Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 30. 3

 

நாம் 30(3)

 

   வேந்தனின் அறை.. முன்பு இருவர் படுக்கும் கட்டில், ட்ரஸ்ஸிங் டேபிள், வாட்ரோப், ஒரு டேபிள்சேர் மட்டுமே உள்ள அறை.



Advertisement

  ஆனால் இப்போது.. நான்கு பேர் படுக்கும் அளவிற்காக கட்டில், விரிப்பான், திரைசிலை அனைத்தும் மாற்றப்பட்டுயிருந்து. மூன்று பேர் அமரும் லேதர் ஷோபா, அதன்முன் மார்டன் டேபிள் மேல் LED டிவி, சரவுண்ட் ஸ்பீக்கர். ஆங்காங்கே உறுதி, நிச்சியம் அன்று குடும்பத்துடன், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் எடுத்த போட்டோக்கள் இருந்தனர். அறையின் விளக்குகளும் மாற்றியிருந்தன. வாட்ரோப் முழுவதும் உடைகள்.. ட்ரஸ்ஸிங் டேபிளில் மேல் வாசனைதிரவியம், வாட்ச் நான்கு ஐந்து.. பின் எப்போதும் பயன்படுத்தபடும் பொருட்கள்.

   பக்கத்தில் சிறிய கண்ணாடி பெட்டியில் சந்தனம் இருந்தது. ( உறுதியன்று தன்னவள் சந்தனம்பூசி லவ் யூ தனுமாமா.. ‘ கூறியதால் அதனை அப்படியே எடுத்து வைத்திருக்கிறான். டிரையாக இருந்தாலும் இரவு உறங்கும் முன் அதனை நுகர்ந்து.. தன்னவளை அப்படியே சுவாசிப்பது போல நினைத்தான். தன் முயல்குட்டி அவனின் அறைக்கு வரும்நாள் வரை இது தொடரும். )

   அறையின் ஓரத்தில் பிரிட்ஜ் இருந்தது. பாத்ரூமில் வாஷிங்மிஷன் வைத்தும். பால்கனி!. அங்குயிருந்தே தோட்டத்தில் இருக்கும்.. அவனவளற்கு பிடித்த செடிகளை பார்க்கலாம் என்பதால்.. அதில் மாற்றம் செய்யவில்லை. சென்னையில் வைத்துயிருந்த..  மஞ்சள், ஆரஞ்சு வண்ண ரோஜா, அடுக்குமல்லி செடிகள் மட்டும் இருந்தன. 

Advertisement

   அதனை அடுத்துயிருந்த அறை.. எப்போதும் காலியாகஇருக்கும். இப்போது அந்த அறையை முழுதாக பயன்படுத்தியிருக்க.. அறையில் நுழையும் போதே ஒருவித நறுமணம் வீசியது. வெளியிலும் இருந்தது. ஆனால் இது ஆளை இழுக்கும் நறுமணம் போல் இருந்தது.

Advertisement

   ஆபிஸ் சேர், டேபிள் அதன் மேல் லாப்டாப், மானிடர். அதன் பக்கத்தில் பூஜாடியுடன் சிறிது மட்டுமே வாடியிருந்த பூக்கள். அதன் அடியில் வேந்தன், எழிலரசியின் இருவரும் கோயிலில் முதன்முறையாக எடுத்த புகைப்படம் என இருவர் மட்டுமேயான புகைபடம்.

   முன்பு வெளியில் இருந்த இருவர் படுக்கும் அளவு உள்ள கட்டில் இங்கு போடப்பட்டும்.. அரசி அனுப்பி இருந்த விரிப்பான், தலையுறைகள் போட்டுயிருந்தன. தலையனையின் பக்கத்தில் அரசி உறுதியன்று அணிந்த சேலை. அதனை பார்த்ததும் சித்ராவிற்கு இது எப்படி, எதற்காக இங்கு?. யோசனையானர்.

