Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Nenjukulla Unna Mudinjirukkaen

நெஞ்சுக்குள்ள உன்ன முடிஞ்சிருக்கேன் – 31. 2

 

நாம் 31(2)

 

   சாரி அண்ணா.. இரண்டு வருஷம் இதே கடையில் இருந்து மேடத்திற்கு பிடிக்கும் என்று..  இன்பா இதே அல்வாவும், பெரிய பூத்தியும் வாங்கிட்டு வரச்சொல்வான். அதான் பார்த்தும்.. அடையாளம் தெரிந்தவுடனே கொஞ்சம் எக்சைட் ஆகிடேன். வேற எதுவும் நினைக்கல. ” இப்போதுதான் அவனிற்கு தோன்றியது சற்று அவசரபட்டு விட்டோம் என்று.



Advertisement

   சந்துரு கூறியதை கேட்டவள். ” .. நீங்க தான் அண்ணாவோட சீனியரா. என்ன சொன்னீங்க.. இரண்டு வருஷமா வாங்கி கொடுத்தீங்களா?. ஐந்து ஆறு தடவை தான் வாங்கி கொடுத்துயிருப்பீங்க. அதிலும் பாதிதான் என் கைக்கு வரும். ” குறையாக.. குற்றம்சாட்ட..

   அரசி இது உனக்கே ஓவரா இல்ல. காலேஜ் பசங்களிடம் ஒரு பெண்ணுக்கு ஸ்விட் வாங்கி வரச்சொல்லி.. அதையும் பசங்க முன்னாடி உன் அண்ணாவிடம் கொடுத்தா.. அப்படியே வரும்மா. அப்படியே வந்தா.. கூடவே இவரோட சேர்த்து.. நிறைய கட்டுகதையும் வரும். அந்த கதையெல்லாம் சமாளிக்க தான் பாதி சேர் போயிருக்கு. அவங்க பிரண்ட்ஸ்.. அவங்களுக்கும் சேர்த்து நிறைய வாங்கி வரவேண்டி தானேனு கேட்ப.. ” ஆம் என பாவமாக தலையசைக்க..

   புன்னகையுடன்.. ஆண்கள் இருவரையும் பார்த்தவாறே.. ” சத்துரு எத்தனை கிலோ வாங்கி வந்தாலும்.. உனக்கு பாதிதான் கிடைக்கும். பாவம் அவரு.. உன்னால எத்தனை பேர சமாளித்தாரோ. ”

Advertisement

   அப்படியா அண்ணா. ” ஆரம்பத்தில் இருந்தே குட்டிம்மா என்று கேட்டதும்.. அவளின் மீதும் பார்க்கமலே தங்கை பாசம் வந்திருக்க.. இப்போது சற்றுமுன் தன்னை கொலைவெறியுடன் பார்த்தகண்கள்..  தன்னால் அவருக்கு ஏதேனும் எண்ணம் வந்துயிருந்தால்.. அது தவறாக அல்லவா இருந்துயிருக்கும். நல்ல வேளை எதுவும் நடக்காமல்.. ஒரு சகோதர உணர்வுடன் வாங்கி வந்து அனைவரையும் சமாளித்தால்.. அந்த அன்பை கண்களில் காண்பித்து.. பாசமாக அண்ணா என்று அழைப்பவளிடம்.. உண்மையை கூற மனமில்லை.

Advertisement

    சிரிப்புடன்.. ” அப்படியெல்லாம் இல்லம்மா. ஆரம்பத்திலேயே தங்கச்சிக்குனு கூறி தான்.. இன்பாவிடம் கொடுப்பேன். எல்லாவற்றையும் உனக்கே குடுத்தா.. உன்னைய கண்ணு வச்சுவிடுவாங்க இல்ல. அதான் சும்மா பேசும் பசங்களுக்கு கொடுப்போம். ஆனா பாரு.. நாங்க நினைத்தபடி தான் இருக்க.. அப்ப எப்படியிருந்த.. இப்ப அதில் பாதிதான் இருக்க. ” அவளின் வருத்தத்தை அப்படியே மாற்றியிருக்க..  கதிரவன் அடப்பாவி!. என்னமா ஒட்டுனாங்க பசங்க. அப்படியே மாற்றி பேசுறான். என்பதுபோல அவனை பார்க்க..

