Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 17. 1

 

நாம்17 (1)

  

    எழிலரசிவேந்தனின் உறுதி நிகழ்ச்சி முடிந்து.. முதலில் வேந்தனின் மாமா கணேஷ், அத்தை சுமதி, அத்தை எழிலின் அத்தையும், மேகா கிளம்ப தயாரானார்கள். சாப்பிட்டு முடித்து வந்த போதுதான்.. அனைவரின் ஓஓஓ.. சத்தம் கேட்டதை என்னவென்று!. பார்க்க.. வேந்தன் நன்றி கூறியும்.. புன்னகைமுகமாக ஐவரையும் பாசத்துடன் அணைத்து.. பின் எழிலரசியை தன் வலதுபக்கத்தில் அணைத்து விடுவித்துபின் புகைப்படம் எடுப்பத்தை.. அவர்கள் அருகில் வரமால் பார்த்துயிருந்தார்கள்.



Advertisement

    அதில் அவர்களுக்கு உணர்த்தியது இதுதான்அவர்களை வெறுப்படைய செய்யும் செயல் ஏதோ?. நடந்தால்.. வந்த சத்தம் மற்றும் ஆனந்தம் என்று.

   கணேஷிற்கோ.. காலையிலிருந்து தான் ஒன்று நினைக்க.. இந்நேரம் வரை நடப்பது வேறாகாகஇருக்க.. அந்த எரிச்சலில் அங்கு செல்லப்பிடிக்காமல் தன் மனைவிடம்தலைவலி என்று வெளியில் காற்றாட நிற்பதாககூறி சென்றுவிட.. ‘ சரி சரிஎன சுமதி தன் அண்ணிகளுடன் அவர்களின் ஆனந்தத்தில் பங்கேற்க சென்றுவிட்டார். மற்ற மூவரும் எல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என்று எண்ணியபடியே.. என்ன விஷயம் அறிய வேண்டி.. வெளியே புன்னகை முகமாக சென்று.. கேட்டு.. ‘ தாங்க முடியலடாஎன்று கிளம்பி விட்டனர்.

   பின் மற்றவர்கள் மகிழ்வுடன் சாப்பிட்டு முடித்துவேந்தனின் குடும்பத்தில்.. அங்குயிருந்தே வினோ திருச்சிக்கும், ராகவன் குடும்பத்தினருடன் கமலேஷ் குடும்பமும் கிளப்பினர். பின் வேந்தன் குடும்பமும், திலகன் குடும்பமும், வினோத்தும் கிளம்ப தயாராக.. திலகன், தீபிகா, வினோத், சுரபி, ஆர்த்தி, இளமதி, சத்யா, தர்ஷினி, கதிரவன் மற்றும் சில பெரியவர்கள் ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டுயிருந்தார்கள்.

Advertisement

    எழிலரசி வேந்தன் கிளம்புவதால்.. யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் கட்டிபிடித்து அழக்கூட வாய்ப்பு உள்ளது.. இல்லையெனில் அனைவர்முன் அழுவாளோ என வருந்தினார்கள். அங்கு நடந்ததோ வேறு.’

Advertisement

     முகத்தில் புன்னகை தவழ அனைவரையும்.. கூடவே தன்னவன் தனுவையும் வழி அனுப்பி வைத்தாள் எழிலரசி.

      அவள் புன்னகை முகமாக வேந்தனை அனுப்பவதை பார்த்து.. ஏதாவது கேடி வேலை ஆரம்பித்து விட்டானா வேந்தன்?. என எண்ணிய படியே!.. அவனுடன் சிலர் கிளம்ப.. சிலர் சிறிதுநேரத்தில் கிளம்பினர்.

    நலம் விரும்பியவர்களின் எண்ணத்தை பொய்யாக்கமல் அவர்களின் எண்ணத்தின் நாயகன்!.. தன் முயல்குட்டியின் தனுமாமா!.. தன்னவளின் வீட்டின் முன் தன் பைக்குடன் வந்து நின்றான்.

Advertisement

    தன்னவளை, தன் முயல்குட்டியை.. உரிமையாக்கிக் கொண்டேன் என்ற சந்தோஷத்தை கொண்டாட.. மற்றும் தன்னவளின் விரும்பம் ஒன்றை நிறைவேற்ற 10மணிக்கு வீட்டின் முன் நிற்பேன்.. அப்போது நாம் பார்க்கலாம் அதுவரை இந்த உடையிலேயே காத்துயிரு என தன் மன்னவன் உறுதியளித்துயிருந்தான். ‘

    அவன் நின்ற சில நிமிடத்தில்.. அரசியும், இன்பாவும் புன்னகையுடன் பைகில் சாய்ந்து இருந்தவனை நோக்கி வந்தார்கள்.