    வசுவின் காலின் அடியில் பெட்டி இடிக்க.. அதனை காலால் நகர்த்த அது கணமாக இருந்தது. ‘ என்னடா வாட்ரோப் முழுவதும் தான் அண்ணாவின் உடையிருக்கே இதில் ஒருவேலை அவங்களுக்கு ஏதாவது இருக்குமோ?. ‘ என எண்ணிய படி ஒரு பெட்டியை பார்க்க லாக் ஆகியிருந்தது. அதனுடன் இருந்த மற்ற இருபெட்டியை பார்க்க திறந்துயிருந்தது. அதனை கட்டில்மேல் எடுத்து வைத்தாள்.

Advertisement

   ” வசும்மா எதுக்கு இத திறக்கபோற?. ”

    அம்மா.. எப்படியும் இதில் என்னயிருந்தாலும் நமக்கு கிடையாது. அதான் இதில் என்னயிருக்கும்?. என்று சும்மா பார்க்கதான். ” பேசியபடியே இருவரும் இரண்டையும் திறக்க.. இருவரும் அதிர்ந்துபோய்.. ஒருவரைஒருவர் பார்த்தனர்.

   ” என்னம்மா இது?. இவ்வளவு?. ”

     ஒரு பெட்டி முழுவதும் பல சேலைகள், மற்றொரு பெட்டியில் சில டிசைனர் சேலைகள்முக்கால் பாகம் மென்மையான கவரில் தங்க, வைரம் நகைகள், சில தங்க காயினும் இருந்தன.

    நானும் உன்கூடதானே இருக்கேன். ”

   அவருக்கு  என்ன சொல்வது?. என தெரியாமல் பார்த்தார். வேந்தன் அவருக்கும், மகள்கள் இருவருக்கும் வாங்கி கொடுத்துயிருக்கிறான் தான். ஆனால் ஏனோ இதை பார்க்கும் அவருக்கு.. மகிழ்ச்சி ஏற்படவில்லை. அதைவிட ஏன் இதை.. தன் மகன் தன்னிடம் இவ்வளவையும் மறைத்து இருக்கிறான்?. என்று தோன்றியது.

   இதில் வேந்தன் மறைக்க ஒன்றுமில்லை. அவன் இதனை வாங்கியது இன்று நேற்று அல்லவே. இதில் பாதி சில வருடங்களாக வாங்கியது.. சிலது சென்னையை விட்டு இங்கு வரப்போகிறோம் என்றவுடன் அவன் சேமித்து வைத்துயிருந்த தங்ககாயினை மாற்றி.. நிச்சியமுன் வாங்கியது.. ஏற்கனவே அவன் உறுதியன்றே கூறிவிட்டானே தன் மனைவிக்கு என்று என்னுடைய ஆசைகள் பலஉள்ளன என்று.. அதனால் அவன் இதனை தன்னவள் தவிர யாரிடமும் காண்பிக்க தோன்றவில்லை.

    வசு அனைத்தையும் பார்த்தாள். குறைத்தபட்சம் நூறுபவுன் நகைகள் இருக்கலாம். அனைத்தும் மிகமிக அழகான யூனிக்கான டிசைன்கள், அதுதவிர அதில் சில ரூபி, எமரால்ட் கற்கள், வைரகற்கள் பதித்த தங்க நகைகளும் இருந்தன. மேலும் சில காயின்கள்.

   சேலைகள் பெரும்பாலும் லைட் வைட்.. ஆனாலும் நல்ல மதிப்புடைய பட்டுசேலைகள். அனைத்தும் எழிலரசிக்கு பக்காவாக பொருந்தக்கூடிய கலரில் இருந்தது. இருவருக்கும் ஆச்சரியம், அதிர்ச்சி நிலையில் இருந்தனர்.

    சித்ரா அறையை சற்று கவனித்து பார்த்தார். சுவற்றில் எழிலரசி கொழுகொழு என இருக்கும்.. சிறுவயது முதல் அவளின் பள்ளி, கல்லூரி, முக்கிய நிகழ்வின் போது என பல புகைப்படங்களை ஒருஅளவான நீளமான போட்டோ பிரேமில் இருந்தது. உறுதி, நிச்சியத்தின் போது எடுத்த நெருக்காமான புகைபடங்கள் தனியாக இருந்தது.

