Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 18.2

மாடியில் தான் ஜோஷ்வா அறை.. எனவே ஜென்சி வேகமாய் படிகட்டிற்கு வர மேலே ஏற அவசியமின்றி அவனும் அங்கே மேற்படியிலே தான் நின்றான்.

“ஹோ.. எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தாவுதா..”

பல்லை கடித்தவளுக்கு பதிலாய் சிரிப்போடு கண்சிமிட்டினான் ஜோஷ்.

அவன் மாடியேறும்போது தான் ஜென்சியை பற்றி அமல்ராஜ் பேசுவது காதில் விழுக அதில் கடுப்பாகி அவன் அங்கே வரும்முன் ஜென்சி பதில் கூறியது கேட்க அப்படியே நின்றுவிட்டான்.



Advertisement

“சிரிக்காத..?? எனக்கு செம்ம காண்டாகுது..”

“ஏன் ம்மா இவ்வளவு கோபம்.. இப்ப என்ன ஆகிடுச்சு..”

“என்ன ஆகணும்.. இந்த பொக்கே இப்ப எதுக்கு வந்து  கொடுத்த..”

Advertisement

“அதான் சொன்னேனே.. நேத்து நீ கொடுத்தேல.. ஸோ ரிட்டன் கிஃப்ட்.. அதை சொல்லி தானே ஜென்சி கொடுத்தேன்..”

Advertisement

“அப்படியே பச்சை மண்ணு மாதிரி பேசாத.. அத்தனை பேர் முன்னாடி அவசியம் கொடுத்தே ஆகணுமா.. அவங்க என்ன நினைப்பாங்க தெரியாது..? வேணும்னு  தானே இதெல்லாம் பண்ற..”

“அப்படில இல்ல ஜென்சி.. உண்மையை சொல்லணும்னா என்னோட சந்தோஷத்தை வெளிப்படுத்த இந்த பொக்கேவோட ஒரு வார்ம் ஹக் கொடுக்கணும்னு தான் நினைச்சு வந்தேன்.. ஆனால் எல்லாம் இருக்கவும் தான் அதை செய்யல தெரியுமா..”

என விஷமமாய் சொல்லி ஒரு அடி அவள் முன்னால் எடுத்து வைக்கவும்,

Advertisement

“ஸ்டாப் தேர்.. உங்கப்பாட்ட நான் பேசுனதை வைச்சு என்னிடம் அட்வாண்டேஜ் எடுக்க நினைக்காத..!! கொன்றுவேன்..”

என விரல் நீட்டி மிரட்டினாள்.

“ஹே.. நீ டாட்க்கு பதில் கொடுக்க தான் அப்படி பேசினேனு தெரியும்.. சத்தியமா அதை வைச்சு உன்னிடம் அட்வாண்டேஜ் எடுக்க மாட்டேன்..” என்றவன்

” இந்த கட்டிபுடி சமாச்சாரம்.. இந்த பொக்கே வாங்கும்போதே யோசிச்சது..”

என கண்சிமிட்ட அந்த பொக்கே கொண்டே அவன் தோளில் அடித்தாள்.

“வாய திறந்தாலே பொய்..”

“ஹே.. ரோஸ் பெடல்ஸ் கொட்டுது பார்..” என அடிக்காமல் தடுத்து,

“நேத்து உன்னுட்ட ஒரு வாக்கு கொத்தேனே.. அது சும்மாகாச்சுக்கும் நினைச்சியா..? ஐ ரியலீ மீன் தட்..”

என ஜோஷ் சொல்ல  தலைசாய்த்து இடுப்பில் கைவைத்து,

“ஹோ.. அப்போ என்ன கேட்டாலும் உண்மையை தான் சொல்லுவ இல்ல..” என புருவம் உயர்த்தினாள்.

“யா.. டெஃபனேட்லீ..”

