Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 19. 1

 

நாம் 19 (1)

 

   நிஷா ரிவியூக்கு ரெடியா?.. “



Advertisement

   ம்.. ரெடி அனு. 10மணிக்கு இருந்த மீட்டிங்க  12மணிக்கு மாத்தினதால் அப்பவே முடிந்தது.. சும்மா வேற பெண்டிங் வேலைதான்  பார்த்துட்டு இருந்தேன். ”

    நானும் வேற தான் பார்த்துயிருந்தேன். சரி.. எப்பவும் திங்கட்கிழமை மீட்டிங்  மட்டும் நேரம் மாறாம இருக்குமே.. இன்னைக்கு ஏன் மாத்தினாங்க உனக்கு தெரியும்மா?.. “

   தெரியல. இரு ஆர்த்தி அக்காட்ட கேட்டு பார்க்கிறேன். “

Advertisement

    ஆர்த்தி அக்கா. “

Advertisement

    ம்.. சொல்லு நிஷா. ஏதாவது சந்தேகம்மா?.. “

    எதுல?.. “

    அக்கா.. என் முகத்த பார்த்து பேசுங்க. அப்பதான் கேட்பேன். ரொம்ப முக்கியமான விஷயம். “

Advertisement

    அப்படியென்ன நீ முக்கியமான விஷயம் கேட்க போற?.. ” என கைகளை சொடக்கிட்டவாறு கேட்க..

    ம்.. அது வந்துக்கா.. இன்னைக்கு மீட்டிங் ஏன் டைம் மாறுச்சு?.. இந்த கம்பெனி பிராஜெக்ட் ஆரம்பித்த இந்த இரண்டு வருடத்தில் மன்டே மீட்டிங் டைம் மாறினதே இல்லையே. அதான் கேட்டேன். “

    ம்.. ஏன்னு எனக்கும் தெரியல?.. ஆனா யாருக்காக மாத்தினாங்கனு?.. தெரியும். “

    யாருக்காக?. ” நிஷா, அனுவும் ஒருசேர ஆர்வமான குரலில் கேட்க.

   புன்னகையுடன்.. ” என்ன ஒரு ஆர்வம்!.. ம். நம்ம TL க்காக மாத்தியிருக்காங்க. “

   அதிர்ச்சியுடன்என்ன வேந்தன் சாருக்காககவா!.. “

    ம். ஆனா ஏன்னு தெரியாது?.. “

    என்ன அக்கா?.. ஒருநாள் கூட லீவ் போடாத வேந்தன் சார்.. இரண்டுநாள் லீவ் போட்டது முதலில் அதிர்ச்சி!.. எப்பவும் இந்த மீடிங் அன்னைக்கு மட்டும் 8மணிக்கு வருபவர்.. இன்னைக்கும் லீவ் மாதிரி இன்னும் ஆளக்காணோம். ஆனா 12மணிக்கு மாத்தியிருக்கார். “

    என்ன வேந்தன் சார் பேர் அடிபடுது. அவர் வந்துட்டாறா?.. ” வந்தவள் வேந்தன் அறையை பார்க்க.

    ” ராகினி.. அவர் வந்துட்டாறோ.. இல்லையோ. ஆனா  நீ எப்பவும் இந்த டையத்துக்கு வந்துடுற!.. “

    ஹேய் அனு.. நான் காபி பிரேக்கில் தான் வரேன். நான் என்னமோ அவரை சைட்டடிக்க வருதுவது போல சொல்லுற. “

    இதை நீ சொல்லித்தான் எங்களுக்கு தெரியனுமா?. ”

   ம்.. நீ சொல்வதும் போல் எல்லாம் இல்லப்பா. இங்க எல்லோரும் எல்லோர்ரோடையும் நல்லா இல்லா ஜாலியா இல்லாவிட்டாலும்.. ஒர் அளவிற்கு பேசுவோம். ஆனா அவர் யார் கூடவும் அவ்வளவா பேசமாட்டார். அதான் சும்மா அப்படி என தான் இவர் பண்ணுவார் பார்ப்பேன். ” அவர்கள்ஆர்த்தியிடம் சைகையில் கூறி.. பேசியபடி காபி குடிக்க சென்றார்கள்.

