Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 28. 2

 

நாம் 28 (2)

 

    இனிப்பகத்திற்காக இன்று கவுனி அரிசி( பிளாக் ரைஸ்), தேங்காய்பால் , நாட்டுவெல்ல பாகு , நெய் , முந்திரி, ஜாதிக்காய் , ஏலக்காய் , கிராம்பு மூன்றும் சேர்த்த பொடி இவற்றால்  செய்யப்பட்டகவுனிஅரிசி அல்வா ‘.



Advertisement

     யோகா, சுரபி, ஆர்த்தி மூவரும் சிரிப்புடன் சாப்பிட.. அரசி பாவமாக வேந்தனை பார்த்தும் பார்க்காமலும் சாப்பிட., வேந்தன் எதுவும் சாப்பிடாமல் தன்னவளை முறைத்துக் கொண்டுயிருந்தான்.

    அரசி வேந்தனிடம் சுரபி கூறி.. தான் மனதில் நினைத்தவுடன்.. அவன் வந்ததை கூற வரும்போது.. அவளின் சுவாசம், அடிவயிறு, தொண்டையில் ஏதோ ஒன்று பிடிக்காமல்.. வேந்தனின் கையை பிடித்திருந்தவள் வாயை முடிக்கொண்டு வேகமாக பாத்ரூம் செல்ல.. அவளின் பின்னால் பதட்டத்துடன் வந்தவன்.. ஏன்என்று கேட்கும்முன் அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். சில நொடிகள் தலையை பிடித்திருந்தவன்..  பின் ஒரு கையால் தோளை பற்றியும் மறுகையால் தலைமுடியை ஒதுக்கிவிட்டும், நெஞ்சை நீவி விட்டான்.

      காலையில் சாப்பிட்டது அனைத்தும் வெளியேறி இருந்தது. ‘ என்ன ஆச்சு?. தன் முயல்குட்டிக்குகண்கள் கலங்கியும், மனம் படபடப்புடன் பார்த்தான். பின் அவளிடம் முடிந்ததா என்று உறுதி செய்து.. அவளை வாய், முகம் சுத்தம் செய்ய வைத்து. முடிகளை காதின் பின் ஒதிக்கியவன்..

Advertisement

    உள் வந்த வேகத்தில் கதவு முக்கால் பாகம் திரும்பி முடி இருந்ததால்.. தன்னவளை இறுக்கி அணைத்து நெற்றியில் அழுத்த முத்தமிட்டு.. பின் வெளிவந்தவர்கள்.. முதலில் அங்கு ஏற்கனவே யோகா எடுத்து வைத்துயிருந்த சுடுநீரை குடிக்க வைத்தான். பின் லெமன் ஜூஸ் சிறிது குடிக்க வைத்தான். வேந்தனுடன் சேர்த்து நால்வரும் பதட்டத்துடன் இருந்தனர்.

Advertisement

    ஆனால் அவளோஎன்ன திட்டு விழப்போகிறது?. ‘ என்ற பயத்துடன் இருந்தாள்.

    அவளவனோ.. ” என்ன பண்ணியது மு.. அரசி?. ஏன் இப்படியாச்சு?. சரி காலையில் இருந்து ஏதாவது இந்த வெயிலிற்கு குடித்தியா?. ஏன் ஏசி ஆப் ஆகியிருக்கு?. ” அவளை பதில் கூற விடாமல் கேள்வியாக கேட்க.. 

    பயந்துக் கொண்டே.. ” நான் எதுவும் குடிக்கல தனு. தனியா இருந்ததால ரூம் கதவை திறந்து வைத்திருந்ததால் ஏசிய ஆப் பண்ணி வைத்துயிருந்தேன். ”

Advertisement

   அப்போது அவளை முறைக்க ஆரம்பித்தது.. ” அது அடித்தளம் போடுவதை பார்க்க அங்க சிறிதுநேரம்  நின்றுவிட்டு வந்தது.. இங்க அல்வா செய்வதை பார்த்திட்டு வரும்போது.. அங்கு நான்வெஜ் பிரிவில் கருவாடு வைத்திருந்தாங்க. அந்த வாடை எனக்கு பிடிக்காது.. அதனால அந்த வாடை மறக்க வெஜ் பிரிவில் கொஞ்சம் நேரம் நின்னுட்டுயிருந்தேன். முதல்தடவை இல்ல சமையல்அறையில் இருந்த சூடு, வெயில் சூடு, அந்த வாடை எல்லாம் சேர்ந்து தலைவலிக்க ஆரம்பித்தது. ”

    நீ வரும்போது சமையல்அறை கதவு பக்க வந்தியா.. அப்ப திருப்ப அந்த வாடை திருப்ப வந்துச்சா.. அதான் வாந்தி வந்துருச்சு. ஆனா நீ கவலைபடாத தனு இன்னும் இரண்டு, மூனுநாளில் பழகிடும். ” அவள் கூறியது கேட்டதும்.. என்ன முகபாவம் என்று தெரியாத நிலையில்..  வேந்தன் அவளிடம் ஒன்றும் கூறவில்லை.