    சந்துரு புரிந்த கொண்ட வேந்தன்.. தன்னாகவே.. தன் முயல்குட்டியை பற்றி எந்த எண்ணமும் வராமல் தங்கை என்று உணர்வுதான் அவனுக்கு வந்திருக்கிறது.. அருகில் நின்ற கதிரவனையும் பார்த்தவன்.. இவன் மட்டும் இன்றி வேறு எந்த ஆண்மகனின் மனதிலும் சிறு சலனம்.. கூட தன் முயல்குட்டியிடம் ஏற்படவில்லை என்று உவகையும் கொண்டான். அதனை முகத்தில் காண்பித்தான்

   அரசி உனக்கு அண்ணாவோட எண்ணிக்கையும், எனக்கு மச்சான்களோட எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகுது. உன்னை சும்மா கூட இனி திட்ட முடியாது. நான் எல்லாத்தையும் கவனமா சமாளிக்கனும். ”

Advertisement

   .. அப்ப மச்சானுக்கு இப்பவே உங்க கடைக்கு இன்டீரியர் பண்ண சம்மதம் சொல்லிட்டங்க போல. ” புன்னகையுடன் கேட்க..

    அருகில் நின்ற கதிரவன்.. ” டேய் இங்க உனக்கு அப்ரு பண்ணுவது அண்ணா இல்ல.. எழிலரசிதான். எழிலரசி உன்னிடம் அவ சந்தேகம் எல்லாம் தீர்ந்து.. சரினு சொன்னாதான்.. உனக்கு ஆடர். ” அப்படியா என்பது போல வேந்தனை பார்க்க.. ஆம் என அரசியை பார்த்துக் கொண்டே கூறினான்.

   அவர்களின் பேச்சின் மூலம்.. அரசிக்கு இப்போதுதான் தெரிந்தது.. இவர்தான்  இனிப்பகத்தின் இன்டீரியர் டிசைன் செய்ய.. அவருடைய செய்து முடிந்த பணிகளின் விவரத்தை அனுப்பியவர் என்று. இப்போது இவர் தங்கள் இனிப்பகத்திற்கு ஆடர் கேட்டு வந்ததில் மகிழ்ச்சியாகவும் இருந்தது. யாரோ ஒருவர் என்றால் தன்னுடைய மனதில் உள்ளவற்றை ஆரம்ப நிலையில் உள்ளவள் என்பதால் சந்தேகங்களை கேட்டு, அவர் சரியாக எடுத்துக்கொண்டு.. எனக்கு  புரிய வைத்து.. அதனை எந்த முகசுளிப்பும் இல்லாமல் செய்ய வேண்டும்.

    இனிப்பகத்தில் இனிப்பின் சுவை எவ்வளவு முக்கியமோ.. அதேஅளவிற்கு அதை செய்யுமும் இடமும்  இனிப்பு வைக்கப்பட்டு இருக்கும் இடமும்  முக்கியம்.

    சகோதர உணர்வுடன் அப்போதே தனக்காக யோசித்தவர்.. இப்போதும் கூட தன்னாக யோசித்து.. தன்னவனிடம் மச்சான் என்ற தகுதியை பெற்று.. என்னுடைய முதல் தயக்கத்தை போக்கிவிட்டார் என எண்ணியபடி.. தன்னவளின் முடிவு தான்.. என்றும் தன் முடிவு! என பார்த்துக்கொண்டே தலையசைத்த தன் தனுமாமாவை பார்த்து தன் மனிதில் எண்ணியதை முடித்தாள்.

   ம்.. அதுவும் பிரச்சனை இல்ல. அவங்கள எங்க ஷோரூம்மிற்கு, கூடவே நான் செய்து கொடுத்த இடத்திற்கு போயே காண்பித்து.. அவங்க சந்தேகம் எல்லாவற்றையும் தீர்த்து அதன்பிறகே ஆடர்கொடுக்கட்டும். ” அவன் கூறுவதை ஏற்று.. சரி என மூவரும் புன்னகைக்க..

 

    இவர்களை பார்த்திருந்தர்கள் பொறுமையிழந்து.. ” அண்ணா எவ்வளவு நேரம்தான் காரில் இருக்க?. ” இரு பெண் குரல் கேட்க..