     ஆமா.. நீ சொல்வது ஒத்துக்க கூடிய ஒன்றுதான்நாம்ம எல்லாம் கொஞ்சமே கொஞ்சம் அழகா இருக்கோம். நல்ல வேலை, சம்பளம். நல்லா வாயும் கூட. ஆகாஷ் சார் கூட மட்டும் தான் சிரித்து பேசுவார். நம்ம கூட பேச காசு கேட்பார் போல. “

   நல்ல வெள்ளையா பொம்மை மாதிரி இருந்துட்டு.. நீ கொஞ்சம் அழகா. சரிவிடு. ஏன்டி இவர் வீட்டல இருப்பவர்கள் கூடவாவது பேசுவாரா?. மாட்டாற தெரியல?.. ஆனா ஒருத்தவங்கள  நெனச்சா தான் பாவமா இருக்கு. “

   இந்த இடத்தில் யாருனு நாங்க கேட்கனும்மா?… சொல்லுடி. ”

    வேற யாருடி?.. அவர கல்யாணம் செய்ய போறவங்கதான். அமைதியா இருக்க பெண்ணா இருந்தா பரவாயில்ல. நம்மள மாதிரி வாயாடியா இருந்ததா!.. இவரோட ரொம்பப கஷ்டம். ”

    ம். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனா அவர் சிரித்து பேசினா எப்படி இருக்கும்?.. ” தான் அமர்ந்த இடத்தில் இருந்து அனு கூறியபடி..  பார்த்த நேரம்.. அவளுடன் நிஷா, ராகினியும் கூட..  தங்கள் சற்று அருகில் இருந்த வேந்தன் சிரிக்க.. அவரை பார்த்து தலையில் மேல் கை வைத்து கையெடுத்து கும்பிடும் திலகனை பார்த்தார்கள்.

    ஹேய் அனு.. அங்க என்ன நடக்குது?.. வேந்தன் சார் சிரிக்க.. யார் அது?.. எதுக்காக வேந்தன் சாரை பார்த்து இப்படி கையெடுத்து கும்பிடுகிறார். “

    உன்கூட தானே நானும்  இருக்கேன். எனக்கு எப்படி தெரியும்?..  அவங்க இந்த பக்கமா தான்டி வராங்க. ” அவர்கள் அருகில் உட்கார.

    ஏன்டா இப்படி இதனை தடவை ஒரு விஷயத்தையே திருப்ப திருப்ப சொல்லி.. தொனதொனனு பேசிட்டு இருக்க. எப்படிடா உன் டீம் ஆட்கள் எல்லாம் உன்னைய சமாளிச்சு வேலை செய்யுறாங்க. அவங்க எல்லாம் வேண்டுதல் வைக்க போறாங்க.. கடவுளே இந்த வேந்தன் வாய.. ஒருநாள் கொஞ்சும் அமைதியா மாத்திடுனு. ” திலகன் கூற.. வேந்தன் அவனை முறைக்க.

    அருகில் இருந்த மூவருக்கும் அதிர்ச்சி.. என்ன இவர அமைதியா மாற்ற வேண்டும்மா?.. வாயாடியா மாத்த நாங்க கேட்டா.. இவர் இப்படி சொல்கிறார். என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘

   டேய் திலகா நான் என்ன சொல்ல வந்தேனா.. “

    டேய் நான் கிளம்புவரை வாய தொறக்காத. போ.. போய் எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டுவா. அப்படியே உனக்கு இஞ்சி போட்ட டீ வாங்கிக்க. அப்பதான் இவ்வளவு நேரம் பேசிட்டு வந்த அந்த வாயில இருக்க தொண்டைக்கு இதமா இருக்கும். ” வேந்தன் முறையுடனே சென்று வாங்கி வந்து அவன் முன் வைத்து.. பின் அவன் அமர்ந்தான்.

    நான் இப்ப டீ குடிக்கவாது வாய் திறக்கலாமா?.. இல்ல.. 

    குடிடா.  அப்படியே எல்லாவற்றிக்கும் அனுமதி வாங்கி பண்ணுற பச்சைபுள்ளை மாதிரி.. முகத்தை வைத்து கேட்டா!. நாங்க நம்பி விடுவோம்மா. நீ எவ்வளவு பெரிய கேடினு.. எங்களுக்குகே நேத்து தான் தெரிந்தது. அடுத்த தடவை ஊருக்கு வருவல்ல.. அப்ப பாரு.. நான் யாரு சொல்லுறேன். ”

   டேய் ஞாபகம் எல்லாம் மறந்து போச்சாடா?.. உன் பெயர் திலகன். என்கூட LKG இருந்து படிச்ச.. இப்ப கூட சத்யா. ”

   முறைப்புடன்.. ” எல்லாம் என் நேரம் டா. நீ இப்ப ஒழுங்க வேலை செய்ய உள்ள போகனுமா வேண்டாம்மா?.. 12மணி மீட்டிங் தானே அவசரப்படுத்தின. இப்ப நிதானமா இருக்க. ”

   போகனும் டா. ஆகாஷ் உன்னைய பார்க்க வரேனு சொன்னான். அதான். அப்படியே உனக்கு.. ”

    டேய் உனக்கு பதிலா நான் வாய முடியிருக்கலாம் டா. திருப்ப முதலில் இருந்து ஆரம்பிக்காத. ” என்றவுடன் இந்த வரியை கூறிய ஒருத்தியின் ஞாபகம் வந்து புன்னகைத்தான்.