    எழிலரசிஎதற்காக இப்போது வருகிறேன் என்றான்?.. ‘ என எண்ணிக் கொண்டுயிருந்தவள்.. தன்னை போல உறுதி நிகழ்ச்சியில் அணிந்த அதே சட்டை மற்றும் வண்டி ஓட்டுவதற்கு வசதியாக பேன்ட்டில் இருக்கும் தன்னவனை பார்த்தாள். ‘

   எழிலரசி தன் அருகில் வந்தவுடன்.. அந்த இடத்தில் நின்று பேசவேண்டாம் என.. ” ரெடியா அரசி?.. ”

   அரசியோ தான் அன்று பைக்கில் சொல்ல கேட்ட போது உறுதி முடிந்து அழைத்துச் செல்கிறேன் எனக் கூறியதால்.. அவன் என் ஆசையை நிறைவேற்றதான் பைக்கில் செல்லக் கேட்கிறான் என புரிந்து!.. புன்னகையுடன்.. ‘ ம்.. ‘ என தலை ஆட்ட..

   வேந்தன் இதற்காகவே காத்துயிருந்தது போல.. புன்னகையுடன் தான் வைத்துயிருந்த துணியை.. அவள் கண்ணில் கட்டினான். அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.. அவளின் அருகில் இன்பா சிரிப்பு சத்தம் வேற கேட்க.. ‘ இருவரும் ஏதோ?.. என்னை மகிழ்விக்க என்னமோ செய்யப்போகிறார்கள்!.. ‘ என்ற ஆர்வம் பிறந்தது. தனுவுடன் ஒரு இடத்திற்கு செல்கிறோம்.. வேறு எந்த எதிர்மறை எண்ணம் தோன்றாமல்.. மறுப்பு ஒன்றும் கூறாமல்..

    இப்ப எங்க போறோம்?. தனுஎன தன் விருப்பத்தை நிறைவேற்றபவனிடம் கேட்க..

    போய் பார்க்கலாம்.. இப்ப நீ மெதுவா ஏறு அரசி. ” வேந்தன் கூறியவுடன்..

     இன்பா அவளின் தோளை பிடித்தவாறு.. பைக்கில் அமர வைத்து.. சேலையை நன்றாக பிடிக்க வைத்தான். பின் சைகையில் இன்பாவும், வேந்தனும் பேசி.. பின் இன்பா வீட்டிற்குள் சென்றான். அவள் அந்த நேரத்தில் தன் சேலை சரிப்பார்த்து நன்றாக உட்கார்ந்தாள்.

   முயல்குட்டி!.. மாமாவ இப்ப நல்லா கட்டிபிடித்துக் கொள்ளுவிங்களாம். ” என ஆசையாக கூற..

   ம்.. ” அவள் அவன் கூறியதை அழகாக செய்து.. அவனின் முதுகில் மென்மையாக சாய்ந்துக்கொண்டாள்.

   அவன் அவளின் அழகான அமைதியில்.. புன்னகையுடன் திருப்பி அவளின் நெற்றியில் மென்முத்தம் கொடுத்து.. ” முயல்குட்டி வண்டி எடுக்கிறேன். “

    சற்று குளிந்தக்காற்று தங்கள் உடல் உணர.. தன் முயல்குட்டியின் இறுக்கிய அணைப்பை சுகமாக ஏற்ற வேந்தன்.. வண்டியை  மிதமான வேகத்தில் செலுத்த.. வேக தடைகள் மட்டும் அவர்களின் வழியில் குறுக்கே வர.. இருவரின் முதல் வாகன பயணத்தை இனிமையாக உணர்ந்து.. ஆழந்து ரசித்தது அனுபவித்து வந்தனர். 10 நிமிடத்திற்கு.. பிறகு தன் வண்டியின் வேகத்தை முழுவதும் குறைத்து நின்றான் வேந்தன் தன் அரசியுடன்.

    அரசியோ தன்னவனின் மேல் இறுக்க கட்டிக்கொண்டு.. இந்த பயணத்தை காற்றுடனும்.. வண்டியின் வேகத்துடனும் ரசித்து அனுபவித்து வர.. இரண்டும் முழுவதும் குறைந்து.. வண்டி நிற்பதை உணரவும்.. வேந்தன் அவள் கைகளை பற்றிவும் சரியாக இருக்க.. ” அரசி மெதுவா இறங்கு. ” கூறியவுடன்..

     சில நொடிகளில் வேந்தன் தன்னவள் பின்னால் நின்று அவள் தோள் பிடித்து அவள் கண்கட்டை அவிழ்த்தான்.