    தங்கள் எதிரில் இருந்த வசுந்தராவையும், மேகாவையும்.. வேந்தனும், கதிரவனும் பார்த்தனர்.

    மேகா கொஞ்சம் நேரம் இங்க வந்து நில்லு. ” திருப்பி வேந்தனை பார்க்க.. அவன் தன் அம்மாவிடம் பேசிக் கொண்டுயிருந்தான்..

    ” ம்மா.. இங்க உங்களுக்கு காபி பிடிக்கும் இல்ல அதான் உள்ள உட்கார்த்து குடிச்சுட்டு போலனு நினைத்தேன். கூட்டாம இருந்தது கூப்பிட சொல்லி.. சொல்லிட்டு வந்தேன். ஆனா இன்னும் கூட்டம் குறையல.. இருங்க நான் இங்கேயே வாங்கிட்டு வரேன். ”

    அரசி மட்டும்..  இன்னும் அல்வா இருக்க வேண்டாம் என கூற.. மற்றவர்கள் விரும்ப.. மூவரும் வாங்கி வந்து.. அனைவரும் குடித்துக் கொண்டுயிருந்தனர்.

   சாரி சந்துரு.. எங்களால உங்களுக்களுடைய நேரம் வீணாகுது. ”

   அப்படியெல்லாம் இல்ல.. சென்னைக்கு தாத்தா, பாட்டிய பார்க்க அம்மா, அப்பா இப்பதான் ட்ரெய்னில் போனாங்க. அவங்கள விடதான் வந்தேன். இன்னைக்கு கதிரவன் பார்ப்பதால்.. நான் பீரிதான். ”

   அப்படியா!. ” சந்துருவிடம் கூறிவிட்டு..

   ” கதிரவன்.. மேகாவும் உங்க கூட வருவதா சொல்லவே இல்ல. “

   அவர்களின் சந்திப்பு  மதியம் போல தான் பேசி வைத்திருந்ததால்.. காலையில் கதிரவனை பார்த்தும்.. சரி நண்பனை பார்க்க சீக்கிரம் வந்துயிருக்கலாம் என நினைக்க.. மேகாவை எதிர்பார்க்கவில்லை.

   நேற்று நைட்தான்.. மேகா வரேனு சொன்னா. ஷாப்பிங் கூட்டு போனுமா. நம்ம மதியம் பேசும் போது காரில் இருந்துப்பேன்னு சொன்னா. அம்மாவும் கூட்டிட்டு போக சொன்னாங்க. ” அவனின் காதில் மெல்லிய குரலில்உங்க கல்யாணத்திற்கு இப்பவே கொஞ்சம் டிரஸ், நகையெல்லாம் வாங்கனு வந்துயிருக்கா. ”

   புன்னகையுடன்.. ” உங்க தங்கையுமா?.. வசு கூட அதுக்குதான் வந்துயிருக்கா. ” மெல்லியகுரலில் கூற.. இருவரின் பக்கத்தில் இருந்த அரசி சிரிப்புடன் பார்த்துக் கொண்டுயிருந்தாள்.

   ” சரி.. எப்ப ஷாப்பிங் போக போறீங்க?. ” சாதாரணமாக மேகாவிற்கு கேட்கும் படியாக கேட்க.. ” சந்துரு வீட்டிற்கு போய்யிட்டு பத்து மணிக்கு மேலதான் போகனும். ”

    சந்துரு உங்க வீடு எங்கயிருக்கு?. ”

   சந்துரு வீட்டிலும் ஆள் இல்லை, கண்டிப்பா காலை சாப்பாடு வெளியில் தான்.. அரசி தன்னோடு இருக்க.. அவளின் அத்தை பெண் ஆண்களுடன் கண்டிப்பாக அங்கு செல்ல வேண்டுமா?.  அதுகூட தன்னவளிற்கு தான் இல்லாத வருடங்களில்அவள் விரும்பியத்தை இருவருடங்களாக செய்தவனிற்கு தன் மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டும்என எண்ணி கேட்டான்.