   அவனின் புன்னகையை பார்த்து.. ” என்னடா சத்யா ஞாபகம்மா ?.. “

   எப்படி டா?.. “

    அதெல்லாம் அப்படிதான். ” இவர்கள் பேசிக் கொண்டுயிருக்க..

   இவர்கள் அருகில் இருந்த மூவரும்.. திலகனின் வேந்தனை பற்றிய பேச்சு, மீடிங் என்றதும்.. அவர்கள் சத்தம் இல்லாமல் அதிர்ச்சியுடன் சென்று விட்டார்கள்.

   திலகனின் கடுப்பிற்கு காரணம்.. திலகனிடம் வேந்தன் காரில் வரும் போது அரசியை அவ்வப்போது சென்று பார். அரசி வெளியே செல்ல ஆசை பட்டால்.. மாலை நேரத்தில் இன்பாவால் முடியாத பட்சத்தில்  நீ அழைத்து போ. இன்பாவுடன் அடிக்கடி பேசு.. தங்கள் வீட்டிற்கு சென்று நிச்சய வேலையை கேட்டு செய். இன்னும் சிலவற்றை திருப்ப திருப்ப கூறி கடுப்பின் எல்லைக்கு செல்ல வைத்தான். ‘

   டேய் திலகா ஒன்னு சொல்ல மறுந்துடேன் டா. ”

   இன்னும் என்ன டா?..”

    டேய் நான் அரசிக்கிட்ட நீ சொன்ன மாதிரி மாட்டிக்கிடேன்டா. “

    புரியற மாதிரியே பேசமாட்டியா?.. “

     நான் வந்து.. உங்களிடம் நாங்க மீட் பண்ண விஷயம் சொல்லிட்டேனு.. கண்டுபிடிக்கிற மாதிரி உளறிட்டேன்டா. இன்பா எனக்கு உதவி செய்வதை பார்த்து.. அவளுக்கு டவுட் வந்து.. என்னிடம் கேட்டு.. நான் உங்களிடம் கூறிவிட்டேனு சொல்லிட்டேன். 

    புன்னகையுடன்.. ” ரொம்ப நாள் ஆகும் நினைத்தேன். அன்னைக்கே மாட்டிட்டியா!.. “

    ஆமாம் ஆமாம்.. அரசியா ஏதாவது அதை பற்றி பேசினா தான் பேசனும். நீங்க யாரும் அதை பற்றி பேசக் கூடாது. நீயே மூனு பேரிடம் சொல்லிவிடு. “

    ம்.. சரிடா. ” அவன் முதுகில் ஒரு அடிவிழ..

    திலகன் சார்.. எப்படியிருக்கீங்க?.. “

     டேய் இங்க ஒருத்தன் பேசியே கொல்லுறான். நீ இப்ப அடிக்கிற. பின்ன எப்படியிருக்கேனு கேட்குற?..”

    சரி சரி. நம்ம புதுமாப்பிள்ள என்ன சொல்லுறான்?. “

    புன்னகையுடன்இதுக்கு மேல என்னால முடியாதுடா. என்கிட்ட கேட்ட கேள்விக்கான பதில.. நீ அவனிடமே கேட்டுக்கோ. நான் இப்ப முழு ஆகாஷா.. தெளிவா இருக்க உன்னை இப்பவே நல்லா பார்த்துகிறேன். இவ்வளவு நேரம் நான் இருந்த வேலை முடிந்தது. உங்களுக்கு மணியாச்சு இல்ல. கிளம்புறேன் டா. அம்மா, அப்பாவ கேட்டதா சொல்லு. நான் பெற்ற இன்பம் நீ பெற வாழ்த்துக்கள் ஆகாஷ். வேந்தா எங்க இருக்கேனு?.. நானாவே நடுவில் அப்ப அப்ப மெசேஜ் பண்ணுறேன். நீ மட்டும் எனக்கு கால் பண்ணிடாதா. உனக்கு புண்ணியமா போகும். ”

   அவன் சிரிப்புனே.. ” சரிடா பார்த்துபோ. அரசிக்கும் மெசேஜ் பண்ணிவிடு. இப்ப தான் உனக்கு சொல்ல சொல்லி மெசேஜ்  பண்ணியிருக்கா. “

   ம்.. சரிடா. நானே போய்கிறேன்.. நீங்க இருங்க. கால் பண்ணுறேன் ஆகாஷ். பாய் டா வேந்தா. ” அவன் புன்னகையுடன் கார் நோக்கி சென்றான்.