    உள்ளேயும் சிறிய வாட்ரோப் அறை.. இங்கியிருந்தே சொல்லும் பாத்ரூம் கதவு. பால்கனிக்கு பதிலாக.. கட்டியிலின் அருகில் அனைத்து தட்பவெப்ப நிலையையும் தாங்கக்கூடிய.. உள்ளிருந்து வெளியில் மட்டும் தெரியகூட தடிமனாக ஒரே கண்ணாடியில் பெரிய ஜன்னல். அதன் திரையை விலக்கி பார்த்தார்.. அங்குயிருந்து வீட்டுத்தோட்ட மலர்கள் நன்றாக தெரிந்தது.

    சித்ராவிற்கு  இந்தவீடு கட்டும்போது.. எதற்காக இந்த அறை?. என்று வேந்தனிடம் கேட்டபோது.. விளக்கமாக கூறாமல்.. புன்னகையுடன் சென்றுவிட்டான். அது ஏன் என்று?. அப்போது புரியவில்லை. கணவன்மனைவிக்கான பிரத்தேக அறை என்று இப்போது புரிந்தது

    சித்ரா.. இப்போதுதான் சில சதவீதம் மட்டும் தன் மனதை தேற்றிக்கொண்டார். தன் மகன் சட்டென்று.. எதுவும் மாறவில்லை, வாங்கவில்லை, செய்யவில்லை. சில வருடங்களாக அவன் செய்யும் செயல் என்று புரிந்தது. ( அவன் அவனின் முயல்குட்டியை பார்த்தவுடனே முழுவதும் மாறிவிட்டான். அதன்பிறகு தானே அவனின் அனைத்து செயல்களும் தொலைநோக்கு பார்வையாக மாறியது என்பது.. அவருக்கு தெரியாது.).

    முன்போல் சரியாக வைத்துயிருக்கிறதா?. என வசு அனைத்தையும் பார்த்து உறுதி படுத்திக்கொண்டு.. பின் இருவரும் கீழே வந்தவர்கள். சித்ரா சற்றே சற்று மனதில் நிம்மதி பரவி.. ஏதாவது குடிக்கலாம் என எடுக்க சமையல் அறை சென்றுவிட.. வசு இன்னும் அதில் இருந்து மீளாமல்.. ஹாலில் அமர்ந்துவிட்டாள்.

    வேந்தன் இவள் சிறு பெண் என்பதால்.. வினோதினி அளவிற்கு இவளுக்கு நகைகள் வாங்கியது கிடையாது. எல்லாமே அவள், அம்மா, வினோதினியுடன் சென்று அவளாக வாங்கிக் கொண்டதுதான். வினோதினிக்கும் கூட அவனை.. ரவிந்திரன் ஒருஅளவு தான் செய்யவிட்டார். உடைகள், செய்முறைகள்.. பின்னர் எல்லாம் அவரவர் கேட்பதை மட்டும்தான் வாங்கி கொடுத்துயிருக்கிறான். அதனால் வசுவிற்கு வேந்தனின் இந்த செயல் மிகவும் அதிர்ச்சி, ஆச்சரியம், ஆற்றாமையாக இருந்தது. இதை கேட்டாக வேண்டும்.. ஆனால் இன்றே கேட்க முடியாது.. அதற்கான நேரம்.. எந்நேரம்?. என யோசித்துக் கொண்டுயிருந்தாள்.

   அவளின் யோசனைக்கு உரியவன் தன்னவளை தன்கையில் அள்ளிக்கொண்டு.. அவளின் அறைக்கு சென்று கொண்டுயிருந்தான்.