    மூவரிடமும் திருப்பி.. ” நீங்க சாப்பிட்டிங்களா?.. ” ஆம் என தசையசைக்க..

   போன் செய்து மூன்றுபேருக்கு இனிப்பு மற்றும் அவர்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல என தனியாக எடுத்து வருமாறு சொல்லிக் கொண்டு இருக்க.. அவனின் கையை சுரண்டினாள் அவனவள்.. ஏன் அழைத்தால்? என தெரியுமாகையால்.. அவன் திருப்பவில்லைதனு மாமா.. ” அவளை முறைத்து அவளிற்கும் கூறி வைத்தான்.

    எழில் உனக்கு கருவாடு எப்ப இருந்து பிடிக்காதது?. ” புன்னகையுடன் வேந்தனை பார்த்தவாறு  கேட்க..

   அவளிற்கு ஏதோ புரிய.. ” தெரியல அண்ணி. ஆனா இனி தனுக்காக சாப்பிட்டு பழகிக்கொள்வேன். ”

   அவளை முறைத்தவாறே.. ” அதுக்கு ஒன்னும் அவசியம் இல்ல. வர ஸ்விட்டை சாப்பிட மட்டும் வாயதிற.. வேற எதுக்கும் வாய திறந்து பேசாம.. அமைதியா இரு. ” சற்று கோபமாக கூறிக்கொண்டே நால்வரும் ஒன்றாக அமர விரிப்பானை விரித்தான்.

    அவர்கள் அங்கு அமர.. வேந்தன் அரசி சேரில் அமர்ந்த நேரத்தில் இனிப்பு வர நால்வரும்  எடுத்துக் கொள்ள.. இருவரின் நடவடிக்கையை பார்த்து பதட்டம் போய்.. சிரிப்புடன் சாப்பிட ஆரம்பித்தனர்.

   அரசியோ தனுவை பார்த்தும் பார்க்காதது போல.. இன்னும் சற்றுநேரத்தில் தன்னை அடிக்காத குறையாக தன்னவனிடம் திட்டுவாங்க போவது தெரியாமல்.. அல்வாவையும்.. தன்னவனையும் ரசித்து முழுங்கிக் கொண்டுயிருந்தாள்.

    வேந்தன் தன் முன்னால் இருந்த அரசியின் குறிப்பை பார்த்திருந்தவன்.. சில நொடிகளில் அவளை முறைத்துக் கொண்டுயிருந்தான். அவள் வந்ததில் இருந்து அமைதியாக உட்காராமல்.. ஏதாவது மாற்றி மாற்றி செய்துக் கொண்டு இருந்திருக்கிறாள். ஒரே நாளில் இதையெல்லாம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. இவள என்ன பண்ண?.

   ஸ்விட் டிரையல் செய்ய தனியாக ஸ்டால் வைக்க முடிவு செய்திருக்கிறாள். ‘

   வரும் வாடிகையாளர்களுக்கு அவர் ஆடர் செய்த உணவுடன் கொடுக்கும் போது உணவை சாப்பிட்டு பின் இனிப்பை கொடுப்பது கட்டாயபடுத்துவது போல கூட இருக்கலாம்.. அதனால் எந்த அளவிற்கு ஸ்விட்டை ரசித்து உண்டு அதன் நிறை, குறைகளை சரியாக கூறுவார்கள் என்று தெரியாது

     இதுவே தனியாக வைத்தால்.. அங்கேயே நிற்பதால் கருத்து கூறவும் முடியும்.. அவர்களை கட்டாய படுத்தாமலே சாப்பிட வைத்தது போலவும்  இருக்கும். மற்றென்று அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர் கருத்து கூற வேண்டிய அவசியமும் இல்லை.. முகபாவத்தை வைத்தே பிடித்துயிருக்கிறதா?. இல்லையா என அறிந்துக் கொள்ளவும் முடியும்

    ஸ்டால் கண்காணிப்பு காமிர இருக்கும் இடத்தில் இருக்க வேண்டும். ‘ 

   சிலருக்கு நட்ஸ் அலர்ஜீ இருக்கும்.. இல்லையெனில் அவர்கள் ஆடர் செய்த உணவில் சரியாக பார்க்காமல் ஆடர் செய்துபின்.. ஏதாவது உடல்நிலை பாதிப்பு வந்து தாங்கள் வற்புறுத்தி கொடுத்த இனிப்பினால் தான் என்று கூறினால்.