    ” தில்லைநகர் 5வது கிராஸ் ண்ணா. ”

    ஆச்சரியத்துடன்.. ” நாங்க கூட அங்கதான் 7வது கிராஸ்தான் போகனும். அப்ப சந்துரு.. இவங்க இரண்டு பேரும் எங்ககூட மாமா வீட்டிற்குகே வரட்டும். நீங்க அங்க சாப்பிடுவது போல வாங்க. ”

   மேகாவிடம் திரும்பி.. ” மேகா.. வசுகூட ஷாப்பிங் போகதான் வந்தா. வீட்டிற்கு போய் நீங்க இரண்டும்பேரும் பேசிட்டு.. எங்க போகனும் சொல்லுங்க. ”

   இவ்வளவு நேரத்தில் அரசியுடன் சிறிய புன்னகையை மட்டும் செலுத்திவிட்டு.. அமைதியாக இருந்தவள்.. சந்தோஷ புன்னகையுடன் சரி எனகூறினாள். அவளிற்கு அரசியுடன் தன்னை போக சொல்லாத வரை மகிழ்ச்சியே

    அரசி.. வேந்தனின் காபியை சிறிது ருசி பார்த்துவிட்டும்.. கதிரவன், சந்துருவிடம் முகவரி கொடுத்துவிட்டு அனைவரும் கிளம்பினார்கள்.

 

    வினோதினிவிஸ்வநாதன். நாதனிற்கும் இரு தங்கைகள். முதல் தங்கை ரேவதி வினோவைவிட  ஒருவயது முத்தவள். ரேவதியின் கணவர் கடலூரில் வியாபாரம் செய்கிறார். அவளால் வேலைக்குசெல்ல முடியவில்லை. அவளிற்கு  1வயதில் குழந்தையிருக்கும் போது.. வினோதினி திருமணமாகி வரும்போதே பேங்க் வேலை கையில் இருந்தது. எங்கே வினோதினி தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவாளோ என ஆரம்பத்தில் இருந்தே.. சிறு இடையவெளியும், சற்று அதிகாரமும் இருக்கும். வினோதினி.. வசுந்தராவை  போல இல்லை. என்றும் சிறிது அமைதி, பொறுமை அதிகம். கோபம் என்பது விஸ்வநாதனிடம் காண்பிக்கும் செல்ல கோபம் மட்டுமே. அதனால்தான் ரேவதி தான் நினைத்தை செய்ய முடிந்தது.

    சிறிய தங்கை சங்கவி. வசுந்தராவிற்கும் அவளிற்கும் ஒரே வயதுதான். ஆனால் அவள் வினோ போல. இருவருக்கும் நல்ல புரிதல் உள்ளது. ஆனால் அது அவள் அக்கா வரும்போது மட்டும் இருவரும் பேசமாட்டார்கள். எங்கே ஏதாவது கூறி தங்கையின் மனதை மாற்ற வாய்ப்புயிருக்கிறது. படிக்கும் பெண்ணிடம் வீட்டில் உள்ளவர்களை குறை கூறினாள்.. என்ன நிலையில் முடியும் என்று தெரியாது.

    இன்று கூடவே விஸ்வநாதனின் சித்தி பெண் தாமரையும் அவளும் குழந்தைகளுடன்.. அரியலூரில் இருந்து வந்துள்ளாள். அவளிற்கு அம்மா கிடையாது. அதனால் ரேவதி வரும்போது தவறாமலும், தான் நினைக்கும் நேரத்திலும் வருவாள். அவள் நேரத்திற்கு தகுந்தவாறு.. தன்னை பொதுவான ஆளாக மாற்றிக்கொள்ளவாள்

    விஸ்வநாதனின் வீடு அனைத்து வசதிகளும், வீட்டை சுற்றிலும் தேவையான இடமும் இருக்கும். கூடவே தெருவின் கடைசியில் இருக்கும் வீடு என்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியான வீடு.  தங்களின் தங்கைகளை வேண்டாம் என்று வேந்தன் கூறியதால்.. வீட்டில் உள்ள பெண்கள்அரசியை காண ஆவலுடன் உள்ளனர். அவர்கள் யாரும் நிச்சியத்திற்கு வரவில்லை. இருவரின் மாமானார் மட்டுமே வந்திருந்தார்கள்.