    ‘ அரசியின் மூடியிருந்த கண்கள் மெதுவாக திறந்தது. தான் எந்த இடத்தில் இருக்கிறோம்?.. எதற்கு முன்னால் நிற்கிறோம்?.. என சில நொடிக்கு.. பிறகு அறிந்து.. அதிர்ந்து!.. விழிவிரித்து!.. பின் தன் தனுவை பார்த்து.. அவள் கேள்வி கேட்க வர.. ‘

   அவனின் மன்னவன் வேந்தன் முகம்முழுவதும் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி.. தன்னவளை தன் கைகளில் அழகாக அள்ளிக்கொண்டவன்விழிவிரித்த முயல்குட்டியின் கண்களை ரசித்தவாறே!.. இத்தனை வருடங்களாய் தன் மனதில் மட்டுமே அவளை சுமந்து நுழைந்தவன்.. இன்று இப்போது அவளை தன் கைகளில் சுமந்தவாறு.. தன் வீட்டினுள் வலதுகாலை வைத்து நுழைந்தான். ‘

   ஆம்.. வேந்தன் தன்னவளை அவளின் விருப்பப்படி பைக்கில் அழைத்து வந்தது அவனின் வீடு!.. ( அவர்களின் வீடு). தான் தன்னவள் வீட்டிற்கு இன்று சென்றது போல அவளும் தன்னுடைய வீட்டிற்கு இன்றே வரவேண்டும் என இன்பாவின் உதவியோடு தன் முயல்குட்டியை அழைத்து வந்திருந்தான். ‘

     வீட்டிற்குள் தன்னவளுடன் தன் வலது காலை வைக்கும் போதே..” நம் வீட்டிற்கு உன்னை அன்புடன் வரவேற்கிறேன் முயல்குட்டி!.. ” எல்லையில்லா மகிழ்ச்சியை மனதில் நிரப்பி தன்னவளை வார்த்தைகளால் வரவேற்றான்.

    ஒரு நொடி நின்ற வேந்தன்.. அரசியின் நெற்றியில் அழுத்த முத்தமிட!.. அவளும் முகம் கொள்ள மகிழ்ச்சியுடன் அவனிற்கு கன்னத்தில் முத்தமிட்ட!.. இருவரும் ஒருவராகி முதலாக பூஜை அறைக்கு சென்றார்கள். ‘

    எழிலரசியோ ஒருபுறம் மகிழ்ச்சி மற்றும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தன்னவனின் முகத்தையே பார்த்தவள்.. தன்னவனின் அளவிட முடியா சந்தோஷம்!.. அவளையும் ஆட்கொண்டு.. யோசிக்க வைத்து!.. மற்றதை மறக்கடித்தது. ‘

   கல்யாணத்திற்கு முன்பே தன் கணவன்.. அவனின் வீட்டிற்கு அவனின் கைகளில் தன்னை ஏந்தியும் இதுபோலனான வரவேற்பையும்!.. அவனின் நான் எப்போதும் இருப்பேன்!.. என்ற முத்தத்தை வாங்கிய பிறகு வேறு எதுவும் எண்ணத் தோன்றாமல்.. தன் மற்றும் அவளவனின் மகிழ்ச்சியை மட்டுமே முன்னிறுத்தி!. அவளின் சம்மதம் மற்றும் அவனின் வார்த்தைகான பதில் மற்றும் அவளின் பரிசை தன் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினாள். பின் இருவர்!. ஒருவராகி வீட்டினுள் உள்ள  பூஜை அறையினுள் நுழைந்தார்கள். ‘

    பின் அரசியோ தங்களின் வருங்கால உலகமாக போகும் வீட்டினுள் அடியெடுத்து வைத்தவுடனே!.. எழிலரசி தன்னவன் என்ன?. ஏன்?.. எதற்காக?..  தன்னை அழைத்து வந்தான் என்று.. அவள் சிந்திக்கவோ!.. ஆராயவோ!.. இல்லை. சொல்லப் போனால் அந்த நிலையிலும் அவள் இல்லை. அந்த வேலை தன்னவன் செய்திருப்பான் என நினைத்து இனி இங்கு ஒவ்வொரு நிமிடத்தையும் தன் தனுமாமாவுடன் அனைத்தையும் ஆழ்த்து அனுபவித்து!.. மனதில் சேமிப்பது மட்டுமே தன் வேலை என முடிவெடுத்துக் கொண்டாள். ‘

    வேந்தன் பூஜை அறையினுள் ஒன்றும் கூறாமல்.. அவளை கைகளில் ஏந்தியவாறே.. சில நொடி மட்டுமே நின்று.. அவளை தரையில் நிற்க வைக்காமல் பொறுமையாக.. தன் பாதத்தில் நிற்க வைத்தான். பின் பூஜை தட்டிலிருந்து.. திருநீர்,மஞ்சள் மட்டும் தன்னவளுக்கு வைத்து.. பின் குங்குமத்தை தனக்கு வைத்துக்கொண்டு.. தன் நெற்றியை அவளின் மீது வைத்து சில நொடிகள் கழித்து எடுத்தான். ‘