 

     காலை உணவையும்.. எழிலரசி சிறிது மட்டுமே எடுத்துக் கொண்டாள். அவளால் அதற்கு மேல் முடியவில்லை. அவனும் வற்புறத்தவில்லை. அவனிற்கு தெரியும் இந்நேரத்தில் அதிகம் சாப்பிடாவிட்டால்.. ஒன்றும் அவ்வளவு பாதிப்பு இல்லை.. ஆனால் இதனை ஈடுசெய்ய மற்ற நாட்களில் வற்புறுத்தி.. இன்னும் அதிக சத்தான உணவுவை கொடுக்க வேண்டும்.. கூடவே அவளை மருத்துவரிடமும் அழைத்துச் சென்று ஒருமுறை பார்க்க வேண்டும் எனவும் எண்ணிக்கொண்டான்.

    பின்னர் மேகா உணவு செய்கிறேன் கூறி உள்ளே செல்லும்போது.. ” மேகா என்ன மதியம் செய்யப்போற?. ”

     அவள் இன்பாவை பார்க்க.. அவனும் கூறு என்பது போலதான் பார்த்தான்.

   ” காய் மட்டும்தான் இருக்கு அண்ணா. அதனால வெஜ்புலாவ்வும், தயிர்பச்சடி, பிளைன் ரைஸ், ரசம். அப்பளம். ”

     ம்.. ரசம் மட்டும் நான் வைக்கிறேன். நீ நாலு பேருக்கு வருவது போல செய் போதும். நான் இன்னும் கொஞ்சம் நான்வெஜ்.. அப்பாவிடம் சொல்லி கடையில் எடுத்துட்டு வரச்சொல்லுறேன். ”

   அட.. இவங்க ஹோட்டல் வைத்துயிருக்காங்கள. இதை மறந்தேபோயிட்டேன்.  தேவையில்லாம வாய் கொடுத்துவிட்டோமே. இப்ப மாற்றி பேசவும் முடியாதே என நினைப்பதை!. அவள் கண்கள் அனைவருக்கும் காட்டிக் கொடுக்க.. அனைவரும் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டனர்.

    அரசி மட்டும் இதை கவனிக்கவில்லை. அவள் தன்னவனின் தோளில் கண்களை முடி சாய்ந்தவாறே.. அவளவனின் கைங்கரியத்தால் வேறு உலகத்தில் இருந்தாள். அவள் சிறிது காய்ச்சல் இருப்பதால்.. டாப்பின் மேலே சுற்றி போற்றிக்கொள்ளும் படியான ஷால் அணிந்திருந்தால். அதனால் வேந்தன் பேசிக் கொண்டுயிருந்தாலும்.. யாருக்கும் தெரியாதவாறு ஷாலினுள் டாப்பின்மீது கைவைத்து தன்னவளின் வயிற்றை அழுத்தி தடவியவாறே இருந்தான். தன்னவனின் கைபட்டு வயிற்றின் மேல் உண்டாகும் சூடு இதமாக இருந்தது. அவள் வலியை மறக்க.. பல நினைவுகளை எண்ணிக் கொண்டுயிருந்தாள். அதனை அவனும் பார்த்தான்.

    இன்பா தான் மேகா பாவம் என எண்ணி.. மற்றவர்களை வேண்டாம் என கூறிவிட்டு.. ” மேகா குழைவா ரைஸ்சும்கூட்டும் வை.  ரசம் மாமா வைத்து விடுவார். நமக்கு தேவையானதை சொல்லிக்கலாம். ” சரிதானே என மூவரையும் பார்க்க.. ஓகே என தலையசைத்தனர்.

    சபதத்தை மறந்து அப்பாடா என.. ” ம்.. சரி மாமா. ” கை கழுவ சென்றுவிட்டாள்.

   திலகன் சிறிதுநேரத்தில் வினோத்தும், இன்பா தர்ஷனி வருவதாக கூறினார்கள். அதன்பின் என்ன உணவு சொல்லாம் என முடிவு செய்து வேந்தன் அப்பாவிற்கு கால் செய்து இங்கும், வீட்டிற்கும் கூறினான்.