 

    வீட்டின் முன் இருகார்களும் ஒன்றன் பின்னால் ஒன்று நின்றது. சூரியன் இன்று குறைவான வெப்பத்தையே மக்களுக்கு பகிர.. குழந்தைகள் விளையாடிக் கொண்டும்..அவர்களின் அம்மாக்கள்அவர்களை கவனித்தபடி இருந்தனர். இவர்கள் பக்கத்தில் வந்துவிட்டனர் என்ற தகவலும் தெரியும்

    கதிரவன் காரில் இருந்தவர்கள் உடனே இறங்க.. இன்னொரு காரின் பின் சீட்டில் இருந்தவர்களும் ரெடியாக இருந்தால் உடனே இறங்கிவிட.. வெளியே இருந்த குழந்தைகள் யாழனியை பார்த்து.. மகிழ்வுடன் கத்த.. அதில் இவர்கள் வந்துவிட்டத்தை அறிந்து.. உள்இருந்தவர்களும் வந்துவிட்டனர். அரசியும், வேந்தனும் இறங்க மட்டும் தாமதம் ஆனாது. நிமிடம் கழித்து.. வேந்தன் மட்டும் இறங்கினான். என்னடா இந்த பக்கம் இறங்குறான்!. என ஆச்சரியமாகபார்த்தனர்

    சித்ராவிற்கு ஒரு மாதிரியானது. அவர் குடும்பத்தில் படித்து பெண்கள் நல்ல நிலையில் இருந்தாலும்.. சில விஷயங்களில் ஆண்கள் தற்போதைய நடைமுறைக்கு வர விரும்பவில்லை. இதில் இளைய தலைமுறையினர் காலத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு தங்களின் துணைகளை நடத்துவர். ஆனால் இதில் முற்றிலும் மாறுபட்டவனாக வேந்தன் இருக்கிறான். அவனிற்கு தோன்றியது மட்டும்தான் செய்வான்

   வேகமாக தன்னவளின் பக்கம் இருந்த கதவை திறந்தவன்.. அவளை தன்பக்கமாக திருப்பி.. உட்கார்ந்து.. அவளின் கால்களை பிரித்து நடக்கவிடாமல் மாட்டிக் கொண்டுயிருந்த.. கொழுசு இரண்டையும் கவனமாக கழட்டி பின் சரியாக மாட்டிவிட்டான். இதை முடிக்க ஐந்து நிமிடங்கள் ஆனாது. அவன் உட்கார்ந்தவுடனே.. அவர்களின் அருகில் கதிரவன் வந்துவிட்டான். காலையில் வேந்தனை பார்த்ததும் சரியாக போடச் சொல்ல வேண்டும் என அவள் எண்ணியிருக்க.. அவன் பண்ணிய கடைசிநிமிட தாக்குதலில் மறந்துவிட்டு.. இப்போது சிறு கூட்டதினரின் சிறு விருப்பமின்மையை சம்பாதித்துவிட்டாள்

    தன்னால் ஆன தாமத்தினால் வந்த தன் பதட்டத்தை மறைத்து.. புன்னகையுடன் இறங்கி தன்னவனுடன் வீட்டின் முன் இருந்தவர்களிடம் செல்ல.. அவளை விட அவளவன் புன்னகையை காண்பிக்க.. அங்கு இருந்த பெண்கள் பொறாமையுடன் அரசியை பார்த்தனர்.

   வேந்தனை.. இவர்கள் வினோதினியின் நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்திருக்கிறார்கள். அப்போதே கலையாக, கம்பீரமாக, பார்க்கும்போது தெரிந்தவர் என்ற புன்னகைமட்டும் செலுத்தி.. அவனை பிடித்தம் கொள்ள வைப்பான்

    இப்போது தன் முயல்குட்டியால் இன்னும் மெருகேறி.. மீசை மட்டும் வைத்து.. வேட்டி, சட்டையில் இருப்பவனை பார்த்ததும்.. தாங்களால் முடியாததை வேறு குடும்பத்தில் வந்த பெண்ணால்.. அவனை மனம் திறந்து சிரிக்க வைத்து விட்டத்தையும், அவளிற்காக யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் காலடியில் அமர்ந்து சரி செய்தது என.. தங்களில் இல்லாத ஒன்று அவளிடத்தில் என்னயிருக்கிறது என்று பொறாமை பட வைத்ததும்.. அவர்களால் ஏற்றுக் கொள்ள கஷ்டமாக இருந்தது

    வாங்க.. வாங்க எல்லோரும்.. ” விஸ்வநாதனும், சுவாமிநாதன், வினோதினி, பத்மா அனைவரையும் வரவேற்று.. நலம் விசாரித்து.. பின் நீள அலமான ஹால் என்பதால் தரையிலும், ஷோபாவிலும் அமர்ந்தனர்.