     மேலும் சில நொடி நின்று மீண்டும் அள்ளிக் கொண்டவன் சுமந்து சென்றவாறே..  முயல்குட்டி எல்லோரும் சேர்ந்து கணவன், மனைவியா ஆரத்தி எடுத்த பின்பு.. இல்ல உன் பெற்றோர்களின் அனுமதியுடன் நான் உன்னை இங்கு அழைத்து வரும் போது உன்னோட பாதச்சுவடுகள்!.. இந்தவீட்டில் படனும் என நினைக்கிறேன். ”

     அதனால் இப்ப நான் உன்னை இங்கு அழைத்து வந்தது.. என் முயல்குட்டியான.. என் அரசியான.. என் காதலிய!.. அவளின் கால்தடம் இப்போதைக்கு நம் இருவரின் படுக்கை அறையில் மட்டுமே.. முயல்குட்டி!.. ” என கூறி உல்லாச மனதுடன் அவளின் மீது அவனின் கைப்பிடி இறுக்கத்தை கூட்டி.. அவனின் அறையில் நுழைந்தான்.

    வேந்தன் பூஜை அறையில் செய்த செயல்.. அதன்பின் கூறியதை இனிமையாக உணர்த்தும்!. தனுவின் முகத்தில் மட்டுமே தன் கண்களை பதித்துக் வந்தவள்.. அவனின் கடைசிவரி.. அதன் பின்னான தன் இடையின் இறுக்கம்.. இவற்றில் இருந்து தான் தாங்கள் நிற்பதுதன்னவனின் அறை

    அவனோ தன்னவளை கள்ளப் புன்னகையுடன்.. ” நம் படுக்கைஎனக் கூறி.. அவளை கட்டியிலில் தன் கைகளில் இருந்தவாறே வைக்க.. அது படுக்க வைப்பது போலவே இருந்தது.’

    பின் ஒரு நிமிடம் தன் அறையை பார்வையிட்டுசிரிப்புடன்தன் அறையில் தன்னவளா!.. ‘ என நினைத்து பூரித்து!.. அவனின் சந்தோஷ மிகுதியில் துள்ளிக்குதிக்க தோன்றிய தன் மனதை மிகவும் கஷ்டப்பட்டு கட்டுபடுத்தினான். ‘

    ஏனெனில் வீட்டின் கீழ் அறையில் அப்பா, அம்மா, இருக்கிறார்கள். எழிலின் வீட்டில் இருந்து வந்தவுடன் வசு மனதில் குழப்பம், சற்று கோபம், வருத்தம் என்ற நிலையில் அண்ணாவுடன் மாடியில் தன் அறையில் இருக்க மனமில்லாமல்.. வந்த சிறிது நேரத்திலேயே ஏதோ காரணம்கூறி பாட்டி, தாத்தாவுடன் படுக்க சென்றுவிட்டாள். பெரியவர்கள் களைப்பில் வந்த சிறிதுநேரத்தில் உறங்கிவிட்டனர். இதுபோல தான் எழிலின் வீட்டிலும் அனைவரும் உறங்கிவிட.. இன்பா கால் செய்தவுடன் தான் வேந்தன் அங்கு சென்று தன்னவளை அழைத்து வந்தான்.

    அவனின் சந்தோஷத்தின் சொந்தக்காரியோ.. தனு அடுத்து நேராக அவளவனின் அறைக்கு வருவான் என நினைக்காததால்.. அவளுள் சொல்ல முடியாத, சொல்லத் தெரியாத உணர்வு, மகிழ்ச்சி, பதட்டம், வெக்கம் என இருந்தவளை.. அவன் இருகையையும் இடுப்பதில் வைத்து தோரனையாக நின்று.. தன்மீது கள்ளச்சிரிப்புயை உதித்த பிறகுதான்..

    எதுக்கு இப்ப சிரிக்கிறான்?.. நாம்ம அவன் கையில் தானே இவ்வளவு நேரம் சுகமா இருந்தோம்.. ஆனா இப்ப எங்க இருக்கோம்?.. ‘ என திரும்பி பார்க்க.. அது அவனின் படுக்கை. தன் அறையில்கூட இருவரும் ஊஞ்சலில் உட்கார்ந்து.. பின் நின்று தான் பேசியதால். படுக்கையை பார்த்தாள். தன்னவன் தன்னை அழைத்து வந்த விதம்.. அவளை வேறு விதமாக எண்ணத்தோன்றியது. அதனால் அலறி அடித்துக் கொண்டு எழுந்த படுக்கையின் நடுவில் சென்று உட்கார்ந்தாள்.

