துக் கொள்ளலாம். “

    ‘ எல்லோருக்கும் என்ன அவன் எழிலரியிடம் கேட்க.. அவள் அண்ணாவிடம் கேட்டு பதில் கூற.. அதன்பிறகு வேந்தன் முடிவு கூறுகிறான் என்று குழப்பத்தில் இருக்க.. கேள்வி கேட்டபட்ட அரசிதான்.. ஒருநிமிடம் தனு தனு.. திட்டிக் கொண்டுயிருந்தாள். ‘ 

    ‘ வேந்தன் அவளிடம் மன்திலி பிரியட்ஸ் நாள் இல்லைதானே?. ‘ என்று உறுதிப்படுத்திக் கொண்டான்அவளிற்கு இன்பா தான் அவளை இன்னமும் பார்த்துக் கொண்டுயிருப்பதால்.. சட்டென்று ஞாபகம் வரவில்லை.. அதனால் இன்பாவிடம் கேட்டு பதில் கூற.. அவன் புன்னகையுடன் திருப்பியதால் வந்த திட்டு.. இன்பா வேந்தனிடம் கூறியது பற்றி.. அவளிற்கு தெரியாது இல்லையா. அவன் வேறு ஒன்றை நினைத்து சிரிக்க.. அவள்முன்பே கேட்டுயிருக்கலாம்என திட்டிக் கொண்டுயிருந்தால்.

    ரவி புன்னகையுடன்ம்.. சரி வேந்தா. பிறகு கல்யாணத்திற்கு  நிச்சியம் முடித்து இருமாதம் கழித்து ஞாயிறு கிழமைகளில் வரும் மூனுதேதி கொடுத்துயிருக்காங்க. “

   சாமியின் முன் வைத்து இருந்த..  கல்யாணதேதியை குறித்து எழுதி கொடுக்கப்பட்ட தாளை கொடுத்தார். தேதியை பார்த்த வேந்தன்.. எந்த யோசனையும் இன்றி..  அப்பா மூன்றாவதா கொடுத்துயிருக்கும் தேதியை முடிவு செய்திடுங்கப்பா. ”

    சில குரல்கள் அதிர்வுடன்.. ” என்ன மூன்றாவது தேதியா?.. ” என சற்று சத்தமாக கேட்க..

    ‘ எதற்கு இந்த அதிர்வு?.. யார்டா அது?.. எனப் பார்த்தார்கள். ‘

     ‘ சற்று அசட்டுப் புன்னகையுடன் இளையவர்களில் பாதிபோர் இருக்க.. ‘

   ராகவன் மாமா.. ” அங்க என்னம்மா சத்தம்?.. அதுக் கூடவே எதற்கு அதிர்ச்சி?.. அதுவும் உங்களுக்கு எதுக்கு அதிர்ச்சி?.. வேந்தன் சொன்ன தேதியை கேட்டு.. அதனால் வந்த அதிர்ச்சியா?.. ” என அவர் மனதில் இருந்த அதே கேள்வியும் கேட்டு.. பின் அவரே பதிலும் கூற..

    சிரிப்புடன் யோகாஆமாம் மாமா.. நாங்க நினைத்தோம்!.. வேந்தன் நிச்சியம் முடிந்த பின் வரும் முதல்தேதிய முடிவு செய்வானு. அவனை உறுதியா நம்பி.. நாங்க பிளான் போட்டோம்அவன் மாற்றிச் சொன்னவுடன் அதனால் வந்த அதிர்ச்சிதான் மாமா. ”

   புன்னகையுடன் வேந்தன் மனதினுள்.. அக்கா அன்னைக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு எல்லாருக்கும் இருக்குக்கா. இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்கிறேன் என நினைத்து!.. பின் தன்அப்பாவை பார்த்தான். ‘

    அப்பா வேறு ஏதாவது சொல்ல வேண்டும் மா?.. “

    இப்போதைக்கு ஒன்னும் இல்ல வேந்தா. “

    ரவிந்திரன் வேறு ஒன்றை இல்லை எனக் கூறியவுடன்.. சரி தேதி கூறிவிட்டார்கள் பின் நமக்கு என்ன வேலை?.. என சாப்பிட்டால் வீட்டிற்கு கிளம்பலாம் என நினைத்து.. வேந்தனின் மாமா கணேஷ்,  எழிலின் அத்தை, மாமாக்கள், சித்தி, சித்தப்பா, அம்மாவின் அண்ணா குடும்பம் சாப்பிட எழுந்தவர்களை.. சாப்பாடு அனைத்தும் வேந்தனின் உணவகத்தில் இருந்து வந்தாலும்.. அனைவரையும் கவனிக்கும் பொறுப்பை எழிலின் குடும்பத்தில் அண்ணா அமுதன் ஏற்க.. எழுந்த அனைவரையும் அழைத்துச் சென்றான்.. முக்கிய பேச்சுக்கள் நடைப்பெறும் போது இருக்க நினைத்தாலும்.. அதில் அவனின் மனைவியின் குடும்பம் இருக்கிறார்கள் என்ற கூடுதல் அக்கறையால் சென்றான்.

    அவர்களை பார்த்துயிருந்தவன்.. மற்றவர்களை பார்க்க.. ஏதோ கூறப்போகிறான்.. இங்கு ஒரு இனிமையான பஞ்சாயத்தை பார்க்கப் போகிறோம் என இளையவர்கள் நக்கல் பார்வையை அவன்மீது செலுத்த.. அவன்ஆமாம்என்பது போல பார்த்து.. பின் தங்கள் இருவரின் அம்மாக்களை பார்த்து..

   

   

   

   

   

    

   

   

    

    

   

   

   

    

   

   

    

    

    

   

    

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!