     மூவரும் எழ.. ” சத்யா நான் அரசியை அழைத்துக்கொண்டு மாடிக்கு போறேன். நீங்க வெந்நீரும், காட்டன் துணியும் எடுத்துட்டு வாங்க. ”

   சத்யா தலையசைத்து உள்சொல்ல.. வேந்தன் தட்டிலேயே கையை சுத்தம் செய்திருக்க.. அவர்கள் சென்றவுடன் தன்னவளை மென்மையாக பற்றி அவளை அள்ளிக் கொண்டு மாடிக்கு சென்றான். அவளை பாத்ரூம் சொல்ல வைத்து.. நெற்றி முத்தம் கொடுத்து படுக்கவைத்தான்.

    சிறிது நேரத்தில் சத்யாவர.. அவள் கொண்டு வந்ததை வாங்கி வைத்துவிட்டு.. அவளை அனுப்பிவிட்டான். பின் தன்னவளின் டாப்பின் வயிற்று பகுதியை சிறிது மடித்து அதன்மேல் தூண்டை போர்த்திவிட்டு.. பாவாடையை சிறிது இறக்கி அதன்மேலும் துண்டை போர்த்திவிட்டான். பின்னர் அவளின் வயிற்றுக்கு வெந்தீர் ஒத்திடம் கொடுத்தான். ஒத்திடத்தினால் சிலநிமிடங்களில் அரசி  உறக்கத்திற்கு செல்ல தயாராக.. பின் அவளின் உடையை சரி செய்துவிட்டும்.. நீரைஊற்றிவிட்டு.. அரசியின் பக்கத்தில் படுத்து.. அவளை தன் தோள்வளையில் வைத்துக்கொண்டான்.

    அப்போது அவளிற்கு வலியால் சுருக்கிய முகத்திற்கு.. தன் இதழ் முத்ததால் ஒத்தடம் கொடுத்தான். அதனை ஏற்ற அவனவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட.. போர்வை போற்றிக்கொண்டு அவனும் அவளுடனே உறங்கிவிட்டான்.

 

   ஒருமணி நேரம் கழித்து .. அவனை தட்டி அழைத்தான் இன்பா. மிகவும் கடினப்பட்டு முழித்தவன்.. தன் எதிரே இன்பாவை கண்டதும்.. ஏதேனும் அரசிக்காக என அவளை பார்க்க.. அவள் இப்போது எழவாய்ப்பில்லை என்பதான உறக்கத்தில் இருந்தாள்.

   பின் இன்பாவை பார்க்க.. அவன்.. ” உங்க போன் எங்க?. ” என சைகையில் கேட்க..

    அவசரமாக போனை எடுத்து பார்க்க.. ‘ விஸ்வநாதன் மாமா ‘ என ஐந்துகால் வந்துயிருந்தது. பின் தான் அவனிற்கு இன்று அவரை வரச்சொன்னது ஞாபகம் வந்தது. இன்பா கேட்வுடனே சென்றுயிருந்தான்.

   பின் சில நொடிகள் தன்னவளை பார்த்தான். வீட்டிற்கு கண்டிப்பா உடனே செல்ல வேண்டுமே.. சரி என முடிவு எடுத்து.. அனைவரிடமும் அரைமணி நேரம் பார்த்துக் கொள்ளும் படி கூறிவிட்டு.. திலகனுடன் எழிலரசி பைக்கில் வந்தார்கள்.

 

   வாங்க மாப்பிள்ள.. ” புன்னகையுடன் ஹாலிற்கு வந்து அமர்ந்தான் விஸ்வநாதன்.

   ” நல்லாயிருக்கீங்களா அத்த. என்ன நீங்க மட்டும் தான் இருக்கிங்க. வசுந்தராவும் வெளியே போய்யிருக்காளா?. ”

    ” இல்ல மாப்பிள்ள.. வசு குளிக்க போனா.. வந்துவிடுவா. வீட்டில வினோ அண்ணா, அண்ணி, பேரன் எல்லாம் எப்படியிருக்காங்க?. ”

   சூப்பரா இருக்காங்க. ” சரி என தலையசைத்தவர்..