   அதற்கு தனியாக வைத்தால் இனிப்பின் பெயரை பார்த்து அவர்களுக்கு விருப்பம், உடலிற்கு பிரச்சனை இல்லை என்றால் மட்டுமே உண்பார்கள். ஆரம்பநிலையில் இருக்கும் கடையின் பெயர் கெடுக்க, பழிபோட வேண்டும் என சிலமணிநேரம், இல்லை சிலநாட்கள் கழித்து.. ஏதேனும் பொய்யான காரணம் கூறி.. வீண் மனஉளைச்சல் கொடுக்க நிறைய வாய்ப்புள்ளது. அப்போது கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் வந்தால்.. அதனால் இது முன்னெச்சரிகையான நடவடிக்கை. ‘

    ஒரு இனிப்பை பற்றிய கேள்வி அடங்கிய ஒரு கருத்து படிவத்தை தயார்செய்து வைத்துயிருந்தாள். ‘

   இதையும் அவர் கட்டாயபடுத்தாமலும், அவர்கள் படிவத்தை நிரப்பி கொடுத்தாள் அவர்களின் மொத்த உணவு தொகையில் சிறு சதவீதம் தள்ளுபடி கொடுக்கலாமா?. தங்களிடம் கேட்க.. படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து வைத்திருந்தாள்.

    இனிப்பை வைப்பத்திற்கு மரம் மற்றும் கண்ணாடியானால் பெட்டியை பற்றி அரசியின் அண்ணா அமுதன், கார்த்திக் அண்ணாவிடம் அதை பற்றிய விவரத்தை கேட்டுயிருக்கிறாள். 

   கட்டிடம் கட்ட புதிகாக கூடுதலாக இடம் இருப்பதால்.. அரசின் அனுமதி வாங்க.. முன்பு தான் கொடுத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால்.. இரு கடைக்களும் எவ்வாறு இருந்தால்..  எல்லா வகையிலும் வசதியாக, மக்களை கவரும் விதமாக, எதிர்காலத்திற்கு தகுந்தாற் போல இடம்விட்டு என சில கட்டிட வடிவமைப்பை.. நெட்டில் தேடி சிலவற்றை தேர்ந்தெடுத்து.. தன்னிடம் கருத்து கேட்க எடுத்து வைத்துள்ளாள். ‘

   இவை அனைத்தும் ஒரேநாளில் செய்தது ஒன்று.. அதைவிட இதுபோல உணவு செய்யும் போது.. ஏற்படும் நெடி, வெப்பம் இவற்றை பழக ஒருவாரம் ஆகும் என்பதால் தெரிந்து தான் கண்டிப்பாக.. நடுவில் தண்ணீருக்கு பதிலாக இருமுறை ஜீஸ் குடிக்க கூறியிருக்க..

   குடிக்காமல் இருந்து  உடல்சூட்டினால் தலைவலியை உருவாக்கியும், கடுவாடு வாடை பற்றி கூறாமல்.. வாந்தி எடுக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளாள். இதைபற்றி நான் அறியாமல் இருந்து.. மீண்டும் தன் முயல்குட்டியை கவனிக்க தவறவிட்டேனே.. அவனுக்கு தன்மேலும் கோபம் வந்தது. மூவரும் இனிப்பு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே  கிளம்பிவிட்டார்கள்.