    அப்போது தான் வேந்தன்.. துள்ளிக்குதிக்க முடியவில்லை என நினைத்து தன் முயல்குட்டியை பார்க்க.. அவளோ துள்ளி எழுந்து நடுவில் சென்று உட்கார்ந்ததை பார்த்து.. ‘ தான் செய்ய நினைத்தை தன்னவள் செய்துவிட்டாளா?. ‘ என.. அவனின் மெல்லிய சிரிப்பில் இருந்து.. என அவள் முகத்தில் வந்து போன பாவனையை ரசித்தபடி.. சற்று அதிக சிரிப்பை வெளிப்படுத்த.. எழிலரசி தற்போது தன்னவனின் படுக்கையில் நன்றாக அமர்ந்து.. ‘ இப்ப எதுக்கு டா சிரிக்கிற?. ‘ என்ற கேள்வியுடன் தன்னவனை  முறைத்துக் கொண்டுயிருந்தாள்.

     தன் புன்னகையை கண்களுக்கு மாற்றி.. ” ம்.. இப்ப நான் என்ன பண்ணி விடுவேனு?. இப்படி அலறி.. அங்க உட்கார்ந்து இருக்க. ”

    அடக்கப்பட்ட புன்னகையுடன்.. ” ம்.. நீங்க ஒன்னும் பண்ணமாட்டிங்க. நான் ஏதாவது உங்கள பண்ணிட்டா?.. அந்த பயம்தான். “

    அடிக்கள்ளி முயல்குட்டி.. குஷியாக.. ” ம்.. நீ ஏதாவது பண்ணா ரொம்ப சந்தோஷம் தான். நாளைக்கே என்னை.. உனக்கு கல்யாணம் செய்து விடுவாங்க. ஆனா நீ அதெல்லாம் பண்ணமாட்டியே.. ” என அவளின் அருகில் அமர்ந்து சிரிப்புடன் நெற்றி முட்டிக் கூறி.. அவன் விரும்பும் அவளின் முறைப்பை பரிசாக பெற்றான்.

    வசதியாக சுவரில் சாய்ந்து அமர்ந்து.. தன்னவளை தன் கைவளைவில் இழுத்து வைத்துக்கொண்டான். அவளிற்கு தான்அணிவித்த மோதிரம் மற்றும் இத்தனை வருடம் அதை சுமந்த விரலை முத்தமிட்டு.. பின் வலது கையை பற்றி.. ” முயல்குட்டி!..  நான் உன் வீட்டிற்கு வந்து பார்த்த மாதிரி.. நீயும் நாம்ம வாழப்போகும் இந்த வீட்டுக்கு இன்னைக்கே வந்து பார்க்கனும்.. நான் உன் அறைக்கு வந்து பேசி நம் நினைவுகளை பதிவு செய்த மாதிரி.. நீயும் என் அறையில் வந்து.. உன்கூட கொஞ்சம் நேரம் இருந்து நம் நினைவுகளை பதியனும் நினைச்சேன். ”

    வீட்டில் கொடுத்த  பச்சை, சிவப்பு நிற சேலை.. தான் அணிவித்த நெக்லஸ், ஜிமிக்கி, தான் தேர்ந்த சேலைக்கு வாங்கி கொடுத்த.. ஆரஞ்சுநிற வளையல் அணிந்துயிருந்தவளை.. மையல் பார்வையுடனே.. ” இன்னும் இன்னைக்கு நீ கேட்ட.. முத்தத்தை அங்கு கொஞ்சுமும்.. மீதி நான் கொடுக்க வேண்டிய முத்தம் பாக்கி இருக்கு.. அதை மட்டும் கொடுக்கனும். ” என கூறி அவளை பார்த்திருந்தவன்..

   அவனின் ஏன் இங்கு அழைத்த காரணத்தை தனு கூறும்போதே.. அவனின் விருப்பத்தை என்ன கூறுவது?. இவனை திட்டுவதா?.. வெக்கப்படுவதா?.. இல்லை வருத்தம் கெள்வதா?.. தெரியவில்லை. ‘

   அவன் இங்கு இருக்கமாட்டான். இருவரும் நினைத்தவுடன் உடனே பார்க்க முடியாது. அதனால் நான் எப்படி?.. அவனுடன் தன் அறையில் இருந்ததையும், முத்தம் கொடுத்தது.. வாங்கியது என பல ஞாபகத்தை வைத்து.. தன்னவன் இங்கு இல்லாத நாட்களில்.. அவனுடன் இருப்பது போல இருக்கலாம் என நினைத்து.. தன் மனதின் வருத்தத்தை.. எப்படி அவனிடம் காட்டாமல்இருக்கிறேனோ.. அதுபோல அவனும் இருக்கிறான் போல.. அதனால் தான் இப்போது இங்கு.. என அவனை நினைத்தவள்.. இருந்தாலும் வேறு ஒரு சந்தேகம் வர.. ‘