 

    அண்ணா நீ ஷோபாவில் போய் உட்காறேன்.” அவனின் அருகில் வந்து மெல்லிய குரலில் வினோ கூற..

    ஏன் என்பது போல பார்க்க.. ” அண்ணா.. அவர் மேல உட்கார்ந்துயிருக்கார். அவர் இங்கெல்லாம் கீழே உட்கார்ந்து இல்ல.. அத்தை, மாமா அதை விரும்பவும் மாட்டாங்க. நீயும் கதிரவனும் கீழ உட்கார்ந்து இருப்பதை எல்லாம் ஒருமாதிரியா பார்ப்பது போல இருக்கு. இரண்டு பேரும் அங்கபோய் உட்காருங்களே.. நான் அண்ணிய சமையல் ரூம் கூப்பிட்டு போறேன். ”

    அவன் அரசியை பார்க்க.. சரி என தலையசைக்க.. அவளின் கையை பற்றியவாறே எழுந்தான். தன்னை சமாளிக்க வினோ கூற.. நிறைய வாய்ப்பு உள்ளது. எப்படி அவளை வந்தவுடன்.. எதுவும் கொடுக்காமல் அவளை அங்கு அழைத்து செல்லுவாள். இருவரும் ஒரே நேரத்தில் எழுவார்கள் என வினோ எதிர்பாக்கவில்லை.

    ஒருநொடி அதிர்ந்து.. ” என்ன அண்ணா இப்பவே அண்ணிய எழுப்பிட்ட.. நான் குடிக்க ஏதாவது கொடுத்த பிறகு கூப்பிட்டு போறேன். ”

    இதுக்கு தான் அவளையும் எழுப்பினேன். எனக்கு நீ சொல்வது போல அரசிய கீழ உட்கார வைத்து.. நான் மேல உட்கார பிடிக்காது உனக்கு தெரியும். அதை மீறி சொல்லுறஇனி இப்படி பண்ணாத. அரசியை பற்றி யாராவது கேட்டா.. பாத்ரூம் போக கேட்டாங்கனு சொல்லிடு. சமையில் அறையில் இருக்கட்டும். ” அவன் நடந்த படியே கூறிவிட்டு.. தன்னவளை கண்களால் உள்ளே இரு கூறி மாமாவின் அருகில் அவனும், கதிரவனும் அமர்ந்தார்கள்.

    இருவர் எழுந்தவுடனே.. இனி நமக்கென்ன என்று அவரவர் வேலையை பார்க்க.. கதிரவன் தங்களின்  எதிர்கால திட்டங்கள் பற்றி சந்துருவுடன் பேச வேண்டியிருந்தது. அதனால சில நிமிடத்திலேயே சந்துரு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

   மேகா, வசுவுடனும் மற்றவர்களுடனும் சில நிமிடங்களில் ஒன்றிவிட்டாள். ஏன் ஒன்றமாட்டார்கள் பேசும் விஷயம் உடைகள், நகை வாங்குவது பற்றி அல்லவா. எங்கு?. எப்ப கிளம்பலாம் என பேசிக்கொண்டுயிருக்க.. விஸ்வாவும், வேந்தனும் சில முக்கிய விஷயங்களை அமைதியாக பேச வேண்டும் என வெளியே சென்று விட்டார்கள். போகும் போது பார்வையால் தன்னவளை பார்த்துவிட்டு தான் சென்றான். அதை அனைவரும் பார்த்தனர்.