     அவர்கள் சென்று கதவை சாற்றிய.. அடுத்த நொடி தன்னவளின் கையை பிடித்திழுத்து சுவற்றில் சாய்த்து இடதுகையை சுவற்றை தாங்கியும், வலது கையால் அவனவளின் தாடைபிடித்தவன்.. ” உனக்கு கொஞ்சமாவது என் மேல அக்கறையே, பயமோ இருக்காடி. நான் சொல்வதை கேட்கமாட்டாயா?. இல்ல இவன் என்ன சொல்வது?. நான் என்ன செய்வதுனு.. நான் அவ்வளவு தூரம் சொல்லிட்டு போனத செய்யாம இருந்துயிருக்க. ”

    அத்தம்மா.. வேண்டானு சொல்லியும்.. உன் உடம்பை நான் பார்த்துக் கொள்கிறேனு எல்லோர் முன்பும் சொன்னேன். இதெல்லாம் எந்த நம்பிக்கையில்டி சொன்னேன். என் முயல்குட்டி நான் சொல்வதை கேட்டு.. அதன்படி நடந்துக்கொள்வானு தானே. ஆனா தனியா இருக்க முதல்நாளே.. எதுவும் ஒத்துக்காம வாந்தி எடுத்து தெரிந்தா.. என்னைய என்ன நினைப்பாங்க?. அவங்கள விடு.. உனக்கு சின்னதா ஏதாவது ஆனாலே.. நான் எவ்வளவு பயப்படுவேனு உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்ல. ” அவள் ஏதோ கூற வர..

   வாய திறந்த நான் இருக்க கோவத்திற்கு கண்டிப்பா கன்னத்தில் அறைவிழும். ” கேட்டவளோ அதிர்ந்து.. ‘ அவளின் பூசுபூசு கன்னம் என்றால் அவ்வளவு உயிர் அவனிற்கு.. அந்த கன்னத்தில் அடிப்பேன் என்று கூற வைத்து விட்டேனே. சாரி தனுமாமா.. ‘ என அவள் கலங்கி அதன் வெளிபாடு கண்களில் கண்ணீர் வெளிவந்து அவன் பிடித்திருந்த விரலை அடைய.. விழிநீரை துடைத்து விட்டவன்.. கன்னத்தில் ஆழந்த முத்தத்தை வழங்கினான்.

    அவளை நெற்றி முட்டி நின்றவன்.. தன்னை நிதானபடுத்திக் கொண்டான். ” சாரி சாரி முயல்குட்டி, வாடை பிடிக்காது.. அதனால தான் வாந்தி எடுத்தேனு.. சொன்னவுடனே.. எனக்கு திருப்ப உன் உடல்நிலைய பற்றி.. நான் சரியா தெரிந்துக் கொள்ளவில்லையோனு கோபம் வந்திருச்சுடி. அதான இப்படி சொல்லிட்டேன். ” தான் கூறியதற்கு.. மன்னிப்பு வேண்டி மனதில் சாரி கூறி அவள் கன்னத்தை தடவி பல முத்தங்களை வழங்கினான்.

    இனி இப்படி பண்ணாத அரசி, இனிப்பகம் உனக்காக நான் ஆரம்பித்தது என்று எந்தவிதத்திலும் குறையே, யாரும் என்னைய ஒன்னும் சொல்லி விடக்கூடாது.. நீ ஆரம்பத்திலேயே அதிக கவனமா, எல்லாம் பெஸ்டா இருக்கனும் நினைத்து ரொம்பே யோசித்து பண்ணுற. ஆனா அதுக்கு முன்னாடி.. எனக்கு உன் உடம்பை பார்த்துக் கொள்வது தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அதனால இனி நாம்ம என்ன பண்ணப்போறோம்னா?. எனக்காக நீ எல்லாம் பார்த்து பார்த்து பண்ணு.. உன்னைய பார்த்துக் கொள்கிற வேலைய நான் பண்ணுறேன். ஓகோயா. ” அவள் நெற்றியில் இதழ்பதித்து கூற.. அவளும் சரியென தலையசைத்தாள்.

   நீ பாட்டுக்கு இப்படி வெயில் சேரல, வாடை சேரலனு இங்க வாந்தி எடுக்குற. ஆனா இதை பற்றி எதுவும் தெரியாதவங்க பார்த்தவுடனே தப்பா எடுத்துப்பாங்க. உன் தனுமாமா மானமே போய்விடும். கல்யாண வரைக்கும் இந்த மாதிரி வாந்தி எடுத்துவிடாதடி. சரியா. ”

   அடங்கப்பட்ட புன்னகையுடன்..  தனு நான் இப்ப வாந்தி எடுத்தா.. உன்னைய எதுக்கு தப்பா நினைத்து.. உன் மானம் ஏன் போகனும்?.. ”

    அவளை முறைத்தவன்.. ” ஒன்னுமே தெரியாத பச்சபிள்ளை மாதிரி கேட்டேனு வச்சுக்க.. கருவாட எடுத்து வாயில வைச்சுடுவேன். ” அவள் முகம் அஷ்டகோணலாக.