“ஓகே..” என இழுத்து விழியை சுழட்டி யோசித்தவள்

“பேசும் போது அங்கிள்ட்ட ஏதோ சவால்னு சொன்னேல.. அது என்ன சவால்..”

என மனதில் உறுத்தியதை சமயத்தில் கேட்டுவிட்டாள்.

அவள் கேள்வியில் அர்த்தமாய் புன்னகைத்தவன்,

“அது தானே சொல்றேன்.. ஆனால் இப்ப இல்ல..”

என்று  சொல்லவுமே, “அதானே பார்த்தேன்..” என்பதுபோல் நக்கலாய் அவள் பார்க்க,

“இப்ப வேணானு தான் சொன்னேன்.. அது பெரிய கதை.. இப்ப சொல்ல முடியாது.. அன்னைக்கு மாதிரி நைட் கார்டன்ல மீட் பண்ணலாம்..” 

என அவன் சொன்னது ஏற்புடையதாய் இருக்கவும் அதற்கு ஒப்புக் கொண்டு தன் அறைக்கு வந்துவிட்டாள்.

அவனை அடித்ததில் சில இதழ்கள் விழுந்திருந்தாலும் மிகவும் வசீகரமாய் இருந்த பொக்கேவை தன் அறையில் இருந்த ஃப்ளவர் வாஷில் பொருத்தினாள்.

அதன்பின் அவள் நேரம் முழுவதும் ஜோசஃப், அனீயுடன் தான் சென்றது. மும்பைவாசியான அனீயும் முதல்முறை இங்கே வருவதால் ஊட்டியை சுற்றி பார்க்க விரும்பியவள்  ஜென்சியையும் வற்புறுத்தி தங்களோடு இணைத்து கொள்ள இருவருக்கும் இடையில் இருந்த நட்பு இன்னும் நெருக்கமானது.

தானும் ஜென்சியும் செல்லலாம் என்ற ஜோஷ்வாவின் ஆசையில் மண்விழுந்ததில் லேசாய் அவனுக்கு பொறாமை தான் என்றாலும் அவள் அவர்களோடு சந்தோஷமாய் இருப்பதை கண்டு அவனுக்கும் மகிழ்ச்சியே தான்…!!

ஆனால் இவை எல்லாம் கவனித்து வந்த அமல்ராஜிற்கு உவப்பாக இல்லை. காலையில் கோபத்தில் இருந்தபோது உணராத ஜோசஃப்பின் மௌனம் இரவில் யோசித்து பார்க்கும்போது தான் உறைத்தது.

ஜோஷ்வா பெயரை கேட்டாலே கோபமடையும் மகன் தன் எதிரே நின்றபோது  ஒன்றும் சொல்லாதது..!! ஜென்சி ஜோஷ்வாவை காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அவளை ஆதரிப்பது, அவளுக்கு ஆதரவாய் பேசுவது என மகனின் மாற்றங்களுக்கு காரணம் என்ன என்று யோசித்து பார்த்தார்.

இதில் ஜோஷ்வா பேசியது வேறு மூளையில் ரிப்பிட் மோடில் ஓடிக் கொண்டிருந்தது.

‘தன் ஈகோ வெல்ல வேண்டும் என எத்தனையோ வகையில் அவனை முறியடிக்க முயன்றும் அதனை அவன் எளிதாய் கடந்தது தந்தையாய் அவர் பெருமை கொள்ள வேண்டும்..!! ஆனால் எங்கே தான் தோற்றுவிடுவோமோ என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பெற அதுவே உயர் இரத்த அழுத்தத்தை தந்தது.

தன் வாழ்வில் தோல்வியே எய்தாத மனிதருக்கு அதன் ஆழம்வரை ஜோஷ்வா தள்ளிவிட்டால் மீள முடியுமா என்ற பயம் அவரிடம் ஆழ்மனதில் தத்தளிப்பது அவர் மட்டுமே அறிந்த இரகசியம்..!!