   இருங்க ஜீஸ் எடுத்துட்டு வரேன். ”

    எதற்காக தனியாக வந்துயிருக்கிறார்?.  என எண்ணிய படியே.. அவர் உள்சென்று வந்து ஜூஸ்சை கொடுக்க.. நாதன் குடித்த படியே செய்தி சேனலை பார்த்துக் கொண்டுயிருந்தான்.

    சில நிமிடங்களில்.. ” வாங்க மாமா.” நாதனின் பக்கத்தில் வேந்தனும், திலகனும் ” அமர்ந்தனர்.

    ” சாரி மாமா. நான் உங்கள வரச்சொன்னதை மறந்துட்டேன். அது.. “முடிக்கும் முன்..

   சித்ரா சிறு முறைப்புடன் அவனை பார்ப்பதை திலகன் பார்த்தான். ‘ என்ன அதிசயம்மா!. அம்மா வேந்தனை முறைக்கிறாங்க?. இது அவங்க கிடையாதே. ‘

    அதனால ஒன்னும் இல்ல வேந்தா. நீ எடுக்கலைனு மாமாக்கு கால் பண்ணியபோது சொன்னாங்க. இப்ப எழில்கு காய்ச்சலும், உடம்பு எப்படியிருக்கு?.. ”

   இதை கேட்டுக்கொண்டுயிருந்த சித்ரா.. அச்சோ இதை இன்பாவிடம் கால் பண்ணி வேந்தனிடம் கேட்கவே இல்ல.

   இப்ப பரவாயில்ல. அரசி தூங்கிட்டு இருந்தா. முழித்தா தேடுவா. அதனால.. நான் டக்குமெண்ட் எடுத்துக் கொடுத்துட்டு கிளம்புறேன். நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. ”

   விஸ்வநாதனிற்கு..  தன் மனைவியை பார்த்திருப்பதால்.. அரசி வலியால் தேடுவா என மறைமுகமாக கூறுகிறான் என புரிந்து.. சரி என அவன் தலையசைக்க வர..

   என்ன வேந்தா இது?. என்ன பண்ணுற நீ?. உனக்காக தானே இங்க வந்துயிருக்காரு. நீ பாட்டுக்கு கிளம்புறேனு சொல்லுற?. எழில் தூங்கி எழுந்து தேடுவானா.. அதான் இன்பா இருக்கானில்ல பார்த்துபான்.  நீங்க சாப்பிட வாங்க மாப்பிள்ள. நீங்க கிளம்பும் போதே அவனும் கிளம்புவான். ” வேந்தனை எதுவும் பேசவிடமால் அவர் கூறிவிட்டு உள்செல்ல..

   விஸ்வநாதன் தான்..  அவனின் தோள்தட்டி.. ” சரிவிடு.. இன்பாவிற்கு கால் செய்து சொல்லிட்டு.. எழில் முழித்துவிட்டா உடனே வீடியோகால் பண்ண சொல்லு. ” ம்அவர் கூறியபடி செய்தான்.

   திலகா இரு. இதோ வரேன்கூறிவிட்டு..

   தன் அறைக்கு வந்து நுழைந்தவனின் நாசியில்.. ‘ என்ன புதிதான  வாசனை?. உள்அறைக்கு செல்ல அங்கேயும் அந்த வாசனையை உணர்வது போல இருந்தது. பின் லாக் செய்துயிருந்த பெட்டியில் இருந்து.. தனக்கு தேவையானதை டாக்குமெண்டை எடுத்தவன்.. பக்கத்து இருபெட்டியை பார்த்தவன்..

   ‘ அய்யோ லாக்பண்ணவே இல்ல. முதலில் அப்பாவிடம் கொடுத்து லாக்கரில் வைக்க வேண்டும். ‘ எண்ணியபடி.. தன்னுடைய லாப்டாப் பேக் மற்றும் இருஉடைகளை பேக்கினுள் வைத்துக்கொண்டான்.

    அறையில் இருந்து வெளியே வர.. அப்போது வசுவும் வந்தாள். ஒரு நொடி அதிர்ந்தான். ‘ என்ன வசுவிடமிருந்து உள்ளே வீசும் வாசனை போல இருக்கு?. அறையினுள் வந்துயிருப்பாளோ?. ‘ என்று.. அவளை பார்க்க ஆரம்பித்தபோது..