    புன்னகையுடன்.. ” நீ என்ன சொல்லுறேனு தானே கேட்டேன்.. அதுக்கு இப்படி அலறியடுச்சு போறான். ”

   நான் சொன்ன பிறகு நீயும் ஓடிட்டா?. அப்புறம் சொல்றேன். சரிவா போலாம்இன்னைக்கு நீ தான் ரீவிவூ பண்ணணும். நான் அமைதியா பார்த்துட்டுதான் இருப்பேன். “

   வேந்தனை ஒருபார்வை பார்த்து.. ” சரி இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அவங்க பேர் என்ன?.. ” எனக் கேட்டபடியே இருவரும் கான்பிரன்ஸ் ரூம் நுழைய..

   முகம் கொள்ள மகிழ்ச்சியுடன்எழிலரசி

   டேய் என்னடா. பேர் சொல்லும்போதே இப்படி முகம் சிவப்பா மாறுது. வெக்கம்மா டா. “

    இதுக்காகதான்..  இப்படி கிண்டல் பண்ணுவேன் தான் அப்புறம் சொல்லுறேன் சொன்னேன். ” புன்னகையுடன் அமர்ந்தார்கள்.

   அனு, நிஷா, ராகினி மூவரும் திலகன், வேந்தன் உரையாடலை கேட்டு வரும்போது.. பிறகு பேசிக்கொள்ளலாம் என இருந்தார்கள்.  இப்போது இவர்களும் அறையில் தங்கள் வேலைகளை பார்த்துக்கொண்டே அறைவாயிலையும் பார்க்க.. ஆவலுடன் எதிர்பார்த்த வேந்தன்.. ஆகாஷிடம் முகம்கொள்ள மகிழ்ச்சியுடன் கூடிய புன்னகை தவழும் முகமாக நுழைவதை பார்த்தார்கள். பின் அமரும் வரையிலும் அவர்களின் கண்கள் இடம் மாறவில்லை. இவர்கள் ஐவரையும் ஆர்த்தி பார்த்துக் கொண்டுயிருந்தார். என்ன ஆனாது இவர்களுக்கு என்று!.. ‘

   ‘ சிறிது நேரத்தில் வெவ்வேறாக மனநிலையில் இருந்தவர்கள். ஒருமனநிலைக்கு வந்து.. தாங்கள்எடுத்துக் கொண்ட வேலையில் முழ்கினார்கள். சென்ற வாரம் அசைன் செய்து கொடுக்கப்பட்ட வேலைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டும்.. குறைகளுக்கு தீர்வுகளும், வழிமுறைகளும்.. நிறைகளுக்கு பாராட்டும்.. கூறி  கடந்த 1மணிநேரமாக நடந்த குழுகளின் கலந்துரையாடலை புன்னகை முகத்துடன் நிறைவு செய்தனர். ‘

   அனைவரும் எழும் வேலையில் ஆகாஷ்எல்லோரும் ஒருநிமிடம்.. இன்னைக்கு டீம் லன்ச் அடுத்த வாரத்திற்கு மாற்றியிருக்கு. ” முடிப்பதற்கு உள்ளாக..

   பலர் என்ன ஆகாஷ்.. அடுத்தவாரமாம?.. நாங்க..

   இருங்கப்பா.. நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல.. இன்னைக்கு என்னோட டிரிட்னு சொல்ல வந்தேன். ”

   .. எதுக்கு ஆகாஷ்

   சாப்பிட்டு முடித்ததும் சொல்றேன் தருண்.  நீங்க முன்னாடி போய் ஆடர் பண்ணுங்க. நாங்க பின்னாடி வரோம். ” எனக்கூறியதும் ஆகாஷ், வேந்தன் தவிர அனைவரும் சென்றனர்.

    ஏன்டா நீயே சொல்ல வேண்டியது தானே. எதுக்கு இப்ப என்னைய சொல்ல சொன்ன?.. “

    இல்லடா.. இன்னும் இரண்டுநாள் இல்ல ஒருவாரம் போகட்டும்.  நான் யாரிடமும் சரியா பேசினது இல்ல.. நான் இந்த விஷயத்தை அமைதியா சொல்ல.. எனக்கு விருப்பம் இல்ல. எல்லோரோடையும் நார்மலா பேசிட்டு பின்ன சொல்லிக்கிறேன். ” எனக் கூறிய படி சாப்பிட ஆபிஸ் உள்ளே இருக்கும் உணவகத்திற்கு சென்றார்கள். அங்கேயே அனைத்து விதமான உணவுகளும் கிடைக்கும்.