இன்றும் அவ்வாறே கையில் வைத்திருந்த சிக்ரெட்டை ஊதியபடி  பால்கனி அருகில் நின்று யோசித்துக் கொண்டிருந்தார் அமல்ராஜ். இது எத்தனையாவது சிக்ரெட் என அவருக்கே தெரியாது. இன்னமும் தணியாத தன் ஆதங்கத்தை புகை மூலம் வெளிப்படுத்த அந்நேரம் அவரை தேடி வந்த ஜோசஃப்,

“அப்பா.. என்னதிது.. உங்களை சிக்ரெட் பிடிக்காதீங்கனு சொல்லிட்டு இருக்கோம்.. நீங்க  என்ன செயின் ஸ்மோக்கர் மாதிரி.. இத்தனை எடுத்து..!!”

என அவர் கையில் இருந்ததை பிடிங்கி கீழே போட்டான்.

“விடுடா.. இது ஒன்னு தான் என் டென்ஷன் குறைய உதவுது.. அதுவும் பொறுக்கலையா..”

“ஏன் இப்படி பேசுறீங்க ப்பா.. உங்களுக்கு என்ன டென்ஷன் இப்ப..”

“அதானே.. உனக்கு எப்படி தெரியும்.. நீ தான் காலைல அவன் பேசும்போது யாரோ எவரோ.. எனக்கென்னானு நின்னுயே..”

கோபம் குறையாமல் சொல்லியவர் தோளில் கைவைத்து,

“ப்பா.. முதல்ல டென்ஷன் ஆகாதீங்க.. இப்படி உட்காருங்க..”

என அங்கிருந்த சிட் அவுட்டில் அமர வைத்து தானும் அமர்ந்தவன்,

“வேற நான் என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க.. அவனிட்ட என்ன காரணம் சொல்லி சண்டை போடுவேன்.. நிஜமா உங்க ரெண்டு பேர் நடுவே என்ன நடக்குதுனு தெரியாமா..” என்றான் நிதானமாய்…

ஜோசஃப்வின் இந்த பொறுமையான பேச்சு அவருக்கு எதையோ உணர்த்த,

“ஜோஷ்வா உன்னுட்ட எதாவது சொன்னானா..?? அதை நம்பிட்டு நீயும் இருக்கியா ஜோசஃப்..”

தன் பதட்டத்தை மறைத்து கோபமாய் கேட்க,

“அவன் என்ட்ட எதுவும் சொல்லல ப்பா.. உண்மையில அவன் என்னை மதிச்சு எதுவும் சொன்னதே இல்ல.. எல்லாம் அவனுக்கு அவ்வளவு தலைகணம்னு நினைச்சு இருந்தேன்… ஆனால் நான் தான் சுயமா சிந்திக்காம அடுத்தவங்க கைபாவையாவே இத்தனை வருஷம் இருந்திருக்கேன்னு புரியுது.. எவ்வளவு பெரிய முட்டாள்ல ப்பா நானு..”

 விரக்தியாய் அவன் பேசவும் அவர் முகம் கலக்கமாய் மாறியது.

ஜோஷ்வா சிறு வயதில் இருந்தே ஏட்டிக்கு போட்டி நிற்பவன்.. அதனால் அவனிடம் வந்த பிரச்சனைகள் எதுவுமே அவரை கலங்க வைத்தது இல்லை.

ஆனால் ஜோசஃப் அப்படி இல்லவே..!! தான் வலது என்றால் வலது பக்கமும் இடது என்றால் இடது பக்கமும் திரும்பும் தன் சொல் தட்டாத பிள்ளை. தானே சில நேரங்களில் கோபப்பட்டு பேசினாலும் எதிர்த்து சண்டைபோட்டது இல்லை. அவன் தன்மீது கொண்டுள்ள நேசமும் மரியாதையும் எத்தனை உயரம் என்று அவருக்கும் தெரியும்.. பல நேரங்கள் அதை எண்ணி கர்வம் கொண்டுள்ளார்.. அவனை போலவே அவருக்கும் ஜோசஃப் என்றால் உயிர் தான்.