    அவனின் போன் சத்தமில்லாமல் கூப்பிட. ” சொல்லு இன்பா. வேண்ட வேண்டாம் நானே இங்குயிருந்து வைத்தே கொண்டுவரேன். ம்.. சரி. ” வாசனை, வசுவை.. மறந்து வேகமாக கீழ்யிறங்கினான்.

    அவன் சென்ற பிறகு தான் வசுவிற்கு முச்சே வந்தது. வேந்தனை எதிர்பார்க்கவில்லை. அதைவிட தன்னை உற்று பார்க்க ஆரம்பிக்கவும். அண்ணா ஏதேனும் கண்டுபிடித்து விட்டாரோ என பயந்துவிட்டாள். அவனிற்கு வந்த காலிற்கு நன்றி கூறி அவளும் இறங்கினாள்

     வந்தவன் திலகனிடம் லாப்டாபை கொடுத்துவிட்டு.. சாப்பிடும் மாமாவையும், பரிமாறும் அம்மாவை.. ஒருபார்வை பார்த்துவிட்டு சமையல்அறை சென்றவன்..

   தன்னவளிற்கு சுக்கு, மிளகு,சீரகம் சேர்த்து.. ரசம் செய்ய ஆரம்பித்தான்.

   என்னடா உள்ளே போனவன் இன்னும் காணோம்?. என சித்ரா உள்ளே வர.. அவன் செய்து கொண்டுயிருந்தைஎன்ன கூறுவது?. ‘ என தெரியாமல் நின்றார். கல்யாணம் முன்பே பீரியட்ஸ் நேரத்தில் எழிலை தாங்குவது.. ஏனோ அவருக்கு சிறிதும் பிடிக்கவில்லை.

    வந்து ஒன்றும் கூறாமல் நிற்கும் அம்மாவை பார்த்தான். அவர் என்ன நினைப்பார்?. என புரிந்ததால் ஒன்றும் கேட்கவில்லை. சரி கொதி வரட்டும் என மாமாவின் அருகில் வந்தமர்ந்தான்.

   அவனை பார்த்தவர்.. ” வேந்தா.. கடை கட்டிடம் 15 நாளிற்குள்ளே ரொம்ப வேகமா மோல்டு போடும் அளவிற்கு வந்துடுச்சு. ”

   புன்னகையுடன்.. ” ம்.. ஆமாம் மாமா. கடைதிறக்கும் அன்றையில் இருந்தே.. கடைய ஆரம்பித்து விடவேண்டும்.. என்பது அரசியோட பிளான். அதான் கதிரவன் பகல், இரவு என்று.. தேவையான ஆட்களை வைத்து செய்வதால்.. எல்லாம் வேகமா நடக்குது மாமா. ”

   .. அதான் மாமா தேங்காய் டிரைபுரூட் லட்டு கொடுத்து.. எப்படியிருக்கனு?. கேட்டு.. கடையையும், ஸ்விட்டையும் எல்லோருக்கும் தெரியபடுத்த இப்பவே ஆரம்பித்தாச்சா. “

    புன்னகையுடன் ஆம்..  என தலைசைத்தான்.

   நாதன் சில நொடிகள் யோசனையுடன் இருந்தவன்.. ” வேந்தா எழிலரசியால் இப்ப சைன் பண்ண முடியுமா?. இல்ல என்னால இப்போதைக்கு நடுவில் வரமுடியாது. அதான்.  நான் எல்லாம் ரெடி பண்ணிட்டு உங்கள திருச்சி வரச்சொல்லானு நினைத்தேன். ஆனா எழிலுக்கு இப்ப உடம்பு வேற முடியல. அதான் அலைய வேண்டானு பார்க்கிறேன். ”

   இல்ல மாமா அரசியால முடியாது. நாங்களே மூன்றுநாள் கழித்து வரோம். ”

   சரி என விஸ்வநாதன் தலையசைக்க.. இவர்களின் பேச்சு எதை பற்றியது?. என சித்ரா,வசுவிற்கு புரியவில்லை.