    ஒரு நொடி அவள் முகத்தில் தோன்றிய சந்தேக அறிகுறியை பார்த்து.. ‘ அய்யோ என்னைய கண்டுபிடிக்கபோறா!.. ‘

    மதியம் அவள் குளிந்த நீரில் முகத்தை கழுவிவிட்டு.. சில நீர்துளிகளை வேண்டும் என்றே முகத்தின் குளுமைக்காக விட்டு வந்தவளை.. பார்த்தவுடன் அழகாக தோன்றியது.. பின் திலகனுடன் தான் பேசும்போது மிக அருகில் அவளின் கண்கள், கன்னம், உதடு அனைத்தும் நீரினாலும்.. அவளுக்கும் தன்னால் தோன்றிய உணர்வால் முகத்துடன் சேர்ந்து துளிகள் இன்னும் கூடுதலாக மின்ன.. அவனின் மனதை தடம்புரளச் செய்து.. அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றது. அவளும் அதைதான் உணர்ந்தாள் என அவனும் பார்த்து ரசித்தானே!.. அப்போது தான் கொடுக்க வேண்டும் என நினைத்தையும் தன் அறையில் தன் முயல்குட்டி!.. அதை நினைக்கவே பேரானந்தம். அதை கொண்டாடியே ஆக வேண்டும் ஆவல் கொண்டான். ‘

    அவளின்  தற்போதைய சந்தேகித்த கேள்வியா.. கேட்க  விடாத வேந்தா!.. அதனால் நீ முந்திக்கோடா.. என அரசியின் கள்ளன் சட்டென்று.. அவளின் முகத்தை கையில் ஏந்தி.. எங்கு எல்லாம் நீர்துளிகள் இருந்தது என்பதை ஞாபகம் வைத்திருந்திருந்தவன். அங்கெல்லாம் முத்தங்கள் ஒவ்வொன்றையும் முத்துமுத்தாக அனுபவித்து கொடுத்தான். பின் அவளை தன் இடதுபக்கத்தில் சாய்த்து.. இப்ப நீ கேட்க வந்ததை கேள் முயல்குட்டி என்பது போல புன்னகையை மறைத்து அவளையே பார்த்திருக்க.. ‘

   அரசியோ.. தன் முகத்தில் ஆங்காங்கே.. மென்மையான ஆழ்ந்த முத்தத்தை தான் உணர்ந்து. தன்னவனின் முத்தான முத்தத்தில் மயங்கி!.. அவள் கண்கள் தானாக மூடி.. அதை அனுபவித்தாள். அவளின் உடலும் அதை ஏற்று.. அவளை செம்மையுறச் செய்தது. ‘

   அவளை பார்த்துயிருந்தவனை.. அவளின் பிளவுஸ் நிறத்திற்கு ஒத்த நிறமாக முகமும், வதனமும் மாறியிருக்க.. மல்லிகையின் வாசம்.. அவளால் உண்டான புதுமையான தாபம் என்ற உணர்வு.. தன்னவளிடம் ஒன்றை சொல்லவும்.. மேலும் ஒன்றை செய்யவும் தூண்டியது. ‘

   முயல்குட்டி.. “

   ம்.. ” எனக் கூறி சிறிது நேரம் கழித்து.. மெதுவாக கண் திறந்தாள்.

     ‘ அவளோ.. அவனின்  முத்த தாக்குதல், தாக்கம் இவற்றில் இருந்து வர முடியவில்லை. மேலும் அவன் இன்று முழுவதும் தன்னை முத்த தாக்குதல் நடத்தி.. தனக்கு புது புது உணர்வுவை அறிய வைத்து.. தன்னை நிலைகுலைய வைக்கிறான் தான். ஆனால் அது தனக்கு இப்போது வேண்டும். அதுதான் அவன் தன்னுடனே இருப்பது போன்ற உணர்வை தரும்.. இதுவரை வாங்கியிருந்தது போதாது என்று.. ஒரு மாதத்திற்கு அவ்வப்போது நினைத்து அனுபவிக்க.. இதையும் மனதில், உடலில், நினைவில் சேமித்து வைத்துக் கொண்டாள். பின் அவனின் அழைப்பு கேட்க.. ம் மட்டுமே கொடுத்து சிறிது நேரம் கழித்து திறந்தாள். ‘

    அவளையே பார்த்திருந்தவன்.. அவளின் கண்களை பார்த்து தான் கூற வேண்டும்!..  என இதயம் சொன்னதை கேட்டு.. அவள் கண்திறந்தவுடன்.. தன் இதயத்தில் இத்தனை வருடங்களாக தன்னவளிடம் கூற வேண்டும் என காத்திருந்த சொற்கள்.. தன்னவள் அரசியிடம் இன்றைய நாள் முழுவதும் செயலில் காண்பித்துக் கொண்டு இருந்தவன்.. இதையும் விட்டு வைப்பானேன் என.. ” ஐ லவ் யூ முயல்குட்டி.. ” தான் அவள் மீது வைத்துயிருக்கும் காதலை வார்த்தையாகவும் வெளிப்படுத்தனான்.