அத்தகைய தன் அபிமான மகன் ஏமாற்றமாய் பேசுவதை கேட்கவே அவருக்கும் சுருக்கென்றது.

தன் கோபமெல்லாம் மறந்து,

“ஜோசஃப்.. நீ எவ்வளவு திறமையானவனு நம்ம பிஸ்னஸ் வட்டம் எல்லாருக்கும் தெரியும்.. நீ எதையும் நினைச்சு குழப்பிகாதே..” அவனிடம் தணிந்து பேசினார்.

“போதும் ப்பா.. இனியும் என்னை முட்டாளாவே இருக்க வைக்க நினைகாதீங்க… நான் உங்களுக்கு நூறு சதவிதம் உண்மையா இருந்தேன்… அதே மாதிரி தான் நீங்களும் எனக்கு இருக்கீங்கன்னு நான் நம்பியிருந்தேன் ப்பா.. கண்ணை மூடிட்டு நீங்க சொல்வதை எல்லாம் கேட்க காரணம் உங்க மேல நான் கொண்ட நம்பிக்க தான்..!! அதை தவறா உபயோகிக்க உங்களுக்கு எப்படி ப்பா மனசு வந்துச்சு..”

என்று அவன் வலியோடு சொல்ல,

“அப்படி எல்லாம் இல்லடா.. இங்க பார்.. நான் எல்லாத்தையும் சொல்றேன்.. நீயே என் பக்கத்தில் இருந்து யோசிச்சு பாரேன்..”

என்று எதையோ சொல்ல முனைந்தார்.

“இனிமே எனக்கு எதுவும் நீங்க சொல்ல வேண்டாம் ப்பா.. தெரிஞ்சுகிட்ட வரை போதும்..” என்று தடுத்தவன்,

“எனக்கு எப்பவும் ஹீரோ நீங்க தான் ப்பா.. ஜோஷ் மாறி உங்களை எதிர்த்து நிற்க எப்பவுமே என்னால முடியாது.. உங்களை கஷ்டபடுத்தி என்னால் எதுவும் செய்ய முடியாது…

உங்க பிஸ்னெஸ்… உங்கள் விருப்பம் ப்பா..உங்களுக்கு என்ன தோணுதோ பண்ணுங்க.. உங்க இஷ்டபடி என்ன வேணாலும் செய்ங்க…  நீங்களும் உங்க தம்பியுமாகவே உங்க ராஜ்ஜியம் முழுவதையும் ஆளுங்க… ஆனால் நான் எந்த தப்பிற்கும் இனியும் தெரியாமல் கூட உடந்தையா இருக்க மாட்டேன் ப்பா.. பாவ கணக்கில் எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு.. இதுவரை செஞ்சதே என் ஆயுசுக்கும் போதும்…”

ஏதோ முடிவு எடுத்தவனாய் அவன் பேச,

“உளராத ஜோசஃப்.. என்ன சொல்ல வர..”

என்று அவர் கோபமாய் சொல்ல,

“என்ன நான் உங்க தொழில் இருந்து  முழுமையா விலகிறேன்னு சொல்ல வரேன்..” என்றான் தீர்க்கமாய்..

“பைத்தியமா உனக்கு..”

என்று அவர் இரைந்ததற்கு அமைதியாகவே,

“இல்ல ப்பா.. இப்போ தான் தெளிஞ்சு இருக்கு..”

என்று சொல்லி அவன் சென்றுவிட அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்து போனார்.

அவன் சொல்ல வருவது முழுமையாய் உறைத்த போது கோபத்தில் கைகள் நடுங்க தடுமாற்றதோடே மற்றொரு சிக்ரெட்டை பத்தவைத்து ஆழமாய் புகையை இழுத்தவர்

“போடா.. இந்த அமல்ராஜ் யாரை நம்பியும் இல்ல..” என உறுமினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!