   ம்.. ஏதோ சொல்லுற. என்னிடமாவது இன்னைக்கே சொல்வியா?.. “

   தெரியல.. சந்தேகம்தான். ” இவர்கள் பேசிக் கொண்டுவர..

    முன்னே சென்றவர்கள் என்ன உணவுகளை வாங்களாம்?.. என பார்த்திருக்க.. ஆர்த்தி தன்அருகில் இருந்த மூவரையும்..

    அனு.. ஏன்?. நீங்க மூனுபேரும் காபி குடித்து வந்ததில் இருந்து.. அமைதியா ஏதோ யோசிச்சுட்டே இருக்கிங்க. வேந்தன் சாரை வேற அப்ப அப்ப பார்த்திட்டு இருக்கிங்க. தேவையில்லாம ஏதாவது யோசிக்கிறிங்களா?.. “

   ஆமா அக்கா.. நாங்க அவரபத்தி தேவையே இல்லாம யோசித்து வைத்துயிருக்கோம் நினைக்கிறோம். அவர் ஆபிஸ்ல நம்மகிட்ட நடந்துக் கொள்ளும் முறையே வேற போல அக்கா. ” எனக் கூறிய பின் திலகன், வேந்தன் உரையாடலைக் கூற..

   ஆர்த்தி மெல்லிய சிரிப்புடன்.. ” இருக்கலாம் ப்பா. வேந்தன் சார் நண்பரிடமும், நம்ம கூடவும் பழகும் விதம் வேற மாதிரி இருக்கலாம். “

   இல்லக்கா.. அவர் பிரண்டே சாரை பார்த்து.. நேத்து தான் உன்னைய பற்றி தெரிந்துக்கொண்டேனு கடுப்பாவா?. இல்ல சிரிப்பா?. தெரியல ஏதோ புது குரலில் திட்டினார். ”

   சரி விடுங்க. இப்ப சாப்பாட பார்ப்போம்.. பின்ன அவரை கவனிக்கலாம். ”

   ஆமாம் ஆமாம். நமக்கு முதலில் சாப்பாடுதான் முக்கியம். அதுவும் டிரிட் சாப்பாடு. என்னவெல்லாம் ஸ்பெஷலோ அதை வாங்கி சாப்பிட்டா தான் டிரிட் கொடுப்பவர் மனசு நிறையும். என்ன நான் சொல்வது சரிதானே?. ”

   அவர்களின் பின்னிருந்து.. ” ரொம்ப சரிதான் நிஷாதாராளாம நீங்க என்ன வேண்டுமோ வாங்கி சாப்பிடுங்க. அப்பதான் வாங்கி கொடுப்பவர் மனசு நிறையும். சரி தானே வேந்தன். ” ஆகாஷ் புன்னகையுடன் கூறி அவனை பார்க்க.

    ” ம்.. கண்டிப்பா. ” எதிரில் இருப்பவர்களை புன்னகையுடன் பார்த்தான்.

   நிஷா ஒருநொடி ஆடி.. பின்.. ” ம்.. சரி சரி சார். ” அருகில் இருந்தவர்களிடம்ஏன் ராகினி.. ஆகாஷ் சார் டிரிட்டுக்கு.. வேந்தன் சாரிடம் பதில் வருது. ஒன்னுமே புரியல. ”

   சாப்பிடும் நேரத்தில் இந்த மாதிரி.. சந்தேகம் கேட்க கூடாது நிஷா. “

   சிரிப்புடன்.. ம்.. சரி நீ ஆடர் பண்ணு. ” அனைவரும் தங்களின் உணவுகளை தனித்தனியாகவும், ஷேர் செய்தும் உணவை முடித்து.. இறுதியாக டசட்டுக்கு ஐஸ்கீரிம் சாப்பிட்டுக் கொண்டுயிருக்க..

   ‘  வேந்தன் மட்டும் ஜூஸ் மற்றும் குலோப்ஜாமை உணவாக சாப்பிட்டு முடித்தான். ஆகாஷ் தன் உணவில் கொடுப்பதற்காக கேட்டதற்கும் வேண்டாம் எனக் கூறி அவன் முறைப்பை பெற்றான். அவன் சாப்பிட.. இவன் போனையே பார்த்திருந்தான். அனைவரும் சாப்பிட்டவுடன் அரசிக்கு அழைக்க காத்திருந்தான். இவனையே பார்த்திருந்தனர் அந்த நால்வர். ‘

   அனு ஏன் வேந்தன் சார் சாப்பிடல?.. ஆனா என்ன காம்பினேஷன் டி இது?.. ஜூஸ், குலோப்ஜாம். ”

  அவரிடம் கேட்டு சொல்லட்டா?. ”

  ம்.. ” அவள் ஏதோ கூறவர..