      அதனை சிறப்பிக்கும் விதமாக.. முதலில் கொடுத்தில் இருந்தே வெளியேறப் பிடிக்காமல்.. இன்னும் வேண்டும் என இருந்தவளின்.. செந்நிற இதழிலில் தன் இதழை பொருத்தி.. தான் அவளின் மீது வைத்திருந்த.. இத்தனை வருட உணர்வுகளின் ஒரு துளியை தன்னவளுக்கு உணர்த்த. தன்னவன் முத்தத்தால் அவள் வயிற்றில் பெண்மைக்கான உணர்வு ஊற்றெடுக்க.. அதனை அவள் அவனுக்கு உணர்த்த.. அவனும் தன்னவள் வெளிப்படுத்திய உணர்வை இனிமையாக ஏற்க என அங்கு அழகான அவர்களின் அறிந்த, அறியாத ஆசை, புது மயக்க உணர்வு.. தாகம், தாபம் என மொத்ததையும்.. இதழ்களின் வழியே இருவரும் முத்தம் என்ற ஒரு பொருளின் மூலம்.. அங்கு பண்டமாற்றம் செய்துக் கொண்டுயிருந்தனர். ‘

    வேந்தனிற்கு அவளின் மேல் இருந்த காதல் பல வருடங்கள் என்றால்.. அவனின் முயல்குட்டியான அரசிக்கு.. ஆழ் மனதில் இருந்த தன் தனுவால் உண்டான தாக்கங்கள் பல வருடம். இருவரும் தங்களின் பலவருட உணர்வை தங்கள் முதல் இதழ் முத்தத்திலேயே கூறிவிட வேண்டும் என நினைத்தார்கள். ‘

   இருவரும் தங்கள் செவ்விதழிகளில் இருந்து பிரிந்து வரவே தோன்றாமல்.. அவன் தன்னவளின் மீது தன் அணைப்பின் இறுக்கத்தை கூட்ட.. அதனால் அரசியின் ஒருகை அவனின் இடுப்பையும்.. மறுகை அவனின் தோளை பற்றி வசதியாக அவள் அமர்ந்திருக்க.. அது அவனுக்கும், இதழுக்கு இன்னும் வசதியாகிப் போக பண்டமாற்றம் நீண்டு.. அதிலிருந்து மீண்டு வர தாமதம் ஆக்கினார்கள். ஆனால் இது அவர்களுக்கு சுகமான தாமதமானது. ‘

 

   வேந்தன் அரசியின் தலைமேல் அவன் முகத்தை வைத்து கண்களை முடி அவளின் உணர்வுகளையும் மனதினுள் ரசித்தான்.. அவளை அவ்வப்போது பார்க்க.. எழிலரசி கண்திறந்த படியே அவன் நெஞ்சில் சாய்ந்து.. அவனின் சட்டை பட்டனை திருகிய படியே அவனின் காதலையும், உணர்வுகளை சேமிக்க.. என  இருவரும் பதில் வார்த்தைகள் இல்லா மெளனத்தில் அனுபவித்துக் கொண்டுயிருந்தனர். ‘

   வேந்தன் அரசியின் செயலை சில நிமிடங்கள் ஆசையுடன் பார்த்திருந்தவன்.. புன்னகையுடன்… ” முயல்குட்டி நீ இந்த சேலையை மாற்றி.. நான் உனக்கு ஒரு டிரஸ் எடுத்து வைத்துயிருக்கேன். அதை போட்டுக்கோ. நான் கீழ போய்ட்டு 10 நிமிடத்தில் வரேன். ” கூறி எழ நினைத்தவன்..