    மாப்பிள்ள என்ன விஷயாமா எழில் சைன் பண்ணவேண்டும்?. ” விஸ்வா வேந்தனை பார்க்க..

   ” ஃபேக்டரி விஷயம் ம்மா. ”

   அதை கேட்ட சித்ரா..  ஏதோ கேட்க வர.. கொதி வாசனை வர சட்டென்று எழுந்து சமையல்அறை சென்றுவிட்டான். அவனை பார்த்திருந்த  இருவருக்கும்.. வேறு ஏதோதான்.. என உறுதியாக நம்பினர்.

 

    மாமா.. அக்கா ரொம்ப பிஸியா இருங்காங்க போல?.. கால் பண்ணபோது எடுத்து பேசவே இல்ல. நீங்க வீட்டுக்கு போயிட்டு.. அக்கா வர வீக்எண்ட் பீரியானு பார்த்து மெசேஜ் பண்ண சொல்லுங்க. ” விஸ்வா  கைகழுவியபின்.. அவனும், வசுவும் ஹாலிற்கு வந்தமர்ந்தார்கள்.

   ” ம்.. போனவாரம் ஆடிட்டிங் நடந்தது அதான். எதுக்குனு வினோ கேட்டா?. 

    மாமா.. அண்ணா திருச்சிக்கு வீக் எண்டிலும் வரலாம் இல்ல?.. ”

     ம்..  வீட்டுக்குதான் வருனும். அதனால எப்ப வேண்டுனாலும். ஏன் ?. ”

     அண்ணாவை இப்பவே கொஞ்சம்.. கல்யாணத்திற்கு நகை வாங்கி கொடுக்க சொல்லனும். அதான். ”

   அவள் கூறியதை கேட்ட விஸ்வாவிற்கு திக்கென்று ஆனாது. ‘ அய்யோ என்னடா இது!. ‘ என்று திலகனை பார்க்க..

   அடங்கபட்ட புன்னகையுடன்.. ” மாமா நீங்களே போய் தலை கொடுத்துட்டீங்க போல.. அவதான் வேந்தன் அங்க வருவது பற்றி கேட்குறாளே.. அப்பவே நீங்க சுதாரிக்க வேண்டாம். போச்சு.. உங்க மச்சான் வந்து நீங்யெல்லாம்  என்ன வக்கீல்னு?. கேட்க போறான். ”

   கேட்பானாடா?. ” திலகன் ஆம் என தலையாட்ட.

   ” என்ன மாமா..  பதிலே காணோம். அக்காவிடம் அவங்க எப்படியாவது பீரியா இருக்கும்படி பார்த்துக்கனும் என்று சொல்லிவிடுங்க. ”

    வேந்தன் வருவதை பார்த்தவன்.. ” நான் வினோவிடம் சொல்லுறது இருக்கட்டும்.. முதலில் வேந்தனும், எழிலும் பீரியானு தெரிந்துக் கொண்டு.. பின்ன நீ பிளான் பண்ணும்மா. ”

   மாமா.. ” வேந்தன் ஏதோ கூற ஆரம்பிக்க..

   ” அண்ணா நீயும், அண்ணியும் வர வீக் எண்ட்.. எந்த பிளானும் இல்லையே?. ”

   வாட்ச்சை பார்த்துவிட்டு.. ” வசு உனக்கு அன்னைக்கு என்ன பண்ணவேண்டுனு சொல்லு. அதை பொறுத்து தான்.. நான் ஏதாவது பிளான் பண்ணியிறுக்கனா?. இல்லையானு சொல்ல முடியும். “

 

   அது நீ கூறுவது..  எங்களுக்கு அவசியமாக இருந்தால் மட்டுமே.. உன் தேவைக்கான பதில் வரும் என்ற தோரணையில் கேட்க.. எல்லாம் எடுத்து வைத்து விட்டு அங்கு சித்ராவும் வந்தார்.

 

 

   

   

   

   

   

    

    

    

    

    

    

    

    

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!