   ராகினி, அனு ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும்மா?.. ” வேந்தன் அவர்களை கேட்க..

    திடுக்கிட்டு.. பின் அவர்கள் வேந்தன் கேள்விக்கு ஆமாம், இல்லை என்பது போல தலையாட்ட.. அவர்களின் பாவனையை பார்த்து.. அவனின் முயல்குட்டி.. கோயில் பார்த்தபோது செய்தது ஞாபகம்வர.. உடனே அங்கு இதுவரை யாரும் பார்த்திராத சற்று விரிந்த புன்னகை ஒன்றை வெளிப்படுத்தினான் வேந்தன்.

    சிலர் சாப்பிட்டவுடன் சென்றிருக்க.. இருந்தவர்கள் அவனை பார்த்தபடி இருந்தார்கள். ஆனால் அவன் இதனை கவனிக்கவில்லை. சாதாரணமாகி.. ” என்ன கேட்கனும் ?.. நானும் உங்கள மீட்டிங் ஆரம்பத்தில் இருந்தே கவனிக்கிறேன்.. வேலை தவிர ஏதோ என்னை பார்த்து நீஷா, நீங்க இரண்டுபேரும் சேர்ந்து பேசுறிங்க. தயக்கம் இல்லாம கேளுங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். ”

   ஆகாஷ் கூட அவர்களை கவனித்தான் தான். ஆனால் இவர்கள் எப்போதும் இதுபோல் பேசுவது வழக்கம். ஆனால் அப்பவெல்லாம் வேந்தன் கவனித்தார் போல் தெரியவில்லை. இப்ப கேட்பதை பார்த்தால் நார்மலாக பேச ஆரம்பிக்க வேண்டும் கூறியதால் பேசுவான் போல என நினைத்து வேந்தனையும்.. அவர்கள் மூவரையும் பார்த்தபடி இருந்தான்.

   இதுவரை வேந்தனின் செயலில் நெருடல் போலவே தோன்றியது. அவர் நடவடிக்கையில் சந்தேகம் தோன்றியதால்.. தங்களுக்கு பிடித்தமானவர்.. ஒருபோதும் தவறானவர் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என எண்ணி.. நிஷா தைரியம் பெற்றவளாக..அதுவந்து சார் நீங்க எப்படி பட்ட டைப்.. அமைதியா, நல்லா ஜாலியா பேசுவீங்களா?.. “

    திலகனுடன் இருக்கும் போது இவர்கள் மூவரும் எழுந்து செல்லும்போது கவனித்தான். அதனால் இப்படியும் இருக்குமோ?. என்று நினைத்து. பின் புன்னகையுடன்.. ” .. நீங்க என் பிரண்ட் கூட பேசியதை  பார்த்துயிருக்கீங்க. ம். “

    ஆம் என மூவரும் தலையாட்ட.. மீண்டும் புன்னகை உதிக்க. ” முதலில் உங்க மூனு பேரையும் ஒன்னு கேட்டுக்கிறேன்.. தயவு செய்து தலைய மட்டும் ஆட்டாதீங்க. வாய் திறந்து பதில் சொல்லிவிடுங்க. ஒகேயா. “

   ம். சரி சார். ”

   ம். தேங்க்ஸ். என்ன கேட்டிங்க?.. அமைதியா?.. இல்லையானா?..  நான் அமைதிதான் தாங்க. ”

   ஆனா நான் என் அரசிக்கு மட்டும்தான் வாயாடி, கேடி.. என மனம் நினைத்தது. ‘

    அடுத்து கூற ஆரம்பிக்கும் போது அவனின் போன் ஒலித்தது. அவன் எடுத்து பார்க்க ஆபிஸ் ரிசெப்ஷன்  என்று வர.. எதற்காக?. என எண்ணி.. ஒருநிமிடம் எனக் கூறி.. அழைப்பை ஏற்றான்.

   சொல்லுங்க ரோஷ்ணி.. என்ன விஷயம்?.. “

   “….”