    திரும்பி அவளை பார்க்க.. அவளோ அவன் பார்ப்பதை உணர்ந்து என்னவென்று?.. கண்களை ஏற்றியிறக்க.. ” இல்ல.. சாய்ந்தரம் நீ கேட்டும் நான் உனக்கு சேலை கட்ட உதவி பண்ண முடியல.. அதான் எனக்கு தெரிந்ததை இப்ப பண்ணலாமா?.. கேட்க நினைத்தேன். ”

    இதழ் உணர்வு தாக்கத்தில் இருந்து இப்போதுதான் வெளி வந்தவளிடம்.. இவன் தன்னை இங்கு உடை மாற்றச் சொன்னதையே.. உடைய மாற்றனுமா??. வெளிவந்த அனைத்தும் மீண்டும் உடல்முழுவதும் பரவியது. அவன் தன்னிடம் ஏதோ கேட்க நினைக்கிறான் என அவனை பார்க்க.. அவனின் கேள்வி?.. என்ன உதவி சாய்ந்திரம் என யோசித்தவள்.. நினைவு வந்தது. ‘

   நக்கலுடன்.. ” ம்.. நீங்க உதவி பண்ணல?.. “

   இல்லைஎன பாவமாக கூற..

    அப்ப அப்ப எனக்கு பூ வைக்கும் போது.. டைட்டா இருக்க வேண்டும் என நினைத்து.. பின் யார் எனக்கு நாட் போட்டு விட்டது?.. “

     அரசி கூறியவுடன்.. வேந்தனும் அதை நினைக்க.. ‘ பூ வைத்து.. கூந்தலை அலங்காரம் செய்யும் போது.. அவள் கார்குழலை மட்டும் பார்த்து.. நான் என் கடமையை ஒழுங்கு பையாக செய்வேன் என நினைத்து செய்து முடித்தவன்.. அவளின் பிளவுள் நாட்டால் வீழ்ந்து விட்டான். அவள்  ப்ளெளஸ் நாட் சிறிது லூசாக கட்டியிருக்க.. முதுகுப்பகுதியில் அவனுக்கு தெரிந்த, உரிய.. யாருக்கும் தெரியக்கூடாத இடத்தில் தெரிந்த அழனான மச்சம். அதில் தான் விழ்ந்தான் வேந்தன். பின் அதை தான் மட்டும் பார்க்க வேண்டியது.. என உரிமையுள்ளவனாக கூத்தலை ஒதுக்கி.. அவளின் பிளெளஸ் நாட்டை அவிழ்த்து இறுக்ககட்டினான். அதன் பின்னால் தான்.. தன் செயலை உணர்ந்தான். உணர்ந்த அந்த நொடி.. அவனின் கண்களோ அவளின் வெற்று முதுகை பார்த்தது!. அவனின் கை பட்டு.. அவளின் முதுகில் தோன்றி தெரிந்த சிலிர்ப்பு மற்றும் அதனால் எழுந்த முடிகளுடன் விளையாட தூண்டிய உதடு, கையை அடக்கதான் பெரும்பாடு பாட்டானே.. ஆனால் அதுவும் இனிமையாக இருந்தது. ‘

     அவனின் பெரும்பாட்டை தான் அவளும் கண்ணாடியில் பார்த்ததாளே.. இப்போ தன்னை சீண்டவே சொல்கிறான் என உறுதியாக.. அவனை பற்றி நன்றாக தெரித்தவளாக.. ” ம்.. தனு மாமா உங்க உதவிய ஏற்க.. நான் ரெடி!.. நீங்க ரெடியா?.. ” என அவளும் அவனின் கண்களை பார்த்துக் குறும்புடன் கூற..

   அவனோ அவள் கூறியதை கேட்டு.. ‘ என்ன?.. முயல்குட்டி ரெடியா!.. ‘ வேந்தா.. இவதான் சரியான கேடியாசே!.. இப்ப வரைக்கும் நல்லா நாம்ம கொடுப்பதை வாங்கி.. உடனே திருப்பி கொடுத்து.. நம்மள தான் ஒருவழியாக்குறா. இவளை பற்றி தெரிந்தும் வாய் கொடுத்துட்டேனே!.  என்னசொல்ல?.. ‘

    என்னஅவள் தொடங்கும் முன்..

    போடி.. நான் ரொம்ப நல்ல பையன். கல்யாணத்திற்கு முன்.. ம்.ம்ஹூம்.. நான் சும்மா ஆசைக்காக முத்தம்!. என்ன இதுவரை 50 கொடுத்துயிருப்பேன்?.. இன்னும் 50000 கூட கொடுப்பேன்!.. ஆனா நீ நினைப்பதெல்லாம் என்னிடம் நடக்காது முயல்குட்டி. ஆசைய பாரேன்!.. ” என..

    இவர் ரொம்பப நல்ல பையனாம்!.. என கூறிய படியே தான் வாங்கிய உடையை அவளின் கையில் கொடுத்து.. பின் புன்னகையுடன் நெற்றியில் அழுத்தி தன் 51வது முத்தம் கொடுத்துவிட்டு.. அறையை சாற்றி அவன் ஓடியே விட்டான். ‘

  

   

   

   

    

   

   

   

   

  

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!