    சமையல்அறையில் இறுதிகட்ட காலை உணவை வினோ மட்டும் செய்துக் கொண்டுயிருக்க.. அந்நேரம் வினோவின் குழந்தை அழுதபடி வர.. விஸ்வநாதன் இல்லை.. தாத்தா அவர் அறைக்கு சென்றுவிட.. பாட்டி, அம்மாச்சி கல்யாண ஏற்பாடு பற்றி சுவரசியமாக பேசிக்கொண்டுயிருக்க.. தன் அம்மாவிடம் வந்தான். அவளால் அவனை சமாதனம் செய்ய முடியாததால்.. அரசி தான் ஹாலிற்கு தூக்கி வர.. எல்லோரும் மும்மரமாக பேசிய படியிருக்க.. இவளுக்கு எங்கே சென்று அமர என புரியாமல் விழித்து நின்றாள்.

    இதனை சிறியவர் கூட்டம் ஓரக்கண்ணால் பார்த்து ரசித்தது. அவளாக தங்களிடம் வரவேண்டும் என தெரியாதது போல இருந்தனர். இதனை யாருமே மற்றவர்களின் முன் காட்டிக் கொள்ளவில்லை. அதிலும் வசுவும், மேகாவும் தன்முன்னால் இருப்பவளிடம்கூட தெரியாத அளவிற்கு பேச்சில் சுவாரசியம் போல முகத்தை  வைத்திருந்தனர்.

    ஆனால் அவளை அவர்களிடம் இருந்து அவள் கையில் இருந்த விசாகனே வழி காண்பித்தான். அவளை கன்னத்தில் தட்டி.. பாத்ரூம் செல்ல வேண்டும் எனக் கூற.. மீண்டும் வினோவிடம் எங்க கூட்டிச் செல்ல எனக்கேட்டு.. அவள் அங்கு சென்றவள்.. அதன்பின் வேந்தன் கேட்டபின்.. தான்அவளை பற்றிய ஞாபகமே அனைவருக்கும் வந்தது.

 

    சில நிமிடங்களில் வினோ இறுதி வேலைகள் முடித்திருக்க.. பின் அனைவரையும் சாப்பிடஅழைத்தாள்.. முதலில் சித்ரா, மாமனார், மாமியார் சாப்பிட்டு.. பின் அக்கா, தங்கைகள் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருந்தார்கள். ஆனால் யார்? யாருடன் சாப்பிட்டார்கள் என்பது தெரியாது. வினோ ஆரம்பத்தில் இரு தோசை கற்கள் வைத்து உற்ற ஆரம்பித்தாள்.. கொண்டு செல்லும் வேலையை மட்டும் மாறி மாறி பார்க்க.. அனைவரும் சாப்பிட்டு முடிக்கும் தருவாய் வரை ஊற்றினாள். எக்ஸாஸ்ட் ஃபேன் இருப்பதால் அவளிற்கு வெப்பம் தெரியவில்லை.

   உள்ளே வந்த நாதனும், வேந்தனும்.. ஷோபாவில் அமர.. வேந்தன் தன்னவளை கண்களால் ஹாலில் தேடினான்.. அங்குயில்லாததால்.. அத்தையுடன் பேசிக் கொண்டுயிருந்த

    ” அம்மா. ” அவரும் உடனே பார்க்க.. ” அரசி எங்க?. ” அவனை சிறுமுறைப்பு பார்வை பார்க்க..

   இனி இவர்களிடம் கேட்டவும் முடியாது.. மீண்டும் கேட்ட தனக்கு பொறுமையும் இல்லை.. பின் அவரை கண்டுக்கொள்ளாமல்.. மாமாவிடம் வரேன் என்பது போல பார்த்துவிட்டு.. எழுந்து வினோவிடம் சென்றான். போகும் வழியில் சாப்பிட்டுக் கொண்டுயிருந்த பெண்களை பார்த்தான்.. அனைவரும் இவனை கேள்வியாக பார்க்க?.

   அவன் தன்னவள் அங்கு இல்லை என உறுதி செய்து.. சமையல் அறையில் பார்க்க.. அங்கும் இல்லை. வினோவிற்கு பின்புறமாக வாசற்படியிருந்ததாள் இவன் வந்தது தெரியவில்லை. பின் வெளியே சென்று பார்த்தான்.. அங்கு வசு மற்றும் மேகா பேசிக்கொண்டுயிருக்க.. அருகில் குழந்தைகள் விளையாடிய படி இருந்தனர்.