   ”  எனக்காக?.. பேர் என்ன போட்டுயிருக்கு?.. “

      பேர் இல்ல வேந்தன். ஆனா பேரும், பொருளையும் உங்கிட்ட தான் நேரடியா சொல்லி கொடுக்கச் சொல்லியிருக்காங்களாம். பயம் எதுவும் இல்ல செக் பண்ணியாச்சு. உங்க இடத்திற்கு வந்து கொடுக்கச் சொல்லட்டா. ”

    இல்ல ரோஷ்ணி.. நான் உணவகத்தில் டீம்மோட இருக்கேன். இங்க வர சொல்லுங்க. நாங்க கடைசி கார்னரில் உட்காந்துயிருக்கோம். ” போன் வைத்தவுடன்..  அவர்களை பார்த்து.. ” கொஞ்சம் இருங்க.. ஒரு சின்ன வேலை. அதை முடித்தவுடன் சொல்கிறேன். ” எனக் கூறி வருவதை எதிர்பார்த்து காத்திருந்தான்.

    ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு.. வேந்தனின் முன்னால் நின்றனர் இருவர்வேந்தன் அவர்களையும்.. அவர் வைத்துயிருக்கும் பொருட்களை ஆச்சியத்துடன் பார்த்தான்.. மற்றவர்களும் இவருக்கா என்று?.. பார்த்தனர். ‘

    சார் நீங்க தான் தனுவா??. “  தனு என்ற பெயரில் அவன் உலகம் மறந்த நிலையில்ஆம் ‘ என தலையாட்ட.. ‘  தனுவா?.. என்று நினைத்தவர்கள்.. பின் அவனின் தலையசைப்பை பார்த்த மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அவர்களை இவன் கவனிக்கும் நிலையில் இல்லை.

   தனு உங்களுக்கு உங்க லைப்!. இந்த மலர்செண்டு.. பார்சல் அனுப்பி இருக்காங்க எனக் கூறி மலர்செண்டை முதல் கொடுத்து.. பார்சலை மேஜையின் மேல் வைத்து கையெழுத்து வாங்கி விட்டு சென்றார்கள்.

    வேந்தன் மலர்செண்டை பார்த்தும் விரிந்த புன்னகையுடனும், கண்கள் கலங்கியும் இருந்தான். அதில் பலவகையான பூக்கள் கலந்தும், பச்சை இலைகள் வைத்து..  இவற்றை பேப்பர் கொண்டு அழகாக சுற்றி பேக் செய்யப்பட்டு  இருந்த காதலின் பூச்செண்டு. ‘

    அவனை பார்த்திருந்தவர்கள் என்ன நினைப்பது?. சொல்வது?.. ஏன்?. எதற்கு?.. ஒன்றும் புரியா நிலை.

    ஆகாஷ் தான்.. ” வேந்தன். தனு யார்?.. அவருக்கு வந்தத நீ வாங்கியிருக்க. யார் அனுப்பியது?.. ”

    ஆகாஷ் நான் தான்டா அது. எழிலரசி அனுப்பியிருக்கா டா. ” புன்னகையுடன் கூற.. என்ன ?. எழிலரசியா?.. மற்றவர்கள் நினைக்க..

    ” ஆகாஷ் ஒருநிமிடம் இரு.என்று கூறி

     அவர்கள் கடைசியில் இருந்ததால் யாரும் இல்லை. இவர்களில் கூட 5 பேர் மட்டுமே இருக்க.. சற்று வெளிச்சத்திற்கு சென்று.. முகம் பலவகையான உணர்வுகளை முகத்தில் காண்பித்து பூச்செண்டுடன்.. அவன் மட்டுமேயான புகைப்படம் எடுத்தான். வேந்தனா!. என்று எதிரில் இருப்பவர்கள் நினைக்கும் அளவிற்கு

    பின் அவர்கள் அருகில் வந்து.. ஆகாஷிடம் போனைக் கொடுத்து..” ஆகாஷ் நான் பார்சல் பிரிக்க போறேன்.. வீடியோ எடு. ” எனக்கூறி..பெட்டியினை மெதுவாக திறந்தான். திறக்கும் போதே மெல்லிய இதம் தரும் வாசனை.

    அனைவருக்கும் ஆர்வம். வேந்தனின் நடவடிக்கையால். அவன் பார்சல் திறந்ததும் அவர்களையும் இதமாக்கியது அந்த வாசனை. கிளம்பலாம் என்றாலும் ஆர்வம்.. 5நிமிடத்தில் சென்றுவிடலாம் என பார்த்தார்கள்.