   அதை பார்த்த அவனோ கடுப்புடன்.. ” ஏன் அது உனக்கு பிடிக்கல?. எனக்கு ரொம்ப பிடிக்கும். ” வருத்ததுடன் கூற..

   இப்ப என்ன?. நான் என் தனுக்குகாக பழகிக்கிறேன். ”

    வேகமாக.. ” அதெல்லாம் ஒன்னும் நீ பண்ணவேண்டாம். எனக்கு அதில் விருப்பமும் இல்ல. இனி நான் சாப்பிடுவதை கம்மி பண்ணிக்கிறேன். “

    அவள் முடியாது என தலையாட்டி.. ” எனக்காக என் தனு எனக்கு பிடிக்கும் என்று எவ்வளவு மாறியிருக்க. அதனால இப்ப என்ன பண்ணுறனா?. உனக்கு எந்த மாதிரி சாப்பிட்டா பிடிக்குமோ.. அதே மாதிரி செய்து.. எடுத்துட்டு வந்து ஊட்டிவிடுவியா.. நான் சாப்பிடுவனாமா. போபோ ரொம்ப பசிக்குது.. உன் முயல்குட்டி வயிறு பாரு எவ்வளவு ஒட்டியிருக்கு. ”

   அவள் தன் பாட்டியிடம்.. சில சமயங்களில் தன் கையை வைத்து காண்பிப்பாள். இன்று மாற்றி தன்னவனின் கையை தன் வயிற்றில் அழுத்தி வைத்துவிட்டாள். இருவரும் ஒருநிமிடம் மெய்மறந்து நின்றனர். சுடியின் மீதுதான் கை இருந்தது. இருந்தாலும் இருவரின் உணர்வுகளும் உயிர்த்தன. அது கண்களில் பிரதிபலித்தது.

   முதலில் சுதாரித்தவன்.. ” முயல்குட்டி இப்படியே இருந்தா எப்படி?. என் முயல்குட்டி வயிற்றை பெரிதாக்க. சாப்பாடு வேண்டாமா?. ” ஆம் என தலையசைக்க..

    புன்னகையுடன்.. ” இப்போதைக்கு என்னால சாப்பாடு மூலமாதானே பெரிதாக்க முடியும். வேற மூலமா பண்ண இப்ப முடியாதே.. அதுக்கு இன்னும் மூன்றுமாதம் வரை நீ காத்துயிருக்கனுமே. ” கள்ளப் புன்னகையுடன் இடையை இறுக்க.. அவளோ அய்யோ என வெக்கம் கொண்டு அவன் மார்பில் புதைந்துக்கொண்டாள்.

   சிரிப்புடன் சென்றவன்.. அடுத்த அரைமணி நேரத்தில் தன்னவள் முன்.. அவன் முடியிருந்த இலையை பிரிக்க.. அதன் வாசனையை அவள் நுகர.. ” தனு இதுல கருவாடு வாசனையே இல்ல.. ம்.. இது நண்டு ஆப்லெட் தானே?.. ” 

   ஆம் என தலையசைத்து.. குழம்பில் கொஞ்சமா தான் போட்டுயிருக்கு. அதோட கத்திரிக்காய், முருங்கைகாயும் இருக்கு.. இப்ப இப்படி சாப்பிடு.. உனக்கு பிடித்துனுனா போக போக அதிகமா சேர்த்துக் கொள்ளலாம். சரியா. ” கூறியவன்..

   அவளிற்கு நன்றாக பிசைந்து ஒருவாய் குழம்பு, ஒருவாய் நண்டு என அவளிற்கு ஊட்ட.. அவளோ ஆரம்பத்தில் சிறு படபடப்புடன்.. ஏங்கே வாந்தி எடுத்து விடுவோமோ என்று வாங்கினாள். ஆனால் அவள் பயந்தது போல இல்லை. அதில் புளிப்பு சற்று துக்கலாக இருக்க.. தன்னவனின் கை விரலேடு சேர்த்து.. அவன் நினைத்தை இட சற்று அதிகமாகவே சாப்பிட்டாள். அவன் வீட்டிலே சாப்பிட்டு வந்ததால் சிறிது மட்டும் அவளிடம் வாங்கிக்கொண்டு.. ஒருகப் இனிப்பை இருவரும் ஒரே ஸ்பூனில் சாப்பிட்டு மிகமிக மகிழ்வுடன் அந்நாளைய வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