    மீண்டும் வினோவிடம் சென்றான். ” வினோ அரசி எங்க?. ” சற்று சத்தமான குரலில் கேட்க.. அவன் இங்கும், அங்கும் செல்வதை பார்த்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டதால்.. அந்த இடம் சற்று அமைதியாக இருக்க.. அந்த கேள்வி அனைவருக்கும் கேட்டது.

    அந்த பொண்ண நாங்க ரொம்ப நேரமா பார்க்கல. ”

    குரல் கேட்டு திருப்பியவன்.. பேசியது யார் என்று அவனுக்கு தெரியவில்லை. தன்னவள் இங்கு இல்லை.. வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர் எங்கு என்று தெரியாமலும், யாரும் கண்டுக்கொள்ளாமலும் இருப்பவர்களின் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வர..  ” உங்க பேர் வினோவா?. “

     அவள் பதில் கூறும்முன்… ” அண்ணா அவங்க காவ்யா அண்ணியோட தங்கை வித்யா. ”

    இவளை பார்த்துக்கோ என கூறிச்சென்றாள்.. முன்பு கூறியதற்கு பதில் வராமல்.. தேவையில்லாத கேள்விக்கு பதில் இன்னும் கூடியது கோபம். தங்கைக்கு தான் அவளின் மாமியார் வீட்டில் மதிப்பு கொடுக்க வேண்டும் என தன் கோபத்தை கட்டுப்படுத்தி.. தலையை தடவி தன்னை நிதானபடுத்திக் கொண்டு.. ” வினோ அரசி எங்க?. ” பொறுமையாக கேட்க..

    அவனின் சத்தமான குரல் கேட்டு அங்கு வந்த சித்ராவிற்கு கோபம் வந்துவிட்டது. தன் மகளைஅவளின் நாத்தனர்கள் முன் கேள்வி கேட்பது.. அதுவும் தன்னிடம் கேட்ட அதே கேள்வி.. அவருக்கு அரசி எங்கு என்ற கவலையில்லை.. அதற்கு பதில் இல்லை.. வாய் திறக்கவில்லை.

    ஆனால் இதற்கு.. ” வேந்தா எழில் என்ன சின்ன குழந்தையா?. எங்கனு தேடிட்டு இருக்க. ” அவரை அதற்குமேல் பேச்சை கேட்காமல்.. கவனிக்காமல் திரும்பி வினோவை பார்க்க..

   ” அண்ணா அண்ணி.. கொஞ்ச நேரம் முன்ன விசாகன் பாத்ரூம் போக மாடிக்கு.. ” அவன் அதற்கு மேல் கேட்க அங்கு நிற்கவில்லை.

    மாடிக்கு வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வேகநடையுடன் கோபமும், பதட்டமுமாக சென்றான். விசாகன் வெளியில் விளையாடிக் கொண்டுயிருந்தானே. அப்ப தன் முயல்குட்டி எங்க?. என பதட்டமும்.. இவள் எதற்காக புதிதாக வந்துயிருக்கும் வீட்டிற்கு மாடிக்கெல்லாம் செல்கிறாள்.. போகும் முன் தன்னிடம் கூற வேண்டாமா?. என கோபமுமாக.. வினோவின் அறையின் கதவு கைபிடியை பிடிக்க அது லாக்காகி இருந்தது. பதட்டம் இன்னும் கூடியது.

    பதட்டத்தில் யோசிக்கும் திறனை இழந்து.. ” அரசி.. அரசி.. அரசிஅறையின் முன் கூப்பிட்டுக் கொண்டுயிருக்க.. அவனவளின்  குரல் மெல்லிய ஒலியில்.. ” தனு.. தனு.. ” பக்கத்து அறையில் இருந்து கேட்டது.

   வேகமாக அங்கு செல்ல.. அப்போதுதான்  அவனின் பின்னால் நாதனும், வினோ மட்டும் வந்தார்கள். தங்கைகளை அவனும் ஏன் கவனிக்கவில்லை?. கண்டுக் கொள்ளவில்லை என கேள்வி எழுப்பிவிட்டு.. வினோவையும் கேள்விக் கேட்ட தவறவில்லை. இத்தனை பேரை பதட்டமும், கோபம், கடுப்பை உருவாக்கியவள்.. ஊஞ்சலில் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!