    முதலில் அழகான வேலைபாடு அமைந்த பூச்சாடி, இளம்பச்சை வண்ணத்தில் காபி கப், சூடாக, குளிர் அதிக நேரம் இருப்பது போல வியாக்கியூம் மக். சில வகையாக குக்ஸ், ரெப்ரஷிங் கீரின்டீ, சன்கிளாஸ், பைக் கீசென், ரூம் பிரஷ்னர், போட்டோ பிரேம். இரு ஸ்விட் பாக்ஸ் என மேலும் சில பொருட்களால் டேபிள் நிரம்பியது. அவற்றை எடுத்தும், பார்த்தும் என இருந்த வேந்தன் புன்னகை மட்டும் மாறாமல் இருந்தது. இந்த முயல்குட்டி என்ன பண்ணியிருக்கா?.. நான் வேலைபார்ப்பதா?. வேண்டாம்மா?.. ‘

   ஆகாஷ் வீடியோ எடுத்ததுக்கொண்டே.. ” வேந்தன்.. வந்துட்டே இருக்கு. இன்னும் உள்ள ஏதாவது இருக்கா?. அவங்க எப்படா வாங்கினாங்க?. உனக்கு முக்கியமா ஆபிஸ், பைக் நீ போகும் போது தேவையானது எல்லாம் இருக்கு. இன்னும் வீடு ஒன்னுதான் பாக்கி. “

    அங்கேயும் இருக்கும்டா. போனா தெரியும். ”

    ஆர்வம் மிகுதில் அனுவேந்தன் சார்.. யார்?. உங்களுக்கு இதை அனுப்பியது?.. ”

    .. நீங்க இங்கதான் இருக்கிங்களா?. என நினைத்து.. புன்னகையுடன்என் மனைவி எழிலரசி. ” வேந்தன் கூறவும் அவனின் போன் ஒலித்தது. அவன் தன்னவளாக இருக்க வேண்டும் என எண்ணியபடியே பார்த்தான். அவனவள் அவனை ஏமாற்றவில்லை.

    மனம் முழுவதும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி மட்டுமே.. அவன் அருகில் யார் இருக்கிறார்கள் கவனிக்கும் நிலையில் இல்லாமல்..  ஹேய் முயல்குட்டி இப்ப தான்.. ” எதிரில் இருந்தவள்.. என்ன கூறினாளோ.. வேந்தன் அருகில் இருந்தவர்கள்.. அப்போது தான் அவன் உணர்விற்கு வந்தார்கள். அவர்களை பார்க்க..

    ஐவரும் அதிர்வு நிலையில் இருந்தார்கள். ஏற்கனவே மனைவி என்று கூறியது. இப்போது அமைதியின் மறு உருவமோ!. என நினைக்க வைத்தவன்.. இப்போது யார்யார்?. இருக்கிறார்கள் என்பதை கண்டுக்கொள்ளாமல்.. துள்ளலுடன் பணிபுரிவோர்  அனைவர் முன்பும் செல்ல அழைப்பை எடுத்தவுடன் கூறியதால்.. அவனால் அதிர்வு நிலையில் இருந்தார்கள். இவன் தான் அவர்களை முழிப்புடன்!. பார்த்தான். ‘

    ஆகாஷ் நீங்க எல்லாம் போங்க..  நான் பின்ன வரேன். ” எனக் கூறியுடன் சற்று தள்ளி நின்று பேச ஆரம்பித்தான்.

    சென்ற அவனையே பார்த்தவர்கள்.. ஆகாஷிடம்.. ” ஆகாஷ் அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?.. எப்ப சார் ஆச்சு. இங்கையா?. இல்ல லீவ் போட்டாங்களே அப்ப அவர் ஊரிலா?.. லவ் மேரேஜா சார். ” ஆர்த்தியும் கூட சேர்ந்து ஆர்வத்தில் கேட்க..

    நீங்க கேட்ட கேள்விக்கு?.. நான் பதில் சொன்ன நல்லாயிருக்காது.. வேந்தன் தான் சொல்லனும். ” அவனை பார்த்தவன்.. ‘ ஏனா எனக்கே தெரியாது?. ‘

    சரிங்க வாங்க போகலாம். ” எனக் கூறியவுடன்.. அவர்கள் வேந்தனை பார்க்க புன்னகை, புன்னகையுடன் கூடிய பேச்சு மட்டுமே அவன் முகத்தில். அவனை அவர்கள் எதிர்பார்த்த முகத்தை.. வாஞ்சையுடன் பார்த்துவிட்டு அவரவர் பணியை பார்க்க சென்றார்கள்.

    அவர்கள் சென்றதை பார்த்த பின்.. வேந்தன் அவர்கள் உட்கார்ந்துயிருந்த இடத்தை நோக்கி வந்தான். வந்தவன் தன் முன்னால் இருந்த பொருட்களை பார்த்து.. ” முயல்குட்டி என்னடி இதெல்லாம்?.. ” அவனின் முகம் வருத்ததில் ஆழ்ந்தது.

   

      

   

    

    

   

    

   

    

   

    

    

    

    

    

  

   

     

    

    

     

  

    

   

    

   

   

    

    

    

    

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!