 

    வேந்தன்.. அரசியை ஸ்விட் பிரிவிற்கு மற்றொரு வழியாக போக கூறியும்.. உணவு செய்யும் பக்கத்திற்கு தான் இருக்கும் போது அவளுடன் சென்று பழக்கப்படுத்தியும், மற்ற நேரங்களில் செல்ல தடை வித்துயிருந்தான். பழங்கள், சில காய்கள் சேர்த்து என.. இரண்டறை மணிநேரத்திற்கு ஒருதடவை பழரச பிரிவில் இருந்து கொடுக்க சொல்லியிருக்கிறான். வீட்டில் அத்தம்மாவின் விருப்பப்படித்தான் அவளின் உணவு

     வீட்டில் தனது இரு ஆபிஸ் பணிகளையும்..  தனக்கு தகுந்தார் போல் நன்கு திட்டமிட்டு நன்றாகவே செய்தான்.

   ஆனால் என்ன இதில் அவனின் குடும்பத்திற்கு தான்.. அவன் இங்கு வீட்டில்தான் இருக்கிறானா?. இல்லை இன்னும் சென்னையில் உள்ளனா?.. என்று எண்ணும் அளவிற்கு.. அவனை ஒருநாளில் காலையில் இல்லை இரவு.. அனைவரும் உண்ணும் அந்த அரைமணி நேரம் தான்  பார்க்க முடிகிறது. அரசியுடன் ஒருவேலையும், மற்றொரு தடவை தன் அறைக்கும் உணவை எடுத்து சென்றுவிடுவான்

    எழிலரசி.. கட்டபணியை பார்க்க போகும்போது கேப் அணிய சொல்ல.. முடியாது என கூறி பெரும்பாலும் காலையில் மட்டுமே சென்றாள். மதியம் அவனுடன் சென்று அவன் நிழலில் நின்றுக் கொள்வாள். இனிப்பகத்திற்காக அவள் திட்டமிட்டு கொடுத்தை பெரும்பான்மை நிறைவேற்றப்பட்டு இரண்டுநாட்களில் செயல்படுத்தவும் ஆரம்பித்தாயிற்று. மில் மற்றும் அப்பாவின் கடைக்கு மாலை வேளையில் அப்பாவுடன் சென்று.. அண்ணாவுடன் வருவாள். ஞாயிறு ஒருநாள் மட்டும் எந்த பணியும் இல்லை. பாட்டி, அம்மா, சத்யாவுடன் தான் அன்றைய நாள்

    வேந்தன் ஞாயிறு மாலை குடும்பத்தினருடன் அமைதியாக அமர்ந்துயிருப்பான் அவ்வளவே. அப்போது கல்யாண வேலையை பற்றி சித்ரா, ரவிந்திரன் பேச சிலவற்றிக்கு வசு கருத்து கூற என இருப்பார்கள்அவன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டுயிருப்பான். ஆனால் அவன் கூறியதை போல அரசிக்கு செய்வதில் மட்டும் யாரையும் தலையிடாதவாறு பார்த்துக் கொண்டான்

    கல்யாண வேலைகளில் ரவிந்திரன் கேட்டதில் வேந்தன், அரசி தங்களின் பிடித்த இடங்களுக்கு சென்று கலந்து பேசி தங்களின் முடிவுவை தெரிவித்தனர்.

    இவ்வாறாக இருவருக்கும் அடுத்த 10 நாட்கள் அவர்களின் காதல் செய்யும் நாட்களாக கடந்திருந்தது

 

     வேந்தன், எழிலரசியின்  சூரியோதயம்!. திருச்சி மலைக்கோட்டையின் உச்சியிலிருக்கும் உச்சிப்பிள்ளையார் கோயில் உதித்தது. மலையின் மீதிருந்து பார்த்தால்.. திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), திருவானைக்காவல், காவிரி ஆறு, பசுமை வயல்கள், திருச்சி மாநகரம் ஆகியவை நம் கண்களுக்கு விருந்தாகும்.

     வேந்தன் தன்னவள் அரசியின் சங்கு கழுத்தில் தங்கசெயின் அணிவித்து .. அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.

வேறதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே

மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே

ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்

நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல் நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது

உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது

உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா

    

   

     

     

    

    

    

    

     

   

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!